Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjathai Alli Konjam Thaa!
Nenjathai Alli Konjam Thaa!
Nenjathai Alli Konjam Thaa!
Ebook210 pages1 hour

Nenjathai Alli Konjam Thaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் தந்தை செய்த தவறால் சந்தோஷ் மற்றும் வந்தனா இருவரும் தன்களுடைய புத்திர பாக்கியத்தை மனமுவந்து இழந்து விடுகிறார்கள். ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்கின்றனர். அந்த குழந்தையாள் அவர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. அந்த குழந்தை யார்? அப்படி என்ன காரணம், யாரால் இவர்கள் வாழ்கையில் சதிச்செயல் நடக்கிறது? இறுதியில் தங்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபரை கண்டுபிடித்தார்களா? அவர்கள் வாழ்கையில் நிம்மதி பிறந்ததா? வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580132407019
Nenjathai Alli Konjam Thaa!

Read more from Nc. Mohandoss

Related to Nenjathai Alli Konjam Thaa!

Related ebooks

Reviews for Nenjathai Alli Konjam Thaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjathai Alli Konjam Thaa! - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா!

    Nenjathai Alli Konjam Thaa!

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    சந்தோஷ்! நேரமாச்சு. இன்னுமா கிளம்பலே? வாசலிலிருந்து அழைப்பு வர, இதோ ஆச்சு அங்கிள்! என்று பெல்ட்டை சரி பண்ணிக்கொண்டு, அவன் அறையைவிட்டு வெளியே ஓடிவந்தான். நெற்றியில் சந்தனம் தொட்டு, தலையைத் தூக்கி வாரி, எந்தவித பணக்காரத்தனமும், அதிகபிரசங்கித்தனமும் அவனிடம் தெரியவில்லை. அமைதி. அடக்கம்.

    காரில் பெட்டிகள் அடுக்கப்பட்டன. தோட்டத்தில் தொடங்கி காம்பவுண்டுக்கு வெளிப்பக்கம் வரை ஆட்கள் கூடிநின்று வேடிக்கைப் பார்த்தனர்.

    எதுக்கு இத்தனை பொட்டியாம்?

    தேன்நிலவுக்கு வெளிநாடு போறாங்கல்லே...?

    அதுக்காக?

    நாலு மாசப் பயணம்!

    ஓகோ! அப்போ வரும்போது மூணு பேரா வருவாகன்னு சொல்லு! என்று கிழவி ஒருத்தி தன் வயதுக்கு மீறி வேடிக்கை பண்ணிதானே சிரித்துக் கொண்டாள்.

    வந்தனா எங்கே...?

    இதோ இங்கிருக்கேன்! என்று நகையும், பட்டுச்சேலையும் அடர்ந்த முடியுமாய் தேவதை ஒன்று மிதந்து வந்து சந்தோஷின் அருகில் நின்றது. சரியான ஜோடி! என்று ஊர் அவர்களைப்பார்த்து கண்வைத்தது.

    செயலாளர் சுதாகரன் ஏறக்குறைய மைதானம் போல, வழுக்கைத் தலையுடன் அருகில் வந்தார். சந்தோஷ்! அப்பாட்ட ஆசீர்வாதம் வாங்கிக்குங்க! என்றார்.

    முகப்பின் நடுவில் சக்கர நாற்காலியில் ராமகிருஷ்ணன் புன்னகையும் பெருமிதமுமாய் அமர்ந்திருந்தார். தொண்ணூறு வயதின் முதுமை அவரது கன்னங்களிலும், உடலிலும் தெரிந்தது. முகம் சுருங்கி, கைகால்கள் தளர்ந்து - என்றைக்கோ போய் சேர்ந்திருக்க வேண்டியவரின் உயிரை - அவர் செய்த தர்மங்களும் அவற்றை அனுபவித்த ஏழைகளின் பிரார்த்தனையும் பிடித்து வைத்திருந்தது என்று சொல்லலாம்.

