Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sulthana
Sulthana
Sulthana
Ebook279 pages1 hour

Sulthana

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓர் இளவரசி என்றதும் நம் நினைவுக்கு என்ன வரும்?

மாட மாளிகை, உப்பரிகை, விரல் சொடுக்கினால் பணியாளர் வரிசை, உடம்பெங்கும் நகைப் போர்வை, சராசரி மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத ஆடம்பரம், இத்யாதிகள்.

இளவரசி, 'சுல்தானா'வுக்கும் இவையெல்லாம் வாய்த்திருந்தது. கூடவே பல சோகங்களும்.

சவூதி அரேபிய அரசக் குடும்பத்துப் பெண்ணான சுல்தானாவின் வாழ்க்கையில்தான் எத்தனையெத்தனை சம்பவங்கள் ! அவை தந்த சோகங்கள் எப்படிப்பட்ட பாதிப்பை அந்த இளவரசிக்குள் ஏற்படுத்தின !

சம்பவங்கள் அத்தனையும் உண்மை.

மனம் திறந்து சுல்தானா சொன்ன உண்மைகளே இந்த நூல்.

ஜீன் ஸஸான், 'டெஸர்ட் ராயல்' என்ற தலைப்பில் இதை ஆங்கில நூலாக எழுதினார். நான் 'சுல்தானா' வாக அதைத் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன்.

எழுதியபோது என் மனம் கனத்தது. படிக்கும்போது உங்கள் மனம்? தெரிந்து கொள்ள ஆசை.

ராணிமைந்தன்.

Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580143106891
Sulthana

Read more from Ranimaindhan

Related to Sulthana

Related ebooks

Reviews for Sulthana

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sulthana - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    சுல்தானா

    Sulthana

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியர் குறிப்பு

    1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி நான் சவூதிஅரேபியா போனேன். சில வருடங்கள் அந்த நாட்டில் வேலை செய்து வாழ்ந்துவிட்டு பின்னர் திரும்பிவிடுவது என்பதுதான் என் திட்டம். ஆனால் தலைநகர் ரியாத்தில் 1991வரை தங்கிவிட்டேன்.

    1983ல் நான் சுல்தானாவைச் சந்தித்தேன். அவர் அல் ஸாத் அரச குடும்பத்து இளவரசி. என்னை அவர் மிகவும் கவர்ந்தார். நான் அங்கே 'கிங் ஃபெய்ஸல் ஸ்பெஷலிஸ்ட் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர்' நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தபோது சவூதி அரசக்குடும்பத்தின் பல உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அனைவரும் தங்கள் அரச சுகபோகத்தைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்துபவர்களாக இல்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டேன்.

    சுல்தானா மட்டும் வித்தியாசமானவராக இருந்தார். நான் பார்த்த அரசக்குடும்பத்தினரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக எனக்குப்பட்டார். அழகிய யுவதி. கண்களில் எப்போதும் மின்னும் ஆர்வம். உதடு விரித்து சிரிக்கும் தன்மை. விலையுயர்ந்த உடைகள், கண்களைக் கவரும் நகைகள், இவையெல்லாம் சுல்தானாவின் வெளிப்புறம்.

    உள்ளுக்குள் அவர் சம்பிரதாய இளவரசியாக இல்லை. சவூதிஅரேபியப் பெண்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தப் பாடுபடவேண்டும் என்ற தீராததாகம் அவரிடம் இருந்தது கண்டு நான் வியப்புற்றேன். கொள்ளை கொள்ளையாகப் பணம் கொட்டிக்கிடக்கும் அரண்மனைவாசியின் உள்ளத்தில் இப்படியொரு சிந்தனையா?

    எங்களுக்குள் நட்பு முகிழ்ந்தது. உறுதியுள்ள உள்ளம்கொண்ட ஒரு தோழி எனக்குக்கிடைத்தார். அவர் தன்னலம் அற்றவராக, மற்றவர்களின் மீது அன்பும் அக்கறையும் செலுத்துபவராக, தனது அரச போக வாழ்க்கைச்சூழல் தனது மனிதநேயத்தை மறுக்க அனுமதிக்காதவராக சுல்தானா இருந்தார்.

