Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ore Naal Kathai
Ore Naal Kathai
Ore Naal Kathai
Ebook168 pages1 hour

Ore Naal Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செல்வன், பிரபா ஆகிய இருவரும் ஸ்ரீமதி என்கிற பெண்ணின் கேஸை நடத்தி வருகின்றன. அந்த கேஸில் தோல்வியை சந்திக்கின்றன. அந்த இரவே ஸ்ரீமதி பெட்டியுடன் செல்வன் வீட்டிற்கு புறப்படுகிறாள். போகும் பொழுது மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். எதற்காக கொல்லப்படுகிறாள்? செல்வனுக்கும், ஸ்ரீமதிக்கும் இடையே என்ன உறவு? ஸ்ரீமதியின் கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதை விறுவிருப்பான நடையில் பார்ப்போம்!

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580152609602
Ore Naal Kathai

Read more from Rajendrakumar

Related to Ore Naal Kathai

Related ebooks

Related categories

Reviews for Ore Naal Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ore Naal Kathai - Rajendrakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரே நாள் கதை

    Ore Naal Kathai

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அறிமுகம் ஒன்று: ராம்

    எங்கோ தொலைவில் மழை பெய்து கொண்டிருக்க வேண்டும்.

    குளிரில் நனைந்த காற்று திறந்திருந்த ஜன்னல் வழியாக நுழைந்து வந்தது.

    கட்டிலில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த ராம் சிரித்தார். கண்களைத் திறந்து வெறிச்சென்று பார்த்தார்,

    மெதுவாகப் போர்வையை விலக்கிவிட்டு எழுந்தார். பதுமையாக நடந்து அடுத்த அறைக்குள்ளே போய் நின்றார். அவர் பார்வையில் வெறுமை இருந்தது.

    தெரு விளக்கின் ஒளியில் ஸ்டாண்ட் தெரிந்தது. கொஞ்சம் தொலைவில் எரிந்து அணைந்து கொண்டிருந்த அந்த நியான் சைன் விளம்பரம் உமிழ்ந்த சிவப்பு ஒளி அவர் முகத்தில் படர்ந்தது. மறைந்தது மீண்டும் படர்ந்து அணைந்தது.

    ஹாங்கரில் ஒழுங்காக மடித்துத் தொங்கிய காக்கி உடைகளைப் பார்த்தார்.

    மெதுவாக வயிற்றுக்கு உயர்ந்த அவரது கைகள் லுங்கியின் செருகலை விலக்கிவிட, சரிந்து விழுந்த லுங்கி காலைச் சுற்றி வட்டம் போட்டது.

    கையை நீட்டி ஹாங்கரிலிருந்த உடைகளைப் பறித்தார்.

    பாண்ட்டுக்குள் நுழைந்தார். சட்டையை மாட்டிக் கொண்டு பாண்ட்டினுள் செருகினார். வயதைக் குறைக்கும் ஒட்டிய வயிறும், சதை கெட்டித்துப் போன தோள்களும் ஒரு கம்பீரத்தை எடுத்துக்காட்டின.

    மேஜை மீது ஒழுங்காக மடித்துச் சுருட்டி வைத்திருந்த கனமான பெல்ட் ஒன்றை உருவி பாண்ட் லூப்களில் செருகிச் செருகி இழுத்துப் பூட்டினார்.

    மேஜை டிராவை இழுத்து உருவி எடுத்த பிஸ்டலை பெல்டின் தோல் பையினுள்ளே செருகினார்.

    ***

    அந்த மொச்சைக் குப்பத்தில் குழப்பம்.

    உதவி இன்ஸ்பெக்டரின் தலைமையில் போலீஸ் கும்பல் நுழைந்திருந்தது.

    குடிசைவாசிகளின் முகத்தில் கோபம் நிறைய இருந்தது.

    பத்து நிமிஷம், இன்னும் பத்தே நிமிஷம் டயம் தர்ரேன். அந்த ஸ்டீபனின் கம்பீரமான குரல் அமைதியைக் கிழித்தது. அதுக்குள்ளே தப்பி ஓடிவந்த ‘நண்டுப் பிடி’ சுந்தரத்தை வெளியே அனுப்பி எங்ககிட்டே ஒப்படைச்சுருங்க. இல்லே, ஒவ்வொரு குடிசையிலேயும் சோதனை போட்டு எல்லோரையும் அடிச்சு நொறுக்கிடுவோம்.

