Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andha Anbu Aabathanathu
Andha Anbu Aabathanathu
Andha Anbu Aabathanathu
Ebook124 pages41 minutes

Andha Anbu Aabathanathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு அக்கறை கலந்த அன்பின் பரிமாணம் அநாதை விடுதியில் வளரும் கதாநாயகி அவளைத் தாங்கும் காதல் கணவன் தன் மனக்காயங்களால் தானறியாமலே தவறு செய்யும் நாயகி

Languageதமிழ்
Release dateJun 4, 2022
ISBN6580126908427
Andha Anbu Aabathanathu

Read more from Latha Saravanan

Related to Andha Anbu Aabathanathu

Related ebooks

Reviews for Andha Anbu Aabathanathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andha Anbu Aabathanathu - Latha Saravanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அந்த அன்பு ஆபத்தானது

    Andha Anbu Aabathanathu

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முதல் அத்தியாயம்

    இரண்டாவது அத்தியாயம்

    மூன்றாவது அத்தியாயம்

    நான்காவது அத்தியாயம்

    ஐந்தாவது அத்தியாயம்

    ஆறாம் அத்தியாயம்

    ஏழாவது அத்தியாயம்

    எட்டாவது அத்தியாயம்

    ஒன்பதாம் அத்தியாயம்

    பத்தாவது அத்தியாம்

    பதினோறாம் அத்தியாம்

    பன்னிரண்டாவது அத்தியாயம்

    பதிமூன்றாவது அத்தியாயம்

    பதிநான்காவது அத்தியாயம்

    முதல் அத்தியாயம்

    ‘என் மடியில் இளைப்பாருங்கள்’ என பரந்து விரிந்திருந்த அந்த ஆலமர நிழலில் தன் ஆடிக்காரை நிறுத்தினான் காந்தன். பக்கத்து இருக்கையில் அதுவரையிலும் தனக்குத் துணையாய் அமர்ந்திருந்த இனிப்பு பொட்டலங்களையும் பழங்களையும் கைகளில் சுமந்தபடியே அலுவலகம் என்று போர்ட்டு மாட்டியிருந்த கட்டடத்தை நோக்கி நடந்தான். கைகளிலிருந்த சுமையைப் போல மனதிலும், இருபுறமும் சிறு சிறு குடில்களில் வகுப்புகள் நடந்து கொண்டு இருக்க ஜன்னலின் பக்கம் சில பொடிசுகள் இவனின் வருகையை தலையுயர்த்திப் பார்த்துப் பின் கவிழ்ந்து கொண்டன.

    அடர் செடிகளில் நீர் நிறைத்துக் கொண்டு இருந்த வாட்ச்மேன் மோசஸ் கைவேலையை நிறுத்திவிட்டு காந்தனை நோக்கி ஓடி வந்தான். மிதமான வெய்யில் நீரை உறிஞ்சிக் கொண்டே செடிகள் இதமாய் வாசனையை மோசஸ் நெருங்கும் முன்னரே பரப்பியது.

    வாங்க தம்பி! பாப்பா வரலையா? மோசஸின் ஆதுரமான கேள்விக்கு இல்லையென்று தலையசைத்தான். மதர் இவனிடம் இன்னமும் விவரம் தெரிவிக்கவில்லை போலும் தெரிந்தால் மோசஸின் மனம் என்ன பாடுபடுமோ. தந்தைக்கும் மேலான பாசம் மிகுதியால்தான் பாப்பா வரவில்லையா என்று கேட்கிறார்.

    சந்திராவிடம் கொஞ்ச நேரம் பேசும் நபர்களுக்குக் கூட அந்நியோன்யம் புறப்படும் போது ஏன்?! பல வருடங்கள் வளர்த்த இவருக்கு இருக்காது. சுவரையொட்டி நீண்டு படர்ந்திருந்த கொடிகளில் சிறுசும் பெருசுமாய் உடைகள் அணிவகுத்து இருந்தன.

