Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanavilil Illatha Niram
Vanavilil Illatha Niram
Vanavilil Illatha Niram
Ebook106 pages38 minutes

Vanavilil Illatha Niram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹரிதா. இளம்பெண். பேரழகி. பச்சைக்கண் தேவதை. தொழில்நுட்ப மேதை. வர்த்தகப் புலி. அப்பா வளர்த்தவள். சித்தியை வெறுத்தவள். டாக்டர் சிவராமகிருஷ்ணனின் தோழி. ஓவியன் சரத்தின் காதலி. ஏன் அந்த முடிவெடுத்தாள் ஹரிதா? அது என்ன வானவில்லில் இல்லாத நிறம்?

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580111407737
Vanavilil Illatha Niram

Read more from Sairenu

Related to Vanavilil Illatha Niram

Related ebooks

Reviews for Vanavilil Illatha Niram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanavilil Illatha Niram - Sairenu

    https://www.pustaka.co.in

    வானவில்லில் இல்லாத நிறம்

    Vanavilil Illatha Niram

    Author:

    சாய்ரேணு

    Sairenu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sairenu-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காக்கி – போஸின் சீருடை

    2. கருப்பு – வழக்கின் நிறம்

    3. பச்சை – ஹரிதாவின் கண்கள்

    4. இளஞ்சிவப்பு – பெண்ணினத்தின் நிறம்

    5. வெள்ளை – டாக்டர் கோட்

    6. மஜந்தா – ஒரு ரோஜாவின் நிறம்

    7. ப்ளாக் கர்ரெண்ட்

    8. சிவப்பு – இந்த வீட்டு விளக்கு

    9. சிவப்பு – மர்மத்தின் நிறம்

    10. ஹரிதா (பச்சை) – ஓவியத்தில் உண்டு

    11. வெளுத்ததெல்லாம் பால்!

    12. வெள்ளையில் கருப்பு – வக்கீலும், செய்தித்தாளும்!

    13. வெள்ளையில் கருப்பு – அரசியல்வாதியும்!

    14. கறுப்பு – மர்மத்தின் நிறம்

    15. மஞ்சள் – உற்சாகத்தின் நிறம்

    16. மஞ்சள் – வெளிச்சத்தின் நிறம்

    17. நிறம் புரிகிறது!

    18. தங்கம் – சில (வெகுசில) மனங்களின் நிறம்!

    19. ப்ரிஸம் – நிறம் பிரிக்கும் கருவி

    20. உண்மையின் நிறம் நீலம்

    21. வானவில்லில் இல்லாத நிறம்

    22. பசுமை என்றால் ஹரிதா!

    நூலைப் பற்றி

    ஹரிதா. இளம்பெண். பேரழகி. பச்சைக்கண் தேவதை. தொழில்நுட்ப மேதை. வர்த்தகப் புலி. அப்பா வளர்த்தவள். சித்தியை வெறுத்தவள். டாக்டர் சிவராமகிருஷ்ணனின் தோழி. ஓவியன் சரத்தின் காதலி. ஏன் அந்த முடிவெடுத்தாள் ஹரிதா? அது என்ன வானவில்லில் இல்லாத நிறம்?

    1. காக்கி – போஸின் சீருடை

    தன் மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினான் இன்ஸ்பெக்டர் போஸ்.

    பாரத் பிரஸ் – பெயர்ப்பலகை அவனை வரவேற்றது.

    உள்ளே நுழைந்து யாரையும் பார்க்காமல் வேகமாக பிரஸ்ஸின் பின்புறம் நோக்கி நடந்தான்.

    சிலருக்கு மட்டுமே தெரியும், பின்புறத் தெருவில் உள்ள சதுரா டிடெக்டிவ் ஏஜன்சி இதே கட்டிடத்தில் தான் உள்ளது என்பது. பிரஸ் கட்டிடம் மூலமும் சதுரா ஆஃபீஸை அடைய ஒரு பின்புற வழி இருப்பது வெகு சிலருக்கே தெரியும்.

    இந்தச் சிலர், வெகு சிலர் இரண்டு பட்டியலிலும் இன்ஸ்பெக்டர் போஸின் பெயர் இருக்கிறது.

