Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nalladhaga Naalu Vaarthai
Nalladhaga Naalu Vaarthai
Nalladhaga Naalu Vaarthai
Ebook190 pages1 hour

Nalladhaga Naalu Vaarthai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

2001ம் ஆண்டு. ஒரு சிறுகதை தொகுப்பு வெளிவந்திருந்தது. அதன்பிறகு திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம் புத்தகம் வெளிவந்திருந்தது. மூன்றாவது புத்தகம் போடும் விருப்பத்தில், தினமணியில் வெளிவந்திருந்த கட்டுரைகளையும், மங்கையர் மலரில் வெளிவந்திருந்த கட்டுரைகளையும் சேர்த்து, மகிழ்ச்சி எங்கே என்ற தலைப்பில் வெளியிட்டேன். இப்போது, 'செய்வது பயனுற செய்தல்', ‘எல்லாம் மாறவே செய்யும்’, ‘எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்’, 'கேட்காமல்விட்ட கேள்விகள்' என்ற நான்கு புதிய கட்டுரைகளையும் சேர்த்து, ஒரு கட்டுரையை நீக்கி, எல்லாவற்றையும் பொருள் வாரியாகப் பகுதி பிரித்து, நல்லதாக நாலு வார்த்தை என்ற தலைப்பில் வெளியிடுகிறேன்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580110107377
Nalladhaga Naalu Vaarthai

Read more from Soma Valliappan

Related to Nalladhaga Naalu Vaarthai

Related ebooks

Reviews for Nalladhaga Naalu Vaarthai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nalladhaga Naalu Vaarthai - Soma Valliappan

    https://www.pustaka.co.in

    நல்லதாக நாலு வார்த்தை

    மனிதர்களைப் புரிந்துகொள்ள, வாழ்க்கையை வெற்றிகொள்ள

    Nalladhaga Naalu Vaarthai

    Manithargalai Purinthu Kolla, Vazhkaiyai Vetrikolla

    Author:

    சோம. வள்ளியப்பன்

    Soma. Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    எம்.எஸ். உதயமூர்த்திக்கு

    சோம வள்ளியப்பனின் பிற நூல்கள் நிர்வாகம் 1. நாட்டுக் கணக்கு நம் நாட்டின் வரவு செலவு, திட்டங்கள், மான்யங்கள்) 2. ஆளப்பிறந்தவர் நீங்கள் - விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பு (லீடர்ஷிப்) 3. திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் 4. காலம் உங்கள் காலடியில் (நேர நிர்வாகம்) 5. தங்கத் துகள்கள் நேர நிர்வாகம்-2) 6. யார் நீ? (பர்சனாலிட்டி) 7. உலகம் உன் வசம் (கம்யூனிகேஷன்) 8. உறுதி மட்டுமே வேண்டும் (கமிட்மெண்ட்) 9. சிறந்த நிர்வாகி எப்படி? (நிறுவனத்தினுள் / வேலையில் முன்னேறுவது)

    10. You Vs You & All you should know about Emotional Intelligence

    (எமோஷனல் இன்டலிஜென்ஸ் - ஆங்கிலத்தில் - விரிவாக) சுயமுன்னேற்ற நூல்கள் 1. இட்லியாக இருங்கள் - எமோஷனல் இண்டலிஜென்ஸ் (தமிழில்) 2. தடையேதுமில்லை (தினமணி நடுப்பக்க - சுய முன்னேற்ற கட்டுரைகள்) 3. அதிகாரம் அல்ல, அன்பு (தினமணி நடுப்பக்க - சுய முன்னேற்ற கட்டுரைகள்) 4. நல்லதாக நாலு வார்த்தை (சுய முன்னேற்ற - வாழ்வியல் கட்டுரைகள் ) 5. உஷார் உள்ளே பார் (மனமும் அதன் சக்தியும்) 6. மனதோடு ஒரு சிட்டிங் (மனதை புரிந்து கொள்ளுவதும், வெற்றிக்குப் பயன்

    படுத்துவதும்) 7. தள்ளு - மோட்டிவேஷன் 8. முன்னேற்றம் இந்தப்பக்கம் (இலக்கு உருவாக்கி, அடையும் செயல்திட்டம்) 9. சொல்லாததையும் செய் (புதிய பார்வை - ஊக்கம் தரும் தகவல்கள் ) மாணவ மாணவியருக்கு 1. டீன் தரிகிட (பதின் பருவத்தினருக்கு 2. மன அழுத்தம் விரட்டலாமா? (பள்ளி மாணவர்களுக்கு) 3. இந்தமுறை நீதான் (பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 4. நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது (ஆல் த பெஸ்ட்- வேலைக்கான

    நேர்முகங்களில் வெற்றி பெறுவது) 5. நீ அசாதாரணமானவன்/ள் (பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு) வியாபாரம் 1. தொட்டதெல்லாம் பொன்னாகும் - விரிவு செய்யப்பட்ட பதிப்பு (வியாபாரம்

