Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appachi
Appachi
Appachi
Ebook419 pages2 hours

Appachi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து அழைப்பு வந்தால் ஒரு இனிய அதிர்ச்சி ஏற்படுவது இயற்கை.

“பிரதர், உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். வந்து போக முடியுமா?” என்று ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பிற்பகலில் திரு. ஏவி.எம். சரவணன் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் கேட்டபோது எனக்கும் அத்தகைய இனிய அதிர்ச்சியே ஏற்பட்டது.

போனேன்.

“‘அப்பச்சி’யின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட விரும்புகிறேன். அதை எழுதும் பணியினை உங்களிடம் தர முடிவு செய்திருக்கிறேன். செய்து தர முடியுமா?” என்றார்.

அதிர்ச்சி நீங்கி வியப்பு மேலிட்டது.

என் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்னை நெகிழ வைத்தது. என் முதல் நன்றி அவருக்கு.

கடந்த ஆறு மாதங்களாக, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எனக்கு ஏவி.எம் என்ற மாமனிதரின் வாழ்க்கைக் குறிப்புகள்பற்றிய சிந்தனைதான்.

திரு. ஏவி.எம் அவர்களோடு பல்வேறு காலகட்டங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை நூறுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து சேகரித்ததே ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. எந்தெந்த அத்தியாயத்தில் அவை பொருந்தி வருமோ அங்கங்கே அவற்றை சேர்த்திருக்கிறேன்.

அவையே உங்கள் கரங்களில்...

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580143106899
Appachi

Read more from Ranimaindhan

Related to Appachi

Related ebooks

Reviews for Appachi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appachi - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    அப்பச்சி

    (ஏவி.எம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)

    Appachi

    (AV.M. Avargalin Vazhkkai Varalaru)

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வணக்கம்

    எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து அழைப்பு வந்தால் ஒரு இனிய அதிர்ச்சி ஏற்படுவது இயற்கை.

    பிரதர், உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். வந்து போக முடியுமா? என்று ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பிற்பகலில் திரு. ஏவி.எம். சரவணன் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் கேட்டபோது எனக்கும் அத்தகைய இனிய அதிர்ச்சியே ஏற்பட்டது.போனேன்.

    ‘அப்பச்சி’யின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வெளியிட விரும்புகிறேன். அதை எழுதும் பணியினை உங்களிடம் தர முடிவு செய்திருக்கிறேன். செய்து தர முடியுமா? என்றார்.

    அதிர்ச்சி நீங்கி வியப்பு மேலிட்டது.

    என் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்னை நெகிழ வைத்தது. என் முதல் நன்றி அவருக்கு.

    கடந்த ஆறு மாதங்களாக, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எனக்கு ஏவி.எம் என்ற மாமனிதரின் வாழ்க்கைக் குறிப்புகள்பற்றிய சிந்தனைதான்.

    திரு. ஏவி.எம் அவர்களோடு பல்வேறு காலகட்டங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை நூறுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து சேகரித்ததே ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. எந்தெந்த அத்தியாயத்தில் அவை பொருந்தி வருமோ அங்கங்கே அவற்றை சேர்த்திருக்கிறேன்.

    திரு. ஏவி.எம் அவர்களைப் பேட்டி கண்டு குமுதத்தில் நண்பர் திரு. பால்யூ அவர்கள் எழுதிய தொடர் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. இருந்தாலும் ஏவி.எம் அவர்களின் மேலும் பல்வேறு பரிமாணங்களைத் தொட்டுக்காட்டி, அவரது அனுபவங்களைச் சுட்டிக்காட்டி, அந்த வாழ்க்கைப் பாடங்களை நமக்குச் சொல்லும் வகையில் ஒரு புத்தகத்தைக் கொண்டு வருவதே இந்த முயற்சி.

    ஓர் உண்மையை நான் இங்கே தயங்காமல் ஒப்புக்கொள்கிறேன்.

    பெரியவர் ஏவி.எம் அவர்கள் ஒரு பெருங்கடல். அந்தக் கடலின் முழு ஆழத்திற்கு என்னால் மூழ்க முடியவில்லை. முடியும் என்றும் தோன்றவில்லை. அந்தப் பெருங்கடலின் கரையோரம் கால் நனைத்திருக்கிறேன். அவ்வளவே.

