Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sharegalil Panam Pannalam
Sharegalil Panam Pannalam
Sharegalil Panam Pannalam
Ebook131 pages1 hour

Sharegalil Panam Pannalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஷேர் மார்க்கெட் என்னும் பங்குச்சந்தைகளில் ஈடுபடுகிறவர்களில் முழுவதும் வென்றவர்களும் கிடையாது, தோற்றவர்களும் கிடையாது. ஆனால், அந்தப் படிப்பினைகளைக் கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். லாபம் வரும்போது மகிழ்வதும், இழப்பு நேரும்போது துவண்டுவிடுவதும் கூடாது. பங்குச்சந்தையில் நுழைய நிபுணத்துவம் தேவைதான். அறிவார்ந்து அலசும் தன்மை கொஞ்சம் இருந்தால் போதும். அதை நான் விளக்கமாகவே தந்திருக்கிறேன். அந்தச் சந்தையில் எப்போது நுழையவேண்டும், எப்போது வெளியேறிவிடவேண்டும் என்கிற தந்திரம் தெரிதல் அவசியம். பேராசை கட்டாயம் இருக்கக்கூடாது. கார் ஓட்டுனருக்கு அதன் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்ற அறிவு அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாலை விதிகள் அனைத்தும் தெரிந்திருக்கவேண்டும். நடுவழியில் பஞ்சர் ஆகிப்போனால் ஸ்டெப்னியை மாட்டத் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் தடையின்றிப் பயணத்தை மேற்கொள்ள முடியும். அதுபோல சந்தை விதிகளைப் புரிந்துகொள்ளுதல் நலம் பயக்கும். டெக்னிகலாக அலசும் ஒருசில சந்தை வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு, பங்குகள் வாங்குதல், விற்றல் போன்றவற்றை சார்ட்டுகள் (Chart Reading) மூலமாக ஆராய்ந்து, பாதுகாப்புடன் ஈடுபட வைப்பதுதான் இந்நூலின் நோக்கம். “நான் பெற்ற பயிற்சி பெறுக இவ்வையகம்” என்ற குறிக்கோளில் ஆங்காங்கே என் அனுபவக் குறிப்புகளைத் தந்திருக்கிறேன்.

நீங்கள் பங்கு வர்த்தகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள்!

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580115206074
Sharegalil Panam Pannalam

Read more from Ananthasairam Rangarajan

Related to Sharegalil Panam Pannalam

Related ebooks

Reviews for Sharegalil Panam Pannalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sharegalil Panam Pannalam - Ananthasairam Rangarajan

    http://www.pustaka.co.in

    ஷேர்களில் பணம் பண்ணலாம்

    Sharegalil Panam Pannalam

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பணத்தின் அருமை

    2. மூலதன சந்தைகள் (Capital Markets)

    3. ஷேர் மார்க்கெட்டில் புழங்கும் சொற்கள்

    4. பங்குகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம்...

    5. பல வகையான பங்கு அலசும் முறைகள்

    6. பிரபல முதலீட்டாளர்களின் ஷேர் வாங்கும் டெக்னிக்...

    7. இந்திய முதலீட்டாளர்களும் அவர்தம் உத்திகளும்

    8. படம் பார்த்து வர்த்தகம் செய்...

    9. கேண்டில்களின் பெயர்களும், பொருளும்

    10. ப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் Futures and Options F&O

    11. டெக்னிகல் அனாலிசிஸ்

    12. பத்திர சந்தைகள் (Bond Markets)

    13. மியூசுவல் ஃபண்டு என்னும் நிர்வாக நண்பன்

    ஷேர்களில் பணம் பண்ணலாம்

    Smart Investing Guide

    அடிப்படைகள் முதல் அனாலிசிஸ் வரை

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Copyright © Ananthasairam Rangarajan 2018

    The moral right of the author has been asserted

    To my daughter Ms. Nirubama

    முன்னுரை

    ஷேர் மார்க்கெட் என்னும் பங்குச்சந்தைகளில் ஈடுபடுகிறவர்களில் முழுவதும் வென்றவர்களும் கிடையாது, தோற்றவர்களும் கிடையாது. ஆனால், அந்தப் படிப்பினைகளைக் கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். லாபம் வரும்போது மகிழ்வதும், இழப்பு நேரும்போது துவண்டுவிடுவதும் கூடாது. பங்குச்சந்தையில் நுழைய நிபுணத்துவம் தேவைதான். அறிவார்ந்து அலசும் தன்மை கொஞ்சம் இருந்தால் போதும். அதை நான் விளக்கமாகவே தந்திருக்கிறேன். அந்தச் சந்தையில் எப்போது நுழையவேண்டும், எப்போது வெளியேறிவிடவேண்டும் என்கிற தந்திரம் தெரிதல் அவசியம். பேராசை கட்டாயம் இருக்கக்கூடாது. கார் ஓட்டுனருக்கு அதன் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்ற அறிவு அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாலை விதிகள் அனைத்தும் தெரிந்திருக்கவேண்டும். நடுவழியில் பஞ்சர் ஆகிப்போனால் ஸ்டெப்னியை மாட்டத் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் தடையின்றிப் பயணத்தை மேற்கொள்ள முடியும். அதுபோல சந்தை விதிகளைப் புரிந்துகொள்ளுதல் நலம் பயக்கும். டெக்னிகலாக அலசும் ஒருசில சந்தை வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு, பங்குகள் வாங்குதல், விற்றல் போன்றவற்றை சார்ட்டுகள் (Chart Reading) மூலமாக ஆராய்ந்து, பாதுகாப்புடன் ஈடுபட வைப்பதுதான் இந்நூலின் நோக்கம். நான் பெற்ற பயிற்சி பெறுக இவ்வையகம் என்ற குறிக்கோளில் ஆங்காங்கே என் அனுபவக் குறிப்புகளைத் தந்திருக்கிறேன்.

