Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tata Steel
Tata Steel
Tata Steel
Ebook335 pages1 hour

Tata Steel

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு மனிதன் எத்தனை காலம் வாழ்கிறான் என்பதல்ல முக்கியம். எப்படி வாழ்கிறான் என்பதுதான் முக்கியம். நூறாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதோ, உற்பத்தித் திறனோ, எஃகின் தரமோ டாடா ஸ்டீல் கம்பெனியின் முக்கிய அடையாளங்கள் அல்ல. உற்பத்தித் திறனில் டாடா ஸ்டீலை இதர பல கம்பெனிகள் மிஞ்ச முடியும். தரத்தில் அதற்கு இணையாக பல இருக்க முடியும்.

இந்தியா மீது நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாடா ஸ்டீல் கொண்ட காதல் இன்னும் முடியவில்லை. உலகத் தரம் வாய்ந்த கம்பெனியாக நவீனப்பட்டு வருகையில் இந்திய எல்லைகளைத் தாண்டியும் அது சிறகு விரிக்கிறது. ராபர்ட் ப்ரௌனிங் சொன்னதுபோல ‘என்னுடன் சேர்ந்து நீயும் முதுமை கொள். சிறந்த தருணம் இனிமேல்தான்.’

Languageதமிழ்
Release dateDec 11, 2021
ISBN6580143106902
Tata Steel

Read more from Ranimaindhan

Related to Tata Steel

Related ebooks

Reviews for Tata Steel

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tata Steel - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    டாடா ஸ்டீல்

    இந்தியாவுடன் ஒரு காதல்

    Tata Steel

    India Udan Oru Kaadhal

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இந்தியாவின் நவீன எஃகுத் தொழிலின் முன்னோடிகளுக்கு இந்த நூல் அர்ப்பணம்.

    இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு மூலாதாரம் எஃகுத் தொழில்தான் என்று தொலை நோக்குடன் சிந்தித்து, தன் எஃகு ஆலையிலிருந்து முதல் வார்ப்புப் பாளம் வெளிவருவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதற்காக உழைத்த மாமனிதர் ஜாம்ஷெட்ஜி என். டாடா அவர்களுக்கு,

    ஜாம்ஷெட்ஜி டாடாவின் தொலை நோக்கையும் ஆர்வத்தையும் உணர்ந்து அவருக்கு உதவிய, விக்டோரியா மகாராணியாரின் ஆட்சியின்போது இந்தியாவுக்கான அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஹாமில்டன் பிரபு அவர்களுக்கு,

    இரும்பு தாது, சுடு நிலக்கரி கனிமங்களைக் கண்டுபிடிக்க காடுகளினூடே அலைந்து திரிந்து கண்டறிந்து, இந்தியாவின் முதல் எஃகு ஆலையை யானைகளையும், கரடிகளையும் அண்டை வீட்டுக்காரர்களாக வைத்துக்கொண்டு ஒரு காட்டில் நிறுவிய துணிச்சல் மிக்க அந்த மாந்தருக்கு,

    அந்த ஆலையைப் பல சிரமங்களுக்கிடையே நூறு சதவீத உற்பத்தித் திறனுக்கு மேலேயே இயக்கிக்காட்டிய அந்த அசாதாரண மனிதர்களுக்கு,

    1990களில் மிகுந்த சிரமப்பட்டு கம்பெனியை இடர்களிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து, உலகத்தரம் வாய்ந்த கம்பெனியாக வளர்த்துத் தந்த அந்த வணக்கத்துக்குரியவர்களுக்கு,

    அதன்பின் உலக அளவில் கம்பெனியைக் கொண்டு வரும் கனவினைக் கண்டு அதை நிறைவேற்றும் அயராத முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதே சமயம் எங்கு சென்றாலும் கம்பெனியின் அடிப்படை நன்னெறிகளையும், சித்தாந்தத்தையும் கூடவே நெஞ்சில் சுமந்து செல்லும் நன்மக்களுக்கு,

    யோசனைகளுக்கோ, செயல்பாட்டுக்கோ தலைமை தாங்க வேண்டிவரும்போது அந்தத் தலைமை, அதை உடலளவிலான, மனதளவிலான, ஆன்ம ரீதியிலான துணிச்சல் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள், எல்லாவிதமான அபிப்ராயங்களுக்கும் பொருந்தி வருவதில்லை. ஆனால் ஜாம்ஷெட்ஜி டாடா வெளிப்படுத்தியது அந்த வகை துணிச்சலைத்தான்.

