Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Agavarigal
Agavarigal
Agavarigal
Ebook126 pages43 minutes

Agavarigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒருபுறம் இயந்திரம், மறுபுறம் மிருகம். அதுதான் மனிதம். தராசின் ஆடும் முள்தான் வாழ்க்கை. முள்ளை மனிதத்திலேயே, அதன் ஒப்பீட்டு பக்கத்திலேயாவது நிறுத்தினால் பிழைத்தோம். சுப்ரமண்ய செல்வா நிறுத்துகிறார். நம்மைத் தூக்கி நிறுத்துகிறார். ஒவ்வொரு நாளும், வேளையும், நம்மை தட்டிக்கொடுத்து, சுட்டிக்காட்டி, எடுத்துக்கூறி... தினமும் காலையில், பணிப்பளுவில் மறந்துவிட்டால், ஒரு நாளில் ஏதோ ஒரு வேளையில் படித்தால், குழப்பாமல், எளிமையாக நிறுத்துகிறார் என்பதே அவர் சிறப்பு.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580146007336
Agavarigal

Related to Agavarigal

Related ebooks

Reviews for Agavarigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Agavarigal - Subramanya Selva

    https://www.pustaka.co.in

    அகவரிகள்

    வாழ்க்கை திசைகாட்டி பாகம்: 1

    Agavarigal

    Vazhkkai Thisaikaati Part - 1

    Author:

    சுப்ரமண்ய செல்வா

    Subramanya Selva

    For more books

    https://www.pustaka.co.in/home/author/subramanya-selva

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அகவரிகள் பற்றி

    ஒருபுறம் இயந்திரம், மறுபுறம் மிருகம். அதுதான் மனிதம். தராசின் ஆடும் முள்தான் வாழ்க்கை. முள்ளை மனிதத்திலேயே, அதன் ஒப்பீட்டு பக்கத்திலேயாவது நிறுத்தினால் பிழைத்தோம். சுப்ரமண்ய செல்வா நிறுத்துகிறார். நம்மைத் தூக்கி நிறுத்துகிறார். ஒவ்வொரு நாளும், வேளையும், நம்மை தட்டிக்கொடுத்து, சுட்டிக்காட்டி, எடுத்துக்கூறி... தினமும் காலையில், பணிப்பளுவில் மறந்துவிட்டால், நாளில் ஏதோ ஒரு வேளையில் அவரைப் படிப்பேன். குழப்பாமல், எளிமையாக நிறுத்துகிறார் என்பதே அவர் சிறப்பு. அவருடன் தொடர்புக்கு, எனக்கு மாணவப்பருவத்திலிருந்து தகவல் தரவு இருக்கிறது. சரிதான், இன்றும் அவரை வாசிக்கும்போது என்னை மாணவனாக உணர்கிறேன்.

    Hon.Mano Ganeshan | Member of Parliament /

    Former Minister | Colombo - Sri Lanka

    என்னை வந்தடையும் உங்கள் அகவரிகள் சகமனிதர்கள் மீதான உங்களுடைய பேரன்பின் வெளிப்பாடு. வாசிக்கும் வாய்ப்பு கிட்டும் அனைவருக்கும் அது அகத்தூண்டுதலை அளித்து அவர்களுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்ள உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாழ்த்துகள்.

    Dr. Dhanasekar | Salem - India

    தங்களுடைய பதிவுகள் மனிதமன ஓட்டங்களை, எண்ணங்களை பிரதிபலிக்கின்றன. அவை என்னை நிதானித்து திரும்பிப் பார்க்க வைக்கின்றன. எனக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கின்றன. மிக்க நன்றி.

    S. Thanabalan | Chennai - India

    சிறிய, சிந்திக்க வைக்கும் பதிவுகள்தான் காலத்தின் தேவை. அகவரிகள் அதனைக் கச்சிதமாக நிறைவேற்றுகிறது.

    Mrs. Vasanthy Thayabaran | Colombo - Sri Lanka

    தமிழ்மேல் ஈடுபாடுகொண்ட அல்லது தமிழ்மேல் ஆர்வம்கொண்ட என் போன்றவர்களுக்கு செல்வா ஒரு பலாச்சுளை. அந்த பலாச்சுளையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிந்துகொள்ள சிறு அவகாசமெடுத்து அவரது ஆக்கங்களை அசைபோடுங்கள்; அசந்துவிடுவீர்கள்!

    A.H.M. Iqbal | Colombo - Sri Lanka

    நண்பரே! உங்கள் பதிவுகள் எனது நாளை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள உதவுகின்றன. நன்றி. தொடரட்டும் உங்கள் இந்த மானுடப்பணி.

    Mogan Mathias | Paris - France

    பெரும்பாலோர் மனம் தளர்ந்திருக்கும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் உங்கள் வரிகள் உற்சாகமும் வாழ்க்கை மீதான நம்பிக்கையையும் தருகின்றன. இந்நூல் பலருடைய வாழ்வில் நிச்சயம் ஒளியூட்டும். வாழ்த்துகள்!

