Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athirntha India - Panamathippu Neekkam 2016
Athirntha India - Panamathippu Neekkam 2016
Athirntha India - Panamathippu Neekkam 2016
Ebook234 pages1 hour

Athirntha India - Panamathippu Neekkam 2016

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த தலைமுறையினருக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து, நாட்டில் எடுக்கப்பட்ட, மிகப்பெரும் தாக்கம் கொடுத்த, அரசு முடிவுகளில் முதன்மையானது, 2016 நவம்பர் மாதம் அறிவிக்கபட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையான ‘டிமானிடைஷேசன்’ தான்.

அறிவித்த நாள் தொடங்கி இன்றுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் பேசு பொருளாகிவிட்டது அது. மிகப் பெரும் முடிவு மட்டுமல்ல, மிக முக்கியமான முடிவும் கூட.. இதைப்பற்றி பல்வேறுசமயங்களில் நான் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும், பத்திரிக்கைகள் வாயிலாகவும் என் கருத்துகளை பகிர்ந்துகொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில், இதன் பலன்களை மட்டும் உணர்ந்தவனாக இருந்தேன். அதனால் ஆதரித்துப் பேசினேன். ஓராண்டு முடிவதற்குள் இந்த நடவடிக்கை குறித்து கூடுதலாக தெரிந்துகொண்டவன், தந்தி தொலைக்காட்சி நடத்திய, பொதுமக்கள் மத்தியில் சென்னையில் நடந்த,’மக்கள் மன்றம்’ நிகழ்ச்சியில் ’இந்த நடவடிக்கையால் மக்களுக்கு சிரமமே’ என்ற அணியில் பேசினேன். தொடர்ந்து இரண்டாம் ஆண்டு நாளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதன் சிரமங்களைப் பற்றியே அதிகம் பேசினேன். என்னுடைய அலுவலகத்தில் அமர்ந்து சில விவரங்கள் தேடிக்கொண்டிருந்த போதுதான், இரண்டு ஆண்டுகளாக ஊடங்களில் பகிர்ந்துகொள்வதற்காக பணமதிப்பழிப்பு நடவக்டிகை மற்றும் தன் தாக்கங்கள் குறித்து கணிசமாக அளவு தரவுகள், தகவல்கள் சேர்ந்திருப்பதை கவனித்தேன்.

மேலும் நம் காலத்தில் நடந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வை பதிவு செய்யவேண்டும் என்று நினைத்தேன். இதெல்லாம் 2018 செப்டெம்பர் மாதத்தில். கிழக்க்குப் பதிப்பகத்தில் விவரம் சொல்ல, ’உடனே எழுங்கள்’ என்றார்கள்.

வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் என்னை அதிகம் வேலை வாங்கிய புத்தகம் இது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக இரவு பகல் இதே வேலைதான். அத்தியாயங்கள் வரிசைப்படுத்துதலில் அதிக நேரம் ஆனது. ஒரு நேரம், ’இதை எப்போது முடிப்போம், வேறு வேலைகள் செய்யலாம்’ என்று நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. ஆனாலும், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாந்த நடவடிக்கையை பதிவு செய்கிறோம் என்கிற பெருமிதத்துடன் முடித்துவிட்டேன்.

இது குறித்து உங்களிடம் கூடுதல் அல்லது மாற்றுத் தரவுகள் மற்றும் பகிர்ந்துகொள்ளத்தக்க நேரடி அனுபவங்கள் இருந்தால் writersomavalliappan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அடுத்த பதிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

புத்தகம் குறித்தும் நீங்கள் எனக்கு எழுதலாம்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110104213
Athirntha India - Panamathippu Neekkam 2016

Read more from Soma Valliappan

Related to Athirntha India - Panamathippu Neekkam 2016

Related ebooks

Reviews for Athirntha India - Panamathippu Neekkam 2016

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athirntha India - Panamathippu Neekkam 2016 - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    அதிர்ந்த இந்தியா - பணமதிப்பு நீக்கம் 2016

    சொல்லப்பட்டதும், உண்மைகளும்

    Athirntha India - Panamathippu Neekkam 2016

    Sollapattathum, Unmaigalum

    Author:

    சோம. வள்ளியப்பன்

    Soma. Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. அறிவிப்பு

    2. எதற்காக? பிரதமர் சொன்ன காரணங்கள்

    3. அதிர்ச்சி மற்றும் வரவேற்பு

    4. என்ன நடந்தது

    5 எப்படி முடிந்தது?

