Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thayangaathey Thakku
Thayangaathey Thakku
Thayangaathey Thakku
Ebook93 pages32 minutes

Thayangaathey Thakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466817
Thayangaathey Thakku

Read more from N.C.Mohandass

Related to Thayangaathey Thakku

Related ebooks

Related categories

Reviews for Thayangaathey Thakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thayangaathey Thakku - N.C.Mohandass

    1

    தூத்துக்குடியில் உள்ள கலவரங்கள் போதாதென்று பீச் ரோடின் பணிமய மாதா கோவிலருகே இருந்த அந்த எதிர்க்கட்சியின் மாவட்டச் செயலகத்திலும் அப்போது கலவரம்.

    அந்தக் கலவரத்துக்குக் காரணம் உள்ளூர் கோஷ்டிகள்! அவர்களின் சிங்கிடிகள் அப்போது குடுமிப் பிடியில்!

    தேர்தலில் தோற்றதற்கான காரணங்களை ஆராய வேண்டிக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் வாக்குவாதம்! வார்த்தைகளின் வெடிப்பு. அவன் தான் காரணம், இவன் தான் காரணம் என்று ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தைகள், கல்லெறியாத குறை.

    போதும்... போதும்! முதலில் உங்கள் சண்டைய நிறுந்துங்க!

    மாவட்டச் செயலாளரான சடகோபன் பொறுமையின்றிக் கத்தினார். அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம், கடா மீசை, கரை வேட்டி, தலையில் நரை.

    தேர்தல் தோல்விக்கு நிச்சயமாய் நானோ நீங்களோ காரணமில்லை: எல்லாத்துக்கும் காரணம் நமது தலைமைதான்கிறது ஊரறிந்த விஷயம். அவர்களின் ஆணவம்! ஆடம்பரம்! ஜனங்களையும் கட்சிகாரர்களையும் மதிக்காமல் தான்தோன்றியாய்ச் செயல்பட்டதன் விளைவுகளை இப்போது நாம் அனுபவிக்கிறோம்.

    குறுக்கே யாரோ தலையை நீட்டி, அதுமட்டுமில்லண்ணே! நீங்க சொன்ன வேட்பாளர்களுக்கு ஸீட்டு கொடுக்காததும்கூடக் காரணம்! நாங்களும் பார்த்துக்கிட்டுத்தான் வரோம். தலைவர் திட்டம் போட்டு உங்களை ஓரங்கட்டிட்டு வரார்!

    சேச்சே! தலைவர் நல்லவர். அவர் ஒருபோதும் எனக்கு எதிராகச் செயல்பட மாட்டார்.

    ஆமாம், நீங்க நினைச்சுட்டே இருங்க! கடைசியில் இந்தச் செயலாளர் பதவிகூடப் பறிபோகப் போகுது!

    பதவி போனால் போகுது. பதவியா நமக்குப் பெரிசு? பதவியை எதிர்ப்பார்த்து நான் கட்சியில் இல்லை. அப்படி இருந்திருந்தால் போனமுறை எனக்கு மந்திரி பதவி தராதபோது கட்சியிலிருந்து விலகியிருப்பேன்!

    நீங்க விலகியிருக்கணும் தலைவா! இப்போதும் ஒண்ணும் குடிமுழுகிவிடவில்லை. ம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க; உங்க பின்னாடி அணி திரள்கிறோம்!

    வேணாம். இந்த மாதரிக் கட்சியை உடைக்கிற எண்ணமெல்லாம் எனக்கில்லை. கட்சி ஏற்கெனவே பலவீனப்பட்டிருக்கு. நாம் வேறு அதை மேற்கொண்டு படுக்க வைச்சிரக் கூடாது. அதுவும் இந்த மாவட்டத்தில் இடைத்தேர்தல் வேறு வருகிறது. இந்த நேரத்தில் நாம் ஒன்றுபட்டுச் செயல்படணும். கட்சிக்கு வெற்றி தேடித் தரணும்!

    சடகோபன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது உதவியாளர் மூச்சிறைக்க ஓடிவந்து, ஆமாம்! நீங்க ஒன்றுபட்டுச் செயல்படணும்கிறீங்க. ஆனால் தலைவர் செஞ்சிருக்கிற காரியத்தைப் பாருங்க, என்று மாலை பேப்பரை நீட்டினார்.

    என்னப்பா...?

    இடைத் தேர்தலுக்கு நீங்கள் பொறுப்பாளர் இல்லையாம்! அந்த நீலமேகத்தைத் தலைவர் அறிவிச்சிருக்கார்!

