Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kan Moodi Kondaal..
Kan Moodi Kondaal..
Kan Moodi Kondaal..
Ebook457 pages3 hours

Kan Moodi Kondaal..

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Ramcharan Sundar a Mechanical Engineer, who is interested in writing and Photography.Currently he is working in
Bangalore, India. So far he has written four novels,Out of which his
fourth Tamil novel named "Yakshan" was published first. His objective is
to spread great scholar's philosophical thoughts and spiritual thoughts
in interesting and thrilling way. He recognized his writing skill when
he was forced to participate in his college cultural activities.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580104300697
Kan Moodi Kondaal..

Related to Kan Moodi Kondaal..

Related ebooks

Related categories

Reviews for Kan Moodi Kondaal..

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kan Moodi Kondaal.. - Ramcharan Sundar

    http://www.pustaka.co.in

    கண் மூடிக் கொண்டால்....

    Kan Moodik Kondaal…

    Author:

    இராம்சரண் சுந்தர்

    Ramcharan Sundar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ramcharan-sundar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கண் மூடிக் கொண்டால்....

    இராம்சரண் சுந்தர்

    சத்யுகத்தில் தேவர்களும் அசுரர்களும் வெவ்வேறு உலகத்தில் வாழ்ந்து வந்தனர்.

    உதாரணம் :- தேவலோகம், அசுரலோகம்.

    த்ரேதாயுகத்தில் தேவர்களும் அசுரர்களும் ஒரே உலகத்தில் வாழ்ந்து வந்தனர்.

    உதாரணம் :- ராமர், ராவணன்.

    த்வாபரயுகத்தில் தேவர்களும் அசுரர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்து வந்தனர்.

    உதாரணம்:- பாண்டவர்கள், கௌரவர்கள்.

    இந்த கலியுகத்தில் தேவர்களும் அசுரர்களும் ஒரு மனிதனுக்குள்ளேயே வாழுகின்றனர்.

    - சுவாமி சின்மயானந்தா

    காலம் - 3

    அது ஒரு மங்கலான துளி வெளிச்சம் பரவியிருக்கும் அறை. அந்த அறையில் ஒரு ஆண் கீழே உட்கார்ந்தபடி சுவற்றில் சாய்ந்து இருந்தான். அவன் மேலாடை உடுத்தாமல் காற்சட்டை (PHANT) மட்டும் உடுத்தி இருந்தான். பக்கத்தில் ஒரு பெண் ரவிக்கை பொத்தான்களை மாட்டி விட்டு கீழே இருந்த புடவையை கட்டிக் கொண்டு அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். அவனும் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த அறையின் குறுகிய வெளிச்சத்தில் அவளுடைய முகம் பிரகாசமாய் இருந்தது. அந்த பெண் அவனைப் பார்த்து

    ‘என்ன அப்படி என்னை உத்து பாக்கற?’ என்று கேட்டாள்.

    உடனே அந்த ஆண்

    ‘இல்ல.....நான் உள்ள வரும் போது உன் முகம் இவளோ ப்ரைட்டா இல்லை....ஆனா இப்போ உன் முகம் ரொம்ப ப்ரைட்டா இருக்கு’

    ‘நான் இப்போ தான் உன் கண்ணுக்கு அழகா தெரியுறேனா?’ - அந்த பெண்.

    ‘நான் அப்படி சொல்லலை....நான் இந்த ரூம்ல உன்னை மொதல்ல பாத்தப்போ உன் மேல ஒரு செக்ஸுவல் அட்ராக்ஷன் தான் இருந்துச்சு....ஆனா நீ இப்போ ரொம்ப லட்சணமா தெரியுற....’ - அந்த ஆண்.

    அந்த பெண் அவனை பார்த்து குறும்புத்தனமான புன்னகையை சிந்திவிட்டு

    ‘நான் லட்சணமா ஆனதுக்கு காரணம் நீ தான் ஹரி’ - அந்த பெண்.

    அதற்கு அந்த ஆண் சிரித்துக் கொண்டே

    ‘சரி...அது இருக்கட்டும்.... உன் பெயரென்ன?’ என்று கேட்டான்.

    உடனே அந்தப் பெண் அவன் உடம்பில் சுற்றி இருக்கும் பூநூலை பிடித்து

    ‘இந்த நூல் பேரு என்ன? எதுக்கு போட்ருக்கே’ என்று பேச்சை மாற்றினாள்.

    ‘ப்ச்..’ என்ற சத்தத்துடன் தன் நெற்றியை தனது வலது கை விரல்களால் தடவி சிறிது சலிப்போடு ‘இதுக்கு பேரு பூநூல், இத .....’ என்று அவன் பேசி முடிப்பதற்குள் அவள் குறுக்கிட்டு ‘இத போட்டுக்கிட்டு மந்திரம் சொன்னா நாம நெனச்சதெல்லாம் நடந்திடுமா?’ என்று கேட்டாள்.

    சில நொடிகள் அவளை மெளனமாக உற்றுப் பார்த்துவிட்டு ‘நீ மொதல்ல உன் பேர சொல்லு?’ என்று கேட்டான்.

    ‘என் கிட்ட யாரும் பெயர கேட்டது கிடையாது...அப்படியே கேட்டாலும் நான் உண்மையான பெயர சொன்னது கிடையாது...நீ கேட்கறியேன்னு சொல்றேன்... என் பேரு தாமரை........தாமரை செல்வி’ - அந்த பெண்.

    ‘இது உண்மையான பெயரா?’ - ஹரி.

    அவள் புன்னகைத்தாள்.

    ‘என்ன சிரிக்கற? - ஹரி.

    அவள் அதே புன்னகையோடு ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.

    ஹரியும் புன்னகைத்தவாறு ‘ஏன் என்கிட்ட மட்டும் உண்மையான பெயர சொல்ற?’ என்று அவளை வினவினான்.