    சவூதிப்பெண்களின் பல்வேறு சோகக்கதைகளை உலகத்திற்குத் தெரிவிக்கவேண்டுமென்று அவர் விரும்பினார். என் உதவியைக் கோரினார். நான் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். நம்பமுடியாத பல உண்மைக்கதைகளை சுல்தானா சொல்ல அவற்றை நான் மூன்று புத்தகங்களாக எழுதினேன்.

    இதன்மூலம் நான் அவரது குரலாகவே மாறிப்போனேன்.

    'பிரின்ஸஸ்' (Princess) என்ற நூலின் மூலம் சுல்தானாவின் வாழ்க்கைபற்றி உலகம் முதலில் தெரிந்துகொண்டது.

    பெண்களை மட்டமாக மதிக்கும் ஒரு சமூகத்தில், ஒரு கொடுமைக்காரத் தந்தைக்கு வேண்டப்படாத மகளாகப் பிறந்த சுல்தானாவின் வாழ்க்கை அது.

    அவரது பாசத்துக்குரிய சகோதரி சாரா, தன் விருப்பத்திற்கு எதிராக ஒரு வயதானவனுக்குத் திருமணம் செய்துதரப்பட்டார். கணவனால் பலவிதமான பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். சாரா தற்கொலைக்கு முயன்றார். அதன் பின்தான் அவளது விவாகரத்துக்கு அவரது தந்தை சம்மதித்தார்.

    சுல்தானாவின் இளமைப்பருவம் இனிமையானதல்ல; எனவே அவர் எதையும் எதிர்க்கும் மனப்பக்குவத்துடன் வளர்ந்தார். தன் நாட்டில் வேரூன்றிப்போன சில சமூக நியதிகளை எதிர்ப்பதோ, எதிர்த்துப்போராடுவதோ கடைசியில் சொந்த அழிவில்தான் முடியும் என்ற அச்சத்தை, அவரது நெருங்கிய தோழி ஒருத்தியை, தோழியின் தந்தையே கொன்ற சம்பவம் ஏற்படுத்தியது.

    ஆனால் திருமணத்தைப் பொறுத்தவரை சுல்தானாவுக்கு கறீம் என்ற நல்ல மனிதர் வாய்த்தார். பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் திருமணத்துக்கு முன்பு பையனும் பெண்ணும் பார்த்துக்கொள்வதில்லை. ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு முன்பே சுல்தானாவும் கறீமும் பார்த்துக்கொண்டார்கள்; பேசிக்கொண்டார்கள். உண்மையான காதலுடன் அவர்களது மணவாழ்க்கை தொடங்கி தொடர்ந்தது. இதனை ஒரு விதிவிலக்கு என்றே சொல்லலாம்.

    அப்துல்லா என்று ஒரு மகனும், மஹா, அமானி என்ற இரு மகள்களும் கறீம் - சுல்தானாவின் சந்ததிச்செல்வங்கள்.

    1991ல் வளைகுடா போரின்போது சுல்தானாவின் குடும்பம் ரியாத்திலேயே தங்கியிருந்தது. சவூதிப் பெண்களின் சமூக நிலையை இந்தப்போர் உயர்த்தும் என்று எண்ணியிருந்ததற்கு மாறாக அவர்களின் நிலையை போர் மேலும் மோசமாக்கியது கண்டு சுல்தானா கலக்கமடைந்தார்.

    'வளைகுடா போர் முடிந்தபோது, சவூதிப் பெண்களின் மெல்லிய முகத்திரை மேலும் கனமானது; அவர்களின் கணுக்கால்களும் மூடப்பட்டன; கொஞ்சம் தளர்ந்திருந்த சங்கிலிகள் மேலும் இறுகின' என்றார் சுல்தானா.

    இரண்டாவது நூல் 'டாட்டர்ஸ் ஆஃப் அரேபியா' (Daughters of Arabia).

    முதல் நூல் 'பிரின்ஸஸ்', உலகமெங்கும் அமோகமாக விற்பனையானது. அதில் சம்பந்தப்பட்டிருந்தது இளவரசி சுல்தானாதான் என்பதை அவரது குடும்பம் தெரிந்துகொண்ட விவரத்தை இரண்டாவது நூலில் எழுதினேன். ஆனால் நெருங்கிய சுற்றம் தவிர அரசக் குடும்பத்தின் அத்தனை பேரும் அதை அறியாதபடி அந்த 'ரகசியம்' பாதுகாக்கப்பட்டது.

