Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saga Manithargalai Sariyaga Anugum Murai!
Saga Manithargalai Sariyaga Anugum Murai!
Saga Manithargalai Sariyaga Anugum Murai!
Ebook193 pages1 hour

Saga Manithargalai Sariyaga Anugum Murai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“உலகில் உள்ள மொத்த மனித இனமும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டால், மனித இனத்தின் 90 சதவீத துயரங்கள் ஒழிந்து விடும்.” ஓஷோ அவர்களின் இந்த வரிகள் என்னை ஆழ்ந்து யோசிக்க வைத்ததன் விளைவுதான் இந்தப் புத்தகம் உங்களின் கையில்.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580152908196
Saga Manithargalai Sariyaga Anugum Murai!

Related to Saga Manithargalai Sariyaga Anugum Murai!

Related ebooks

Reviews for Saga Manithargalai Sariyaga Anugum Murai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saga Manithargalai Sariyaga Anugum Murai! - Valliyammai Arunachalam

    http://www.pustaka.co.in

    சக மனிதர்களை சரியாக அணுகும் முறை!

    Saga Manithargalai Sariyaga Anugum Murai!

    Author :

    வள்ளியம்மை அருணாச்சலம்

    Valliyammai Arunachalam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/valliyammai-arunachalam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    நன்றியுரை

    1. அனுமானம்

    1.1. மனிதனின் நான்கு பருவங்கள்

    1.2. அனுமானத்தின் ஆரம்பப் புள்ளி

    1.3. அனுமானத்தின் தொடர்ச்சி

    1.4. அனுமானம் செய்வது சரியே. எப்போது?

    2. மதிப்பீடு செய்தல் ஆரம்பப் புள்ளி

    2.1. மதிப்பீடு செய்தல் என்பது எப்படி பிரச்சனைகளுக்கு காரணமாகிறது?

    2.2. நேர்மறையான மதிப்பீடு மற்றும் எதிர்மறையான மதிப்பீடு

    2.3. தற்காலிகமான மதிப்பீடு

    2.4. நிரந்தரமான மதிப்பீடு

    2.5. சுய மதிப்பீடு

    2.6. மற்றவர்கள் மீதான மதிப்பீடு எப்படி நம்மீதும் திரும்புகிறது?

    2.7. மதிப்பீடு செய்வது ஏன் தவறானது?

    2.8. மதிப்பீடு செய்வதில் நீங்கள் எந்த வகை?

    3. மதிப்பீடும் மனித மனமும்

    3.1. உடலும் மனமும்

    3.2. மனமும் புத்தியும்

    3.3. பழக்கமாகும் மதிப்பிடுதல்

    3.4. மதிப்பீடு செய்வதில் சூழ்நிலையின் பங்கு

    3.5. ஏற்கப்படாத அறிவுரைகளும் மதிப்பீடுகளே

    3.6. நாம் செய்யும் மதிப்பீடு எப்படி நம் வாழ்க்கையை மாற்றுகிறது?

    3.7. மனதின் கட்டுப்பாட்டில் மனிதன்

    3.8. நம்மீதான மற்றவரின் மதிப்பீடுகள்

    3.9. மற்றவர்கள் மீதான நம்முடைய மதிப்பீடுகள்

    3.10. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

    4. சமூகத்தின் பொதுவான மதிப்பீடுகள்

    5. மதிப்பீட்டின் நிலைகள்

    5.1. நிலை 1 மதிப்பீட்டினை உடனே உணர்ந்து விடுவது

    5.2. நிலை 2 மதிப்பீட்டினை சிறிது காலத்துக்குப் பின்னர் உணர்வது

    5.3. நிலை 3 மதிப்பீட்டின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருப்பது

    6. தீர்வை நோக்கி

    6.1. செயல்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

    6.1.1. வழக்கமான செயல்களை மாற்றி நம் மனத்தைக் குழப்புதல்

    6.1.2. பதில் அளிக்கப் பழகுதல்

    6.1.3. தவறுகளை ஏற்றுக் கொள்ளுதல்

    6.1.4. நிகழ்வை அப்படியே பார்ப்பது

    6.1.5. பிரச்சனைகளை மற்றவர்கள் சூழ்நிலையில் இருந்து அணுகுவது (Empathizing)

    6.1.6. சிரிப்பு மருத்துவம்

    6.1.7. மதிப்பீடு செய்யும் நிலை வரும்போது

    6.1.8. மற்றவர்கள் நம்மை மதிப்பீடு செய்யும் போது

    6.1.9. எழுதுவதன் மூலம் உணர்ச்சிகளை நீக்கும் பயிற்சி

    6.1.10. நம் விருப்பத்துக்கான நேர்மறை உறுதிமொழிகளைக் கூறுதல்

    6.2. மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

    6.2.1. நம் அறிவுரையும், யோசனையும் மற்றவருக்கு உதவி அல்ல என்பதை உணர்தல்

    6.2.2. சுவாசத்தின் மூலம் மனதைக் கட்டுப்படுத்துதல்

    6.2.3. எதுவும் நிரந்தரமில்லை; மாற்றம் ஒன்றே மாறாதது என்ற புரிதலை உருவாக்கிக் கொள்ளுதல்

