Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chithira Paavaigal
Chithira Paavaigal
Chithira Paavaigal
Ebook152 pages51 minutes

Chithira Paavaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் பண்டைய காலத்தில் திருநங்கைகள் அரசர்களாய் சமய மரபுகளை உருவாக்கியவர்களாக, ஆன்மிக வழிகாட்டிகளாக இருந்திருக்கின்றனர். மத பீடங்களைக் கூட நிறுவியிருக்கின்றனர்.

அலி, அரவாணி போன்ற அடையாளப் பெயர்களுடன் அழைக்கப்பட்டு கேலிப் பேசப்பட்டு வந்த நங்கைகள் இன்று மிக மரியாதையான இடத்தில் அனைவராலும் மதிக்கப்படும் இடத்தில் இருக்கிறார்கள் என்பது நமக்கு கொஞ்சம் நிம்மதியை தருவதாய் இருக்கிறது.

ஆனால் இந்த நிலைக்கு வருவதற்கு அவர்கள் பட்ட அவமானங்கள் இந்த சமுதாயம் கொடுத்து வந்த தொல்லைகள் உறவுகளும் சுற்றமும் படுத்தியபாடுகள். அதனால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் தற்கொலை எண்ணங்கள் என மிகக் கொடூரமான வாழ்க்கை பயணத்தை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிய வரும்போது மனம் கனத்துப் போகிறது.

இந்த கட்டுரைகளின் ஆசிரியர் லதா சரவணன் இதுவரை 25 நூல்களுக்கு மேல் எழுதி தன்னை அடையாளப்படுத்தியிருந்தாலும் காகிதப்பூக்கள் என்ற அவரின் நூல் மூலம் திருநங்கைகளின் வாழ்க்கையை மிகத் துல்லியமாய் படம்பிடித்துக்காட்டி தன்னை மேலும் திடப்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

அலிகளும், அரவாணிகளும் எப்படி திருநங்கைகளாய் உருவெடுக்கின்றனர் என்பதை இத்தனை வலிகளோடு பதிவுசெய்த வேறு நூல் தமிழில் இல்லையென்றே சொல்லமுடியும் அத்தனை வலிகளையும் படிக்கும் நமக்கு கடத்தி அந்த வலிகளிலிருந்து நாம் ஓடிவிட வேண்டும் என்ற பதைபதைப்பை நமக்குள் கடத்தியிருப்பது படைப்பாளியின் எழுத்து ஆளுமைக்குச் சான்று.

அதேபோன்ற மன பதைபதைப்பை ஏற்படுத்துகிறது லதா சரவணனின் "சாதிக்கத் துடிக்கும் நங்கைகள்" நூலில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு நங்கைகளின் வாழ்க்கைப் பயணமும் அதில் இருக்கும் மேடு பள்ளங்களும் 16 கட்டுரை என்று சொல்லிவிடாதபடி 16 ஜீவன்களின் வாழ்க்கைப் போராட்டத்தை கவிதையின் இலக்கணத்தோடு காதல் கலந்து அன்பின் வெளிப்பாடாய் வார்த்தைகளைப் போட்டு அந்த திருநங்கைகளின் இடத்தில் நாம் இருந்திருந்தால் நம் நிலை என்னவாயிருக்கும் என் படிக்கும் ஒவ்வொருவரையும் யோசிக்க வைத்திருக்கிறது லதா சரவணனின் எழுத்துக்கள்.

இனிமேலாவது சாலைகளில் திருநங்கைகளை பார்க்க நேரிட்டால் அவர்களுக்குப் பின்னும் ஓர் அழகான வாழ்க்கை இருந்திருக்கிறது ஒரு அவலமான வாழ்க்கையையும் தாண்டிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என இந்த கட்டுரைகளைப் படிப்பவர்களை நினைக்க வைத்திருக்கிறது 'சாதிக்கத் துடிக்கும் நங்கைகள்'.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580126905044
Chithira Paavaigal

Read more from Latha Saravanan

Related to Chithira Paavaigal

Related ebooks

Reviews for Chithira Paavaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chithira Paavaigal - Latha Saravanan

    http://www.pustaka.co.in

    சித்திரப்பாவைகள்

    Chithira Paavaigal

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    பதிப்புரை

    1. Born to win ஸ்வேதா

    2. சாந்தியின் ஆனந்தம்

    3. பிளாட்பாரத்து ராணி பவுனு

    4. நடனமங்கை பிரதிஷா

    5. பிள்ளைகளின் திருநங்கை அம்மா!

