Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhntha Kaalangal Konjamo...
Vazhntha Kaalangal Konjamo...
Vazhntha Kaalangal Konjamo...
Ebook51 pages12 minutes

Vazhntha Kaalangal Konjamo...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

படிக்கும் காலத்திலிருந்தே நவீனும், நளினியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அவர்களுக்கு நளினியின் அம்மா நிர்மலா ஒரு பிரச்னையாக உருவெடுக்கிறாள். அவள் அவர்களை ஆதரிக்கிறாளா எதிர்க்கிறாளா என்பது இரு வீட்டாருக்கும் புரிபடவில்லை. அவர்கள் காதல் நிறைவேறியதா, நிர்மலா மனம் மாறினாளா? நாவலில் தெரிய வரும்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580115207958
Vazhntha Kaalangal Konjamo...

Read more from Ananthasairam Rangarajan

Related to Vazhntha Kaalangal Konjamo...

Related ebooks

Reviews for Vazhntha Kaalangal Konjamo...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhntha Kaalangal Konjamo... - Ananthasairam Rangarajan

    https://www.pustaka.co.in

    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…

    Vazhntha Kaalangal Konjamo...

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 1

    பேருக்கு ஏற்றபடி நவீனத்தில் ஆசை வைத்திருந்தான் நவீன்.

    இயற்கையாகவே சுருள் முடி அவனுக்கு. நிறையப் பேர் அவன் டோபா அணிகின்றானா என்று கூட சந்தேகப்பட்டார்கள். அவன் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். எத்தனை தடவைதான் இது என் ஒரிஜனல் முடி என்று சொல்லுவான். நொந்துபோனான்.

    கண்ணாடி முன் நின்று அடிக்கடி தன்னைப் பார்த்தே வியந்துகொள்வான். வட்ட முகத்தில் ஒரு முகப்பரு முளைத்திருந்தது. அதைப் போக்க கூகுலில் பாட்டி வைத்தியம் வரை செய்து பார்த்துவிட்டான்.

    அமேஸான் சாணி முட்டை கூட கிடைக்கும் வணிகம் செய்கிறது. அவன் ஆங்கிலத்தில் pimple என்று டைப் செய்தால் எத்தனை விதமாய் கிரீம்கள் அதில் வருகின்றன! அவற்றில் சிலவற்றை வாங்கித் தடவினான். அப்படியும் அது போவேனா என்றது.

    அப்புறம் பாட்டி வைத்தியத்துக்கு வந்தான். அது அவன் வீட்டிலேயே கிடைத்தது. சில சித்த வைத்தியர்கள் காவி உடை அணிந்து வீடியோவில் செய்து காண்பித்தார்கள்.

    அவனுக்கு வயது 25. கல்லூரியில் எஞ்சனீரிங் படித்தான். கீழ் வகுப்பில் அவன் ஒருமுறை ஃபெயில் ஆனான். படிப்பு சுமாராகத்தான் வந்தது. ப்ளஸ் டூவில் அவன் 50% எடுத்ததால் பேமண்ட் சீட்டில் சேர்ந்தான். மூன்று அரியர்ஸ் வைத்திருந்தான். ஆனால் கவலைப்படவில்லை.

    அவன் அப்பா வேங்கடம் பெரிய பலசரக்குக்கடை வைத்திருந்தார். அவருடைய பெரிய மீசைக்கும் குணத்துக்கும் சம்பந்தமில்லை. அத்தனை மெதுவாகப் பேசுவார். கடினமான அல்லது கொச்சை வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வரவே வராது. கடையில் நான்கு பேர் வேலை செய்தார்கள்.. சில சமயம் நவீனை கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி சரக்கு வாங்கப் போவார். சொந்தமாக ஒரு மினி லாரி வைத்திருந்தார். நவீன் கல்லூரிக்கு மட்டம் அடித்துவிட்டு கடையில் உட்காருவான். அன்று வந்த பணத்தில் கொஞ்சம் கையாடல் செய்துதான் சில அழகுக் குறிப்புகள் சொல்லும் பொருள்களை வாங்கினான். பில் கொடுக்காத

    Enjoying the preview?
    Page 1 of 1