    உடனே அவள் அவன் முகத்தின் அருகே சென்று அவன் கண்களை பார்த்துக் கொண்டே ‘ஏன்னா, என் வாழ்கைல உன்ன மாதிரி ஒரு உண்மையான ஆம்பளையை பாத்தது கிடையாது.... நான் நிறைய ஆம்பளைங்களோட நிறைய நைட்ட ஸ்பென்ட் பண்ணிருக்கேன்.... ஆனா நேத்து உன்கூட ஸ்பென்ட் பண்ண நைட்ட என்னால மறக்க முடியாது .... இது தான் என்னோட உண்மையான பெயர சொல்ல வெச்சுது’ என்று கூறினாள்.

    அவள் பேசி முடித்தவுடன் தட் தட் என்று யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதை கேட்டவுடன் இருவருடைய பார்வையும் அந்த அறையின் கதவை நோக்கியது.

    தாமரை எழுந்து சென்று அந்த அறையின் கதவை திறந்தாள். அங்கே பூதகரமான உடலை உடைய ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள்.

    அவள் உதடுகளுக்கு இரத்த சிவப்பை தந்திருப்பது அவள் போட்டிருக்கும் புகையிலை பீடாவும் ஒரு காரணம். அவள் உடுத்தி இருக்கும் ஆடையோ இப்போது கிழியுமா இல்லை எப்போது கிழியும் என்று எண்ணும் அளவிற்கு இறுக்கமாக இருந்தது. அவளுடைய தலை முடி டிக்காஷன் காபியில் ஊற வைத்தது போல பழுப்பு நிறத்தில் இருந்தது. அவள் தாமரையைப் பார்த்து புருவத்தை அசைத்து சிரித்துக் கொண்டே ‘க்யா ஹுவா?’ என்று ஹிந்தியில் வினவினாள்.

    தாமரை பதில் ஏதும் பேசாது அவளையே மெளனமாக பார்த்தாள். அந்த பெண்மணியும் சிரித்துக் கொண்டே ‘ஹாய் சப் குச் கதம் ஹோ?’ என்று கேட்டாள். தாமரையிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

    பதிலை எதிர் பார்த்த அந்த பெண்மணி சில நொடிகளுக்குப் பிறகு

    ‘ப்ச் .....சால்’ என்று தாமரையை தள்ளி அந்த அறையினுள் எட்டிப் பார்த்தாள். அதே வேளையில் ஹரி எழுந்து நின்று அங்கே என்ன நடக்கிறது என்று யோசனையாய் பார்த்தான். அங்கே ஒரு பெண்மணி தாமரையை தள்ளி தன்னை நோட்டமிடுவதை கவனித்தான். அந்த பெண்மணி ஹரியை பார்த்து ஒரு போலி வெட்கத்தை காட்டிக் கொண்டே தாமரை பக்கம் திரும்பி

    ‘டிகே பாஹ் வஹ் கதம் ஹோ, அக்ளே காம் கேளியே தயார் மிள் சாலே’ என்று கூற, அதற்கு தாமரை பதில் ஏதும் கூறாமல் அவளையே பார்த்தாள்.

    ‘தும் க்யா தேக் ரஹீ ஹோ’ என்று அந்த பெண்மணி கூறிக் கொண்டே தாமரையின் காதருகே சென்று ‘ப்ரதம் ஸ்தான் மே வாபஸ் மத் ஆனா, சலோ சலோ தயார் மில் சலே’ என்று கூறிவிட்டு அந்த பெண்மணி அங்கிருந்து நகர்ந்தாள்.

    அவள் சென்றவுடன் கதவை தாழிட்டு ஹரியிடம் சென்றாள் தாமரை.

    ‘அவ என்ன உன்கிட்ட சொன்னா?’ - ஹரி.

    வேலை முடிஞ்சிடுசுனு நினைக்கறேன்...நீ இன்னொரு வேலைக்கு ரெடி ஆகுன்னு சொன்னா’ - தாமரை.

    ஹரி சில நொடிகள் யோசனைக்குப் பிறகு ‘சரி...நான் கிளம்பறேன்’ என்றான்.

    அவளும் சரி என்பது போல மெளனமாக தலையசைத்தாள்.

    ஹரி அவளிடமிருந்து விலகி அந்த அறையின் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான். தாமரை ஹரி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஹரி மூடியிருந்த கதவை மெதுவாக திறந்து அவளை ஒரு பார்வை திரும்பி பார்த்து விட்டு மெதுவாக அவளுடைய பார்வையிலிருந்து மறையத் தொடங்கினான்.

    காலம்- 2

    ஐந்து நாட்களுக்கு முன்பு

    அது ஒரு பிராமண வீடு

    ‘ஹரி.....சந்தியா வந்தனம் செஞ்சு முடிச்சிட்டியா?’ என்று ஒரு மூதாட்டியின் குரல் ஒலித்தது.

    ‘முடிச்சிட்டேன் பாட்டி’ என்று ஹரி தன் அறையில் இருந்து குரல் கொடுத்தான்.

    ‘சரி.....இன்னிக்கு நோக்கு பிறந்தநாளோல்யோ உனக்கு ஒரு சர்ப்ரைஸ்’ - பாட்டி.

    ‘என்னது பாட்டி?’ - ஹரி.

    ‘உன் ரூம்ல இருக்குற டேபிள் மேல ஒரு கவர் இருக்கும் அதை பிரிக்சுப்பாரு’ என்று பேசிக் கொண்டே ஹரியின் அறையினுள் எட்டிப் பார்த்தாள் பாட்டி.

    ‘கவர்ல என்ன இருக்கு?’ என்று ஆச்சரியத்திற்கு விருப்பம் காட்டாமல் கேட்டான் ஹரி.

    ‘ப்ச்……… பிரிச்சுதான் பாரேன்’ என்று அந்த இடத்தை விட்டு கிளம்பினாள் பாட்டி.

