Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Emotional Intelligence – Idliyaga Irungal
Emotional Intelligence – Idliyaga Irungal
Emotional Intelligence – Idliyaga Irungal
Ebook127 pages1 hour

Emotional Intelligence – Idliyaga Irungal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது? இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது? அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன? இதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்! ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம்! அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்! இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம். உங்கள் அபார வெற்றியின் வாசலை இங்கே திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110101273
Emotional Intelligence – Idliyaga Irungal

Read more from Soma Valliappan

Related to Emotional Intelligence – Idliyaga Irungal

Related ebooks

Reviews for Emotional Intelligence – Idliyaga Irungal

Rating: 4.214285714285714 out of 5 stars
4/5

14 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Emotional Intelligence – Idliyaga Irungal - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    எமோஷனல் இண்டலிஜென்ஸ் - இட்லியாக இருங்கள்

    Emotional Intelligence – Idliyaga Irungal

    Author :

    சோம வள்ளியப்பன்

    Soma Valliyappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliyappan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கங்குலி முதல் உமாபாரதி வரை

    2. இட்லியின் பெயர் எமோஷனல் இண்டலிஜென்ஸ்

    3. ஐ.க்யூ சோறு போடும்; இட்லி விருந்து வைக்கும்!

    4. ஆவியா? சாதமா?

    5. ஒரே ஒரு கணம்

    6. அவசரம், பரம அவசரம்

    7. அண்ணன் அமிக்டலா

    8. டெண்டுல்கர் டெக்னாலஜி

    9. ஃபீடிங் பாட்டில் தத்துவம்

    10. ஒண்ணு வேணுமா? ரெண்டு வேணுமா?

    11. கண்டபடி கடிதத்தில் திட்டுங்கள்

    12. நாணாவே நம்பர் 1

    13. அடித்து ஆடுங்கள்!

    14. சிரிப்பாகச் சிரித்த டாக்டர்

    15. இட்லி ரெடி

    சமர்ப்பணம்

    லட்சக்கணக்கான வாசகர்களுக்கு

    என்னை அறிமுகப்படுத்திய ஆனந்த விகடனுக்கு

    முன்னுரை

    பணம், சந்தோஷம், அமைதி, சாதனைகள், ஆரோக்கியம், நல்லுறவு என்று வெற்றிக்கு எத்தனையோ உருவங்கள். ஒவ்வொருவரும் வெற்றியை தாங்கள் விரும்பும் உருவங்களில் தேடுகிறார்கள்.

    தேடுவது எதுவாக இருந்தாலும் அது கிடைக்க வேண்டும். அதுதான் முயற்சிக்கு மரியாதை.

    அந்த மரியாதையை அனைவரும் பெறவேண்டும். அதற்கான ஒரு வழி எமோஷனல் இண்டலிஜென்ஸ். இது இருபத்து ஐந்து ஆண்டுகளாக மேலை நாடுகளில் கவனிக்கப்பட்டு வரும் ஒரு திறன்.

    படிப்பு, அறிவு போன்றவற்றை இண்டலிஜென்ஸ் என்கிறார்கள். யாரும் இந்த இண்டலிஜென்ஸ் தான் வாழ்க்கை வெற்றிக்கு ஒரு நிச்சய வழி என்று அனைவரும் நினைத்திருந்தார்கள்.

    ஆனால் இதில் சிறந்து இருந்தவர்களில் சிலர் வெற்றி பெறாததும், ஜெனரல் இண்டலிஜென்ஸில் சுமாராகவே இருந்தும் வேறு சிலர் வாழ்க்கையில் பெருவெற்றி பெற்றதும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இது ஏன், எப்படி? என்று ஆராய்ந்தவர்கள் ஜெனரல் இண்டலிஜென்ஸ் தவிர, எமோஷனல் இண்டலிஜென்ஸ் என்ற ஒரு திறனும் அந்த வெற்றி பெற்ற சிலரிடம் மிகுந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

    தன்னை, தன் உணர்ச்சிகளை திறம்பட நிர்வகித்துக் கொண்டு, பிறருடைய உணர்வுகளையும் சரியாகப் புரிந்துகொண்டு நடப்பவர்கள், நிச்சய வெற்றி பெறுகிறார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.

    இந்த இரண்டு திறன்களுக்கும் சேர்த்து எமோஷனல் இண்டலிஜென்ஸ் (உணர்வு பற்றிய புத்திசாலித்தனம்) என்று பெயர்.

    ஐந்து வருஷங்களுக்கு முன்பு இதற்கான பயிற்சிக்காக ஜாம் செட்பூரில் உள்ள XLRI கல்வி நிறுவனத்துக்குப் போயிருந்தேன். இதன் அறிமுகம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. கற்றுக் கொண்டவற்றை கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தேன். என்ன ஆச்சரியம்? என் வெற்றிகள் அதிகமாகின.

    இதை நம் தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துக்கு கிழக்கு வாய்ப்பு கொடுத்தது. எழுதி விட்டேன். படித்துவிட்டு உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் எழுதுங்கள்.

    அன்புடன்,

    சோம.வள்ளியப்பன்

    சென்னை

    09.06.2006

    1. கங்குலி முதல் உமாபாரதி வரை

    உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 1997-ம் வருஷ ஹெவி வெயிட் சாம்பியன் யார் என்று முடிவு செய்யும் மாபெரும் குத்துச்சண்டைப் போட்டி. மோதப் போகிறவர்கள் சாதாரண குஸ்தி பயில்வான்கள் அல்லர். பெயரைச் சொன்னாலே பலம் விளங்கக்கூடிய மைக் டைசனும் இவாண்டர் ஹோலிபீல்டும்.

