Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jathigal Illaiyadi Papa
Jathigal Illaiyadi Papa
Jathigal Illaiyadi Papa
Ebook320 pages2 hours

Jathigal Illaiyadi Papa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி. ஹம்சா தனகோபால் அவர்கள் எழுதியுள்ள “சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் புதினம், சாதிகளின் பிடியில் சிக்கி சிதைந்த இதயங்களை மையமாக வைத்து இப்புதினத்தை எழுதியிருக்கிறார் ஹம்சா தனகோபால். சமுதாயத்தில் சாதிகளினால் ஏற்படும் சீர்கேடுகள், இன்றைய ஆட்சியின் கொள்கை காரணமாக தகுதி இருந்தும் வேலை வாய்ப்புப் பெறமுடியாமல் தவிக்கும் படித்த இளைஞர்களின் உள்ளக் குமுறல், பணத்தாலும் அரசு பதவியாலும் அப்பாவி மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் கொடுமை, அதிகாரத்துக்கு அடிபணியும் நீதி…... ஆகிய இன்றைய நாட்டு நடப்பின் காரணமாக இந்நூலாசிரியை உள்மனதின் அடித்தளத்தில் எழுந்த வேதனையின் வெளிப்பாடே இப்புதினம்.

- V.G. சந்தோஷம்

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580114201947
Jathigal Illaiyadi Papa

Read more from Hamsa Dhanagopal

Related to Jathigal Illaiyadi Papa

Related ebooks

Reviews for Jathigal Illaiyadi Papa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jathigal Illaiyadi Papa - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    சாதிகள் இல்லையடி பாப்பா

    Jathigal Illaiyadi Papa

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For other books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அணிந்துரை

    டாக்டர் சிலம்பொலி சு. செல்லப்பன், எம். ஏ., பி.டி., பி, எல்., பி. எச்டி.,

    இயக்குநர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.

    திருமதி ஹம்சா தனகோபால் மராத்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்; எனினும் தமிழில் புலமை பெற்றுச் சிறந்த எழுத்தாளராக விளங்கி வருவது போற்றுதற்குரியது. கருத்துச் செறிவும், பண்புப் பிடிப்பும், முன்னேற்ற முனைப்பும் இவருடைய எழுத்துக்களின் அடித்தளமாய் அமைந்திருக்கக் காண்கிறோம். மக்கள் மனத்தில் வளமான சிந்தனைகளைப் பதிக்கவேண்டுமெனும் நோக்கத்துடன் இவர் எழுதி வருகிறார் என்பது மிகையான கூற்றன்று. மாந்தர்குலம் வேறுபாடின்றி ஒன்றுபட்டு அன்புடன் இணைந்துவாழ வழிபிறக்க வேண்டுமெனும் உயர் எண்ணத்தைத் தூண்ட எழுந்ததே ‘சாதிகள் இல்லையடி பாப்பா' என்னும் இப் புதினம்.

    வாழ்க்கை வாழ்வதற்கேயாம். ஒருவனும் ஒருத்தியும் வாழுகின்ற வாழ்க்கை சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும். அதுபோலவே சமுதாயமும் ஒருவன் ஒருத்தி வாழ்வுக்கு உறுதுணையாக அமைய வேண்டும். ஆனால் இன்று பதவிகள், செல்வங்கள், செல்வாக்குகள், சாதி மதங்கள் குறுக்கே வந்து பற்பல சமயங்களில் ஒருவன் ஒருத்தியின் அன்பு வாழ்க்கைக்குத் தடையாக அமைந்துவிடுகின்றன. இத்தடைகள் நீங்கி மனமொன்றிய அன்பு வாழ்க்கை எங்கும் நிலவவேண்டும் என்பது ஆசிரியருடைய ஆவல்; ஆர்வம். ஆனால் இன்றைய சமுதாயம் அதற்கு இன்னும் தன்னைத் தயார் செய்து கொள்ளாது தவிக்கிறது என்னும் ஏக்கத்தை, ஆசிரியர் இப் புதினத்தின்வழி வெளிப்படுத்துகிறார். கல்வி, பதவி, செல்வம் - இவைகள்கூடச் சாதிக்கட்டுப்பாட்டை உடைக்க முடியாமல் அதற்குக் கட்டுப்பட்டுச் செல்கின்ற இன்றைய சமுதாயநிலை ஏக்கத்துடனும் இரக்கத்துடனும் இப்புதினத்தில் உணர்த்தப்பெற்றுள்ளது.

    சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றுாரை நிலைக்களமாகக் கொண்டு கதை நடக்கிறது. அவ்வூரிலுள்ள அரிசனச்சேரி, குடியானவர் தெரு, பார்ப்பனக் குடியிருப்பு ஆகிய மூன்று பகுதிகளில் கதை வளர்ந்து செல்லுகிறது.

    அரிசனச் சேரியில் வேலம்மா; அவள் தம்பி சங்கரன். அவள் கணவன் அமாவாசை, மகன் சுந்தரம் ஆகியோர் முக்கியக் கதைமாந்தர்கள். சங்கரன் பட்டாளத்தில் சேர்வதற்கு முன்னர் வேலம்மா திருமணம் நடைபெறுகிறது. சுந்தரம் பிறக்கும் வரை அவள் மணவாழ்வு மிகவும் சிறப்பாக அமைந்தது. பின்னர் மனைவியின்பால் சந்தேகம் அமாவாசை குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, மனைவிக்குக் கொடுமையைத் தவிர வேறொன்றும் தராதவனாயினான். பட்டாளத்தில் சேர்ந்து இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு சங்கரன் கால்களை இழந்து, செயற்கைக் கால்களைப் பொருத்தியவனாய் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையில் புதினம் தொடங்குகிறது.

    குடியானவத் தெருவில் இரண்டு பெரிய குடும்பங்கள்; ஒரு குடும்பத்தின் தலைவர் பொங்காலிக் கவுண்டர்; அவர் மனைவி பூங்காவனம்; மகள் தாமரைச் செல்வி. பொங்காலிக் கவுண்டர் அரசியலில் பெரியபுள்ளி. அமைச்சர் ஒருவரே அவருடைய ஆள். பணத்திமிரும், அதிகாரச் செருக்கும் கொண்டவர். மற்றொரு குடும்பம் அத்தியப்ப கவுண்டருடையது. அவர் மனைவி மாதம்மா, மகன் அன்பு. அன்புவுக்கு செல்வியை மணம் முடித்து வைக்க வேண்டுமென்பது இரண்டு வீட்டாருடைய எண்ணம். ஆனால் அன்புவோ பொங்காலிக் கவுண்டரின் எதேச்சாதிகாரத்தை வெளிப்படையாகவே கண்டித்து வருபவனாய் இருந்தான்.

    பார்ப்பனக் குடியிருப்பில் சதாசிவம் ஓராசிரியர், பள்ளித் தலைமையாசிரியர். அவர் மனைவி பார்வதி, மகள் வித்யா, மகன் ராஜப்பா.

    இம் மூன்று தெரு மக்களை முக்கியக் கதை மாந்தர்களாகக் கொண்டு புதினக் கதை பின்னப்பட்டுள்ளது.

    மாதம்மா, பார்வதி, வேலம்மா, சங்கரன் - இவர்கள் ஒரு தலைமுறையினர். பள்ளியில் படித்தகாலத்திலிருந்து நட்புடன் இருந்தவர்கள். பார்வதி மணப்பருவம் அடைந்ததும் மாமன் மகன் சதாசிவத்திற்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பெற்றன. பார்வதியின் மனமோ சங்கரனை நாடுகிறது. அரிசனனாகிய சங்கரன் அழைத்துச் செல்வதாயிருந்தால் தான் ஊரைவிட்டே அவனுடன் ஓடிவந்து விடுவதாகப் பார்ப்பனப் பெண் பார்வதி கூறுகிறாள். சங்கரனோ கிராமத்து நிலைமை, பார்வதி தன்னுடன் வந்துவிட்டால் அவள் குடும்பத்துக்கு ஏற்படக் கூடிய நெருக்கடிகள் ஆகியவற்றை நினைத்து, அவள் தன்னை மறப்பதற்காக, ஊரைவிட்டே அகன்று பட்டாளத்தில் சேர்ந்தான். பார்வதி மூன்று பிள்ளைகட்குத் தாயாகி, மூத்தவன் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் நிலையில் சங்கரன் பட்டாளத்தில் காலிழந்தவனாக ஊர் திரும்புகிறான்.

