Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalenum Theevinile…
Kaadhalenum Theevinile…
Kaadhalenum Theevinile…
Ebook138 pages56 minutes

Kaadhalenum Theevinile…

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114203992
Kaadhalenum Theevinile…

Read more from Hamsa Dhanagopal

Related to Kaadhalenum Theevinile…

Related ebooks

Reviews for Kaadhalenum Theevinile…

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalenum Theevinile… - Hamsa Dhanagopal

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    காதலெனும் தீவினிலே...

    Kaadhalenum Theevinile…

    Author :

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    நீர் தெளிக்கப்பட்ட ஈரத்துணியில் மின் சலவைப் பெட்டி படியும்போது ‘சுர்’ரென்று ஒரு சப்தம். தாமரைச்செல்வியின் கணவன் நிலாப்பிரியனின் கோபச் சொற்கள் போல… தாமரைச்செல்வி, சட்டையை அழகாய் மடிக்கையில், குளியல் அறை சப்தமிடுகிறது. ஏய், குயிக்கா அயர்ன் பண்ணித் தொலை. நான் அர்ஜெண்டா ஆபீஸ் போகணும். உன்னை மாதிரி பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கலை.

    குளியல் அறையிலிருந்து அனலின் தெறிப்பு. அவள் ஒரு ‘எம்.என்.சி’ கம்பெனி ஒன்றில் எண்பதாயிரத்திற்கு பக்கமாய் சம்பளம் பெறுகிறாள். அவன் அரசு நிறுவனத்தில் தற்காலிகப் பணி நியமனத்தில் நியமனம் பெற்ற சாதாரண எழுத்தர். அவனது சம்பளம் இவளது ஊதியத்தில் பாதிக்கூடத் தேறாது.

    இவள் எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸில் முதல் வகுப்பில் தேற… மிக எளிதாய்… அந்தப்பெரிய ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்தது. ஆறு மாதங்கள் மைசூரில் பயிற்சி கொடுத்தார்கள், அவள் விருப்பத்தில் சென்னையில் பணி கிடைக்க…

    ஏய் செல்வி… என்னடி கனவா… அவனைப்பத்தியா… மணி ஒன்பதாகப் போகுது… சீக்கிரம்டி… இருக்கற ‘டிராபிக் ஜாமில்’ ஆபிஸ் போக அரை மணி ஆகிடும்

    அவன் சொன்ன ஆரம்ப வார்த்தைகள் அவள் நெஞ்சில் நெருப்பை விதைக்கின்றன. வயது முப்பதைத் தொடப் போகிறது. கனவு காணும் வயதல்ல அவளுக்கு. அதுவும் என்றோ ஒருபொழுது நெஞ்சில் வந்துபோன வசந்த ஊர்வலத்தைப் பற்றி நினைக்க அவளுக்கு நேரமேது? நினைக்கிற வயதா இது. அதையெல்லாம் கடந்து வந்துவிட்டாள்.

    திருமணமாகி மூன்று வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், எப்போதோ நடந்த அந்த விஷயம்…

    ரெடி பண்ணிட்டியா

    எல்லாம் சரியா இருக்கு. வாங்க வந்து சாப்பிட்டுக் கிளம்புங்க… உங்களுக்குப் பிடிச்ச பூரியும் உருளைக்கிழங்கு மசாலாவும் செஞ்சிருக்கேன்

    அவளும் எத்தனையோ இணக்கமாய் அவனுடன் நடந்து கொண்டபோதும்… தாய் தந்தை அமைத்துக் கொடுத்த இந்தத் திருமண வாழ்க்கையை நல்ல முறையில் எடுத்துச் செல்ல முயன்றபோதும்… காட்டுப்பாதையில் வெற்றுக்காலில் நடந்து போகையில் காலில் படும் நெருஞ்சி முள்ளாய்… அவன் அடிக்கடி சொற்களை ஈட்டி போல் எறிந்து அவளை உயிருடன் எரிக்காத குறை…

    கருப்பு நிற பேண்ட்டும், வெளிர் ஊதா நிற சர்ட்டும் அணிந்து, சுருள் முடியுடன்… பெண்களுக்கு ஒப்பான கண்கள்… கோதுமை நிறத்தில்… அழகான அவன் தோற்றம்… பார்க்க அழகாய் இருக்கிறான் என்பதாலேயே, இவனை மணமகனாய் இவளது பெற்றோர்கள் தேர்ந்து எடுத்தார்கள்.

