Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dianavin Kathai
Dianavin Kathai
Dianavin Kathai
Ebook114 pages44 minutes

Dianavin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் குறுகிய காலம் வாழ்ந்தாலும் கோடானு கோடி மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடிப்பவர் வெகு சிலரே. அவர்களில் ஒருவராக மிளிர்ந்தார் டயானா! 'இறப்பது நியதி' என்றாலும் அதை நம்ப மறுத்து உலகம் முழுவதும் கோடானுகோடிப் பேர் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து சொல்லவொண்ணாத் துக்கம் கொண்டாடிய அபூர்வ நிகழ்வுகளில் ஒன்று - டயானாவின் மரணம்!

கோடானுகோடி நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர் - டயானா! அவரது வாழ்க்கை சுவை மிகுந்த பல திருப்பங்களைக் கொண்டது. அதை இந்த நூலில் 16 அத்தியாயங்களில் படிக்கலாம். அத்தியாய தலைப்புகள் காதல் மலர்ந்தது, அரண்மனைத் திருமணம் தேனிலவு, நிலவில் ஒரு களங்கம், புது வரவு, வசந்த காலம், ஃபாஷன் ராணி, புதிய காதலன், மேலும் சில நட்புகள், சுதந்திர இளவரசி, அதிரடிப் பேட்டி, ஓலம் தீர்க்க ஏலம், டோடியின் துணை, ரோஜா உதிர்ந்தது, மறைவுக்குப் பிறகு, பின்னுரை.

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580151010260
Dianavin Kathai

Read more from S. Nagarajan

Related to Dianavin Kathai

Related ebooks

Reviews for Dianavin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dianavin Kathai - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    டயானாவின் கதை

    Dianavin Kathai

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. காதல் மலர்ந்தது

    2. அரண்மனைத் திருமணம்

    3. தேனிலவு

    4. நிலவில் ஒரு களங்கம்

    5. புதுவரவு

    6. வசந்த காலம்

    7. பாஷன் ராணி

    8. புதிய காதலன்

    9. மேலும் சில நட்புகள்

    10. சுதந்திர இளவரசி

    11. அதிரடிப் பேட்டி

    12. ஓலம் தீர்க்க ஏலம்

    13. டோடியின் துணை

    14. ரோஜா உதிர்ந்தது

    15. மறைவுக்குப் பிறகு

    16. பின்னுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    உலகில் குறுகிய காலம் வாழ்ந்தாலும் கோடானு கோடி மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடிப்பவர் வெகு சிலரே.

    அவர்களில் ஒருவராக மிளிர்ந்தார் டயானா!

    அவரைப் பற்றிய இந்தத் தொடர் 1998ஆம் ஆண்டு தினபூமி நாளிதழில் ஞாயிறு தோறும் ஞாயிறு பூமியில் வெளி வந்து வாசகர்களின் ஆதரவையும் பாராட்டையும் பெற்றது.

    தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து லண்டன் நிலாச்சாரல் சார்பாக திருமதி நிர்மலா ராஜு இதை டிஜிடல் பதிப்பாக வெளியிட்டார்.

    இப்போது பலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் புத்தகம் மின்னணு நூலாகவும் அச்சுப் பதிப்பாகவும் வெளி வருகிறது.

    இதை தொடராக வெளியிட்ட தினபூமி நாளிதழ் ஆசிரியருக்கும், டிஜிடல் புத்தகமாக வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் எனது நன்றி.

    டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் இதை மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆண்டாண்டு காலமாக எனது எழுத்துப் பணிகளுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    ச. நாகராஜன்

    பங்களூர்

    11-9-2023

    1. காதல் மலர்ந்தது

    உலகிற்குப் பெருமை என்ன?

    நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமை உடையது இவ்வுலகு என்பார் வள்ளுவர். (குறள்-336)

    உலகில் ‘பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்து இறக்குமாறு இது என்பான் போல் மறைவான்’ என சூரியன் உதயமாவதையும், அஸ்தமிப்பதையும் உலக மக்களின் பிறப்பிற்கும், இறப்பிற்கும் உவமையாகக் கூறுவான் மகாகவி கம்பன்.

    ‘இறப்பது நியதி’ என்றாலும் அதை நம்ப மறுத்து உலகம் முழுவதும் கோடானுகோடிப் பேர் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து சொல்லவொண்ணாத் துக்கம் கொண்டாடிய இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வுகளில் ஒன்று - டயானாவின் மரணம்!

    கோடானுகோடி நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர் - டயானா!

    மறைந்து ஒராண்டு கழிந்த போதும் பிரிட்டனில் எதிலும் டயானா, எங்கும் டயானா!

    டயானா சம்பந்தமான எதுவானாலும் அதிக ஈடுபாட்டுடன் ஒன்றி விடுகின்றனர் பிரிட்டிஷ் மக்கள் - ஏன், உலகில் வாழும் அனைவரும் தம் ஈடுபாட்டைக் காண்பிக்கின்றனர். இது எதனால்? அவர். பேரழகி என்பதனாலா?

    அரச குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர் என்பதனாலா?

    சுமுகமாக பழகுவதில் நிபுணர் என்பதனாலா?

    அதிநவீன சீமாட்டி என்பதனாலா?

    மீடியாக்கள் விரும்பும் கவர்ச்சியாளர் என்பதனாலா?

    மகன்களை நேசிக்கும் குடும்பத்தலைவி என்பதனாலா?