    வேலம்மாவின் மகன் சுந்தரம், மாதம்மாவின் மகன் அன்பு, பார்வதியின் மகன் ராஜப்பா, மகள் வித்யா, பூங்காவனத்தின் மகள் தாமரைச் செல்வி ஆகிய இவர்கள் ஒரு தலைமுறையினர். தொடக்கப் பள்ளியில் சதாசிவத்திடம் ஒன்றாகப் படித்துப் பின்னர் நகரம் சென்று மேற்படிப்பும் படித்தவர்கள். சுந்தரம், அன்பு, ராஜப்பா ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதோடு பொங்காலி கவுண்டரின் அநீதியையும் அக்கிரமத்தையும் நேரடியாகவே கண்டித்து வந்தனர். அரிசனர், என்ற கொடுமை ஒழியப் பாடுபட்டனர். செல்வியை அன்புக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணியிருந்த பொங்காலிக்கவுண்டர், அவன் தன்னை எதிர்த்ததால் அவனுக்குப் பெண் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

    இளைஞர்களிடையே ஒருவருக்கொருவர் தெரியாத ஒரு ஊமை நாடகம்! அன்புவின் உள்ளம் வித்தியாவை நாடுகிறது; ஆனால் வித்யாவோ சுந்தரத்தைக் காதலிக்கிறாள். செல்வி, அன்புவுக்கு மனம் முடிக்கப்படுவாள் என்ற பேச்சு இருந்தது. ஆனால் செல்வியோ சுந்தரத்தைத் தன் மனச் சிறையில் கொண்டிருந்தாள். சேரியிலிருந்த சுந்தரத்தைக் குடியானவப் பெண் செல்வியும் பார்ப்பனப்பெண் வித்யாவும் விரும்புகின்றனர். சுந்தரத்தின் நிலை என்ன? ஊர்க் கட்டுப்பாட்டிடையேயும் சாதிப் பிடிப்பிடையேயும் இது நடக்கக் கூடிய காரியமா? முடிவு-யாருக்கும் தொல்லையாக இராமல் ஊரை விட்டே வெளியேறி விடுகிறான். இந்த இளைஞர்களில் எவருமே திருமணம் செய்து கொள்ளாமல் வெவ்வேறிடங்களில் வாழ்க்கையில் நிலை பெற்றுவிடுகிறார்கள். இப்படியொரு புதுமையான முடிவுடன் புதினம் நிறைவு பெறுகிறது.

    ஆசிரியர் சில குறிக்கோளை மனத்திற் கொண்டு இப்புதினத்தைப் படைத்திருக்கின்றார்.

    நம் மண்ணில் - குக்கிராமங்களில் - குழந்தைகள் புதுக்குரல் கொடுத்துப் பிறக்கட்டும்; ஆடிப்பாடி ஒன்றாய் வளரட்டும்: பாசங்களையும் காதல்களையும் நெஞ்சில் பகிர்ந்து கொள்ளட்டும்; சாதி மதங்கள் கொஞ்சம் விலகி அவர்களுக்கு வழிவிடட்டும்; அவர்களாவது சுதந்திரமாய்த் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக் கொள்ளட்டும். நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளும் சுதந்திரங்களும் நம் கிராமங்களின் சன்னல்களுக்கும் கதவுகளுக்கும் கிடைக்கட்டும் என்னும் ஆசிரியரின் குறிக்கோள்கள் நடைமுறைக்கு வர இப்புதினம் பெருந்துணையாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இத்தகைய நல்ல பல புதினங்களை ஆசிரியர் தொடர்ந்து படைத்து நாட்டுக்களிக்க வேண்டுமென்பது என் வேணவா!

    வளர்க ஆசிரியரின் எழுத்துப்பணி.

    அன்புடன்,

    சு. செல்லப்பன்

    சென்னை-28

    29-11-1989

    இவர் எழுத்து

    நிமிர்ந்து நிற்கும் நெற்றிப் பொட்டு!

    கவிஞர் மு. மேத்தா

    சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினான். அவன் பாடிய போது குழந்தைகளாய் இருந்தவர்கள் இன்று வளர்ந்து மறுபடியும் அவன் வார்த்தைகளையே வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வழக்குரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    எழுதிவரும் பெண் எழுத்தாளர்களில் திருமதி. ஹம்சா தனகோபால் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். குறிக்கோள் கொண்டவர். கொள்கைகளை அவருடைய எழுதுகோல் குமுறலோடு கொட்டுகிறது. அநியாயங்களின் ஊர்வலத்தைத் திட்டுகிறது. இந்த நாவல் நம் இதயக் கதவுகளை மெல்லமெல்லத் தட்டுகிறது.

