Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Rokkam Naalai Kolai
Indru Rokkam Naalai Kolai
Indru Rokkam Naalai Kolai
Ebook334 pages1 hour

Indru Rokkam Naalai Kolai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திகில் கதையானாலும் சரி, தித்திப்பான கதையானாலும் சரி, திரு.என்.சி. மோகன்தாஸ் தனக்கு என ஒரு பிரத்யேக எலக்ட்ரிக் கடை வைத்திருக்கிறார். இன்றைய இளைஞர்கள் அவருடைய கதைகளால் வசீகரிக்கப்பட்டிருப்பது அதனாலேயே சாத்தியமாகிறது. மழைத் துளியில் பாயும் சூரியனின் ஒளி ஏழு நிறங்களாக விரிவதுபோல எந்தக் கருவிலும் என்.சி.எம்.மின் பார்வை நுழைகிறபோது வித்தியாசமான பல கோணங்கள் மிளிர்கின்றன.

என்ன தான் சஸ்பென்சும், திரில்லும், விறுவிறுப்பும் தந்தாலும், ஆரம்பித்தால் கதையை முடிக்காமல் புத்தகத்தை மூடுவதில்லை என்றாலும் கூட கிரைம் கதைகள் என்றாலே எல்லோருக்கும் தொக்கு தான். அவை இலக்கியத்திற்கு விரோதிகளாகவே கருதப்படுகின்றன.

அதற்காக மெஜாரிட்டி வாசகர்களின் விருப்பத்தை எப்படி ஒதுக்க முடியும்? கிரைம் கதைகள் படைக்க அலாதி மூளை வேண்டும் என்பார்கள். கற்பனை வளம் வேண்டும். சஸ்பென்ஸ் தந்தாக வேண்டும்!

இன்றைய வாசகர்கள் புத்திசாலிகள் பாதி படிக்கும் போதே கொலையாளியைக் கண்டுபிடித்து விடத் துடிப்பவர்கள். அவர்களையும் ஏமாற்றி, அவர்கள் எதிர்பார்க்காத யாரையாவது கோடிட்டுக்காட்ட வேண்டும். அந்த சஸ்பென்சும், திரில்லும், விறுவிறுப்பாக வாசிக்கலாமா...

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580132407026
Indru Rokkam Naalai Kolai

Read more from Nc. Mohandoss

Related to Indru Rokkam Naalai Kolai

Related ebooks

Related categories

Reviews for Indru Rokkam Naalai Kolai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Rokkam Naalai Kolai - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    இன்று ரொக்கம் நாளை கொலை

    Indru Rokkam Naalai Kolai

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    1. தூண்டில்

    2. இளம் எஸ் ஐ.

    3. இன்று ரொக்கம் நாளை கொலை

    4. இன்று மட்டும் நீ உயிரோடு...

    5.ஒரு பரீட்சை ஒரு காஸெட் ஒரு கொலை

    6. விளம்பரம்

    7. முதல் இரவு

    8. ஆகையால் கொலை செய்தேன்!

    9. அதோ... அந்த உருவம்!

    10. தாமரைக் குளம்

    11. என் அருமை சுகந்திக்கு

    12. இரகசியம்

    13. மாணவி

    14. மாண்புமிகு செகரட்டரி!

    15. இன்று ஒன்று சேர்வோம்

    16. வாக்கு மூலம்

    17. தடயம்

    18. உன் உயிர் என்னோடு

    19. கல்யாணக் கனவு

    20. உன் உயிர் என் கையில்

    21. கடைசி முழுக்கு

    22. ஊத்து திராவகத்தை

    23. அது ஒரு டெக்னிக்

    வாழ்த்துரை

    திகில் கதையானாலும் சரி, தித்திப்பான கதையானாலும் சரி, திரு.என்.சி. மோகன்தாஸ் தனக்கு என ஒரு பிரத்யேக எலக்ட்ரிக் கடை வைத்திருக்கிறார். இன்றைய இளைஞர்கள் அவருடைய கதைகளால் வசீகரிக்கப்பட்டிருப்பது அதனாலேயே சாத்தியமாகிறது. மழைத் துளியில் பாயும் சூரியனின் ஒளி ஏழு நிறங்களாக விரிவதுபோல எந்தக் கருவிலும் என்.சி.எம்.மின் பார்வை நுழைகிறபோது வித்தியாசமான பல கோணங்கள் மிளிர்கின்றன.

