Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thottathellam Ponnagum
Thottathellam Ponnagum
Thottathellam Ponnagum
Ebook380 pages2 hours

Thottathellam Ponnagum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீங்கள் செய்யும் வியாபாரம் எதுவானாலும் அதில் வெற்றி பெற...

இந்தியாவில் தற்சமயம் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் அளவு மொத்த மக்கள் தொகையில் சுமார், 52%. மேனுபேக்கசரிங் எனப்படும் உற்பத்தித்துறையில் ஈடுபட்டிருப்போர் அளவு 14%. ஏனைய 34% மக்கள் சர்விஸ் செக்டார் எனப்படும் சேவைத்துறையில்தான் இருக்கிறார்கள்... சர்விஸ் செக்டர் என்றால் சேவைகள், சலூன், ஓட்டல், சலவை நிலையம், வாடகை கார்கள், பள்ளி கல்லூரிகள், வங்கிகள், கடைகள், மால்கள், திரைப்படக்கூடங்கள், தொலைக்காட்சி, டெலிபோன், மொபைல், ஜெராக்ஸ், எப் எம் ரேடியோக்கள், கார் வண்டிகள் ரிப்பேர் நிலையங்கள், பேருந்து, ரயில்வே, ஆட்டோ, டேக்ஸி, தகவல் தொழில் நுட்பம், த.தொ.நு. சார்ந்த வேலைகள், பத்திரிக்கை, மளிகை, காய்கறி, துணி நகைக் கடைகள், பெட்ரோல் பங்க் என்று விவசாயமும் உற்பத்தியும் அல்லாத மற்ற அனைத்துமே சர்விஸ் செக்டர்தான்.

எண்ணிக்கையில் வேண்டுமானால் விவசாயம் செய்வோர் நூற்றுக்கு 52 பேர் என்று அதிகமாக இருக்கலாம். ஆனால் அவ்வளவு பேர் சேர்ந்து உருவாக்கும் பொருள்மதிப்பு (ஜி.டி.பி), 2001ம் ஆண்டு கணக்குப்படி, நூறு ரூபாய்க்கு வெறும் 14 ரூ 60 காசுதான். உற்பத்தித்துறை உருவாக்கும் மதிப்பு ஜி.டி.பி யில் 28.6%. சர்விஸ் செக்ட்டர்தான் 57.2% பொருளாதார மதிப்பை உருவாக்குகிறது. குறைந்த எண்ணிகையில் இருக்கும் மனிதர்கள் உருவாக்கும் பெருமதிப்பிலான சேவைகள்.

பெரிய நிறுவனங்களால் அல்ல, லட்சக்கணக்கான சிறு தொழில்கள், வியாபாரம் போன்றவற்றால்தான் அமெரிக்கா முன்னேறிய நாடாகியது என்பார்கள். காரணம், பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியாது. தவிர, வேலைக்கு போக விருப்பம் இல்லாதவர்கள், சொந்தமாக தொழில் வியாபாரம் செய்ய விரும்புகிறவர்கள் எல்லாக் காலக்கட்டங்களிலுமே கணிசமான எண்ணிக்கைகளில் இருக்கிறார்கள்.

உலக நாடுகளின் சராசரி என்று பார்த்தால், 100 ரூபாய்க்கு 68 ரூபாய், சர்விஸ் செக்டரில் இருந்துதான் வருகிறது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற முன்னேறிய நாடுகளின் ஜி.டி.பியில் சர்விஸ் செக்டர் பங்கு, நூற்றுக்கு 78 ரூபாய். இந்தியாவில் நூற்றுக்கு 57 தான். அப்படியென்றால், இந்த வகையில் இந்தியா எவ்வளவோ முன்னேற இருக்கிறது.

