Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suttramum Natpum
Suttramum Natpum
Suttramum Natpum
Ebook188 pages1 hour

Suttramum Natpum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466893
Suttramum Natpum

Read more from N.C.Mohandass

Related to Suttramum Natpum

Related ebooks

Related categories

Reviews for Suttramum Natpum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suttramum Natpum - N.C.Mohandass

    நெஞ்சுக்குள் பந்து

    குழந்தை கட்டிலில் துவண்டு கிடந்தது. அதன் விழிகளில் செல்லரித்த மாதிரி ஒருவித குழப்பம். கைகால்களில் அசைவில்லை, தளர்ச்சி, கன்னத்தின் ஒரு பக்கம் சூடு வைத்தது போல இழுத்துக் கொண்டிருந்தது. ஆறு மாத குழந்தை.

    பிறக்கும் போதே அதனிடம் எந்த சலனமுமில்லை வெறும் ஜடமாகதான் பூமிக்குள் அவதரித்திருந்தது.

    வெளியே நிலவு மலர்ந்திருந்தது. அதன் ஒளி ஜன்னல் வழி பிரவேசித்து, படர்ந்து குழந்தையின் முகத்தில் ஒரு ஓவியம் தெரிந்தது.

    நந்தனுக்கு லில்லியை பார்க்கப் பார்க்க துக்கம் பொங்கிற்று, தூக்கம் போயிற்று. கிருபாவைப் பார்த்தான். அவள் முந்தானை விலகி படுத்திருந்தாள். அவளிடமும் தளர்ச்சி.

    இருக்காத பின்னே - கண்ணில்லாத - வாய்பேசாத - கை கால்கள் செயல்படாத குழந்தையை பராமரிப்பதென்றால் சாதாரண காரியமா?

    ஒரு குழந்தை வேண்டி அவர்கள் எவ்வளவு தவமிருந்திருப்பார்கள்!

    நந்தனும் கிருபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

    திருமணத்திற்கு முன்பும் காதலித்து, பின்பும் காதலித்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. குழந்தையில்லை.

    ஏக்கம், பெருமூச்சு, அக்கம் பக்கத்தில் இளப்ப பார்வை!

    வீட்டுக்கு வருபவர்கள், போவர்களெல்லாம் ஏதாவது பேச வேண்டுமே,

    விசாரிக்க வேண்டுமே என்பதற்காக எத்தனை குழந்தைகள்?" என்பார்கள்.

    குழந்தை இல்லை என்றுச் சொன்னால் லேட் மேரேஜா?

    இல்லை பத்து வருஷமாச்சு.

    செக் பண்ணலியா...?

    பண்ணிட்டோம். ரெண்டு பேத்துக்குமே ஓக்கே.

    ஒக்கேண்ணா அப்புறம் எப்படியாம்? நிச்சயம் குறையில்லாமலிருக்காது! டாக்டர் சும்மா சமாதானத்துக்கு சொல்றாரோ என்னவோ!

    கிருபாவிற்கு அழுகை அழுகையாய் வரும். வீட்டை விட்டு வெளியே போனால் தானே விசாரிப்பார்கள் என்று அவள் கொஞ்ச நாள் ஆபீசுக்கும் லீவ் போட்டிருந்தாள்.

    நந்து நிஜமாலுமே டாக்டர் எனக்கு குறையில்லைன்னு சொன்னாரா?

    ஏனிந்த சந்தேகம்!

    அப்புறம் ஏன் குழந்தை பிறக்கலே?

    உயிரணுக்கள் சரியானபடி சேர்க்கையாகாமல் - காப்ப்பையில் சரியாய் தங்காமல் வெளியேறிடுதாம்!

    அப்போ என் கர்ப்பபையில் கோளாறு!

    சேச்சே!

    ஏங்க! இன்னும் எவ்ளோ நாளுக்குதான் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டிருக்கிறதாம்! போரடிக்கலே?

    எனக்கு அடிக்கலே என்று கட்டிக்கொள்வான் - மூச்சு திணறவைப்பான், திணறுவான்.

    எப்படியாவது ஊர் வாயை அடைச்சாகணுங்க!

    எப்படி? எல்லோருடைய வாயிலும் பிளாஸ்தரி போட்டிரலாமா?