    சற்றுக் குறுகலான கதவு திறந்து உள்ளே நுழைந்தான் போஸ். பெரிய அறை தான். அதற்குத் தகுந்த பெரிய மேஜை. சுற்றிலும் நான்கு நாற்காலிகள். கம்ப்யூட்டர், பைல்கள், மற்ற அலுவலக உபகரணங்கள். தனியாகப் பெரிய சோபா செட். சுவரில் ஓவியத்தில் திகம்பர சாமியார். அதன் நேர் கீழே ரிவால்விங் சேரில் தர்மா.

    தர்மா?

    இந்தத் துப்பறியும் நிறுவனத்தின் தலைவன். பாரத் பிரஸ்ஸும் அவனுடையதே. சாந்தமான முகம், ஆர்ப்பாட்டமில்லாத உடை, அமைதியான குரல், அளவான பேச்சு. கூர்மையான கண்கள் மட்டுமே அவனுடைய விசாலமான புத்தியை எடுத்துக் காட்டுகிறது.

    வாய்யா, நமஸ்தே என்றான் தர்மா, போஸைப் பார்த்து.

    கையை மட்டும் ஆட்டிய போஸ் நாற்காலிகளைப் புறக்கணித்து விட்டுச் சோபாவில் சுவாதீனமாக அமர்ந்தான். அந்த ஏஸியப் போடுப்பா என்றான் சட்டையின் மேல்பட்டனைக் கழற்றியவாறே.

    தர்மா ஏஸியை ஆன் செய்வதற்குள் அந்த அறையின் இன்னொரு மூலையில் இருந்த பெரிய கண்ணாடிக் கதவு திறந்தது. குட்டிப் புயல் நுழைந்தாற் போல் இரு இளம்பெண்கள் நுழைந்தனர்.

    வாங்க ஸார், உங்க மோட்டார்பைக் சத்தம் கேட்டது என்றாள் தர்ஷினி.

    விஷயம் இல்லாம வரமாட்டீங்களே! வாட் மேட்டர்? இந்தக் குறும்புக் குரல் தன்யாவுடையது.

    போஸ் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான்.

    தன்யா தர்மாவின் தங்கை. தர்ஷினி அவர்கள் கஸின். இரண்டு இளம்புலிகள்.

    சதுரா டிடெக்டிவ் ஏஜன்சிக்குத் தர்மா பெயரளவுக்குத் தான் தலைவன். இந்த நிறுவனம் இந்த இரு பெண்களின் ஆசை, கனவு, லட்சியம்.

    இவ்வளவு அறிமுகங்கள் போதும் என்று நினைக்கிறேன். கதைக்குள் நுழைந்து விடுவோம், வாருங்கள்!

    2. கருப்பு – வழக்கின் நிறம்

    போஸ் அவர்களுக்கு உடனே பதில் சொல்லிவிடவில்லை. சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கண்களையும் மூடிக் கொண்டு விட்டான். அவன் தலைநிமிர ஐந்து நிமிடங்கள் ஆனது.

    தர்மா... என்று ஆரம்பித்தவன் கேர்ள்ஸ்... என்று சேர்த்துக் கொண்டான் நினைவாக. ஒரு உதவி வேணும் எனக்கு. என்றான்.

    சொல்லு என்றான் தர்மா சுருக்கமாக.

    போஸ் எழுந்து கொண்டான். மெலிதாக உலவிக் கொண்டே பேச ஆரம்பித்தான்.

    "அழகான பெண். 28 வயது. கம்ப்யூட்டரில் அபார ஞானம். அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க. அப்பா வளர்ப்பு. சுதந்திரமான, தைரியமான மனோபாவம். யூ எஸ்ஸில் மூன்று வருடம் வேலை பார்த்திருக்கா. இங்கே வந்ததும் செக்யூரிட்டி கம்பெனிகளுக்கு ஹார்ட்வேர், எம்பெட்டட் சாஃப்ட்வேர் சப்ளை பண்ணும் கம்பெனி ஆரம்பிச்சா. கம்பெனி பிரமாதமாய் நடக்கறது.

    "அப்பா 57 வயசில் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டார். சித்தியோட ஒத்துப் போகல. நீலாங்கரையில் பங்களா வாங்கிக்கிட்டுத் தனியா வந்துட்டா. இது நடந்து மூணு வருஷம் ஆகறது. ஒரு வருஷத்திலேயே அப்பாவும் போயிட்டார். இப்போ சித்தி மேல கோபம் தணிஞ்சு இவ

    Enjoying the preview?
    Page 1 of 1