அதேபோல, சிறுதொழில்கள் வியாபாரம் (SMEs) போன்றவை. தற்சமயம் நாட்டின் மொத்த தொழிற்சாலை உற்பத்தியில் 45% மும், மொத்த ஏற்றுமதியில் 40% மும் சிறு மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களில் இருந்துதான் வருகிறது. இவற்றில் மொத்தம் 7 கோடி பேர் வேலை செய்கிறார்கள். அவை உற்பத்தித்துறையோ, சர்விஸ் செக்ட்டாரோ, சிறுதொழில்கள் வியாபாரம் போன்றவை வரவிருக்கின்ற காலகட்டத்தில் நன்கு வளர இருக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கான புத்தகம்தான் இது. வியாபாரம் தொடங்குபவர்களுக்காக, வியாபாரம் செய்பவர்களுக்காக; சொந்தத் தொழில் செய்பவர்களுக்காக; அவர்கள் மேலும் மேலும் வெற்றி பெறுவதற்காக எழுதப்பட்ட புத்தகம்தான் இது.

திரைப்படங்களுக்கு பாடல் உருவாக்கும் போது, இசையமைப்பாளர்கள் தொடக்கத்தில் மெட்டுக்கு ஏற்ப, டம்மியாக சில வார்த்தைகளைப் போட்டுப் பார்த்துக் கொள்வார்களே அப்படி இந்த புத்தகம் எழுத ஆரம்பித்தபோது நான் இந்தப் புத்தகத்திற்கு வைத்துக்கொண்ட தலைப்பு, 'நீங்கள் செய்யும் வியாபாரம் எதுவானாலும் அதில் வெற்றி பெறுவது எப்படி?' என்பது. ஆக, அதுதான் உள்ளடக்கம். அதற்கான தகவல்கள்தான் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா வியாபாரங்களுக்கும் தொழில்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான தகவல்கள்.

வியாபாரம் என்பது ஒரு கடல். அதனைப் பற்றி ஒரு புத்தகத்திலேயே, முழுவதும் சொல்லிவிட முடியாது. ஒரு வியாபாரி, தொழில் முனைவோர் தெரிந்து கொள்ள சில அடிப்படையான விஷயங்களை உதாரணங்களுடன் கொடுப்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.

ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் எந்த அளவிற்கு பொருளாதார சீர்திருத்தங்கள் (ரீபார்ம்ஸ்) செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்று கடுமையாக பாராளுமன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும் ஒரு மதிய வேளையில்,

வாழ்த்துகளுடன்,
சோம. வள்ளியப்பன்

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580110104763
Thottathellam Ponnagum

Read more from Soma Valliappan

Related to Thottathellam Ponnagum

Related ebooks

Reviews for Thottathellam Ponnagum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thottathellam Ponnagum - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    தொட்டதெல்லாம் பொன்னாகும்

    Thottathellam Ponnagum

    Author:

    சோம வள்ளியப்பன்

    Soma Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. எது வியாபாரம்?

    2. எது வெற்றி?

    3. வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

    4. வெற்றிக்கான தயாரிப்பு

    5. வியாபாரம் வெற்றிபெற

    முன்னுரை

    நீங்கள் செய்யும் வியாபாரம் எதுவானாலும் அதில் வெற்றி பெற...

    இந்தியாவில் தற்சமயம் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் அளவு மொத்த மக்கள் தொகையில் சுமார், 52%. மேனுபேக்கசரிங் எனப்படும் உற்பத்தித்துறையில் ஈடுபட்டிருப்போர் அளவு 14%. ஏனைய 34% மக்கள் சர்விஸ் செக்டார் எனப்படும் சேவைத்துறையில்தான் இருக்கிறார்கள்...

    சர்விஸ் செக்டர் என்றால் சேவைகள், சலூன், ஓட்டல், சலவை நிலையம், வாடகை கார்கள், பள்ளி கல்லூரிகள், வங்கிகள், கடைகள், மால்கள், திரைப்படக்கூடங்கள், தொலைக்காட்சி, டெலிபோன், மொபைல், ஜெராக்ஸ், எப் எம் ரேடியோக்கள், கார் வண்டிகள் ரிப்பேர் நிலையங்கள், பேருந்து, ரயில்வே, ஆட்டோ, டேக்ஸி, தகவல் தொழில் நுட்பம், த.தொ.நு. சார்ந்த வேலைகள், பத்திரிக்கை, மளிகை, காய்கறி, துணி நகைக் கடைகள், பெட்ரோல் பங்க் என்று விவசாயமும் உற்பத்தியும் அல்லாத மற்ற அனைத்துமே சர்விஸ் செக்டர்தான்.

