Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sadhi Valaiyam
Sadhi Valaiyam
Sadhi Valaiyam
Ebook159 pages1 hour

Sadhi Valaiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு மோதிரம் தொலைகிறது எவ்வளவு சாதாரண விஷயம்! ஆனால் அதனால் ஒரு கல்யாணமே நின்று விட்டதே! அடக் கடவுளே, ஒரு மோதிரத்துக்காக யாராவது கொலை செய்வார்களா?

மோதிரத்தையும் கொலை செய்தவரையும் கண்டுபிடிக்க வருகிறது சதுரா துப்பறியும் நிறுவனம். கண்டுபிடித்தார்களா?கல்யாணம் நடந்ததா?

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111401549
Sadhi Valaiyam

Read more from Sairenu

Related to Sadhi Valaiyam

Related ebooks

Reviews for Sadhi Valaiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sadhi Valaiyam - Sairenu

    http://www.pustaka.co.in

    சதி வளையம்

    Sathi Valayam

    Author:

    சாய்ரேணு

    Sairenu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sairenu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    முன்னுரை

    1 மோதினார்கள் - மோதிரத்துக்காக!

    2 சதுரா டிடெக்டிவ் ஏஜன்சி

    3 டாக்டர் திலீப் பேசுகிறார்!

    4 ஒரு சிறிய விசாரணை

    5 சுற்றிவளைத்துப் பேசு; நேரடியாகச் செய்!

    6 போஸ் விஜயம்!

    7 விஜய், சுஜாதா, கமல்!

    8 அய்யாக்கண்ணு சொன்னது

    9 விஜய் எங்கே?

    10 ராஜாங்கம் யாருக்கு?

    11 சதானந்தனின் சந்தேகங்கள்

    12 பாலாஜியின் கோபம்

    13 தர்மா, நீ ஒரு ஜீனியஸ்!

    14 கேள்விகள்

    15 கலைடோஸ்கோப் - பாஸ்கர்

    16 கலைடோஸ்கோப் – அரக்கில் கோவிலகம்

    17 கலைடோஸ்கோப் – விஜய், சதானந்தன்

    18 கலைடோஸ்கோப் – டாக்டர் திலீப்

    19 அரெஸ்ட்!

    20 கலைடோஸ்கோப் – ஹேமா

    21 கலைடோஸ்கோப் – அய்யாக்கண்ணு

    22 கலைடோஸ்கோப் – நிஜம்

    23 நன்றி, மீண்டும் வருக!

    சதி வளையம்

    என்னுரை

    வாசிக்கும் அன்பர்களுக்கும் வாழவைத்த அன்னைக்கும் வாழ்த்துகின்ற இறைவனுக்கும் வணக்கம்.

    ஆன்மீகக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த என்னை முதல்முதலாக ஒரு துப்பறியும் கதை எழுதத் தூண்டிய என் சகோதரி திருமதி கிருபா ஆனந்திற்கு முதலில் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    துப்பறியும் கதைகளை விரும்பாதவர்களே உலகில் இல்லை. தமிழை எடுத்துக் கொண்டாலும் இதன் பாரம்பரியம் நீண்டது. திரு வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை மு கோதைநாயகி அம்மாள் ஆகியோரின் கதைகள் பிரசித்தி பெற்றவை. நகைச்சுவை எழுத்தாளர் தேவன் தனக்கே உரிய முறையில் இந்தத் துறையைக் கையாண்டிருக்கிறார். துப்பறியும் சாம்பு கதைகள் நாடறிந்தவை. சுஜாதா அவர்களால் விஞ்ஞானத்தின் ஆளுமை, மிகமிக யதார்த்தமான நடை ஆகியன பிரபலப்படுத்தப்பட்டன. இன்று துப்பறியும் கதைகளின் முடிசூடா மன்னனாக விளங்குகிறார் சாதனை எழுத்தாளர் திரு ராஜேஷ்குமார். இன்னும் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

    நான் சத்தியத்தை உபாசிக்கிறேன். சத்தியமே இறைவன் என்று நம்புகிறேன். எல்லோருக்குள்ளும் அந்த இறைசத்தியம் சந்நிதி கொண்டிருக்கிறது. அந்தச் சத்தியத்தை நாம் உணரும் போதெல்லாம் ஆனந்தம் அடைகிறோம். அதனாலேயே ஒரு மனிதர், அவர் யாராயினும் எந்நிலையில் இருந்தாலும், துப்பறியும் கதைகளை விரும்புகிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அந்தக் கதையில் உண்மையை அறியத் துப்பறிவாளர் செய்யும் முயற்சிகள் நம் ஆன்மாவை அறியச் செய்யும் சாதனைகளாகவே தோன்றுகின்றன. முடிவில் மறைந்திருக்கும் சத்தியம் வெளிக்கொணரப் படும்போது, நம்முள் இருக்கும் இறைசத்தியத்தை ஒரு நிமிடம் உணருகிறோம், அதனாலேயே ஆனந்தம் அடைகிறோம் என்று நினைக்கிறேன். இதனாலேயே மர்மக் கதைகள் இந்த உலகம் முழுவதும் விரும்பப் படுகின்றன என்பது என் நம்பிக்கை.