    அவன் அலைபேசியின் தொடு திரையை மென்மையாகத் தட்டியும் தடவியும் எதையோ பார்த்தவாறே சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்க…

    இவள் அலைபேசி ஒலிக்க…

    ஹலோ, நான் தாமரை பேசறேன், என்னங்க சுதா

    எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. எனக்கு பதிலா ‘மிட் டே’ ட்யூட்டிக்கு நீங்க போக முடியுமா. உங்க நைட் ட்யூட்டியை நான் பார்த்துக்கறேன். முடியுமா தாமரை?

    ஓ.கே. சுதா, நான் பார்த்துக்கறேன். ஆபீஸ்ல நீங்க சொல்லிடுங்க சற்றும் யோசியாமல் சொல்லுகிறாள் தாமரை.

    தேங்க்யூ தாமரை சொல்லும் சுதாவிற்கு நிரம்ப சந்தோஷம்.

    சுதா தன் ஐந்து வயது பையனைப் பள்ளியில் சேர்க்க அலைந்து கொண்டிருக்கிறாள். கல்லூரிகளில் கூட எளிதாக இடம் கிடைத்துவிடும் போலிருக்கிறது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் சேர தரமான பள்ளிகளில் இடம் கிடைப்பது மிக மிகக் கடினம்.

    ஆமாங்க தாமரை, பெற்றவங்க தங்கள் குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வரணும்னு நெனைக்கிறாங்க. எங்க மாதிரி பெற்றோர்களின் ஆசையப் புரிஞ்சிகிட்டு அவங்க ஸ்கூல், காலேஜ்னு பிரம்மாண்டமாய் கட்டிகிட்டுப் போறாங்க. ஊம்… நல்ல காலம் உங்களுக்குக் குழந்தையில்ல, இருந்திருந்தா… நீங்களும் எங்க மாதிரிதான் அலையணும்..!

    சுதா யதார்த்தமாய்தான் இதைச் சொன்னாள். ஆனால் இதைச் சொன்ன பொழுதுதான் சரியில்லை. இவளையே உலகமாய்க் கொண்டு ஒரு உயிர் வயிற்றுக்குள் உலவுகையில்… இந்த பூமிபந்தில் இவள் புதிதாய் ஒரு அன்னையாய் அவதரிக்கப் போகிறாள் என்று இறுமாந்திருக்கையில்…

    இவள் கணவனின் கடுஞ்சொற்கள் சந்தேகப்பார்வை அப்போதுதான் அரும்ப ஆரம்பித்திருந்தன. ‘இவனுக்கா… நாம் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறோம்’ என கிலேசப்படவே செய்தாள்.

    இவள் ஆரம்ப கால தாய்மையில்… இரவெல்லாம் நைட் ட்யூட்டி பார்த்த சோர்வில்... ஒருநாள் வீட்டில் மேசை மீது சாய்ந்து சற்றே கண்ணயர்ந்து விட்டாள்.