    அதெல்லாம் எதுக்கு? மலடின்னு நான் ஏசப்பட்டாலும் பரவாயில்லை உங்களுடைய ஆண்மை மீது யாரும் சந்தேகப்பட்டு விடக்கூடாது. குறை உங்களிடமில்லை என்று நீங்கள் நிரூபித்தாக வேண்டும்!

    எப்படி? கழுத்தில் டாக்டர் சர்டிபிகேட்டை கட்டிக்கொண்டா?

    இல்லை இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டி!

    உதைப்பேன்

    பரவாயில்லை. நமக்கு குழந்தை வேணும்.

    அதுக்காக? உன்னை இழக்கச் சொல்கிறாயா...

    இதுலே இழக்க என்ன இருக்காம்? வீட்டிலே நானும் ஒரு மூலையில்...

    வேறு ஏதாச்சும் பேசுவோமா?

    அவள் பேசமட்டாள். மௌனமாகிவிடுவாள். முகம் சுண்டிப் போகும். அவனும் கிருபாவின் சிந்தையை திசை திருப்ப வேண்டி அரசியல், சினிமா, நாடகம் பத்திரிகைகள் என்று பேசிப் பார்ப்பான். ம்கூம், அவள் அங்கேச் சுற்றி இங்கேச் சுற்றி அதில் வந்துதான் நிற்பாள்.

    நந்து! நமக்கு ஏன் குழந்தையில்லை - போன பிறவியில் பாவம் செஞ்சிருப்போமா...? இல்லை வீட்டில் எலி குஞ்சுகளை சாகடித்திருக்கிறேன். அதனாலோ...?

    இப்போ என்னைதான் சாகடிக்கிறாய்!

    நாம் ஜாதக பொருத்தம் பார்க்காமல் கட்டிகிட்டது தப்போ…?

    ஆமாம்! காதலிக்கும் முன்பு ஜாதக பொருத்தம் பார்த்துவிட்டு அப்புறமாய் காதலித்திருக்கணும்!

    நான் அப்படி சொல்லலேங்க, வீட்டில் பெரியவர்கள் நிச்சயித்திருந்தால் ஜாதகமெல்லாம் பார்த்திருப்பார்கள்!

    நந்தனுக்கு அவளை எப்படி சமாதானப்படுத்துவதென்று தெரியாது. பேப்பர்களில் வரும் விளம்பரங்களையெல்லாம் பார்த்து - அந்த மருந்துகளெல்லாம் வேண்டும் என்பாள் வாங்கித் தருவான்.

    அக்கம் பக்கம் சொன்னார்கள் என்று மண்சோறு தின்பாள். கோவிலில் அங்கபிரதட்சணம்! தலை மொட்டை! அன்னதானம்! விரதம்!

    சாமியார்களிடம் போய் விபூதி மந்தரித்து வாங்கி வருவாள். தாயத்து! மூலிகை வைத்யம். அதிலெல்லாம் தனக்கு நம்பிக்கையில்லாவிட்டால் கூட நந்தன் அவளுடைய திருப்திக்கு வேண்டி தலையிடுவதில்லை. வேளாங்கன்னி போய் உண்டியல் கட்டிவிட்டு வந்திருக்கிறாள்.

    காலம் அப்படியே ஓடிவிட்டது

    ஒரு சமயம் நம்பிக்கையிழந்து, நந்து! ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க? இன்னொரு கல்யாணம் செஞ்சுகிட்டால் என்னவாம்!

    அதுலயும் பிறக்கலேன்னா என்னப் பண்ணுவாயாம்?

    இன்னொன்னு! என்ன முறைக்கறீங்க! ஊர் உலகத்துல ரெண்டு - மூணுன்னு யாரும் வெச்சுக்கிறதில்லையா என்ன?

    யாராவது வெச்சுகிட்டுப் போகட்டும். எனக்கு நீ வேணும், நீ போதும் நமக்கு குழந்தை பிறக்கணும்னா அது நம் குழந்தையாக தானிருக்கணும். அப்படியில்லேன்னா - தத்து எடுத்துக்கலாம்!

    இல்லேன்னா - இப்படி செஞ்சா என்ன?

    எப்படி?

    நம் ரெண்டு பேத்தோட வீரியத்தையும் கலந்து கரு உற்பத்தி பண்ணி வேறொரு பெண்ணின் கர்ப்பபையில் செலுத்தி - அவங்க மூலமா குழந்தை பெத்துக்கிட்டால் என்னவாம்! இப்போதான் வாடகைக்கு கர்ப்பபையும் கிடைக்குதாமே!