    6. இருவரும் ஒருவராகி....!

    7. பெண்ணாக ஆசைப்பட்டு மண்ணானவள்

    8. காகிதமாய் கசங்கிய கோகிலா

    9. அரங்கேறிய அந்தரங்கம்

    10. தில்லானா மோகனாம்பாள்

    11. மாண்புமிகு மானஸி

    12. கவிதா காத்திருக்கிறாள்

    13. மலரானேன்... முள்ளானேன்!

    14. பொத்தி வைத்த பூத்திட்ட மல்லிகை மொட்டு

    15. ஆணாகி... பெண்ணாகி...

    16. பெண்ணாக பிறந்து... ஆணாக மாறி... காதல் மணம்!

    என்னுரை

    திருநங்கைகள் என்றாலே நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது என்ன? அவர்களைப் பார்த்தாலே கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கும் சட்டுன்னு கோபப்பட்டு ஏதாவது சாபம் கொடுத்திடுவாங்க, பொது இடம்ன்னு பார்க்காம் காசு கேட்டு கொடுக்கலைன்னா அசிங்கப்படுத்திடுவாங்க, அவங்களைப் புரிஞ்சிக்கவே முடியாது, இன்னும் எத்தனையோ குரல்கள் ஆனால் பலாச்சுளையின் மேல் உள்ள தோலைப் பார்ப்பதைப் போலத்தான் திருநங்கையர் சமூகத்தை உலகம் பார்த்துக்கொண்டு இருந்தது சில வருடங்களுக்கு முன்பு.

    திருநங்கைகளின் உலகம் தனித்துவமானது கௌரவமானவர்கள் கரைபுரண்டோடும் அன்பை வாரி வழங்குபவர்கள்… அற்புதமாய் சமைப்பவர்கள்… இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்கள் அவர்களிடம் சினிமா கதை, சமூகம் என்று அத்தனையும் இழிவுபடுத்தினாலும் இந்த சமூகத்தையும், அதில் வாழும் மானிடத்தையும் நேசிப்பவர்கள் நம்முடன் கலந்து உலகில் பயணிக்க முயற்சிப்பவர்கள் கடலில் இறங்கினால்தான் ஆழம் தெரியும் என்பதைப்போல அவர்களுடன் பழகினால்தான் அவர்களின் அன்பும் அக்கறையும் புரியும். ஏமாற்றம் நிறைந்த உலகில் அட்சயப்பாத்திரமான அன்பிற்குச் சொந்தக்காரர்கள் அவர்களின் ஏற்றம் தலைநிமிர்த்திப் பார்க்கும் வரையில் உயர்ந்திருக்கிறது.

    தற்போது நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடும் ஒரே திருநங்கை வேட்பாளர் ராதா. ஆந்திராவைச் சேர்ந்த தமன்னாவும் மங்களகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சமூகத்தில் இருந்து பாராளுமன்றத்தில் ஒருவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஒருவர், காவல்துறையில் ஒருவர் என்று திருநங்கையரின் வளர்ச்சி அளப்பரியது. மனிதம் அதன் மீதான நம்பிக்கையை நிரம்பியிருக்கிறது.

    உலகிற்கே தன் நாட்டியத் திறமையால் பத்மபூஷன் விருது வாங்கிய நர்த்தகி நடராஜன் மகுடத்தின் வைரக்கல்லைப் போன்றவர், விருதுபெற்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் அழகாக பழகும் அன்பான பெண்மணி.

    பாட்டுக்கு மட்டும் பெயர் போனது இல்லை பட்டுக்கோட்டை தையல்நாயகியின் சாப்பாட்டிற்கும் தான். தான் ஒரு திருநங்கை என்று அறிந்ததும், தன் பெண் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அறுவைசிகிச்சை மூலம் பெண்மையை மலர வைத்து இப்போது பெண்ணாக அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூர்ணியின் மறுவடிவமாக தையல்நாயகியின் டிபன் கடை பிரசித்தமாகி வருகிறது.

