Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unmaiyai Nokki...
Unmaiyai Nokki...
Unmaiyai Nokki...
Ebook395 pages1 hour

Unmaiyai Nokki...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் எனது முயற்சி இது. பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் புலவர் திரு. அரங்க நெடுமாறனும் எழுத்தாளர் திரு. என்.சி. மோகன்தாஸும் என்னைப் பற்றி அறிந்து, அவற்றைப் புத்தகமாக்கினால் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அபிப்பிராயப்பட்டு அதை செயல்படுத்த இங்கே நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.

வணிக ரீதியாக உலகம் முழுக்க சுற்றுவதற்கிடையில் இங்கு முடிந்தவரை தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன் ஓரளவிற்கு!

முன்னேற நினைக்கும் ஒருவருக்கு ஏழ்மையும் வறுமையும் நிச்சயம் தடையல்ல என்பதே எனது கருத்து. ஒரு வகையில் பார்த்தால் ஏழ்மையும் கூட ஒரு வரப்பிரசாதம் என்பேன்.

பிரச்னைகள் கஷ்ட நஷ்டங்களிலிருந்து வெளியேறியாக வேண்டும் என்கிற உந்து சக்தியை ஏற்படுத்தி முயற்சியைத் தூண்டுகிறது ஏழ்மை. தாய் தந்தையரை நான் மிகவும் மதித்தேன். நேசித்தேன். தினந்தோறும் பூஜித்தேன். கண்ணாடி முன் நின்று என் முகத்தைப் பார்க்கும் போது, அவர்களைப் பார்ப்பதாகவே உணர்வேன்.

அப்போது ‘நான்’ என்பது வெறும் நானல்ல என்பது புரிந்தது. அதன்காரணமாகவே, ஆணவம், செருக்கு, வீம்பு, இறுமாப்பு, பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றிற்கு இடம் கொடுப்பதில்லை.

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580132407027
Unmaiyai Nokki...

Read more from Nc. Mohandoss

Related to Unmaiyai Nokki...

Related ebooks

Reviews for Unmaiyai Nokki...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unmaiyai Nokki... - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    உண்மையை நோக்கி...

    டாக்டர் R. சீதாராமனின் வாழ்க்கைப் பயண அனுபவங்கள்

    Unmaiyai Nokki...

    Dr. R. Seetharamanin Vazhkai Payana Anubavangal

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை - புலவர் அரங்கநெடுமாறன்

    என்னுரை - டாக்டர் ஆர். சீதாராமன்

    (CEO, DOHA BANK GROUP)

    நான் பாக்யவதி!

    Awards and Honours of Dr R. Seetharaman

    ஒரு நிமிடம் ப்ளீஸ்...- என்.சி.மோகன்தாஸ்

    உள்ளே நுழையும் முன்... - என்.சி. மோகன்தாஸ்

    பிறந்த மண்ணை நோக்கி...

    வீடு வீடாக பேப்பர்

    பக்குவமான பாட்டி

    தாய்க்கு பணிவிடை

    பரீட்சைக்கு ஒரு பரீட்சை

    உலகம் ஒரு நாடக மேடை

    கால் ரூபாய் மகத்துவம்

    அம்மாவுக்கு மிக்ஸி

    அதிலே ஒரு சுகம்

    ரேடியோ பெட்டி

    கூட்டு முயற்சி...

    பணம்... பணம்...

    என் பேரன் ஆடிட்டர்...

    நடிகர் திலகமும் நானும்

    எதிர்நீச்சல்

    அணில் சேவை

    பறந்து... பறந்து...

    நான் என்பது நானல்ல!

    சவாலே... சமாளி

    புதிய சவால்கள்...

    ஒரு புண்ணிய ஜன்மம்...

    தொழில் தர்மம்

    அப்பாவின் ஆசை

    எல்லாம் நம்கையில்...!

    வாழ்க்கையே ஒரு வாய்ப்புதான்

    தாயும், தந்தையும் முன்னறி தெய்வங்கள்

    பறந்து விரிந்த இந்திய கலாசாரம்

    பசுமை உலகம் படைப்போம்

    நிறைவாக...

    பாசமான தம்பி

    இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த தமிழர்

    தாயைப் போற்றுகிறவன் தரணியெல்லாம் போற்றப்படுவான்

    மனதில் நிற்கும் மாமனிதர்!