    - ஜவஹர்லால் நேரு

    எஃகு உற்பத்தி ஆலை ஒன்றை நிறுவ ஜாம்ஷெட்ஜி டாடா உறுதி கொண்டார். இந்திய வியாபார அரங்கில் வர்த்தகத்திலிருந்து உற்பத்தி என்ற மாபெரும் மாற்றத்துக்கு அவரது அந்த உறுதி முகமன் கூறியது. உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக இந்தியா எடுத்து வைத்த முதல் அடி அது என்பதால் அது நாடு முழுமைக்குமே ஒரு திருப்புமுனையைச் சுட்டிக் காட்டியது. வெறுமனே முன்னோக்குக் கொண்ட ஒரு தொழிலதிபர் என்பதற்காக அன்றி, இந்தியா தன் மீதே நம்பிக்கைகொள்ள உதவியவர் என்பதற்காக நான் ஜாம்ஷெட்ஜியை என்றும் நினைவில் கொள்வேன்.

    - ‘ஃபார் த லவ் ஆஃப் இண்டியா: த லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் ஜாம்ஷெட்ஜி டாடா’ நூலில் அஸிம் பிரேம்ஜி

    கௌரவங்களை அவர் தேடிப் பெற்றதில்லை,

    சிறப்புரிமைகளை தர வேண்டிக் கேட்டதில்லை

    ஆனால்,

    இந்தியாவின் வளர்ச்சியிலும்

    இந்தியத் தாயின் எண்ணற்ற மக்களிலும்

    என்றும் அவர் பேரார்வம் கொண்டிருந்தார்.

    - ஜாம்ஷெட்ஜி என். டாடா அவர்களுக்கு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் அஞ்சலிக் குறிப்பு (20.5.1904)

    உள்ளே...

    அணிந்துரை

    முன்னுரை

    பகுதி I: ஒரு கனவு - ஒரு படைப்பு

    1. ஊழ்வினை தந்த ஒருவர்

    2. உலோக வளையம்

    3. ஒளிந்திருந்த செல்வம் - வெளிப்பட்டது சக்ச்சி

    4. ஒரு நகரத்தை உருவாக்குதல்

    பகுதி II: புது வழி காட்டிய முன்னோடி

    5. இந்தியாவுக்காக ஒரு தொலைநோக்குப் பார்வை, 1916

    6. தேசியத் தலைவர்களின் தலையீடு

    7. நிர்வாகத்திற்கு தொழிற்சங்க ஆதரவு

    பகுதி III: துணிச்சல் உணர்வு

    8. எஃகு மனிதர்கள்

    9. வயதாக ஆக இளமை

    10. மதிப்பு மிக்க கனிமங்கள் - பெருமதிப்பு மிக்க மனிதர்கள்

    11. அலங்காரங்கள்

    பகுதி IV: மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக...

    12. விளையாட்டுகளுக்குக் கோபுரமாக...

    13. தொழில் இந்தியாவின் சமூகப் பிரக்ஞை

    14. அனைவரையும் அரவணைத்து

    பகுதி V: போராட்டமும் வெற்றியும்

    15. சிக்கலான சூழல் கண்டெடுத்த சிறப்பான மனிதர் (1980 - 1990)

    16. வாழ்வா? சாவா?

