Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Management Guru Kamban
Management Guru Kamban
Management Guru Kamban
Ebook298 pages1 hour

Management Guru Kamban

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மேலாண்மை என்றால் என்ன பொருள் என்ற கேள்விக்கு, ‘மேனேஜ்மெண்ட் என்பது மக்களைக் கொண்டு செய்ய வேண்டிய செயல்களை செய்து முடிப்பது' (Getting things done through people) என்கிறார் பார்கர் போலெட் (194I)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உலகப் பொதுமறை திருக்குறளிலும், விவிலியத்திலும், ஏராளமான மேலாண்மைக் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. எகிப்த்திய பிரமிடுகள், ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் போன்ற மனித இனத்தினால் செய்யப்பட்ட பல்வேறு சாதனைகள் திறம்பட்ட மேலாண்மை அறிவைப் பயன்படுத்தாமல் சாத்தியமாகி இருக்காது என்பது வல்லுனர்களின் முடிவு.

ஆக, மேலாண்மைத் திறனைப் பயன்படுத்துவது எல்லாக் காலகட்டங்களிலும் தேவைகளுக்கு ஏற்ப இருந்திருக்கிறது. ஆனால் அதை முறையாகக் கற்பிப்பது கற்பது என்கிற வழக்கம் மேலை நாடுகளில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இன்றைக்கு சுமார் 1,130 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கம்பராமாயணம் அரங்கேறிய கி.பி 885ம் ஆண்டு, கம்பரால் எழுதப்பட்ட இராமாயணத்தில் இருக்கிறதா என்று தேடியதில் எனக்குக் கிடைத்தவை, பெருவியப்பு ஊட்டுவதாகவும், உவகை தருவதாகவும் அமைந்தன. தொடக்கத்தில் மேனேஜ்மெண்ட் அனைத்துமே சயிண்டிபிக் மேனேஜ்மெண்ட் தியரிகளாகத்தான் இருந்தன. அவை பிரெட்டிரிக் டெய்லரும் ஹென்றி போயலும் சொன்னவை. அதன் பிறகு 'சோஷியல் சயிண்டிஸ்ட்’ தியரிகள் ஆப்ரகாம் மாஸ்லோ (ஹயரார்கி ஆப் நீட்ஸ்), எல்ட்டன் மாயோ (ஹியூமன் ரிலேஷன்ஸ் மூவ்மெண்ட்), டக்ளஸ் மெஃரிகர் (தியரி எக்ஸ், தியரி ஒய்) போன்றவர்களால் வந்தன.

இலக்கு ஏற்படுத்திக் கொள்ளுதல், திட்டமிடுதல், ஏற்பாடுகள் செய்தல், தகுந்த ஆட்கள் எடுத்தல், பயிற்சி கொடுத்தல், ஒருங்கிணைத்தல், தலைமை தாங்குதல், ஊக்கப்படுத்துதல், கண்காணித்தல், கட்டுப்படுத்தல் போன்றவை மேலாண்மையின் அடிப்படையான அம்சங்கள். இவை அனைத்துக்குமான தேவைகள் இராம காவியத்தில் இருந்திருக்கின்றன. அதனால் இவற்றை எப்படிச் செய்வது என்பது பற்றி கம்பன் விரிவாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கிறான். அவற்றில் சிலவற்றை தற்போதைய நவீன மேலாண்மை வழிமுறைகள், கருத்துகளுடன் ஒப்பிட்டுக் காட்டும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.

கம்பராமாயணத்தில் நமக்குக் கிடைக்க பெற்றிருக்கும் 12,000 பாடல்களில் இடைச் செறுகல்கள், மிகைப் பாடல்கள் என்று சுமார் 1500 பாடல்களை விட்டுவிட்டால் மீதம் உள்ளவை 10,500 பாடல்கள் என்று அறிஞர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள்.

கம்பராமாயணம் பக்தி இலக்கியம் மட்டுமே என்று எண்ணுவோரும் உண்டு. ஆனால் அதில் இருக்கும் அறிவியல், அரசியல், சமூகவியல், வானியல் என்று பல்வேறு விஷயங்களையும் அறிஞர் பெருமக்கள் பலரும் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்து கொண்டேயிருக்கிறார்கள். காரைக்குடி கம்பன் கழகம் அந்த அரிய பணியைச் செவ்வனே செய்து வருகிறது.

