Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Rokkam Naalai Kolai
Indru Rokkam Naalai Kolai
Indru Rokkam Naalai Kolai
Ebook238 pages1 hour

Indru Rokkam Naalai Kolai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Short Stories Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466626
Indru Rokkam Naalai Kolai

Read more from N.C.Mohandass

Related to Indru Rokkam Naalai Kolai

Related ebooks

Related categories

Reviews for Indru Rokkam Naalai Kolai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Rokkam Naalai Kolai - N.C.Mohandass

    23

    1. தூண்டில்

    ராம்மோகனுக்கு கடிகாரம் என்றாலே வெறுப்பு. அது எத்தனை சீக்கிரம் சீக்கிரமாய் ஓடுகிறது!

    எவ்வளவுதான் முயற்சி பண்ணி கிளம்பினாலும்கூட டயத்திற்கு அலுவலகம் போக முடிவதில்லை.

    ஷர்ட்டை இன்பண்ணி, பேன்ட் பெல்ட்டைப் போட்டான். டை கட்டினான் ஷூ மாட்டிக்கொண்டு, லியா! என்று கத்தினான் நேரமாச்சு! *

    இதோ வந்திட்டேன் என்று வந்தாள் லியா. அவள் கவுனின் கழுத்து பகுதியில் வியர்த்திருந்தாள். காபியை நீட்டினாள். கவர்ச்சியாயிருந்தாள்.

    நன்றாய் ஆற்றினாயா...?

    ஆறிப்போயிருக்கு பாருங்க!

    வியர்க்கும்னு சொன்னாலும் கேட்கமாட்டேன்கிறாய். கொடு!

    குடித்து விட்டு கார் சாவியை எடுத்த போது ஏங்க! என்றாள். எதற்கோ அடி போடுகிறாள் என்று புரிந்து போயிற்று அவனுக்கு.

    என்ன...? என்றான் வெறுப்பாய்.

    இந்த வி.சி ஆரை சரிபண்ணக் கொடுத்து எத்தனை நாளாச்சு... இன்னுமா ரிப்பேர் பண்றான்...?

    ராம்மோகன் அதைக் கேட்டும் கேட்காதது போல காரை நோக்கி நடந்தான்.

    ஏங்க! நான் பாட்டிற்கு சொல்லிகிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா...

    லியா! என் நேரத்தை பாழ்படுத்தாதே! ஏற்கெனவே நான் ஆபீஸ் விஷயமா டென்ஷனாயிருக்கேன்!

    உங்களுக்கு டென்ஷன்! எனக்கு பொழுது போகமாட்டேன்கிறது எத்தனை நேரம் தான் நாலு சுவத்துக்குள்ளே அடைஞ்சு கிடக்கிறது...!

    எப்போ பார் இந்த வி.சி.ஆர். ரிப்பேர்! இந்த மாசத்திலேயே இதோட நாலு தடவை!

    அதுக்கென்ன பண்றது. எவனோ உங்களை ஏமாத்திட்டான். ஃபாரின் செட்டுன்னு சொல்லி டெல்லி செட்டை உங்க தலையில கட்டிவிட்டான்!

    அவன் காரில் ஏறி அமர்ந்ததும், ப்ளீஸ்... என்றாள்.

    எனக்கு டயமில்லை லியா!

    அப்போ நான் போய் வாங்கி வந்திரட்டா...?

    என்னவோ செய்! என்று காரைக் கிளப்பினான்.

    சே! என்றான். இந்த வி.சி.ஆர் வாங்கினதும் போதும்! ஒரே தலைவலி! நாலு கேசட் எடுத்தோம். நல்ல படியாய் போட்டு பார்த்தோம் என்று உண்டா...? குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள்! அல்லது ஷேடுகள்! அதுவும் இல்லை என்றால் சௌண்ட் பிரச்னை. வீடியோ ஆசையே அவனுக்குப் போய்விட்டது.

    ஒவ்வொரு முறை ரிப்பேருக்கு அனுப்பும்போதும் நூறு இருநூறு என்று கறந்து விடுகிறான்! கேட்டால் ‘பண்ணைசெட் சார் - நான் என்ன பண்ண...?’ என்கிறான்.

    பன்னிரண்டாயிரம் போட்டு வாங்கியிருக்கிறோம், பண்ணை செட்டாம்! இம்முறை என்னவானாலும் சரி, அவனுக்கு பணம் தரப்போவதில்லை.