    அவர் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    -சுபா.

    என்னுரை

    என்ன தான் சஸ்பென்சும், திரில்லும், விறுவிறுப்பும் தந்தாலும், ஆரம்பித்தால் கதையை முடிக்காமல் புத்தகத்தை மூடுவதில்லை என்றாலும் கூட கிரைம் கதைகள் என்றாலே எல்லோருக்கும் தொக்கு தான். அவை இலக்கியத்திற்கு விரோதிகளாகவே கருதப்படுகின்றன.

    அதற்காக மெஜாரிட்டி வாசகர்களின் விருப்பத்தை எப்படி ஒதுக்க முடியும்? கிரைம் கதைகள் படைக்க அலாதி மூளை வேண்டும் என்பார்கள். கற்பனை வளம் வேண்டும். சஸ்பென்ஸ் தந்தாக வேண்டும்!

    இன்றைய வாசகர்கள் புத்திசாலிகள் பாதி படிக்கும் போதே கொலையாளியைக் கண்டுபிடித்து விடத் துடிப்பவர்கள். அவர்களையும் ஏமாற்றி, அவர்கள் எதிர்பார்க்காத யாரையாவது கோடிட்டுக்காட்ட வேண்டும். அதற்குத் தகுந்த காரணங்களும் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் விமர்சனங்களிலிருந்து தப்ப முடியாது.

    நாவல் என்றால் நிறையக் கதாபாத்திரங்களைப் புகுத்திக் 'கண்ணாமூச்சி' காட்டலாம். சிறுகதைகளில் அது முடியாது. இங்கே வட்டம் சிறிது.

    நான்கு பக்கங்களுக்கு மேல் நீண்டால் வார இதழ்கள் அலறும். கண்டபடி கத்தரிக்கோல் போடும். அந்த நான்கு பக்கங்களுக்குள் கரணம் போட்டாக வேண்டும்! பக்கக் கட்டுப்பாட்டில் சமயத்தில் அவசர அவசரமாய் முடிக்க வேண்டிவரும்.

    கிரைம் என்றாலும் கூட என்னால் அதிரடி கிரைம்கள் படைக்க முடியும் என்று தோன்றவில்லை. சமுதாயக் கண்ணோட்டத்தில் அல்லது குடும்பச் சூழலில் படைத்து இருப்பதை உணர முடிகிறது.

    சங்கர்லால் போல் கணேஷ் வசந்த் போல் ஏன் நீங்களும் துப்பறிவாளர்களை உருவாக்கக் கூடாது என்று பலரும் கேட்கிறார்கள்.

    இன்று நாட்டில் மலிவாகக் கிடைக்கிற லிஸ்டில் துப்பறிவாளர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சங்கர்லாலையும், கணேஷ் வசந்த்தையும் பார்த்துச் சூடு போட்டுக் கொள்பவர்களின் பட்டியலில் நானும் சேர விரும்பமில்லை. எத்தனை துப்பறிவாளர்கள் கிளம்பினாலும் அவர்களை நெருங்கக்கூட முடியவில்லை என்பதே நடைமுறை உண்மை.

    அன்புடன்,

    என்.சி. மோகன்தாஸ்.

    1. தூண்டில்

    ராம்மோகனுக்கு கடிகாரம் என்றாலே வெறுப்பு. அது எத்தனை சீக்கிரம் சீக்கிரமாய் ஓடுகிறது!.