    அதே பத்து நிமிஷத்தை உங்களுக்கு நான் தர்ரேன். அந்தப் பேட்டை வாத்தியார் முத்து சொன்னான்: அதுக்குள்ளாறே போலீஸ் இந்தக் குப்பத்தைவிட்டு வெளியே போயிடணும், இல்லே, ஒவ்வொருத்தராச் சீவிடுவோம் சீவி.

    அலட்சியப்படுத்திய ஸ்டீபன் இடது கையை உயர்த்திக் கைக் கடியாரத்தைப் பார்த்தார்.

    மீண்டும் அமைதி அலறியது. மௌனம் முனகியது. வினாடிகள் விரைந்தன பயங்கரமாக.

    ***

    தொப்பியைத் தலையில் பொருத்தியதும் நெஞ்சை நிமிர்த்தி நின்றதும், ராம் இன்ஸ்பெக்டர் ராமாக மாறி இருந்தார். கம்பீரமாக நடந்து அறையை விட்டு வெளியே வந்தார்.

    கூண்டுக்குள் இருந்த கிளி ‘ராம்’ என்றது கூச்சலாக. அலட்சியப்படுத்தி அவர் நடந்தது கிளிக்கு ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் ‘ராம்’ என்றது ஏமாற்றமாக நடந்தார்.

    வாசலுக்கு அருகே சுவரில் பொதித்திருந்த பெரிய அளவு மரச்சாவி ஸ்டாண்டிலிருந்து, சாவிக் கொத்தைப் போகிற போக்கில் கெந்தி எடுத்தார்.

    படி இறங்கி வந்து ஷெட் கதவைத் திறந்து உள்ளே போனார். அமைதியாக நின்ற மோட்டார் பைக் மீது வலது காலை வீசி அமர்ந்த அதே வேகத்தில் உதைத்தார்.

    வீறுகொண்டு சீறியது மோட்டார் பைக். சட்டென்று விளக்கு ஒளியை உமிழ்ந்து தானாகச் சாத்திக் கொண்டிருந்த மரக்கதவின் மீது ஒளி நிரப்பியது.

    கியரை மாற்றியதும், சீறிப் பாய்ந்து முன்னேறிக் கதவை முட்டி திறந்து வெளியேறிப் பாய்ந்தது. மேடேறிச் சாலையை அடைந்ததும் திரும்பிக் காற்றாகப் பறக்க ஆரம்பித்தது.

    இருட்டான சூழ்நிலையில், பீரோவிலிருந்து பணத்தையும், நகைகளையும் மூட்டை கட்டிய அந்தத் திருடன் கிளம்பத் திரும்பிய வேகம் பீங்கான் பூந்தொட்டி சரிந்து விழுந்து பெரும் ஓசை எழுப்பியது.

    பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அந்தத் தம்பதிகள் அவசரமாக எழுந்து ஹாலுக்கு வந்து விளக்குப் போட்டு - அவன் ஜன்னலை நோக்கி ஓடுவதை உணர்ந்து. கத்தினார்கள். அந்த அலறலின் பாதிப்பு அக்கம் பக்கத்து வீடுகளில் சரேல் சரேல் என்று விளக்குகள் எரியத் துவங்கின.

    சாலை விளக்குகள் கூட இல்லாத நிலையில் இருட்டை நம்பித் தெருவுக்கு வந்துவிட்ட அந்தத் திருடன் திடீர் வெளிச்சத்தில் திணறிப்போனான்:

    தெருவுக்கு வந்தவர்கள் வியூகமாகச் சுற்றி நின்று நெருங்க, பையிலிருந்த கத்தியை எடுத்துப் பித்தானைத் தட்டியதும் டக் என்ற சின்ன ஓசையுடன் நீட்டிக் கொண்டது அந்த அரையடிக் கத்தி.