    அலுவலகக் கட்டிடத்தை நெருங்கி மரியாதைக்கு ஒருமுறை கதவைத் தட்டிய மோசஸ் காந்தனின் வருகையை வெளிப்படுத்திவிட்டு இனிப்புகளை மேஜை மீது வைத்தான்.

    தம்பி பேசிகிட்டு இருங்க, மேரியை தாகத்திற்கு ஏதாவது கொண்டாரச் சொல்றேன்?! காந்தன் மறுப்பதற்குள் ஓடினான். மோசஸ் வயதையும் மறந்து, மற்றொரு சமயமாய் இருந்தால் அந்த அன்பில் சிலாகித்து இருப்பான் காந்தன். ஆனால் இப்போது மதரிடம் அவன் தணித்து சில விஷயங்களை விவாதிக்க வேண்டியிருந்தது. அப்போது யாரும் உடனிருக்காமல் இருப்பது நல்லது என்று நினைத்தான்.

    வணக்கம் சிஸ்டர்.! மரியாள் என்னும் பெயர்பலகைத் தாண்டி நீல சீருடையில் நெஞ்சில் தொடும் சிலுவையோடும் கருணைத் ததும்பும் கண்களோடும் அன்னை மரியாவாகவே காட்சியளித்தார் சிஸ்டர். மரியாள். காந்தனின் வணக்கத்தை தலையசைத்து ஏற்றபடியே உட்காரச் சொல்லியவர்.

    சந்திராவுக்கு இப்போ எப்படி இருக்கு? காந்தன். நீங்க போன் பண்ணி விவரம் சொன்னப்போதிலிருந்து எனக்கு மனசு ஒரு நிலையில் இல்லை இது தொடர்ந்து மூன்றாவது முறை எனக்கே வேதனையா இருக்கு. உங்க நிலையும் ? உங்க குடும்பத்தினரில் நிலையும் நினைத்தால்! அவர் தன் கண்ணாடியைக் கழற்றிவிட்டு வெள்ளை கர்ச்சீப்பினால் ஒற்றிக் கொண்டார்.

    அவன் அமைதியாய் இருந்தாலும், முகம் பெரும் கவலையில் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியது. உங்க கஷ்டம் எனக்கும் புரியுது. ஒரு உயிர் இந்த உலகத்துக்கு வர்றது நம்ம கையிலே மட்டும் இல்லை மிஸ்டர். காந்தன் அது கடவுளோட ஆசீர்வாதம். மலைபோல உங்களுக்கு வந்திருக்கிற இந்த துயரம் பனிபோல விலகி விடும். மனதை தளரவிடாதீங்க ? மதரின் பேச்சு காந்தனுக்கு சற்று ஆறுதலைத் தந்தது.

    அதற்குள் மோசஸூம் மேரியும் டீயும் ஸ்நாக்ஸ்கும் கொண்டு வந்தார்கள். வறண்டிருந்த மனதிற்கு அவர்களின் அன்பும் தொண்டைக்கு அச்சுடுபானமும் இதமளித்தது.

    மோசஸ் நம்ம காந்தன் வாங்கிட்டு வந்த பழங்களையும் இனிப்புகளையும் நீயும் மேரியும் பிள்ளைகளுக்கு விநியோகம் பண்ணுங்க! என்று மரியாள் பணிக்கவும் ஏதோ அதிமுக்கிய விஷயத்தை இருவரும் கலந்தாலோசிக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து பார்சலுடன் வெளியே அறைக்கதவை சற்றே ஒருக்களித்துப் போனான் மோசஸ் அவனின் செய்கையில் சிறு வியப்புடன் மீண்டும் பேச்சைத் துவங்கினான் காந்தன்.