    அறிவியல்- வானத்தைத் தொட்டுப் பார்க்கிறது. சந்திர மண்டலத்தை எட்டிப் பார்க்கிறது. ஆனால், மனித குணத்தை மட்டும் அதனால் மாற்ற முடியவில்லை.

    ‘உள்ளத் தனையது உயர்வு’ என்பார் வள்ளுவர். சமூகமோ ‘கள்ளத் தனையது உயர்வு’ என்று கனத்த முரசறைகிறது.

    நல்ல இதயங்கள் கிழிபடும் போது தரமான எழுத்தாளர்களின் எழுது கோலே தையல் ஊசியாய் மாறுகிறது. இந்தத் தையலின் பேனாவும் ஒரு தையல் ஊசிதான்.

    ஒரு கிராமத்தின் கோலாகலம், குரூரம், கோபம், குமுறல்… எல்லாவற்றையும்- நேர்த்திமிகுந்த ஒரு புகைப்படக் காரனின் கேமிராவைப் போல் ஹம்சா தனகோ பால் படம் பிடித்துக் காட்டுகிறார்.

    பேசும் பாத்திரங்களின் சூழலுக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப உரையாடல்கள் உயிரோடு விளங்குகின்றன. எளிமையான, அழகிய நடை கதை முழுவதும் கண் சிமிட்டுகிறது.

    ‘தீமையின் வடிவமான பொங்காலிக் கவுண்டர் இன்னும் திருந்த வில்லை’ என்பதைச் சொல்லும் போது, அரளிச் செடியில் நாம் அல்லிப் பூக்களை எதிர்பார்க்கலாமா?’ என்று அழகாக எழுதும் ஆற்றல் ஹம்சா தனகோபாலிடம் அமைந்திருக்கிறது.

    காவிரி வற்றி மெலிந்ததற்காக இவருடைய பேனா கண்ணீர் சிந்துகிறது. ‘என்று தணியும் இந்த தாகம்’ என்ற பாரதியின் வரியை, குடிநீருக்காகக் காத்திருக்கும் குடங்களின் மீது இவர் ஒட்டி வைக்கிறார். உணர்வுகளால் புதிய பாலம் கட்டி வைக்கிறார். பல்வேறுபட்ட சிறப்பியல்புகளோடு படைக்கப்பட்டுள்ளனர் இப்புதினத்தின் மாந்தர்கள். பொங்காலி கவுண்டர் மகள் தாமரைச் செல்வியை மறக்க முடியுமா. தாமரை என்கிற பெயரே பொருத்தமாக அமைந்துள்ளது. ஆமாம் அவள் சேற்றில் முளைத்த செந்தாமரை, பண்புகளின் இமயம்.

    சுந்தரம் ஒரு அற்புதப் படைப்பு தன் இதயத்தால் உயர்ந்து நம் இதயத்திலும் உயர்ந்து விடுகிறான்.

    இந்த நாவலில் இடம் பெறும், வித்யா- என்ற பாத்திரம் வித்தியாசமான பாத்திரம். பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் பெருந்தன்மையான படைப்பு!

    வித்யா-எண்ணங்களால் உயர்ந்த இமயம்!

    வித்யாவின் விருப்பம் என்ன தெரியுமா...? இதோ அவளே சொல்கிறாள்:

    "என் ஒரே விருப்பம்-

    நம் மண்ணில் - குக் கிராமங்களில் - குழந்தைகள் புதுக்குரல் கொடுத்துப் பிறக்கட்டும். ஆடிப்பாடி ஒன்றாய் வளரட்டும்.

    பாசங்களையும், காதல்களையும் நெஞ்சில் பகிர்ந்து கொள்ளட்டும்.

    ஆனால். நம் நிலைமை அந்தப் பிஞ்சுகளுக்கு வந்துவிடக் கூடாது.

    இந்த ஜாதி மதங்கள் கொஞ்சம் விலகி அவர்களுக்கு வழி விடட்டும்.’

    வித்யாவின் இவ்விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் இதய வேள்வி!

    திருமதி ஹம்சா தனகோபால் அவர்களுடைய எழுத்து நெற்றிப் பொட்டைப் போல் நிமிர்ந்திருக்கிறது. நிறைவாக இருக்கிறது.