கம்பராமாயணம் முழுவதையும் படித்து என் வாதத்திற்குத் தேவையானதை அதிலிருந்து தேடிக்கண்டு எடுப்பது என்று முடிவு செய்து கொண்டேன். இராமாயணம் பாடல் வடிவத்தில் இருப்பது. ஆனால் எனக்குத் தேவைப்படுவது அதன் உரைநடை வடிவம். சுமார் பத்து பதினோரு வயதிருக்கும் போதே திருப்பாபுலியூரில் பெற்றோர் குடியிருந்தபோது, தாய் வழிப்பாட்டி வீர, கல்யாணி ஆச்சி கேட்பதற்காக, அவர்கள் கேட்டுக் கொள்வதற்கு இணங்க ராஜாஜி அவர்கள் எழுதிய சக்ரவர்த்தி திருமகன் இராமாயண உரைநடையை, என் அக்காள் திருமதி சௌந்தரலட்சுமி இராமநாதன் சத்தமாகப் படிக்க, பாட்டிக்கு அருகில் அமர்ந்து தம்பி, தங்கை ஆகியோருடன் நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆக, எனக்கு இராமாயணக் கதை நன்றாகவே தெரியும். ஆனால், அதில் உள்ள மேலாண்மைக் கருத்துகளை அல்லவா எடுத்துக் காட்ட நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்! அதற்குக் கதைச் சுருக்கம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. அதை இன்னும் ஊன்றிப்படிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் இன்றைக்குப் பேசப்படும், நடைமுறைப்படுத்தப்படும் பல மேலாண்மை தொடர்பான கருத்துகள், கோட்பாடுகள் அப்படியே பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கம்பராமாயணத்திலும் இருப்பது எனக்கு வியப்பை அளித்தது. குறிப்பாக மனிதவளத் துறை சார்ந்த கருத்துகள், உணர்வு மேலாண்மை (ஏமோஷனல் இண்டெலிஜென்ஸ்) கருத்துகள் என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தின.

கம்பராமாயணத்தில் காணப்படும் மேலாண்மை தொடர்பான விடயங்களை எடுத்துக்காட்டுவதுதான் புத்தகத்தின் நோக்கம் என்பதால், இதில் கருத்து பகுப்புகளை ஒட்டியே அத்தியாயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இராமாயணக்கதை எல்லோருக்கும் தெரியும். அதனால் இப்படிப்பட்ட பகுப்பு.

- சோம வள்ளியப்பன்
writersomavalliappan@gmail.com

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580110104698
Management Guru Kamban

Read more from Soma Valliappan

Related to Management Guru Kamban

Related ebooks

Reviews for Management Guru Kamban

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Management Guru Kamban - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

    Management Guru Kamban

    Author:

    சோம வள்ளியப்பன்

    Soma Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பன்முகத்தன்மை

    2. தலைமைப் பண்புகள்

    3. முக்கியப் பணி

    4. ஆட்ட வியூகம், ஆட்ட உத்தி

    5. மனித வள நிர்வாகம்

    6. கலந்தாலோசனை

    7. குழு உருவாக்கம்

    8. தகவல் பரிமாற்றம்

    9. உணர்வு புத்திசாலித்தனம்

    10. ஏனைய நிர்வாக உத்திகள்

    மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

    ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமை கொள்ள வேண்டிய நூல்

    கம்பன் காட்டும் நிர்வாக கோட்பாடுகளும், யுக்திகளும்...

    ***

    தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் அருந்தொண்டாற்றிய அருட்செல்வர் பத்மபூஷன் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு

    *****

    அணிந்துரை

    சோம வள்ளியப்பன் இன்னும் எழுதுக!

    கம்பனின் இராமகாதை ஒரு பெருங்கடல். சிலர் இதனை ஒரு தமிழ்க் காவியம் என்று மட்டும் பார்ப்பார்கள். வேறு சிலர் இதை ஒரு தமிழ்ப் பக்தி இலக்கியமாகப் பார்ப்பார்கள். இவை தவிர அதில் காணப்படும் அறிவியல், அரசியல், சமூகவியல், பெண்ணியம், வானியல் ஆகிய துறைகளைப் பற்றியும் இதுவரைப் பலர் தாம் கண்டறிந்தவற்றை எழுதியுள்ளனர். ஆனால் கம்பனின் மேலாண்மை குறித்த கருத்துகளைப் பற்றி மிக விரிவாக எழுதப்பட்டுள்ள முதல் நூல் இதுவென்றே கருதுகிறேன்.

