Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavai Kaappattru
Ammavai Kaappattru
Ammavai Kaappattru
Ebook84 pages28 minutes

Ammavai Kaappattru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466626
Ammavai Kaappattru

Read more from N.C.Mohandass

Related to Ammavai Kaappattru

Related ebooks

Related categories

Reviews for Ammavai Kaappattru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammavai Kaappattru - N.C.Mohandass

    16

    1

    விடியற்காலை நான்கு மணிக்கு இளங்கீரன் தன்னையுமறியாமல் படுக்கையைத் தடவினான். அருகில் வெற்றிடமாய் இருப்பதை உணர்ந்ததும், அவனது தூக்கம் போயிற்று.

    வடிவழகி எழுந்துவிட்டாளா?

    இத்தனை காலையில் எழுந்து என்ன செய்கிறாள்? தூக்கத்திலேயே விடியற்காலை தூக்கம்தான் சுகமானது. ஆழமானது. ஆனந்தம் தருவது. மிதமான குளிரில் பெண்டாட்டியின் மேல் காலையும் கையையும் விளையாடவிட்டுத் தூங்குவதில் உள்ள சந்தோஷத்திற்கு இவ்வுலகில் ஈடிணை வேறில்லை.

    இப்போது அவள் இல்லை என்றதும் வெறுமையாயிற்று. அவள் மேல் கோபம் வந்தது. விடியற்காலையில் எழுந்து, கோலமிட்டு, வாசல் தெளித்து, பூஜித்து ஆறு மணிக்குள் டிபனை ரெடி பண்ணினால்தான் அவளுக்கு நிம்மதி.

    அவளைப் பொருத்தவரை பரவாயில்லை. காலை தூக்கம் போனாலும் மதியம் நீண்ட தூக்கம் போடலாம். ஆனால் அவனுக்கு அப்படியில்லையே! தொழிற்சாலையில் ஷிப்ட்!

    நேரங்கெட்ட நேரத்தில் டூட்டி! சாப்பாடு! தூக்கம்! எதிலும் ஓர் ஒழுங்கில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஷிப்ட் மாறும்போது பழக்க வழக்கங்கள் எல்லாமே மாறும். இயல்பு குளறுபடியாகும்.

    இந்த விடியற்காலை தூக்கம் அவனுக்கு விதித்தது வாரம் இரண்டு நாள் தான். அதிலும் அவள் விலகுகிறாள் என்றால் என்ன அர்த்தம்?

    கோபத்துடன் பெட் சுவிட்ச் போட, நீலவிளக்கின் ஒளியில் LKG வேணி எச்சில் ஒழுகப் படுத்திருப்பது தெரிந்தது. கொஞ்சம் விட்டால் அவள் கட்டிலிலிருந்து கீழே விழுவாள் போலிருக்கவே, அணைத்தபடி நடுவில் கிடத்தி முத்தம் கொடுத்தான்.

    பாத்ரூமில் சலசலப்பு கேட்கவே, வடிவழகி நனைகிறாள் என்பது புரிந்தது. உடன் உடலில் ஒருவகை உஷ்ணம்! லுங்கியை சரிபண்ணிக் கொண்டு போய்க் கதவை தட்டினான்.

    என்ன அதுக்குள்ளே குளியல்?

    பைப் நிறுத்தப்பட்டு உள்ளேயிருந்து, என்னங்க...? என்ற குரல் வெட்கப்பட்டது.

    திற! வயிறு கலக்கல்!

    அவளுக்குத் தெரியும். அவன் பொய் சொல்கிறான் என்பது. உள்ளே வந்து அவளையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பான். நகர மாட்டான். அவளுக்கு கூசும்.

    கணவன்-மனைவியிடையே ஒளிவு மறைவில்லைதான். ஒருவரை ஒருவர் பார்க்காததா! ஆனாலும்கூட அதெல்லாம் படுக்கையோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா?

    குளிக்கும் போது கைகால் வராது.

    ம்... சோப்பு போடு! என்று மூலையில் கைகட்டிக் கொண்டு நிற்பான்.

    நீங்க போங்க!

    நான் உன்னை என்ன பண்றேனாம்!

    ஐயோ... போங்கன்னா! என்று பிடித்து வெளியேற்றினால்தான் மேற்கொண்டு குளிக்க முடியும். இல்லாவிட்டால் அவனும் நனைவான். என்னைக் குளிப்பாட்டு என்பான். எனக்கு சோப்பு போடு! அப்புறம் பதிலுக்கு அவனுக்கும் சோப்பு போட இடம் தரவேண்டும். ஏனிந்த வம்பு!

    திறக்கிறாயா…?

    அவள் சட்டெனத் திறந்து வெளியே வந்தபோது டர்க்கி சுற்றியிருந்தாள். ஈரமுடி! ஈர கண்கள்! ஈரக் உதடுகள்! ஈரக் கழுத்து. ஈரமான கால்கள்!

    நாம் வீடு கட்டும்போது அவசியம் ரெண்டு டாய்லட் வேணும் சாமி! என்று முடியை உதறினாள்.

    நாம் வீடு கட்டப் போகிறோமா...? எப்போடா?

    அதான் இடம் வாங்கிப் போட்டுட்டீங்க! அஸ்திவாரம்கூட ஆச்சு !

    மேற்கொண்டு கட்டிடம் எழும்பணும்னா நான்கு லட்சம் வேணும். ஒளித்து வைத்திருக்கிறாயா...? என்று டர்க்கியை விலக்கினான்.

    சீ. என்று வடிவழகி நகர்ந்து, அதான் கம்பெனியில் ஹவுசிங் லோன் கிடைக்குமே!

    கிடைக்கும். ஆனால் ஆயுசு முழுக்க வட்டியும் அசலும் கட்டியாகணும். சம்பளம் முழுக்க அதுக்குதான் சரியாயிருக்கும். அது போகட்டும்! இன்னைக்கு எதுக்காக இத்தனை சீக்கிரம் குளியல்?

    சீக்கிரமாய்த் துணி துவைச்சு, வேணியை ஸ்கூலில் கொண்டு போய் விடணும்!

    அதுக்குதான் வேன் வருமே!

    நானும் வேணியுடன் பாண்டி ஸ்கூலுக்கு போய் ஃபீஸ் கட்டணும்!

    பீஸ்தானே... நான் கட்டமாட்டேனா?

    நீங்க பணம் கட்டிட்டு வந்திருவீங்க! ஆனால் மகளின் படிப்பு எப்படி - டிஸிப்ளின் எப்படின்னெல்லாம் மிஸ்ஸிடம் விசாரிக்க வேணாமா...?

    மிஸ்தானே! நான் விசாரிக்க மாட்டேனாடி? என்று கண் அடிக்க,

    சே! உங்களுக்கு விவஸ்தையே கிடையாது! பொம்பளைன்னா ஏன் இப்படி அலையறீங்க! என்று இடித்தாள்.

    நானாடி அலையறேன்? நீதானே விசாரிக்கச் சொன்னாய்! என்றான், அவள் உள்ளாடையும், வெளி ஆடையும் உடுத்துவதை ரசித்துக் கொண்டு.

    "ஆமாம்! நீங்க அலையவே இல்லையாமே! கல்யாணத்துக்கு முந்தி எப்படியெல்லாம் ஆடினீங்க... எத்தனைப் பெண்களை கை வைச்சீங்கன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1