    அவரது சொத்து சுகமெல்லாம் அன்பு உள்ளங்களும் அவர்களது பாச நேசமும்தான்.

    சந்தோஷும், வந்தனாவும் ராமகிருஷ்ணனின் முன்னால் மண்டியிட வீல் சேரிலிருந்து எழுந்து ஆசீர்வதிக்க அவர் மிகவும் சிரமப்பட்டார். அவரது கண்கள் கரைந்து வடிய, காரியதரிசி சுதாகரன் ஓடி வந்து ‘பரவாயில்லை’ என்று அவர்களை தாங்கி எழுப்பினார்.

    அப்பாவின் தளர்ந்த உடலும் வெறுமையான கண்களும் சந்தோஷை என்னவோ பண்ணிற்று. அவன் தயங்கி நிற்க,

    என்ன தம்பி...?

    அப்பாவை இந்த நிலைமையில விட்டுட்டுப் போகணுமான்னு இருக்கு அங்கிள்!

    வந்தனாவின் முகம் அதைக் கேட்டதும் மாறிப்போயிற்று. கல்யாணமாகி ஒரு மாதமாயிற்று. இதுவரை எங்கும் போனதில்லை. போக முடிந்ததில்லை. வசதியான இடம் என்று வீட்டில் கட்டிக் கொடுத்து விட்டார்கள்.

    வாஸ்தவத்தில் அவளது குடும்பத்திற்கும், சந்தோஷிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத உயரம். கல்லூரியில் அவளைச் சந்தித்து விரும்பி மனதை பறிகொடுத்து - அவள்தான் வேண்டும் என்று அவன் பிடிவாதமாய் கைபிடித்திருந்தான்.

    வாழ்க்கையில் பணமும் - வசதி வாய்ப்புகளும் முக்கியம்தான். ஆனால் அவற்றை அனுபவிக்கவும் வேண்டுமே! அனுபவிக்க ஆசைப்படுபவனுக்கு வசதி அமைவதில்லை அமைந்தவர்களுக்கு அவகாசமில்லை அல்லது உடல் ஒத்துக்கொள்வதில்லை.

    பகிர்ந்து கொள்ள முடியாத அல்லது புசிக்க முடியாத செல்வத்தால் என்ன பலன்? பங்களா போல வீடு. ஓடிப் பிடித்து விளையாடும் அளவுக்கு மைதானம், பூங்கா, குளம்! ஆனாலும்கூட வெறுமை. தனிமை அவளை வாட்டிற்று.

    அழைத்தால் ஓடி வரவும், சேவகம் பண்ணவும் ஆட்கள் இருந்து என்ன பிரயோஜனம்? கட்டினவன் அருகில் இருக்க வேண்டுமே! சதா பிசினஸ், பிசினஸ் என்று ஓடிவிடுகிறான். தளர்ந்துபோய் வருகிறான். வீட்டுக்கு வரும்போதே அலுப்பையும் அழைத்துக் கொள்கிறான்.

    பார்த்தாலே பாவமாயிருக்கும். மடியில் போட்டுக்கொண்டு குழந்தைபோல தாலாட்டலாம் என்றுகூட நினைப்பாள். அதற்குள் தூங்கிப் போவான். ஒரு நாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை - இதுவே வாடிக்கையாகிவிட வந்தனாவிற்கு ஏமாற்றமாயிற்று.

    எரிச்சல், இளமை. இனியவன். எப்படியெல்லாம் இருக்கலாம் என்று கனவு கண்டால் எல்லாம் வீணாகிவிடுமோ என்கிற பயம் எழ ஆரம்பித்தது.

    சந்தோஷ்! இந்த சின்ன வயசுல இத்தனை பாரத்தை சுமக்கத்தான் வேண்டுமா?

    அப்புறம்?

    ஆள் வைத்து பார்த்துக்கக்கூடாதா?

    அப்பாவுக்கு மனதாக இருக்காது. எல்லாம் அவர் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்தது. அதைக் காப்பாற்றக்கூட நம்மால் முடியாமல் போகலாமா?