    எதைச் செய்தாலும் திருத்தமுறச் செய்யும் பாங்கு இதன் ஆசிரியர் சோம வள்ளியப்பன் அவர்களுக்கு உள்ளதென்பதை நான் அறிவேன். தனது 'மேனேஜ்மெண்ட் குரு கம்பன்' என்ற நூலை எழுதப் புகுமுன் தான் மேற்கொள்ள வேண்டிய கம்பராமாயணப் பதிப்பைத் தேர்வு செய்த முறையே இந்தப் பாங்கினைக் காட்டும். பல பதிப்புகளைப் பார்த்து இறுதியாக அம்பத்தூர்க் கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ. பழநியப்பனின் பதிப்பில் நிலை கொண்டுள்ளார் ஆசிரியர்.

    இதற்கு மேல் ஆண்மை இல்லை என்னும் படியாக மேலாண்மை பேசியவன், 'தனியாண்மை பெயரேன்' என்று தன்னையே தான் வியந்து தறுக்குடன் திரிந்த தசமுகன், சோம வள்ளியப்பன் மேலாண்மை பற்றி அனைத்தும் அறிந்தவர். தான் அறிந்த மேலாண்மைக் கோள்கள் அப்படியே கம்ப காவியத்தில் இருப்பதைக் கண்டு காட்டியிருக்கிறார்.

    எடுத்த காரியத்தில் வெற்றியடைவதற்கு மேலாண்மை கூறும் வழிகள் இவை: இலக்கை நிர்ணயித்தல், அதையடைய (1) திட்டமிடுதல் (2) ஏற்பாடு செய்தல் (3) தகுந்தோரைத் தேர்வு செய்தல் (4) அவர்களுக்குப் பயிற்சி அளித்தல் (5) ஒருங்கிணைத்தல் (6) தலைமையேற்று வழி நடத்தல் (7) ஊக்கப்படுத்தல் (8) கண்காணித்தல் (9) கட்டுப்படுத்தல் (10) செயல் முடிவில் வெற்றிக் கனிகளைப் பகிர்ந்தளிதளித்தல். எனக்கென்ன வியப்பென்றால் இவையும் பத்து, இராவணன் தலையும் பத்து. அவனது தலை ஒவ்வொன்றும் ஒரு காரியத்தைப் பார்த்தது என்று கூடக் கம்பன் ஒரு பாடல் பாடியிருக்கிறான். (Ten Heads of Department)

    ஒவ்வொரு படலத்தின் தொடக்கத்திலும் ஒவ்வொரு கடவுள் வாழ்த்துப் பாடல் பாடி அசத்தியிருக்கிறான் கம்பன். அவற்றுள் 'ஒன்றே என்னின் ஒன்றே ஆம், பலவே என்னின் பலவே ஆம்' என்ற பாடலை எடுத்துக்கொண்டு என்னதான் கடவுளர் பலராயினும் எல்லையற்ற பரம் பொருள் ஒன்றுதான் என்று நிறுவி அதை இன்றைய மேலாண்மை வட்டத்தில் ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் பலராயினும், பலமொழி பேசுவோராயினும், ஆண் - பெண் ஆயினும், பல்வேறு இனத்தவராயினும் நோக்கம் மட்டும் ஒன்றுடையவர்கள் என்று பொருத்திக் காட்டியிருப்பது வள்ளியப்பனின் திறமை. இதனை வேற்றுமையின் ஒற்றுமை 'Unity in Diversity' என்று அடிக்கடி சொல்லுவார் நமது பாரத நாட்டின் முதல் பிரதமர் நேரு அவர்கள்.