    17. புதியதொரு விடியல்

    பகுதி VI: உலக மயமாதல்

    18. எதிர்காலத்திற்குத் திட்டமிடல்

    19. இந்திய நிலப்பகுதியின் ஓர் அங்கம்

    முடிவுரை: ஜாம்ஷெட்பூரின் உணர்வு

    நன்றி

    அணிந்துரை

    டாடா ஸ்டீலின் வரலாறு பலவிதமான நிகழ்வுகளை உள்ளடக்கிய வண்ணமிகு வரலாறு. காலனி ஆட்சியின் கடைசி ஆண்டுகளிலும், புதிய சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்திலும் பல வழிகளில் அதன் விதி பின்னிப் பிணைக்கப்பட்டது.

    ஜாம்ஷெட்ஜி என். டாடா அவர்களின் முன்னோக்குப் பார்வையில் தொடங்கி, அவருக்குப் பின்னர் சர் தோரப் டாடா, ஜே.ஆர்.டி. டாடா ஆகியோர் எப்படி ஜாம்ஷெட்ஜியின் சிந்தனைக்குச் செயல் வடிவம் தந்து விரிவாக்கம் செய்தார்கள் என்று விவரமாக டாடா ஸ்டீல் கம்பெனியின் நூறாண்டு கால வரலாற்றை ரூஸி லாலா அவர்கள் மிகச் செம்மையாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.

    டாடா ஸ்டீலின் போர்க் காலப் பணி, இந்திய விடுதலையின் ஆரம்ப நாட்களில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அதன் பங்களிப்பு, அதன் சமீபத்திய அதிநவீன வளர்ச்சி, குறைந்த உற்பத்திச்செலவில் உலகில் இயங்கும் எஃகு நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமை போன்ற பலவற்றை ‘தொடு உணர்ச்சி’ போல ரூஸி நமக்கு இந்நூலில் காட்டியிருக்கிறார்.

    கம்பெனியின் மனிதாபிமானப் பக்கத்தை படிக்கச் சுவையாகவும், கோர்வையாகவும் தருவதிலும் ரூஸி வெற்றி பெற்றிருக்கிறார். கம்பெனியின் பலம் அதன் மக்களில் படர்ந்திருப்பதையும், ‘வென்றாக வேண்டும்’ என்ற அவர்களின் மன உறுதியையும் மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறார்.

    படிக்கச் சுவையாக இருக்கும் இந்த நூல் டாடா ஸ்டீல் கம்பெனியின் நூறு ஆண்டுகால வரலாற்றின் உண்மையான பதிவு.

    - ரத்தன் என். டாடா

    முன்னுரை

    ஒரு மனிதன் எத்தனை காலம் வாழ்கிறான் என்பதல்ல முக்கியம். எப்படி வாழ்கிறான் என்பதுதான் முக்கியம். நூறாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதோ, உற்பத்தித் திறனோ, எஃகின் தரமோ டாடா ஸ்டீல் கம்பெனியின் முக்கிய அடையாளங்கள் அல்ல. உற்பத்தித் திறனில் டாடா ஸ்டீலை இதர பல கம்பெனிகள் மிஞ்ச முடியும். தரத்தில் அதற்கு இணையாக பல இருக்க முடியும்.

    டாடா ஸ்டீல் கம்பெனியின் பெருமை அதன் பிறப்பில் இருக்கிறது; விவசாய நாட்டில் பிறந்த ஒருவர் தன் நாடு தொழில்மயமாவதற்கு மூலாதாரமாக எஃகு ஆலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று முன்னோக்குப் பார்வை கொண்டு செயல்பட்டரே, அந்தப் பார்வையில் இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவை ஓர் உன்னத தொழில் சக்தியாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது ஆர்வமாக இருந்தது. அந்த ஆர்வத்தில் அவருடைய நாட்டுப்பற்று தெரிந்தது.

