Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kesari + Poori = Magizhchi
Kesari + Poori = Magizhchi
Kesari + Poori = Magizhchi
Ebook148 pages54 minutes

Kesari + Poori = Magizhchi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“கேசரி + பூரி” - நாவுக்கு மட்டுமல்ல; வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவைதான்!

“வித்தியாசப்படுகின்றவர்களே வெற்றி பெறுகின்றார்கள்” என்பதற்கு, என் கண் முன் தெரியும் உதாரணம், இளைஞர் முருகபாரதி.

“ஆரம்பமே அசத்தலாய் இருக்க வேண்டும். தலைப்பைப் பார்த்தவுடன் படிக்கத் தூண்ட வேண்டும்!” இது, என் மானசீக குரு ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரி ஜான், என்னிடம் வலியுறுத்திச் சொல்லும் கருத்து.” முருகபாரதியும், ஒருவேளை வலம்புரி ஜானிடம் வரம் பெற்றவர்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அவரது புத்தகங்களுக்கு ரசம், கேசரி, பூரி என்று பெயர் வைக்கிறார்; தன் நிறுவனத்திற்கு “யோசி” என்று பெயர் வைத்திருக்கிறார். பாரதி போன்று ஞானச் செருக்கு இருப்பதால்தான், இவர் ‘முருக பாரதி’ - யானாரோ...? சரி. முதலில் கேசரிக்கு வருகிறேன். அது என்ன கேசரி? “ஓகே சரி” என்பதே மிகச்சுருக்கம். அதையும் சுருக்கி, “கேசரி” என்பது சரியா?

சரி என்றால் எல்லாம் சரி. சரியாய் இருப்பதாலும் இது சரியே. “புத்தகத்தைப் படிக்கும் முன், இவர் குழப்புகிறாரே?” என்று என்னை நீங்கள் கேட்டால்... நான் சரிதான் என்று சொல்வதற்காக, நூலை முழுதாய்ப் படிக்க வேண்டும்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580116508454
Kesari + Poori = Magizhchi

Read more from Kavi. Muruga Barathi

Related to Kesari + Poori = Magizhchi

Related ebooks

Reviews for Kesari + Poori = Magizhchi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kesari + Poori = Magizhchi - Kavi. Muruga Barathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கேசரி + பூரி = மகிழ்ச்சி

    Kesari + Poori = Magizhchi

    Author:

    கவி. முருகபாரதி

    Kavi. Muruga Barathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavi-muruga-barathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகமாகி, ஓராண்டுக்கு முன் யோசியில் ஐக்கியமாகி, எதையும் யோசிக்காமல், எனக்காகப் பணியாற்றி, இப்போது இரு கரமாய் என்னுடன் ஒன்றிவிட்ட...

    அன்புத் தம்பிகள்

    ஆதி மற்றும் பாலாஜி-க்கு...!

    அணிந்துரை

    கேசரி + பூரி - நாவுக்கு மட்டுமல்ல;

    வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவைதான்!

    வித்தியாசப்படுகின்றவர்களே வெற்றி பெறுகின்றார்கள் என்பதற்கு, என் கண் முன் தெரியும் உதாரணம், இளைஞர் முருகபாரதி.

    ஆரம்பமே அசத்தலாய் இருக்க வேண்டும். தலைப்பைப் பார்த்தவுடன் படிக்கத் தூண்ட வேண்டும்! இது, என் மானசீக குரு ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரி ஜான், என்னிடம் வலியுறுத்திச் சொல்லும் கருத்து."

    முருகபாரதியும், ஒருவேளை வலம்புரி ஜானிடம் வரம் பெற்றவர்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    அவரது புத்தகங்களுக்கு ரசம், கேசரி, பூரி என்று பெயர் வைக்கிறார்; தன் நிறுவனத்திற்கு யோசி என்று பெயர் வைத்திருக்கிறார். பாரதி போன்று ஞானச் செருக்கு இருப்பதால்தான், இவர் ‘முருக பாரதி’ - யானாரோ...?

    சரி. முதலில் கேசரிக்கு வருகிறேன். அது என்ன கேசரி?

    ஓகே சரி என்பதே மிகச்சுருக்கம். அதையும் சுருக்கி, கேசரி என்பது சரியா?

    சரி என்றால் எல்லாம் சரி. சரியாய் இருப்பதாலும் இது சரியே.

    புத்தகத்தைப் படிக்கும் முன், இவர் குழப்புகிறாரே? என்று என்னை நீங்கள் கேட்டால்... நான் சரிதான் என்று சொல்வதற்காக, நூலை முழுதாய்ப் படிக்க வேண்டும்.