    இருந்தாலும் இதுவரை திரு. ஏவி.எம் அவர்களைப்பற்றி பலரும் அறிந்திராத சில விவரங்களை என்னால் இந்த நூலில் தர முடிந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பெருமைப்படுகிறேன்.

    வாழ்க்கையாகட்டும்; கலையாகட்டும், எதிலும் தனது நுட்பமான, மனித நேயமிக்க அணுகுமுறையால் ஏவி.எம் அவர்கள் பலருக்குப் பாடமாகியிருக்கிறார். படிக்கிற உங்களுக்கும் பல பாடங்கள் நிச்சயம் கிடைக்கும், வியப்புகள் ஏற்படும், எனக்கு ஏற்பட்ட மாதிரி.

    காரைக்குடி பக்கம் அப்பாவை 'அப்பச்சி' என்று அழைப்பது வழக்கம். குடும்பத்தினர் மட்டுமல்லாமல், ஏவி.எம் நிறுவனத்தின் ஊழியர்கள், கலையுலகினர் அனைவருமே ஏவி.எம் அவர்களை 'அப்பச்சி' என்றே அன்புடன் அழைத்து மகிழ்ந்தார்கள்.

    கலையுலகில் குறிப்பாக தமிழ்த் திரையுலகில் ஒரு தந்தையின் நிலையிலிருந்து வழிகாட்டியவர் திரு. ஏவி.எம் அவர்கள். எனவே அவரது இந்த வாழ்க்கை வரலாற்று நூலுக்கு அப்பச்சி என்ற பெயர் அழகாகப் பொருந்தும் என்று தோன்றியது. திரு சரவணன் அவர்களுக்கும் இது பிடித்திருந்தது.

    இந்த நூலை எழுதியவன் நான் என்றாலும் பல உதவிக்கரங்கள் நீண்டு என் முயற்சியைப் பலப்படுத்தின.

    நான் நன்றி சொல்ல வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியல் சற்று நீளமானது.

    * ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்து, ஒருங்கிணைத்து, புகைப்படங்களைத் தொகுத்துத்தந்து உதவிய ஏவி.எம் ஸ்டுடியோஸ் திரு. எஸ்.பி. அர்ஜுனன் அவர்கள்

    * அச்சுக்குப் போகுமுன் கையெழுத்துப் பிரதி நிலையிலேயே முழுவதுமாகப் படித்துப் பார்த்து நல்ல யோசனைகளை நட்புடன் தந்த என் மதிப்பிற்குரிய திருமதி சிவசங்கரி அவர்கள்.

    * திரு. ஏவி.எம் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பல்துறை பெருமக்கள்.

    * எத்தனை முறை திருத்தினாலும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் ஒளி அச்சுப் பணியைச் செய்து தந்த நண்பர் திரு. செல்வின்; அப்பணியைச் செவ்வனே மேற்பார்வையிட்ட நணபர் திரு. தங்க. காமராஜ்.

    * என் எழுத்துப் பணிக்கு முழு ஒத்துழைப்பு தந்து வரும் நண்பர் திரு. சி. அண்ணாமலை.

    * பக்கங்களை வடிவமைத்துத் தந்த நண்பர் திரு. ரோஹான் பின்னி.

    * என் எழுத்துப் பணியில் என்றும் நான் திரு. சாவி அவர்களை நன்றியுடன் நினைத்துக்கொள்ளத் தவறுவதில்லை.

    இப்போதும் அப்படியே.

    ராணிமைந்தன்

    புதிய எண் 7(2),

    மணவாளன் தெரு

    வெற்றி நகர் எக்ஸ்டென்ஷன்

    செம்பியம், சென்னை – 600082

    தொலைபேசி: 6713643/6711950

    உள்ளே

    1. ஆவிச்சி மகன்

    2. இசைத்தட்டுகளில் தனி முத்திரை

    3. முதல் தோல்வி - மூன்றும் தோல்வி

    4. பிரச்சினைக்கு மேல் பிரச்சினை

    5. சொந்த ஊரில் சொந்த ஸ்டுடியோ

    6. கோடம்பாக்கத்தில் ஒரு கலைக் கோயில்

    7. வடக்கிலும் பறந்த ஏவி.எம் கொடி

    8. விதையில் உயிர் இருந்தால்...