    எண்ணிக்கையில் வேண்டுமானால் விவசாயம் செய்வோர் நூற்றுக்கு 52 பேர் என்று அதிகமாக இருக்கலாம். ஆனால் அவ்வளவு பேர் சேர்ந்து உருவாக்கும் பொருள்மதிப்பு (ஜி.டி.பி), 2001ம் ஆண்டு கணக்குப்படி, நூறு ரூபாய்க்கு வெறும் 14 ரூ 60 காசுதான். உற்பத்தித்துறை உருவாக்கும் மதிப்பு ஜி.டி.பி யில் 28.6%. சர்விஸ் செக்ட்டர்தான் 57.2% பொருளாதார மதிப்பை உருவாக்குகிறது. குறைந்த எண்ணிகையில் இருக்கும் மனிதர்கள் உருவாக்கும் பெருமதிப்பிலான சேவைகள்.

    பெரிய நிறுவனங்களால் அல்ல, லட்சக்கணக்கான சிறு தொழில்கள், வியாபாரம் போன்றவற்றால்தான் அமெரிக்கா முன்னேறிய நாடாகியது என்பார்கள். காரணம், பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியாது. தவிர, வேலைக்கு போக விருப்பம் இல்லாதவர்கள், சொந்தமாக தொழில் வியாபாரம் செய்ய விரும்புகிறவர்கள் எல்லாக் காலக்கட்டங்களிலுமே கணிசமான எண்ணிக்கைகளில் இருக்கிறார்கள்.

    உலக நாடுகளின் சராசரி என்று பார்த்தால், 100 ரூபாய்க்கு 68 ரூபாய், சர்விஸ் செக்டரில் இருந்துதான் வருகிறது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற முன்னேறிய நாடுகளின் ஜி.டி.பியில் சர்விஸ் செக்டர் பங்கு, நூற்றுக்கு 78 ரூபாய். இந்தியாவில் நூற்றுக்கு 57 தான். அப்படியென்றால், இந்த வகையில் இந்தியா எவ்வளவோ முன்னேற இருக்கிறது.

    அதேபோல, சிறுதொழில்கள் வியாபாரம் (SMEs) போன்றவை. தற்சமயம் நாட்டின் மொத்த தொழிற்சாலை உற்பத்தியில் 45% மும், மொத்த ஏற்றுமதியில் 40% மும் சிறு மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களில் இருந்துதான் வருகிறது. இவற்றில் மொத்தம் 7 கோடி பேர் வேலை செய்கிறார்கள். அவை உற்பத்தித்துறையோ, சர்விஸ் செக்ட்டாரோ, சிறுதொழில்கள் வியாபாரம் போன்றவை வரவிருக்கின்ற காலகட்டத்தில் நன்கு வளர இருக்கின்றன.

    இப்படிப்பட்டவர்களுக்கான புத்தகம்தான் இது. வியாபாரம் தொடங்குபவர்களுக்காக, வியாபாரம் செய்பவர்களுக்காக; சொந்தத் தொழில் செய்பவர்களுக்காக; அவர்கள் மேலும் மேலும் வெற்றி பெறுவதற்காக எழுதப்பட்ட புத்தகம்தான் இது.

    திரைப்படங்களுக்கு பாடல் உருவாக்கும் போது, இசையமைப்பாளர்கள் தொடக்கத்தில் மெட்டுக்கு ஏற்ப, டம்மியாக சில வார்த்தைகளைப் போட்டுப் பார்த்துக் கொள்வார்களே அப்படி இந்த புத்தகம் எழுத ஆரம்பித்தபோது நான் இந்தப் புத்தகத்திற்கு வைத்துக்கொண்ட தலைப்பு, 'நீங்கள் செய்யும் வியாபாரம் எதுவானாலும் அதில் வெற்றி பெறுவது எப்படி?' என்பது. ஆக, அதுதான் உள்ளடக்கம். அதற்கான தகவல்கள்தான் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா வியாபாரங்களுக்கும் தொழில்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான தகவல்கள்.

    வியாபாரம் என்பது ஒரு கடல். அதனைப் பற்றி ஒரு புத்தகத்திலேயே, முழுவதும் சொல்லிவிட முடியாது. ஒரு வியாபாரி, தொழில் முனைவோர் தெரிந்து கொள்ள சில அடிப்படையான விஷயங்களை உதாரணங்களுடன் கொடுப்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.

    ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் எந்த அளவிற்கு பொருளாதார சீர்திருத்தங்கள் (ரீபார்ம்ஸ்) செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்று கடுமையாக பாராளுமன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும் ஒரு மதிய வேளையில்,

    வாழ்த்துகளுடன்,

    சோம. வள்ளியப்பன்

    *****

    1. எது வியாபாரம்?

    யார் வியாபாரி?

    நீங்கள் ஒரு வியாபாரியா? இந்தக் கேள்விக்கு 'இல்லை' என்று மிக மிகச் சிலரால்தான் பதில் சொல்லமுடியும். நம்ப முடியவில்லையா? முடியாதுதான். நம்மில் பெரும்பாலோர் என்ன நினைக்கிறோம் என்றால், ஏதாவது பொருளை, காசுக்கு மற்றவர்களுக்குக் கொடுத்தால் அது வியாபாரம். கொடுப்பவர் வியாபாரி. அது சரிதான். ஆனால் அதற்கு மேலும் 'வியாபாரம்' உள்ளது. மேற்சொன்னதை Sale of Product எனலாம். பொருள் விற்பனை. அதற்கும் மேல் என்ன இருக்கிறது? 'சர்வீஸ்' எனப்படும் ‘சேவை வியாபாரம்' இருக்கிறது. மற்றவர்களுக்கு உதவும் செய்கைகள்; அதன் மூலம் காசு.

    இஸ்திரி செய்து கொடுப்பது, மிளகாய் அரைத்துக் கொடுப்பது, கார்களை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது, இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருப்பது, பங்குகள் வாங்கி, விற்றுக் கொடுப்பது. இதில் எல்லாம் Product எனப்படும் பொருள் இல்லை. ஆனால் சேவை எனப்படும் 'சர்வீஸ்' உள்ளது. இவையும் வியாபாரம் தானே! நாம் கொடுப்பதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    சரி. இவர்கள் தவிர, வேறு யாரும் 'வியாபாரி' இருக்கிறார்களா? கருத்து வியாபாரிகள் - நாம் அனைவருமே கருத்து வியாபாரிகள்தானே நாம் சொல்வதை மற்றவர் கேட்கவேண்டும். அதாவது நம் கருத்தை நாம் விற்கிறோம். கூவிக்கூவி நைச்சியமாக, அடுத்தவர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையில் விற்கிறோம். ஆக அதுவும் வியாபாரம்தான். ஏற்றுக் கொள்ளச் செய்பவர்கள் வியாபாரிகள்தான்.

    இதில் Tell என்றும் sell என்றும் இரண்டு வகைகள் உள்ளன. சிலருக்கு தலைவர்களோ / ஆசிரியர்களோ / பெற்றோர்களோ சொல்லி விட்டால் போதும். கட்டளையிட்டது போல் நினைத்துக் கொண்டு உடன் கீழ்ப்படிவார்கள். சொன்னபடி செய்வார்கள்.

    ஆனால் வேறு சிலருக்கோ வெறுமனே 'சொன்னால்' மட்டும் போதாது. அவர்கள், 'ஏன் செய்ய வேண்டும்?' என்று கேட்பார்கள். அவர்களுக்குக் கூடுதல் விவரம் வேண்டும். எந்தக் காரணங்களுக்காக அந்த விஷயத்தைச் செய்யவேண்டும் செய்வது சரிதானா, நல்லதுதானா? என்பது அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிய வேண்டும். அதன் பிறகு தான் செய்வார்கள்.

    இப்படிப்பட்ட சில புத்திசாலிக் குழந்தைகளைக்கூட பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு Tell எனப்படும் (சும்மா) சொல்வது போதாது. ஏன், எதற்கு, என்ன காரணம் என விவரங்கள் சொல்லும் Selling முறை தேவைப்படுகிறது. அதாவது நாம் நினைத்ததை அடுத்தவர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் 'விற்க' வேண்டும். அதுவும் வியாபாரம்தான்.