    கட்டுரைகளைப் பற்றி சொல்லட்டுமா...? (அடப்பாவி! மறுபடியும் முதல்லேருந்தா?) என்று நீங்கள் முணுமுணுக்கிறீர்கள். கேசரிதானே...?

    ‘வாழ்தலின் இனிமை’ முதல் கட்டுரை. இருப்பது வேறு; வாழ்வது வேறு என்ற தொடக்கமே என்னை மிரட்டியது. இருப்பதையும் வாழ்வதையும், ஏகப்பட்ட உதாரணங்களுடன், நமக்குத் தெரியாத நபர்களின் வாழ்க்கையுடன் விளக்கியிருப்பதைப் படித்ததும்... இருந்தது போதும்; இனியாவது வாழ்வோம்! என்று என்னை உசுப்பி விட்டது.

    ‘மகிழ்தலின் மகிமை’ என்ற கட்டுரையும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விட, எப்படி வாழ வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரை. அம்பானி போன்றவர்களுக்கு நேரம் ஒதுக்க முடிகிறது; நம்மால் முடியாதா? என்ற கேள்வியைக் கேட்டு, அதற்கு சரியான விடையைத் தன்னை வைத்தே கூறியிருப்பது, அபாரம்...!

    ‘சரி என்றால் சரி’ என்ற கட்டுரையில், வார்த்தை ஜாலம் புரிந்திருக்கிறார். ஒருமுறை படித்தால் ரசிப்பீர்கள். அடுத்த முறை, இப்படி இருக்கலாமோ? என்று யோசிப்பீர்கள். அடுத்த முறை, இதுதான் இவர் சொல்ல வந்தது! என்று அனுபவிப்பீர்கள். அப்போது, நான் சொல்வது சரி என்பதை, நீங்களும் சரி என்பீர்கள்.

    ‘சரியாய் இருப்பதே சரி’ நல்ல தலைப்பு. சரியாய் இருப்பது எப்படி தவறாகும்? (இது பற்றி, நான் எழுதப்போறேன்!) அதை அழகாக, தப்பு வேறு; தவறு வேறு என்று பிரித்து மேய்ந்திருக்கிறார்.

    நமக்கு சரியானது என்பது, நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம்; ஆனால், அது அடுத்தவரைப் பாதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறார். சரியாய் இருப்பது எளிதான காரியமல்ல...! என்று புலம்புபவர்களின் வாயையும் அடைத்துள்ளார்.

    ‘சரியாய் இருக்க வேண்டும் என்பது சரியல்ல.’

    என்னடா! இவர் இப்படி மண்டை காய விடுறாரே! என்று அலுப்புடன் படிக்க ஆரம்பித்தேன். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால், எல்லாம் சௌக்கியமே! என்ற கண்ணதாசன் வரிகளை, இவர் சுட்டியதும் சுறுசுறுப்பாகி விட்டேன். கண்ணதாசனின் அந்த வரிகள்... கரோனா பரவலையும் தடுக்கும்; நம் உறவுகளில் விரிசலையும் தடுக்கும்.

    நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்காக, அடுத்தவரும் சரியாய் இருக்க வலியுறுத்தினால், வம்புதான்.

    இந்தக் கட்டுரையைப் படித்ததும், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்ட முருகன் தான், முருகபாரதியாக வந்து விட்டாரோ என்ற சந்தேகம் வந்து விட்டது.

    ‘சரி செய்ய யோசித்தால் சரியாகும்’,

    ஏம்பா... நடிகர் விசு இல்லாததால, அந்த இடத்தைப் பிடிக்கப் போறீயா...? இப்படிக் குழப்பறியே...!

    பிரச்சனையை பிரச்சனைன்னு நினைக்காம, அதுக்குப் பிரச்சனை கொடுத்தா, நம்ம பிரச்சனை ஓடிப்போயிடும் இதுதான், தலைப்புக்கான தெளிவான விளக்கம்.

    இதை சொல்றதுக்கு... ஏகப்பட்ட நபர்கள், அவர்கள் சந்தித்த சங்கடங்கள், அதை அவர்கள் சமாளித்த விதங்கள்... என, தம்பி எழுதியிருக்காரு. தெரியுங்களா...?

    அடுத்து, பூரி சாப்பிடுவோமா...?

    பூரி எப்படியிருக்கும்...?

    எண்ணெயில் குளிக்கிற சந்தோஷத்திலே குதிச்சு உப்பி, பூரித்து நிற்கும். அதுதான் பூரிப்பு.

    பூ... இவ்வளவுதானா...?-ன்னு சலிக்கிற சனங்களுக்காகவே, முருகபாரதி எழுதியிருப்பதுதான் பூரி.

