Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ragasiya Aanmai
Ragasiya Aanmai
Ragasiya Aanmai
Ebook55 pages22 minutes

Ragasiya Aanmai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு மனிதன் தன் மனதினுள்ளே விதைக்கும் எண்ணம் மற்றும் செயல்களே‌ அவனை காணாமல் போக செய்யும் அபாயம் கொண்டது. ஒரு விசயத்தை தொடர்ந்து செய்து வந்தாலோ, நினைத்துக் கொண்டு இருந்தாலோ‌ நாள்பட, நாம் அதுவாகவும், அவை நாமாகவும் மாறிவிடுவோம். அது நல்லதா..? தீயதா..? என்பது எல்லாம் இல்லை. நீ என்னவாக நினைக்கின்றாயோ அதுவாகவே மாறிவிடுவாய் என்று முன்னோர்களின் வாக்கு சொன்னது போல தன் எண்ணங்களாலாலேயே தன் வாழ்க்கையை துயரமாக மாற்றிக் ஒரு இளைஞனின் கதையும், அவனின் எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றம் செய்து தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு பெண்ணின் கதை தான் இந்த ரகசிய ஆண்மை.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580166009836
Ragasiya Aanmai

Read more from Vidhya Gangadurai

Related to Ragasiya Aanmai

Related ebooks

Reviews for Ragasiya Aanmai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ragasiya Aanmai - Vidhya Gangadurai

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ரகசிய ஆண்மை

    Ragasiya Aanmai

    Author:

    வித்யா கங்காதுரை

    Vidhya Gangadurai

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidhya-gangadurai

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பாகம் 1

    பாகம் 2

    பாகம் 1

    ஆடம்பரமான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. தங்களின் செல்வச் செழிப்பை காட்டிக் கொள்ளவும், தங்களின் அழகு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. என பலதரப்பட்ட வயதுடைய பெண்களின் அலங்காரங்கள் ஒரு பக்கமும்.

    பள்ளிக்கு விடுமுறை போட்டு விட்டு சொந்தங்களின் விழாக்களின் மூலம் தனது நண்பர்களையும் உறவு சிறுவர்கள் என கலந்து ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் சின்னஞ் சிறுமியர்களும்.

    மேடையின் அலங்காரத்திலேயே தெரிந்தது. அதன் செலவுகள் பார்ப்பதற்கு ஆடம்பரத்துடனும், அழகாகவும் இருந்தது.

    ஆம், ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தான் நாமும் கலந்துகொள்ளப் போகிறோம்... மக்களே.!

    மணமகள் பாவனா மணமகன் கமலேஷ் இன்றைய நாகரீகத்தின் உதாரணம் சொல்லும் அளவுக்கு இருந்தனர்.

    அழகு பதுமையாக இருந்த மணமகளின் முகத்தின் மலர்ச்சியை வைத்தே, இத்திருமணத்தில் எவ்வளவு எதிர்பார்ப்பு மகிழ்ச்சியும் என்பதை எண்ணி விடலாம்.

    ஆனால், இந்த பேரழகி பெண்ணவள் போதைக் கொண்டதில் தவறு ஏதுமில்லை. என்பதற்கு ஏற்ப அவனின் அழகும், உயரமும், நிறமும் என கலவையான ஒரு மிடுக்குடன் காணப்பட்டான் கமலேஷ்.

    பாவனாவும் சளைத்தவளில்லை அவனுக்கு ஏற்றபடி பொருத்தமாகவே இருக்க, வந்திருந்த உறவினர்களும் சற்றுப் பொறாமையும் படவே செய்தனர்.

    இவற்றில் ஒரு நெருங்கிய வயதான முதியவர். யார் மூலமாக இந்த வரன் முடிந்தது என்று கேட்டே விட்டார்.

    மணமகளின் தாய்க்கோ பெருமை தாங்கவில்லை. பெண்ணின் தகப்பன் மீசையை முறுக்கி விட்டு கொண்டார்.

    மணமகனின் பெற்றோர்கள் வந்திருந்தவர்களை கவனிப்பதில் இருந்தனர்.

    மாப்பிள்ளையின் நண்பர்களும் கமலேஷை கிண்டல் அடித்துக்கொண்டு கேலி செய்து கொண்டும் இருந்தனர்.

    இனிதே நிச்சயதார்த்த விழா முடிந்தது. அனைவரும் விடைபெற்றுச் செல்ல மணமகன் கமலேஷ் தன் எதிர்கால மனைவியான பாவனாவை தேடிச்சென்று,

    தொலைபேசியின் எண்ணை பெற்றுக்கொள்ள செல்லும்போது, பாவனாவின் தோழிகளும்,

    என்னடி அழகன் படத்தில் வர மாதிரி, நீயும் அவரும் விடிய விடிய, பானுப்பிரியா...மம்முட்டி போல பேசிக் கொண்டே இருக்கப் போறீங்க.

    அப்புறம், நாங்க, எப்ப போன் பண்ணாலும் நாட் ரீச்சபிள்னு வரப்போகுது இல்லையா. என்று தனது தோழிகள் பாவனாவையும், கமலேஷையும் சேர்த்து வார.

    பாவனா தனது மொபைல் நம்பரை கொடுத்து விட்டு வெட்கம் கலந்த சிரிப்புடன் இருக்க. சிரிக்கும் பாவனவை பார்த்து விட்டு, தோழிகளின் முன்பு எந்தவித உணர்வுகளையும் காட்டாமல் நாகரிகமாக விடைபெற்றுச் சென்றான் கமலேஷ்.

    திருமணத்திற்கு மூன்று மாதங்கள் என முடிவு செய்யப்பட்டு, நிச்சயம்

    Enjoying the preview?
    Page 1 of 1