    இதற்கெல்லாம் அப்பாற்பட்ட மனித நேயத்தைக் காட்டிய ‘மக்களின் இளவரசி’ அவர்!

    தேசத் தலைவர்களின் கைகளைக் குலுக்கிய அதே கை எய்ட்ஸ் நோயாளியின் கைகளையும் பரிவுடன் குலுக்கியது. அன்புக்காக ஏங்கியவர்களுக்காக விழி ஓரத்தில் துளி நீரைக் காண்பித்தது அந்த முகம்.

    விளைவு?

    அவரை இழந்தபோது தங்கள் குடும்பத்தில் பெரிய இழப்பு நேர்ந்ததைப் போல சோகம் கொண்டனர் மக்கள். பன்னிரெண்டு மணிநேரம் வரிசையில் காத்து நின்று தங்கள் துயரத்தை எழுத்தில் வடித்துச் சென்றனர் அவர்கள்! பல்லாயிரக்கணக்கானோர் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    பிரிட்டனின் பிரதம மந்திரி டோனி பிளேயரே கூறி விட்டார். உண்மையிலேயே அவர் மக்களின் இளவரசி என்று. லில்லி மலர்களைக் கண்ணீர் துளிகளுடன் அஞ்சலியாக அர்ப்பணித்த மருத்துவச் செயலாளர் டான் விண்டர் ‘டயானா மற்ற அரச குடும்பத்தினர் போல் இல்லை; அவர் எங்களில் ஒருவர்’ என்றார்.

    இந்த ‘எங்களில் ஒருவர்’ என்ற எண்ணம் சாமானியனுக்கும் இருந்ததாலேயே வின்ஸ்டன் சர்ச்சில் இறந்ததற்குப் பின் நிகழ்ந்த பிரம்மாண்டமான நிகழ்வு இது என்று உலகமே அவர் இறுதிச் சடங்கு மற்றும் ஊர்வலத்தை வர்ணித்தது!

    ‘மக்களின் மனதில் அற்புதங்களை நிகழ்த்தியவர்’ என்று புகழ் பெற்ற டயானாவின் கதை அன்பு, காதல், பரிவு, இரக்கம், கருணை, சோகம், தாயன்பு, மனித நேயம் அனைத்தும் கலந்த அற்புதமான கதை!

    காதல் மலர்ந்தது!

    பதினாறு வயது நிரம்பிய பருவ மங்கை. அவள் பெயர் டயானா ஸ்பென்சர். (டயானா பிறந்த தேதி : 1-7-1961)

    பருவத்தின் வாசலில் உள்ள பூரிப்புடன் ‘லேடி டயானா ஸ்பென்சரான’ அவள் மனதில் அவளுக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யம் உண்டு. ‘டேட்டிங்’கிற்கு வா என அழகிய வாலிபர்கள் அவளை அழைத்தபோது அவள் அதைப் பொருட்படுத்தவே இல்லை!

    ‘தனக்குரியவனை’க் காணும் வரையில் உண்மையான கன்னியாக இருப்பதையே பெரிதும் விரும்பினாள் அவள். அது மட்டுமில்லை, ‘விவாகரத்து’ என்ற வார்த்தையே அவளுக்குப் பிடிக்கவில்லை.

    ஒன்பது வயதே ஆகி இருந்த போது அவள் கூறினாள்:- ‘என்னை யாரும் விவாகரத்து செய்வதை நான் விரும்பவில்லை’.

    இதை அவள் கூறியபோது ‘விதி’ தனது குரூரப் புன்னகையை தன் மீது நெளிய விட்டதை அவள் அறியவில்லை.

    ஒரு ராஜதந்திரியையோ, அயல்நாட்டில் தூதராக இருப்பவரையோ தான் மணக்கப் போவதாகவே அவள் கற்பனை செய்திருந்தாள்.

    பதிமூன்று வயதானபோது தன் தந்தையிடம் ஒருநாள் அவள் கூறினாள். ‘அப்பா, பொதுமக்களின் அன்பைப் பெற்று புகழுடன் இருக்கும் ஒருவரையே நான் மணக்கப் போகிறேன் என்பது எனக்கு நன்கு தெரியும்’!

    ‘கென்ட்’டில் உள்ள வெஸ்ட்ஹெல்த் பள்ளியில் தனது தமக்கை சாராவுடன் படித்த அவள், பனிரெண்டு வயதுக்கே உரித்தான உல்லாசத்தில் திளைத்தாள்.

    தோழிகளுடன் ‘மில்ஸ் அண்ட் பூன்ஸ்’ காதல் கதைகளைப் படித்து ரசிப்பது அவளது வழக்கம். சாக்லெட் பிஸ்கட் என்றால் உயிர். பின்னால் வாழப் போகும் பெரிய வாழ்க்கையில் இதெல்லாம் கட்டுப்படுத்தப்படும் என்பதாலோ என்னவோ, சுதந்திரமாக வேண்டுமென்பதை விரும்பிச் சாப்பிட்டாள்!

    குடும்பப் பாங்கான வாழ்க்கை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாப்பாடு நேரத்திற்கு முன்னாலேயே வந்து சாப்பாட்டு அறைக்குச் சென்று டைனிங் டேபிளில் பரிமாறுவதற்கு உதவி செய்வது அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.

    இளம் வயதுக்கே உரித்தான சின்னச் சின்ன விஷயங்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1