Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulasi Vanam
Thulasi Vanam
Thulasi Vanam
Ebook250 pages1 hour

Thulasi Vanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல பத்திரிகைகளில், பல்வேறு தீபாவளி மலர்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு.

இதில் குறிப்பாக ‘துளசிவனம்’ என் சொந்தப் பாட்டியின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் இணைப்பு. ‘பைரவ வேண்டுதல்’ நான் பிறந்த புதுதில்லியில் என் சிறுவயதில் பார்த்த சம்பவம். இப்படி பலவற்றை காண்பதும், மனதில் பதிந்ததை, கற்பனைவளம் கொண்டு கதையாக மாற்றுவது தானே ஓர் எழுத்தாளரின் பணி. அதை செவ்வனே செய்திருக்கிறேனா? படித்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580125907437
Thulasi Vanam

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Thulasi Vanam

Related ebooks

Reviews for Thulasi Vanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulasi Vanam - Kanthalakshmi Chandramouli

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    துளசிவனம்

    Thulasi Vanam

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. ஆறாம் நம்பர் பெட்

    2. ஆதாரம்

    3. என் பெண்சாதி அஞ்சலை!

    4. தட்டித்தட்டி வந்த முத்தல்லோ!

    5. நான் பேச நினைப்பதெல்லாம்...

    6. சந்நியாசம்

    7. கச்சேரி ரோஜா

    8. பைரவ வேண்டுதல்

    9. சுமங்கலி பூஜை

    10. துளசிவனம்

    11. பேசாமல் பேசுவோம்

    12. என் மகள் சம்மதிப்பாள்

    13. ரோசாக்குமாரி விஜயம்

    14. இந்த மாற்றம் எப்படி வந்தது?

    15. குதறப்படும் மொட்டுக்கள்!

    16. அஞ்ஞானம்

    17. பெயர்

    18. திருமண கலாட்டா

    19. சொல்லாத்தான் நினைக்கிறேன்

    20. தாயினும் சாலப்பரிந்து

    21. கடமை

    22. ஊன்றுகோல்

    23. கடன்

    24. தமிழ்

    25. ஏன் இப்படி?

    என்னுரை

    ஒவ்வொரு சிறுகதையும் நம் மனதில் பதிந்த ஒரு உணர்வின் வெளிப்பாடுதான் என்று கருதுகிறேன்.

    நம்மை சுற்றிய உலகம் நமக்கு அளிக்கும் பாடங்கள்தான் எத்தனை?

    அவற்றை உணர்ந்து எழுத்து வடிவில் வெளிக்கொணரும் பொழுது அவை சிறுகதைகளாக மாறுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.

    காந்தலக்ஷ்மி சந்திரமௌலி

    1. ஆறாம் நம்பர் பெட்

    ‘சுட்டும் விழிச் சுடரே’ ‘சுட்டும் விழிச் சுடரே’ என் இதயம் உன்னைச் சுற்றுதே...

    ஸ்டீரியோவில் பாட்டு அருமையாகக் கேட்டுக் கொண்டிருக்க, வெறிச்சோடிக் கிடக்கும் வீதியில், வேகமாக கார் ஓட்டினாள் டாக்டர் ஷாலினி.

    நேற்று மதியத்திலிருந்து மருத்துவமனையில் அல்லல்பட்டதில், இன்று உடலெல்லாம் வலி. வீட்டிற்கு சென்ற உடனே குளித்துவிட்டு தூங்க வேண்டும்.

    நேற்று பனி பெய்ததில் தெருக்களில் வெள்ளை பஞ்சாக பனி பூத்திருந்தது. ஆங்காங்கு ‘சினாய்’ மரங்களிலும் வெள்ளை கொக்குகள் போல பனி.

    "ம்... எப்படியிருந்த ஜம்மு எப்படி ஆகிவிட்டது? வானைத் தொடும் மரங்கள் பச்சை போர்வையைப் போர்த்த... கீழே தெருக்கள் வெள்ளையாக பனியில் மூழ்க, மக்கள் ஆங்காங்கே வயிற்றோடு கட்டிய தணல் எரியும் அடுப்புடன் ‘சலாம் பீபிஜி, அல்லாஹ், துமே சதா குஷிரக்கே’ (வணக்கம்மா, அல்லா உங்களை, எப்பொழுதும் மகிழ்ச்சியோடு வைக்கட்டும்) என்று காரில் குனிந்து முகமன் கூறுவார்கள்.

    இப்பொழுது எல்லாம் மாறிவிட்டன. காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட, இந்திய ராணுவத்திற்கும், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் சண்டை நடக்கும் போதும் அப்பாவி மக்கள் அடிக்கடி குண்டு வெடிப்புகளுக்கு இலக்காக... ‘சே, இதற்காகவா நாட்டுக்கு சுதந்திரம் வாங்கினோம்? ஷாலினிக்கு வெறுப்பு வந்தது.’

    ‘டாக்டர், உடனே மருத்துவமனைக்கு வாங்க, வெடிகுண்டு வீச்சில் காயமடைந்த ராணுவவீரர்கள் வந்துக்கிட்டிருக்காங்க...’ ஹிந்தியில் குரல் ஒலிக்க, உடனே காரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி லாவகமாக காரை திருப்பினாள்.

    நேற்று இரவு டீக்கடையில் குண்டு வெடிப்பில் அப்பாவிப் பொதுமக்கள் என்றால், இன்று இராணுவவீரர்களா? பதட்டத்துடன் மருத்துவமனைக்குள் சென்றாள் ஷாலினி.