    யோசித்துப் பார்த்தால் தெரியும் - நாம் ஒவ்வொருவருமே, நம்மை மற்றவர்களிடம் பல விதங்களில் தினம் தினம் விற்றுக் கொண்டு இருக்கிறோம். நான் நல்லவன், நான் வல்லவன், எனக்கு இது தெரியும், என்னால் அது முடியும், நான் அழகி, நான் பணக்காரன், பலசாலி, நான் பாவம், இன்னும் எத்தனை எத்தனையோ 'நான்'கள்.

    நாம் தினம் தினம் மறைமுகமாக, நம்மை அறியாது அடுத்தவர்களிடம், நம்மை நாம் நினைக்கும் விதமாக ‘விற்பனை' செய்கிறோம். பலரும் 'அதை' வாங்குகிறார்கள். அது போலவே நம்மிடமும், பலரும் அவர்களை விற்கிறார்கள். நாம் வாங்குகிறோம்.

    நம் வீட்டுக் கதவைத் தட்டி ஒருவர், தான் விற்க வந்திருக்கும் புதிய சோப்புத் தூளைப் பற்றி 5 நிமிடம் எடுத்துச் சொல்வார். அதன் பராக்கிரமங்களை, உபயோகங்களை, வித்தியாசத்தை, குறைந்த விலையை அவர் வியாபாரி. விற்க முயற்சிக்கிறார். நாம் அவர் கருத்துகளை ஏற்றுக்கொண்டால் அந்த சோப்புத்தூளை வாங்குகிறோம். வியாபாரம் முடிந்தது. வெற்றி.

    நம் வீட்டுக்குத் தினசரி பேப்பர் வருகிறது. உள்ளே பல செய்திகள். ஓர் அரசியல் தலைவரின் பேச்சு வந்திருக்கிறது. அவர்கள் கட்சி போராடத் தயங்காது, தியாகம் செய்வது அவர்களின் வழக்கம், பதவி அவர்களுக்கு முக்கியமில்லை என்று பேசியிருக்கிறார்.

    இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் அவர் என்ன செய்கிறார்? தன் கட்சியை மக்களிடம் 'விற்பனை’ செய்கிறார். அவர் பேச்சை ஏற்றுக் கொள்கிறவர்கள், அவரை ஏற்றுக் கொள்கிறவர்கள் - அவருக்கு தேர்தலில் வாக்களிக்கிறார்கள். அதுவும் ஒருவித வெற்றிகரமான வியாபாரம்தான். அது தவறு என்று சொல்லவில்லை. இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது - இதுவும் ஒரு Transaction எனப்படும் விற்கும் முயற்சியும், வாங்கிக் கொள்ள நுகர்வோர் எடுக்கும் முடிவும் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதைத் தான்.

    ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. அங்கு வேலை கேட்டு வந்தவர், தன் திறமைகளைப் பற்றி, நாணயத்தைப் பற்றி, கடின உழைப்பைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்கிறார். இதன் மூலம் அவர் என்ன செய்கிறார்? தன்னை ஒரு நல்ல விண்ணப்பதாரராக, நல்ல Candidate ஆக நேர்முகம் செய்பவர்களிடம் விற்கிறார்.

    ஆக ஒரு மனிதன், மற்றொரு மனிதனையோ மனிதர்களையோ Influence செய்து, அதன் மூலம் அவர்களை, இவன் நினைப்பதைச் செய்யவைப்பது என்பதுதான் வியாபாரம். அது பொருள் சார்ந்ததாகவோ, சேவை சார்ந்ததாகவோ அல்லது கருத்து சார்ந்ததாகவோ இருக்கலாம். வாங்குபவருக்குப் பிடித்துப் போய் அவர் அதை வாங்கினால், வியாபாரம் வெற்றி.

    அந்த வெற்றி வியாபாரத்தின் உயிர்நாடி. அது இல்லையேல், வியாபாரம் ஏன்?

    அது சாத்தியமா? சாத்தியம். அதை எல்லோராலும் சாதிக்க முடியுமா? முடியும். அதற்கு ஏதேனும் வழிகள் உள்ளனவா? நிறைய உள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல... ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான வழிகள்கூட உள்ளன.

    ***

    எது வியாபாரம்?