    நீங்கள் பங்கு வர்த்தகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள்!

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    1. பணத்தின் அருமை

    நானும் என்னுடன் பணியாற்றிய நண்பரும் பல வருடங்களுக்கு முன் ஒன்றாக ஓய்வு பெற்றோம். எங்களுக்குக் கொடையாக சில லட்சங்கள் கிடைத்தன.

    உங்களுக்கு என்ன சார்… ஷேர் மார்க்கெட்டில் பணத்தைப் போட்டுவிடுவீர்கள். நான்தான் எப்படி சேமிப்பது என்று விழிக்கிறேன் என்றார் நண்பர்.

    உங்கள் சேமிப்பு என்ன மாதிரி? என்றேன்.

    வீட்டுமனைகள் மூன்று வைத்திருக்கிறேன் என்றார் புத்திசாலி நண்பர்.

    நான் 50:50 என்ற விகிதத்தில் ஷேரிலும், வங்கி டிபாஸிட்டிலும் போடப்போகிறேன் என்றேன்.

    இப்போது அந்த நண்பர் இல்லை. ஆனால் அவர் குடும்பம் இன்று லட்சாதிபதிகளாக, ஏன் கோடீஸ்வரர்களாகவே இருக்கக்கூடும். நிலத்தை வாங்கிப் போடுவது நிலையான பணப்பெருக்கம்.

    நான் ஒரு பங்கு புரோக்கரை நம்பியிருந்த காலம் அது. ஃபோனில் கேட்டால் இது நல்லது, வாங்கிப்போடுங்கள் என்று சொல்வார். சில சமயம் அவரே டிப்ஸ் கொடுப்பார். அவர் சொல்லே எனக்கு வேதவாக்கு. பிறகு நானே ஓரளவு ஷேர் மார்க்கெட் பற்றிய நூல்கள், பத்திரிகைகள் படித்து வர்த்தகம் செய்தேன். DALAL STREET JOURNAL ’80களில் மிகவும் பிரசித்தம். நான் ஜோலார்பேட்டை ஹிக்கின்பாதம்ஸில் வாங்கி வந்து படிப்பேன். நிறைய கம்பெனிகளின் நிதி சம்பந்தப்பட்ட தகவல்கள் அதில் இருக்கும். அதன் காரணமாக ஒரு ஷேரின் புத்தக மதிப்பு, பி இ விகிதம், RSI என்று பார்த்து பங்குகளை வாங்கியதில் ஒரளவு லாபம் வந்தது. கணினி வாங்கி, எப்போது GOOGLE வந்ததோ, அது வரையில் எனக்கு ---

    டோஜி பற்றித் தெரியாது

    ஹராமி பற்றித் தெரியாது

    மருபோஜூ தெரியாது

    சூப்பர் ஸ்டார் தெரியும்.. மார்னிங் ஸ்டார்..ஈவினிங் ஸ்டார் தெரியாது

    Fibonacci Replacement கோடுகள் அதன் சதவீதங்கள் தெரியாது

    SMA, EMA, MACD, Bolingar Band என தெரியாது

    இதெல்லாம் அவசியம் என்று தெரியாததால் கையைச் சுட்டுக்கொண்டதும் உண்டு.

    வாரன் பஃபட் என்னும் அமெரிக்க பங்குச்சந்தை சக்கரவர்த்தி 2017ல் ஒரு பேட்டியில் சொல்கிறார்: 75 வருடங்களாக நான் பங்குகளை வாங்குகிறேன். நாளை சந்தை எப்படி இருக்கும் என்று என்னால் ஒருநாள் கூட கணிக்க முடிந்ததில்லை.

    இப்போது என் நிலைமை வேறு. காரணம் என் மேசையில் இரண்டு கணினிகள் இருக்கின்றன. அதற்கு உதவியாக இன்டெர்நெட் கடவுள். அவர் படைத்த எல்லாம் தெரிந்த கூகுள். கூடவே ஸ்மார்ட் ஃபோன் என்கிற ஒரு நடமாடும் தோழன்..

    ஷேர் மார்க்கெட் பற்றிய புத்தகங்கள் தயவிலும், ஸ்டாக் ஸ்கீரீனர்கள், Chartகள் உதவியாலும் பாடங்கள் பல கற்றுக்கொண்டு வருகிறேன். முடிந்தபாடில்லை. அது ஒரு மகாசமுத்திரம்.

    குறிப்பாக Simple Moving Average, Exponenitial Moving Average, MACD, Bolingar Band crossovers ஆகியவற்றை பயன்படுத்தினால் லாபம் ஈட்டும் முறைகளை பின்னர் ஒரு அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.

    இந்தக் கருவிகளினால்1998- 2006 காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஷேர் மார்க்கெட் பூதாகாரமாய் உருவெடுத்துவிட்டது. Online Chartகளாய் உடனுக்குடன் ஷேர்கள் வாங்கி விற்க இப்போது உதவி வருகின்றன. ஏனெனில் புரோக்கர்கள் மட்டும் வைத்துக்கொண்டிருந்த Live Market Software நம் போன்றவர்களும் பார்க்கும் வசதி வீட்டுக்குள் வந்துவிட்டது. என்ன..அவர்கள் பல ஆயிரம் விலையுள்ள சாஃப்ட்வேர் வைத்திருப்பார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1