    இந்தக் கதை காஸி மிஸ்டரி (cozy mystery) என்ற துறையைச் சேர்ந்தது. அளவுக்கு அதிகமான வன்முறை, பாலுணர்வைத் தூண்டக் கூடிய சம்பவங்கள் ஆகியன இல்லாமல், குற்றத்தை யார் செய்தார்கள் (whodunit) என்று மாத்திரம் அறிவுபூர்வமாக அணுகும் வகையைச் சேர்ந்தது இந்தக் கதை. என் இலட்சிய எழுத்தாளராக, முன்மாதிரியாக நான் மதிக்கும் திரு ராஜேஷ்குமார் அவர்களின் பல கதைகள் இந்த வகையைச் சேர்ந்தவையே.

    நல்லதொரு முன்னுரை வழங்கி என்னை ஊக்கப்படுத்திய கவிஞர் நதிநேசன் அவர்களுக்கு நன்றிகள். என்றும் என் முயற்சிகளில் என்னை உற்சாகப்படுத்தும் என் தாய் திருமதி பவானி, கணவர் திரு அபிநவ் ஆகியோருக்கும் என் வந்தனங்கள்.

    வாசகர்கள் எனக்குத் தங்கள் மேலான கருத்துக்களை எழுதி அனுப்புமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    என் முயற்சிகள், அவற்றின் பலன் எல்லாவற்றையும் என் குரு, என் இறைவன் சாயிநாதனுக்கே அர்ப்பணிக்கிறேன்.

    சாயிராம்.

    வணக்கங்களுடன்,

    சாய்ரேணு.

    +91 98402 28084

    sairenu.writer@gmail.com

    முன்னுரை

    இன்றைய கணினித் தமிழ் காலத்தில், ஒரு பக்கக் கதைகளும், இரு வரிக்கவிதைகளும் மல்கி விட்டன. துப்பறியும் நெடுங்கதைகள் வழக்கொழிந்தே போய்விடுமோ என்ற ஐயத்தை போக்கி, நம்பிக்கை தருகிறது சாய்ரேணுவின், சதி வளையம்

    தெளிவான கதைக்களம், ஆழமான உரை நடை, மற்றும் புத்துயிரூட்டும் கதாபாத்திரங்கள் இவரது அடையாளங்கள். தன்யா, தர்ஷினி பாத்திரங்கள் இக்கால நாகரீக யுவதிகளின் வாழ்க்கை லட்சியங்களை வேறு கோணத்தில் காட்டி நம்மை நிதர்சனத்துக்கு அழைத்துச் செல்கிறது.

    வட்டார மொழிப் பிரயோகமும், அதை வேண்டிய இடங்களில் பயன்படுத்திய விவேகமும் பாராட்டுக்குரியவை. படிக்க ஆரம்பித்தவனை முடிக்கும் வரை கட்டிப் போட்டது கதையின் சுவாரஸ்யம்.

    அய்யாக்கண்ணு, ஹேமா, டாக்டர் திலீப், இன்ஸ்பெக்டர் பாத்திர படைப்புகளும், அவர்களின் உரையாடல்களும் அட்டகாசம்.

    தர்மா தன் சகோதரிகளைப் பார்த்து ஆச்சரியப்படுகிறான். நாம் அவனைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

    இதற்கு மேல் எழுதினால், அத்தனை முடிச்சுக்களையும் அவிழ்த்து விடுவேனோ, என்ற ஐயத்தில் முன்னுரையை முடிக்கிறேன்.

    சதி வளையத்திற்குள் சுற்றலாம், வாருங்கள்...

    நதிநேசன்

    சிங்கப்பூர்

    1 மோதினார்கள் - மோதிரத்துக்காக!

    என்னடா, புதுமாப்பிள்ளை! எப்படி இருக்கே? என்று உற்சாகமாய்க் குரல் கொடுத்தவாறு உள்ளே நுழைந்த டாக்டர் திலீப், பாஸ்கரைக் கண்டதும் அதிர்ச்சியில் விழுந்தார்.

    தலைக்குக் கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டு மேஜைமேல் கவிழ்ந்திருந்த பாஸ்கர் தலைநிமிர்ந்தான். அழுதது போல் கண்கள் சிவந்திருந்தன.

    நேற்றைக்கு முந்தின தினம் பார்ட்டியில் அவனைப் பார்த்திருக்கிறார். எத்தனை உற்சாகமாக இருந்தான்! கல்யாணப் பெண் பத்மாவோடு டான்ஸ் கூட ஆடினானே!