    எது வியாபாரம் என்று முதலில் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. எது வியாபாரம்? இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதென்றால் பக்கங்கள் பல செலவாகும். சொல்லிக் கொண்டே போகலாம். ஆங்கிலத்தில் Exhausitve என்பார்கள். ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்வது. அது சிரமம். நேரடியாக பதில் சொல்லவில்லை என்றால் பேராசிரியர் கண. சிற்சபேசன் சொல்வதுபோல எது வியாபாரமில்லை என்று திருப்பிக் கேட்டுவிடலாம்.

    பெருமளவுக்கு அந்தக் கூற்று உண்மைதான். இந்த உலகில் எதில் வியாபாரமில்லை? எவர் வியாபாரம் செய்யவில்லை? எல்லாவற்றிலும் வியாபாரம் இருக்கத்தான் செய்கிறது.

    கொடுக்கல், வாங்கல் இருப்பதெல்லாம் வியாபாரம்தான். இன்னதுதான் என்றில்லை. எதைக் கொடுத்து, வேறெதை வாங்கினாலும், அதுவும் வியாபாரம்தான். பொருளோ, சேவையோ, அல்லது வேறெதுவோ. பயன் உள்ள வகையில் ஒன்றுக்கொன்று இடம் மாறினால் அது வியாபாரம்தானே!

    நான் இன்று வகுப்புக்கு வரவில்லை. என்ன பாடம் நடத்தினார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும், சொல்வாயா? ஒரு மாணவன், இன்னொருவனைக் கேட்கிறான்.

    ஓ... தாராளமாக. நான் எழுதி வைத்திருக்கிறேன். தருகிறேன். அதற்குப் பதில், நீ எனக்கு என்ன தருவாய்?

    என்ன வேண்டும்?

    வரும் சனிக்கிழமை என்னால் 'சிறப்பு வகுப்புக்கு' வர முடியாது. வெளியூர் போகிறேன். நீ எனக்கு, அந்த ‘நோட்ஸ்' தருவாயா?

    ம்.

    இதுவும் வியாபாரம்தான்.

    என்ன இது. நீங்கள் தினமும் தாமதமாக வருகிறீர்கள். அலுவலக விதிகளின்படி இது சரியில்லை.

    ம்.

    உங்களை நான் கண்டிக்கிறேன். இது மாதிரி நீங்கள் தாமதமாக வரக்கூடாது. நேரத்துக்கு வந்துவிட வேண்டும்.

    சிரமம். என்னால் நேரத்துக்கு வரமுடியவில்லை. நீங்கள் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    ம்

    அந்த 'அட்ஜெஸ்ட்மெண்டு'க்குப் பதில் வேறு 'அட்ஜெஸ்ட் மெண்ட்' எதிர்பார்க்கப்பட்டால், எதிர்பார்த்த, கேட்ட ‘அட்ஜெஸ்ட்மெண்ட்' கிடைத்தால் அதற்குப் பெயரும் வியாபாரம்தான்.

    இறைவா எனக்கு முதல் மார்க் கொடு. நான் உன்னைத்தான் நம்பி இருக்கிறேன். முதல் மார்க் கிடைத்தால் உண்டியலில் 5,000 ரூபாய் போடுகிறேன்.

    கடை போட்டு, பெயர்ப்பலகை வைத்து, லைசென்ஸ் வாங்கி செய்வது மட்டுமல்ல - தினம் தினம் நாம் அனைவருமே வாழ்க்கையில் சிறியதோ பெரியதோ, வியாபாரங்கள் செய்கிறோம். அவை எல்லாமே வியாபாரம்தான். ஆனால் நாம் இந்தப் புத்தகத்தில் அவற்றை விட்டுவிடுவோம்.

    நாம் பார்க்கப்போகும் வியாபாரம் தனி நபர்கள் செய்யும் வாழ்க்கை வியாபாரத்தைப் பற்றியோ, கருத்து வியாபாரங்களைப் பற்றியோ அல்ல.

    ‘முதல்’ போட்டு வியாபாரம் தொடங்கியவர்களைப் பற்றி, அவர்கள் செய்யும் வியாபாரம் பற்றி, அதில் வெற்றி பெறுவதற்கான வழிகள் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

    பெரிய தொழில், சிறிய தொழில், சில ஆயிரங்கள், ஆயிரக் கணக்கான கோடிகள் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் பொருந்தும் விஷயங்களைப் பார்க்கப் போகிறோம்.