    கடைவீதியில் நுழைந்ததும் அவனுக்குள் ஒரு உந்துதல், இந்தப் பக்கம் தானே அந்த வி.சி.ஆர். கடை இருக்கிறது... ஒரு நிமிடம் இறங்கி பார்த்துவிட்டுப் போனால் என்ன...?

    இவன் பாட்டிற்கு லியாவை ஏமாற்றி பணம் கறந்து விடப் போகிறான்! செட் ரெடியாக இருந்தால் கையோடு நாமே வாங்கிப் போய்விடலாம். லியாவிற்கு போனில் விவரம் தெரிவித்தால் போதுமே...! காரை பார்க் பண்ணிவிட்டு இறங்கினான்.

    ‘ஜெயச்சந்திரன் சேல்ஸ் அண்ட் சர்வீஸிங் சென்டர்’ என பளபளப்பாய் போர்டு மாட்டியிருந்த கடைக்குள் நுழைந்தான்.

    அதனுள் வின்சென்ட் பாபு-அவன் தான் கடையின் உரிமையாளன் டீஷர்ட் ஜீன்சுடன் ஒரு வி.சி.ஆ.ரை இயக்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் வீடியோகானின் டி.வி. திரையில் பிம்பம் ஓடிக் கொண்டிருந்தது.

    இவனைக் கண்டதும், ஹலோ சார்! வாங்க! இதோ உங்க செட்டைதான் டிரையல் பார்த்துகிட்டிருக்கேன்!

    நாற்காலி எடுத்துப் போட்டான்.

    பரவாயில்லை. செட் ரெடியாச்சா... கொண்டு போகலாமா...?

    இல்லை சார். ஒரு அரைமணி நேர வேலை பாக்கி இருக்கு.

    அதான் நல்லா ஒர்க் பண்ணுது போலிருக்கே...!

    நோ... நோ! இன்னும் வேலை முடியலே. இப்போ டிரையல்தான் பார்க்கறேன். அரை மணி நேரம் வெயிட் பண்ண முடியுமா...?

    அரைமணி நேரமா...? ஐயோ! என்றான். மானேஜரா இருந்துகிட்டு நானே லேட்டாப் போனால் மத்தவங்களை எப்படிக் கண்டிக்க முடியும்...?

    அப்போ கவலைப்படாம ஆபீஸ் போங்க. நான் போய் வீட்டில் கொடுத்து விடுகிறேன்.

    வேண்டாம். என் மிஸஸே இங்கு வருவா. சரி பண்ணிக் கொடுத்திருங்க.

    ரொம்ப நல்லதாப் போச்சு!

    பை-தி-பை சர்வீஸிங்கிற்குன்னு இம்முறை நயா பைசா தரமாட்டேன்!

    நான் கேட்கலியே!

    ராம்மோகன், பிரச்சனை தீர்ந்தது என்று காரில் ஏறி கிளப்பினான்.

    அலுவலகத்தில் நுழைந்ததும் ராம்மோகனுக்கு மீண்டும் பழைய டென்ஷன் தொற்றிக் கொண்டது.

    அவன் தன் அறைக்குள் சென்று ஏ.சி.யை தட்டி விட்டான். சுவரில் மாட்டியிருந்த தகப்பனாரின் படத்தைத் தொட்டுக் கும்பிட்டான்.. அப்போது கதவைத் திறந்து கொண்டு ஸ்டெனோ வர –

    இப்போ உன்னை அழைத்தேனா...? - ரூமிற்குள் வரும்போது கதவை தட்டிவிட்டு வரவேண்டும் என்கிற சாமான்ய மரியாதைகூடத் தெரியாதா உனக்கு...?

    எரிந்து விழுந்தான்.

    அழகின் உருவமாயிருந்த அவளின் முகம் சட்டென்று வாடிப் போயிற்று. கதவை மூடிவிட்டு வெளியே ஒதுங்கினாள்.

    அவள் ஆரஞ்சு நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். அதே கலர் ப்ளவுஸ், பிராவையும் அதனுள் அடங்கியிருந்த வற்றையும் மெல்லிசாய் வெளியே காட்டிக் கொண்டிருந்தது.

    கண்களில் மை தீட்டி, தலைக்கு ஒருமணி நேரம் செலவழித்து பின்னியிருந்தாள். லிப்ஸ்டிக்! காதருகில் ரோஜா!

    அத்தனை அலங்காரங்கள் இருந்தும்கூட அவளுடைய முகவாட்டத்தை அப்பட்டமாய் பிரதிபலித்தது

    மானேஜருக்கு இன்று என்னாயிற்று... ஏன் கடுப்படிக் கிறார்...? இன்று விழித்த வழியே சரியில்லை. முதல் தரிசனமே இப்படி... இன்னும் போகப் போக எப்படியோ...?