    ஹரியும் அந்த காகித உரையை பிரித்து பார்த்தான். அதில் ஒரு பெண்ணினுடைய புகைப்படம் இருந்தது.

    கொஞ்சம் உப்பலான முகம், வெள்ளை நிறம், அவள் முகம் அவ்வளவு அழகாக இருந்தது என்ற வாக்கியத்திற்கு துளி கூட சம்மந்தம் இல்லாத முகம், மொத்தத்தில் ஒரு வயதான பெண் போல தோற்றம், இதை பார்த்த ஹரி கண்களை சிறிது நேரம் மூடிக்கொண்டு பிறகு கண்களை திறந்தான். அந்த புகைப்படத்தை அப்படியே அந்த காகித உறையினுள் நுழைத்து அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு ஆடைகளை உடுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

    ஹாலில் பாட்டிக்கும் ஹரியினுடைய தங்கை திவ்யாவிற்கும் ஏதோ வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது.

    ‘பாட்டி நீ பண்ணது தப்பு பாட்டி’ என்று கத்தினாள் திவ்யா.

    ‘எது தப்பு எது சரின்னு நேக்குத் தெரியும், நீ எனக்கு புத்தி புகட்டாதே, உன் வேலை என்னவொ அதைப் பாரு’ என்று பாட்டி திவ்யாவைப் பார்த்து கத்தினாள்.

    உடனே ஹரி குறுக்கிட்டு

    ‘உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை?’ என்று ஹரி வினவினான்.

    ‘இல்லடா ஹரி, நீயே சொல்லு, பாட்டி ……… அந்த பால்காரன் வந்து பால் கொடுத்துட்டு போன இடத்தை தண்ணி ஊத்தி கழுவி எதோ மந்திரத்தை ஜபிச்சுண்டு இருந்தா, நான் அத பாத்துட்டு நீ பண்றது தப்பு பாட்டினு சொன்னா கோவிச்சுகிறாடா’ - திவ்யா.

    ‘சரி விடு, போய் ஆபிஸ்க்கு ரெடி ஆகற வழியை பாரு’ என்று திவ்யாவை பார்த்து கூறிவிடடு பாட்டியின் பக்கம் திரும்பினான்.

    திவ்யாவோ ‘லூசு பாட்டிக்கே சப்போர்ட் பண்ணு’ என்று முனகிக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.

    ‘பாட்டி.....அம்மாவும் அப்பாவும் எங்கே?’ - ஹரி.

    ‘அவா உன் பேர்ல அர்ச்சனை பண்றதுக்கு கோயிலுக்கு போயிருக்கா, அது இருக்கட்டும் என்ன பொண்ண புடிச்சிருக்கா?’ என்று வினவினாள் பாட்டி.

    ‘அவ என் கண்ணுக்கு அழகா தெரியல, அவள எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணலை’ என்று ஹரி பேசி முடிப்பதற்குள்

    ‘ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கா?’ என்று ஹரியை கலாய்த்துக் கொண்டே தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் திவ்யா.

    ஹரி அவளைப் பார்த்து முறைத்தான்.

    திவ்யா அவனைப் பார்த்து ‘என்னடா ஹரி மனசுல என்ன அலைபாயுதே மாதவன்னு நினைப்பா’ என்றாள்.

    ‘யேய் நான் சீரியஸா சொல்றேன், அந்த பொண்ணை எனக்கு பிடிக்கலை’ என்று ஹரி திவ்யாவைப் பார்த்து கூறினான்.

    ‘சரி டென்ஷன் ஆகாதே, நானும் அந்த போட்டோவைப் பார்த்தேன்’ என்று ஹரியிடம் கூறிவிட்டு பாட்டியைப் பார்த்து ‘ஏன் பாட்டி வேற நல்ல அழகான பொண்ணே கிடைக்கலையா?’ என்று கேட்டாள்

    உடனே பாட்டி ‘இதுல நான் சம்பந்தப் படல, ம்ம்ஹும்…. அந்த காலத்துல எங்களுக்கெல்லாம் இந்த மாதிரி போட்டோவை காமிச்சு புடிச்சிருக்கா புடிக்கலையான்லாம் கேட்டுண்டா இருந்தா?, பெரியவா என்னை கழுத்த நீட்டுன்னா உங்க தாத்தாகிட்ட நீட்டிட்டேன்’ என்று நொந்துக் கொண்டாள்.

    ‘ஐ தின்க் அன்னிக்கு மனசு உடைஞ்சு போனவர்தான் தாத்தா, அதுக்கப்புறமா அவர் அதிர்ச்சியிலேருந்து மீளவே இல்லைனு நினைக்கறேன்’ என்று பாட்டியை கலாய்த்தாள் திவ்யா.

    ஹரி குறுக்கிட்டு ‘நீ கொஞ்சம் சைலெண்டா இருக்கியா?’ என்றான்.

    ‘விடுடா ஹரி, அவளுக்கு என்னை பாத்து பொறாமை, உனக்கு நிச்சயமா என்னை மாதிரி அழகா அடக்க ஒடுக்கமா பொண்ணு கிடைப்பா’ என்று பாட்டி ஹரியிடம் கூறினாள்.

    உடனே திவ்யா பாட்டியிடம் ‘பாட்டி, இப்போ பிரச்சனையே உன்னை மாதிரி பொண்ண பாத்ததுனாலதான்’ என்று கூற, உடனே ஹரி ‘திவ்யா ப்ளீஸ் விளையாடாதே’ என்று எரிச்சலோடு பேசும்போது வீட்டின் வாயிற் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது, ஓசை வந்த பக்கம் திரும்பினான் ஹரி.

    அங்கே அவனுடைய அம்மா கௌசல்யாவும், அப்பா ராகவனும் வாயிற் கதவை முடிவிட்டு வீட்டினுள் நுழைந்தனர்.

