Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

IBM – Vizhuntha Company Ezhuntha Varalaru
IBM – Vizhuntha Company Ezhuntha Varalaru
IBM – Vizhuntha Company Ezhuntha Varalaru
Ebook206 pages1 hour

IBM – Vizhuntha Company Ezhuntha Varalaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமைசாலிகள் மிகக் கொஞ்சமே.

உலகளாவிய தொழில் நிறுவனங்களில், எல்லாம் சரியாக இருக்கும்வரை அவை உயர்ந்து கொண்டு போகும் வேகம் எப்படியோ, அதேபோல் அந்த நிர்வாகத்தில் ஒரு சிறிய கோளாறு அல்லது, ஒரு தவறான முடிவு போதும், அந்த நிறுவனம் சடசடவெனச் சரியும் வேகமும் அப்படியே.

ஐ.பி.எம் நிறுவனத்திற்கு அறிமுகம் எதற்கு? தன் துறையில் தலைமை தாங்கி வெற்றி உலா வந்து கொண்டிருந்த ஐ.பி.எம். ஒரு காலகட்டத்தில் வேகமாக விழுந்தது. 'இனி எழ முடியுமா?' என்ற கேள்வியோடு இருந்தது.

லூயிஸ் வி. ஜெர்ஸ்ட்னெர் Jr. வந்தார். அனுபவம் வாய்ந்த தன் தலைமையைத் தந்தார். மீண்டது ஐ.பி.எம். விழுந்த ஐ.பி.எம். எழுந்த வரலாறுதான் இந்த நூல்.

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580143106890
IBM – Vizhuntha Company Ezhuntha Varalaru

Read more from Ranimaindhan

Related to IBM – Vizhuntha Company Ezhuntha Varalaru

Related ebooks

Reviews for IBM – Vizhuntha Company Ezhuntha Varalaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    IBM – Vizhuntha Company Ezhuntha Varalaru - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    ஐ.பி.எம். – விழுந்த கம்பெனி எழுந்த வரலாறு

    IBM – Vizhuntha Company Ezhuntha Varalaru

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வணக்கம்

    பிரச்சினைகளை உருவாக்குவது எளிது. அதற்கு ஏராளமானோர் இருக்கிறார்கள்.

    தீர்க்கும் திறமைசாலிகள் மிகக் கொஞ்சமே.

    உலகளாவிய தொழில் நிறுவனங்களில், எல்லாம் சரியாக இருக்கும்வரை அவை உயர்ந்து கொண்டு போகும் வேகம் எப்படியோ, அதேபோல் அந்த நிர்வாகத்தில் ஒரு சிறிய கோளாறு அல்லது, ஒரு தவறான முடிவு போதும், அந்த நிறுவனம் சடசடவெனச் சரியும் வேகமும் அப்படியே.

    ஐ.பி.எம். நிறுவனத்திற்கு அறிமுகம் எதற்கு?

    தன் துறையில் தலைமை தாங்கி வெற்றி உலா வந்துகொண்டிருந்த ஐ.பி.எம். ஒரு காலகட்டத்தில் வேகமாக விழுந்தது. ‘இனி எழ முடியுமா?’ என்ற கேள்வியோடு இருந்தது.

    லூயிஸ் வி. ஜெர்ஸ்ட்னெர் Jr. வந்தார். அனுபவம் வாய்ந்த தன் தலைமையைத் தந்தார்.

    மீண்டது ஐ.பி.எம்.

    அருமை நண்பர் நந்தன் அவர்கள் ‘Who says Elephants Can’t Dance?’ என்ற புத்தகத்தை ஒரு நாள் என்னிடம் தந்து, ‘இதை அப்படியே மொழிபெயர்க்க வேண்டாம். லூயிஸ் ஜெர்ஸ்ட்னெர் என்ன செய்தார்? எப்படி மீண்டது ஐ.பி.எம்.? என்கிற அளவில் நாம் வாசகர்களுக்குத் தந்தால் போதும்’ என்றார்.

    விழுந்த ஐ.பி.எம். எழுந்த வரலாறுதான் இந்த நூல்.

    அறிமுகம்

    இது என்னுடைய சுயசரிதம் அல்ல.

    அதை எழுதினால் என் குழந்தைகளைத் தவிர வேறு யார் படிக்க ஆர்வமாக இருப்பார்கள்?

    அவர்கள் படிப்பார்கள் என்பதுகூட எனக்கு நூறு சதவீதம் நிச்சயமில்லை.

