Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கோலம் இடும் மயிலே!
கோலம் இடும் மயிலே!
கோலம் இடும் மயிலே!
Ebook143 pages6 hours

கோலம் இடும் மயிலே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இங்கே ரகசிய பூஜை நடந்தது. அப்படியும் சமூக வலைதளத்தில் அது வந்துவிட்டது. 

மகன் சஞ்சய் விபத்தில் சிக்கியதால், கடவுள் நம்பிக்கை இல்லாத கங்காதரன் வீட்டில் மகனை வைத்து ரகசிய பூஜை! யாரோ அதை படம் எடுத்துக் கூடப் போட்டு விட்டார்கள். 

கங்கா கடுப்பாகி விட்டார். 

"யாரையும் இன்னிக்கு நான் உள்ளே சேர்க்கலை. அப்படியும் செய்தி - அதுவும் படத்தோட எப்படி வெளில போகுது?" 

நாலு வேலைக்காரர்களை கூப்பிட்டு விளாசினார். அவர்கள் தங்களுக்கு தெரியாது என்றார்கள். 

அய்யரைப் பிடித்துக் கொண்டார். 

"நீங்க யார்கிட்டேயாவது சொல்லிட்டு வந்தீங்களா?" 

"கண்டிப்பா இல்லை." 

"பின்ன எப்படி வெளில போச்சு?" 

மனைவி மகிமா அவரை அடக்கினாள். 

"விடுங்க! அவனுக்கு விபத்து நடந்தது உலகம் முழுக்க தெரியும்! இந்த பூஜை தெரிஞ்சா என்ன! தப்பில்லையே. பிள்ளைக்காக ஒரு வேண்டுதலை, பெத்தவங்க செஞ்சா அது தப்பா! விடுங்களேன்!" 

"எனக்குனு ஒரு இமேஜ் உண்டு மகிமா!" 

"புண்ணாக்கு! நாத்திகம் பேசறவங்க கோயில் கோயில்ல போய் அபிஷேக, ஆராதனைகள் நடத்தறது தெரியாதா! விடுங்க இதுக்கெல்லாம் விளக்கம் ஏன்?' 

"மீடியால கேட்டா?" 

"ஆமாம்! தொழிலதிபர் வேற தகப்பனார் வேறனு பதில் சொல்லிட்டு போங்க! நாளைக்கு நாம சுவாமி மலைக்குப் போறதும் நிச்சயமா தெரியும். எத்தனை நாள் எல்லாத்தையும் மூடி வைக்க முடியும்! விடுங்களேன்!" 

"பணம் படைச்சு, பிரபலம் ஆயிட்டா, நமக்குனு அந்தரங்கமோ இல்லையா?" 

"நாமெல்லாம் ஒரு பொது சொத்து மறந்துடாதீங்க!" 

பூஜை திருப்திகரமாக முடிந்தது. அவர் தனது ஆட்களின் மூலம் சுவாமி மலை கோயில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். 

அந்த ஆலயத்தின் ஒருநாள் வழிபாடு முழுக்க தான் ஏற்பதாகச் சொல்லியிருந்தார். தவிர, முருகனுக்கு பட்டு வேட்டி, வெள்ளி வேல் போன்றவைகளை ஏற்பாடு செய்தார். 

சஞ்சய் எதிலும் பட்டுக் கொள்ளவில்லை. 

'மகிமாவுக்கு கவலை. கிராமத்துப் பெண் ஒருத்தியை இவனுக்குப் பிடிக்குமா? முதலில் எங்களுக்கு பிடிக்குமா? எல்லார் மனசையும் கவரக்கூடிய பெண் அமைவாளா?' 

"ஆனால் கங்கா லேசுபட்ட மனிதர் அல்ல!" 

கிராமத்தில் இருந்த 3 வீடுகளும் கோடவுனாக செயல்பட, அதில் ஒன்றை காலி செய்து தயார் செய்யச் சொல்லியிருந்தார். 

எல்லா வசதிகளும் வேண்டும் என்று கேட்டிருந்தார். 24மணி நேரம் இரவு பகலாக உடனே அங்கே வேலை தொடங்கி விட்டது. கையோடு, அந்த அக்ரஹாரத்தில் எத்தனை வீடு, அதில் எத்தனை நபர் இளம் பெண்கள் யார் யார் வயது படிப்பு, தகுதிகள் என சகல விவரங்களும் தனக்கு வேண்டும் என புள்ளி விவரங்களை சேகரிக்க ஒரு படையை நியமித்திருந்தார்.  