    இப்படி ஒருவரை பார்த்ததில்லை

    சீதாராமன் ஒரு அற்புதமான கலவை

    வெள்ளை மன தமிழக, இந்தியன்!

    பெருமைக்குரிய தமிழர்!

    எளியவர், வலியவர், இனியவர்!

    பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்ப்பவர்

    இவர் ஒரு உற்சாக ஊற்று

    அற்புத மனிதர்

    அப்பாவின் தூதுவர் இந்த சீதாராமன்

    சீதாராமனிடம் சிவாஜியைப் பார்க்கிறேன்

    முன்னுரை

    - புலவர் அரங்கநெடுமாறன்

    தன்னம்பிக்கைத் தமிழர்

    அரச மரியாதை, குணமுள்ள மனைவி, உழைத்துக் கிடைக்கும் உணவு, குழந்தையின் மழலை இவை நான்கையும் அமிர்தம் என்று சொல்வார்கள்.

    இவை நான்கும் ஒருங்கே அமையப் பெற்றவர் டாக்டர் சீதாராமன்.

    இன்று உலகிலேயே மிக உயர்ந்த கார்கள் தனக்கு, மனைவிக்கு, மகள்களுக்குப் பெற்று செல்வம் செல்வாக்கில் வாழ்ந்தாலும் வந்த வழி மறக்காதவர். யதார்த்தத்தையும் மனிதநேயத்தையும் மதிப்பவர்.

    எண்ணிலடங்கா விருதுகள் இவரைத் தேடி வந்திருக்கின்றன. இன்னும் வர இருக்கின்றன. (அந்தப் பட்டியல் வேறு பக்கங்களில்)

    தோஹா நாட்டு அரசரின் இந்திய விஜயத்தின் போது அந்நாட்டின் சார்பாக வந்த உயர்மட்டக் குழுவில் சீதாராமனும் இடம் பெற்றது இவரது சிறப்பு.

    வெளிநாட்டில் படித்தால்தான் ஜொலிக்க முடியும் என்றில்லை. இந்தியப் படிப்பும் சிறந்ததே என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

    எத்தனை வளர்ந்தாலும் பிறந்த மண்ணையும், படிப்பித்தவர்களையும் மறக்காத குணம் இவருக்கு,

    C:\Users\ram\Pictures\உன்மை 1.JPG

    Honorary Degree, Doctor of Laws 2012 during the 229th

    Commencement Ceremony of Washington College

    தொடக்கப் பள்ளியில் திரு லச்சு வாத்தியார், காந்திமதி டீச்சர், தலைமையாசிரியர் திரு. ஜானகிராமன், கட்டுப்பாட்டுடன் நடக்கக் கற்பித்த பள்ளி ஆசிரியை திருமதி ரத்னாபாய், தலைமையாசிரியர் திரு. பாலு வாத்தியார், அறிவுரைகள் வழங்கிய பக்கத்து வீட்டு திரு. ராஜகோபால் என சீதாராமன் பலரையும் நினைவு கூறுகிறார்.

    கத்தார் நாட்டின் தோஹா வங்கிக் குழுமத்தின் தலைவராக இருக்கும் இவரை ஒரு மேதை எனலாம். உலக பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்து விரல் நுனியில் வைத்திருக்கிறார். எந்தவித குறிப்புகளும் இல்லாமல் மணிக்கணக்கில் சொற்பொழிவாற்றுகிறார்.

    இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் ஏராளம்.

    மஹாபாரதத்தில் இவருக்குப் பிடித்த கதாபாத்திரம் கர்ணன்.

    அவன் சத்யம் தவறாதவன். பிறருக்கு உதவுபவன். கொடுத்த வாக்கு மாறாதவன். அஞ்சாநெஞ்சன். நட்புக்கு மரியாதை தருபவன். இரக்க குணமும் தொண்டுள்ளமும் ஒருவருக்கு கருவிலேயே அமைய வேண்டும். சீதாராமனுக்கும் அமைந்திருக்கிறது கர்ணனைப் போலவே!

    வெற்றியாளர்களுக்கும், தோல்வி அடைந்தவர்களுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு.