    ஓர் அடுக்கு மாடிக் கட்டடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். வாசலில் ஒரு சைக்கிள். அதன் கேரியரில் எவர்சில்வர் டீக் கேன், சின்னச் சின்ன பிளாஸ்டிக் கப்புகளில் டீயைப் பிடித்து எடுத்துக் கொண்டுபோய் கொடுத்துக் கொண்டிருந்தான் ஒருவன். அப்பொழுது அங்கு வேலை செய்பவர்களில் ஒருவன், டீயைக் கொடுத்துக் கொண்டிருந்தவனின் சட்டைப் பாக்கெட்டை விளையாட்டாகத் தட்டிவிட்டுச் சிரித்தான். தெரிந்தவன் போல, சில்லரைக் காசுகள் பாக்கெட்டில் இருந்து எகிறின.

    'டீ' பையனுக்கு கோபம் வந்தது. கத்தினான். எதிர் பார்க்கக்கூடியதுதான். அவன் என்ன சொல்லி கத்தினான் தெரியுமா? காலையில வியாபாரம் செய்யும் போது விளையாடாதேடா.

    இதைக் கேட்டதும் சட்டைப் பையைத் தட்டிவிட்டவன், பெரிதாக வாய் விட்டுச் சிரித்தபடி, "அட இவரு வியாபாரம் செய்யறாராமே? ஓட்டை சைக்கிள்ல வந்து ஐந்து ரூவா டீ வித்துக்கிட்டு! மனசுக்குள்ள பெரிய அம்பானின்னு நினைப்பு’ சைக்கிளில் கொண்டு வந்து ஐம்பது பேருக்கு டீ விற்பது அந்தப் பையனுக்கு மிகச் சாதாரணமாகத் தெரிந்தாலும், அதிலும் ஓர் உண்மை இருக்கிறது. அந்த சைக்கிள்காரர் ஒரு வியாபாரிதான். ஒரு பொருளை குறிப்பிட்ட விலைக்கு தயாரித்து, அதைவிட அதிக விலைக்கு விற்க முயற்சிக்கிறார். அது வியாபாரம்தான். அந்த சைக்கிள்காரர் முதல் போடுகிறார், பல வாடிக்கையாளர்களைச் சந்திக்கிறார். லாபமோ நஷ்டமோ பார்க்கிறார்.

    தினக்கூலிக்கோ வேறு வேலைக்கோ போவதைவிட, இதில் சவுகரியமோ, பணமோ, சுதந்திரமோ, அனுபவங்களோ, முன்னேறும் வாய்ப்போ - ஏதோ ஒன்று கூடுதலாக இருப்பதால்தான் அவர் இதைச் செய்கிறார்.

    திருச்சியில் ஒரு பெண்மணி. அங்கே இங்கே என்று அலைந்து, குறைந்த விலை, நல்ல டிசைன் என்று கண்டு பிடித்து புடைவைகள் வாங்கி வந்து, தன்னுடைய சிறிய வீட்டில் வைத்துக் கொள்வார். பல அலுவலகங்களுக்கும், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் வீடுகளுக்கும் சென்று, கொஞ்சம் கூடுதல் விலைக்கு விற்று விடுவார்.

    இது ஒரு பகுதி நேர வேலைதான். கடை கிடையாது. பெரிய முதல் கிடையாது. ஆனால் ஒரு சமயம் தன் மகளின் கல்லூரிப் படிப்புக்கு கட்டணம் செலுத்த, சுமார் 6,000 ரூபாயை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொடுத்தார்.

    இவரும் ஒரு வியாபாரிதான். இவரை, இவர் செய்யும் வியாபாரத்தைப் பார்த்து, மகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு இவர் இவ்வளவு பணம் சேர்த்து வைத்திருப்பார் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.