    திறன் வாய்ந்த மேலாண் வீரனுக்கு வேண்டிய இலக்கணங்களைத் தனித் தனியே எடுத்து நூல் முழுவதும் கம்பராமாயணப் பாத்திரங்களோடு இணைத்துக் காட்டும் திறன் விளக்க வைக்கிறது. (1) எடுத்துக்கூறும் திறன் (Communication skill), (2) எளிமை (Humility), (3) தன்னளவைத் தானறிதல் (Knows one's own place), (4) நோக்கம் (Mission), (5) சரியான சுயமதிப்பீடு (Realistic self appraisal), (6) கண் மூடித்தனமான குழு முடிவு (Group think), (7) மேலாண்மை (Empowerment), (8) பொறுப்பைப் பகிர்ந்தளித்தல் (Distribution of Response), (9) அங்கீகரிக்கவும் (Recognition), (10) பரிசளித்தல் (Rewards).

    மேற்கூறிய அனைத்து மேலாண்மைக் கூறுகளையும் இராமாயணப் பாத்திரங்களோடும், நிகழ்வுகளோடும் தகுந்த முறையில் பொருத்திக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

    எடுத்துக் கூறும் திறனுக்குச் சொல்லின் செல்வன் அனுமனையும், எளிமைக்குக் குகனையும், பகிர்ந்தளிக்கும் தன்மைக்கு இராமனையும், கண்மூடித்தனமான (Group Think) குழு முடிவிற்கு இராவணனையும், எடுத்துரைக்கும் திறனுக்கு மாரீசன், மாலியவான் போன்றோரையும் சான்று காட்டுகிறார் வள்ளியப்பன். காப்பியம் முழுவதும் வியாபித்திருக்கிற கதைத் தலைவனாகிய இராமனை மட்டும் வைத்து மேலாண்மைக் கருத்துகளை நிறுவாமல், சீதை, அனுமன், இலக்குவன், பரதன், குகன், இராவணன், வாலி, சுக்ரீவன், வீடணன், சாம்பவான், மாரீசன் போன்ற துணைப் பாத்திரங்களையும் உயிரற்ற கேந்திர மலையையும் வைத்து நிறுவியுள்ளமை அவரது வீச்சைக் காட்டுகிறது.

    பரிசும், ஏற்பும் (Rewards & Recognition), என்ற பகுதியை நுணிகிப்பார்த்து பணம் - பொருள் வடிவப் பரிசுகள் (Monetary rewards), என்றும் பணம் - பொருள் வடிவமற்றப் பயன்பாட்டுப் பரிசுகள் (Now Monetary Rewards), என்றும், இராமனது பட்டாபிஷேகத்தின்போது அங்கதனுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்த இராமன் அனுமனைப் பார்த்துப் போர் உதவியதின் தோளால் (என்னைப்) பொருந்துறப் புல்லு என்று தனது ஆலிங்கனமாகிய பெறலரும் பரிசினை நல்கினான் என்று எடுத்துக்காட்டியுள்ளமை சிறப்பு.

    உணர்வுசார் அறிவு (EQ. Emotional Intelligence):

    இதற்குப் பேரிடம் ஒதுக்கி இந்த உணர்வுசார் அறிவு கம்ப காவியத்தில் வெளிப்படும் இடங்களையும், விளையாடும் திறனையும் அழகுறக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

    முதலில் ‘உன்னிடம் உதவி கேட்டு வருவோர்க்குப் பொருள் கொடுக்க உன் சகக் கிழத்தி கோசலையிடம் பிச்சை புகுவாயோ என்றும், உன் தந்தைக்குப் பகை வந்தால் யார் போர் உதவி செய்வார்' என்றும் கேட்ட மந்தரையாகிய கூனியின் தீய சொற்களுக்குச் செவி சாய்க்காது அவளைக் கடிந்து கொண்ட கைகேயி உணர்ச்சி வயப்பட்ட பின்னர் அப்படியே தட்டைத் திருப்பிப் போட்டு கூனியைப் பார்த்து, 'நீ எனக்கு மந்திரி, என் மகன் பரதனின் தாய்', நன்றி. என் மகன் பரதன் முடிசூடும் வழியைச் சொல் என்கிறாள்.

    அதேபோல சுடு சொற்களை அள்ளி வீசிச் சீதை இலக்குவனை மானின் பின்னே போன இராமனைத் தேட அனுப்பியதும் EQ தான்.

    தனியேயிருந்த சீதையின் தவச்சாலையில் மிகச் சாதுவாக முற்றுந்துறந்த தவசியாக வந்தமர்ந்த இராவணன் தன் சுயரூபம் காட்டக் காரணமானதும் EQ தான்.