    அவருடைய சிந்தனையையும், முன்னோக்குப் பார்வையையும் புரிந்து கொண்டு, பல்வேறு சிரமங்களிடையே அந்தச் சிந்தனையைச் செயல்படுத்த முனைந்த மற்றவர்களின் அர்ப்பணிப்பு உணர்வில் இருக்கிறது டாடா ஸ்டீலின் கம்பீரம். நடந்தும், மாட்டு வண்டிகளில் பயணம் செய்தும் காடு காடாகப் போய் இரும்புத்தாது கிடைக்குமா என்று தேடித் தேடிக் களைத்துப் போய், டீ கலக்க தண்ணீர்கூட கிடைக்காத நிலையில், சோடாவில் டீ கலந்து குடித்த அவர்களின் அயராத முயற்சியில் இருக்கிறது டாடா ஸ்டீலின் பெருமை.

    மேற்கு நாடுகளில் ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேர வேலை என்று இருந்தபோதே டாடா ஸ்டீல் கம்பெனியில் எட்டு மணி நேர வேலை என்பது போன்று அக்கம்பெனி வகுத்துக் கொண்ட சில கொள்கைகளில் அதன் தனிச்சிறப்பு வெளிப்படுகிறது.

    தொடர்ந்த ஆண்டுகளில் தன் சமூக நலப் பணிகளுக்கு அந்தக் கம்பெனி நிர்ணயித்துக் கொண்ட தரங்கள், மற்ற தொழில்களுக்கு அதிகார பூர்வமான சட்டமாகவே இயற்றப்பட்டது. அதுவும் எப்போது? ஐந்து, பத்து, இருபது, முப்பது வருடங்கள் கழித்து! இந்த நூறாண்டுகளில் டாடா ஸ்டீல் கம்பெனியும் சில சமயங்களில் சிரமங்களைச் சந்தித்திருக்கிறது; தொழிலாளர் உறவில் தடுமாறி இருக்கிறது. எனினும் அவற்றிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களால் கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் ஒரு தரம்கூட வேலை நிறுத்தம் நடந்ததில்லை என்ற சாதனை அதற்குச் சொந்தமாகி இருக்கிறது. டாடா ஸ்டீல் கம்பெனியின் தொழிலாளர் உறவு வித்தியாசமானது. தொழிலாளர்களின் பங்கேற்பை விரும்புகிற நிர்வாகம். தொழிலாளர்களுக்கு அதுவரை தரப்படாத பல வசதிகளை நிர்வாகம் தந்தது. டாடாவின் முதல் நிறுவனமான ‘எம்பரஸ் மில்ஸ்’ அப்போதே இட்ட விதை அது.

    நாங்கள் ஏதோ மற்றவர்களைவிட சுயநலம் இல்லாதவர்கள், தாராள மனம் கொண்டவர்கள், தர்ம சிந்தனை மிக்கவர்கள் என்றெல்லாம் மார் தட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் எங்கள் வர்த்தகக் கொள்கைகளை கபடமின்றியும், வலுவாகவும், பங்குதாரர்களின் நலனை எங்கள் நலன் போலக் கருதுகின்ற வகையிலும், ஊழியர்களின் உடல் நலம், நல வாழ்வைப் போற்றும் விதத்திலும் வகுத்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறோம். அந்தக் கொள்கைகள்தான் எங்கள் வளத்துக்கான அடித்தளம் என்றார் டாடா.

    சிட்னி, பியாட்ரிஸ் வெப் ஆகிய இரண்டு புகழ்பெற்ற சமதர்மவாதிகளை முதல் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்திலிருந்து வரவழைத்து அவர்களிடமிருந்து நிறைய யோசனைகளைப் பெற்று, சமூக நலன்களை டிஸ்க்கோ மேலும் மேம்படுத்தியது.

    1938–84 வரை நாற்பத்தாறு வருடங்கள் டாடா ஸ்டீல் கம்பெனியின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி. டாடா தனக்கான வழிகாட்டுக் கொள்கைகளைத் தெளிவாக வகுத்துக் கொண்டார்.