    9. விளம்பரங்களில் புதுப் பாணி

    10. நட்பு போற்றியவர்

    11. சுவையான நிகழ்ச்சிகள் சில

    12. இலக்கிய ஆர்வம்

    13. கல்விப் பணியில்

    14. மனித நேயர்

    15. தெய்வ பக்தி - தேச பக்தி

    16. திட்டமிடுதல் – ஏவி.எம். ஸ்டைல்

    17. தொழிலாளர் நல்லுறவு

    18. அர்த்தமுள்ள அறிவுரைகள்

    19. ஊழியர் நலனில் உண்மையான அக்கறை

    20. கலைஞர்களை மதித்த பாங்கு

    21. கலைஞர்கள் கொண்டிருந்த மதிப்பு

    22. அனுபவ ஆசான்

    23. பழுப்பு உறையில் பழங்கள்

    24. எதிலும் வேண்டும் துல்லியம்

    25. போலி கௌரவம் பார்க்காதவர்

    26. சமுதாய ஈடுபாடு

    27. தெளிவு - துணிச்சல்

    28. பத்திரிகையாளர்களிடம் பாசம்

    29. பழக்க வழக்கங்கள்

    30. நல்லதொரு குடும்பத் தலைவர்

    31. அணைந்தது விளக்கு

    முயற்சி திருவினையாக்கும்

    1

    ஆவிச்சி மகன்

    காரைக்குடியை இன்று ஒரு நகரமாகப் பார்ப்பவர்களில் பலருக்கு அன்றைய காரைக்குடியைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரைச் செடிகள் எங்கும் படர்ந்து ஒரு காட்டுப் பூமியாக இருந்த கிராமம் அது. 'காரைச் செடிகள் குடியிருந்ததால் காரைக்குடி' என்றுகூட சொல்வார்கள். அதற்குப் புதிய முகம் கொடுத்தவர்கள் நகரத்தார் சமூகத்தினர். சேந்தணி, கொறட்டி, வாரிவயல், ஆத்தங்குடி, கல்லுப்பட்டி போன்ற சுற்று வட்டத்துச் சிற்றூர்களிலிருந்து நகரத்தார் அங்கே குடியேறி காடு வெட்டி நிலம் திருத்தி வீடு கட்டியதாக வரலாறு.

    ஏவி.எம் பிறந்த 'வயலார் வீடு'

    காரைக்குடியில் 'வாரிவயலார் வீடு' பிரபலமானது. வாரிவயல் கிராமத்திலிருந்து வந்தவர்கள் வசித்த வீடு. வாரிவயல் என்றால் வருவாயை வாரி வழங்கும் விளைநிலம் என்று பொருள்.

    அன்றைய நகரத்தார்களுக்கு ஒரு தனி அடையாளம் இருந்தது. திரைகடல் ஓடி திரவியம் சேர்ப்பவர்கள் அவர்கள் என்பது அவர்களின் தனி முத்திரை. மிகச் சிறந்த வர்த்தகப் பெருமக்கள் அவர்கள். அச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் தாய்நாட்டில் இருந்ததில்லை. பர்மா, மலேயா, இலங்கை போன்ற கிழக்காசிய நாடுகளில் தங்கள் வர்த்தகக் குடையை அவர்கள் விரித்திருந்தார்கள். சிலர் ஹாங்காங், சைகான் வரையில்கூடப் போனதுண்டு. வட்டிக்குக் கடன் தரும் லேவாதேவிதான் அவர்களின் முக்கிய வர்த்தகம். வெளிநாட்டுப் பணம் மிகுதியாகப் புழங்கியதால் காரைக்குடியில் வாழ்ந்து வந்த நகரத்தார் செல்வந்தர்களாகவே இருந்தார்கள். இயல்பாகவே அவர்களுக்கு நுண்கலைகளில் ஆர்வம் இருந்தது. இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களாகவும் அவர்கள் விளங்கினார்கள். விலை மதிப்பில்லாத பழமையான பொருட்களைச் சேகரித்துப் பாதுகாப்பதில் அவர்களுக்கு விருப்பம் இருந்தது.