    6. என்ன சொல்கிறார்கள்?

    7. மக்கள் மனதில் எழும் கேள்விகள்

    8. முதலாவது ’டிமான்’ – 1946

    9. இரண்டாம் முறை -1978

    10. டிமான் 2016 பற்றி.

    முன்னுரை

    இந்த தலைமுறையினருக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து, நாட்டில் எடுக்கப்பட்ட, மிகப்பெரும் தாக்கம் கொடுத்த, அரசு முடிவுகளில் முதன்மையானது, 2016 நவம்பர் மாதம் அறிவிக்கபட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையான ‘டிமானிடைஷேசன்’ தான்.

    அறிவித்த நாள் தொடங்கி இன்றுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் பேசு பொருளாகிவிட்டது அது.

    மிகப் பெரும் முடிவு மட்டுமல்ல, மிக முக்கியமான முடிவும் கூட.. இதைப்பற்றி பல்வேறுசமயங்களில் நான் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும், பத்திரிக்கைகள் வாயிலாகவும் என் கருத்துகளை பகிர்ந்துகொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில், இதன் பலன்களை மட்டும் உணர்ந்தவனாக இருந்தேன். அதனால் ஆதரித்துப் பேசினேன்.

    ஓராண்டு முடிவதற்குள் இந்த நடவடிக்கை குறித்து கூடுதலாக தெரிந்துகொண்டவன், தந்தி தொலைக்காட்சி நடத்திய, பொதுமக்கள் மத்தியில் சென்னையில் நடந்த,’மக்கள் மன்றம்’ நிகழ்ச்சியில் ’இந்த நடவடிக்கையால் மக்களுக்கு சிரமமே’ என்ற அணியில் பேசினேன்.

    தொடர்ந்து இரண்டாம் ஆண்டு நாளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதன் சிரமங்களைப் பற்றியே அதிகம் பேசினேன்.

    என்னுடைய அலுவலகத்தில் அமர்ந்து சில விவரங்கள் தேடிக்கொண்டிருந்த போதுதான், இரண்டு ஆண்டுகளாக ஊடங்களில் பகிர்ந்துகொள்வதற்காக பணமதிப்பழிப்பு நடவக்டிகை மற்றும் தன் தாக்கங்கள் குறித்து கணிசமாக அளவு தரவுகள், தகவல்கள் சேர்ந்திருப்பதை கவனித்தேன்.

    மேலும் நம் காலத்தில் நடந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வை பதிவு செய்யவேண்டும் என்று நினைத்தேன். இதெல்லாம் 2018 செப்டெம்பர் மாதத்தில். கிழக்க்குப் பதிப்பகத்தில் விவரம் சொல்ல, ’உடனே எழுங்கள்’ என்றார்கள்.

    வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் என்னை அதிகம் வேலை வாங்கிய புத்தகம் இது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக இரவு பகல் இதே வேலைதான். அத்தியாயங்கள் வரிசைப்படுத்துதலில் அதிக நேரம் ஆனது.

    ஒரு நேரம், ’இதை எப்போது முடிப்போம், வேறு வேலைகள் செய்யலாம்’ என்று நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. ஆனாலும், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாந்த நடவடிக்கையை பதிவு செய்கிறோம் என்கிற பெருமிதத்துடன் முடித்துவிட்டேன்.