    யாரு... அந்த ஊழல் மேகமா? மந்திரியாக இருந்தபோதே அந்தாளோட அதிகாரத்தைக் தாங்க முடியலே. அவனை எதுக்கு இங்கே அனுப்பணும்?

    எல்லாம் சடகோபனை ஒதுக்கத்தான்!

    விடக் கூடாது! நீலமேகம் தெருவுக்குள் வந்தால் எதிர்ப்புத் தெரிவிப்போம். அவருக்கு நாம் எந்த விதத்திலும் ஒத்துழைப்புத் தரக்கூடாது!

    சடகோபன் இடைப்பட்டு, சேச்சே! அப்படியெல்லாம் செய்யக்கூடாது. அப்புறம் கட்சி தோற்றுவிடும். உள்ளுக்குள் தோற்கணும் என்கிற வைராக்கியம்.

    தோற்றால் தோற்கட்டும். நமக்கு மானம்தான் பெரிது. வரட்டும் அவர்! நீலமேகத்துக்கு மட்டுமில்லை, தலைவருக்கும் பாடம் புகட்டுவோம்!

    ஆமாம். ஆமாம். அந்தாள் ஒரு விஷம். இப்போது விட்டோம் என்றால் அப்புறம் நம் மாவட்டத்திலும் கால் பதிச்சுருவான். எலக்ஷனில் கட்சியை ஜெயிக்கவிட்டால், மேலிடத்தில் பெயர் வாங்கி, சடகோபனை ஒன்றுமில்லாமல் பண்ணிவிடுவான்!

    அமைதி, அமைதி! உணர்ச்சிவசப்படாமல் நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். தலைவர்ட்ட நான் பேசறேன். உங்களுடைய உணர்வுகளை அவருக்கு எடுத்துச் சொல்றேன். அதுவரை பொறுமையாயிருங்க!

    "ஐயா! உங்களால் எப்படி இந்தச் சதியைத் தாங்கிக்கொள்ள முடிகிறது? இந்த ஊரிலும் மாவட்டத்திலும் கட்சியை வளர்ந்தது நீங்கள்! உங்கள் பணத்தை வாரி வாரி இறைச்சீங்க! மாநாடு நடத்தினீங்க!

    தலைவருக்குப் பெட்டி பெட்டியாய் அனுப்பினீங்க! அவருக்கு வேணுமானால் அதெல்லாம் மறந்து போயிருக்கலாம். எங்களுக்கு மறக்கலே. நாங்கள் உங்களின் விசுவாசிகள், ஆணையிடுங்கள்! அடிபணியக் காத்திருக்கிறோம்!"

    தொண்டர்களும், கமிட்டி உறுப்பினர்களும் கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.

    2

    திருச்சி புத்தூர்.

    பெரிய ஆஸ்பத்ரி வாசத்தை முகர்ந்தபடி, அதன் பின்புறமிருந்த வீட்டில் தனஞ்செயன் ஒருக்களித்துப் படுத்திருந்தான். அவனது முகத்தில் தெளிவில்லை. கண்களில் குழப்பம். ரேடியோவில் அப்போது இன்று ஒரு தகவல்!

    பூஞ்சை உடலுடன் அப்பா தெருவிலிருந்து உள்ளே ஓடிவந்து, தனா! நீ இன்னும் ரெடியாகலியா...? என்று இளைப்பு வாங்கினார். சோபியா இன்னைக்கு அனாதை விடுதியில் போய் வேலைக்குச் சேரணும். மறந்துட்டியா...?

    மறக்கலேப்பா. நான் எப்பவோ ரெடி! என்று எழுந்து தலை வாரிக் கொண்டான்.

    ஏன் ஒரு மாதிரி இருக்கே? உடம்பு முடியலையா...?

    அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. என்று அவரது பார்வையைத் தவிர்த்து, செருப்பு மாட்டினான். நான் போய் வண்டி பிடிச்சி வந்திடறேன்!

    வண்டியெல்லாம் ரெடி! சோபி! சீக்கிரம் நல்ல நேரத்தில் கிளம்பும்மா!

    இதோ ஆச்சு, என்று அவள் பெற்றோர் காலில் விழுந்து எழுந்தாள். தங்கைகளிடம் கண்கலாலேயே சொல்லிக்கொண்டு, வாசலில் காலையும்

    Enjoying the preview?
    Page 1 of 1