    ‘ஐயோ அம்மாவும் அப்பாவும் வந்துட்டா, நான் சட்டுன்னு குளிச்சுட்டு வந்துடறேன்’ என்று அந்த இடத்தை விட்டு கிளம்பினாள் திவ்யா.

    கௌசல்யா ஹரியிடம் சென்று நெற்றியில் விபூதியை பூசிவிட்டு திரும்பி பாட்டியை பார்த்தாள்.

    பாட்டியும் அவளைப் பார்த்தாள், ராகவனும் பாட்டி பக்கத்தில் சென்று பாட்டியை பார்த்தார்.

    இருவருடைய பார்வைக்கு அர்த்தம் ‘ஹரிக்கு பொண்ண புடிச்சிருக்கா?, அவன் என்ன சொன்னான்?’ என்ற கேள்வியே என்று புரிந்து கொண்ட பாட்டி என்னை பார்த்து என்ன ப்ரயோஜனம், ம்ம்ம் ……..அவனுக்கு புடிச்ச பொண்ணா மொதல்ல பாருங்கோ, நேக்கு அடுப்படில வேலையிருக்கு’ என்று கூறிவிட்டு நடையை கட்டினாள்.

    ராகவனும், கௌசல்யாவும் ஹரியிடம் திரும்பினார்கள்

    கௌசல்யா ஹரியிடம் சென்று

    ‘என்னடா செல்லம், அந்த பொண்ணுக்கு என்னடா குறை? நீ எதிர்பார்த்த மாதிரி வெள்ளையா தானடா இருக்கா?’ என்றாள்.

    ஹரி விரக்தியோடு ‘ப்ச்….அம்மா நான் வெள்ளையாவோ, இல்லை சினிமாகாரி மாதிரியோ கேக்கலை, பார்த்தா என் மனசுக்கு புடிச்சிருக்கணும், அவளோட சேர்ந்து வாழணும்ற ஆசை வரணும், உங்களுக்கு எப்படி புரிய வெக்கறதுன்னு எனக்கு தெரியலை ‘என்று கௌசல்யாவிடம் கூறினான்.

    உடனே ராகவன் ‘நீ ரொம்ப நூல் நூர்த்து பார்த்துண்டே இருந்தியான்னா, நோக்கு வயசு ஆயிண்டே போகும் அப்புறம் இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாது, இன்னியோட உன் வயசு 32 ஆகறதுன்னு ஞாபகம் இருக்கா?’ என்று கோபத்துடன் உரக்க கூறினார்.

    ‘ஏன்னா…….நீங்க கத்தி உங்க ப்லட் பிரஷரை ஏத்திக்காதிங்கோ’ என்று கௌசி ராகவனை சமாதானப்படுத்தி ஹரியிடம் திரும்பி ‘ஏன்டா எங்கள இப்படி கஷ்டப்படுத்தற, போட்டோல தானே பார்த்த, ஒரு வாட்டி நேர்ல போய் பார்த்துட்டு வருவோம், நேர்ல பாக்கறத்துக்கு நல்லா இருந்தான்னா?’ என்ற கேள்வியோடு அவள் பேச்சை நிறுத்தினாள்.

    ‘அம்மா, மொதல்ல என் மனச புரிஞ்சுகோங்க, இப்படிதான் போனவாட்டி போட்டோல எனக்கு புடிக்கலன்னு, சரி நேர்ல பார்த்தா புடிக்கும்னு போனோம்..... நேர்லையும் எனக்கு புடிக்கல, ஆனா பொண்ணு வீட்ல என்னை புடிச்சிருக்குனு போன் பண்ணாங்கன்னு நீங்க எல்லாரும் எப்படி என்னை கேன்வாஸ் பண்ணீங்க..... என்னால அந்த கொடுமையை மறுபடி தாங்க முடியாது’ என்றான் ஹரி.

    உடனே ராகவன் கொஞ்சம் தன்மையாக

    ‘டேய் எனக்கு கூடதான் உங்கம்மாவை பொண்ணு பாக்கும்போது புடிக்கல,…. வீட்ல போர்ஸ் (Force) பண்ணாங்கன்னுதான் இவளை கல்யாணம் பண்ணின்டேன், அதுகப்புறமா நேக்கு அவளை புடிக்க ஆரம்பிச்சுடுத்துடா’, அதனால நீ அழகு, மனசுக்கு புடிச்சிருக்கான்னுலாம் பாக்காமா இந்த பொண்ணையே ஒ.கே பண்ணு’ என்று கூறினார்.

    ‘ஆ……………….யாருகிட்ட ரீல் வுடற, நான் தான் அம்மா போட்டோவ சின்னவயசுல பார்த்தேனே, நீ நல்ல அழகான பொண்ணா கல்யாணம் பண்ணிட்டு என் அண்ணணுக்கு சுமாரான பொண்ண கல்யாணம் பண்ணிவைக்கலாம்னு நினைக்கறியா?’ என்று நக்கலான குரலில் குளியலறையிலிருந்து தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தாள் திவ்யா.

    ராகவன் ‘ப்ச்………..’ என்ற சப்தத்தோடு தலையில் கை வைத்துக் கொண்டார். ‘ஆமாண்டி, மொதல்ல அவா குடும்பத்தை எனக்கு பிடிக்கவே இல்லை, நான் கூட இந்த பொண்ணு வேணாம்னுதான் சொன்னேன், கடைசில இவன்தான் (ராகவன்) நான் கல்யாணம் பண்ணா இவளைதான் பண்ணுவேன்னு ஒரே அடம், சரின்னு வேற வழியில்லாம பண்ணி வெச்சோம்’ என்று பாட்டி கையில் காய்சிய பால் பாயாச பாத்திரத்தை சமையலறையில் இருந்து நடந்து வந்து ஹாலில் உள்ள டேபிளில் வைத்துவிட்டு ஹரியிடம் திரும்பி ‘போர்ஸ் பண்ணது நாங்க இல்லை, அது உங்கப்பாதான்’ என்றாள்.