    வெற்றி பெற்றவர்கள், வாய்ப்புகள், சவால்கள், மாற்றங்கள், கடுமையான முயற்சி, ஆக்கப்பூர்வமான உழைப்பு பற்றி சிந்திக்கிறார்கள்.

    தோல்வியாளர்கள், வறுமை,பிரச்னைகள், பின்னடைவு, இயலாமை, ஒவ்வாமை, பொறாமை, போதாமை பற்றி புலம்பி பொழுதை கழிக்கிறார்கள்.

    ‘வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்’ என கவிஞர் தாராபாரதி பாடியிருக்கிறார்.

    ‘செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்’ என்கிற பட்டுக்கோட்டையாரின் வரிகள் சீதாராமனுக்கு மிகவும் பொருந்தும்.

    ஏறக்குறைய கடந்த பத்து வருடங்களாய் திரு. சீதாராமனுடன் பழகி வருகிறேன். தோஹாவிற்கு தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்காகவும்,

    அது தவிர இவரது விருந்தினராகவும் போய் வந்திருக்கிறேன்.

    கேட்டு, பார்த்து, கவனித்து, பேசி, பழகினதில் பல அற்புதமான விஷயங்கள் இவரிடம் கொட்டிக் கிடப்பதை அறிய முடிந்தது.

    எத்தனை பேர்களுக்கு இவரை பார்க்க, பழக இவரது சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கும்? அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களும் பயன்பெறும் வண்ணம் இவரது அனுபவங்களை எழுதி ஏன் புத்தகமாக்கக் கூடாது என்று களத்தில் இறங்கித் தொகுக்க ஆரம்பித்தேன்.

    C:\Users\ram\Pictures\unmai 2.JPG

    Business Man of the Year Award -2015

    நண்பர் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் அதை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறார்.

    ‘எண்ணிய முடிதல் வேண்டும்.

    நல்லவே எண்ணல் வேண்டும்.

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்

    தெளிந்தநல் லறிவு வேண்டும்’

    பாரதியின் வரிகளுக்கு வாழும் ஓர் உதாரணமாக இருக்கும் டாக்டர் சீதாராமனை மகிழ்வோடு பகுத்தறிய - படித்து அறிய, உங்களை அழைக்கிறேன்.

    நன்றி!

    அன்புடன்,

    புலவர் அரங்கநெடுமாறன்,

    புதுக்கோட்டை.

    என்னுரை

    - டாக்டர் ஆர். சீதாராமன்

    (CEO, DOHA BANK GROUP)

    வணக்கம்.

    கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் எனது முயற்சி இது.

    பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் புலவர் திரு. அரங்க நெடுமாறனும் எழுத்தாளர் திரு. என்.சி. மோகன்தாஸும் என்னைப் பற்றி அறிந்து, அவற்றைப் புத்தகமாக்கினால் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அபிப்பிராயப்பட்டு அதை செயல்படுத்த இங்கே நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.

    வணிக ரீதியாக உலகம் முழுக்க சுற்றுவதற்கிடையில் இங்கு முடிந்தவரை தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன் ஓரளவிற்கு!

    முன்னேற நினைக்கும் ஒருவருக்கு ஏழ்மையும் வறுமையும் நிச்சயம் தடையல்ல என்பதே எனது கருத்து. ஒரு வகையில் பார்த்தால் ஏழ்மையும் கூட ஒரு வரப்பிரசாதம் என்பேன்.

    பிரச்னைகள் கஷ்ட நஷ்டங்களிலிருந்து வெளியேறியாக வேண்டும் என்கிற உந்து சக்தியை ஏற்படுத்தி முயற்சியைத் தூண்டுகிறது ஏழ்மை. தாய் தந்தையரை நான் மிகவும் மதித்தேன். நேசித்தேன். தினந்தோறும் பூஜித்தேன். கண்ணாடி முன் நின்று என் முகத்தைப் பார்க்கும் போது, அவர்களைப் பார்ப்பதாகவே உணர்வேன்.

    அப்போது ‘நான்’ என்பது வெறும் நானல்ல என்பது புரிந்தது.

    அதன்காரணமாகவே, ஆணவம், செருக்கு, வீம்பு, இறுமாப்பு, பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றிற்கு இடம் கொடுப்பதில்லை.