    நீ நிற்கும் நிலை நெறியிற்று அன்று என்று கூறியதோடு நான் எரியில் வீழ்வேன்" என்று சீதை கூறிய சொற்களும், தவச் சாலையில் வந்து அமர்ந்த இராவணச் சந்நியாசியிடம் தன் கணவன் கொழுந்தன் இவர்களால் பாராட்டிச் சொன்ன வார்த்தைகளும் இலக்குவன், இராவணன் EQ - வைக் கிளறிவிட்டதை அதேபோல மாயா சீதையை வெட்டக் கண்ட அனைவரின் EQ தூண்டப்படுகிறது.

    சீதையின் தீக்குளிப்பு வெவ்வேறு வகையாகப் பார்க்கப்படுவதைக் கண்டிருக்கிறோம். இதனை எவ்வளவு அழகாக நியாயப்படுத்துகிறார் வள்ளியப்பன் பாருங்கள். நீதி பரிபாவிக்கப்பட்டது என்பது மட்டும் முக்கியமல்ல. நீதி எவ்வாறு பரிபாலிக்கப்பட்டது என்பதை அறிய வேண்டும். (Justice must not only be done but must be seem to be done). தான் நீதி நெறியின்படி நடந்து கொண்டான் என்பது மட்டும் இராமனுக்கு முக்கியமல்ல. அவன் அவ்வாறு நடந்து கொண்டான் என்பதை உலகறிய வேண்டும். அதனால் தான் சீதையைத் தீக்குளிக்கச் செய்தான்.

    இன்றைய மேலாண்மை நிர்வாகத்தில் எச்சரிப்போர் (Whistle Blowers) என்ற ஒரு புதிய துறைக்கு இடம் உண்டு. ஒரு நிறுவனத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் தவறு செய்தால் இத்தகைய எச்சரிப்போர் (Whistle Blowers) மேலாண்மையில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பர். இதை இராவணனுக்கு அறிவுரைகளை எடுத்தும் இடித்தும் உரைத்த வீடணன் கும்பன் இவர்களோடு ஒப்பிட்டு வெற்றி காண்கிறார் ஆசிரியர்.

    நிறைவாக ஒப்புரவு (Empathy), இரக்கம் (Sympathy) என்பதை விரிவாக ஆய்ந்துள்ளார் ஆசிரியர். சுக்ரீவன் வாக்குறுதியை மறந்து கிடக்கிறான் என்று கோபாவேசமாக வரும் இலக்குவனுக்கு எதிராக வாலியின் மனைவியாகிய தாரையை நிறுத்தினான் அனுமன். தாரையோ விதவை. அவளைப் பார்த்த மாத்திரத்தில் தனது தாயாரை நினைந்து நைந்தான் இலக்குவன். இது ஒப்புரவு (Empathy).

    சீதையைச் சிறை மீட்கச் சென்ற அனுமன் அவளைச் சுற்றியிருந்த அரக்கியரைக் கொல்ல முற்படுகிறான். அப்போது அவனைத் தடுத்து அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். இராவணன் ஏவியதைத்தானே செய்தார்கள், இவர்களை மன்னித்துவிடு, ஒன்றும் செய்யாதே என்று சீதை சொன்னது இரக்கம் (Sympathy).

    பேராசியராகிய நான் நூலாசிரியரைச் சிறப்புறப் பாராட்ட விரும்புவது இரண்டு காரணங்களுக்காக.

    1. நூலின் கட்டமைப்பு: நூலின் இறுதியில் பின்னிணைப்புகளைச் சேர்த்து, வாசிப்போர் பயன்பெறும் வகையில் காண்டம், படலம், பாடல் எண், பக்க எண் இவற்றைக் கொடுத்துள்ளார். அதே போன்று மேலாண்மை குறித்த ஆங்கிலப் பதங்களைப் பட்டியலிட்டு அவை நூலில் இடம்பெறும் பக்கங்களையும் கொடுத்துள்ளார். நூலின் உள்ளும் ஆங்காங்கே ஆங்கில விளக்கங்களும் கருத்துப் படங்களும் இணைந்திருப்பது கூடுதல் அழகு சேர்க்கிறது. இந்த வகையில் இராமாயணத்தைப் பற்றி இந்த நூலாசிரியர் புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார்.