    நாட்டுக்குப் பலனளிக்காத எதுவும் முயற்சிக்கத் தகுதியற்றதே என்பது அந்தக் கொள்கைகளில் ஒன்று. அந்த நோக்கில் சில நன்னெறிகளை அவர் வகுத்துத் தந்தார். அவருக்குப் பின் டாடா ஸ்டீலை தொடர்ந்து நிர்வகித்த நான்கு தலைவர்களும் அந்த நெறிகளைக் கைக்கொண்டார்கள்.

    ‘த கிரியேஷன் ஆஃப் வெல்த்’ என்ற புத்தகத்துக்கு அளித்த முடிவுரையில் ரத்தன் என். டாடா அவர்கள், டாடா நிறுவனத்தின் வியாபாரப் பாரம்பரியத்தை நிலை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்வதாகவும், வேகமாக சீரழிந்து வரும் நெறிமுறைகளுக்கிடையே, அந்தப் பாரம்பரியம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட, வளர்ச்சி நோக்கம் கொண்ட, உயர்நிலை நேர்மையில் தோய்ந்த, நெறிகள் பிறழாத, ஊழல், லஞ்சம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றில் பங்கேற்காத தலைமையைச் சுட்டிக் காட்டும் என்றும் குறிப்பிட்டார்.

    அதே நூலுக்கு லண்டனிலிருந்து பதிப்பிக்கப்படும் ‘காமன்வெல்த் லாயர்’ என்ற இதழ் வெளியிட்ட விமரிசனத்தில், ‘19-ஆம் நூற்றாண்டு இறுதியில் ஒரு சிறிய சாதாரணமான வர்த்தக நிலையமாகத் தொடங்கி இன்று இரும்பு, எஃகு, எரிசக்தி, வேதியியல் பொருட்கள், உயர்கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, மோட்டார் வாகனங்கள், விருந்தோம்பல், அழகு சாதனங்கள், டீ, மென்பொருள், ஆலோசனைச் சேவை, ஐவுளி என்று பல துறைகளிலும் படர்ந்து வெற்றிகரமாகக் காலூன்றி, அவற்றுடன் உண்மையான மனிதநேய சேவைகளையும் இணைத்து ஒரு தொழில் பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்திருப்பது மலைக்க வைக்கிறது. இவ்வளவையும் தான் கொண்ட உறுதியான, அசைக்க முடியாத கொள்கைகளிலிருந்தும் இன்று, ‘நிறுவன சமூகப் பொறுப்பு’ எனப்படும் ‘கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி’ என்ற நிலையிலிருந்தும் சற்றும் வழுவாமல் சாதிக்க முடிந்திருப்பது உண்மையிலேயே கவர்ச்சியானது. (1980களில் டிஸ்க்கோவை நாட்டுடைமை ஆக்க இந்திய அரசு முயன்றபோது, அந்த முயற்சி கூடாது என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தது அந்தக் கம்பெனியின் தொழிற்சங்கம்தான் என்ற உண்மை, கம்பெனியின் நிர்வாகம் எத்தகையை மேன்மையான நம்பிக்கையை ஊழியர்களிடம் பெற்றிருந்தது என்பதற்குச் சான்று). இந்த நூலிலிருந்து, பொது நலத்தை முன்னிட்டு செல்வம் உருவாக்குவது எப்படி, குற்றம் நாடுகிற இந்தக் காலத்தில் நன்னெறி முதலாளித்துவம் எப்படியெல்லாம் நன்மை பயக்கும் என்ற விவரங்கள் கிடைக்கின்றன." என்று எழுதப்பட்டிருந்தது.

    1969ஆம் ஆண்டில், ஜாம்ஷெட்பூருக்கும், தன் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கும், கம்பெனி தொடர்பான சுரங்கங்கள், நிலக்கரிச் சுரங்கங்களுக்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்ட நிலையில், ‘சுற்றுவட்டாரப் பகுதியையும் நாம் கவனிக்க வேண்டும்’ என்றார் ஜே.ஆர்.டி. டாடா. இதனால் சமுதாயம் பெருமளவுக்குப் பயன்பெற்றது. மற்ற சில கம்பெனிகளுடன் சேர்ந்து டாடா ஸ்டீல் கம்பெனி தன்னுடைய அமைப்பு விதிகளை, பங்குதாரர்களின் ஒப்புதலுடன் மாற்றிக் கொண்டது. அதனால் ஊழியர்கள் என்ற வட்டத்தைத் தாண்டிச் சென்று பொதுமக்களுக்கும் அது சேவை புரிய முடிந்தது.