    ‘ஒன்றாய் இருப்பதில் பூரி’ என்ற தலைப்பில், நாம் எப்படிப் பூரிப்பது என்பதைப் பட்டியலிடுகிறார். பணத்துடன் இருப்பதல்ல மகிழ்ச்சி; உறவுகளுடன் ஒன்றாய் இருப்பதே மகிழ்ச்சி என முடிவும் சொல்கிறார்.

    ‘ஒவ்வொன்றிலும் பூரி’

    நினைச்சது கிடைக்கலேன்னா, கிடைச்சதை நினைச்சு சந்தோஷப்படு! என்பதுதான் இக்கட்டுரையின் அடிநாதம். பிரச்சனைகள் நடுவே கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்கத் தவறக் கூடாது என்பதற்கு, ஒரு கதையும் சொல்கிறார். நிறைய மனிதர்களை அடையாளப்படுத்துகிறார்.

    ‘ஒன்றில்லை என்றாலும் பூரி’

    துன்பம் நேர்கையில், யாழ் எடுத்து மீட்ட மாட்டாயா? என்ற வரிகளில் விரிகிறது இந்தப் பகுதி. குறையை நிறையாக்கினால், எண்ணெய் இல்லாமலும் பூரி செய்ய முடியும். இதற்கும் தேர்ந்தெடுத்து, சில உதாரணங்களைத் தருகிறார்.

    ‘ஒன்றாக இருக்க பூரி’

    இந்தக் கட்டுரையில் வரும், வாட்சப் செயலியின் இணை நிறுவனர் கதையும், ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ கிறில்ஸ் கதையும், எல்லாரும் குறிப்பாக, இளைஞர்கள் படிக்க வேண்டும். வாய்ப்பும் முயற்சியும் இணையும்போது, வெற்றியும், அதன் முடிவில் மகிழ்ச்சியும் பூரித்து நிற்கும், என்று நம்பிக்கை ஊட்டுகிறார் முருகபாரதி.

    ‘பூரா’ என்றால் பூரணம் என்று பொருள். பூரணம் என்றால், முழுமை என்று பொருள். தன் எண்ணங்களால், பேச்சுக்களால், எழுத்துக்களால், செயல்களால்... முருகபாரதி, முழுமை பாரதி ஆகியிருக்கிறார். அவர் வெற்றியால் நான் பூரிக்கிறேன். நூலைப் படித்த பிறகு, நான் முன்பே சொன்ன கேசரி என்பது சரி, என்று நிச்சயமாய் சொல்வீர்கள்...!

    நம்பிக்கையுடன்,

    உதயம் ராம்

    ஆசிரியர்,

    ‘நம் உரத்த சிந்தனை’ - மாத இதழ்

    நூலாசிரியர் பற்றிய குறிப்பு

    * 38 வயதிற்குள், மனித வளப் பயிற்சியில், 15 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் கொண்ட, முன்னணிப் பயிற்றுநர்.

    * தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் (14/04/2020 வரை) பயிற்சி நிகழ்வுகளை நடத்தியுள்ள, ஒரே பயிற்றுநர்.

    * கடந்த 9 ஆண்டுகளில் மட்டும், 1000-த்திற்கும் அதிகமான நிகழ்வுகளில் பேசியதற்கான பட்டியலை, இணையதளத்தில் மாதந்தோறும் பதிவு செய்யும் ஒரே நபர்.

    * தமிழ்நாட்டிலேயே, தன் பெயரில் கைப்பேசி செயலி (Mobile App) தொடங்கிய முதல் மனிதவளப் பயிற்றுநர்.

    * தமிழ்நாட்டிலேயே, OPC Private Limited ஆகப் பதிவு செய்த, முதல் மனிதவளப் பயிற்சி நிறுவனமான, YOSI HR TRAINING நிறுவனத்தின், மேலாண்மை இயக்குநர்.

    இன்னும் பல சிறப்புகளுக்கு உரியவர்தான்... கவி. முருகபாரதி. 1981-ல், புதுக்கோட்டையில், ஆசிரியத் தம்பதிகளான, திரு. கண்ணன் - திருமதி. விஜயலெஷ்மி ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.

    தன் 9-ஆவது வயதில், போட்டிகளில் தொடங்கிய இவரின் மேடைப் பயணம், சொற்பொழிவுகள், விருந்தினர் உரைகள், பட்டிமன்றங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வளர்ந்து, மனித வளப் பயிற்சிகளில் நிலைபெற்றிருக்கிறது.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெருநிறுவனங்களின் பணியாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், சமூக அமைப்புகளின்

    Enjoying the preview?
    Page 1 of 1