    இது குறித்து உங்களிடம் கூடுதல் அல்லது மாற்றுத் தரவுகள் மற்றும் பகிர்ந்துகொள்ளத்தக்க நேரடி அனுபவங்கள் இருந்தால் writersomavalliappan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அடுத்த பதிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

    புத்தகம் குறித்தும் நீங்கள் எனக்கு எழுதலாம்.

    வாழ்த்துகள்

    சோம வள்ளியப்பன்.

    1. அறிவிப்பு

    இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்ன என்றால்..

    இந்தியர்களாகிய நம்மால் சில தேதிகளை மறக்கவே முடியாது. ஆகஸ்ட் 15, ஜனவரி 26, அக்டோபர் 2 ஆகியவை அவற்றில் சில. அந்த சில முக்கியமான, மறக்கமுடியாத தேதிகளின் பட்டியலில் புதிதாக சேர்ந்து கொண்டது, நவம்பர் 8.

    நவம்பர் எட்டு, 2016 அன்றும் 125 கோடி மக்களைக் கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்க்கை வழக்கம் போல நகர்ந்துகொண்டிருந்தது. இன்னொரு சராசரி சாதாரண நாளாகத்தான் அந்த நாளும் போயிருக்கவேண்டும். மாறாக, பொழுது சாய்ந்து மக்கள், மக்கள் பலரும் இரவு உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் வெளிவந்த ஒரு அறிவிப்பால் அந்த செவ்வாய்க்கிழமை, வரலாற்றில் இடம்பெறும், இந்தியர்களால் மறக்கவே முடியாத ஓரு நாளாகிப்போனது.

    அப்படிப்பட்ட வழக்கமான ஒரு சராசரி நாளைத் தான் நானும் கடந்து கொண்டிருந்தேன். இரவு மணி எட்டு. எனது வீட்டு அலுவலக அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். இரவு உணவு சாப்பிட்டிருக்கவில்லை.

    அப்போது செல்பேசி அழைப்பு வர, எடுத்தேன். பேசியது, தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து நெறியாளர் அசோகவர்ஷினி. எடுத்தவுடன், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரமரின் அறிவிப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.

    என்னது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்!

    ஐயோ, சார் உங்களுக்கு விஷயம் தெரியாதா? பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே பாருங்கள் என்றார்.

    அவரசமாக தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தேன். பின்னால் தேசியக்கொடியும், அவர் கைவைந்திருந்த மேசை போன்ற அமைப்பின் மீது முத்தலைச் சிங்க சின்னமும் இருக்க, வெள்ளை காலர் இல்லாத முழுக்கை சட்டையும் அதன் மீது இளம் தங்க நிறத்திலான அவரது பிரபல்யமான ’மோடி’ கோட்டும் அணிந்திருந்த படி, பிரதமர் நரேந்திர மோடி, ’இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது’ என்று பிரதமர் கம்பீரமாக, உறுதியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    கீழே தமிழில் தகவல் ஓடிக்கொண்டு இருந்தது.

    அதிர்ச்சியாக இருந்தது.

    அதற்குள் நியூஸ் 18 சேனலில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கருத்து கேட்டார்கள். ’போனோ’ எனப்படும், தொலைபேசியிலேயே கருத்து சொல்லும் முறையில் கேட்டார்கள்.

    ’மக்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் நடவடிக்கை இது. சரியில்லை’ என்ற பொருளில் கருத்து சொன்னேன்.

    தொடர்ந்து வெவ்வேறு தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்தேன். நாடெங்கும் அதிர்ச்சியும் குழப்பமும் நிலவியதை சேனல்கள் காட்டிக்கொண்டிருந்தன.

    மீண்டும் ஒரு போன் அழைப்பு. இந்த முறை அழைத்தது, தமிழ் இந்து நாளிதழில் இருந்து ஜனா. பேட்டி கேட்டார். ’மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் நடவடிக்கை’ என்ற விதத்தில் அபிப்பிராயம் சொன்னேன்.