கிராமத்துப் பெண் எனக்கு ஒருவேளை மருமகளாக நேர்ந்தால், அவளது தகுதிகள் இப்போதே தெரிந்து விட வேண்டும். 

அதை வைத்து முன்கூட்டியே முடிவுகள் எடுக்க வேண்டும்.

பிசினஸ் மகா புலிப்பாய்ச்சலாக செயல்பட்டது. 

Languageதமிழ்
Release dateFeb 26, 2024
ISBN9798224086948
கோலம் இடும் மயிலே!

Read more from Devibala

Related to கோலம் இடும் மயிலே!

Related ebooks

Reviews for கோலம் இடும் மயிலே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கோலம் இடும் மயிலே! - Devibala

    1

    வெளிநாட்டிலிருந்து ஒரு மாத விடுப்பில் வந்திருந்தான் சஞ்சய். காலையில் தான் விமானத்தில் வந்து இறங்கியிருந்தான். அப்பா கங்காதரன் பெரிய தொழிலதிபர். உலகத்தையே வளைத்துப் போட்டார். பல நாடுகளில் வர்த்தக தொடர்பு. தமிழ்நாட்டில் பெரும்பகுதி தொழிலுக்கு சொந்தக்காரர். மில், தியேட்டர்கள், மால், நகைக்கடை, ஜவுளிக்கடை, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என எல்லாம் உண்டு.

    வசிப்பது சென்னையில் - போர்ட்க்ளப் சாலையில் பல ஏக்கர்களை வளைத்துக் கட்டிய பங்களா. வீட்டுக்குள்ளே கார் போய் நிற்கும் அளவுக்கு விஸ்தாரம். பெருத்த அரசியல் செல்வாக்கு. கங்காதரன் மனைவி மகிமா அதை விட பிஸி. சகல சமூக இயக்கங்களிலும் முக்கிய பதவி. ரோட்டரி, லையன்ஸ் க்ளப், காஸ்மோ பாலிட்டன் என நகரின் முக்கிய பிரமுகர். சென்சார் போர்டு மெம்பர். என்ன பாக்கி? விட்டிருந்தால் கதை வளர வளர நீங்களே சொல்லி விடுவீர்கள். அப்படி ஒரு செல்வாக்கு.

    சகல மெடிக்கல் பவுண்டேஷனுக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு. தான தர்மத்துக்கு அளவே இல்லை.

    பிரபலமான அரசியல் கட்சிகள், ஆளுங்கட்சி என இடர்கள், தயவை நாடி நிற்கும் அரசியல் கூட்டம். பதவி காலடிக்கு வந்தும் ஏற்க மறுத்தார் கங்கா.

    அரசியல் சூதாட்டத்தை பதவி இல்லாமலே வெளியிலிருந்து ஆளும் மனிதர்.

    இவர்களது மூத்த மகள் உதில்டா லண்டனில் தன் குடும்பத்துடன்.

    அடுத்தவர் அஞ்சனா ஆஸ்திரேலியாவில்.

    ஒரே மகன் சஞ்சய். இங்கே பெரிய படிப்பு. ஆனால் அப்பாவின் சகல கம்பெனிகளை கவனிக்க ஒரே வாரிசு. காலையில் சென்னையில் இருந்தால் இரவில் சிங்கப்பூரில். உலகம் முழுக்க வர்த்தகம். எங்கே எப்போது சஞ்சய் இருப்பான் என்பது அவனுக்கே தெரியாது.

    இதோ சென்னை வந்துவிட்டான்.

    அம்மா மகிமாவின் அவசர அழைப்பு. காரணம் 4 நாட்களுக்கு முன்பு, சிகாகோவில ஒரு கார் விபத்து அசந்திருந்தால் சஞ்சய் கதை முடிந்திருக்கும். 140 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் அவென்யூவில் யாரோ அடித்த பிரேக்கில் வரிசையாக வாகனங்கள் இடிபட்டு, இவனது 3 கோடி ரூபாய் கார் நொறுங்கி, சஞ்சய் தப்பி விட்டான்.

    உடனே வெளிநாட்டு போலீஸ்- வழக்கு என தீப்பற்றிக் கொள்ள பிரபல தொழிலதிபர் சஞ்சய்க்கு விபத்து என சேனல்கள் அலற, அது என்.டி,டி.வி, சி.என்.என். போன்ற நிறுவனங்களில் தெரிய, சோஷிய மீடியாவில் வைரலாக, பிரேக் அடித்தபின் உள்ளே தள்ள, இது கவனக்குறைவால் வந்த விபத்து என பேசப்பட்டது.