    12ம் வகுப்பு வரையிலும் மனதிற்குள்ளே தன் பெண்மையை அடக்கிவைத்து போராடி தவித்துக்கொண்டு இருந்த தமிழ்செல்வி தாய்அறியா சூல் இல்லை தன் பிள்ளைக்காக தானே அறுவைசிகிச்சை செய்துவைத்த தாய் என்று தமிழ்செல்வியின் வாழ்க்கை முழுக்க போராட்டத்திற்குரியதுதான். நர்ஸிங் படிப்பிற்காக விண்ணப்பத்து திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக இரண்டு வருடங்களாய் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றியும்பெற்றவர் இப்போது வெள்ளூரிலுள்ள அரசு நர்ஸிங் கல்லூரியில் படித்துவருகிறார்.

    நான் பெண்ணென குறிப்பிடப்படுவதுதான் என் அடையாளம் என்று போராடிக்கொண்டு இருக்கும் பெண்ணினத்தின் ஆணிவேர்கள்தான் இந்தத் திருநங்கைகள். இதில் தோற்றுப்போனவர்களும் அதிகம் கண்ணியம் தவறிக் கதறியவர்களும் அதிகம் அவர்களைத் தவற வைத்தவர்களும் அதிகம். இன்று பாரதியின் பெண்மையின் இலக்கணமாய் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய் திருநங்கையர் சமூகம் தங்களையும் உயர்த்தி தங்களைச் சார்ந்தவர்களையும் உயர்த்தி வருகிறது.

    அப்படியொரு அமைப்புதான் சாதிக்க பிறந்தவர்களின் சமூக அமைப்பு BORN TO WIN நிறுவனர் ஸ்வேதா மிகச்சிறந்த ஆளுமை, தன்னைச் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுபவர். சொல்லைச் செயலாக்கி காட்டும் திறமையுள்ளவர். சென்னையில் ஆட்டோ ஓட்டும் திருநங்கை சரளா சாதிக்க பிறந்தவர்கள் அமைப்பு மூலம் பயனடைந்தவர் அவர் மட்டுமல்ல சிலருக்கு படிப்பிலும், ஆடை வடிவமைப்பிலும் அழகு நிலையங்கள் மற்றும் தொழில் முன்னேற்றத்திலும் பார்ன் டூ வின் கைகோர்க்கிறது. திருநங்கைகள் என்றாலே கடைகேட்டல், பாலியல் தொழில் என்ற நிலைமை அவர்களும் சமூகத்தில் சம அந்தஸ்து பெற்றவர்கள் என்பது மிக நல்ல உதாரணம் நான் மேல் குறிப்பிட்ட திருநங்கையர் இன்னும் வாய்வழிச் செய்தியாக நிறைய தோழிகளைப் பற்றி செய்திகளை எழுத்துக்களின் மூலம் வெளிகொண்டுவர முயற்சிக்கிறேன்.

    இந்த வருடம் பார்ன் டூ வின் அமைப்பின் மூலம் நடைபெரும் சாதிக்க பிறந்தவர்களின் சாதனை விருது வழங்கும் விழா வெற்றிகரமாக ஏழாவது வருடத்தை தொட்டு இருக்கிறது. அந்நாளில் இந்த புத்தகத்தை கொண்டு வருவதற்காகவே சில சுருங்கங்களுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு ராணி வார இதழில் வெளிவந்த திருநங்கைகளின் தொடரில் சிலவற்றை இங்கே கோர்த்து புத்தகமாக கொடுத்துள்ளேன். அடுத்த எட்டாவது வருட வெற்றிவிழாவில் இன்னும் நிறைய தோழிகளின் வாழ்வியலை எழுத்தும் ஆக்கமுமாய் வெளியிட விருப்பம் உள்ளது.

    நன்றி தோழிகளுக்கு...

    வளருங்கள்… வாழ்வின் சிகரம் நோக்கி…

    நட்புடன்

    - லதா சரவணன்

    *****

    பதிப்புரை

    நம் பண்டைய காலத்தில் திருநங்கைகள் அரசர்களாய் சமய மரபுகளை உருவாக்கியவர்களாக, ஆன்மிக வழிகாட்டிகளாக இருந்திருக்கின்றனர். மத பீடங்களைக் கூட நிறுவியிருக்கின்றனர்.