    6.2.4. நிகழ்காலத்திலேயே மனதை வைத்து இருக்கும் பயிற்சி

    6.2.5. நினைவில் உள்ளதை அகற்றும் பயிற்சி

    6.2.6. நம் விருப்பங்களைக் காட்சிப்படுத்திப் பார்த்தல்

    6.2.7. புதிய சூழலை கற்பனையில் உருவாக்கி நிஜத்தில் உருவாக்குதல்

    6.2.8. மௌனம் பழகுதல்

    7. வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி

    7.1. உடல் நலம், மன நலம் பேணுதல்

    7.2. நம் மீதான அன்பை அதிகப்படுத்துதல்

    7.3. உறவுகளை மேம்படுத்தி முன்னுரிமைப்படுத்துதல்

    7.4. விழிப்புணர்வை அதிகப்படுத்துதல்

    7.5. தியானம் எனும் பரிசு

    7.6. பொறுப்பேற்றுச் சரணடைதல்

    7.7. நம்மை முழுவதும் அன்பாலும், நன்றி உணர்வாலும் நிரப்புதல்

    7.8. தெய்வீக நட்பை பலப்படுத்துதல்

    8. மதிப்பீட்டின் பாதிப்பு முழுவதும் நீங்கிவிட்டது என்பதை உறுதிசெய்தல்

    9. மாற்றம் தரும் பலப்பரீட்சைகள்

    சமர்ப்பணம்

    என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், என்னை மேம்படுத்திக்கொள்ள உதவிய என்னுடைய முதல் மகள் செல்வி உதய நந்தினிக்கு சமர்ப்பணம்.

    முன்னுரை

    "உலகில் உள்ள மொத்த மனித இனமும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டால், மனித இனத்தின் 90 சதவீத துயரங்கள் ஒழிந்துவிடும்." ஓஷோ அவர்களின் இந்த வரிகள் என்னை ஆழ்ந்து யோசிக்க வைத்ததன் விளைவுதான் இந்தப் புத்தகம் உங்களின் கையில்.

    எது நம்மை மற்றவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வதைத் தடுக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். கண்டிப்பாக மற்றவர்கள் மீது நாம் வைக்கும் அனுமானத்தின் (Guessing) மூலமும், மற்றவர்களை நாம் மதிப்பீடு செய்வதன் (Judgement) மூலமும், நாமே சரி என்ற சுயமதிப்பீடு மூலமும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தவறி விடுகிறோம் என்று விடை கிடைத்தது. அப்படியே ஏற்றுக்கொள்ளத் தவறும்போது, அவர்களை நாம் மாற்ற முயற்சிப்பதும் பல பிரச்சனைகளுக்கு காரணம். எனவே, அனுமானத்தின் அடுத்த படிகளாக, மதிப்பீடு செய்தல், நிராகரித்தல் அல்லது அப்படியே ஏற்றுக்கொள்ளத் தவறுதல், மாற்ற முயற்சித்தல் இவற்றை சொல்லலாம்.

    எப்போது நாம் மற்றவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லையோ அப்போது என்ன நடக்கிறது? முதலில் அவரிடம் நமக்கு அன்பு குறைய ஆரம்பிக்கும். அதன் பின்னர், நம்முடைய செயல்கள் (Actions) அவரிடம் வேறு மாதிரியாக இருக்கும். அதே நேரத்தில் அந்த நபரும், நம் செயல்களுக்கு ஏற்றவாறும், நம்முடைய அனுமானத்துக்கு ஏற்றவாறும் நடந்துகொள்ள ஆரம்பிப்பார். இறுதியாக, நாம் அவரை ‘அவர் அப்படித்தான்’ என்று முத்திரை குத்த (Bench marking) ஆரம்பித்து விடுவோம். அடுத்த கட்டமாக, இருவருக்குமான செயல்கள் எல்லாம் ஆழ் மனதின் கட்டுப்பாட்டில் நடக்க ஆரம்பிக்கும். இருவருக்குமான உறவில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டு, அந்த உறவை மேலும் சிக்கலாக்கிக்கொண்டே இருப்போம். அடுத்த கட்டமாக அவரை நம் வழிக்குக் கொண்டுவர அல்லது அவரை மாற்ற முயற்சிப்போம். அதற்கு உறவுக்கு ஏற்றபடி பல வழிகளில் முயற்சிப்போம். நம் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், பெற்றோர் எனும் ஆயுதத்தை பயன்படுத்தி அவர்களை நம் வழிக்குக் கொண்டு வர முயற்சிப்போம். நம்மை ஒருவர் மாற்ற முயற்சிக்கிறார் என்ற உணர்வே அந்த உறவை சிதைத்துவிடும்.