    கையிலே பணம், கலைகளில் ஈடுபாடு, உதவிக்கு ஆட்கள், தன் வேலைகளைக் கவனிக்க ஒரு காரியதரிசி இவை ஒரு நகரத்தாருக்கு இருந்தாக வேண்டிய இன்றியமையாத அம்சங்களாகக் கருதப்பட்டன. இவை ஒரு பாரம்பரிய மரபாகவேகூட கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

    இந்த மரபை உடைக்கத் துணிந்தார் ஒரு மாமனிதர். அவர் பெயர் ஆவிச்சி செட்டியார். என்றும் வாழும் ஏவி.எம் என்ற வரலாற்றின் தொடக்கம் அவர். வட்டித் தொழிலில் அவர் கவனம் செல்லவில்லை. கடல் கடந்து செல்லவும் விரும்பவில்லை. 'இங்கேயே இருந்து எவ்வளவோ செய்ய முடியும்... செய்து காட்டுகிறேன்' என்று துணிவு கொண்டார். தனது புதுமையான சிந்தனைகளைச் செயல்படுத்தத் தடையாக எது வந்தாலும் அவற்றை அச்சமின்றி எதிர்கொண்டார்.

    தந்தை ஆவிச்சி செட்டியார்

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் அது. கல்லுக்கட்டியின் வடகரையில் அக்கிரஹாரம் ஒன்று இருந்தது. கோயில் குருக்கள்மார் அங்கே சிறிய வீடுகளில் வசித்து வந்தார்கள். பணத்தேவைக்காக அக்கிரஹார வீடுகள் சிலசமயம் விற்பனைக்கு வந்தபோது மற்ற சாதிக்காரர்கள் அவற்றை வாங்கினார்கள். ஆனால் நகரத்தார் வாங்கியதில்லை. பிராமணர்கள் குறிப்பாக குருக்கள்மார் வாழ்ந்த வீட்டை வாங்கக்கூடாது என்று நகரத்தாரிடையே காலம் காலமாக ஒரு நம்பிக்கை வேரூன்றி இருந்தது.

    அதையும் மீறத் துணிந்தார் ஆவிச்சி அவர்கள். விலைக்கு வந்த இரண்டு அக்கிரஹார வீடுகளை வாங்கினார். ஓட்டு வீடுகள்.

    'ஏவி அண்ட் சன்ஸ்' என்று ஒரு கடையை அந்த இடத்தில் துவக்கினார். ராஜாஜி கெஸ்ட் ஹவுஸ், லட்சுமி பஜார் ஆகியவற்றையும் உருவாக்கினார். ஒவ்வொன்றையும் துல்லியமாகத் திட்டமிட்டார். காரைக்குடியில் அப்படியொரு கடையை யாருமே அதுவரை கனவுகூட கண்டதில்லை.

    இப்போது 'டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் ஏராளமாக இயங்கிவரும் பல்பொருள் அங்காடிகளின் முன்னோடியாக 'ஏவி அண்ட் சன்ஸ்' இயங்கியது.

    சைக்கிள் வண்டியின் உதிரிப் பாகங்கள், 'கோடக்' ஃபிலிம்ரோல், கார் பாட்டரிகள், மோட்டார் கார் டயர்கள், டிஸ்டில்ட் வாட்டர், ஹார்லிக்ஸ் என்று பலவகையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

    இவைதவிர எழுதுபொருட்கள், அன்றாட வீட்டுத் தேவைக்கான சாமான்கள் எல்லாமே ஏவி அண்ட் சன்ஸில் வாங்க முடிந்தது.

    நியாயமான விலை; ஆனால் கறார் விலை. ஆண்டி வந்தாலும் அரசன் வந்தாலும் ஒரே விலை. 'கடன் இல்லை' என்று அறிவிப்புப் பலகை கடையில் தொங்கியது.

    ஏவி அண்ட் சன்ஸ் முகப்புத் தோற்றம்

    காரியதரிசி வைத்துக்கொள்ளவில்லை ஆவிச்சி. தொழிலாளியாக தானே உழைத்தார். முதலாளியாக தானே அமர்ந்தார்.