    மீண்டும் இன்னொரு போன். தந்தி தொலைக்காட்சியில் இருந்து. உங்கள் வீட்டுக்கு அவுட் பவுண்ட் யூனிட் வருகிறது. நேரலை செய்யப்போகிறோம். தயாராக இருங்கள் என்றார்கள்.

    அரை மணி நேரத்தில் கேமரா சகிதம் வந்தார்கள். நான் அதற்குள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தேன். மக்கள் எப்படி வங்கி ஏடிஎம் களை கூட்டம் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் இதே செய்திதான்.

    இன்று நள்ளிரவு முதல் செல்லாது. தங்களிடமிருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய், மகாத்மா காந்தி சீரிஸ் தாள்களை மக்கள் வங்கி வங்கி ஏடிஎம்களிலும் தபால் நிலயங்களிலும் செலுத்தலாம். ஒரு நாள் விட்டு, வரும் 10ம் தேதி முதல், மாற்றிக்கொள்ளலாம்; வங்கிகள் புதிய நோட்டுகளை வழங்கும். என்று அறிவித்திருந்தார்.

    500 ரூபாய் 1,000 ரூபாய் தாள்களை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்த டிசம்பர் 31 வரை, 50 நாள் கால அவகாசம் இருக்கிறது என்று பிரதமர் சொல்லி இருந்தபோதும் மக்களிடம் பதட்டம்.

    நான் என் வீட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்திருக்க, காதுக்கு ஹெட்போன் மாட்டி, வயிற்றுப்பக்கம் சட்டைப் பொத்தன் கழற்றி, சின்னஞ் சிறிய மைக்கை உள்ளே விட்டு, காலருக்கு அருகே அதை வெளியே இழுத்து, சட்டைக் காலரில் கிளிப் செய்தார்கள். எதிரே ஸ்டாண்ட் போட்டு அதில் கேமரா.

    நேரடி ஒளிபரப்பு. தந்தி டிவி ஸ்டூடியோவில் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே.. மற்றொரு இடத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் அவர்களும் அதே நேரலையில். பாண்டேவின் கேள்விகளுக்கு நானும் அவரும் பதில்கள் சொன்னோம்.

    அதற்கது நடந்து முடிந்திருந்த, எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்துகொண்டிருந்தவர்கள் மீது செய்த ’சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ வுடன் ஒப்பிட்டு, அதைவிட பெரிய தாக்குதல் இது என்றும், இவ்வளவு பெரிய முடிவை, இவ்வளவு ரகசியமாக வைத்திருந்து செய்திருக்கிறார்களே என்றும், இது துணிச்சலான முடிவு என்று சொல்லிவிட்டு, நடவடிக்கை மீது இரண்டு பார்வைகள் வைத்தேன்.

    முதலாவது, நீண்ட கால அடிப்படையில் இது கருப்பு பண ஒழிப்புக்கு உதவும் என்றும், மற்றொரு பார்வையாக சாதாரண மக்களுக்கு, உடனடி தேவைகளுக்கு பெரும் சிரமம் கொடுக்கும் முடிவு என்றும் சொன்னேன்.

    மக்களிடம் பீதியும் அச்சமும் இருக்கிறது. நியாயமான பதற்றம்தான் என்று மேலும் குறிப்பிட்டேன்.

    ’இவ்வளவு பெரிய நாட்டில், இரண்டு பெரிய ’டினாமினேஷன்ஸ்’ செல்லாது என்று சொல்லப்பட்டிருப்பதை நம்ப கூட முடியவில்லை. பெரிய அளவில் 500, ஆயிரம் கோடிகள் பணம் வைத்திருப்பவர்கள் சத்தம் போடுவதாகத் தெரியவில்லை. பாவம், தினசரி, மாதச் செலவுகளுக்கு பணம் வைத்திருப்போர் தான் படுசிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

    சென்னையில் வெள்ளம் வந்தபோது எப்படி, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவினோமோ, அப்படி இந்த நோட்டு பிரச்சினை தீரும் வரை பத்து ரூபாய் இருபது ரூபாய் ஐம்பது ரூபாய் நூறு ரூபாய் நோட்டுகள் வைத்து இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்.