    ஜாக்கிரதை, எவன் நெருங்கினாலும் ஒரே குத்து. குடலை உருவிடுவேன். கத்தியை அசைத்தான். உம், நகருங்க. வழியை விடுங்க.

    தயக்கமும் பயமுமாகக் கூட்டம் விலகி வழி விடும் போது ஓடத் துவங்கிய அந்தத் திருடன் கூட்டத்தைக் கடந்து ஓடும்போது, செய்வதறியாமல் கூட்டம் திணறும் போதுதான் அந்த ஓசை கேட்டது. மோட்டார் பைக் ஓசை.

    இன்ஸ்பெக்டர் ராம்! திரும்பிப் பார்த்து உணர்ந்த கூட்டத்துக்கு நிம்மதி வந்தது. கத்தினார்கள். திருடன்! திருடன்.

    அவர்கள் விலகி விலகி வழிவிட, சீறிப் பாய்ந்து போயிற்று மோட்டார் பைக்.

    திரும்பித் திரும்பிப் பார்த்துத் திகைப்பும், பீதியுமாகத் தலைதெறிக்க ஓடத் துவங்கிய அந்தத் திருடனை மோதித்தூக்கி எறிந்தது மோட்டார் பைக், மேலே மேலே பறந்து மதில் சுவரில் மோதி சரிந்து பெரும் அலறலுடன் மயங்கி விழுந்த திருடனை அலட்சியம் செய்து அவனைப் பிடிக்க வந்த கும்பலைத் தவிர்த்து மோட்டார் பைக் பறந்து போயிற்று வேகமாக.

    ***

    அந்த ஸ்டீபன், வாட்ச் இருந்த கையை இறக்கிய அழுத்தமே ‘பத்து நிமிடம் முடிந்தது’ என்றது. உருவிய துப்பாக்கியுடன் மார்ச், என்று ஆணையிட்டதும், பெரிய பெரிய கேடயங்களுடன் போலீசார் முன்னேறி குடிசைப் பெண்கள் அலறினார்கள். குழந்தைகள் கதறியவாறு சிதறி ஓடினார்கள்.

    என்னடா பார்த்துட்டு நிக்கறீங்க! விடாதீங்க. எவன் எப்படி எந்தக் குடிசையிலே நுழையறான்னு பார்த்துடுவோம். டா...ய்...ய்... என்று வாத்தியார் பெரிதாகக் கூச்சலிட சைக்கிள் செயினும், கத்தியும் இரும்புக் கம்பிகளுமாக முன்னேறியவர்களின் பார்வையில் பட்டது அந்த மோட்டார் பைக்.

    கூட்டத்தைப் பிளந்து பிளந்து முன்னேறி வந்ததையும், அதன் மீதிருந்த உருவத்தையும் கண்டதும் அந்த வாத்தியார் முகத்திலேயே பீதி வந்தது. இவுரு எங்கேடா வராரு... மேலும் முன்னேற முயன்றவர்களைத் தடுத்தான். இருங்கடா.

    கம்பீரமாக இறங்கிய இன்ஸ்பெக்டர் ராம் ஸ்டீபனின் சல்யூட்டையும் ஏற்காமல் அதிர அதிர நடந்து முன்னேறினார். சேரி ஆட்கள் தயக்கமாக விலகி வழிவிட ஒரு குடிசையினுள்ளே நுழைந்து மறைந்தார்.

    மறு நிமிடம்,

    சூழ்நிலையின் பயங்கர அமைதியை கிழித்துக் கலவரமான ஓசைகள் குடிசையினுள் எழுந்து தள்ளப்பட்டு வெளியே வந்து புழுதியில் விழுந்த அந்த ‘நண்டுப் பிடி’ சுந்தரம் துடித்துப் போனான்.

    வெளியே வந்த ராம் அவனைக் கோழிக் குஞ்சைத் தூக்குவது போல் சட்டையின் பின்புறம் பிடித்துத் தூக்கி எடுத்து நடந்து ஸ்டீபனிடம் தள்ளினார்.