    1942 மார்ச் முதல் தேதி நியூயார்க்கில் மினியோலாவில் நான் பிறந்தேன்.

    பால் ட்ரக் வண்டி ஓட்டியவர் என் தந்தை. பின்னர் எஃப் அண்ட் எம் ஷஃபீர் பிரீவிங் கம்பெனியில் வேலை பார்த்தார். அதேபோல என் தாய் ஒரு கம்பெனியில் செக்ரட்டரியாக இருந்து கடைசியில் ஒரு கம்யூனிட்டி கல்லூரியில் நிர்வாகியானார்.

    எனக்கு ஒரு மூத்த, இரண்டு இளைய சகோதரர்கள். கல்லூரிப் படிப்புக்கு நான் 1959ல் தயாரானதுவரை ஒரே வீட்டில்தான் நாங்கள் எல்லோரும் குடியிருந்தோம்.

    பாசப் பிணைப்பு மிகுந்த குடும்பம். கல்விக்கு முக்கியத்துவம் தந்த குடும்பம். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வீட்டை மீண்டும் மீண்டும் அடகு வைத்து பள்ளிக் கட்டணம்கட்டி எங்களைப் படிக்க வைத்த அருமையான பெற்றோர். நான் பொறியியல் பட்டதாரி ஆனேன்.

    பின்னர் உடனே ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் சேர்ந்து 23வது வயதில் நிர்வாகவியலில் பட்டம் பெற்று வெளியில் வந்தேன்.

    1965 ஜூன் மாதம் நியூயார்க் நகரில் நிர்வாக ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸே அண்ட் கம்பெனியில் சேர்ந்தேன். ஒன்பது வருடங்களில் கம்பெனியின் மூத்த பங்குதாரராக உயர்ந்தேன்.

    அந்தக் கம்பெனியின் நிதித் துறையின் பொறுப்பாளராக இருந்தேன். மூத்த தலைமைக் குழுவின் உறுப்பினராகவும் நான் பொறுப்பிலிருந்தேன்.

    ஒரு கம்பெனியின் நெளிவு சுளிவுகளை எனக்கு மெக்கின்ஸேதான் கற்றுத்தந்தது.

    நான் என் முப்பது வயதைத் தொட்டபோது ‘இனி என் வாழ்க்கை ஒரு கம்பெனி ஆலோசகர் என்றே போய்விடக் கூடாது’ என்று முடிவெடுத்தேன்.

    கன்ஸெல்டன்ஸியில் நமது புத்திசாலித்தனத்துக்கு ஒரு - சவால் இருந்தது உண்மைதான். என்றாலும் முடிவெடுக்கும் பதவி நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களிடம் போய் இப்படிச் செய்யலாம் அல்லது இப்படிச் செய்யுங்கள் என்று அறிக்கை சமர்ப்பிக்கும் வேலை அலுப்பைத் தந்தது.

    முடிவெடுக்கும் பதவி நாற்காலியில் அமர்ந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினேன்.

    மெக்கின்ஸேயின் பங்குதாரராக இருந்தபோது எங்களது பல வாடிக்கையாளர் கம்பெனிகளிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்துகொண்டிருந்தன.

    ஆனால் அவை ஏதும் என்னைக் கவரும் வகையில் அமையவில்லை.

    1977ல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அழைத்தது. ஏற்றுக்கொண்டேன். கிரெடிட் கார்டு, பயணிகள் காசோலைகள், மற்றும் பயண அலுவலக வர்த்தகங்கள் குழுவுக்கு நான் தலைவர்.

    பத்து ஆண்டுகளில் அந்தக் குழுவின் வளர்ச்சியைப் பதினேழு சதவீதம் உயர்த்தினேன். எட்டு மில்லியன்களாக இருந்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 31 மில்லியன்கள் ஆயிற்று.

    பதினொரு ஆண்டுகள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் எனக்குப் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில்தான் எனக்குத் தகவல் தொழில்நுட்பத்தின் மகிமை புரியத்தொடங்கியது.

    ஈ-பிஸினஸ் (மின் வர்த்தகம்) என்ற வார்த்தை அப்போது - 1970களில் - புழக்கத்தில் இல்லை. என்றாலும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸின் கிரெடிட் கார்டுகள் செய்தது மின் வர்த்தகம் அல்லாமல் வேறென்ன?