    இதை கேட்ட கௌசல்யாவின் மனது புண்பட அது கண்களில் கோபமாக வெளிப்பட்டது, அதே கோபத்தோடு ராகவனைப் பார்த்து ‘ஏன்னா, இது நல்லா இல்லை, இதுக்குதான் நாம தனியா இருந்தோம், ஹரி மனசுக்கு ஆறுதல் வேணும்னு டாக்டர் பால் வர்கீஸ் சொன்னதுனாலதான் இங்க வரவெச்சுருக்கோம்னு புரிய வைங்கோ’ என்று கூறினாள்.

    ‘அதாவது என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவேன்னு உன் பெண்டாட்டி மிரட்டுறா......அப்படி தானே’ என்று உதட்டில் விரக்தியான சிரிப்போடு பாட்டி கூற, ராகவன் ‘ஐயோ அம்மா அவ அப்படி சொல்லலம்மா’ என்றார். கௌசி கண்களில் நீரோடு அவளுடைய அறைக்குச் சென்றாள்.

    ராகவன் உள்ளே அவள் (கெளசி) போவதை பார்த்துவிட்டு, பிறகு அனைவரையும் பார்த்து கொண்டே பாட்டியிடம் பார்வையை நிறுத்தினார்.

    ‘ஏம்மா இப்போ நான் அடம் பிடிச்ச விஷயமெல்லாம் ரொம்ப அவசியமா? நானே எப்படியாவது இவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடலான்னு பாக்கறேன்……..அத புரிஞ்சுக்காம’ என்று அவரும் கௌசல்யாவை சமாதானப்படுத்தச் சென்றார்.

    பாட்டியும் அவர் சொல்வதை கண்டுக் கொள்ளாமல்

    ‘ஹரி உன் பர்த் டேவுக்கு ஸ்பெஷலா பாயாசம் பண்ணிருக்கேன். மறக்காம குடி, நான் அடுப்படிக்கு போறேன்’ என்று மறுபடி சமையலறைக்குள் சென்றாள்

    அங்கே நின்று கொண்டிருந்த திவ்யா ஹரியை பார்த்து ‘டேய் ஹரி சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோயேன்டா?’ - திவ்யா.

    ‘எனக்கு பிடிச்ச மாதிரி பாத்தா மாட்டேன்னா சொல்லப்போறேன், சரி நான் அலையறேன்ற இமேஜ் வந்தா கூட பரவாயில்லைன்னு நானே மேட்ரிமோனி வெப்சைட்ல இந்த பொண்ணுங்களையெல்லாம் எனக்கு பிடிச்சிருக்குனு காட்டினேன், நீங்கதான் எப்படியாவது முடிச்சிருக்கணும்’ - ஹரி.

    திவ்யாவின் முகம் கொஞ்சம் தீவிரமாக மாறியது.

    ‘ஹரி....நீ சொன்ன பொண்ணு வீட்ல எல்லாம் மேட்ரிமோனி வெப்சைட்ல காசு கட்டி போன் பண்ணி பேசியாச்சு, அவங்களுக்கு அமேரிக்கா மாப்பிள்ளை தான் வேணுமாம், இல்லைனா வருஷத்துக்கு 12 லேருந்து 20 லட்சம்வரை சம்பாதிக்கறவன் தான் வேணுமாம், நீ காமிச்சதுல வேலைக்கு போகாம கொஞ்சம் லோவர் மிடில் க்லாஸ்ல இருக்கறவங்கல கேட்டா….. அவங்க ரெண்டு வருஷம் வயசு வித்யாசத்துல தான் பாக்கறாங்கலாம், அதையும் மீறி ப்ரொசீட் (Proceed) ஆச்சுனா ஜாதகம் பொருந்த மாட்டேங்குது. அப்படி ஜாதகம் பொருந்தறதெல்லாம் உன் போட்டோவ பார்த்து வேணாம்னு சொல்றாங்க, அதுக்கு நானோ இல்ல அம்மாவும் அப்பாவும் என்ன பண்ண முடியும், உனக்கும் நாங்க பாக்கற பொண்ணுங்களையும் பிடிக்க மாட்டேங்கறது, நாங்க என்ன தான் பண்ணட்டும்?’ என்று வினவினாள் திவ்யா

    ஹரி வாய் பேச முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    திவ்யா ஹரியிடம் வந்து ‘டேய் அண்ணா, என்னடா திடீர்னு சோகமாயிட்டே’

    ‘இல்ல, ஒன்னுமில்லை’ என்று மௌனமாக தலை அசைத்தான் ஹரி.

    ‘என்னாச்சு, ஏன் சைலெண்டா இருக்கே?’ - திவ்யா.

    ஹரி திவ்யாவைப் பார்த்து ‘இல்ல நான் ரொம்ப அசிங்கமாயிட்டேனா? என் தகுதிக்கு மீறி ஆசைப்படுறேனா?’ என்று கேட்டான் அப்பொழுது அவன் கண்கள் லேசாக கலங்கி இருந்தது.

    ‘சே………அப்படியெல்லாம் இல்லடா, உனக்கும் வயசு 32 ஆயிடுத்து, நீ முன்னாடி பாக்கறத்துக்கு நடிகர் மாதவன் மாதிரி இருந்தே, உன் அழகை மெயின்டைன் பண்றதுக்கு நீ ஒன்னும் சினிமாக்காரன் கிடையாது, ப்ராக்டிகலா யோசிச்சு பாரு உனக்கு அடுத்து எனக்கு கல்யாணம் ஆகணும், நீ டிலே (Delay) பண்ண பண்ண இன்னும் சுமாரா தான் பொண்ணு கிடைக்கும், நான் உன்னை கட்டாயப் படுத்தல, ஆனா நீ ஏதாவது ஒரு பாயிண்ட்ல காம்ப்ரமைஸ் பண்ணிதான் ஆகணும். இல்லைனா பிரச்சனை வந்தா கூட பரவாயில்லைனு உங்க ஆபிஸ்ல எதாவது நல்ல பொண்ணா பாத்து லவ் பண்ணணும்’ என்றாள் திவ்யா.