    மறுநாளே வேறு மாதிரி செய்தி வந்தது.

    இது திட்டமிட்ட மோதல். தொழில் எதிரிகள் ஸ்கெட்ச் போட்டு செய்த வேலை.

    பலரை பலி வாங்கி, அந்த வட்டத்துக்குள் சஞ்சயை கொல்லும் முயற்சி. சாலை விபத்து. அடித்த பிரேக்கில் நடந்த விபரிதம் என நவீன. யுத்தி என பேச்சு வர, நெருப்பு பற்றிக் கொண்டது.

    அன்று வாகனம் ஓட்டிய அத்தனை பேரின் தகவலும் திரட்டப்பட, ஓட்டியர்களை விசாரிக்க,

    அதில் நேரடி, மறைமுக எதிரிகள், நண்பர்கள் யார், யார் என பட்டியல் இட்டு, நிச்சயமாக இது தொழில் போட்டிதான் என பரபரப்பாக செய்திகள் பறக்க,

    எப்படியும் 48 மணி நேரத்தில் எதிரி பிடிபட்டு விடுவான் என்ற தகவல் வர, இங்கே கங்காதரன், மகிமா துடித்துப் போனார்கள்.

    பல ஆயிரம் கோடிகளுக்கு வாரிசு. தவமிருந்து பெற்ற மகன். இரண்டு பெண்களுக்கு பிறகு 5 வருடங்கள் கருத்தரிக்காமல், ஆண் குழந்தை வேண்டும் என மகிமா கேட்க, அதற்காக நவீன மருத்துவங்களில் இறங்கி, லட்சங்களைக் கொட்டி, எக்ஸ் ஒய் க்ரோமோ சோம்களை சேர்த்து திட்டமிட்டு மதிமா கர்ப்பத்தில் விதைக்கப்பட்டவன் சஞ்சய்.

    கர்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்ப்பது சட்ட விரோதம் என்க, ஆண்தான் வேண்டும் என திட்டமிட்டு அவனை உருவாக்கி, சட்டத்தை ரகசியமாக மீறி, உள்ளே இருப்பது ஆண் குழந்தைதான் என டாக்டர் காண்பித்து, கர்பத்தில் வளர்ந்தவன் சஞ்சய். ஸ்பெஷல் சைல்ட்.

    அவன் பிறந்த அன்று, இனிப்புக்காக மட்டுமே கங்காதரன் ஒரு கோடி செலவழித்தார்.

    அன்றைக்கு ஒரு மாத சம்பளம் போனஸ், விருந்து, உடைகள் என பணத்தை வாரி இறைத்தார்.

    சுமக்கும் காலத்தில், தன் பிள்ளை ஒரு சிறந்த மனிதனாக உருவாக, சகலமும் கடைபிடித்தாள் மகிமா. உணவு, பழக்க வழக்கங்கள், பேச்சு, கலை, அறிவு, அழகு, நிறம் என அத்தனையும் அமைய தன்னை வருத்திக் கொண்டாள் அந்த அன்னை.

    வர்த்தகத்தை அவனுக்கு கர்ப்பப்பையில் புகட்டினார் தந்தை. ஹைடெக் அபிமன்யுவாக உருவாகியவன் சஞ்சய்.

    அவன் பிறந்த பிறகும் கொஞ்சமும் சோடை இல்லாமல், பெற்றவர்களின் பேராசையை, உழைப்பை, தியாகத்தை, எதிர்பார்ப்பை அபாரமாக பூர்த்தி செய்தான்.

    அவனுக்கு அழகு, அறிவு, சாதுர்யம், ஆண்மை என்ன பாக்கி? எல்லாமே வாய்த்தது.

    12 வயதில் நுழைந்த போதே ஒரு ஆண்மகனுக்குள்ள அழகும், கம்பீரமும் வாய்த்து விட்டது.

    40 கடந்த உறவுக்கார அத்தை ஒருத்தி பாலகனைப் பார்த்து, காமப் பெருமூச்சு விட்டு, தப்பாக நடக்க முயன்று, அவளை முடமாக்கினாள் மகிமா.

    பருவம் வந்த பெண்ணை பாதுகாப்பது போல பாலகனை பாதுகாத்தார்கள் பெற்றவர்கள்.