    கடையில் நாற்காலி கிடையாது. வெறும் ஸ்டூல் மட்டுமே. வருபவர்கள் நாற்காலியில் அமர்ந்தால் அந்த இருக்கை தரும் சுகத்தில் அங்கேயே இருந்து வெட்டிப் பேச்சு பேசி நேரத்தை வீணடிப்பார்கள் என்பதால் நாற்காலியை அங்கே மறுத்தார்.

    இப்படிப்பட்ட சிந்தனைகள் அந்தக் காலகட்டத்தில் புதுமையானவை. மக்களுக்குப் பிடித்துப் போயிற்று.

    காரைக்குடி மக்களின் கவனத்தை ஏவி அண்ட் சன்ஸ் ஈர்த்தது.

    மக்களின் நம்பிக்கையை முழு அளவில் பெற்றதுதான் ஆவிச்சி அவர்கள் பெற்ற முதல் வெற்றி. 'ஏவி அண்ட் சன்ஸில் விலை அதிகமிருக்காது; ஏமாற்றமாட்டார்கள்; எல்லாம் அங்கே கிடைக்கும்' என்று மக்களிடையே ஏற்பட்ட நம்பிக்கை மகத்தான விளைவுகளைத் தோற்றுவித்தது. வாடிக்கையாளர்களின் வரிசை நீண்டு கொண்டே போயிற்று.

    தாமே மாதம் ஒரு முறை சென்னைக்குப் போய் வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதை ஆவிச்சி அவர்கள் வழக்கமாகக் கொண்டார். அப்போது மூன்று நாட்கள் கடை மூடியிருக்கும்.

    'என்ன இது, திடீரென கடையை மூடிவிட்டார்களே' என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கடை மூடியிருக்கும் நாட்களில் ஒரு அறிவிப்புப் பலகை கதவில் தொங்கிக் கொண்டிருக்கும்.

    'கொள்முதலுக்காக நான் சென்னைக்குச் செல்வதால் பங்குனி 1, 2, 3 தேதிகளில் கடை திறக்கப்படமாட்டாது என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்திக்கொள்கிறேன் ஆவிச்சி செட்டியார்' என்பது மாதிரியான வாசகங்கள் அதில் எழுதப்பட்டிருக்கும்.

    கடை முதலாளி எங்கே போயிருக்கிறார், எப்போது வருவார் என்பதுகூட வாடிக்கையாளர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைத்து செயல்பட்டவர் ஆவிச்சி அவர்கள்.

    1917ஆம் ஆண்டிலேயே காலண்டர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்ந்தவர் அவர்.

    வியாபாரம் பெருகப் பெருக விற்பனைப் பொருட்களின் பட்டியலும் விரிந்தது.

    பேபி ஆஸ்டின் கார்களும், கிராமஃபோன் இசைத் தட்டுகளும் ஏவி அண்ட் சன்ஸில் கிடைக்க ஆரம்பித்தன.

    காரைக்குடியில் ஒரு சிறிய கடையில் பேபி ஆஸ்டின் காரா! கிராமஃபோன் ரிகார்டா! வாடிக்கையாளர்கள் வியந்து நின்றார்கள்.

    இத்தகைய புதுமையான அணுகுமுறைகள்தான் ஆவிச்சி அவர்களை அன்றைய நகரத்தார்களிடமிருந்து அடியோடு பிரித்து பளிச்சென தனியே அடையாளம் காட்டியது.

    ஆவிச்சி செட்டியார் - லெட்சுமி ஆச்சி தம்பதிக்கு 1907ம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதியன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தமிழ்த் திரையுலகின் ஒரு அற்புதம் பிறந்தது என்றும் சொல்லலாம். மெய்யப்பன் என்று அந்தக் குழந்தைக்குப் பெயர்.

    இளம் வயதில் ஏவி.எம்

    காரைக்குடியில் ஏவி.எம் படித்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளி

    மெய்யப்பனின் இளமைக் காலம் பெற்றோரின் கனிவான அன்பைப் பெற்றிருந்தது. அதே சமயம் கண்டிப்பையும் கண்டிருந்தது.

    காரைக்குடியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு. கூடவே ஏவி அண்ட் சன்ஸ் கடையில் தந்தைக்கு உதவியாகப் பணி.