    இரண்டாவது நூல் முக்கியமாக மஹா, அமானி ஆகியோரைப் பற்றியது. மஹா அம்மாவைப்போல. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் பொங்கி எழுபவள். ஆனாலும் அந்தப் பிஞ்சுமனதால் பெண்கள் அனுபவிக்கும் சமூகஅநீதிகளைத் தாங்க முடியாமல்போனது. மஹா லண்டனில் மனோதத்துவச் சிகிச்சை பெறவேண்டியதாயிற்று.

    அமானி முழுக்க முழுக்க ஓர் இஸ்லாமியப் பெண்ணாக - விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்டவளாக - இருந்தாள். உண்மையில் அவளை ஒரு இஸ்லாமிய மதவெறியள் என்றுகூட வர்ணிக்கலாம். தாய் சுல்தானா பெண்கள் மீது அணிவிக்கப்படும் முகத்திரையை ஒழிக்க விரும்பினார். மகள் அமானியோ 'முகத்திரை வேண்டும்' என்றாள்.

    இந்தப் புத்தகம் 'டெஸர்ட் ராயல்' (Desert Royal) மூன்றாவது புத்தகம். இதில் சவூதியில் அரசக்குடும்பப் பெண்கள் உள்ளிட்ட பலருக்கு இழைக்கப்படும் அநீதிகள், அவர்களது வாழ்க்கை பற்றி சுல்தானா சொன்னதை எழுதியிருக்கிறேன். பெண்களுக்கு உதவ வேண்டும் என்று சுல்தானா மேற்கொண்ட முடிவுபற்றியும், சமூகச்சீரமைப்புபற்றிய அவரது சிந்தனைகளும் வெளிப்படுகின்றன.

    இந்த நூலைப் படிப்பவர்களுக்கு 'சுல்தானா மட்டும் என்ன ஒழுங்கா?' என்ற எண்ணம் ஏற்படலாம். மனிதப்பிறவிக்கான சில இயல்பான சறுக்கல்கள் அவை. ஆனால் பெண்களின் உரிமை என்று வரும்போது அவற்றுக்காகப் போராடவேண்டும் என்ற சுல்தானாவின் உண்மையான ஆர்வம் நிச்சயமாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

    சுல்தானாவின் தோழி என்ற முறையிலும், ஓர் எழுத்தாளர் என்ற முறையிலும் இந்த அசாதாரண இளவரசியின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பதிவு செய்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

    இந்த உண்மைக் கதையை உங்கள் முன் வைப்பதில் எனக்கோ அல்லது இளவரசிக்கோ இஸ்லாமிய நம்பிக்கைகளைச் சிறுமைப்படுத்தும் நோக்கம் ஒரு சிறிதும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.

    - ஜீன் ஸஸான்

    மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்பு

    'டெஸர்ட் ராயல்'(Desert Royal) என்ற ஆங்கில நூல்தான் உங்கள் கையில் இருக்கும் 'சுல்தானா'வின் மூலம்.

    ஜீன் ஸஸான், அரேபிய இளவரசியின் குடும்பத்தைப்பற்றி எழுதிய மூன்றாவது நூல்.

    நான் டெஸர்ட் ராயலை வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி மொழிபெயர்க்கவில்லை. சுல்தானாவின் வாழ்க்கை சம்பவங்களைக் கோர்த்துத் தந்திருக்கிறேன். ஸஸானின் 'பிரின்ஸஸ்' என்ற புத்தகத்தில் இருந்து சுல்தானாவின் தனிப்பட்ட வாழ்க்கைத்தொடர்பான மிக முக்கிய சம்பவம் ஒன்றையும் இதில் சேர்த்துத் தந்திருக்கிறேன்.

    சுல்தானா -

    ஓர் அரேபிய இளவரசி. அரசக்குடும்பத்துக்கான அவ்வளவு சுகபோகங்களுக்கும் சொந்தக்காரர்.

    சவூதிஅரேபியாவில் இவரது குடும்பம் இட்டதே சட்டம். மாளிகைகள், மஞ்சங்கள், டாலர்கள், விரல் அசைவில் பணியாளர் வரிசை, குரல் அசைவில் எதையும் சாதிக்கும் வசதி எல்லாமே சுல்தானாவுக்கு வாய்த்திருந்தன. எனினும், அவர் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இல்லை. தன் குடும்பத்தினரின் அதீத செயல்பாடுகளில் ஆத்திரம் கொண்டார்.