    2. அதே நேரத்தில் வெறும் ஆய்வு நூல்போலச் சுவை குன்றியமையாமல் சுவாரஸ்யமான இலக்கிய நூலாக ஆக்கியிருப்பது ஆசிரியர் மேலாண்மைப் பயிற்சியோடு இலக்கிய நேசம் மிக்கவர் என்பதைக் காட்டுகிறது.

    இராமாயணக் கதை சொல்லிகளின் மரபுக்கேற்றவாறு இராமனின் பட்டாபிஷேகப் படத்துடன் நூல் நிறைவேறுவது மனதிற்கு நிறைவு தருகிறது.

    சோம வள்ளியப்பன் இன்னும் எழுதுக!

    பேராசிரியர்

    கண. சிற்சபேசன்

    *****

    வாழ்த்துரை

    முனைவர் பெ. சுபாசு சந்திரபோசு

    ஆட்சிக்குழு உறுப்பினர்

    அழகப்பா பல்கலைக்கழகம்

    முன்னாள் தமிழாய்வுத் துறைத்தலைவர்

    பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி)

    திருச்சிராப்பள்ளி - 620017

    இனிய நண்பர் சோம வள்ளியப்பன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். இவர் நாடறிந்த பேச்சாளர், மேலாண்மை நிறுவனப் பயிற்சியாளர், பொருளாதார ஆலோசகர், எழுத்தாளர் எனப் பரிணாமங்களில் செயல்படுபவர்.

    இவர் இப்போது கம்பர் காவியத்தையும், மேலாண்மைக் கோட்பாடுகளையும் ஒப்பிட்டுக் மேனேஜ்மெண்ட் குரு கம்பன் என்னும் நூலை எழுதியுள்ளார். இது தமிழுக்குப் புதுவரவு; காரணம் திருக்குறளில் மேலாண்மைச் சிந்தனைகள் என்று பல நூல்கள் வெளிவந்துள்ளன. மேலாண்மைக் கோட்பாட்டையும், கம்பரின் கதைப்போக்கையும் இணைத்து வாசகர்களை ஒரு புதிய வாசிப்புக்கு அழைத்துச் செல்கிறார் சோம வள்ளியப்பன்.

    உலக இலக்கியத்தில் கம்பர் காவியம் விருத்தம் என்னும் பாவகையால் காவியமாந்தர்களின் உணர்வுகளுக்கு நூறு வண்ணங்களில் படைக்கப்பட்ட ஒரு காவியமாக கம்பரின் கடவுள் வாழ்த்து மேலாண்மைக் கோட்பாடு. உலகம் ஒரு கிராமமாக மாறி வரும் சமூகச் சூழலில் இறைவனின் பன்முக நோக்கை, நிறுவனங்களில் காணும் பன்முகத் தன்மையோடு சிறப்பாக ஒப்பிட்டுள்ளார் இந்நூலாசிரியர்.

    கம்பனின் காவியத்தலைவன் இராமன் காவியக் கதையாலும், காவிய மாந்தர்களின் படைப்பாலும் தலைமை நோக்கோடு விரவி வருவதை இந்நூலாசிரியர் நிறுவனத் தலைமைப் பண்புகளோடு விவாதித்துள்ளார்.

    அறம் சார்ந்த போர் தெறியை அனுமன் சம்பு மாலியிடம் பேசும்போது,

    எளியோர் உயிர் கொடல் என்பதன் மூலம் வெளிப்படுத்துகிறான். இராமபிரான் போருக்கு வந்த இராவணனை வீரத்தோடு போர்புரிய இன்று போய் போருக்கு நாளை வா என்று போர் அறம் பேசுவது கம்பர் காவியம். இது போல் உலகில் வெற்றி பெறும் நிறுவனங்கள் அறம் சார்ந்த மேலாண்மை நெறிகளைப் பின்பற்றினால் என்றும் நிலைப்பதோடு, அது ஒரு புதிய அடையாளமாக அமையும்.

    உலகத்தில் எச்செயலையும் அடைவதற்குரிய வழிமுறையைக் காலத்தோடு பின்பற்ற வேண்டும். எல்லா நேரத்திலும், எல்லாரிடமும் ஒரே மாதிரி, வழிமுறையைப் பயன்படுத்த முடியாது. இச்சிந்தனையைக் கம்பரின் காவியத்திலும் பார்க்க முடிகிறது.