    ‘என் ஆபிஸ்ல இருக்கற பொண்ணுங்கயெல்லாம் எங்க அடக்க ஒடுக்கமா இருக்காளுங்க.....எப்போ பாத்தாலும் எவன் கூடயாவது அரட்டை அடிச்சிகிட்டு இருக்காளுங்க...எனக்கு அதுவே அவங்க மேல ஒரு அருவெறுப்பை உண்டாக்குது....அடக்க ஒடுக்கமா பசங்களோட அனாவசியமா பேசாத பொண்ணுங்களே இல்ல....அதனால என்னால லவேல்லாம் பண்ண முடியாது’ - ஹரி.

    ‘ம்ஹம்……….’ என்று திவ்யா நொந்து கொண்டு

    ‘சுத்தம்…….பசங்க கிட்ட பேசாத பொண்ணுங்கள எங்க போய் தேடுறது, நான் ஒன்னு சொல்லட்டுமா?’ - திவ்யா.

    ‘ம்……..சொல்லு’ என்று தலை அசைத்தான் ஹரி.

    ‘நீ பேசாம இப்ப போட்டோல பார்த்த பொண்ணுக்கே ஒ.கே சொல்லிடு, ஏன்னா உனக்கு எப்படி இருந்தாலும் 28 லேருந்து 30க்குள்ள வயசு இருக்குற பொண்ணுங்கள தான் பார்ப்பாங்க, அதெல்லாம் முத்துனதா தான் இருக்கும்’ - திவ்யா.

    ‘சும்மா பேசாதே, நம்ம பக்கத்து வீட்டு மாமி பங்கஜத்துக்கு வயசு நாற்பத்தி இரண்டு இருக்கும், ஆனா மாமி பாக்கறத்துக்கு எவளோ அழகா இருக்கா? அந்த மாமி மாதிரியாவது நீங்க பாக்கக் கூடாதா?’ என்று ஹரி திவ்யாவை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கும் போது

    ‘உள்ளே வரலாமா?’ என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

    ஹரியும் திவ்யாவும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினர்.

    அங்கே பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி நின்று கொண்டிருந்தாள்.

    என் பேரு ஹரிஹரன். நான் படிச்சதெல்லாம் பாய்ஸ் ஹை ஸ்கூல் தான், நான் டிப்ளோமா படிச்சதும் பாய்ஸ் பாலிடெக்னிக் தான்....... அதனால தான் என் தங்கை என் அம்மா தவிர வேற எந்த பொண்ணுங்களோடையும் அவ்வளவா பேசி பழக்கம் கிடையாது. டிப்ளோமா முடிச்சிட்டு இன்ஜினியரிங் பண்றதுக்கு கோ- எஜுகேஷன் காலேஜ்ல சேர்ந்தேன். நான் மெகானிகல் க்ருப்ல சேர்ந்ததுனால என் க்லாஸ்ல ஒரே ஒரு பொண்ணுதான், அவளையும் பசங்க சப்ப பிகருன்னு கிண்டல் பண்றதுனாலவோ என்னவோ எனக்கு அவமேல எந்த அட்ராக்ஷணும் இல்ல. நான் இன்ஜினியரிங் காலேஜ்ல ஜாயின் பண்ண பிறகுதான் இன்டர்நெட், சாட்டிங் இதெல்லாம் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். எனக்கு இருந்த கூச்ச சுபாவத்தை இது மூலமா குறைச்சிடலாம்னு நானும் சாட் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா எந்த பொண்ணும் தொடர்ந்து சாட் பண்ண மாட்டாங்க. அப்படியே பண்ணாலும் ஒரு நாள் இரண்டு நாள்தான். அதுக்கு மேல போகாது. இப்படி இருக்கும் போது ஒரே ஒரு பொண்ணு மட்டும் ஒரு வாரம் மேல சாட் பண்ணினாள். எனக்கும் அவளுக்கும் அலைவரிசை ஒத்து போக ஆரம்பிச்சது. அவ என் கூட சாட் பண்ற விதத்தை பார்த்து அவ என்னை ஒரு நல்ல ப்ரெண்டா நினைக்குறான்னு தோணுச்சு. அப்படி அவ கூட சாட் பண்ணிகிட்டு இருக்கும் போது

    காலம்-1

    12 வருடங்களுக்கு முன்பு

    ‘டேய் ஹரி, உன் ப்ரெண்ட் சதீஷ் வந்திருக்கான்டா’ - கௌசல்யா (ஹரியின் அம்மா)

    ‘அம்மா, அவனை என் ரூமுக்கு வர சொல்லு’ என்று ஹரி கணினியில் அந்த பெண்ணோடு மின் அரட்டை செய்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகு யாரோ தோளில் கை வைப்பதை உணர்ந்தான் ஹரி. அது சதிஷ் தான் என்று தெரிந்திருந்த ஹரி,

    ‘என்ன மச்சி, தீடீர்னு வந்திருக்கே’ என்று சதீஷைப் பார்க்காமல் மின் அரட்டை செய்துக் கொண்டே கேட்டான் ஹரி.

    உடனே சதீஷ்

    ‘என்னடா சாட்டிங்கா? ம்ம்ம்……….அது வேற ஒன்னுமில்ல…… தியரி ஆப் மெஷின்ஸ் அசைன்மன்ட் கொடுத்திருந்தான்ல அந்த ஆளு......நீ முடிச்சிருந்தியான்னா உன்னை பார்த்து எழுதிட்டு போயிரலாம்னு வந்தேன்’ - சதீஷ்.