    எந்த விஷயத்தில் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோமோ அந்த விஷயத்தில் நம் கவனம் அதிகமாக இருக்கும். நானும் இளமையில் நிறைய மதிப்பீடு செய்யப்பட்டேன். அதனால், நானே என்னை அந்த மதிப்பீடுகளின் உருவமாகத்தான் பார்த்தேன். பின்னர்தான் புரிந்தது நான் அந்த உருவம் அல்ல என்பது. என்னை பலர் மதிப்பீடு செய்ததால் எனக்கும் அது பழக்கமாகிப் போனது. இந்த ஒரு குணம் மட்டும் என்னில் இல்லாமல் இருந்து இருந்தால் என் வாழ்க்கை இன்னும் நிம்மதியானதாக இருந்திருக்குமோ என்று இப்போது தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்த குணம்தான் எனக்கு நேர்ந்த கால இழப்புகளையும், உறவு இழப்புகளையும் பற்றி யோசிக்க வைத்தது என்றும் கூட சொல்லலாம்.

    என்னை மற்றவர்கள் மதிப்பீடு செய்தனவற்றைக்கூட என்னால் மாற்றி, நான் அந்த உருவம் அல்ல; வேறு என்று என்னால் விஸ்வரூபம் எடுத்து நிரூபிக்க முடிந்தது. ஆனால், மற்றவர்களை மதிப்பீடு செய்யும் பழக்கத்தை அவ்வளவு சுலபமாக என்னால் விட முடியவில்லை.

    அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இருப்பவர்களை எவ்வளவு மதிப்பீடு செய்கிறோம்? அதனால், அவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்? அந்த மதிப்பீடு உண்மையல்ல என்ற உண்மை தெரியும்போது, மதிப்பீடு செய்யும் நாம் எவ்வளவு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறோம்? நம்முடைய மதிப்பீடு தவறு என்று புரிந்த பின்னர், அதை சரி செய்ய எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்கிறோம்?

    அன்றாட வாழ்க்கையின் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இந்த மதிப்பீடுகள்தான் காரணம் என்பது தெளிவாகப் புரிந்தது. மதிப்பீடுகளினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். அதை விட அதிகமாக நான் மற்றவர்களை மதிப்பீடு செய்ததால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இதையெல்லாம் யோசித்து கவலைப்படுவதை விட்டு விட்டு, தீர்வுகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். நிறைய முடிச்சுகளும் அவற்றுக்கான விடைகளும் கிடைக்க ஆரம்பித்தன. இனி எதற்கு காத்திருக்க வேண்டும் என்று எழுத ஆரம்பித்து விட்டேன். உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான முதலும், முக்கியமுமான ஒரு காரணத்தைக் கையாளப் போகிறேன் என்ற உன்னதமான பொறுப்பை உணர்ந்தேன்.

    எனவே, என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்தும், உறவினர்கள், நண்பர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்தும் நிறைய யோசித்து, நம் மீது வைக்கப்பட்ட மதிப்பீடுகளை எப்படி மாற்றுவது, நாம் செய்த மதிப்பீடுகளை எப்படி மாற்றுவது, அதனால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதை எப்படி சரி செய்வது, மதிப்பீடு செய்யும் பழக்கத்திலிருந்து நாம் எப்படி வெளியே வருவது என்று எல்லாவற்றையும் தொகுத்து இருக்கிறேன்.

    இந்த உத்திகளை எல்லாம், நானும் செய்து பார்த்து, நண்பர்கள் உறவினர்களுக்கும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கு இந்த உத்திகளைப் பயன்படுத்தி, அதற்கு ஏற்றாற்போல பல மாற்றங்களை செய்து, அவர்களிடம் நான் கண்ட மாற்றங்களை வைத்து தொகுத்து இருக்கிறேன்.

    எனவே, மதிப்பீடு செய்தலைப் பற்றிய தேடுதல்களும் அவற்றுக்கான விடைகளுமே இந்த சக மனிதர்களை சரியாக அணுகும் முறை. அதாவது, நம்முடைய முகத்தையும் மற்றவர்களின் முகத்தையும் அறிந்து கொள்ளுவது மட்டுமே நம் வேலையாக இருக்க வேண்டும், அவர்களின் முகத்தை நமக்கு ஏற்றவாறு மாற்றுவது நம் வேலை அல்ல என்பதை அழுத்தமாக சொல்ல வந்திருப்பதுதான் இந்த சக மனிதர்களை சரியாக அணுகும் முறை. அப்படியே அறியாமையினால் நாம் மற்றவர்களின் முகத்தை மாற்றி இருந்தாலோ, நம் முகத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1