    எவ்வளவு தான் முயற்சி பண்ணி கிளம்பினாலும்கூட டயத்திற்கு அலுவலகம் போக முடிவதில்லை.

    ஷர்ட்டை இன்பண்ணி, பேன்ட் பெல்ட்டைப் போட்டான். டை கட்டினான் ஷூ மாட்டிக் கொண்டு, லியா! என்று கத்தினான் நேரமாச்சு!

    இதோ வந்திட்டேன் என்று வந்தாள் லியா. அவள் கவுனின் கழுத்து பகுதியில் வியர்த்திருந்தாள். காபியை நீட்டினாள். கவர்ச்சியாயிருந்தாள்.

    நன்றாய் ஆற்றினாயா...?

    ஆறிப்போயிருக்கு பாருங்க!

    வியர்க்கும்னு சொன்னாலும் கேட்கமாட்டேன்கிறாய் கொடு!

    குடித்து விட்டு கார் சாவியை எடுத்த போது ஏங்க! என்றாள்.

    எதற்கோ அடி போடுகிறாள் என்று புரிந்து போயிற்று அவனுக்கு. என்ன...? என்றான் வெறுப்பாய்,

    இந்த வி.சி ஆரை சரிபண்ணக் கொடுத்து எத்தனை நாளாச்சு... இன்னுமா ரிப்பேர் பண்றான்...?

    ராம்மோகன் அதைக் கேட்டும் கேட்காதது போல காரை நோக்கி நடந்தான்.

    ஏங்க! நான் பாட்டிற்கு சொல்லிகிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா...

    லியா! என் நேரத்தை பாழ்படுத்தாதே! ஏற்கெனவே நான் ஆபீஸ் விஷயமா டென்ஷனிலிருக்கேன்!

    உங்களுக்கு டென்ஷன்! எனக்கு பொழுது போக மாட்டேன்கிறது எத்தனை நேரம்தான் நாலு சுவத்துக்குள்ளே அடைஞ்சு கிடக்கிறது...!

    எப்போ பார் இந்த வி.சி.ஆர். ரிப்பேர்! இந்த மாசத்திலேயே இதோட நாலு தடவை!

    அதுக்கென்ன பண்றது. எவனோ உங்களை ஏமாத்திட்டான். ஃபாரின் செட்டுன்னு சொல்லி டெல்லி செட்டை உங்க தலையில் கட்டிவிட்டான்!.

    அவன் காரில் ஏறி அமர்ந்ததும், ப்ளீஸ்... என்றாள்.

    எனக்கு டயமில்லை லியா!

    அப்போ நான் போய் வாங்கி வந்திரட்டா...?

    என்னவோ செய்! என்று காரைக் கிளப்பினான்.

    சே! என்றான். இந்த வி.சி.ஆர் வாங்கினதும் போதும்! ஒரே தலைவலி! நாலு கேசட் எடுத்தோம். நல்ல படியாய் போட்டு பார்த்தோம் என்று உண்டா...? குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள்! அல்லது ஷேடுகள்! அதுவும் இல்லை என்றால் சௌண்ட் பிரச்னை. வீடியோ ஆசையே அவனுக்குப் போய்விட்டது.

    ஒவ்வொரு முறை ரிப்பேருக்கு அனுப்பும்போதும் நூறு இருநூறு என்று கறந்து விடுகிறான்! கேட்டால் 'பண்ணை செட் சார் நான் என்ன பண்ண...?' என்கிறான்.

    பன்னிரண்டாயிரம் போட்டு வாங்கியிருக்கிறோம், பண்ணை செட்டாம்! இம்முறை என்னவானாலும் சரி, அவனுக்கு பணம் தரப்போவதில்லை.

    கடைவீதியில் நுழைந்ததும் அவனுக்குள் ஒரு உந்துதல், இந்தப் பக்கம் தானே அந்த வி.சி.ஆர். கடை இருக்கிறது... ஒரு நிமிடம் இறங்கி பார்த்து விட்டுப் போனால் என்ன...?