    எனக்குள் உயிராக உடலாக ரத்தமாக நரம்பாக உணர்வாக என்னுள் கலந்திருந்த பெற்றோரைப் பார்த்தேன். அவர்கள் மூலம் இறைவனையும்!

    தாயின் அன்பு என்னை மனிதனாக்கியது

    தந்தையின் அறிவு சிந்திக்க வைத்தது.

    அதனால் உழைப்பு என்ற அஸ்திவாரத்தில் உண்மை எனும் மாளிகையை உருவாக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே சிந்திக்க ஆரம்பித்தேன்.

    உலகம் தந்திருக்கும் பலன்கள் அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து நாட்டினருக்கும் பொதுவானவை.

    வசதியில்லாதவனுக்கு உயரிய எண்ணங்கள் தேவைதானா என நான் யோசித்ததேயில்லை. இதனால் சிந்தனை உயர்ந்தது. அது செயலாக உருப்பெற்றது.

    குடும்பத்தை சூழ்நிலையை சமூகத்தைப் புரிந்துக் கொள்ள முயற்சித்த போது எனக்குள் ஏற்பட்ட வீச்சுக்கள், ஆவேசங்கள், கோபங்கள், துணிச்சல்கள் இவைதான் இன்றைய நான்!

    எனக்குள்ளும் வெளியேயும் நடந்த போராட்டங்கள் சந்தித்த சவால்கள் இவைதான் இப்புத்தகம். வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது.

    துணிந்து நின்றால் தோல்வியில்லை. நேர்மையும் நியாயமுந் தான் நம் மனதிற்கு நிறைவையும் நிம்மதியையும் கொடுக்கும்.

    C:\Users\ram\Pictures\unmai 3.JPG

    தந்தை திரு. ராகவ ஷர்மா, தாயார் திருமதி துர்காம்பாள்

    எத்தனை உயர்ந்தாலும், உலக அரங்கில் நம் கருத்துகள் ஒலித்தாலும், பழையதை பட்ட கஷ்டங்களை நினைவில் கொண்டிருத்தல் நலம்.

    இளமையில் பணத்திற்காக பலதரப்பட்ட வேலைகளை நான் செய்திருக்கிறேன். ஆனாலும்கூட ஏழையாகப் பிறந்ததற்காக ஒருநாள் கூட வருந்தியதில்லை.

    எதிர்ப்புகள் வரலாம்; எதிரிகளின் வஞ்சகமும் சூதும் நம்மைத் தாக்கலாம்; முன்னேற்றத்திற்குத் தடைகள் ஏற்படலாம், ஏற்படுத்தப்படலாம்.

    சத்தியம் நம் பக்கமிருந்தால் அவற்றை எளிதாய் விரட்டியடிக்கலாம்.

    அதற்கு நாம் நாமாக இருக்க வேண்டும். நம் பலத்தை நாம் உணர வேண்டும். நம் மனம்தான் நமக்கு நீதிபதி. அதிபதியும்கூட.

    வாழ்வதற்காக வசதியைத் தேடிக் கொள்ளலாம். ஆனால், வசதிக்காக வாழ்க்கையை இழந்து விடக்கூடாது;

    அமைதிக்காக பணம் ஈட்டலாம். பணத்திற்காக அமைதியை இழந்து விடக்கூடாது;

    உண்மைக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம். எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுக்கக்கூடாது;

    நான் பயணித்து வந்த பாதை கல்லும் முள்ளும் நிறைந்தவை. முன்னேறத் துடிப்பவர்களுக்கு, இவைகள் வழிகாட்டியாகவும் காலுக்கு மெத்தையாகவும் பயன்பட வேண்டும் என்பதற்காக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    நம் ஆன்மா வளர்ச்சி பெறவும், வளத்துடன் வாழவும், மகிழ்ச்சி பெறவும் இயற்கை பல விஷயங்களை நமக்கு அளித்திருக்கிறது. இந்த நூல் அவற்றைக் கண்டறியும் முயற்சி என்றுகூட சொல்லலாம்.

    வாழ்வில் நான் படிப்படியாய் ஏறிக் கொண்டிருக்கிறேன்.

    இன்னும் ஏறவேண்டிய படிகளும், பணிகளும் ஏராளம்!