    1990களில் ‘வாழ்வா சாவா’ போராட்டத்தின்போது தன் ஊழியர், தொழிலாளர் எண்ணிக்கையை மிகவும் குறைத்தாக வேண்டிய, தவிர்க்க இயலாத கட்டாயத்தில் 78000 பேராக இருந்ததை 2000இல் 54000 ஆகவும், பின் 2006இல் 38000 ஆகவும் டாடா ஸ்டீல் குறைத்தது. இதனால் அது பெருமைப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர் உறவில் சற்றே முறுகல் நிலை ஏற்பட்டிருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஆட் குறைப்பு முடிவை வேறு சில கம்பெனிகள் எடுத்திருந்தால் அவை தலை தூக்காமலேயே போயிருக்கவும் கூடும். ஆனால் டாடா ஸ்டீல் அந்த முடிவைச் செயல்படுத்திய பின்னும் உறவுகள் பாதிக்கப்படாத நிலையில் இயங்கியது.

    ‘வோர்ல்டு ஸ்டீல்’ பத்திரிகை குறிப்பிட்டது போல ‘ஒரு நல்ல கம்பெனிக் கலாச்சரம்’ பாதுகாக்கப்பட்டது.

    தனது பழைமையான இயந்திரங்களை வைத்துக் கொண்டு, அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த விலை நிர்ணய உரிமையால் பாதிக்கப்பட்டு டாடா ஸ்டீல் 1990களில் பட்ட சிரமத்தைப் பற்றி குறிப்பிடுகையில் ‘அனேகமாக டாடா ஸ்டீல் இருந்த இடம் காணாமல் போகக் கூடும்’ என்றார் ஒரு பிரபல சர்வதேச ஆலோசகர். எப்படி அந்தச் சிரம காலத்தை கம்பெனி சிறப்பாக வெற்றிகொண்டது என்பது இந்த நூலின் இறுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.

    இந்தக் கம்பெனி எப்படி மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறது, அவர்களின் சில தனிப்பட்ட பிரச்சினைகளையும் எப்படி அது தீர்த்து வைக்க முன் வந்தது போன்றவற்றை இந்த நூலில் பதிவு செய்வதில் நான் அக்கறை காட்டியிருக்கிறேன். பிளவுபட்ட ஒரு திருமணத்தை எப்படி கம்பெனியின் முயற்சிகள் சீராக்கின என்று நான் நேரில் கண்ட ஒரு சம்பவத்தையும் சேர்த்திருக்கிறேன். டாடாவுடன் சம்பந்தப்படாத பல கிராம மக்கள் எப்படி எப்படியெல்லாம் உடல் நலம், கல்வி போன்றவற்றில், இந்தக் கம்பெனியின் உதவியால் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்பதையும் எழுதியிருக்கிறேன்.

    டிஸ்க்கோவில் போராட்டக் காலங்களில் (1990களில்) நாட்டின் பெரிய கம்பெனிகளின் தலைவர்களை அன்றைய பிரதமர் அழைத்துப் பேசிய போது, ஒவ்வொரு கம்பெனியும் தங்களின் வரிபோக நிகர லாபத்தில் ஒரு சதவீதத்தை சமூக நலப் பணிகளுக்காகத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். டாடா ஸ்டீல் கம்பெனி கணக்குப் போட்டுப் பார்த்தபோது, லாபம் குறைவாக வந்த ஆண்டுகளில் அந்தக் கம்பெனி சமூக நலப் பணிகளுக்காகச் செலவிட்ட தொகை, லாபம் அதிகம் வந்த ஆண்டுகளில் செலவிடப்பட்டதைவிட அதிகமாக இருந்தது. லாபம் குறைந்த ஆண்டுகளில் 13 சதவீதம் என்றால் லாபம் நிறைந்த ஆண்டுகளில் 4 சதவீதம். எஃகு உற்பத்தி செய்யத்தான் இந்தக் கம்பெனி உருவாக்கப்பட்டது. ஆனால் தன்னைத் தோற்றுவித்தவர்களின் முன்னோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, வழிகாட்டப்பட்டு, மெல்ல மெல்ல ஓர் அழகிய தொழில் கலாசாரத்தையே இந்தியாவுக்காக இந்த நிறுவனம் உருவாக்கித் தந்தது.