    மெய்யப்பனின் வகுப்புத் தோழனாக இருந்த அழகப்பன்தான் பின்னாளில் வள்ளல் அழகப்பச் செட்டியார். இப்படி விளையப்போகும் பயிர்களின் நட்பில் வளர்ந்தது மெய்யப்பன் என்ற நாற்று.

    கடை வியாபாரத்தின் எல்லா அம்சங்களும் மெய்யப்பனுக்கும் அத்துபடி ஆயின.

    கொள்முதலுக்காக அப்பா சென்னைக்குப் போனபோதெல்லாம்கூடவே மெய்யப்பனும் போனதுண்டு.

    தந்தையுடன் ஏவி.எம்

    தந்தையின் புதுமையான சிந்தனைகளும், துல்லியமான செயல்பாடும் மகனுக்குப் பதிந்து போனதில் வியப்பில்லை.

    மெய்யப்பன் எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சமயம் ஆவிச்சி அவர்களுக்குக் கண்ணில் காடராக்ட் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

    ஒய்வில் இருக்க வேண்டும். இனி அதிகமாக அலையக் கூடாது என்பது மருத்துவர்களின் கட்டளை.

    மகனை அழைத்தார் ஆவிச்சி.

    மெய்யப்பா! இனி நீதான் கடையைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    சரி, அப்பச்சி.

    மெய்யப்பனின் படிப்பு எட்டாவதோடு முடிந்தது. ஆனால் ஏவி எம் என்ற புதுயுகம் எழுச்சியுடன் விடிந்தது.

    2

    இசைத்தட்டுகளில் தனி முத்திரை

    ஏவி அண்ட் சன்ஸ் கடையின் பொறுப்பை மெய்யப்பன் ஏற்றுக்கொண்ட பிறகு, தந்தை வழியிலேயே அவரது சிந்தனை போனது. புதுமையாக எதையாவது செய்வது அவரது வாடிக்கை ஆனது. காரைக்குடியில் முதன்முதலாக 'டியூப் லைட்'டை அறிமுகப்படுத்தியவர் ஏவி.எம் அவர்கள்தான். அந்த ஊர் மக்களுக்கு அது அப்போது ஓர் அதிசயம். தன் கடைக்கு 'ரோலிங் ஷட்டர்ஸ்' எனப்படும் உருள் கதவுகளைப் பொருத்தினார். கதவு உருண்டு கொண்டே காலையில் மேலே போவதும், இரவு கடை மூடப்படும்போது மேலேயிருந்து கீழே உருண்டு வருவதும் காரைக்குடி மக்களிடம் ஓர் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. இந்தக் கதவின் இயக்கத்தைப் பார்ப்பதற்கென்றே இரு வேளைகளிலும் பெருங்கூட்டம் கடையின் முன்னால் கூடியது. ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்ட கதவு அது.

    1930ம் ஆண்டில் ஏவி அண்ட் சன்ஸ் கடை இருந்த இடத்தை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டினார் ஏவி.எம். அதில்கூட தன் புதுமையான அணுகுமுறையை அவர் கைவிடவில்லை

    ஆசாரிகள் போடுகிற பிளான்படி கட்டிடம் கட்டுவதுதான் நகரத்தாரிடையே இருந்த பழக்கம். ஏவி.எம் ஒரு என்ஜினீயரைப் பிடித்து பிளான் போடச் சொன்னார். அதன்படியே கட்டினார். காரைக்குடியில் கட்டிடம் கட்ட முதன்முதலாக ஒரு பொறியாளர் திட்டமிட்டுக் கொடுத்தது ஏவி.எம் அவர்களுக்குத்தான். இப்படி அவர் எது செய்தாலும் அது காரைக்குடி மக்களிடையே தலைப்புச் செய்தியாயிற்று.

    அந்தக் காலத்து கிராமஃபோன்

    வானொலி என்ற காற்று அதிசயத்தை மக்கள் அறிந்திராத அந்த நாட்களில் அனேகமாக எல்லா வீடுகளிலும் கிராமஃபோன்தான் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தது. கறுப்பு ‘பிளேட்'டை அதில் பொருத்தி கைப்பிடியைச் சுற்றி 'சாவி' கொடுத்து, பின்னர் ஊசி முனையைப் பிளேட்டில் உராய வைக்கும்போது கேட்கும் பாட்டுகளில் மகுடி கேட்ட நாகமாக மக்கள் மயங்கிப்போனார்கள்.