    இவள் முதுகின் மீது அவன் கரம் பலமாகப் படிய…

    என்னடி, அவன் கனவிலே வரானா…

    அவனது சுடு சொற்களில் இவள் உறக்கம் கலைந்து… அவன் சொற்களின் தாக்கம் புரிந்து…

    ப்ரியன், இப்படியெல்லாம் அநியாயமாய் பேசாதீங்க… நைட் ட்யூட்டியால் சோர்வு, கன்சீவ் ஆகியிருக்கேன். அதான்…

    நான் தெரியாமத்தான் கேட்கறேன். இந்தக் குழந்தை என்னுடையதா… அவனுடையதா…

    இந்தப் பெண்கள், ஆண்கள் சிறிது அன்பு காட்டினாலும் நாய்க் குட்டிகளாய் மாறிவிடுகிறார்கள். இவனது தேனூரிய சொற்களில் மதிமயங்கி… பெற்றோர் சொற்களுக்கு இணங்கி…

    ப்ரியன், உளராதீங்க… டி.என்.ஏ. டெஸ்ட் வேணா செஞ்சு பாருங்க, என் மேலே வீணா சந்தேகப்படாதீங்க. நீங்க நல்லவர்னு நெனைச்சி தான்.

    நான் எப்பவும் நல்லவன்தான்டி. உத்தமமானவன் தான். நீ தான் காதல் கத்தரிக்காய்னு கெட்டலஞ்சவ… கடன்காரி… தடித்த அவன் வார்த்தைகள்… குடித்திருப்பான் போலும்

    நிர்மலமான மனசோடத்தான் உங்க தாலிக்காக நான் கழுத்தை நீட்டினேன். நீங்கதான் இப்படி சின்ன புத்தியோட…

    அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, கோபமும் போதையும் தலைக்கேற, அவள் உட்கார்ந்திருந்த மர நாற்காலியை அவன் எட்டி உதைக்க… தரையில் அவள் சரிந்து விழ… அவள் வயிற்றின் மீது மேசை அப்படியே சாய…

    இவளை உலகமாய் கொண்டு இந்த பூமிப்பந்தை பார்க்க இருந்த பூந்தளிர் - இவள் மனதினுள் மத்தாப்பு சிதறலாய் சிரித்த அந்த மழலை - கிரானைட் தரையெங்கும் ரத்த சேறாய்…

    செய்தி அறிந்து இவள் பெற்றோர்கள் ஓடி வந்து மருத்துவமனையில் சேர்த்து… இவளது அண்ணனுக்கு திருமணமாகியிருந்த நேரமது.

    இவனது தந்தை இவள் படுக்கை அருகில் அமர்ந்து இவள் தலையைச் கோதியவாறே,

    உனக்கு குழந்தையின்னா கொள்ளை ஆசையாச்சே தாமரைச் செல்வி, இப்படி ஆயிடுச்சே… என குரல் தழுதழுக்கப் பேச…

    அவ்வளவுதான் நான் குடுத்து வெச்சது… இவளும் தொண்டை அடைக்கப் புலம்ப…

    அப்பாவும், பொண்ணும் எதுக்கு இப்படி புலம்பறீங்க. இப்ப என்னாச்சி… கீழே விழுந்துட்டா… டேபிள் மேலே ஏறி நின்னு சுவாமி படத்துக்கு பூமாலை சாத்தணுமா? தங்கமான பிள்ளை நம்ம மாப்பிள்ளை. அவர்கிட்ட சொன்னா செஞ்சிட்டுப் போறார்… அடுத்த வருஷமே ஒனக்குக் குழந்தை பொறக்கும்னு சொல்லி அவளுக்கு ஆறுதல் சொல்றத விட்டுட்டு… போங்க போய் அவளுக்குக் காபி வாங்கிட்டு வாங்க இவள் அம்மா காவேரி…

    இவள் தந்தை பிளாஸ்க்குடன் வெளியே போக,

    இவள் அருகே அமர்ந்த காவேரி, உன்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திட்டு எங்களுக்கு போன் செஞ்சிட்டு, நாங்க வந்ததும் போனவர்தான் மாப்பிள்ளை… இன்னும் எட்டியே பார்க்கல… என்று மனத்தாங்கலுடன் கிசுகிசுத்தாள்.

    இவள் ஒன்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1