Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Police Vesham
Police Vesham
Police Vesham
Ebook91 pages21 minutes

Police Vesham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒருவன் போலீஸ் வேஷம் போட்டு சுத்திக்கொண்டிருக்கிறான். அவன் யார்? எதற்காக வேஷம் போடுகின்றான்? இதனால் அவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என்ன நடந்தது? என்பதையும் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580100609607
Police Vesham

Read more from Devibala

Related to Police Vesham

Related ebooks

Related categories

Reviews for Police Vesham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Police Vesham - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    போலீஸ் வேஷம்

    Police Vesham

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ‘தன் ஸ்கூட்டரை அந்த பேங்க் வாசலில் நிறுத்திவிட்டு இறங்கினான் அவன். கையில் அந்த சுமால் சைஸ் பெட்டி இருந்தது. காலை நேரம் பத்தரை மணி. மாதத்தின் முதல் வாரம் வேறு. பரபரப்பாக இருந்தது பேங்க். அவன் பார்ப்பதற்கு கண்ணியமாக இருந்தான். ஸபாரி அணிந்திருந்தான். கண்ணுக்கு இளம் பழுப்பு டின்டட் க்ளாஸ் அணிந்திருந்தான். மெலிதான மீசை, சமீபத்தில் தமிழ்சினிமாவில் பார்த்த ஒரு புது ஹீரோ போலத் தோற்றம்.

    நேராக மானேஜர் இருந்த அறைக்குச் சென்றான்.

    மானேஜருடன் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

    இவன் சுவாதீனமாக உள்ளே நுழைந்து, அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

    அந்தக் கஸ்டமரை அனுப்பிவிட்டு இவனைப் பார்த்தார் மானேஜர். வாங்க சார்!

    முகேஷ் அண்ட் கம்பெனி கேஷியர் நான். இன்னிக்கு வொர்க்கர்ஸ் பேமெண்ட். கேஷ் ட்ரா பண்ண வந்தேன்!

    செக் குடுங்க! பெட்டியை மேசை மேல் வைத்தான், திறந்தான். உள்ளேயிருந்து அந்த ரிவால்வரை நிதானமாக எடுத்தான். பெட்டியை மூடிவிட்டு, மானேஜரின் நெஞ்சுக்குக் குறி வைத்தான். அவர் மிரண்டு போனார்.

    சின்னக் குரலில், உடனடியா உன் கேஷியருக்குச் சொல்லி, அஞ்சுலட்ச ரூபாய் பணத்தை இங்கே எடுத்துட்டு வரச் சொல்லு!

    அ... அது வந்து...!

    லுக்! நான் அவகாசமே தராம சுடற ஆசாமி. சாகணுமா நீ?

    வே... வேண்டாம்!

    மானேஜரின் அறை சுற்றிலும் கண்ணாடி போர்த்தி, அதிலிருந்து பார்க்க வங்கியின் இயக்கம் மொத்தமும் தெரிந்தது. இவன் பெட்டியைத் திறந்த நிலையில் ஒரு மாதிரி ஒருக்களித்து உட்கார்ந்திருக்க, அவர் நெஞ்சுக்கு இவன் குறிவைத்த நிலையை யாராலும் பார்க்க முடியாத நிலைமை.

    சேஃப்டி காட்சை ப்ளக் என விடுவித்தான். மானேஜர் மிரண்டு போனார். கம்மான்! சீக்கிரம் கேஷியருக்குத் தகவல் குடு!

    அவர் நெளிந்தார். என்னைத் தாக்கவோ, உன்புத்தி சாதுர்யத்தை உபயோகப்படுத்தவோ நீ நினைச்சா, நிச்சயம் இது உன் கடைசி நிமிஷங்களா இருக்கும்!

    மானேஜர் பெல் அடித்தார். ப்யுன் வந்தான்.

    கேஷியரை வரச் சொல்லு உடனடியா! ப்யுன் விலகிப்போனான்.

    மானேஜருக்கு உயிர் பயம் அதிகமாக இருந்தது. ஏதாவது செய்யப் போய் இவன் சட்டென சுட்டுவிட்டால், நம் உயிர்போனது போனதுதான். இப்போது வன்முறை காலம்! வெறும் பாவ்லா காட்டுவதில்லை முன்பு போல. சுட நினைத்தால் சுட்டுவிடுவார்கள்.

    ‘உயிர் வெல்லமல்லவா?’

    கேஷியர் கேபினைப் பூட்டிக் கொண்டு வந்தார்.

    என்ன சார்?

    முகேஷ் அண்ட் கம்பெனிலேருந்து செக் வந்திருக்கு. தொகை அஞ்சு லட்சம். கேஷை இங்கே கொண்டு வந்துடுங்க!

    சார் அவங்க கவுண்டருக்கு...!

    வேண்டாம். பாருங்க! பெரிய ஒரு க்யூவே நிக்குது. இவருக்கு நேரமில்லை!

    சரி சார்! செக் குடுங்க!

    நான் பாஸ் பண்ணிக்கறேன்!

    கேஷியர் விலகினார். ப்யுனை அழைத்தார் மானேஜர். யாரும் இப்ப வர வேண்டாம்!

    சரி சார்!

    அவன் சிரித்தான். வெல்டன் மானேஜர் பணம் என் கைக்கு வந்து நான் இங்கிருந்து போற வரைக்கும் இந்த புத்திசாலித்தனம் தொடரட்டும்!

    மானேஜர் உதறிக் கொண்டிருந்தார்!

    இது ஒரு பகிரங்க பகல் கொள்ளை!

    ‘உயிருக்கு பயந்து நானே ஒத்துழைக்கிறேன்!’

    இதன் பின் விளைவு என்னவோ?

    கேஷியர் பணத்தோடு வந்தார். அது ஒரு தனியார் வங்கி வேண்டப்பட்ட கஸ்டமர்களுக்கு இதுபோல சேவை செய்து நிறைய பிஸினஸ் பிடிப்பார் மானேஜர். அதனால் காஷியருக்குக்கூட இது தவறாகப்படவில்லை.

    கேஷியர், மானேஜரிடமிருந்து ஒரு கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு விலகினார், தன் பாதுகாப்புக்காக.

    எல்லாம் நூறு ரூபாய் கட்டுக்கள் ஐம்பது கட்டுகள்.

    பெட்டிக்குள் மானேஜரைவிட்டே அடுக்கச் சொன்னான் அவன். மானேஜர் நடுங்கிய படி அடுக்கினார். மூடினார்.

    குட்! நான் இந்தக் கதவைத் தாண்டின உடனே நீ சத்தம் போட்டுக்கலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை!

    சொல்லிவிட்டு சிரித்தபடி, மூடிய பெட்டியுடன் எழுந்தான். இப்போதுகூட ரிவால்வர் மானேஜர் நெஞ்சுக்கு நேராகத்தான் இருந்தது. மரணத்தின் நுழைவாசலிலிருந்து அவர் மீளவில்லை.

    பக்கவாட்டில் மெல்ல மெல்ல நடந்து வாசல் கதவுக்கு வந்துவிட்டான் அவன். சட்டென மோதிக் கொண்டான்.

    நிமிர்ந்தான். அந்த போலீஸ் அதிகாரி.

    துணிந்து மேனேஜர் அலறிவிட்டார். திருடன்! திருடன்!

    அவன் போலீஸ் அதிகாரிக்கு தன்

    Enjoying the preview?
    Page 1 of 1