    எஸ், கமின்! மெல்ல உள்ளே பிரவேசித்தாள்.

    குட்மார்னிங் சார்!

    சாரி. லேட்டான டென்ஷன்ல நான்...

    தடஸ் ஓகே சார்!

    இன்று என்னென்ன ப்ரோகிராம்கள்...?

    அவள் லிஸ்ட்டை படிக்கப் போக,

    இரு! இரு! ஆபீஸ்ல எல்லோரும் வந்து விட்டார்களா...? ரெஜிஸ்தர் எங்கே...?

    எடுத்து வந்து கொடுத்தாள்.

    புரட்டினான்.

    குட். மெயில் வந்திருச்சா...?

    இதோ என்று கட்டை நீட்டினாள்.

    வாங்கிக்கொண்டு, ப்ரோகிராமைப் படி

    பதினோரு மணிக்கு கோபாலன் அன்ட் கோபாலன் கம்பெனி ரெப்ரசென்டேடிவ் வராங்க சார். பன்னிரண்டுக்கு கான்ட்ராக்டர் பீட்டர் விமல் குமாரோட அப்பாயிண்ட்மெண்ட். ஒரு மணிக்கு உங்களோட ஃபிரண்ட் வேலு வரார். அவரோட ஹோட்டல் ஆபாத் பிளாசாவில் லஞ்சு அப்புறம்...

    போதும். மீதியை அப்புறம் பார்க்கலாம். என்று அவன் நிமிர்ந்து பார்க்க, புரிந்து கொண்டு வெளியேறினாள்.

    ராம்மோகன் போனைச் சுற்றினான்.

    ஹலோ... லியாவா... யாரா...? உன்னைக் கட்டினவன்டி!

    ஸாரி... சட்டுன்னு குரல் தெரியலீங்க!

    ஸாரியெல்லாம் இருக்கட்டும். நான் வி சி.ஆரைப் போய் பார்த்தேன். இன்னும் அரைமணி நேரத்தில் சரி பண்ணிடறேன்னான். நான் ஆபீஸ்விட்டு வரும்போது வாங்கி வரட்டா...?

    ஆபீஸ் விட்டா... ஐயோ அதுவரை நான் என்ன பண்றது...? நான் போய் அதையும் வாங்கிட்டு அப்படியே காஸெட் லைப்ரரியிலே காஸெட்களும் செலக்ட் பண்ணிட்டு வந்திடறேனே...!

    உனக்கு சிரமமாயிருக்கும்னு நினைச்சேன்.

    எனக்கென்ன சிரமம்... இதோ நான் ரெடியாயிட்டேன்... அப்புறம்... இருங்க, வச்சிராதீங்க, மதியம் வீட்டுக்கு சாப்பிட வரீங்களா...

    அதான் முன்னாடியே சொல்லியிருந்தேனே. ஃபிரண்டு வேலு ரொம்ப நாட்களுக்கு பிறகு பாண்டிச்சேரியிலிருந்து வரான். அவனோட சேர்ந்து லஞ்சுன்னு. வச்சிரவா!

    வைத்தான்.

    லெட்டர்களைப் பிரித்தான். படித்தான். பதில் உடன் தேவைபட்டவற்றிற்கு ஸ்டெனோவிற்கு டிக்டேட் பண்ணினான்.

    காபி குடித்தான். தலைவலிக்கிற மாதிரி இருந்தது. தினம் காலையில் சாப்பிடும் டானிக்கை இன்று மறந்து விட்டிருந்தான். அதனால் தலை ரொம்பக்கூட வலித்தது.

    எப்படியோ ப்ரோகிராம்படி சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து முடித்தான்

    பன்னிரண்டரைக்கு வேலு தோளில் பையுடன் உள்ளே வந்தான்.

    வாடா! நலமா! குடும்பம் நலமா! உன் பொண்ணு எப்படியிருக்கா?

    இரு... இரு... கேள்விமேலே கேள்வி கேட்டுகிட்டே போனா எப்படி... முதலில் எழுந்து வா! என்றான் உட்காராமலே.

    எங்கே...?

    ஹோட்டல் இன்டர் நேஷனலுக்கு.

    அங்கே எதுக்குடா...?

    ரூம் போட்டிருக்கேன்.

    நீயாவே போட்டுக் கொண்டாயா...? உனக்கு நான் ஆபாத் பிளாசாவில் ரூம் புக் பண்ணியிருக்கேன். நீ என்னடாவென்றால்...