    அவனை வளர்த்த விதம், கற்பித்த அழகு, அவனுக்கு அப்போதே தந்த பாதுகாப்பு வளையம், மெய்காப்பாளர்கள் என பட்டியல் நீண்டது.

    அவனை பராமரிக்க மாதம் சில கோடிகளை கங்கா செலவிட்டார். பதினேழு வயதில் காரல்ல - விமானமே ஓட்டினான்.

    அவன் தொடாத துறை இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து விட்டான்.

    அவன் பிறந்த முதலே ஊடகத்துக்கு அவன் செல்லப்பிள்ளை.

    ஒரு வயதாக இருந்த போது, ஒரு கோகுலாஷ்டமி நாளில் கண்ணன் வேடம் போட்டு நிர்வாண கோலத்தில் அவன் நின்ற படம் சமூக வலை தளங்களில் வைரலாகி ட்ரெண்டிங் ஆனது.

    ஆளான பிறகு கேட்கவா வேண்டும்.

    அவன் சுவாசிப்பது முதல், உறங்குவது வரை, சகல சங்கதிகளையும் சொல்ல தனியாக ஒரு சேனல் செயல்பட்டது.

    அதை பார்க்கும் எண்ணிக்கை பல மில்லியன்கள். அவனுக்கு வலை வீசாத கோடீஸ்வரிகள் இல்லை. இப்போது சஞ்சய்க்கு 25 வயது. வெள்ளி விழா ஆண்டு. அவன் வளர்ந்த கதையை விடாமல் சொல்ல, இந்த ஒரு நாவல் போதாது. அதை பிறகு பார்க்கலாம்.

    இப்போது அவன் கொல்லப்பட இருந்த சம்பவம் நெருப்பாக உலம் முழுக்க பற்றி எரிய,

    உடனே கங்காதரன், மகிமா ஒரு பிரபல ஜோசியரை வீட்டுக்கு அழைத்து விட்டார்கள்.

    ஏற்கனவே ஜோசிய சேனல் ஒன்றில் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள் வரும் போது சஞ்சய் ஜாதகத்தை வைத்துத்தான் கிரக பலன்களை படிப்பார்கள்.

    நாட்டின் ஜாதகத்துக்கு அடுத்தபடியாக ஜோசியர்கள் பிழைப்பு நடத்துவது சஞ்சய் ஜாதகத்தை வைத்துத்தான்!

    இது கொஞ்சம் ஓவரா இல்லை? ஈரோடு அருண் குரல் தெளிவாக கேட்கிறது.

    இப்ப சோஷல் மீடியாவும், முகநூலும், வாட்ஸ்அப்பும் வந்தபிறகு புனிதமான அந்தரங்கம், புழுதி பறக்க அரங்கத்துக்கு வந்து விட்டதே அருண்? இங்கே யாருக்குமே ரகசியம் இல்லையே? நம் வீட்டுக்குள் புகுந்து விட்டதே சமூக வலைதளம். விடுங்க. கதைக்கு வாங்க.

    அந்த பிரபல ஜோசியர் வந்து விட்டார்.

    குழந்தைக்கு ஏற்பட்ட விபத்துதானே?

    "ஆமாம்! தகவல் குடுத்துட்டோம். வந்துட்டே இருக்கான். நீங்க உடனே ஜாதகம் பாருங்க.

    விபத்து நடந்த செய்தி வந்தப்பவே பார்த்துட்டேன் முதலாளி! நானே பேச நெனச்சேன்! நீங்க கூப்பிட்டாச்சு.

    நீங்க கூப்பிட நெனச்சுங்களா? என்ன பிரச்சனை?

    குழந்தைக்கு கட்டம் இருக்கு. விபத்து நடக்கற அன்னிக்கு காலை முதல் தசாபுத்தி மாறியாச்சு. அதான் விபத்து.

    இதை ஏன் எங்ககிட்ட சொல்லலை?

    "நான் பார்த்ததே விபத்து நடந்த பிறகுதானே? செய்தி வந்ததும், ஜாதகத்தை கைல எடுத்துட்டேனே! ஆடி பிறந்திருக்கு. ஆகஸ்ட் 5ஆம் தேதி புதன்கிழமை தசாபுத்தி மாறியிருக்கு! ஏற்கனவே ஏழரைச்சனி நடக்குது. புதன் நீச்சத்துல இருக்கு.

    எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். கங்கா கத்த,

    இருங்க! அவரைப் பேச விடுங்க.

    "முதலாளி சில சங்கதிகளை விளக்கினாத்தானே

    Enjoying the preview?
    Page 1 of 1