    இவன் பாட்டிற்கு லியாவை ஏமாற்றி பணம் கறந்து விடப் போகிறான்! செட் ரெடியாக இருந்தால் கையோடு நாமே வாங்கிப் போய்விடலாம். லியாவிற்கு போனில் விவரம் தெரிவித்தால் போதுமே...!

    காரை பார்க் பண்ணி விட்டு இறங்கினான்.

    'ஜெயச்சந்திரன் சேல்ஸ் அண்ட் சர்வீஸிங் சென்டர்' என பளபளப்பாய் போர்டு மாட்டியிருந்த கடைக்குள் நுழைந்தான்.

    அதனுள் வின்சென்ட் பாபு அவன் தான் கடையின் உரிமையாளன் டீஷர்ட் ஜீன்சுடன் ஒரு வி.சி.ஆரை இயக்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் வீடியோகானின் டி.வி. திரையில் பிம்பம் ஓடிக் கொண்டிருந்தது.

    இவனைக் கண்டதும், ஹலோ சார்! வாங்க! இதோ உங்க செட்டைதான டிரையல் பார்த்துகிட்டிருக்கேன்!

    நாற்காலி எடுத்துப் போட்டான்.

    பரவாயில்லை செட் ரெடியாச்சா... கொண்டு போகலாமா...?

    இல்லை சார். ஒரு அரைமணி நேர வேலை பாக்கி இருக்கு.

    அதான் நல்லா ஒர்க் பண்ணுது போலிருக்கே...!

    நோ... நோ! இன்னும் வேலை முடியலே. இப்போ டிரையல் தான் பார்க்கறேன். அரை மணி நேரம் வெயிட் பண்ண முடியுமா...?

    அரைமணி நேரமா?... ஐயோ! என்றான்.

    மானேஜரா இருந்துகிட்டு நானே லேட்டாப் போனால் மத்தவங்களை எப்படிக் கண்டிக்க முடியும்...?

    அப்போ கவலைப்படாம ஆபீஸ் போங்க. நான் போய் வீட்டில் கொடுத்து விடுகிறேன்.

    வேண்டாம். என் மிஸஸே இங்கு வருவா. சரி பண்ணிக் கொடுத்திருங்க.

    ரொம்ப நல்லதாப் போச்சு!

    பை-தி-பை சர்வீஸிங்கிற்குன்னு இம்முறை நயா பைசா தரமாட்டேன்!

    நான் கேட்கலியே!

    ராம்மோகன், பிரச்னை தீர்ந்தது என்று காரில் ஏறி கிளப்பினான்.

    அலுவலகத்தில் நுழைந்ததும் ராம்மோகனுக்கு மீண்டும் பழைய டென்ஷன் தொற்றிக் கொண்டது.

    அவன் தன் அறைக்குள் சென்று ஏ.சி.யை தட்டி விட்டான். சுவரில் மாட்டியிருந்த தகப்பனாரின் படத்தைத் தொட்டுக் கும்பிட்டான்.

    அப்போது கதவைத் திறந்து கொண்டு ஸ்டெனோ வர.

    இப்போ உன்னை அழைத்தேனா...? ரூமிற்குள் வரும்போது கதவை தட்டிவிட்டு வரவேண்டும் என்கிற சாமான்ய மரியாதைகூடத் தெரியாதா உனக்கு...?

    எரிந்து விழுந்தான்.

    அழகின் உருவமாயிருந்த அவளின் முகம் சட்டென்று வாடிப் போயிற்று. கதவை மூடிவிட்டு வெளியே ஒதுங்கினாள்.

    அவள் ஆரஞ்சு நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். அதே கலர் ப்ளவுஸ், பிராவையும் அதனுள் அடங்கியிருந்தவற்றையும் மெல்லிசாய் வெளியே காட்டிக் கொண்டிருந்தது.