    அதற்குக் கைகோர்த்துப் பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

    இந்தச் சந்தர்ப்பத்தில்,

    என் அனுபவங்களைக் கிரகித்து, சிரத்தையுடன் எழுதித் தொகுத்திருக்கிற புலவர். திரு. அரங்க நெடுமாறனுக்கும், எழுத்தாளர் திரு. என்.சி. மோகன்தாஸ், வண்ணப்படம் திரு. போகா, வாழ்த்துச் செய்திகள் தந்திருக்கிற நண்பர்கள் அவர்களுக்கு,

    மிக்க நன்றி!

    அன்புடன்,

    R. சீதாராமன்

    C:\Users\ram\Pictures\unmai 4.JPG

    தாய் துர்காம்பாள் பிறந்த நாளின்போது மனைவியுடன்

    நான் பாக்யவதி!

    சீதாராமனிடம் உள்ள அந்த பிரகாசம், உற்சாகம், கனிவு, பாசம் எல்லாமே இயல்பாகவே சங்கீதாவிடம் அமைந்திருப்பது விசேஷம். இருவருக்கும் ஒரே ரசனை! ஒத்துப் போகிற விஷயங்கள் ஏராளம். மாற்று ரசனைக்கும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பு தெரிவிக்காமல் அனுசரித்துப் போவதால் இருவருக் குள்ளும் சண்டையே வருவதில்லை என்று புளகாங்கிதம் அடைகிறார் சங்கீதா.

    மும்பையிலேயே வளர்ந்ததால் சங்கீதாவுக்கு தமிழ் அத்தனை போதாது. ஆனாலும் கூட சீதாராமனின் தமிழ் இலக்கிய ஆர்வத்தை ரசித்து வீட்டில் பேசிப் பேசி பேச்சுத் தமிழில் தேர்ச்சி பெற்றுவிட்டார்.

    திருமணத்திற்கு முன்பு இரண்டு பக்கமும் நடுத்தரக் குடும்பம்தான். சீதாராமனின் தங்கை பாரதிதான் சங்கீதாவை முதலில் பார்த்தாராம். பிறகு தம்பி ரங்கேஷ் மற்றும் பெற்றோர்களும் சேர்ந்து நடத்தி வைத்த திருமணம் இது.

    சங்கீதாவுக்கு சீதாராமனைப் பற்றி அப்போது எதுவும் தெரியாது. திருமணத்திற்கு முன்பு இரண்டு முறைதான் பார்த்திருக்கிறார். என்னதான் படித்து, மும்பையில் வளர்ந்து உச்சராக பணிபுரிந்து வந்தாலும்கூட சங்கீதாவுக்குள் சீதாராமனைப் பற்றி யாரோ... எவரோ... நமக்கு ஒத்து வருவாரோ... என்கிற படபடப்பு இருக்கத்தான் செய்தது.

    C:\Users\ram\Pictures\unmai 5.JPG

    Family Picture in front of White House, Washington.

    சங்கீதாவின் பெற்றோர்தான், ராமன் மிக நல்ல பையன். அம்மாவையும் தங்கையையும் நல்லா பார்த்துக்கிறார். அவங்க மேல அன்பா இருக்கார். அதுபோல மனைவியையும் நிச்சயம் நல்லா வச்சுப்பார்! என்று தெம்பு தந்தார்களாம்.

    அது பொய்க்கவில்லை. பெற்றோர்களின் கணிப்பு முழுக்க முழுக்க நிஜம்! என்று பூரிக்கிறார் சங்கீதா.

    அவரிடம் எனக்குப் பிடித்தது. எல்லாவற்றிலும் பாஸிடிவ் அப்ரோச் எதுவாயிருந்தாலும் நேராய் பேசிவிடுவார். எதற்கும் கலங்கமாட்டார். தயங்கமாட்டார். சரியென்று தோன்றுவதை செய்து முடித்துவிடும் தீவிரவாதி இவர்! அதேமாதிரி எதைச் செய்தாலும் பிறருக்கு பாதிப்பு வராமல், பிறர் துன்பப்படாமல் பார்த்துக் கொள்வார்.