    குத்துச்சண்டைக்கு என்று சில கட்டுப்பாடுகள் உண்டு. சண்டையே ஆனாலும் இப்படித்தான் செய்யவேண்டும், இதெல்லாம் கூடாது என்ற கடும் வரைமுறைகளுண்டு. போட்டி ஆரம்பமாகிறது. சூடான மோதல். ரசிகர்களின் ஆரவாரம் போலவே இருவருக்குள்ளும் ஜெயிக்க வேண்டுமென்ற வெறியும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

    சில சுற்றுகள் முடிகின்றன. ஒவ்வொருமுறையும் நடுவர் அந்தச் சுற்று முடிந்தது என்று மணியடித்து, அவர்களிருவரையும் பிரித்து விடுகிறார். அமைதி. அமைதி. அமைதி. அந்த விசில் சத்தத்துக்கு அதுதான் அர்த்தம். ஆனால் அவருக்குத் தெரியாது. ஒவ்வொரு சுற்று முடியும்போதும் மைக் டைசனுக்குக் கோபம் ஏறிக்கொண்டே இருக்கிறது. அது ஒரு அணையாத பெருநெருப்பு. கொஞ்சம் காற்றடித்தால் அக்கம்பக்கமெங்கும் பற்றிக் கொண்டு விடக்கூடிய பாஸ்பரஸ். தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தள்ளாடித் தள்ளாடிப் போய் அமர்கிறார் டைசன்.

    அவரது பார்வை, எதிரே இன்னொரு மூலையில் சாதாரணமாக அமர்ந்திருக்கும் ஹோலிஃபீல்டின்மீதுதான். வெறும் பார்வையா அது? பற்றிக்கொள்ளும் பார்வை. பஸ்பமாக்கி விடக்கூடிய அக்னிப் பார்வை. ஆனாலும் இது மைதானம். நடப்பது வெறும் விளையாட்டுப் போட்டி.

    வெறும் விளையாட்டுத்தானா? அவ்வளவேதானா?

    டைசன் தன்னை மறந்துகொண்டிருந்தார். அவரது கோபம் ஒரு புயலின் வேகத்தைத் தொட்டபோது அடுத்த சுற்று ஆரம்பித்தது.

    அந்தக் கணம் அதிர்ஷ்ட தேவதை ஹோலிஃபீல்டின் ஹெல்மெட்டுக்குள் உட்கார்ந்திருந்தபடியால், திடீரென்று அவர் தன் தலையால் மைக் டைசனை ஓங்கி முட்டுகிறார். இது விதிமுறைகளுக்கு உட்பட்ட மோதல்தான். பொங்கியெழச் செய்ய பொடி மட்டை அளவு தவறும் இல்லை.

    ஆனால் மோதப்பட்டவர் டைசன் அல்லவா? அதாவது அவரது ஆணவத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மோதல் அது. அவ்வளவு தான். டைசன் தன் சுய கட்டுப்பாட்டை இழக்கிறார். உடலெங்கும் மின்சாரம் போல் ஒரு வெறி பரவுகிறது. பற்களைக் கடிக்கிறார். கரங்கள் துடிக்கின்றன. மோதி மிதித்துவிடு என்று சாத்தான் ஒன்று உள்ளுக்குள் குரல் கொடுக்க, மிதிக்க நினைத்தவர் தடம் மாறிக் கடித்து விடுகிறார்.

    சர்வதேசப் பிரசித்தி பெற்றுவிட்ட காதுக் கடி.

    இது அசிங்கம், அருவருப்பு, விதி மீறல் என்று டைசனுக்குத் தெரியாது? உலக ஹெவி வெயிட் சாம்பியனுக்குத் தெரியாது? தன் ரசிகர்களே தன்மீது காறித்துப்புவார்களே என்று தோன்றாமலா போயிருக்கும்? ஆனாலும் ஏன் கடித்தார்? அதுவும் காதைப் போய்?

    கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். இன்னொரு விஷயத்தைப் பார்க்கலாம்.

    1992, மார்ச் 4, சிட்னி ஆஸ்திரேலியா. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான லீக் சுற்றுப்போட்டி. இரண்டு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஜாவித் மியான்டடுக்கு சச்சின் டெண்டுல்கர் பந்து வீசிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் விக்கெட் கீப்பராக கிரன் மோரே.

    பொதுவாக ஸ்டெம்புகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் விக்கெட் கீப்பர்கள் சும்மாவே இருக்கமாட்டார்கள் 'அப்படிப் போடு', 'இப்படிப் போடு' , 'ஆகா! அற்புதம்' 'அவ்வளவுதான்' இப்படி ஏதாவது உற்சாகமூட்டும் கமெண்டுகளை அள்ளி வீசிக்கொண்டேயிருப்பார்கள். அதிலும், கிரன் மோரே எல்லோருக்கும் ஒரு படி மேல். தனது கூச்சல்களுடன் கூடவே ஏதாவது சேஷ்டைகளும் செய்வார்.

    அந்தச்சமயத்தில், கிரன் மோரே அம்பயரிடம் பலமுறை 'விக்கெட் அப்பீல்'

    Enjoying the preview?
    Page 1 of 1