Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pagalil Ingey! Iravil Engey?
Pagalil Ingey! Iravil Engey?
Pagalil Ingey! Iravil Engey?
Ebook96 pages37 minutes

Pagalil Ingey! Iravil Engey?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரையுலகில் தடம்பதித்துக் கொண்டிருக்கும் பவித்ராவிற்கு ஒரு சோக பின்னணி இருந்தது. அது தன் தாய் தந்தையின் இழப்பு. இதற்கு காரணமானவரை சந்திக்கும் தருணம் கிடைக்கவே, அவரை பழிவாங்க பவித்ரா எடுக்கும் திட்டம் என்ன? உண்மையான பின்னணி என்ன? என்பதையும் ஒவ்வொரு தனிப்பட்ட கதாபாத்திரத்திலும் கதாசரியர் தரும் சுவையான கருத்துக்களையும் வர்ணனைகளையும் காண்போம் ராஜேந்திரகுமாரின் வழி பகலில் இங்கே இரவில் எங்கே என்னும் கதை வழியைக் காண்போம்…….

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580152608180
Pagalil Ingey! Iravil Engey?

Read more from Rajendrakumar

Related authors

Related to Pagalil Ingey! Iravil Engey?

Related ebooks

Reviews for Pagalil Ingey! Iravil Engey?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pagalil Ingey! Iravil Engey? - Rajendrakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பகலில் இங்கே! இரவில் எங்கே?

    Pagalil Ingey! Iravil Engey?

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    அந்த முரடனின் கையிலிருந்த துப்பாக்கி புகையுடன் சீறி நெருப்பை கக்கியது. போ - ஒழிஞ்சு போ வாய் விட்டு சிரித்தான்.

    எதிரே நின்று பவித்ரா நெஞ்சை அழுத்திக்கொண்டு மூச்சுத் திணறினாள்.

    நெஞ்சை அழுத்திய கையில் விரல்கள் நடுவிலே ரத்தம் குபுகுபுவென்று வழிந்தது. முகத்திலே சவக்களை வர அ... அசோக் திணறலாக முனகியபடி ஒரு சுற்று சுற்றி தரையில் சரிந்து கவிழ்ந்து விழுந்தான்.

    ‘கட்’

    டைரக்டரின் கூவலுக்கு காமெரா உடனே அடிபணிந்தது. ஓட்டத்தை நிறுத்தியது.

    நிமிராத நிலையிலேயே கேட்டாள் பவித்ரா. க்ளோசப் ஷாட் எடுக்கப் போறீங்களா சார்?

    இல்லேம்மா. வேணாம்

    எழுந்து நின்று உள்ளங்கையில் பிசுபிசுவென்று சிகப்பாக ஒட்டி கிடந்த ஸ்பான்ச்சை எறிந்தாள். சிகப்பாக ஈரமாகிப்போன விரல்களை அருவருப்பாக உதறினாள்.

    மார்பெல்லாம் சிகப்பு.

    போச். இருநூத்தம்பது ரூபா புடவை போச் சிரிப்புடன் வில்லன் நடிகரைப் பார்த்தாள் சிரிப்பா அது? நடுங்கியே போயிட்டேன்

    அவன் இளித்தான்.

    டைரக்டரிடம் வந்தாள். அடுத்த ஷாட் என்ன சார்?

    ஹீரோ வந்தாச்சு. முதலிரவு சீனை எடுத்திடலாமா?

    உங்க சினிமா கதையே ரொம்ப அக்கிரமம் சார். இப்பதானே செத்து விழுந்தேன். அடுத்த சீனே முதலிரவா? காஸ்ட்யூம் காரரை பார்த்தாள். டிரஸ்?

    ரெடியா எடுத்து வைச்சிட்டேம்மா.

    சாந்தி வாடி நடந்தபடி சொன்னாள். இந்த மை கறை போக அரைமணி நேரமாவது ஷவர்லே நனையணும்

    அதுக்காக வீட்டுக்கு போயிடாதேம்மா. உயரமும் பருமனுமான டைரக்டருக்கு இடுப்பில் வாய்வு பிடித்துக்கொண்டு விட்டது. எழுந்திருக்காமலே சொன்னார். லஞ்சுக்குள்ளே நாம முதலிரவை முடிச்சிடலாம்

    முதலிரவை முடிக்க போறீங்களா? அதுவும் லஞ்ச் டயத்துக்கு முன்னாடியேவா? நெஞ்சில் கைவைத்து போலியாக விழுந்தாள். இருங்க சார். இப்பவே வீட்டுக்கு போன் போட்டு மேடம்கிட்டே பேசறேன்

    ஐயய்யோ வேணாம் பேபி. விருட்சிக ராசி சனியனுக்கு சந்தேகம் அதிகம். அப்புறம் ராத்திரி பூராவும் சண்டை போடும்

    சிரித்தாள். வாடி சாந்தி

    நடந்தாள். ப்ளோரின் தரையில் கிடந்த ஒயர்களை கவனமாக தாண்டினாள். மரச்சட்டங்களை இடறாமல் பெரிய கதவை அடைந்தாள்.