    அவருடைய எழுத்து முயற்சிகள் எல்லா வெற்றிகளையும் எய்திட என் இதயங்கனிந்த இனிய வாழ்த்துக்கள்!

    அன்புடன்,

    மு. மேத்தா

    சென்னை,

    9-12-89.

    அணிந்துரை

    டாக்டர் வி. ஜி. சந்தோஷம்

    தலைவர் & நிர்வாக இயக்குநர்,

    கோல்டன் பீச், ஒண்டர்லேண்ட், வி. ஜி. பி. நிறுவனங்கள்.

    திருமதி. ஹம்சா தனகோபால் அவர்கள் எழுதியுள்ள "சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் புதினத்தை முற்றும் படித்தேன். சாதிகளின் பிடியில் சிக்கி சிதைந்த இதயங்களை மையமாக வைத்து இப்புதினத்தை எழுதியிருக்கிறார் ஹம்சா தனகோபால். சமுதாயத்தில் சாதிகளினால் ஏற்படும் சீர்கேடுகள், இன்றைய ஆட்சியின் கொள்கை காரணமாக தகுதி இருந்தும் வேலை வாய்ப்புப் பெறமுடியாமல் தவிக்கும் படித்த இளைஞர்களின் உள்ளக் குமுறல், பணத்தாலும் அரசு பதவியாலும் அப்பாவி மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் கொடுமை, அதிகாரத்துக்கு அடிபணியும் நீதி…... ஆகிய இன்றைய நாட்டு நடப்பின் காரணமாக இந்நூலாசிரியை உள்மனதின் அடித்தளத்தில் எழுந்த வேதனையின் வெளிப்பாடே இப்புதினம்.

    ஆசிரியை தன் மனதில் எழுந்த உணர்ச்சிகளைத் தொகுத்து, சிந்திக்க வைக்கும் புதினமாக இந்நூலைப் புனைந்திருக்கிறார்.

    இப்புதினத்தில் வருபவை அனைத்தும் கற்பனையே ஆனாலும், அந்தக் கற்பனைக்குள்ளே உண்மை பொதிந்து கிடப்பதை உணர முடிகிறது.

    தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய இளந்தலை முறையினருக்கு கலங்கரை விளக்கமாக வெளிச்சம் காட்டும் புதினம் இது.

    சாதி வேறுபாடு காரணமாக சங்கரன்-பார்வதி காதல் கனவாக முடிகிறது. வெறுத்துப்போன சங்கரன் பிறந்த மண்ணை விட்டு வெளியேறுகிறான். இராணுவத்தில் சேர்ந்து நாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறான். பணியின்போது கால்களை இழந்து, செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்குத் திரும்பும் காட்சியோடு புதினம் தொடங்குகிறது.

    காவிரியையும், காவிரியின் கரையையொட்டி இருக்கும் மேட்டுக்குடி கிராமத்தையும் தனது எழுத்துக் கோர்வையால் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியை. இயற்கைக் காட்சிகள் அவருடையபேனாவால் உயிரோவியமாக மனதில் பதிகிறது.

    இப்புதினத்துக்குள் நடமாடும் பாத்திரங்கள் அனைவரும் நம் நெஞ்சை வருடிச் செல்லுகிறார்கள்.

    ஒண்னு இருக்குன்னு அதைப் பயன்படுத்திடக் கூடாது தம்பி, எப்பவும் மத்தவங்க கையை எதிர்பார்க்கக் கூடாது. என்ற வரிகள் தன்னம்பிக்கைக்கு உரமூட்டுகின்றன.

    மேட்டுக்குடி குழந்தைகள் சாதி வேறுபாடு இன்றி ஒன்றாகச் சேர்ந்து அன்புடன் பழகுவதையும், அவர்கள் வளர்ந்து இளைஞர்களான பிறகு சாதி வேறுபாடு காரணமாக அவர்கள் நெருங்கிப் பழக முடியாமல் தவிப்பதையும் அவர் வெகு அழகாகச் சொல்லுகிறார் ஆசிரியை. குழந்தைகளாய்... என்றும் குழந்தைகளாய் இருந்திருந்தால் வாழ்க்கை வசந்தமாய், வண்ண வானவில்லாய் இருந்திருக்குமோ! என்ற வரி இளம் பெண்களின் ஏக்க வரியாக விரிந்து இதயத்தை தொடுகிறது.