    தொடங்கலாம் - வெற்றி பெறலாம் ) 2. பணம் பண்ண லாம், பணம் பணம் (வித்தியாசமான வியாபாரங்கள்) 3. நம்பர் 1 சேல்ஸ்மென் (சிறந்த விற்பனையாளர் ஆவது) 4. நிர்வாகத்திறன் மேம்பாடுகள் (வியாபாரம் தொழில் செய்வோருக்கான அடிப்படை

    புரிதல்கள்) 5. நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகளா? 6. எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம் (சிறு வியாபாரிகள் தெரிந்துகொள்ள வேண்டிய

    அடிப்படைகள்) 7. சின்ன தூண்டில் பெரிய மீன் முயற்சிகளுக்கு கூடுதல் பலன் பெறுவது)

    முன்னுரை

    1990களில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்த நான், அவ்வப்போது எஸ்.எம். வாழ்வியல் கட்டுரைகளும் எழுதுவதுண்டு. அவற்றில் சில மங்கையர் மலரில் வெளிவந்திருக்கின்றன. 2001ஆம் ஆண்டுதான் 'உதவியா, தொந்தரவா?' கட்டுரை மூலம் சோம. வள்ளியப்பன் என்ற பெயரில் தினமணியில் எழுத ஆரம்பித்தேன்.

    அதன்பிறகு மாதம் ஒன்று என்கிற கணக்கில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் நாற்பது கட்டுரைகள் எழுதினேன். எனக்குக் கிடைத்த அனுபவங்களைப்பற்றி நான் சிந்தித்தவற்றைக் கட்டுரைகளாக்கி அனுப்புவது வழக்கம்.

    அது சமயம் தினமணியின் ஆசிரியராக இருந்த திரு. சம்மந்தம் அவர்களும், நடுப்பக்கக் கட்டுரைகளுக்குப் பொறுப்பாளராக இருந்த திரு. ராயப்பா அவர்களும் என் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டார்கள்.

    தினமணியில் வெளிவந்த கட்டுரைகள் வாசகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றன என்பதை நான் வெளியூர்களில், கூட்டங்களில் பேசப்போகும்போது தெரிந்துகொண்டேன். தினமணியில் என் கட்டுரைகளை வாசித்தவர்களில் பலரும் என்னை அவர்களது நிறுவனங்கள், அமைப்புகளில் பேசவும், பயிற்சி கொடுக்கவும் அழைத்தபோது, தினமணியின் வீச்சு அபாரமானது என்பதை நான் புரிந்துகொண்டேன்.

    பணம், பங்குச்சந்தை, மனிதவளம், நிர்வாகம் தொடர்பாக நான் பல்வேறு பத்திரிகைத் தொடர்கள், புத்தகங்கள் எழுதியிருந்தாலும், 'நீங்கள் தினமணியில் எழுதிய சோம். வள்ளியப்பன்தானே! உங்களை நேரில் பார்ப்பதற்காகத்தான் இந்தக்கூட்டத்திற்கு வந்தேன்' என்று கூட்டங்களில் பேசிமுடித்த மேடையில் இருந்து கீழ் இறங்கும்போது, சந்தித்துச் சொல்பவர்கள் உண்டு.

    2001ம் ஆண்டு. ஒரு சிறுகதை தொகுப்பு வெளிவந்திருந்தது. அதன்பிறகு திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம் புத்தகம் வெளிவந்திருந்தது. மூன்றாவது புத்தகம் போடும் விருப்பத்தில், தினமணியில் வெளிவந்திருந்த கட்டுரைகளையும், மங்கையர் மலரில் வெளிவந்திருந்த கட்டுரைகளையும் சேர்த்து, மகிழ்ச்சி எங்கே என்ற தலைப்பில் வெளியிட்டேன். இப்போது, 'செய்வது பயனுற செய்தல்', ‘எல்லாம் மாறவே செய்யும்’, ‘எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்’, 'கேட்காமல்விட்ட கேள்விகள்' என்ற நான்கு புதிய கட்டுரைகளையும் சேர்த்து, ஒரு கட்டுரையை நீக்கி, எல்லாவற்றையும் பொருள் வாரியாகப் பகுதி பிரித்து, நல்லதாக நாலு வார்த்தை என்ற தலைப்பில் வெளியிடுகிறேன்.

    'பிள்ளைதான் முதல் புத்தகத்திற்கு ஓவியம் வரைந்தார். அவர் புதியதாக வரைந்த படங்களுடன் நேர்த்தியாக வெளியிடும் ஆப்பிள் புக்ஸ் மேலாண் இயக்குநர் திரு. எஸ். ராமுவுக்கு என் நன்றி.

    பொருளடக்கம்

    உறவு

    1. சொன்னதும் சொல்லாததும்

    2. நாம் மட்டுமா நல்லவர்கள்?

    3. மற்றவர்கள் நம்மை விரும்பும்படி...

    4. மற்றவர் உதவி பெறலாம்

    5. பிறந்தநாள் கொண்டாட்டம்

    மனம்

    6. இருக்கும் மகிழ்ச்சயை விட்டு இல்லாத கவலை தேடி...

    7. நம் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது யார்?