    ஹரி குரலில் சிறு அதிர்ச்சியோடு ‘ஸ்ஸ்………..ஐயோடா சாட் பண்ணிகிட்டே இருந்ததுல மறந்திட்டேன், சரி என்னடா பண்ணலாம்?’ என்று சதீஷை கேட்டான்.

    ‘என்னை கேட்டா?……சரி என்ன மேட்டரு……….. சாட்ல யாரு’ - சதீஷ்.

    ‘சாட்ல பொண்ணுதான், எனக்கே ரொம்ப நாள் கழிச்சு செட் ஆயிருக்கு’ - ஹரி.

    ‘கலக்கரப் போ, சரி பொண்ணு பேரு என்ன?’ - சதீஷ்..

    ‘ஷீலா’ - ஹரி

    ‘ஷீலா………….ம்ம்ம்’ என்று சற்றே யோசித்துவிட்டு

    ‘சரி அவ என்ன பண்றா? அவள பத்தி ஏதாவது டிடைல்ஸ் ?’ - சதீஷ்.

    ‘ஐ.டி டிபார்ட்மெண்ட்...... செகண்ட் இயர், நம்ம சென்னைல தான் இருக்கா’ - ஹரி.

    ‘ஓ……….நமக்கு ஜூனியரா? சரி எந்த காலேஜ்?’ - சதீஷ்.

    ‘தெரியாது டா’ - ஹரி.

    ‘தெரியாதா?, எவ்ளோ நாளா சாட் பண்ற?’ சதீஷ்

    ‘ஒரு வாரமா..’ ஹரி.

    ‘ஒரு வாரமா?’ என்று திகைக்போடு கேட்ட சதீஷ் ‘அப்படி ஒரு வாரமா என்ன பேசிகிட்டு இருக்கீங்க? பேரு, ஊரு சொல்ற அளவுக்கு வந்தாச்சுல அப்புறம் எந்த காலேஜ்னு கேட்டா சொல்ல மாட்டாளா?’ - சதீஷ்.

    ‘அது இல்லடா, என்கிட்ட ரொம்ப நாள் கழிச்சு ஒரு பொண்ணு பேச ஆரம்பிச்சிருக்கா, அதுவும் என் வாழ்க்கைல முதல் தடவை ஒரு பொண்ணு கூட ஒரு வாரம் தொடர்ந்து பேசிருக்கேன், அதனால நான் சாட் பண்ணும் போதே ரொம்ப கான்சியஸ்ஸா எதுவும் அவ தப்பா நெனச்சுட கூடாதுன்னு பாத்து பாத்து சாட் பண்ணிகிட்டு இருக்கேன், அவ காலேஜ் எங்கேன்னு கேட்டா? எங்க நான் ரொம்ப டிடைல்ஸ் கேக்கறேன்னு பயத்துல கட் பண்ணிட்டான்னா? அதான் கொஞ்சம் கேர்புல்லா டீல் பண்ணிகிட்டு இருக்கேன்’ - ஹரி.

    ‘அதான் ஒரு வாரம் ஆயிடுச்சுல்ல, அப்புறம் என்ன பயம்’ என்று ஹரியுடன் பேசிக் கொண்டே யாஹூ மின் அரட்டையில் (Yahoo chat) ‘யுவர் காலேஜ் ப்ளீஸ்’ என்று தட்டெழுதி தகவல் அனுப்பினான் அழுத்தினான் சதீஷ். ஹரி இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

    ‘ப்ச்……..டேய் என்னடா நீ………’என்று விரக்தியோடு கோபம் கலந்த குரலில் கூறிக் கொண்டே சதீஷை பார்த்தான்.

    ‘ஏன் பயப்படுற, கொஞ்சம் வெயிட் பண்ணு, அவ என்ன டைப் பண்றானு பார்ப்போம்’ - சதீஷ்.

    இரண்டு நிமிடங்கள் ஆகியும் அவளிடமிருந்து பதில் வரவில்லை.

    ஹரி புலம்பத் தொடங்கினான், ‘போச்சு, எனக்கு இருந்த ஒரே நிம்மதியும் கெடுத்திட்டியாடா, பண்ணி’ என்று சதீஷை திட்டினான்.

    ‘விடுறா இப்போ தானே ஆரம்பிச்சிருக்கே, இனிமே நிறைய மாட்டும்டா, கவலை படாதே’ - சதிஷ்.

    ‘என்னத்த மாட்டும்.....ச்சீ போடா’ - ஹரி.

    திடீரென்று மின் அரட்டை பதிவேட்டில் தகவல் வந்ததிற்கான அறிகுறி தெரிந்தது. அதில் ஆதித்யா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் என்று தட்டெழுதப் பட்டிருந்தது. ஹரியும் சதீஷிம் அதைப் பார்த்துவிட்டு ‘டேய் நம்ம காலேஜ்டா’ என்று ஒன்றாக சேர்ந்து கத்தினார்கள். மறுபடி அவளிடமிருந்து இன்னொரு தகவல் ‘யுவர் காலேஜ்?’ என்று வந்தது. உடனே ஹரி ‘ஐயம் ஆல்சோ தி சேம் காலேஜ்.....’ என்று கீ போர்டு பொத்தான்களை தட்டெழுதும் பொழுது சதீஷ் அவனை தடுத்தான்

    ‘டேய்...... என்னடா?’ - ஹரி.

    ‘நீ இப்ப உண்மைய சொல்லாதே’ - சதீஷ்.

    ‘ஏன்?’ - ஹரி.