    அதுக்காக? நாள் முழுக்க அலைஞ்சு உடம்பை கெடுத்துக்கணுமா? யாருக்காக இந்த ஓட்டம்? எதுக்காக?

    வந்தனாவின் வழக்கமான அந்த கேள்விகள் இப்போதும் அவளது கண்கள் மூலம் ஏவுகணைகளாக வந்து தாக்கவே சந்தோஷ் உந்தப்பட்டது போல காரில் ஏறி அமர்ந்தான்.

    சந்தோஷம் என்பது பணத்தாலும், ஊர் சுற்றுவதாலும் வருவதில்லை மன அமைதியிலும், திருப்தியிலும் அது கிடைக்க வேண்டும்.

    டிரைவர்! இவங்களை பத்திரமாய் ஏர்போர்ட்டுல விட்டுட்டு, விமானம் புறப்பட்டுப் போனதும் வந்தாப் போதும் என்று சுதாகரன் அதட்டினார்.

    என்ன தெரிஞ்சுதா?

    சரிங்க.

    கார் அந்தத் தெருவை கடந்த பின்பு பங்களாவை நோக்கி ஆட்டோ ஒன்று பாய்ந்து வந்து நின்றது. அதில் இருந்து பாதிரியார் ஜோசப் இறங்கி தனது அங்கியையும் கண்ணாடியையும் சரி பண்ணிக்கொண்டு, எங்கே குழந்தைகள்... கிளம்பிட்டாங்களா? என்றார்.

    யூ ஆர் லேட் ஃபாதர்!

    "ஸாரி ஸாரி! பிரேயர் முடிஞ்சு கிளம்பறதுக்குள்ளே பயமாயிருச்சு. டூருக்கு முன் பிள்ளைகளை ஆசீர்வதிக்க முடியாமப் போச்சே!

    அதனாலென்ன - ஆசீரும், பிரார்த்தனையும் உங்க மனசுல இருந்தாப் போதும்! ராமகிருஷ்ணன் ஹீனமாய் பதிலளிக்க, பாதிரியார் அவரருகில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு, ரொம்ப பலகீனமா தெரியறீங்க! என்று விசனப்பட்டார். வெளிநாட்டுக்குப் போய் சிகிச்சை எடுத்துக்குங்கன்னு சொன்னா கேட்க மாட்டேன்றீங்க!

    இனிமே வெளிநாடு இல்லே சாமி. வெளிதேச பயணம்தான்

    என்ன அப்படிச் சொல்றீங்க? உங்களால நிறைவேற வேண்டிய காரியங்கள் இங்கு எவ்வளவோ இருக்கு.

    ராமகிருஷ்ணன் பேச்சை மாற்றி, ஆசிரமத்து பிள்ளைகளெல்லாம் எப்படி இருக்காங்க?

    உங்களோட உதவியாலயும் கர்த்தரோட ஆசீர்வாதத்தாலயும் அவங்களோட வாழ்க்கை ஓடிட்டிருக்கு என்ற பாதிரியார் சுதாகரன் பக்கம் திரும்பி, ஐயாட்ட அந்த விபரம் சொல்லிட்டீங்களா? என்றார்.

    என்ன அது?

    அது ஒண்ணுமில்லேய்யா... என்று சுதாகரன் தலையைச் சொறிந்து, குழந்தையை தத்தெடுத்து வளர்க்கணும். அப்போதான் உங்களோட வம்சம் விருத்தியடையும்னு ஜோசியர் சொன்னாரில்லே. அதுதான்!

    ஜோசியன் சொன்னாங்கிறதுக்காக வேணாம். தத்தெடுத்து வளர்க்கணும்ங்கிறது நல்ல விஷயம்தானே!

    அதுக்கு சந்தோஷ் ஒத்துக்கணுமே!