    கிராமத்திலுள்ள தேனீர்க் கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி, சாதி சகதிக்குள் மூழ்காமலிருக்கும் இளைஞர்கள் கூடி போராட்டம் நடத்தும்போது, அனுபவம் காரணமாக சங்கரன் இளைஞர்களுக்கு அறிவுரை கூறும்போது இதைத்தான் நீங்க தேசிய ஒருமைப்பாடு என்கிறீர்களா...? மாமா, இதுதான் சாதியும், மதச்சார்பும் அற்ற அரசாங்கம் செலுத்தும் ஆட்சியா? என்று ராஜப்பா கேட்கும் கேள்வி நமது சிந்தனையை விழிப்படையச் செய்கிறது.

    சாதி வேறுபாடு காரணமாக தனது காதல் நிறைவேற வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டு, தனது காதலை மனசில் புதைத்துவிட்டு, மனசைப் பூட்டிட்டேன் அன்பு. சாவி தொலைஞ்சு போச்சு……. என்று தாமரைச் செல்வி அன்பரசனிடம் சொல்லும் வரிகள் சோக கவிதையாக ஒலிக்கின்றன.

    அரசியல், ஆட்சி பீடமுன்னு வந்தா படிச்சவன், பண்பாளன்கூட பாமரனா, பச்சோந்தியாத்தான் போயிடரான்... பதவி சுகத்திலே போதை அதிகம் இன்றைய அரசியலை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார்.

    கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் எப்படி பணமும்: பதவியும் பேயாட்டம் ஆடின, பதவிக்கும் பணத்துக்கும் பணியாமல் மனசாட்சிப்படி வாக்களித்த வாக்காளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் இறப்பதற்கும் காரணமாயிருந்தன என்பதை இந்தப் புதினத்தில் மனதை உலுக்கும் வகையில் விவரித்திருக்கிறார்.

    தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுந்தரம், கவுண்டர் சாதியைச் சேர்ந்த அன்பரசன், பிராமண வகுப்பைச் சேர்ந்த ராஜப்பா ஆகியோர் சாதியில் வேறு பட்டாலும் இணைபிரியா நண்பர்கள், நீதிக்குப் போராடும் வீரர்கள். இவர்களுடைய நட்பின் ஆழம், இணைந்து செயல்படும் முறை ஆகியவை இலக்கிய நயத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நகரங்களைப்போல் நமது கிராமங்கள் முன்னேற்றம் அடையாமல் இன்னும் தாழ்ந்த நிலைமையிலேயே இருக்கின்றன. கிராமமக்களின் நிலைமையோ பரிதாபத்துக்குரியது. வாழ்க்கையில் அவர்கள் சீரான வளர்ச்சி இன்றி அறியாமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை இந்தப் புதினத்தில் வரும் பாத்திரங்கள் மூலம் தெளிவாக்கி இருக்கிறார் ஆசிரியை.

    ஒருதலைக் காதல் சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. காதல் உணர்ச்சியை மிகைப் படுத்தாமல் இயற்கையான முறையில் வெளிப்படுத்தி இருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

    சாதிப் பெயராலும், அதிகாரத்தின் ஆணவப் போக்காலும் அவதிப்பட்டு சீரழிந்த தாழ்த்தப்பட்ட இந்துக்கள், தங்களுடைய வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுவதாக எண்ணிக்கொண்டு, அவர்கள் முஸ்லிம்களாக மாறும் நிகழ்ச்சியின் மூலம் சாதி இந்துக்களுக்கு சவுக்கடி கொடுக்கிறார் ஆசிரியை.

    இந்தப் புதினத்தில் உலா வரும் பாத்திரங்களை, அவரவர் சாதி பேச்சு வழக்கு முறையிலேயே பேச வைத்திருப்பது புதிய உத்தி.

    தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சேரித் தமிழிலும், கவுண்டர் சாதி மக்கள் அவர்கள் பேசும் தனித்தமிழிலும், பிராமணர்கள் அக்கிரகாரத் தமிழிலும் உரையாட விட்டிருப்பது ஆசிரியையின் தனித் திறமையை வெளிப்படுத்துகிறது.

    இப்புதினத்தின் இறுதிப் பகுதி கண்ணீர்க் காவியமாகக் கரைகிறது.

    படிக்கத் தொடங்கினால் இடையில் விடுக்க மனமில்லாமல் இறுதி வரையில் படித்து முடிக்க ஆர்வமூட்டும் புதினம் சாதிகள் இல்லையடி பாப்பா.