    8. சைக்கலாஜிக்கல் ஆக்சிஜன்

    9. அறிவுத்திறன் மட்டும் போதுமா?

    10. மனசு செய்யும் மாயம்

    பழக்கம்

    11. எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்?

    12. பழகுவது சுலபம், வீருவது சிரமம்

    13. மாற்றம் ஒன்றே மாறாதது!

    14. மறக்கத் தெரியாத மனசு

    15. தயக்கத்தைத் தள்ளத் தயங்க வேண்டாம்!

    16. நமக்குள் இருக்கும் எதிர்

    17. கேட்காமல் விட்ட சில கேள்விகள்

    18. எல்லாம் மாறவே செய்யும்

    திறன்

    19. மற்றவர்களையும் கலந்துகொள்ளுதல் அவசியம்...

    20. பாராட்டினால் என்ன!

    21. நல்லதாக நாலு வார்த்தை...

    22. சிறந்த கேட்பாளரா நாம்?

    23. செய்வது பயனுறச் செய்தல்

    24. செயல்களில் எடிட்டிங்

    நேரம்

    25. 'நேரம் போதவில்லை' - உண்மையா?

    26. காத்தருந்து... காத்தருந்து

    27. அவசரமானவை - முக்கியமானவை

    C:\Users\ASUS\OneDrive\Pictures\Saved Pictures\nnv image 1.PNG

    1. சொன்னதும் சொல்லாததும்

    நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் முழுவதும் புரிந்துகொண்டுள்ளோமா? அவர்கள் நம் குடும்பத்தினராகவோ, நண்பர்களாகவோ, அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களாகவோ அல்லது வேறு எவராகவும் இருக்கலாம். இவர்களை நாம் முழுவதும் புரிந்து வைத்திருக்கிறோமா? எப்பொழுதும் சரியாகப் புரிந்துகொள்கிறோமா?

    இந்தக் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது. ஒரேமாதிரியும் பதில் சொல்ல முடியாது. சில சமயங்களில் நம் பதில் ‘ஆமாம்.’ பல சமயங்களில் நம் பதில் ‘இல்லை’ ஆகவும் இருக்கும்.

    ஏன் இப்படி?

    ஒத்துப் போகாவிட்டாலும் குறைந்தபட்சம் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் புரிந்துகொள்ளவாவது வேண்டும் அல்லவா? 'இதென்ன கேள்வி. நம்மைச்சுற்றி உள்ளவர்களை புரிந்தகொள்ளாமலா இருப்போம்!' என்று தோன்றுகிறதா? கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று நிகழ்ச்சிகளைப் படியுங்கள், பிறகு ஒப்புக்கொள்வீர்கள்.

    நிகழ்ச்சி ஒன்று

    சுப்ரமணியன் என்ற மாணவர் ஒருவர் திருச்சியிலிருக்கிறார். அவருக்கு சென்னையில் நல்ல வேலை கிடைத்தது. அதை அவரது பெற்றோரிடம் மகிழ்ச்சியாகச் சொல்லுகிறார். அவர்கள் வயதானவர்கள். எல்லா உதவிகளுக்கும் அந்த ஒரே மகனான மாணவரைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

    அப்பா எனக்கு சென்னையில் வேலை கிடைத்திருக்கு.

    அப்படியா?

    நல்ல வேலையப்பா, தொடக்க சம்பளமே இருபதாயிரம்.

    அட.... பரவாயில்லையே!

    அந்தக் கம்பெனி பெரிசுப்பா..... மொத்தம் பத்தாயிரம் பேர் வேலை செய்யறாங்க....

    ம்... ம்...

    அடுத்த வாரம் திங்கள்கிழமையே வேலையில் சேரணும்...

    ம்... நல்லா... நல்லா... உன் அம்மாட்டேயும் சொல்லிடுப்பா...

    அம்மாவிடமும் விவரங்கள் சொல்லப்படுகின்றன.

    சரி... போய் ஜாய்ன் பண்ணு... பெரிய கம்பெனி, நல்ல சம்பளங்கறே. சரி, சரி சாப்பிட வா.

    சுப்ரமணியன் விருவிருவென சாப்பிட்டுவிட்டு தன் நண்பர்களைப் பார்க்க ஓடிவிடுகிறார்.

    அப்பா அம்மா என்னடா சொன்னாங்க? ஒரு நண்பன் கேட்கிறான்.

    வேறென்ன, வேண்டான்னா சொல்லுவாங்க! முதல் வேலையே பெரிய கம்பெனியில், செமத்தி சம்பளம்... சரின்னுட்டாங்க... பெருமையாகச் சொல்லுகிறார்.

    உங்களுக்கு என்ன தோன்றுகிறது? சுப்ரமணியனின் பெற்றோர் சரி என்று சொல்லிவிட்டார்கள் என்றா?

    நிகழ்ச்சி இரண்டு

    ஒரு சுறுசுறுப்பான காலை நேரம். அலுவலகத்தில் அதன் மேலாளர் பிசியாக இருக்கிறபொழுது

    Enjoying the preview?
    Page 1 of 1