    பரவாயில்லை ராம்! அதை கான்சல் பண்ணிவிடு. கிளம்பு!

    அவனும் ராம்மோகனும் பால்யகாலம் முதல் நண்பர்கள். அவன் பாண்டிச்சேரியில் பிசினெஸ் பண்ணிக் கொண்டிருந்தான். இருவரும் சந்தித்துக் கொண்டால் மெய் மறந்து போவார்கள். இப்போதும் கூட இருவரும் காரில் கிளம்பினர்.

    இன்டர்நேஷனல் ஹோட்டலில் ரொம்ப நேரம் பேசினர். பிறகு டின்னர் ஹாலிற்குச் சென்று இருட்டில் அமர்ந்தனர். ஆர்டர் கொடுத்து பொறுமையாய் சாப்பிட்டனர்.

    மறுபடி ரூமிற்கு திரும்பும்போது ராம்மோகனிற்கு தலைவலி திரும்ப வந்து ஒட்டிக் கொண்டது. உடன் டென்ஷனானான். வியர்த்துப்போனான்.

    நான் வரேன்! வேலு!

    என்னாச்சுடா உனக்கு. ஏன் ஒரு மாதிரி ஆகிட்டே...?

    ஒண்ணுமில்லை. தலைவலி. தாங்க முடியல்லே. நீ ரெஸ்ட் எடு. நான் சாயந்திரம் வரேன்!

    ராம்மோகன் காரில் ஏறி அமர்ந்து விருட்டென்று கிளம்பினான்.

    மாலை நான்கு மணி.

    தலைவலியோடு தலைவலியாய் வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான் ராம்மோகன்.

    அப்போது இன்டர்காம் திர்ர்ர்ரென்க எடுத்தான். ரிஸப்ஷனிஸ்ட் நாக்கில் தேனுடன் பேசினாள்.

    சார். உங்களுக்கு ஒரு போன்!

    யார் பேசறா...?

    இன்ஸ்பெக்டர் விமல் குமாராம்!

    இன்ஸ்பெக்டரா... லைன் கொடு?

    கொடுத்தாள்.

    ஹலோ! ராம்மோகன் ஹியர்!

    ஹலோ! மிஸ்டர் ராம்மோகன்! ஒரு சேடு நியூஸ்!

    சேடு நியூஸா... என்ன சார்...?

    உங்களுடைய வீட்டிற்கு கொஞ்சம் வர முடியுமா...?

    ராம்மோகன் அதிர்ந்தான்.

    என்ன சார் விஷயம்...?

    வாங்க சொல்றேன்... என்று போனை வைத்து விட்டார்.

    ராம்மோகன் ஸ்டெனோவை அழைத்து ஆர்டர் கொடுத்துவிட்டு அவசரமாய் கிளம்பினான். அவன் மனத்திற்குள் படபடப்பு!

    வீட்டின் முன்பு ஒரே கூட்டமாய் இருந்தது. சினிமா கினிமா எடுக்கிறார்களா...?

    ராம்மோகன் காரை நிறுத்திவிட்டு இறங்கினதுமே சூழ்ந்திருந்தவர்கள் அவனை அனுதாபத்துடன் பார்த்தனர். அவன் குழப்பத்துடன் நடக்க, வாங்க! ஐ ஆம் இன்ஸ்பெக்டர் விமல்குமார்!

    என்ன விஷயம், இன்ஸ்பெக்டர்?

    உங்க மனைவி லியாவை யாரோ மண்டையில அடிச்சுக் கொலை பண்ணியிருக்காங்க!

    கொலையா வாட்! என்று உள்ளே ஓடினான். எங்கே... எங்கே என் லியா...?

    வலப்புற அறையில்.

    அவர் குறிப்பிட்ட வலப்புற அறையில் சோபா கிடந்தது. ஜன்னல்கள் திறந்து கிடந்தன. டி. வி. இருந்தது. வி. சி. ஆரில் காசெட் தீர்ந்து போயிருந்தது. டி.வியின் சுவிட்ச் ஆஃப் பண்ணப்படாமல் இன்னமும் திரையில் புள்ளிகள் மின்னிக் கொண்டிருந்தன.

    தரையில் லியா மல்லாந்து கிடந்தாள். அவளுடைய முடி விரிந்து கிடந்தது. தலையிலிருத்து ரத்தம் சிதறி தரையிலும் சோபாவிலும் வழிந்திருந்தது. டி.வி.ஸ்டேண்டில் காசெட்டின் கவர் இருந்தது.

