Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Johari Jannal
Johari Jannal
Johari Jannal
Ebook120 pages33 minutes

Johari Jannal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முகநூலில் வெளியாகி பலராலும் படிக்கப் பட்ட எனது கட்டுரைகளின் தொகுப்பு இது. இவற்றுள் பலவும் மேலாண்மை மற்றும் உளவியல் ரீதியிலான கட்டுரைகள். பெரும்பாலும் ஆங்கில நூல்களின் வழியே அறியப்பட்ட கோட்பாடுகளை கல்லூரிப் பாடம் போல் அல்லாது, எளிய தமிழ் நடையில் சுருக்கமாக எனது பாணியில் சொல்லும் முயற்சி.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142506713
Johari Jannal

Related to Johari Jannal

Related ebooks

Reviews for Johari Jannal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Johari Jannal - S. Ramesh Krishnan

    https://www.pustaka.co.in

    ஜோஹாரி ஜன்னல்

    Johari Jannal

    Author:

    எஸ். ரமேஷ் கிருஷ்ணன்

    S. Ramesh Krishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-ramesh-krishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஜோஹாரி ஜன்னல்

    மாஸ்லோ முக்கோணம்

    ஒன்றிய வாழ்வு

    கய்சென்

    வல்லினளும் மெல்லினனும்

    புடவை மகாத்மியம்

    திராட்சைக்கொடித் தொடர்பு

    உணர்ச்சி சார் நுண்ணறிவு

    கார்ப்மேனின் நாடக முக்கோணம்

    ஆக்கிரமிப்புமிகு நல்லவன்

    பரிவர்த்தனை பகுப்பாய்வு – 1

    பரிவர்த்தனை பகுப்பாய்வு - 2

    பரிவர்த்தனை பகுப்பாய்வு - 3

    பரிவர்த்தனை பகுப்பாய்வு - 4

    பரிவர்த்தனை பகுப்பாய்வு - 5

    பரிவர்த்தனை பகுப்பாய்வு - 6

    பரிவர்த்தனை பகுப்பாய்வு - 7

    முன்னுரை

    முகநூலில் வெளியாகி பலராலும் படிக்கப்பட்ட எனது கட்டுரைகளின் தொகுப்பு இது. இவற்றுள் பலவும் மேலாண்மை மற்றும் உளவியல் ரீதியிலான கட்டுரைகள். பெரும்பாலும் ஆங்கில நூல்களின் வழியே அறியப்பட்ட கோட்பாடுகளை கல்லூரிப் பாடம் போல் அல்லாது, எளிய தமிழ் நடையில் சுருக்கமாக எனது பாணியில் சொல்லும் முயற்சி.

    இதற்கு ஒத்துழைப்பு நல்கிய புஸ்தகா மின் நூல்கள்ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு மனமார்ந்த முதற்கண் நன்றிகள். இந்த கட்டுரைகளை முகநூலில் பலரும் படிக்கக் களம் அமைத்துக் கொடுத்த சங்கப் பலகை மற்றும் மத்யமர் முகநூல் பக்கங்களின் அமைப்பாளர்கள், மேலாண்மைக் குழுவினர், வாசகர்கள் என அனைவருக்கும் என் வந்தனம்.

    -எஸ். ரமேஷ் கிருஷ்ணன்

    ஜோஹாரி ஜன்னல்

    அடுத்து வரும் உரையாடல்களைக் கொஞ்சம் கவனித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    அண்ணன்: "தம்பி! ஒனக்குத் தெரியும். நம்ம வீட்டு முக்கியமான விழா. ஏதும் குளறுபடி வராமப் பாத்துக்க. இல்லைன்னா எனக்குச் சட்டுன்னு கோவம் வந்துரும். அந்த சமயத்துல என்ன செய்வேன்னே எனக்குத் தெரியாது."

    தம்பி: அண்ணே! உங்க கோவம்தான் ஊருக்கே தெரியுமே. நான் எல்லாத்தையும் சரியாப் பாத்துக்கறேண்ணே. நீங்க ரிலாக்ஸா இருங்க.