    அந்த பெரிய கதவின் வயிற்றிலிருந்த சின்ன கதவு அவளை வெளியே பிரசவித்தது.

    பெஞ்சில் அமர்ந்திருந்த கும்பல் ஒன்று எழுந்து நின்று சேவித்தது. வணக்கம்மா.

    வணக்கம். வாங்க.

    அவர்கள் பின்தொடர அவசரமாக மேக்கப் அறையை நோக்கி நடந்தபோதுதான் அவசரமாக வந்து நின்றார் அந்த நபர்.

    லலிதா பாலிடிக்சிலே சேர்ந்துட்டாங்களே தெரியுமா?

    தெரியுமே. என்னைதான் யோசனை கேட்டாங்க; நானும் சரின்னு சொன்னேனா-அவங்க எந்த பார்ட்டிலே சேரட்டும் அதையும் நீயே சொல்லுடின்னாங்களா? நானும் சொன்னேனா? அதே பார்ட்டிலே சேர்ந்தாங்க. நீ சொன்னதனாலதான்டி சேர்ந்தேன். ரொம்ப தாங்க்ஸ்டி பவித்ரான்னு சொன்னாங்களா

    நிருபருக்கு சப்பென்று போயிற்று: கிண்டலா?

    பின்னே என்ன? அதெல்லாம் அவங்கவங்க தனிமனித விருப்பம். இதுக்கெல்லாம் எங்களை அபிப்ராயம் கேட்டா என்ன அர்த்தம்? சிண்டு முடிக்கிற வேலைதானே?

    புது தயாரிப்பு கும்பல் அக்கறையாக சிரித்ததும்,

    ரோஷம் வந்தது நிருபருக்கு பேசிக்கறேன் போய் விட்டார்.

    கையை உதறி விரலை கடித்தாள் எந்த பேப்பர்காரர்னு கேட்கல்லியே. ஏய்டி சாந்தி உனக்கு தெரியுமாடி?

    உதட்டை பிதுக்கி லேசாக தோளை உயர்த்தினாள் அந்த சாந்தி.

    பின்னால் திரும்பி உங்களுக்கு? என்றாள்.

    குள்ளமாக தொப்பையுடன் வெள்ளை குல்லா அணிந்திருந்த அந்த புராதன டைரக்டர் விழித்தார்.

    உயரமாக வளர்ந்து நெற்றி நிறைய விபூதியும் தொங்கு மீசையுமாக இருந்தவந்தான் தயாரிப்பாளர் போலிருக்கிறது. விழித்தார். தெரியலிங்களே.

    சரி விடுங்க நாளைக்கு எந்த பேப்பர்லே எனக்கு திமிர்னு செய்திவருதோ அதான் அவரு பத்திரிகை. மேக்கப் அறை வந்ததும் நின்றாள் கொஞ்ச நேரம் இப்படியே இருங்க டிரஸ் மாத்திட்டு அப்புறமா கூப்பிடறேன். இப்படி ரத்தக் காட்டேரியா ரொம்ப நேரம் நின்னா அப்புறம் உங்களுக்கு என்னமோ மாதிரி ஆயிடும்" அவர்கள் பதிலை எதிர்பாராமல் சாந்தியை இழுத்துக்கொண்டு உள்ளேபோய் கதவை அறைந்து சாத்தினாள்.

    ஏஸி அறை உறுமியது.

    சாந்தியை பார்த்து சிரித்தவாறு களைந்தாள். மிக சுலபமாக,

    ஒண்ணு செய். வீட்டுக்குக்காரை அனுப்பி அத்தையைச் சாப்பாட்டோட இங்கேயே வந்துடச் சொல்லு. இருக்கிற இருப்பிலே வீட்டுக்கு போறது கஷ்டமா இருக்கும்போல இருக்கு பசி வேற குடலை பிடுங்குதுடி.

    அந்த சாந்தி அவசரமாக எடுத்து நீட்டிய புரோட்டீன் பிஸ்கட்டுகளை கையைப் பிரயோகிக்காமல் வாயால் வாங்கி மென்றாள்.

    கண்ணால் கதவை காட்டி யாராம்? விசாரிச்சியா?

    புதுசு. என்னமோ செவண்ட்டி எம்.எம் படம் எடுக்கப் போறாங்களாம்.

    அது சரி. புடவையை கொசுவி கயிற்றில் செருகினாள். படம் முடியறச்சே சிக்ஸ்டீன் எம்.எம்லே வராம இருந்தா சரி."

    அந்த சாந்தி எடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1