Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dosmeniyan Devil
Dosmeniyan Devil
Dosmeniyan Devil
Ebook139 pages55 minutes

Dosmeniyan Devil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் விமானம் ஒரு தீவுப் பகுதியில் நூதனமான வகையில் விபத்துக்குள்ளாகிறது. அந்த விபத்தின் பின்னணியில் இருக்கும் சதி என்ன என்பது மீதிக் கதை.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580126908460
Dosmeniyan Devil

Read more from Latha Saravanan

Related to Dosmeniyan Devil

Related ebooks

Reviews for Dosmeniyan Devil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dosmeniyan Devil - Latha Saravanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    டாஸ்மேனியன் டெவில்

    Dosmeniyan Devil

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அலைபாயும் கங்குகள்

    இனிய தோழிக்கு....!

    ஈரம் உலரா உதடுகள்

    ஊமையின் நாக்கு

    சந்திரவதனா

    டாஸ்மேனியன் டெவில்

    பொம்மை

    ரத்னா

    வளைகாப்பு

    அலைபாயும் கங்குகள்

    பொன்னாம்மாளிற்கு வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்தது. தப்புக்காரியம் பண்ணிட்டவள் மாதிரி அடுக்களையில் பாதி தேய்த்து சோப்பும் நுரையுமாய் பூசியிருந்த பாத்திரங்களை அநாதையாக்கி விட்டுப் புழக்கடைப் பக்கம் போனாள்.

    வண்ணத் தொட்டிகளுக்குள் பாதி புதைந்த செடிகள் வந்துவிட்டாயா என்பதைபோல தலையசைத்து வரவேற்க, வாழையும், பலாவும் காய்த்துக் கொண்டிருக்க அவரைக்கு தோண்டப்பட்ட குழிக்குள் வயிற்று அவஸ்தையை வாய்வழியாய் கொட்டிவிட்டு, மண்ணை கொண்டு மூடினாள். எதிர்புற ரயிலடி தன் தடதடப்பை தொலைத்தவிட்ட பேசாமடந்தையாய்! வாசற்பக்கம் யாருமில்லை என்று ஊர்ஜிதப்படுத்தியபடியே, சப்தம் எழுப்பாமல் பைப் தண்ணீரை நிறைத்து வாயைக் கொப்பளித்து கொண்டு உடல் அயர்ச்சியையும் பொருட்படுத்தாது சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்த அந்த தூய்மையான காற்றை கொஞ்சம் சுவாசித்துக் கொள்ளேன் என்று கெஞ்சிய மனதை அடக்கிவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

    என்ன பொன்னம்மா தேய்க்க வேண்டிய பாத்திரம் இத்தனை கிடக்கு அதைவிட்டு புழக்கடை பக்கம் இருந்து வர்றே? கமலத்தின் உடைகளின் நேர்த்தியை இந்நாளில் நூறாவது முறையாக வியந்தாள் பொன்னம்மா.

    என் பிரண்ட்ஸோட அம்மா எல்லாம் எவ்வளவு டீசன்டா டிரஸ் பண்ணிட்டு வர்றாங்க நீயும் இருக்கியேம்மா அன்னைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங்கில் கூட கலைஞ்ச போன தலையும், கசங்கிய புடவையுமாய்... மகளின் பேச்சு தொண்டைக்குள் கசப்பாய் வழிந்த மருந்தின் நெடியை கொடுத்தது.

    விரல்கள் மீண்டும் பாத்திரங்களை தத்தெடுத்துக் கொள்ள, ஏதோ சத்தம் கேட்டுச்சிம்மா அதான்... கமலம் இட்லிகளை வார்த்தெடுத்துபடியே, ஹாட்பேக்கில் நிறைத்து கொண்டு கல்சட்டியில் சட்னிக்குத் தாளித்தாள்.

    எனக்கும் மட்டும் ஆசையில்லாமலா இருக்கிறது கைக்கும் வாய்க்கும் போதாமல் அதென்னவோ வறுமை என்னை தத்தெடுத்து இருக்கிறது. மறைவாய் உட்கார்ந்த போது கூட அம்மாவின் பழைய புடவை தானே உடலை மறைத்தது. காசு இருப்பவர்களுக்குதான் சடங்கும் சம்பிரதாயமும், நமக்கெல்லாம் அது எதுக்கு அதான் மூணு நாள் மனையில உட்கார்ந்துட்டே இல்லை இனிமே வேலைவெட்டியபாரு, மேலத்தெரு பத்மா அக்கா வீட்டுலே வீட்டு வேலைக்கு ஆள் வேணுன்னு கேட்டாங்களாம் தெரிந்தவங்க மூலமா தகவல் வந்தது. நேத்திக்கே பேசிட்டேன் அவங்களுக்கு தீட்டு கீட்டுன்னு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அடிவயிற்றின் சுரீர் வலியை விடவும் அம்மாவின் அக்கறையற்ற வார்த்தைகளின் வலியை பொறுத்துக்கொண்டு, ஏண்டி திரண்டு ஒருவாரம் கூட ஆகாத பிள்ளையை இப்படி வீட்டுவேலைக்கு யாராவது அனுப்புவாங்களா?! ஊர் என்ன பேசும்?!