    கண்களில் மைதீட்டி, தலைக்கு ஒருமணி நேரம் செல வழித்து பின்னியிருந்தாள். லிப்ஸ்டிக்! காதருகில் ரோஜா!.

    அத்தனை அலங்காரங்கள் இருந்தும்கூட அவளுடைய முகவாட்டத்தை அப்பட்டமாய் பிரதிபலித்தது.

    மானேஜருக்கு இன்று என்னாயிற்று... ஏன் கடுப்படிக்கிறார்...? இன்று விழித்த வழியே சரியில்லை. முதல் தரிசனமே இப்படி... இன்னும் போகப் போக எப்படியோ...?

    மே ஐ கமின் சார்

    எஸ், கமின்!

    மெல்ல உள்ளே பிரவேசித்தாள்.

    குட்மார்னிங் சார்!

    சாரி. லேட்டான டென்ஷன்ல நான்...

    தடஸ் ஓகே சார்!

    இன்று என்னென்ன ப்ரோகிராம்கள்...?

    அவள் லிஸ்ட்டை படிக்கப் போக, இரு! இரு! ஆபீஸ்ல எல்லோரும் வந்து விட்டார்களா...? ரெஜிஸ்தர் எங்கே...?

    எடுத்து வந்து கொடுத்தாள்.

    புரட்டினான். குட். மெயில் வந்திருச்சா...?

    இதோ என்று கட்டை நீட்டினாள்.

    வாங்கிக் கொண்டு, ப்ரோகிராமைப் படி.

    பதினோரு மணிக்கு கோபாலன் அன்ட் கோபாலன் கம்பெனி ரெப்ரசென்டேடிவ் வராங்க சார். பன்னிரண்டுக்கு கான்ட்ராக்டர் பீட்டர் விமல் குமாரோட அப்பாயிண்ட்மெண்ட். ஒரு மணிக்கு உங்களோட ஃபிரண்ட் வேலு வரார். அவரோட ஹோட்டல் ஆபாத் பிளாசாவில் லஞ்சு அப்புறம்...

    போதும். மீதியை அப்புறம் பார்க்கலாம். என்று அவன் நிமிர்ந்து பார்க்க, புரிந்து கொண்டு வெளியேறினாள்.

    ராம்மோகன் போனைச் சுற்றினான். ஹலோ... லியாவா...

    ஆமாம் யாரது?

    யாரா...? உன்னைக் கட்டினவன்டி!"

    ஸாரி... சட்டுன்னு குரல் தெரியலீங்க!

    ஸாரியெல்லாம் இருக்கட்டும் நான் வி.சி.ஆரைப் போய் பார்த்தேன். இன்னும் அரைமணி நேரத்தில் சரி பண்ணிடறேன்னான். நான் ஆபீஸ்விட்டு வரும்போது வாங்கி வரட்டா...?

    ஆபீஸ் விட்டா... ஐயோ அதுவரை நான் என்ன பண்றது...? நான் போய் அதையும் வாங்கிட்டு அப்படியே காஸெட் லைப்ரரியிலே காஸெட்களும் செலக்ட் பண்ணிட்டு வந்திடறேனே...!

    உனக்கு சிரமமாயிருக்கும்னு நினைச்சேன்.

    எனக்கென்ன சிரமம்... இதோ நான் ரெடியாயிட்டேன்... அப்புறம்... இருங்க, வச்சிராதீங்க, மதியம் வீட்டுக்கு சாப்பிட வரீங்களா...

    அதான் முன்னாடியே சொல்லியிருந்தேனே. ஃபிரண்டு வேலு ரொம்ப நாட்களுக்கு பிறகு பாண்டிச்சேரியிலிருந்து வரான். அவனோட சேர்ந்து லஞ்சுன்னு. வச்சிரவா!

    வைத்தான்.

    லெட்டர்களைப் பிரித்தான். படித்தான். பதில் உடன் தேவைபட்டவற்றிற்கு ஸ்டெனோவிற்கு டிக்டேட் பண்ணினான்.

