Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kill Kill Thara
Kill Kill Thara
Kill Kill Thara
Ebook97 pages32 minutes

Kill Kill Thara

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580100605272
Kill Kill Thara

Read more from Devibala

Related to Kill Kill Thara

Related ebooks

Related categories

Reviews for Kill Kill Thara

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kill Kill Thara - Devibala

    http://www.pustaka.co.in

    KILL KILL தாரா

    Kill Kill Thara

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    தனி படுக்கையறைக்குள் நுழைந்தாள் தாரா.

    கதவை சாத்திக்கொண்டாள். திரைச்சீலையை எல்லாம் இழுத்துவிட்டு ஏறத்தாழ அந்த அறையை அவள் இருளுக்குள் கொண்டு வந்தாள்.

    நேரம் இரவு எட்டரை...

    வெளியே அம்மாவாசை இருட்டு மைபோல ஈஷிக்கொண்டு எங்கும் பரவிக்கொண்டுஇருந்தது.

    நீலவிளக்கை மட்டும் அமைத்துக்கொண்டு மற்ற விளக்குகளை அணைத்தாள்.

    தன் போம் படுக்கையின், வெல்வெட் படுக்கையை மெத்தென்று அமிழ்ந்தாள்.

    தன் அறையை சுற்றி ஒரு முறை பார்வையை சுழல விட்டாள். இறைந்து கிண்டந்த வீடியோ காஸ்ட்டெஸ் வாய்பிளந்து நின்ற டெக், சங்கீத இசைத்தட்டுக்கள், மானாவாரியாக உடைகள், தந்ததால் செய்த பொம்மைகள், வால் பேப்பர், உறுமும் ஏர் கண்டிஷன்...

    ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் பணக்கார வாசம் லட்சங்களின் அடையாளங்கள்.

    எழுந்தாள்... சுவரோடு பாதிக்கப்பட்டிருந்த கப்போர்ட்டைத் திறந்தாள்.

    காலையில் வாங்கி வைத்திருந்த அந்த டப்பாவை கையில் எடுத்தாள்.

    அதைத்திறந்து உள்ளேயிருந்து பாட்டிலைக் கையிலெடுத்தவுடன் அமர்நாத்தின் நினைவு வந்தது.

    எங்கே போகலாம் அமர்? லூனாவில், ஷாம்பு கேசம் தோளில் வழிய, தலையை அலட்சியமாக சிலுப்பியபடி கேட்டாள். தாரா.

    ஹெல்மெட் போட்டுட்டு வரலையா நீ?

    பிடிக்கலை!

    நீ பில்லியன் ரைடர் இல்லை, ஒட்டறதால போட்டுக்கணும்!

    தெரியும், இல்லைனா அபராதம் கட்டணும். கட்டினாப் போச்சு, சொல்லுங்க எங்கே போகலாம்!

    உன் இஷ்டம்!

    இருங்க வண்டியை பார்க் பண்ணிட்டு வர்றேன். டாக்ஸில ரெண்டு பேரும் அம்பாஸடர் பல்லவா போயிரலாம்!

    சொன்னபடி பத்தாவது நிமிடம் பல்லவாவில் இருந்தார்கள். ரெஸ்ட்டாரென்டின் கண்ணாடிக் கதவைப் பிளந்துகொண்டு வெகு நாள் பழக்கப்பட்டவள் போல உள்ளே நுழைந்தாள்.

    மெலிதான இருட்டும், வெளிச்சமும் கலந்து, கசிய இதமான ஜாஸ் இசைக்கு மத்தியில் இருக்கையைத் தேர்ந்தெடுத்தாள் தாரா.

    அமர்நாத் எதிரே உட்கார்ந்தான்.

    மெனு இரசாயன மாணவனின் 'ஆர்கானிக் சோனி' போல தடிமனாக இருந்தது.

    என்ன சாப்பிடலாம்?

    எனக்கு எதுவும் வேண்டாம்!

    ஏன்?

    வேண்டாம்னா விடு! உனக்கு ஆர்டர் பண்ணிக்க. உனக்கு கம்பெனி தரத்தான் நான் இங்கே வந்தேன்!

    அட்லீஸ்ட் ஐஸ்க்ரீம்?

    நோ!

    பேரர் வந்தான்.

    அவளுக்கு வேண்டியதை ஆர்டர் செய்தாள்.

    அமர் ஏன் இதுமாதிரி நடந்துக்கறீங்க?

    எதுமாதிரி தாரா?

    ஒட்டமாட்டேங்கறீங்க. தாழ்வு மனப்பான்மை அதிகம் உங்களுக்கு!

    இது காம்ப்ளெக்ஸ் இல்லை. ஸெல்ஃப் ரெஸ்பெக்ட்!

    புரியலை!

    ஒரு ஸ்டார் ஓட்டல்ல வந்து சாப்பிட்டு, பில் கொடுக்கற அளவு எங்கிட்ட வசதி கிடையாது. நான் சாதாரண ஒரு தனியார் கம்பெனில ஆயிரத்தைக் கூட தொடாத டைப்பீஸ்ட். நீ கோடீஸ்வரனோட பெண். பட், என் காதலி. காதலியோட பணத்துல காதலன் சுகம் அனுபவிக்கறதை நான் விரும்பலை.

    வெல் அதை மறப்போம்! நம்ம கல்யாணம் உங்கமனசை மாத்தட்டும்!

    அயிட்டங்கள் வந்து மேஜை முழுவதும் பரப்பப்பட,

    எங்க டாடியை ஒருவாட்டி நீங்க பார்க்கணும்! ஓ ஹெள ஸ்வீட்?

    ஜீரா வழியுமா உங்க டாடி மேல?

    ச்சீ போங்க அமர். கிண்டல்தான் உங்களுக்கு!

    சரி சொல்லு!

    நான் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசமாட்டார் டாடி, நான் ஆசைப் பட்டுட்டா கை சொடுக்கற நேரத்துல கொண்டு வந்து கண்முன்னால நிறுத்திருவார்

    உங்க டாடி எல்லாத்துக்கும் கை சொடுக்கியே விரல்கள் வீணாகியிருக்குமே!

    என் உபயோகத்துக்கு மட்டும் ரெண்டு மொபெட்டும், ரெண்டு மாருதியும் இருக்கு!

    இதெல்லாம் எனக்கேன்?

    எல்லாம் உங்களுக்குத்தான். என்னைக்கல்யாணம் செஞ்சுகிட்டா நீங்க அனுபவிக்கலாம் இல்லையா?

    இந்த இடம் தான் கொஞ்சம் இடிக்குது தாரா. எப்படி சரிக்கட்டறதுனு தெரியலை!

    நாம எத்தனை நாளா காதலிக்கிறோம்?

    கிட்டத்தட்ட ஒரு வருஷமா!

    அப்பவே தெரியுமில்லையா உங்களுக்கு, நான் ஒரு கோடீஸ்வரனோட மகள்னு?

    தெரியும்!

    அப்படியும் காதலை ஏன் நிறுத்தலை?

    நிறுத்தத் தோணலை!

    "பாருங்க அமர். இந்த நிமிஷம் நான் பில் 'பே'

    Enjoying the preview?
    Page 1 of 1