    அலி, அரவாணி போன்ற அடையாளப் பெயர்களுடன் அழைக்கப்பட்டு கேலிப் பேசப்பட்டு வந்த நங்கைகள் இன்று மிக மரியாதையான இடத்தில் அனைவராலும் மதிக்கப்படும் இடத்தில் இருக்கிறார்கள் என்பது நமக்கு கொஞ்சம் நிம்மதியை தருவதாய் இருக்கிறது.

    ஆனால் இந்த நிலைக்கு வருவதற்கு அவர்கள் பட்ட அவமானங்கள் இந்த சமுதாயம் கொடுத்து வந்த தொல்லைகள் உறவுகளும் சுற்றமும் படுத்தியபாடுகள். அதனால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் தற்கொலை எண்ணங்கள் என மிகக் கொடூரமான வாழக்கை பயணத்தை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிய வரும்போது மனம் கனத்துப் போகிறது.

    இந்த கட்டுரைகளின் ஆசிரியர் லதா சரவணன் இதுவரை 25 நூல்களுக்கு மேல் எழுதி தன்னை அடையாளப்படுத்தியிருந்தாலும் காகிதப்பூக்கள் என்ற அவரின் நூல் மூலம் திருநங்கைகளின் வாழ்க்கையை மிகத் துல்லியமாய் படம்பிடித்துக்காட்டி தன்னை மேலும் திடப்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

    அலிகளும், அரவாணிகளும் எப்படி திருநங்கைகளாய் உருவெடுக்கின்றனர் என்பதை இத்தனை வலிகளோடு பதிவுசெய்த வேறு நூல் தமிழில் இல்லையென்றே சொல்லமுடியும் அத்தனை வலிகளையும் படிக்கும் நமக்கு கடத்தி அந்த வலிகளிலிருந்து நாம் ஓடிவிட வேண்டும் என்ற பதைபதைப்பை நமக்குள் கடத்தியிருப்பது படைப்பாளியின் எழுத்து ஆளுமைக்குச் சான்று.

    அதேபோன்ற மன பதைபதைப்பை ஏற்படுத்துகிறது லதா சரவணனின் சாதிக்கத் துடிக்கும் நங்கைகள் நூலில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு நங்கைகளின் வாழ்க்கைப் பயணமும் அதில் இருக்கும் மேடு பள்ளங்களும்

    16 கட்டுரை என்று சொல்லிவிடாதபடி 16 ஜீவன்களின் வாழ்க்கைப் போராட்டத்தை கவிதையின் இலக்கணத்தோடு காதல் கலந்து அன்பின் வெளிப்பாடாய் வார்த்தைகளைப் போட்டு அந்த திருநங்கைகளின் இடத்தில் நாம் இருந்திருந்தால் நம் நிலை என்னவாயிருக்கும் என் படிக்கும் ஒவ்வொருவரையும் யோசிக்க வைத்திருக்கிறது லதா சரவணனின் எழுத்துக்கள்.

    இனிமேலாவது சாலைகளில் திருநங்கைகளை பார்க்க நேரிட்டால் அவர்களுக்குப் பின்னும் ஓர் அழகான வாழ்க்கை இருந்திருக்கிறது ஒரு அவலமான வாழ்க்கையையும் தாண்டிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என இந்த கட்டுரைகளைப் படிப்பவர்களை நினைக்க வைத்திருக்கிறது 'சாதிக்கத் துடிக்கும் நங்கைகள்'.

    அந்தமட்டில் இந்தக் கட்டுரைகளை பதிப்பிப்பதை தன் கடமையாக ஆத்மார்த்தமாக பாவைமதி உணர்கிறதுதாம் எழுதும் எழுத்து படிப்பவர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால்தான் அது நல்ல எழுத்து என் காத்திரமாய் சொல்ல முடியும் லதா சரவணனனின் எழுத்துகள் மிக காத்திரமாகவே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    அவரின் எழுத்துப் பணி மென்மேலும் தொடர பாவைமதி தன் நெஞ்சார வாழ்த்துகிறது.

    என்றென்றும் அன்புடன்

    டாக்டர் ம.வான்மதி

    *****

    1. Born to win ஸ்வேதா

    "ஆணாகிப் பெண்ணாகி

    Enjoying the preview?
    Page 1 of 1