    ‘அவளோட டீடைல்ஸ் பக்காவா கிடைச்சிருக்கு இல்ல, மொதல்ல போய் அவ பாக்கறதுக்கு எப்படி இருக்கானு செக் பண்ணிடுவோம், பிகர் நல்லா இருந்துச்சுனா அப்பவே போய் பேசிடுவோம், ஏன் ரிப்ளை பண்ணல என் மெசேஜுக்குனு கேட்டா, இன்டர்நெட் ப்ரொப்லம்னு சொல்லி சமாளிக்சுடலாம். அப்படி அது சப்ப பிகரா இருத்ததுனா ?’ என்று ஹரியின் முகத்தின் பக்கத்தில் அவன் முகத்தை கொண்டு சென்று அவன் கண்களை அகல விரித்து ‘அதோட அந்த பக்கம் மழைக்கு கூட ஒதுங்க கூடாது, என்ன ஒகேவா?’ - சதீஷ்.

    அப்படி அவன் சொல்லும் போது எனக்கு சரியா படலை, நான் வேணாம்னு தான் சொன்னேன்...ஆனா அதுக்கு அவன்...

    ‘இப்படித்தான் நம்ம கிளாஸ் ரகு சாட்ல ஒரு பொண்ண பிடிச்சு நேர்ல போய் பாத்திருக்கான், அந்த பொண்ணு பாக்கறதுக்கு நல்லா இல்லை அவளை பார்த்தவொடனே அவனுக்கு அவ மேல இண்ட்ரெஸ்ட் போயிருச்சு. அவளை மீட் பண்ணப்போ என்னவோ சும்மா சிரிச்சு பேசிகிட்டு வந்துட்டான், அப்புறம் அந்த பொண்ணுகிட்டேருந்து சாட் மெசேஜ் வந்தாலோ இல்லை மெயில் வந்தாலோ ரெஸ்பாண்ட் பண்ணமாட்டான், கடைசீல அந்த பொண்ணு அவனை தேடிகிட்டு காலேஜ்கே வந்திருச்சு’ - சதீஷ்.

    ‘ஆ………….அப்புறம்’ - ஹரி.

    ‘அப்புறம் என்ன? அந்த பொண்ணுகிட்ட நேரடியாவே உன்னை எனக்கு பிடிக்கலை, ப்ளீஸ் இனிமேல் என்னை டிஸ்டர்ப் பண்ணாதேன்னு சொல்லிட்டான்......அந்த பொண்ணு அழுதுக்கிட்டே போச்சு, பாக்கறத்துக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு, ஆனா நீ ரொம்ப பாவம் பாக்கறவன். அது சப்பையா இருந்து நீ காம்ப்ரமைஸ் பண்ணினா உனக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்காது, அவனை போல மூஞ்சில அடிச்சா மாதிரி சொன்னீனா உனக்கு கில்டி பீலிங் இருக்கும். நீ அத நினைச்சு வருத்தப்பட்டுகிட்டே இருப்பே, அதனால நான் சொல்றா மாதிரி செய்’ - சதீஷ்.

    ஹரியின் மனதினுள் ‘நம்மள பத்தி அப்படியே புரிஞ்சு வெச்சுருக்கானே..ம்ம்…. ஒரு வேளை அவன் சொல்றத கேட்டு பார்ப்போமா?’ என்று சிந்தித்து கொண்டிருக்கும் போது

    ‘என்னடா யோசிக்கற’ - சதீஷ்.

    ‘சரி மச்சி நீ சொல்ற மாதிரியே செஞ்சுடலாம்’ - ஹரி.

    மறுநாள் நான் என் கிளாஸ் ரூமுக்குள்ள நுழையம் போது......

    'மின்னலே படம் சூப்பரா இருக்கு, போன வெள்ளிக் கிழமை தான் ரிலீஸ் ஆச்சு, பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவே பார்த்துட்டேன், வசிகரா சாங் செம மெலோடிடா’ என்று ஒருவன் சதீஷ் மற்றும் அவனை சுற்றி இருக்கும் மற்ற நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது வகுப்பறைக்குள் நுழைந்த ஹரியை அவன் சட்டென்று பார்த்து சதீஷிடம் ‘டேய் ஹரி வந்துட்டான்டா’ என்றான்.

    சதீஷ் ஹரியைப் பார்த்து ‘டேய் ஹரி, மின்னலே ரிவ்யூ போயிட்ருக்குது, சீனு போய் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவே பாத்திருக்கான், படம் செமையா இருக்காம்’. உடனே சீனு ‘அவன் எங்க கதை கேக்கற மூட்ல இருக்க போறான், அவன் அந்த பொண்ணு எப்படி இருப்பாளோன்னு யோசனைல இருப்பான்’ என்று கூறினான். இதை கேட்ட ஹரி மனதினுள் ‘அடப்பாவி என் மனசுல ஓடறத கரெக்டா சொல்றானே, இந்த நாய்க்கு எப்படி தெரியும்?’ என்று யோசித்துக் கொண்டே சதீஷ் பக்கம் திரும்பினான்.

    ‘ஹிஹி………ஹி…….. நான் தான் சொன்னேன்’ என்று பல் இளித்துக் கொண்டே கூறினான் சதீஷ்.

    ‘சொல்லிட்டியா, ஏன் அந்த பொண்ணை பாத்துட்ட பிறகு எனக்கு பிடிச்சிருந்ததுனா சொல்லிருக்கலாம்ல?’ - ஹரி.

    ‘நான் கூட எவ்வளவோ கன்ட்ரோல் பண்ணேன், ஆனா பேசறதுக்கு சுவராஸ்யமா எந்த டாப்பிக்கும் கிடைக்கலியா..... அதான் உன் மேட்டரை போட்டு கொஞ்சம் உருட்டிகிட்டு இருந்தோம்’ என்று சதீஷ் பல் இளித்துக் கொண்டே கூறினான்.

    ஹரி சதிஷை பார்த்து முறைத்துவிட்டு, சீனுவிடம் திரும்பினான்.

    ‘சீனு

    Enjoying the preview?
    Page 1 of 1