    அப்போதெல்லாம் கிராமஃபோன் ரிகார்ட் என்றால் எச்.எம்.வி., கொலம்பியா கம்பெனிகளின் பெயர்தான் நினைவுக்கு வரும். இசைத்தட்டு உலகை அந்த இரண்டு கம்பெனிகள்தான் கிட்டத்தட்ட ஆண்டு கொண்டிருந்தன.

    இந்தக் கம்பெனிகளின் இசைத்தட்டு வினியோக உரிமையை மதுரை, இராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும், புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கும் ஏவி அண்ட் சன்ஸ் ஏற்கனவே பெற்றிருந்தது.

    எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், எஸ்.வி. சுப்பையா பாகவதர் போன்றவர்களின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை வீட்டில் வைத்திருப்பதே பெரிய பெருமை என்று கருதினார்கள் ரசிகர்கள்.

    ஆவிச்சி அவர்களுக்குக் கடையில் உதவியாக இருந்த நாட்களிலேயே அவர் எப்போது சென்னை வந்தாலும் தானும் கூடவே வந்ததால் இங்கே சென்னையில் ஏவி அண்ட் சன்ஸ் கடையுடன் தொடர்புள்ள அனைத்து நிறுவனங்களோடும் ஏவி.எம் அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு அது நட்பாகவும் மலர்ந்திருந்தது. குறிப்பாக இசைத்தட்டு நிறுவனங்களுடன் அவரது நட்பு நெருக்கமாக இருந்தது.

    'மற்றவர்கள் தயாரித்த இசைத்தட்டுகளை உரிமை பெற்று விற்பது ஒருபுறம் இருக்கட்டும்; நாமே கிராமஃபோன் இசைத்தட்டுகளைத் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் ஏவி.எம்மின் வர்த்தக மூளையில் விதையாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது.

    எச்.எம்.வி. இசைத் தட்டு

    கொலம்பியா இசைத் தட்டு

    மேலும் தாமதிக்க விரும்பாமல் இசைத்தட்டு தயாரிப்பில் ஈடுபடுவதென முடிவு செய்துவிட்டார். முடிவு செய்துவிட்டால்அதை வெற்றிகரமாக முடித்துக் காட்டும் ஆவிச்சி அவர்களின் லட்சிய வெறி மகனுக்கும் இருந்ததில் வியப்பில்லை.

    காரைக்குடியில் உட்கார்ந்து கொண்டு இசைத்தட்டு தயாரிப்பில் ஈடுபடுவது என்பது குண்டுச் சட்டிக்குள் உட்கார்ந்து கொண்டு குதிரை ஓட்டுவது என்பதை உணர்ந்த ஏவி.எம் அவர்கள் சென்னையில் மையம்கொள்ள விரும்பினார்.

    அதிக முதலீடு தேவைப்படும் துறையாக இசைத்தட்டு தயாரிப்புத் துறை இருந்ததால் தன்னுடன் இரண்டு பங்குதாரர்களை இணைத்துக் கொண்டார்.

    கே.எஸ். நாராயண ஐயங்கார், சிவன் செட்டியார். இரண்டு பேரும் கலையார்வம்மிக்கவர்கள். நாராயண ஐயங்கார் சேலத்துக்காரர், கலாரசிகர். இசைத்தட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் ஆர்வம் அவருக்கிருந்தது.

    ஏவி.எம் அவர்களோடு இணைந்து தொழில் செய்ய சிவம் செட்டியாருக்கும் விருப்பம் இருந்தது.

    சென்னையில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் பிறந்தது.

    இன்றைய அண்ணா சாலை அன்றைய மவுண்ட் ரோடில் சிறிய அழகிய கட்டிடத்தில் அது வளர்ந்தது.

    'ஓடியன் ரிகார்டிங் கம்பெனி' என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார் ஏவி.எம். அது ஒரு வகையான தொழில் நுட்பக்கூட்டு. 'பாடல்கள் பதிவு செய்யப்பட்ட மாஸ்டர் மெழுகு

    Enjoying the preview?
    Page 1 of 1