    இவருக்கு கோபம் ரொம்ப அரிதாய்த்தான் வரும். சமயத்தில் நான் படபடப்பாய் பேசினாலும், சாந்தப்படுத்தி விடுவார். இவரிடம் உள்ள இன்னொரு நல்ல குணம் யாரையும் குறைவாக மதிப்பிடுவதில்லை. அதேமாதிரி யாரைப்பற்றியும் குறையாக பேசுவதில்லை. இருவருமே எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. போய் பித்தலாட்டம் புரளி இவற்றை அருகில் சேர்ப்பதில்லை.

    இது இருவருக்கும் எங்கள் பெற்றோர்கள் மூலம் கிடைத்த குணம் என்று நினைக்கிறேன்.

    பொதுவாக வளைகுடா நாடுகளில் வெள்ளி, சனி விடுமுறை அன்றுகூட ராமன் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். ஆரம்பத்தில் என்ன இப்படி இருக்கார் என நான் நினைத்ததுண்டு. ஆனால் போகப் போக அவரது ஆத்மார்த்த உழைப்பு புரிந்ததும், நானும் அவற்றில் பங்கேற்க ஆரம்பித்தேன்.

    என்னதான் அலுவலகத்தில் பிஸி என்றாலும், வீட்டிற்கு வந்து விட்டால் மனிதர் அமைதியாகி விடுவார். பிறரின் கருத்துகளை வரவேற்பார். காது கொடுத்துக் கேட்பார்.

    C:\Users\ram\Pictures\unmai 6.JPG

    இத்தாலியில் குடும்பத்தினருடன் சீதாராமன்

    C:\Users\ram\Pictures\unmai 7.JPG

    Mahatma Gandhi’s statue in France - June 2014.

    குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவார். குழந்தைகளோடு குழந்தையாய் சேர்ந்து விளையாடுவார்.

    என்ன வசதி இருந்தாலும் கடந்துவந்த பாதையை மறக்காமல், பழகினவர்களைத் துறக்காமல் இருப்பது இவரது இன்னொரு சிறப்பு.

    ஆரம்ப காலங்களில் எங்களுக்குக் கார் கிடையாது. அக்கம் பக்கமெல்லாம் நடந்துதான் செல்வோம். அவரைப் போலவே எனக்கும் ஆடம்பரம் பிடிப்பதில்லை.

    எனது விருப்பு வெறுப்புக்கு அவர் குறுக்கே நிற்பதில்லை. எனது ஆசாபாசங்களுக்குத் தடைபோடுவதில்லை. இப்படி இரு... அப்படி இரு என்று கட்டளை இடுவதில்லை. நான் விரும்பும் பொருட்களை உடனே வாங்கிக் கொடுத்து விடுவார்.

    இவரது ‘நாள் முழுக்க’ வேலையை அறிந்து, வீட்டில் சும்மா உட்கார்ந்து போரடிக்க வேணாமே என்று இவருக்குத் தெரியாமலேயே இந்தியாவில் இருக்கும் போதே ஓமனில் டீச்சர் வேலைக்கு மனு போட்டு, இன்டர்வியூ அட்டென் பண்ணி வேலையும் கிடைத்துவிட்டது. அதற்கும் இவர் முகம் களிக்கவில்லை.

    எனக்கு பெயிண்டிங் பிடிக்கும். சின்மயா, தியாகராஜர் வகுப்புக்கெல்லாம் செல்வேன். அனைத்தையும் இவர் ஊக்கப்படுத்துவார்.

    இவரிடம் பாராட்டும்படி உள்ள அடுத்த குணம் தொண்டுள்ளம். உதவும் குணம். நம்மிடம் உள்ளதற்கு மகிழ்ந்து, பேராசை தவிர்த்து, தேவை உள்ளவர்களுக்கு உதவி, மனநிறைவோடும் அமைதியோடும் வாழ வேண்டும் என்பார்.

    இவையெல்லாம் கடுமையான உழைப்பு பெற்றோர் மற்றும் இறைவனின் கருணையால் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ராமனுக்கு சீதையாக வாய்க்க முடிந்ததை நிச்சயம் எனது பாக்யம் என்றே சொல்வேன்!

    Awards and Honours of Dr R. Seetharaman

    - Sethu Nagarajan, Dinamalar

    2016

    Enjoying the preview?
    Page 1 of 1