    பேசற ஊர் எம்பிள்ளைக்கும் எனக்கு அரைவயிறு கஞ்சி ஊத்துமா? வேலையைப்பாரு....புருஷன் இல்லாம ஒத்தைப் பொட்டப்பிள்ளைய வளர்க்கணும், நாளைக்கு அதுக்கு நல்லது கெட்டது எல்லாம் யார் செய்வா? இன்னைக்குப் பேசறவங்களா? பொன்னம்மா தாய் சிரித்துப் பார்த்ததேயில்லை. ஏதோ துணி கொண்டு அழுந்தத் துடைத்தாற்போல உணர்ச்சிகள் அற்று இருக்கும் அந்த முகம். அவள் இறந்த போது கூட.

    மாலையும் கழுத்துமாய் அம்மா என்றோ சீட்டு போட்டு சேமித்து வைத்திருந்த மலிவுவிலைப் புடவையுடன் ஆறுமாதங்கள் பின்னாடியே சுற்றி கபாலியைக் கல்யாணம் செய்து கொண்டு வந்த தினம். அடிப்பாவி உனக்காகவே வாழ்ந்தாளே நீயே அவளுக்கு எமனாயிட்டே என்று சேரி ஜனங்கள் எல்லாம் சாபம் விட்டு கதறி அழக்கூட நேரம் தராமல் கிடத்திய இடத்தில் இருந்து எடுத்த பத்தாவது நிமிடத்தில் அவளின் உடலைக்குறி வைத்த கபாலியின் அணைப்பிற்குள் நிற்கும்போது தன் எதிர்காலம் பற்றிய உச்சக்கட்ட பயம் பொன்னம்மாவைத் தாக்கியது.

    வாழ்நாள் முழுமைக்கும் இவனுடனான வாழ்க்கையா என்ற பயத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி தன்முன்னே குதிராய் வளர்ந்து நிற்கும் பெண்ணின் அலட்சியத்தில் மனம் கருகி, பொன்னம்மா தம்பி ரூமிற்கு போய் சாப்பாடு கொடுத்துடு. அப்பறம் கிரிஜாவோட பழைய துணிகள் எல்லாம் அந்தப் பையிலே எடுத்து வைச்சிருக்கேன். வேலையை முடிச்சிட்டு போகும் போது எடுத்துட்டுப் போ! உன் பொண்ணுக்கு ஆகுமே!

    பேசும்போது நீங்கிய முகக்கவசம் மீண்டும் கமலாவின் முகத்தினை ஆவலாய் முத்தமிட்டுக் கொண்டது. எதிர்கால பயமற்று, உண்டு உடுத்தி, நகக்கண்ணின் அழுக்ககற்ற கூட பார்லர் உதவியை நாடியிருந்தால் என்னிடம் மகள் எதிர்பார்க்கும் அந்த நளினம் இருந்திருக்குமோ என்று பொன்னம்மா மீண்டும் ஒருமுறை யோசித்து மாடியேறினாள். பிரேக்கிங் நியூஸ் என்ன கணக்கில்லாமல் கொரானாவின் தாக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்த டிவியில் ஆழ்ந்திருக்க, மாடியறறைகள் இரண்டும் மெளனச்சாமியார் வேடமிட்டு இருந்தது. மூன்றாம் அறை மட்டும் சற்றே விழிப்பாய், மறதியென்ற ஒன்றை இறைவன் ஏழைகளுக்கு மட்டும் மூளைப்பகுதியில் படைக்க மறந்துவிட்டான் போலும்.