    அதுக்கு எந்த பெண் சம்மதிப்பாள்?

    பணம் கொடுத்தால்...

    சரி, பேப்பரில் விளம்பரம் கொடுத்து பார்ப்போம் என்று பெயர் குறிப்பிடாமல் போஸ்ட் பாக்ஸ் நம்பர் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தினர். அதற்கு அவ்வளவு வரவேற்பில்லை. இரண்டு மூன்று கிழவிகள் தான் வந்தன. வயிற்றெரிச்சல்!

    கிருபாவிற்கு குழந்தைளென்றால் கொள்ளை ஆசை! அக்கம் பக்கத்து பிள்ளைகளை வரவழைத்து வயதையும் மறந்து விளையாடுவாள். எல்லோருக்கும் சாப்பாடு ஊட்டுவாள். பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்கிப் போய் தருவாள்.

    அப்படி கொடுக்கும் போது ஒரு சமயம் அடுத்த தெரு மாமி பரிசை வாங்க மறுத்துவிட்டாள். ‘உனக்கே குழந்தை பாக்யமில்லை. உன் கையில் பரிசு வாங்கினால் எங்கே விளங்கப் போகிறது!’

    கிருபாவிற்கு அடி வயிற்றில் சூடு வைத்த மாதிரி இருந்தது. அதன் பிறகு யார் வீட்டிக்கும் போவதில்லை பசங்களையும் அழைப்பதில்லை. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க ஆரம்பித்தாள்.

    இதற்கிடையில் பிரார்த்தனையின் பலனோ இல்லை, சிகிச்சையின் குணமோத் தெரியவில்லை - அவள் கர்ப்பம்!

    இருவருக்குமே சந்தோஷம் பிடிபடவில்லை.

    கிருபா அக்கம் பக்கமெல்லாம் கூவி கூவி இது இரண்டாம் மாதம், மூன்றாம் மாதம் நான்கு, ஐந்து என்று சொல்லிவிட்டு போவாள். ஆனால் அது பத்து வரை எட்டவில்லை.

    எட்டாம் மாதமே குறை பிரசவம்.

    பிறந்ததும் குழந்தையாயிருக்கவில்லை வெறும் ஜடம் சதை பிண்டம்.

    கர்ப்பம் என்றதும் சந்தோஷிக்க வேண்டியதுதான் - அதற்காக அந்த ஆட்டம் ஆடியிருக்கக் கூடாதோ - தெய்வத்திற்கே பொறுக்கலியோ என்று நந்தனுக்குத் தோன்றிற்று.

    முன்பு மலடி என்று உள்ளுக்குள் ஏசினவர்களுக்கு திரும்பவும் நமுட்டுச் சிரிப்பு ஒரு வாய்ப்பு!

    எல்லோரும் கிருபாவையே குற்றம் சொல்லினர்.

    வேண்டாததை தின்னிருப்பாள்! வால் நட்சத்திரத்தை பார்க்காதே - கிரகண - சமயத்தில் வெளியே வராதே என்று சொன்னால் கேட்டால்தானே!

    அதன்பிறகு அவள் மனமிறங்கியிருக்க வேண்டும். நெஞ்சை கல்லாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

    அவளது மனதை - நேற்று தெருவில் அம்மா - தாயே - ரெண்டு கண்ணும் தெரியாதவம்மா! என்று பிச்சை எடுத்துக் கொண்டுப்போன சிறுமியும் மாற்றியிருக்க வேண்டும்.

    நாளைக்கு என் குழந்தைக்கும் கூட இதே நிலமைதானா? அவளும் இப்படிதானா? அந்த சிறுமிக்காவது பேச வருகிறது, நடக்க முடிகிறது. என் குழந்தை! கடவுளே! வேணாம்.

    அவளுக்கு இந்த நிலமை வேணாம்.

    நீ கொடுத்ததை உனக்கே காணிக்கையாக்குகிறேன்!

    கிருபா - ஒரு வழியாய் சம்மதித்திருந்தாள்.

    ஆனால் இன்று மறுபடியும் வேணாங்க! வேணாங்க! என்று கெஞ்சல் பைத்தியம் மாதிரி பாத்திரங்களை உருட்டல், கண்ணாடியை உடைக்க ஆரம்பித்தாள். இனியும் விட்டு வைக்கக்கூடாது என்று நந்தன் அந்த முடிவுக்கு வந்தான்.