    "என்னோட சம்பாத்தியத்திற்கும் ஆசைக்கும் ஆஸ்திக்கும் உள்ள அவன் மறுக்கவாப் போறான்? அதுக்கான ஏற்பாட்டை நீங்க கவனிங்க

    அதுக்கில்லே ஐயா! சந்தோஷ் சம்மதிச்சாக்கூட கல்யாணமாகி வந்திருக்கிற மருமக வந்தனா சம்மதிக்கணுமே

    நான் இதுக்கு நிச்சயமா சம்மதிக்க மாட்டேன் என்று சந்தோஷின் கையை இடித்தாள் வந்தனா. கார் ஓடிக் கொண்டிருக்க, பின் சீட்டில் அவனுடன் நெருக்கமாய் அமர்ந்திருந்தவள் அவனது விரல்களை பற்றிக் கொள்ள

    விடு டிரைவர் பார்க்கிறான்! என்று உதறினான்.

    பார்த்தா என்னவாம் இனி உங்களை விடறதாயில்லை. வீட்டுலதான் பிரைவேஸி இல்லை. வெளியே இனி உங்களை தனியா விட சம்மதிக்க மாட்டேன் என்று அவனை இறுகக்கட்டிக் கொண்டாள்.

    வந்தனா! ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப்! இது வீடில்லை. பப்ளிக்குல எப்படி நடந்துக்கணும்னு உனக்குத் தெரிய மாட்டேங்குது. நான் உன் புருஷன்தானே! எங்கே ஓடிவிடப் போகிறேன்? ஏன் இப்படி ஸில்லியாய் பிஹேவ் பண்ணுகிறாய்?

    நான் ஸில்லிதான்!

    அவள் சட்டென விலகிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். அப்படி பிணக்கினால் உடன் ஆறுதலுக்கு வருவான் - அரவணைப்பான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம்.

    கிட்டே வந்தால் எகிறுவதும், எட்டிப் போனால் பணிவதும் கணவன் மனைவிக்குள் நடக்கும் அன்றாட கூத்துக்கள்தானே! அவன் அதற்கு அப்போது தயாராக இல்லாதது போல அமர்ந்திருந்தான்.

    கிடைத்த கொஞ்ச நேரத்தையும் வீணாக்க விரும்பாத வந்தனா, சரி, நானே பழம் விடறேன். இந்த நான்கு மாதங்களையும் நாம் ஜாலியாய் என்ஜாய் பண்ணனும், என்ன சொல்றீங்க?

    சரி

    நோ பிசினஸ்?

    அப்பா பாவமில்லையா?

    நான்?

    நீயுந்தான்!

    அப்போ என் மேல அன்பிருக்கு!

    இல்லாமயா விரட்டி விரட்டி உன்னை கைப்பிடித்தேன்.

    தாங்க்ஸ்! இனிமே அப்பாவையும் அவரது புராணத்தையும் விட்டுட்டு நான் சொல்றதைக் கேட்பீங்களாம்! என்று அவனது விரலை சொடக்குப் போட்டு டிரைவர்! இங்கே என்ன வேடிக்கை? முன்னாடி பார்த்து ஓட்டு! என்று விரட்டினாள்.

    நான் உங்களைப் பார்க்கல மேடம். பின்னாடி வர வண்டியை!

    நோ! உன் பார்வை முன்னோக்கி இருந்தாப் போதும்! சந்தோஷ்! நாம நமக்காக வாழணும். நமக்குன்னு சில லட்சியங்களை வகுத்துக்கணும். கடைசி வரை அன்பு மாறாம இருக்கணும். நிறைய பிள்ளைகளைப் பெத்துக்கணும்!

    அது முடியாது.

    ஏன்?

    ஒண்ணே ஒண்ணுதான் அலவ்ட்!

    இவ்ளோ சொத்துக்கு நூறு பிள்ளைகளை வளர்க்கலாம்.

    வளர்க்கறதுக்கு ஆட்சேபனையில்லை. பெத்துக்கதான்!

    வாட் யூ மீன்?

    அப்பாவோட லட்சியம். அனாதைகளை தத்தெடுத்து வளர்க்கணும்.