    மேலும் எல்லோரும் தேவையோ இல்லையோ செல்லக்கூடிய நோட்டுக்களை சேர்க்க முயற்சிக்க கூடாது; இயன்றவரை வங்கி காசோலைகள், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டிடும். ரொக்கம் தேவை இல்லாதவர்கள் வங்கிகளில் தபால் நிலையங்களில் மற்றவர்களோடு சேர்ந்து வரிசையில் நின்று நெருக்கடியை அதிகரிக்காமல், கூடுதல் இருப்பவர்களுக்கு ஒதுங்கி வழி விட வேண்டும்’ என்றெல்லாம் சொன்னேன்.

    இவை, முதல் நாள், செய்தி வெளியானவுடன் நான் தெரிவித்தவை.

    இந்த நடவடிக்கையினால் ஏற்படும் சூழ்நிலையை சமாளிக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதாக இருந்தது.

    அதே நேரம் மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்த்திருக்கிறார்கள். சமீப காலத்தில் மிக அதிகமான நபர்கள் ஒரே நேரத்தில் தொலைக்காட்சிப் பார்த்தது அந்த ‘நவம்பர் எட்டு’ ஆகத்தான் இருக்க வேண்டும்.

    வேறு சில நிகழ்ச்சிகளில் பேசிய கருத்தாளர்கள் அச்சம் ஏற்படுத்தினார்கள். நீங்கள் பேசியது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்று பின்பு என்னிடம் பேசிய சிலர் தெரிவித்தார்கள்.

    அப்படி என்று பேசிய போது, எனக்கும் என்னைப் போல பேசிய பலருக்கும் இருந்த எண்ணம், ’எட்டாம் தேதி இரவு செல்லாது என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. ஒன்பதாம் தேதி வங்கிகள் இயங்காது. பத்தாம் தேதி வங்கிகள் திறக்கப்பட்டு, புதிய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்’ என்பது தான். இதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதாக தொலைக் காட்சி செய்திகளில் சொன்னார்கள்.

    பிரதமரின் இந்த அறிவிப்பு, ஒரு சாராரால், குறிப்பாக ஏழை மக்களால்,இளைஞர்களால் வரவேற்கப்பட்டது. தவறாக பணம் சம்பாதித்தவன் காசு ஒழிந்தது. கள்ளப் பணம், கருப்பு பணம் வைத்திருப்பவர்களால் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியாது என்று பிரதமர் சொன்னது அவர்களுக்கு ஏற்புடையதாகவும், வரவேற்கத்தக்கதாகும் இருந்தது. என் எண்ணமும் அதுவாகவே இருந்தது.

    செல்லாததாக அறிவிக்கப்பட்டிருக்கும் தாள்களை உங்கள் வங்கிக்கணக்குகளில் கட்டிவிடுங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், எங்கே எல்லாம் செல்லாத் தாளாகளாக ஆகிவிடுமோ என்ற பயத்தில், வீட்டில் இருந்த அந்த ரூபாய்த் தாள்களை எல்லாம் தேடி எடுத்து, ஏ.டி.எம்.களுக்கு அந்த இரவு நேரத்தில் ஓடி, கும்பலில் முட்டி மோதி, அவற்றை அவரவர் வங்கிக்கணக்குகளில் கட்டினார்கள்.

    கையிலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்ய ஏ.டி.எம்.களில் பெரும் கூட்டம்; கடும் போட்டி. தவிர, பிரதமரின் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    பதட்டத்தில் மக்களுக்கு தங்கள் வசமுள்ள, மதிப்பழிக்கப்பட்ட ரூபாய் தாள்களை எப்படியாவது பயன்படுத்திக் கொண்டுவிட வேண்டும் என்ற வேகம் வந்தது. சிலர் அவற்றைப்

    Enjoying the preview?
    Page 1 of 1