    அடித்தட்டுப் பெண்களின் அகமுடையான் பெரும்பாலும் கைத்தொழில்கள்தான். அது கைகொடுக்கும் அளவிற்கு கணவன் தருவதில்லை, அது தன் தாய்க்கும் தனக்கும் மட்டுமே இட்ட சாபமாக இருக்கட்டும் என்று வேண்டிக்கொள்வாள். அன்னையின் அன்பும், அரவணைப்பும் மறுக்கப்பட்ட ஏதோ ஒரு தருணத்தில் கபாலியின் கபடம் ருசித்தது. திரைமறைவில் அவனின் விரல்கள் ஊர்ந்தபோதும் பரந்து விரிந்திருந்த அந்த சுருள் அடர்ந்த மார்பில் தலை சாய்த்த போது அம்மா என்ற இயந்திரத்தின் சுழற்சி முற்றிலுமாய் இழந்தது.

    நிரந்தர வருமானமின்றி வாங்கும் சொற்பமும் கண்ணாடி பாட்டல் திரவத்திற்கு இரவலாகப் போய்விட, லாரியின் சக்கரத்திற்குள் கூழாகிப்போன மூட்டையாய் வந்த கணவனின் மரணம் முழுமையான மூன்று வருடத் தாம்பத்தியத்தின் விடுதலையாகவே அவள் உணர்ந்தாள். அவளின் மெளன சத்தியாகிரகத்திற்கு வெற்றி, கடலாய் மாறிய விழிகள் காய்ச்சிய உப்புத்தண்ணீரைச் சுமந்த கன்னத்திற்கு பரிசு. கபாலியின் இறப்பில் புழக்கடையின் சுதந்திரக்காற்றின் இதத்தை உணர்ந்தாள். அன்றிலிருந்து அவளின் அன்றாடம் பத்துப்பதினைந்து வீடுகளின் அடுக்களைக்குள்ளும், துவைக்கும் கல்லிற்குள்ளும் என்றாகிப்போனது.

    தரையெல்லாம் சிதறிகிடக்கும் பொருட்களும், வீணான உணவுப் பருக்கைகளையும் பார்க்கும் போது இதற்காகத்தானே இறைவா என்னை இப்படி பத்து தேய்க்க வைத்தாய். வேண்டும் என இரைஞ்சுபவர்களுக்கு இல்லாமையும், வீணாக்குபவர்களுக்கு மேன்மேலும் தருவதில் உனக்கு ஏன் அத்தனை இன்பம் என்ற கேள்வி மனதில் எழும்.

    பலநேரங்களில் கமலத்தின் வீட்டின் பின்புறம் இரயிலோடும் சப்தமும் மரங்களை அதன் வசதிக்கேற்ப அசைத்து வைக்கும் தென்றலும் அவளின் நண்பர்களாயின. நான் அறியாத பல ரகசியங்களை புதைத்து வைத்திருந்தாள் என் அன்னை. கரம்பிடித்து தலைகோதி ஒருநாளும் பேசினாளில்லை, ஆனால் நான் பேச ஆயிரம் சொற்களைப் புதைத்து வைத்திருக்கிறேன் என் மகளிடம் ஆனால் அருகமரும் ஐந்து விநாடிகளும் அவளைப் பொறுத்தவரையில் வீணாகவே! தலைமுறைகள் விசித்திரம்.

    மூன்றாம் கதவின் மேல் மெல்ல விரல்களை மடக்கி ஒலியெழுப்பினாள். கதவு திறக்க சற்று நேரமெடுத்தது. மூக்கின் மேற்கவசம் ஒருமுறை விலகி மீண்டும் மோகம் கொண்ட புது கணவனைப் போல் கட்டிக்கொண்டது.

    இதேபோல் ஒரு நாளின் யாருமற்ற மதிய நேரத்தில் காப்பிக்கோப்பையோடு இதே அறை வாசலில், தம்பி காப்பி கொண்டாந்து இருக்கேன்?! என்ற கரைந்த குரலோடு நானும் உள்ளிழுக்கப்பட்டேன்.

    நான் பார்த்து வளர்ந்த பிள்ளை இன்று எனை பார்க்காத கோலத்தில் பார்க்க விரல்களை அலைய வைக்க முற்பட்டிருக்கிறது. வேண்டாம் தம்பி என்று குரல் அரற்ற, சிதறிய காப்பியின் மணத்தையும் தாண்டி ஏதோவொரு ரசாயன விஷத்தின் வாசனை. ஆம் சில வருடத் தாம்பத்தியத்தில் நான் உணர்ந்த வாசனை. அறையின் மூலைக்குள் கிடந்த அந்த சின்னதிரையில் ஏதோ நிழலாய் ஓடிக்கொண்டிருக்க அவனின் மூர்க்கத்தின் காரணம் புரிந்தது.

    "பையன் பெரிய படிப்பு படிக்கிறான் அதுக்காகத்தான் பொன்னம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1