    எங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாமல் எந்த ஒளிவும் மறைவும் இல்லை. சந்திராவைப் பார்த்தவுடனே எனக்கு இவதான் முடிவு பண்ணிட்டேன். எத்தனையோ பிரச்சனைகளுக்குப் பிறகுதான் அவ எனக்கு கிடைச்சா. ஆரம்பத்திலே அந்தஸ்து அநாதைன்னு காரணம் காட்டி வெறுத்த எங்க அம்மா அப்பா கூட அவளோட அன்பையும் குணத்தையும் புரிஞ்சிகிட்டு அவளை ஏத்துகிட்டாங்க. எல்லாம் நல்லா போயிட்டிருந்த நேரம் இப்படி தொடர்ச்சியா அவளுடைய கர்ப்பம் ஒருதடவை கூட நிலைக்காம போனதில் அவங்களுக்கு மனசு முழுக்க வருத்தம்.

    இருக்காதா ! காந்தன். ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்திற்கு இளவரசனைப் போல நீங்க. உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லாத சந்திராவை அவங்க மருமகளா ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம்.!

    உண்மை சிஸ்டர் அவ மேல இப்பக்கூட யாருக்கும் கோபமோ வருத்தமோ இல்லை அவளோட உடல்நிலையை நினைச்சு அம்மா ரொம்பவும் கவலைப்படறாங்க?!

    சீக்கிரம் எல்லாம் சரியாயிவிடும் காந்தன். கூடிய விரைவில் நீங்க ஆரோக்கியமான ஒரு குழந்தைக்கு தந்தையாகப் போறீங்க இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.!

    இறைவன் ஆசீர்வதித்தால் மட்டும் போதுமா?! சிஸ்டர் அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு மாற்றத்தை உணர்ந்தவராய் காந்தனை ஊன்றிப் பார்த்தார் மரியாள். அவன் கண்களில் நீர்த்துளிகளையும் தாண்டி ஒரு குழப்பம். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்று ஆரம்பித்து தன் சந்தேகத்தை சொன்ன காந்தனை ஒருவித பயப்பார்வைப் பார்க்கத் தொடங்கினார் சிஸ்டர் மரியாள்.

    இரண்டாவது அத்தியாயம்

    வாசலில் மிணுக்மிணுக்கென்று ஒரு வெள்ளை நிற பல்ப் எரிந்து கொண்டு இருந்தது. ‘இதோ கொட்டப் போகிறேன்’ என்ற மழையின் அறிகுறிக்காக வோல்ட்டேஜ் குறைவாக இருந்தது. ‘நாங்களும் இருக்கிறோம்’ என்று சப்தம் எழுப்பியபடியே லொடலொட என்று மெதுவாய் சுற்றிக்கொண்டு இருந்த மின்விசிறியைத் தாண்டியும் வியர்த்து வழிந்தனர் அப்பிள்ளைகள். கருணாலயம் ஆரம்பித்து ஏழெட்டு வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய பிறந்த நாளை கொண்டியதன் அடையாளமாக ஆங்காங்கே சாயம்போன பேப்பர் பூக்கள், பக்கத்தில் நூலினை சுமந்த காற்று வற்றிப்போன பலூன்கள்.

    அம்மா...! வாசலில் குரல் கேட்டு அந்தக் கட்டிடத்தின் அறையில் இருந்து எட்டிப்பார்த்தார் சிஸ்டர் ஒருவர். கையில் ஜபமாலையைச் சுமந்தபடியே உட்காருங்கள் என்று இருக்கையைக் காட்ட வந்திருந்த தம்பதிகளின் நடுவில் ஒரு சிறு பெண் சிகப்பு நிற சீட்டிப் பாவாடையில் இரட்டை ஜடையுடன் மலங்க மலங்க விழித்தபடியே?! அப்பெண்ணைப் பார்த்து மென்மையாக சிரித்தார் அந்த இல்லத்தலைவி.

    "அம்மா....! பாதர் ஜான்சன் உங்ககிட்டே இந்தக் கடிதத்தை கொடுத்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1