    எல்லோரும் ஒரே குலம்தான்

    ஆக, சைக்கிள் டீ வியாபாரியோ பழைய இரும்பு வாங்குபவரோ, பெட்டிக்கடைக்காரரோ, சலவை செய்யும் கடை வைத்திருப்பவரோ, ஸ்டேஷனரி ஸ்டோர் வைத்திருப்பவரோ, திரைப்பட விநியோகஸ்தரோ, சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டல் நிறுவனரோ, ரிலையன்ஸ் அம்பானியோ, டாடாவோ, பிர்லாவோ, இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்களைத் தொடங்கியவர்களோ, ஏன் சிங்கப்பூர் முஸ்தபாவோ, மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸோ இவர்கள் எல்லோரும் ஒரே குலம்தான். வியாபாரம் செய்பவர்கள். அதுதான் இவர்களுக்குள் உள்ள ஒரே ஒற்றுமை.

    வியாபாரத்தில், சிறியவர் பெரியவர் ஆகலாம். பெரியவர் சிறியவர் ஆகலாம். எல்லாம் நடந்திருக்கிறது. நடக்கிறது. இனியும் நடக்கும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனம் 25 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனத்தில், ரிலையன்ஸ் மொபைல் என்ற போன் வியாபாரத்தைத் தொடங்கியது. இது தவிர பல ஆயிரம் கோடி மூலதனத்தில் இயங்கும் உலகின் மிக முக்கிய பெட்ரோலியப் பொருள் நிறுவனங்களில் ஒன்றை நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஓர் ஆண்டு மொத்த லாபத் தொகை மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய்! (2011-2012)

    இந்த நிறுவனத்தின், 2011-2012-ம் ஆண்டின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு) ஒரு லட்சம் கோடி ரூபாய். இன்றைக்கு இப்படிப் பிரமிக்கும் வகையில் பரந்து விரிந்து தழைத்திருக்கும் இந்த நிறுவனத்தின் தொடக்கம் மிக மிகச் சிறியது. நம்ப முடியாத அளவுக்குச் சிறியது.

    திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி

    அதன் நிறுவனர் திருபாய் அம்பானி என்ற குஜராத்திக்காரர் 35 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 12,000 ரூபாய் முதலீட்டில் நரோடாவில் ஒரு சிறிய நூற்பாலை வைத்திருந்தவர். (முன்பு பார்த்த டீ வியாபாரி மாதிரி).

    அதே போலத் தொடங்கியதுதான் 'நிர்மா' என்ற இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கும் மிகப்பெரிய நிறுவனமும். இந்த நிறுவனம், ஹிந்துஸ்தான் லீவர் என்ற (உலகளாவிய லீவர் நிறுவனத்தின் இந்திய நிறுவனம்) வியாபாரச் சக்ரவர்த்தியின் 'சர்ப்' சோப்புத்தூளை ஒரு காலகட்டத்தில் கலங்கடித்தது.

    தமிழ்நாடு மட்டுமல்லாமல், லண்டன், அமெரிக்காவில் பல நகரங்கள், ஆஸ்திரேலியாவில் பல நகரங்கள் என்று உலகின் பல முக்கிய நகரங்களிலும் கடை பரப்பியிருக்கும் அஞ்சப்பர் உணவகத்தின் உரிமையாளர் லட்சுமி நாராயணன் சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் உணவகம் ஒன்றில் சாதாரணப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தவர்தான்.

    மிகப்பெரிய ஹோட்டல் தொடரின் (Chain of Hotels) உரிமையாளர் ஓபராய், (ஓபராய் ஷெரட்டன்). ஆரம்பத்தில், மும்பை ஹோட்டல் ஒன்றில் பணியாளராக வேலை பார்த்தவர்தான்.

    உலகின் சிறந்த சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான, இரண்டு ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்ட ஒரு பங்கின் விலை 2,400 ரூபாய்க்கு (1200 மடங்கு) இன்று விற்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, முதலில் பட்னி கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பணியாளர். பின்பு நண்பர்களுடன் சேர்ந்து, ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் ஆரம்பித்தார். பின்னால் ஒரு நேரம் அவருடைய கார் டிரைவரின் சொத்து மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் (நிறுவனத்தின் பங்குகளை, நிறுவனம் அதன் கார் டிரைவர் உட்பட பல ஊழியர்களுக்கும் கொடுத்துள்ளது. அந்த பங்குகளின் சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய்).

    ஓபராய்

    சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான KM மாமன் மாப்பிள்ளை, MRF

    Enjoying the preview?
    Page 1 of 1