    நேற்று முழுவதும் டாக்டர் ஆஸ்பத்திரியில் பிஸி. இன்று பாஸ்கரின் திடீர் டெலிபோன் அழைப்பிற்கிணங்கி வந்திருக்கிறார்.

    என்ன ஆச்சு பாஸ்கர்? ஏன் இப்படி இருக்கே? என்று பதறியவாறு கேட்டார்.

    அவன் என்னத்தைச் சொல்லுவான்? நாங்க சொல்றோம் என்றவாறு உள்ளே நுழைந்தார்கள் பாஸ்கரின் உறவினர்கள்.

    திலீப், பத்மாவுக்கு இந்தக் கல்யாணம் வேண்டாமாம். பொண்ணு வீட்டுல நிறுத்திட்டுப் போயிட்டாங்க என்று சிதறுகாய் உடைத்த மாதிரி 'படாரெ'ன்று சொன்னாள் சுஜாதா. குரலில் லேசாய் மலையாளச் சாயல் அடித்தது.

    என்ன சொல்றீங்க அக்கா? எப்படி திடீர்னு? என்றார் திலீப்.

    ஆமாம், திருட்டுப் பட்டம் கட்டி ஒரேடியாய்க் கேவலப் படுத்தினா, அப்புறம் கல்யாணமா நடக்கும்? என் வாழ்க்கையே போச்சு, திலீப் தழுதழுத்தான் பாஸ்கர்.

    இவ்விட நோக்கு, யாரும் அவங்களைத் திருடினாங்கன்னு சொல்லல்லை, ஆனா ஒரு சுப சம்பவம் நடக்கும் போது இங்ஙனம் ஆனா, ஏது பறையாம்? என்று மலையாளம் தூக்கலாய்த் தமிழ் பேசினார் பாஸ்கரின் சித்தப்பா சதானந்த வர்மா.

    ஐயோ, என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்! என்று கத்தினார் திலீப்.

    பாஸ்கரோட மோதிரத்தைக் காணோம் முந்தாநாளிலிருந்து என்றாள் சுஜாதா சுருக்கமாக.

    அதை எடுத்தது பத்மா வீட்டுக்காரங்கன்னு எல்லாரும் சொல்றாங்க என்றான் சித்தப்பா மகன் விஜய்.

    காணாமப் போயி என்னு தான் ஞான் சொன்னது என்றார் சித்தப்பா.

    பத்மா கோபப்பட்டு, மோதிரம் கிடைச்சதும் சொல்லி அனுப்புங்க, கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க சொல்லி முடித்தான் விஜய்.

    சரியாப் போச்சு. ஒரு மோதிரம் தொலைஞ்சதுக்கா இவ்வளவு கலாட்டா பண்ணிட்டீங்க? பாஸ்கர், நீ கிளம்பு, பத்மா வீட்டிலே பேசலாம்.

    எந்தா திலீபா! புத்தியோடு தானே பேசறே? அது என்ன மோதிரம்னு அறியாமோ? கோபமாய்க் கேட்டார் சதானந்த வர்மா.

    சரி மாமா! அது குடும்ப மோதிரம். இராஜவம்ச மோதிரம். எல்லாம் சரிதான். ஆனா அதுக்காக ஒரு கல்யாணத்தை நிறுத்தறது ஓவர் மாமா! என்று ஆவேசமாய்ச் சொன்னார் திலீப்.

    என்னடா புரியாம பேசறே! நாம எங்கே கல்யாணத்தை நிறுத்தினோம்? அவங்க இல்ல நிறுத்திட்டாங்க! நாங்க எங்கயாவது இவனுக்குக் கெடுதல் நினைப்போமா? என்னிக்கும் இவன் நல்லா இருக்கணும்னு தான் எங்க ஆசை இது சுஜாதா.

    வேற என்ன பண்ணுவாங்கன்னு நினைக்கறே நீ அக்கா? வெடித்தான் பாஸ்கர். உன் மேல நான் குறிப்பா குற்றம் சொல்லலை. ஆனா நீங்க எல்லாருமே நடந்துக்கிட்ட விதம் தப்பு. ஒருத்தர் என்னடான்னா சகுனம் சரியில்லைங்கறார், இன்னொருத்தர் பொண்ணு வீடே சரியில்லைங்கறார் ...

    பேச்சு தடிப்பதை உணர்ந்தார் திலீப்.

    இதற்கிடையில் போலீஸ் கிட்ட சொன்னா என்ன? என்றார் சுஜாதாவின் கணவர் கமல், மெதுவாக.

    வெடிகுண்டு ஒன்றைப் போட்டாற்போல் அங்கே அத்தனை பேரும் அதிர்ந்து மௌனமானார்கள்.

    ஒரு மோதிரம் காணாதப் போச்சுன்னு போலீஸைக் கூப்பிடணுமா? என்றார் சதானந்த வர்மா.

    "ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1