    ***

    காதலி: டார்லிங்! நான் ரொம்ப அழகா இருக்கேன்னு அடிக்கடி சொல்ற. என் கிட்ட உனக்கு ரொம்ப பிடிச்ச வித்தியாசமான விஷயம்னு ஏதாவது இருக்கா.

    காதலன்: டியர்! நீ பேசும்போது நடுல நடுல உன் உதடோட இடது பக்கத்தை லைட்டா சிரிக்கற மாறி சுழிக்கற பாரு. அது கொள்ளை அழகு.

    காதலி: ஓ! நானே இதுவரை இத கவனிச்சுப்பாத்ததில்ல. ஐ லவ் யூ டா!

    ***

    மைண்ட் வாய்ஸ்: அதென்னமோ கார் ஓட்டுற அளவுக்கு கான்ஃபிடண்டா எனக்கு பைக் ஓட்ட வரல. அது புரியாம நம்ம ஆளு பைக்ல ரைடு போலாமான்னு அப்பப்ப கேட்டுடறா. உதறல வெளில காமிக்காம எப்படியோ இதுவரை சமாளிச்சாச்சு

    ***

    ஜோசப் லுப்ட் மற்றும் ஹாரிங்டன் இங்கம் எனும் இரு மனவியல் நிபுணர்கள் உருவாக்கிய எளிமையான கருவி அல்லது வழிமுறைதான் ஜோஹாரி ஜன்னல். இருவரது பெயரின் ஆரம்பங்களைக்கொண்டு உருவாக்கிய பெயர்.

    அலுவலகத்தில் நம் சக ஊழியர்களுடனான உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை சமன் செய்து, நம்மிடம் உள்ள குறைகளையும் களைவதற்கான கருவியாக இதை உருவாக்கினார்கள்.

    இதை நம் சராசரி வாழ்வியலில் பொருத்திப் பார்க்கும் முயற்சிதான் இக்கட்டுரை.

    பொதுவாக ஜன்னலில் நான்கு சதுர ஓட்டைகள் இருப்பது போல இந்த வழிமுறையில் நம்மைப் பற்றி நமக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவுகள், நிலைப்பாடுகளை அலச உதவும் நான்கு தளங்கள் இருப்பதனால் இதை ஜோஹாரி ஜன்னல் என்கிறார்கள்.

    தளம் 1 (வெளிப்படை):

    நம்மைப் பற்றி நமக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்த விஷயங்களை உள்ளடக்கிய தளம் இது.

    மேலே பார்த்த முதல் உரையாடலில் அண்ணன் கோபக்காரன் என்பது அவனுக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. இது போலப் பல விஷயங்களைப் பட்டியலிடலாம்.

    இதில் நல்ல விஷயங்கள், குணங்களை மேம்படுத்திக் கொள்வதும், எதிர்மறையான விஷயங்களை குறைக்கவும், விலக்கவும் முயற்சிக்க வேண்டும்

    தளம் 2 (ரகசியம்):

    நம்மைப் பற்றி நமக்குத் தெரியாதது. ஆனால் அடுத்தவர்களுக்குத் தெரிவது.

    இரண்டாவது உரையாடலில் காதலிக்கு இது வரை தெரியாத அவளது உதட்டுச் சுழிப்பின் அழகு காதலனின் கண்களுக்குத் தெரிந்திருக்கிறதல்லவா. இது போன்ற பல விஷயங்களின் தளம் இது. அதே நேரம் வீட்டிற்குத் திரும்பிய காதலி, காதலன் சொன்னதை அவளே கண்ணாடியில் பார்த்து ரசிக்க ஆரம்பித்த நிமிஷம் இந்த விஷயம் முதல் தளத்திற்கு நகர்ந்து விடுகிறது. அடுத்தவருக்குத் தெரிந்தது அவளுக்கும் தெரிந்ததனால்.

    பெர்சனாலிட்டி டெவெலப்மென்ட் சென்டர் எனும் ஒருவரது நடை, உடை, பாவனைகளை

    Enjoying the preview?
    Page 1 of 1