    K. Chandrasekaran | Toronto - Canada

    அழகிய தமிழில் பதிவிடப்படும் தங்களுடைய அகவரிகள் மீண்டும் மீண்டும் வாசிக்கவும், சிந்திக்கவும் தூண்டுகின்றன. அவற்றின் தொகுப்பான இந்த நூல் வாசிக்கும் அனைவருக்கும் நிச்சயம் பயன்மிக்கதாக இருக்கும்.

    G. Srinivasan | Doha - Qatar

    சுப்ரமண்ய செல்வா அவர்களின் ‘அகவரிகள் - பாகம் 1’ நேர்மறை சிந்தனைகளும், அகத்தூண்டுதல் அளிக்கும் அற்புத கருத்துகளும் நிறைந்த ஒரு அறிவுக் கருவூலம். அது இந்த வேகமான உலகில் ஒடிக்கொண்டிருக்கும் உங்களை சற்று நிறுத்தி வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க வைக்கும்; வாழ்க்கையின் அர்த்தத்தையும், அதனை முழுமையாக வாழவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும். மகத்தான சிந்தனைகளின் தொகுப்பான இந்த நூலை பரிந்துரைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

    Kandasami Paramaguru | Riyadh - Saudi Arabia

    உங்களுடைய வலைப்பதிவுகள் உடனடி ஊக்கம் அளிக்கவல்லவை என்றால் அது மிகையாகாது. காலவோட்டத்தில் நாம் மறந்துவிட்ட ஆனால் மறக்கக்கூடாத பல வாழ்வியல் விழுமியங்களை எமக்கு நினைவூட்டி அவற்றின் மதிப்பை உணர்த்துகிற உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்களுடைய இந்த அற்புத சமூகப்பணி.

    D. Manohararanjan | Dubai - U.A.E.

    உங்கள் பதிவுகள் அனைத்தும் தனிமனித வாழ்க்கை நெறிகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் என்பவற்றை சார்ந்து அமைத்துள்ளன. வழிநடத்தல் என்பது மிகவும் முக்கியமானது. உங்கள் பதிவுகள் எங்களை சரியான வாழ்க்கைப் பாதையில் வழிநடத்துகின்றன. நன்றி.

    Krishanamoorthy Rajkannan | Kuala Lumpur - Malaysia Y

    என் வரிகள்…

    கடமை என்றால் என்ன? சமுதாயத்திலிருந்து நாம் பெற்றக் கடனை திருப்பி செலுத்துவதே கடமை (கடன்+மை) என்கிறார் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    உண்மைதான். உண்ணும் உணவு, அணியும் ஆடை, உறையும் வீடு, கற்றகல்வி, பெற்ற அனுபவம் என எத்தனை எத்தனை கடன்! இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் பணம் கொடுத்தே பெற்றாலும், இவற்றை எம்மால் உருவாக்கிக்கொள்ள முடியாது எனும்போது, அவற்றிற்கு பின்னால் இருக்கும் மனிதர்களின் உழைப்புக்கு நாம் கொடுக்கும் பணம் ஈடாவதில்லை. பிறந்ததிலிருந்து இன்றுவரை பெற்றோர், உறவுகள், நண்பர்கள், ஆசிரியர்கள், இன்னும் எத்தனையெத்தனை முகம் தெரிந்த, தெரியாத மனிதர்களின் உருவாக்கம் நான் என எண்ணும்பொழுது மலைப்புக்கும் மேலான பேருணர்வொன்று என்னை ஆட்கொள்கிறது. நெஞ்சமெங்கும் நன்றி பெருக்கெடுக்கிறது.

    எப்படி இந்தக் கடனை அடைப்பேன்?

    நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்; அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்

    என்கிறார் பாரதி. அந்த வாய்ச்சொல் அருளும் (பகிரும்) முயற்சியே எனது முகநூல் பதிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூல்.

    இது தருதல் - பெறுதல் அல்ல; பகிர்தல். என்னைச் செதுக்கிய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்; அவை உங்களையும் செதுக்கும் எனும் நம்பிக்கையில்.

    இதிலுள்ள கட்டுரைகளை பிரசுரித்த வீரகேசரி வாரவெளியீடு மற்றும் தினகரன் வாரமஞ்சரி இதழ்களுக்கும், பிழை திருத்தி உதவிய நண்பர் அய்யப்ப மாதவன் அவர்களுக்கும், இதனை நூலுருவில் வெளியிடுகின்ற Notion Press Publishing நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன்

    உங்கள்

    சுப்ரமண்ய செல்வா

    சென்னை / வைகாசி 2021

    Blog: http://agavarigal.blogspot.com/

    Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

    YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

    அன்பு அம்மாவுக்கு…

    அகத்துள்ளே...

    முகநூல்

    Enjoying the preview?
    Page 1 of 1