    காலத்துக்கு ஏற்ற கருத்தாழமுள்ள சிறந்த புதினம் இது.

    உயிரோட்டமுள்ள இதுபோன்ற புதினங்களை திருமதி ஹம்சா தனகோபால் அவர்கள் மேலும் எழுதி கன்னித் தமிழன்னைக்குக் காணிக்கையாக்க வேண்டுகிறேன். இதுபோன்ற பயனுள்ள எழுத்துப்பணி மூலம் சமுதாயப் பணியைத் தொடர வேண்டும் என்று இந்நூலாசிரியை வாழ்த்துகிறேன்.

    பிரியமுடன்,

    V.G. சந்தோஷம்

    சென்னை-15

    9ー12ー1989

    என்னைத் தொடர...

    ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’

    என்று நம் மகாகவி பாரதியார் அடிமை விலங்குகள் உடை படாதபோதே பாடினார். அவர் கனவு நனவாகி நம் மூதாதையர் தம் இன்னுயிர் கொடுத்ததன் பலனாய் செங்கோட்டையில் சுதந்திரமாய் ஆனந்தத்தோடு பறக்கலாயிற்று நம் தேசியக் கொடி.

    அதே போன்றுதான் சின்னஞ்சிறு மழலை மொட்டுகளுக்கு,

    ‘சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

    தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்!’

    என்று பாடினார். சாதி மதக் குப்பைகளைச் சுத்தமாய் பெருக்கி குப்பையில் கொட்டி விட்டால் மனிதரிடையே மாறுபாடுகள் மறைந்துவிடும் என்று கனவு கண்டார். அவர் கனவு இன்னமும் கனவாகத்தான் இருந்து வருகிறது. சமூகம் உயர்ந்துவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அதில் யாருக்கும் மாறுபாடு இல்லை. அதில் எழுந்ததுதான் இந்தப் புதினம். யாரையும் சாட வேண்டும்; சாட்டையடி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் எழுந்ததல்ல.

    தாழ்ச்சியும் உயர்ச்சியும் பார்த்து மனம் புலம்பி எழுந்ததுதான் இப்புதினம். இந்நாவலுக்கு முன்னுரைகள் வேண்டும் என்று திரு. வெள்ளையப்பன் அவர்கள் கேட்டார்கள் முன்னுரைக்காக டாக்டர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள், கவிஞர் மு. மேத்தா அவர்கள், டாக்டர் வி. ஜி. சந்தோஷம் அவர்களை - தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் வினவியபோது மகிழ்வோடு சம்மதித்தனர்.

    முன்னுரை எழுதியவர்கள், பதிப்பகத்தார், எழுத்தாளர் என யாரும் யாரையும் சந்திக்காமலே இப்புதினம் எழுந்து உங்களிடையே நடைபோட வந்திருக்கிறது.

    டாக்டர். சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் உலகத்தமிழ் மாநாட்டிற்கு மொரீஷியஸ் தீவுக்குப் புறப்படுவதற்கு முன் இதனை அவசரமாய் எழுதிச் சென்றார். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ புதினம் நடைபோடும் மண்ணின் மைந்தனும், மாப்பிள்ளையும் ஆவார் அவர். வேற்று மொழியாய் இருந்து தமிழிலும் அவர்தம் குல வழக்கங்களிலும் ஊரிய இப்பெருமகனாரிடம் - நாம் எழுதியதைக் கொடுத்தால் குற்றம் சொல்வாரோ என்கிற கிலி என்னுள். அவர்களோ மாநாட்டிற்குப் புறப்படுவதால் இருபது பக்கங்களாவது எழுதாமல் சில பக்கங்களே எழுதுகிறோமே என்கிற தம் ஆதங்கத்தை தொலைபேசியில் சொன்னபோது நான் மகிழ்ந்து போனேன்.

    கவிஞர். மு. மேத்தா அவர்கள் தம் கல்லூரிப் பணியிலும் எழுத்துப் பணியிலும் தொடர்கதை, திரைப்படம் என்றும் இளம் வாசகப் பெருமக்கள் என்றும் நேரம் கிடைக்காமல் நாளும் திணறித் தவிப்பவர். அப்படியிருப்பினும் இப்புதினத்தைப் படித்து தமக்கே உரிய

    Enjoying the preview?
    Page 1 of 1