    கோடிக்கணக்கான மக்கள் ஒரு கார்டை கையில் வைத்துக் கொண்டு உலகம் சுற்றுகிறார்கள். பொருட்களை வாங்குகிறார்கள். விதம் விதமாய்ச் சாப்பிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் அந்தக் கார்டுதான். மாதாமாதம் அவர்கள் வெவ்வேறு இடங்களில் செய்த அவ்வளவு செலவுகளையும் துல்லியமாகப் பட்டியலிட்டு ஒரு பில் அழகாக அவர்கள் கைக்குப் போய்ச் சேருகிறது. இது ஈ-காமர்ஸ்தான்.

    நான் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்தபோது ஐ.பி.எம். பற்றியும் அறிந்து கொண்டேன். ஓர் அனுபவம் மறக்க முடியாதது.

    ஒரு நாள் எனது டிவிஷனல் மேனேஜர்களில் ஒருவர் என்னிடம் வந்தார். இதுவரை நூறு சதவீதம் ஐ.பி.எம். மயமாக இருந்த டேட்டா சென்டரில் சமீபத்தில் ஒரு அம்தால் கம்ப்யூட்டரை நிறுவியிருக்கிறேன் என்றார். தொடர்ந்து அவர் சொன்ன விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இன்று காலை ஐ.பி.எம். பிரதிநிதி வந்தார். ‘நாங்கள் இதுவரை உங்களுக்கு அளித்து வந்த கஸ்டமர் சர்வீஸை உடனே விலக்கிக் கொள்கிறோம்’ என்று சொன்னார். அம்தால் கம்ப்யூட்டர் வாங்கிவிட்டோமாம். அதனால்அவர்கள் இனி சர்வீஸ் செய்யமாட்டார்களாம்."

    அந்தச் சமயத்தில் ஐ.பி.எம்மின் மிக முக்கியமான பெரிய வாடிக்கையாளர்களில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ஸும் ஒன்றாக இருந்தது. அப்படிப்பட்ட வாடிக்கையாளரிடம் இப்படி முரட்டுத்தனமாக நடப்பது ஐ.பி.எம்முக்கு அழகா என்று கோபப்பட்டேன். ஐ.பி.எம்மின் தலைமை நிர்வாகிக்குப் ஃபோன் போட்டேன். கிடைத்திருந்தால் ஃபோனிலேயே கிழித்திருப்பேன். அவர் கிடைக்கவில்லை. யாரோ ஒரு நிர்வாக உதவியாளர் எடுத்து ‘நான் விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்’ என்றார். அத்தோடு அந்தச் சம்பவம் முடிந்து போனது. ஆனால் என்னால் ஐ.பி.எம்மின் அந்த மெத்தனத்தை என்னால் மறக்க முடியவில்லை.

    1989ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நான் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ஸிலிருந்து விலகினேன். ஆர்.ஜெ.ஆர். நபிஸ்கோ என்ற கம்பெனியில் சேர்ந்தேன்.

    நபிஸ்கோ, ஆர்.ஜெ. ரெனால்ட்ஸ் டொபாக்கோ கம்பெனி ஆகிய இரண்டின் இணைப்பே ஆர்.ஜெ.ஆர். நபிஸ்கோ. அமெரிக்காவில் அதிகம் நேசிக்கப்பட்ட கம்பெனிகளில் ஒன்பதாவதாக இது இருந்தது.

    இந்தக் கம்பெனியை எந்த முதலீட்டு நிறுவனம் அதிகப் பணம் கொடுத்து வாங்குகிறது என்று ஒரு ‘ஏலப் போட்டி’ நடைபெற்றது. கோல்பர்க் கிரேவிஸ் ராபர்ட்ஸ் அண்ட் கோ - சுருக்கமாக கே.கே.ஆர். - அதிகப் பணம் தந்து மற்றவர்களை முந்தியது. அப்போது என்னை அந்தப் புதிய தனியார் கம்பெனிக்குத் தலைமை நிர்வாகியாக கே.கே.ஆர். அழைத்தது. புதிய அந்தக் கம்பெனிக்கு தலைக்குமேல் கடன் சுமை இருந்தது.

    அடுத்த நான்கு ஆண்டுகள் நான் அந்தக் கம்பெனியை சீராக்குவதிலேயே மூழ்கிப் போனேன். வளமில்லாத வரவு - செலவு கணக்கை வளமானதாக்கும் வகையில் கம்பெனியை ‘ரிப்பேர்’ செய்தேன். 1992ல் ஆர்.ஜெ.ஆர். நபிஸ்கோ என்னமோ நன்றாக இயங்கிக் கொண்டிருந்த போதிலும், ‘ஏலத்தில்’ எடுத்த கே.கே.ஆர். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது என்பது புரிந்ததால் ஆர்வம் குறைந்து அது விலக முடிவு செய்தது. நானும் விலக முடிவு செய்தேன்.