    ஐ.ஐ.எம் போன்ற இந்திய மேலாண்மை உயர் கல்வி நிறுவனங்களில் டாடா ஸ்டீல் கம்பெனியிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய பல உதாரணங்கள், கேஸ் ஸ்டடீஸ் என்பார்களே அப்படி, அங்கே மற்ற எந்தக் கம்பெனியையும் விடவும் அதிகமாக எடுத்துக் கையாளப்படுகின்றன. மாணவ மாணவியருக்குப் போதிக்கப்படுகின்றன. இன்றுவரை அப்படிப்பட்ட இருபத்தொரு உதாரணங்கள் அங்கே கேஸ் ஸ்டடீஸ் ஆக இருக்கின்றன.

    இந்தியா மீது நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாடா ஸ்டீல் கொண்ட காதல் இன்னும் முடியவில்லை. உலகத் தரம் வாய்ந்த கம்பெனியாக நவீனப்பட்டு வருகையில் இந்திய எல்லைகளைத் தாண்டியும் அது சிறகு விரிக்கிறது. ராபர்ட் ப்ரௌனிங் சொன்னதுபோல ‘என்னுடன் சேர்ந்து நீயும் முதுமை கொள். சிறந்த தருணம் இனிமேல்தான்.’

    மே 1, 2007

    ஆர்.எம். லாலா

    பகுதி I

    ஒரு கனவு - ஒரு படைப்பு

    ஒரே ஒரு மனிதர்தான் எதிர்காலத்தைத் துணிச்சலாகப் பார்த்தார். தன் போட்டியாளர்களின் கைக்கும் வாய்க்குமான பழக்கத்துக்கு அப்பால், இந்தியா முழுமையான பொருளாதாரச் சுழற்சியைச் சந்திக்கும் என்று நிச்சயமாய் உணர்ந்தார். அந்த மனிதர் ஜாம்ஷெட்ஜி நஸர்வாஞ்ஜி டாடா.

    - சர் ஸ்டான்லி ரீட்

    ஆசிரியர், டைம்ஸ் ஆஃப் இந்தியா, 1907 – 1923

    1

    ஊழ்வினை தந்த ஒருவர்

    1880இல் தொடங்கிய பத்தாண்டு காலம் அது. இந்திய நாட்டின் மையப் பகுதிகளைச் சேர்ந்த காடுகள் அடர்த்தியாகவும், புலி, யானை மற்ற வன விலங்குகளின் உறைவிடமாகவும் அமைந்திருந்தன.

    அந்தக் காடுகளினூடே பயணிகளின் வரிசை ஒன்று சென்று கொண்டிருந்தது. வரிசையின் முதலில் தாடி வைத்த, கூர்மையான உடல் அம்சங்கள் கொண்ட இளைஞர் ஒருவர் ஒரு குதிரை மீது அமர்ந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் இன்னொரு குதிரைமீது புடவை உடுத்திய பேரழகு இளம் பெண் ஒருவர் பக்கவாட்டில் கால்களைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். இன்னொரு குதிரையின் மேல் இரண்டு குழந்தைகள் அமர்ந்திருக்க அவர்களை ஒருவர் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டு சென்றார்.

    Enjoying the preview?
    Page 1 of 1