    அதான் அதுங்களுக்காக ஆசிரமமே நடத்தறாரே! அப்புறம் என்னவாம்? அந்த புண்ணியமெல்லாம் பத்தாதா?

    அவர் நிறைய பாவமும் பண்ணியிருக்கார்.

    என்ன... என்னவாம்? திரும்பும் பக்கமெல்லாம் ஊர் புகழுது, அவர் பெயரைச் சொன்னாலே உணர்ச்சி பொங்குது!

    அப்போது செல்போன் ஒலிக்க - சட்டென அவனிடம் இருந்து பிடுங்கி முதலில் இதை அடக்கி வைக்கணும் என்று நிறுத்தினாள். இது... இதுதான் என் முதல் எதிரி

    ஏய்... கொடு! என்ன நம்பர்ன்னு பார்க்கலாம்.

    ஸ்ட்ரிக்ட்லி... நோ! என்று வந்தனா அதை தன் ப்ளவுஸிற்குள் செருகிக் கொண்டாள். இப்போ என்ன பண்ணுவீங்க? தடை செய்யப்பட்ட ஏரியா!

    எனக்குமா? என்று புன்னகைத்தான்.

    ஆமாம்.

    எடுப்பேன்.

    எடுத்துப் பாருங்களேன்! கைவச்சா...

    என்ன செய்வியாம்...?

    வச்சாத் தெரியும் என்று மார்பை நிமிர்த்தினாள். ஏன் தயக்கம்...! கமான்! கமான்யா!

    பப்ளிக்குல வேணாம்னு பார்க்கறேன்.

    சாக்கு! சாக்கு! என்று பழிப்பு காட்டினாள். தெம்பு கிடையாது! துணிச்சல் கிடையாது! ஆண்மை கிடையாது!

    ஆமாம் கிடையாதுதான். ஏர்போர்ட் வந்திருச்சு. இறங்கு பெண்மையே!

    சில மாதங்கள் மகிழ்ச்சியாக ஊர் சுற்றிவரப் போகிறோம் என்கிற குதூகலத்துடன் குழந்தை போல அவனை கட்டிக்கொண்டு இறங்கினவளுக்கு அங்கே அதிர்ச்சி தகவல் ஒன்று வரவேற்க காத்திருந்தது.

    2

    புதிய பன்னாட்டு விமான தளம். தரை வழுக்கலுடன் ஏஸி குளிருடன் சவசலப்பு! பரிசோதனை! டிராலிகள்! போலீஸ்!

    எத்தனை முன்னெச்சரிக்கையாக புறப்பட்டாலும் பஸ், ரயில், விமான நிலையத்தை அடைந்து விட்டாலே ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்வது இயல்பாகி விடுகிறது. கார், டாக்ஸி, ஆட்டோக்களின் பாய்ச்சல் போர்ட்டர்களின் நச்சு! பிச்சைக்காரர்களின் நச்சரிப்பு! டிராலிகள்! லக்கேஜ்!

    சென்னை பன்னாட்டு விமான தளத்தில் அப்போது ஒரு கூட்டம் தினசரி டெல்லிக்குப் போய்வரும் மந்திரியை வழியனுப்ப காத்திருந்தது. இவர்களுக்கு வேறு வேலையே இல்லை என்பதுபோல கோஷங்கள்! சிங்கமே, தங்கமே, தக்காளியே... என்று வாங்கின காசுக்கு வஞ்சனையில்லாமல் விசுவாசம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

    வண்டியைப் பார்க்கிங்கில் போட்டுவிட்டு வந்த டிரைவர், நானும் உள்ளே வரட்டுங்களா...? என்றான்.

    சந்தோஷ், வேணாம். விசிட்டர்களுக்கு உள்ளே அனுமதியில்லை போலிருக்கே! என்று தயங்கினான்.

    அஞ்சு ரூவா கைல வச்சா போதும் சார். போலீஸ் ஆட்டோமாடிக்கா வழி விடும்!

    டிராலியில் லக்கேஜைபோட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1