    அந்தப் பாலைவனச் சமுதாயம் ஏற்றுக்கொண்ட ஆண்களின் மேலாதிக்கத்தில் அநீதி கண்டார்.

    இளவரசிக்கான இருக்கையிலிருந்து இறங்கிவந்து சக சவூதிப் பெண்களின் சமுதாய நிலை உயர ஏதேனும் செய்ய விரும்பினார்.

    செய்ய முடிந்ததா அவரால்?

    இந்தக் கேள்விக்கான விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. தன் பலத்தை உணர்ந்திருந்தமாதிரியே தன் பலவீனத்தையும் உணர்ந்திருந்தார் சுல்தானா.

    இந்த இரண்டையுமே அவர் 'பர்தா' போட்டு மூடவில்லை. வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

    அந்த இளவரசியின் சமூகப் பாதுகாப்பு கருதி பெயர்களை மட்டுமே மாற்றி இருக்கிறார் ஜீன் ஸஸான். சம்பவங்கள் அனைத்தும் சத்தியம். நடந்ததை நடந்தபடியே சுல்தானா, ஸஸானுக்குச் சொல்ல ஸஸான் நமக்குச் சொல்லியிருக்கிறார்.

    நமது நன்றிக்குறியவர்கள்

    – இளவரசி சுல்தானா

    – ஜீன் ஸஸான்

    - ராணிமைந்தன்

    உள்ளே...

    1. அம்மா வந்தாள் கனவில்

    2. முனிராவின் தலைவிதி

    3. முடிந்தது முனிராவின் திருமணம்

    4. என்னுடைய பலவீனம்

    5. ரம்ஜான் நோன்பு

    6. சொர்க்க அரண்மனை

    7. அமானி தந்த சிறகுகள்

    8. அந்தப்புரத்தில் அபலைகள்

    9. அரண்மனைக்கு வந்த அரவாணி

    10. விமானத்தில்...

    11. அமெரிக்காவில் ஒரு சோகக் கதை

    12. சிரச்சேதம்

    13. அம்பலமானது என் ரகசியம்

    14. அரியணைக்கு ஆபத்தா?

    15. எங்கள் அரசுரிமை - கேள்விக்குறி?

    16. பாலைவனப் பயணம்

    17. மணலில் ஒரு சண்டை

    18. முனிராவின் கவிதை

    19. பாதுகாப்பு வளையம்

    20. ஆசி தாருங்கள், அல்லா!

    1. அம்மா வந்தாள் கனவில்

    சில மாதங்கள் முன்பு என் அம்மா கனவில் வந்தாள். பூ வேலைப்பாடுகளுடன்கூடிய அழகிய சிகப்பு உடையில், தனது நீண்ட கருங்கூந்தலில் தங்கமணிகள் ஆங்காங்கே மின்ன, முகத்தில் வழக்கமான ஒளியுடன் எங்கோ ஒரு நீல நீர்ப்பரப்பின் பின்னே பசுமையான மரமொன்றின் கீழ் அவளை நான் பார்த்தேன். அவளைச்சுற்றி அழகிய மலர்கள் சிதறிக்கிடந்தன.

    அம்மா என்றேன் நான்.

    கைகளை ஆர்வமாக விரித்துக்கொண்டே அவளருகே சென்றேன். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தடை எங்களிருவருக்கும் இடையே இருப்பதை உணரமுடிந்தது. தனது கடைக்குட்டியான என்னை வாஞ்சையுடன் பார்த்தாள் அவள். தன் இனிமையான குரலில் பேசத்தொடங்கினாள்.

    சுல்தானா! உனது வலிகள், அதிருப்திகள், ஏமாற்றங்கள் எல்லாமே இங்கு என்னை அலைக்கழிக்கின்றன, மகளே!

    சொர்க்கத்திற்குப் போனபிறகும் என் தாய்க்குக் கவலையளிக்கக் கூடியவளாகவே நான் இருக்கிறேன் என்பதை நினைத்து குலுங்கி அழுதேன்.

    செல்வம் கொழிக்கும் ஒரு பாலைவன அரச குடும்பத்தில் இளவரசியாக நான் பிறந்தேன். பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவது அதிகரித்துவந்த சமூகம் அது. நான் வாழ்ந்தது ஒரு அசாதாரணமான வாழ்க்கை.