    இராமனின் மனைவி சீதையைக் கவர நினைத்த இராவணன் தன் மாமன் மாரீசனிடம் மந்திர தந்திரங்களைக் கேட்கிறான். அதற்கு மாரீசன் அணுகுமுறை தவறு என்பதை இராவணனுக்கு அறிவுறுத்தி இராமன் மேரு மலையின் இன்னொரு வடிவம் என்று எச்சரிக்கிறான்.

    ஒரு தகவலை அல்லது ஒரு நிகழ்வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றால் விவாதித்துக் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். இது ஒரு கூட்டாட்சித் தத்துவம்.

    வாலியிடம் வதைபட்டு இராமனிடம் வரும் வாலியின் தம்பி சுக்கீரிவனை ஏற்றுக் கொள்ள, அனுமன், சாம்பாவான், நீலன் போன்றவர்களிடம் கலந்து பேசி வீடணனை ஏற்றுக் கொள்கிறார். அதைத்தான் கம்பர்:

    குகனோடும் ஐவர் ஆனோம். முன்பு பின் குன்று சூழ்வான் மகனொடும் ஐவர் ஆனோம்; தம்முடை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம் என்று சகோதரத்துவ நிலையைக் காட்டுகிறார்.

    அதுபோல் இராவணனின் கோட்டையின் நான்கு புறங்களிலும் போர் நெருக்கடி வந்தபோது, அமைச்சர்களிடம் கலந்து பேசி ஆலோசனை பெறுகிறான். ஆனால் கும்பகர்ணனைப் போருக்கு அனுப்பும்போது ஆலோசிக்காமல் போருக்கு அனுப்பிச் சாகடித்து விடுகிறான். இதுபோல் நிறுவனங்களில் நெருக்கடிகள் வரும்போது ஆலோசனை பெறாமல் அழிந்து வரும் நிறுவனங்களைப் பார்க்க முடிகிறது.

    ஒரு செயலை ஒரு மனிதன் செய்வது என்பது ஒன்று. ஆனால் எல்லாச் செயல்களையும் தனி மனிதனால் செய்ய முடியாது. அப்போது கூட்டாகச் சேர்ந்து செயல்படக் குழுக்களை உருவாக்கிச் செயல்படுவதைக் கம்பர் காவியத்தில் காண முடிகிறது. இராமன் ஆற்றைக் கடப்பதற்குக் குகனை சகோதரனாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார். இன்று உலக நாடுகளில் சிறப்பாகப் போற்றிச் செயல்படுவது கூட்டு மேலாண்மையாகும்.

    இன்று நாம் ஒரு தகவல் யுகத்தில், ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தொழில்நுட்பங்களை எதிர்கொண்டு வாழ வேண்டிய புதிய வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் தான் 'உலகம் ஒரு கிராமம்' என்று அழைக்கின்றனர்.

    மனித இனத்துக்குள்ளும், நிறுவனத்துக்குள்ளும் சரியான தகவல் பரிமாற்றம் நிகழ வேண்டும்; இல்லையென்றால் தேவையில்லாத எதிர்விளைவுகள் ஏற்படும். அதனால் கம்பர் தகவல் பரிமாற்றத்தை உளவியல் நோக்கோடு கையாண்டுள்ளார். அனுமன் இலங்கைக்குச் சென்று அசோகவனத்தில் சீதையைக் கண்ட தகவலை அனுமன்,

    கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் என்று கூறி இராமனின் தவிப்பைப் போக்குகிறான்.

    இன்று உலக அளவில் உணர்வு சார்ந்த புத்திசாலித்தனம் எல்லா நிறுவனங்களிலும், ஆட்சி முறைகளிலும் கையாளப்பட்டு வருவதை இந்நூலாசிரியர் நன்கு காட்சிப்படுத்தி விளக்கியுள்ளார். இச்சிந்தனை கம்பரின் காவியத்தில் கைகேயின் மனத்தைக் கூனி உணர்வு ரீதியாக மாற்றிச் செயல்பட வைக்கிறாள். இதனால் கைகேயி தசரதனிடம் இரண்டு வரம் கேட்டுப் பரதனை நாடாள வைத்துவிட்டு, இராமனைக் காட்டுக்கு அனுப்புகிறாள். ஆனால் பரதன் முடி

    Enjoying the preview?
    Page 1 of 1