    போலீஸ் வேனில் அவனைத் தள்ளிக் கதவை அறைந்து சாத்திப் பூட்டியதும் மோட்டார் பைக்கில் அலட்சியமாக ஏறி அமர்ந்து உதைத்தார். ஜீப் நகர்ந்தது. வழிவிட அரை வட்டம் போட்டுத் திருப்பினார். சீறவிட்டு முன்னேறினார்.

    திறந்தே இருந்த ஷெட்டினுள் ஒளியும் ஆர்ப்பாட்டமான ஓசையுமாக அவர் மோட்டார் பைக் நுழைந்ததும்,

    புதிதாகக் குட்டிகளைப் பிரசவித்திருந்த களைப்பும் கோபமுமாக சீறியது அந்தப் பூனை.

    அலட்சியப்படுத்தி இறங்கினார். வெளியேறி ஷெட்டைப் பூட்டினார்.

    படி ஏறி வீட்டைத் திறந்து உள்ளே போனார்.

    ‘ராம்’ என்றது கிளி.

    அறையில் நுழைந்து லுங்கிக்கு மாறினார்.

    கட்டிலில் சரிந்து சாய்ந்து போர்வையில் போர்த்துக் கொண்டார்.

    ***

    அறிமுகம் இரண்டு: செல்வன்

    ராத்திரி பனிரண்டு மணிக்கு கா... ப்பி முனுமுணுப்புடன் வலை பீரோவைத் திறந்தாள் சித்ரா. காப்பிப் பவுடர் டப்பாவை உருவிய அதே வேகத்தில் திறந்தவாறு நடந்தாள்.

    வெளியே செல்வனும், அவன் ஜூனியர் பிரபா என வழங்கப்படும் பிரபாகரனும் இந்தியன் பீனல் கோடை அலசுவது கேட்டவாறு இருந்தது.

    கியாஸ் அடுப்பின் நீல நிற ஒளியில் பாத்திரத்து நீர் ஆவிபரப்பிக் கொண்டிருந்தது.

    பவுடரை ஸ்பூனினால் அள்ளி அள்ளிப் போட்டாள்.

    ராத்திரி பூரா அரட்டை. தூக்கம் வராம இருக்க இரண்டு மணிக்கு ஒரு தரம் சூடாகக் காப்பி அதுவும் நான் போட்டுத் தரணும். வடிகட்டினாள். மூக்கை மெலிதாக உறிஞ்சிக் கொண்டாள். இதுக்கேன் கல்யாணம் பண்ணிக்கணும்? பேசாம ஒரு சமையக்காரக் கிழவியை வெச்சிக்கறது... வடிகட்டுவது நின்றது கொஞ்சமாக விழித்தாள் வச்சிக்கறதா? அதுவும் கிழவியையா! ச்சீய்! என்ன உளர்றேன் நான்?

    பாலைக் கலந்து, சர்க்கரை டப்பாவைத் திறந்தாள். மெலிதாகத் திரும்பிப் பார்த்துக் கறுவினாள். இன்னொரு தரம் காப்பி கேளுங்க சர்க்கரைக்குப் பதிலா உப்பை அள்ளிக் கொட்டிடறேன். கலந்தாள். மூன்று கோப்பைகளில் நிரப்பி ட்ரேயில் எடுத்து வைத்தாள். யாரைக்கட்டினாலும் வக்கீலை மட்டும் கட்டக் கூடாதுடியம்மா... ரோதனை டிரேயுடன் அவள் ஹாலுக்கு வரும்போது செல்வன் எதிரே வந்தான் நின்றாள். பிரபாவுக்குக் கொடு பாத்ரூம் போயிட்டு வரேன்." உடனே மறைந்தான்.

    டிரேயும் கையுமாக நின்று முறைக்கும் அவளைப் பார்த்துச் சங்கடமாக நெளிந்தான் பிரபா. உம் என்று அவள் நீட்டியதும், அவசரமாக ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டான்.

    உட்கார்ந்து கொண்டாள். கல்யாணமாயிடுச்சுல்லே?

    உங்க மேரேஜ் ரிசப்ஷனிலேயே மனைவியை அறிமுகப்படுத்தினனே!

    அலட்சியப்படுத்தினாள்

    Enjoying the preview?
    Page 1 of 1