    அம்மாவைப் பார்த்தேன். அவள் ஏதேனும் பேசமாட்டாளா என்று ஏங்கித் தவித்தேன். அவள் பேசினாள்:

    சுல்தானா, முடிவில்லாமல் வண்ண வண்ணப் பட்டுத்துணிகளை எடுத்துக்கொண்டேயிருக்கும் மாயாஜால நிபுணனின் செய்கை போன்றதம்மா உன் வாழ்க்கை. உனக்கு வாழ்க்கையில் எல்லாமே இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் உனக்கு எதுவுமே இல்லை. நீ உயிரோடு இருப்பது உனக்கே மகிழ்ச்சியாக இல்லையம்மா.

    உயிரோடு இருந்தபோது என் தாய் எத்தனையோ முறை என்னை ஆதரவாக அணைத்துக்கொண்டு வருடிக்கொடுத்து என்னைத் தேற்றியிருக்கிறாள். அந்த இதமான சுகம் அப்போது எனக்கு வேண்டும் போலிருந்தது.

    ஆனால் அம்மாவைச் சுற்றிக் கொட்டியிருந்த மலர்கள் மங்கத்தொடங்கின. அம்மாவின் உருவமும்தான்.

    அம்மா, ப்ளீஸ் அங்கேயே இரு... போய்விடாதே!

    அவளோ என் வேண்டுகோளைக் கேட்பதாக இல்லை. மறைந்துகொண்டிருந்தபோது மறக்கமுடியாத சில வார்த்தைகளை அவள் சொல்வதும் கேட்டது:

    பலமான விருந்துக்கு மத்தியில் நீ பட்டினி கிடக்கிறாய், சுல்தானா. உன்னைவிட பெரிய ஒன்றில் நீ கரைந்து போ மகளே!

    அக்கனவிலிருந்து நான் விடுபட்டேன். அம்மாவைப் பார்த்தது ஆனந்தமாய் இருந்தது. அவள் சொல்லிப்போன வார்த்தைகள் என்னை வட்டமிட்டுக்கொண்டே இருந்தன.

    அவள் சொன்னது சரிதான். நான் என் வாழ்க்கையைத் தேங்கியிருக்கச் செய்துவிட்டேன்.

    ஒரு முறை என் தேசத்து சக பெண்மணிகளின் வாழ்க்கையை உயர்த்தவேண்டும் என்று நான் முயற்சி செய்தது உண்மையே. ஆனால் எங்கள் சவூதிஅரேபிய ஆண்களின் அசைக்க முடியாத சமுதாயத் தலைமைத்தகுதியின் முன்னே என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் நான் ஊக்கமிழந்தேன்.

    ஆனாலும் என் போராட்டம் ஓயவில்லை.

    என் நாட்டில், தங்கள் விருப்பத்துக்கு மாறாக பெண்களுக்குக் கட்டாயத் திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்வரை, அடி உதைபடவும், ஏன், கற்பழிக்கப்படவும்கூட சட்டமே அனுமதி அளித்துக்கொண்டிருக்கும்வரை, தந்தைமார்கள் தங்கள் விருப்பம்போல தாங்கள் பெற்ற மகள்களையே சட்டபூர்வமாக கொன்று போடலாம் என்ற நிலை நிலவும்வரை, அதேபோல கணவன்மார்களும், சகோதரர்களும் தங்கள் மனைவிகளையும், கூடப்பிறந்தவர்களையும் கொடுமைப்படுத்தலாம் என்ற அனுமதிக்கொடி ஆணவமாகப் பறக்கும்வரை நான் எப்படி என் போராட்டத்தைக் கைவிட முடியும்?

    அம்மாவைக் கனவில் பார்த்தது முதல், அவள் போகும்போது சொல்லிவிட்டுப்போன அர்த்தமுள்ள வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து என் வாழ்க்கையிலும் ஓர் அர்த்தம் இருப்பதாகவே அதிகம் உணர்ந்தேன். என் போராட்டத்தைத் தொடர்வதில் என் உறுதி அதிகமானது. ஆனால் அது என்னை எங்கே கொண்டுசெல்லும் என்பதுபற்றி ஏதும் தெரியவில்லை.