    டாக்டர் சொன்னது தான் சரி.

    குழந்தையை மெர்ஸி கில்லிங்!

    ஆட்கள் சிலரை அணுகினான். பணத்திற்கு அவர்கள் பணிந்தனர். குழந்தையை எப்படி கொல்லுவீங்க?

    எப்படி வேணும்? கழுத்தை நெறிக்கணுமா - அறுக்கணுமா? இல்லை விஷம்!

    வேணாம்ப்பா - அறுத்து - நெறித்து இம்சை வேணாம் - அவள் நோகக்கூடாது. வலி கூடாது.

    அப்போ விஷம்தான் சரி. இல்லேன்னா - ஆறு குளத்துல தூக்கி போட்டிரலாமா?

    ம்கூம் என்ற நந்தனுக்கு குரல் தழுதழுத்துப் போயிற்று. என்னவோ செய்ங்க போங்க. எல்லாம் என் தலையெழுத்து!

    குழந்தையை கொடுங்க!

    இப்போ வேணாம். கிருபாவுக்கு தெரிஞ்சால் பிரச்சனை. ராத்திரி அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க பண்ணிடறேன். அப்புறமாய் கொண்டுப் போங்க!

    ஏற்பாடு செய்தாயிற்று கிருபாவும் அடித்துப்போட்ட மாதிரி தூங்குகிறாள். நந்தனுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. மணி பார்த்தான் ஒன்று!

    இன்னும் என்னப் பண்ணுகிறார்கள்?

    தவிப்புடன் பால்கனியை திறந்துக் கொண்டு வெளியே வந்தான். அங்கே தோட்டத்தில் - செடி மறைவில் - சலனம் தெரிந்தது. வந்துவிட்டார்கள்!

    ஓடிப்போய் கதவை திறக்க - ஆட்கள் உள்ளேப் புகுந்தனர்.

    நந்தன் சீக்கிரமாய் கொண்டுப் போங்க! என்று சொல்லிவிட்டு பாத்ரூமில் புகுந்து கதறி கதறி அழ ஆரம்பித்தான்.

    அவர்கள் போய்விட்டார்கள்.

    கிருபா மட்டும் படுத்திருந்தாள். தொட்டில் காலி! கிருபா எழுந்திருப்பதாய்த் தெரியவில்லை. எழுந்ததும் குழந்தை எங்கே என்று கேட்பாளே - என்னச் சொல்லப் போகிறேன்?

    விடியும் வரை நந்தனுக்கு தூக்கமில்லை. இங்குமங்கும் உலாத்திக் கொண்டேயிருந்தான் உறுத்தல், தப்பு செய்து விட்டேனோ? குழந்தையை கொடுத்திருக்கக்கூடாதோ? உயிர் என்பது கடவுளின் கருணை. அதை ஆக்கவும் அழிக்கவும் அவனுக்கு மட்டும் தான் உரிமை.

    நான் எப்படி சம்மதித்தேன்?

    அவன் போரட்டத்தில் இருக்கும்போது போன் அலறிற்று. தயங்கி, தடுமாறி எடுக்க எதிர்முனையில் டாக்டர் பேசினார். மிஸ்டர் நந்தன்! ஸாரி ஃபார்த டிஸ்டர்பென்ஸ்! உங்களுக்கு ஒரு குட் நியூஸ்! அமெரிக்கவிலிருந்து என் சீனியர் கொஞ்ச முன்னாடி பேசினார்! உங்க குழந்தை மாதரியே அங்கே ஒரு கேஸாம்! சரி பண்ணிட்டாராம்! உங்க குழந்தையையும் உடனே அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கார். இப்போ சந்தோஷம்தானே - நான் விடிந்ததும் வரேன் - பை!

    நந்தன் - நடை பிணம் போல போனை வைக்க மறுபடியும் அது அலறிற்று. இப்போது - அந்த கூலி - கொலையாளிகள்!

    "சார்! கவலைப்படாதீங்க! குழந்தைக்கு எந்த இம்சையுமில்லாம விஷம் கொடுத்து - கடலில் தூக்கி போட்டுட்டோம். பேசினபடி பாக்கி தொகையை ரெடி பண்ணி வைங்க, காலைல

    Enjoying the preview?
    Page 1 of 1