    காபி குடித்தான். தலைவலிக்கிற மாதிரி இருந்தது. தினம் காலையில் சாப்பிடும் டானிக்கை இன்று மறந்து விட்டிருந்தான். அதனால் தலை ரொம்பக்கூட வலித்தது.

    எப்படியோ ப்ரோகிராம்படி சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து முடித்தான்.

    பன்னிரண்டரைக்கு வேலு தோளில் பையுடன் உள்ளே வந்தான்.

    வாடா! நலமா! குடும்பம் நலமா! உன் பொண்ணு எப்படியிருக்கா?.

    இரு... இரு... கேள்விமேலே கேள்வி கேட்டுகிட்டே போனா எப்படி... முதலில் எழுந்து வா! என்றான் உட்காராமலே.

    எங்கே...?

    ஹோட்டல் இன்டர் நேஷனலுக்கு.

    அங்கே எதுக்குடா...?

    ரூம் போட்டிருக்கேன்.

    நீயாவே போட்டுக் கொண்டாயா...? உனக்கு நான் ஆபாத் பிளாசாவில் ரூம் புக் பண்ணியிருக்கேன். நீ என்னடாவென்றால்...

    இன்று ரொக்கம் நாளை கொலை பரவாயில்லை ராம்! அதை கான்சல் பண்ணிவிடு. கிளம்பு!

    அவனும் ராம்மோகனும் பால்யகாலம் முதல் நண்பர்கள். அவன் பாண்டிச்சேரியில் பிசினெஸ் பண்ணிக் கொண்டிருந்தான். இருவரும் சந்தித்துக் கொண்டால் மெய் மறந்து போவார்கள். இப்போதும் கூட இருவரும் காரில் கிளம்பினர்.

    இன்டர்நேஷனல் ஹோட்டலில் ரொம்ப நேரம் பேசினர். பிறகு டின்னர் ஹாலிற்குச் சென்று இருட்டில் அமர்ந்தனர். ஆர்டர் கொடுத்து பொறுமையாய் சாப்பிட்டனர்.

    மறுபடி ரூமிற்கு திரும்பும்போது ராம்மோகனிற்கு தலைவலி திரும்ப வந்து ஒட்டிக் கொண்டது. உடன் டென்ஷனானான். வியர்த்துப்போனான். நான் வரேன்! வேலு!.

    என்னாச்சுடா உனக்கு. ஏன் ஒரு மாதிரி ஆகிட்டே...?.

    ஒண்ணுமில்லை. தலைவலி. தாங்க முடியல்லே. நீ ரெஸ்ட் எடு. நான் சாயந்திரம் வரேன்!

    ராம்மோகன் காரில் ஏறி அமர்ந்து விருட்டென்று கிளம்பினான்.

    மாலை நான்கு மணி. தலைவலியோடு தலைவலியாய் வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான் ராம்மோகன்.

    அப்போது இன்டர்காம் கிர்ர்ர்ரென்க எடுத்தான். ரிஸப்ஷனிஸ்ட் நாக்கில் தேனுடன் பேசினாள்.

    சார்! உங்களுக்கு ஒரு போன்!

    யார் பேசறா...?

    இன்ஸ்பெக்டர் விமல் குமாராம்!

    இன்ஸ்பெக்டரா... லைன் கொடு?

    கொடுத்தாள்.

    ஹலோ! ராம்மோகன் ஹியர்!

    ஹலோ! மிஸ்டர் ராம்மோகன்! ஒரு சேடு நியூஸ்!

    சேடு நியூஸா... என்ன சார்...?

    உங்களுடைய வீட்டிற்கு கொஞ்சம் வரமுடியுமா...?

    ராம்மோகன் அதிர்ந்தான்.

    என்ன சார் விஷயம்...?

    வாங்க சொல்றேன்... என்று போனை வைத்து

    Enjoying the preview?
    Page 1 of 1