    2. முனிராவின் தலைவிதி

    முகமது நபி அவர்களும் அவரது தொண்டர்களும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்திலிருந்துதான் இஸ்லாத்தின் பிரதான மரபுகள் தொடங்கின என்று சொல்லப்படுகிறது.

    அந்தக் கூட்டத்தில் நபிகள்நாயகம் கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு, நெருப்பிலோ அல்லது சொர்க்கத்திலோ எங்கேயானாலும் உங்களுக்கான இடம் இறைவனால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. அப்படி எழுதப்படாத யாரும் உங்களில் இல்லை என்று தரையில் எழுதிக்காட்டினாராம்.

    அதிலிருந்து 'ஒவ்வொரு மனிதனின் தலைவிதியும் அல்லாவால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது' என்று இஸ்லாமிய மதநம்பிக்கை போதிக்கிறது. இந்த நம்பிக்கையால், வாழ்க்கையின் சகல துன்பங்களையும் 'அல்லா விதித்தது' என்று பல முஸ்லீம்கள் எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். இந்த எதிர்மறையான நம்பிக்கையை எதிர்த்து என் வாழ்க்கை முழுவதும் நான் போராட்டம் மேற்கொண்டேன். பல சவூதிப்பெண்களின் சோகமான வாழ்க்கைகள் அல்லாவால் முன்னுறுதி செய்யப்பட்டவை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே எங்கள் குடும்பத்தில் இன்னொரு பயங்கரகாட்சி மீண்டும் அரங்கேற இருப்பதை அறிந்தபோது அதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. என் சகோதரரின் மூத்தமகள் முனிராவுக்கு திருமணம் என்ற பெயரில் அந்தக்கொடுமை நிகழ்ந்தது.

    எங்கள் குடும்பம் அப்போது சமீபத்தில்தான் எகிப்து நாட்டிலிருந்து ரியாத்தில் எங்கள் அரண்மனைக்குத் திரும்பியிருந்தது. என் கணவரின் வீட்டு அலுவலகத்தில் அவரும், எங்களது மூத்த குழந்தையும் ஒரே மகனுமான அப்துல்லாவும் இருந்தார்கள். எங்களது கடைக்குட்டி அமானி தோட்டத்தில் தன் செல்ல நாய்க்குட்டிகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள். நானும், என் மகள் மஹாவும் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம்.

    திடீரென என் சகோதரி சாராவும், அவளது மகள்கள் ஃபதிலா, நாஷ்வா, சாஹர் ஆகிய மூவரும் உள்ளே வந்தார்கள்.

    சாரா என் அன்புக்குரியவள். அவளைப் பார்த்ததும் நான் எழுந்துசென்று அணைத்துக்கொண்டேன்.

    அவளது அழகிய கண்களில் அச்சம் தெரிந்தது. அவள் ஏதோ மோசமான செய்தி கொண்டுவந்திருப்பது புரிந்தது.

    என்னை அவள் தன்னருகே அமரச்சொன்னாள்.

    என்ன ஆயிற்று, சாரா? என்று கேட்டேன்.

    அவளின் இனிமையான குரல் உடைந்துபோனது.

    சுல்தானா, நீ வெளிநாடு போயிருந்தபோது முனிராவின் திருமணத்திற்கு அலி ஏற்பாடு செய்துவிட்டார். இன்னும் பத்து நாட்களில் கல்யாணம்.

    என் மகள் மஹா என் கரங்களை அழுத்திப் பற்றியபடி அம்மா... நோ... நோ... வேண்டாம் என்றாள்.

    நான் பதறிப்போனேன். என் முகத்தை விரல்களால் மூடிக்கொண்டேன். என் ரத்தச்சொந்தத்தில் விருப்பத்துக்கு மாறாக இன்னொரு பெண்ணுக்குக் கல்யாணமா?

    முனிரா என் சகோதரன் அலியின் மூத்த மகள். கொள்ளை அழகு. மிகவும் இளமையான உடல்வாகு. தனது பண்புகளால் அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடக்கூடிய தன்மை வாய்க்கப்பெற்றவள்.

    முனிராவின் தாய் அலியின் முதல் மனைவி. அவள் பெயர் தமாம். அரசக்குடும்பத்தின் பெருமைக்குரிய

    Enjoying the preview?
    Page 1 of 1