    அடுத்து எனது நுழைவாயில் ஐ.பி.எம்.

    விழுந்த அந்தக் கம்பெனி எழுந்தது ஒரு வரலாறு. அதைத்தான் இந்தப் புத்தகம் சொல்கிறது.

    - லூயிஸ்

    உள்ளே...

    1. வந்தது அழைப்பு

    2. அழைப்பை ஏற்றேன்

    3. ஐ.பி.எம் தலைமை நாற்காலியில்

    4. முட்டாள்கள் தினத்தில் தொடங்கினேன்

    5. களம் இறங்கினேன்

    6. புரொஜெக்டரை நிறுத்தினேன்

    7. தொழில்நுட்ப மாற்றத்திற்குப் பச்சைக்கொடி

    8. ஆபரேஷன் ‘பியர் ஹக்’

    9. இறந்தது எம்.சி.

    10. ஊடக வெளிச்சம்

    11. பர்ஸனல் கம்ப்யூட்டர்

    12. அதிரடியாய் சில நடவடிக்கைகள்

    13. தொடர்ந்த விற்பனைகள்

    14. விமரிசனங்கள்

    15. ஒன்று போனது; ஒன்று வந்தது

    16. விளம்பர வியூகம்

    17. ஊதியச் சீரமைப்பு

    18. புதிய போட்டிக் களம்

    19. ஐ.பி.எம் - ஒரு பின்னோட்டம்

    20. அந்தப் ‘புதிய ஒன்று’ எது?

    21. அடித்து ஆட வேண்டிய அவசியம்

    22. வாடிக்கையாளர் சேவை

    23. லோட்டஸை வாங்கினோம்

    24. முன்னோடி நடவடிக்கை

    25. லாபத்தில் ஒரு விற்பனை

    26. பி.ஸி. பிடிபடாத நிலை

    27. அடிப்படை நம்பிக்கைகள்

    28. புதிய கலாச்சாரம்

    29. தலைமை அணியை உசுப்பினேன்

    30. கற்றுக்கொண்ட பாடங்கள்

    31. புத்திசாலி வெல்கிறான்

    32. செயல்பாடு

    33. தனிப்பட்ட தலைமை

    34. சிறியதுதான் அழகா?

    35. சில பார்வைகள்

    36. பங்குதாரர்கள் எப்படி?

    37. நான்கு வகை மக்கள்

    38. குறைவான வாக்குறுதி நிறைவான செயல்பாடு

    39. சமுதாய நோக்கு

    40. போய் வருகிறேன், ஐ.பி.எம்.

    1. வந்தது அழைப்பு

    பெரிய கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகளுக்கு, இரவு நேர விருந்து நிகழ்ச்சிகள் அனேகமாக அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஓர் அம்சம். அதிலும் நியூயார்க் நகரத்தில் சொல்லவே வேண்டாம். 1992 டிசம்பர் 14ம் தேதி அப்படியொரு விருந்துக்குச் சென்றுவிட்டு இரவு பத்து மணியளவில் வீடு திரும்பினேன். நுழையும்போதே வீட்டின் பாதுகாவலர் ‘மிஸ்டர் பர்க் உங்களை உடனே பார்க்க விரும்பினார்’ என்று தகவல் தந்தார்.

    எந்த பர்க்? எங்கே இருக்கிறார்? அவசரம் என்று சொன்னாரா? என்று கேட்டேன்.

    ஜிம் பர்க். இதே அடுக்குமாடி குடியிருப்பில் மாடியில் இருக்கிறாரே அந்த பர்க்தான். அவசரம் என்றுதான் சொன்னார்.

    எனக்கு பர்க் அவர்களை நன்றாகத் தெரியும் என்று சொல்ல முடியாது. என்றாலும் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் கம்பெனியின் தலைமை நிர்வாகி அவர் என்ற வகையில் நான் அவரைப் பெரிதும் மதித்துவந்தேன். உயர் நிர்வாக வட்டாரத்தில் அவருக்கு ஒரு கண்ணியமான மரியாதை நிலவிவந்தது. அவர் ஏன் என்னை அவசரமாகச் சந்திக்க விரும்பினார் என்று என்னால் உடனே புரிந்துகொள்ள முடியவில்லை.

    நான் அவருடன் தொலைபேசியில்

    Enjoying the preview?
    Page 1 of 1