    ஈக்கள் அழையா விருந்தாளிகளாய் வட்டமடித்தன. போலீஸ்கள் வெளியே ஜனங்களை விரட்டும் சப்தம் கேட்டது.

    லியா என்ற ராம்மோகன் அவளை அள்ளி அணைக்கப் போக, விமல்குமார் அவனைத் தடுத்து நிறுத்தினார்.

    ப்ளீஸ்! கண்ட்ரோல் யுவர் செல்ஃப்! இன்னும் குறிப்புகள் எடுக்கவில்லை. அதனால்தான் டி.வி.யைக் கூட ஆஃப் பண்ணாமல் வைத்திருக்கிறேன்.

    ராம்குமார் துவண்டுபோய் ஜன்னலில் சரிந்து நின்றான். அவன் கண்கள் கீழே கிடந்த லியாவையே வெறித்துக் கொண்டிருந்தன. வாயை கர்ச்சீப்பால் பொத்திக்கொண்டு விம்மினான்.

    எப்படி சார்... எப்படி இது...?

    மிஸ்டர் ராம்மோகன்! எமோஷனல் ஆகாதீங்க. இப்படி வந்து உட்காருங்க. நீங்க சோர்வா இருக்கீங்க. காபி வாங்கி வரச் சொல்லட்டா...?

    வேண்டாம் சார். என் லியாவை யார் கொன்னாங்க

    "ப்ளீஸ்... உணர்ச்சி வசப்படாம கேளுங்க. மூணரை மணிக்கு பால்காரன் வந்திருக்கான். மணியடிச்சிருக்கான். கதவு திறக்கப்படாததால் சுத்திகிட்டு இந்தப் பக்கம் வந்திருக்கான்.

    ஜன்னல் திறக்கவும் எட்டிப்பார்த்திருக்கான். உங்க ஒய்ஃப் விழுந்து கிடக்கிறதையும் ரத்தத்தையும் பார்த்து அலறிகிட்டு ஓடிப் போயிருக்கான்.

    எதிர்த்த கடையில் விவரம் சொல்ல, அவங்க உடனே போலீசுக்கு போன் பண்ணினாங்க. நான் வந்து பார்த்தப்போ கதவு உள் பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது. இடிக்கச் சொல்லிதான் திறந்தேன்.

    உள்ளே இதே பொசிஷனிலேயே கிடந்தாங்க. டி. வி. மட்டும் இதே போல ஆன் பொஸிஷனில் இருந்தது. வி. சி.ஆர். ஆட்டோமேடிக்கா ஆஃப்பாகியிருந்தது. அப்புறம் அக்கம்பக்கத்தில் விசாரித்துதான் உங்களுக்கு போன் பண்ணினேன்."

    ராம்மோகன் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளுமின்றி அவளையே வெறித்துக் கொண்டிருந்தான்.

    விமல்குமார் தொடர்ந்தார்.

    இவங்க காசெட்டைப் போட்டு சோபாவில் அமர்ந்து பார்த்துகிட்டிருக்கும்போது, யாரோ பலமா இரும்புத் தடியால மண்டையில அடிச்சிட்டு ஓடியிருக்கணுங்கிறது என்னோட யூகம் மிஸ்டர் ராம்மோகன்!

    அவர் அவனுடைய தோளில் கையை வைக்க, அவன் மயங்கிப் போயிருந்தான்.

    விமல்குமார் ஃபார்மாலிடிகளை நடத்தச் சொன்னார்.

    கான்ஸ்டபிள்கள் அளவெடுத்தனர். சாக்பீஸால் மார்க் வரைந்தனர்.

    போட்டோக்கள் எடுக்கப்பட்டன.

    பளிச்! பளிச்!

    ஆம்புலன்ஸ் வந்தது.

    பாடி அகற்றப்பட்டது.

    அடுத்த நாள்.

    வீட்டில் இருந்தால் மனச்சுமை அதிகமாகிறதே என்று ராம்மோகன் அலுவலகம் போனான். அங்கே ஊழியர்களின் சோகப்பார்வை அவனை ரொம்பக்கூட வருத்திற்று.

    இன்ஸ்பெக்டர் விமல்குமார் வந்திருந்தார்.

    உங்க மனைவியோட கொலை விஷயமாக எனக்கு சில விவரங்கள் தேவைப்படுது. தருவீங்கன்னு நினைக்கிறேன்.!

    கேளுங்க

    அவங்களுக்கு விரோதிங்க யாராவது இருந்தாங்களா...?

    தெரியாது என்றான் ராம்மோகன் விரக்தியாய்.

    Enjoying the preview?
    Page 1 of 1