    ‘டாக்டர் ஷாலினி, யூ டேக் அப் தி சிக்ஸ்த் பெட்’ என்று டாக்டர் கமல் சிங் தன் முகமூடிக்கு மேல் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துச் சொன்னார்.

    ‘டாக்டர், இந்த பேஷண்டு தலையில அடி! ஐயோ, ஆருபெத்த பிள்ளையோ, காலு நசுங்கின்னு, உசிரு இருக்கி, எண்ட மேரிமாதாவே ரக்ஷிக்கணும்’ என்று புலம்பியபடி சிஸ்டர் ரோஸ்ஷாலினியைப் பார்த்தாள்.

    ஆறாம் நம்பர் பேஷண்டுக்கு வயது 20தான் இருக்கும். பார்த்த மாத்திரத்திலேயே இரண்டு கால்களையும் எடுத்துவிடவேண்டும் என்ற அளவிற்கு காயம். ஷாலினி ஒரு கணம் தன் தம்பி சேதுவை நினைத்தாள். இதே வயதுதானே.

    அடுத்த மூன்று மணி நேரங்கள் அவன் உயிருக்குப் போராட, அவனுடன் இணைந்து டாக்டர் ஷாலினி மட்டுமல்ல ஆபரேஷன் தியேட்டரில் உள்ள அனைவருமே போராடினர்.

    பிழைத்துவிட்டான்! ஆனால் பாவம் இரண்டு கால்களும் இல்லாமல் இனி காலம் முழுவதும்...

    ஷாலினி அலுப்புடன் வெளியே சோபாவில் சாய்ந்தபடி கண்களை மூடினாள். கண்ணுக்குள் மணல் தூவியது போல எரிச்சல்.

    ‘டாக்டர் ஷாலினி, ஆறாம் நம்பர் பேஷண்ட் பிழைத்து விட்டானா?’ ஆழமான ஆண் குரல் காதருகில் கேட்க, திடுக்கிட்டு விழித்தாள்.

    ‘ஐ ஆம், கேப்டன் ரகுவரன், நீங்க ஆறாம் நம்பர் பேஷண்டை என்னிடம் உயிருடன் ஒப்படைக்கிறீர்கள்’.

    ஷாலினிக்கு கோபம் தலைக்கு மேலே எகிறியது.

    ‘உயிரை காப்பாத்தறதுக்குத் தானே நான் உழைக்கிறேன்’.

    ‘நோ, நோ, நீங்க நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்கல. அவன் எக்காரணம் கொண்டும் சாகக் கூடாது. அவனைக் கவனிச்சுக்குங்க போதும்’

    இந்த வெடிவிபத்துல எத்தனையோ ராணுவவீரர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது இவன் உயிரை மட்டும் காப்பாற்ற சொல்றீங்களே நியாயமா இது?

    ‘அவன் ஒரு தீவிரவாதி. இந்த குண்டு வெடிப்பு மட்டுமல்ல, இனி இந்தியாவில் பல இடங்களில் நடக்கப்போகும் குண்டு வெடிப்பை தவிர்க்கணும்னா அவன்கிட்ட இருந்து தகவல்களை நாம பெறணும்.’ என்றார் கேப்டன்.

    ‘இந்தப் பால் வடியும் முகம் கொண்டவன், மீசையே சரியாக வளரவில்லை, இவனா தீவிரவாதி?’ ஷாலினியால் நம்பவே முடியவில்லை.

    இவன் யாராக இருந்தால் என்ன? காஷ்மீரில் குண்டு வைத்தால் பாரதத் தாயின் மகுடத்தை உடைத்தெறிகிறான். அஸ்ஸாம், நாகாலாந்தில் குண்டு வைத்தால் பாரதத் தாயின் இடக்கையை உடைக்கிறான். மும்பை, ராஜஸ்தானில் வைத்தால் வலக்கையைத் துண்டிக்கிறான். கோயம்புத்தூரில் குண்டு வைத்தால் பாரதத்தாயின் கால்களை வெட்டி எறிகிறான். இவன் யாராக இருந்தாலும் சரி, உயிருடன் எனக்கு வேண்டும் கேப்டனின் குரலில் கோபம்.

    ‘சாரி, கேப்டன் நான் உங்கள் சேவையை குறை கூறவில்லை, ஆனால் இந்த பையன் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பான் என்று தோன்றுகிறது’

    ‘டாக்டர், நீங்கள் நினைப்பதுபோல் இவன் மாணவன்தான். ஆனால் தீவிரவாதத்திற்கு அழைக்கும் தீவிரவாத பிரசாரகன்’ என்றார் ரகுவரன்.

    அன்றிரவு ஷாலினிக்குத் தூக்கம் வரவில்லை. சாப்பிடும்பொழுது அம்மாவிடமும் தம்பி சேதுவிடமும் அனைத்தையும் கூறினாள். சேது துருவி துருவிக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தாள்.

    தூக்கம் வராததால் எழுந்து பால்கனியில் நின்றாள். ‘என்ன இது யாரோ பேசும் குரல்? இந்த நள்ளிரவில் யார்?’ மெதுவாக பால்கனியின் ஓரத்திற்கு சென்றாள்.

    தம்பி சேதுவின் குரல் ஆங்கிலத்தில் தெளிவாக ஆனால் மெலிதாக கேட்டது.

    ‘நம்ப யூசுப் மாட்டிகிட்டான். டயானா ஆஸ்பத்திரி ஆறாம் நம்பர் பெட், இரண்டு கால்களையும் எடுத்துட்டாங்க, கேப்டன் ரகுவரன்தான் சுத்திகிட்டு இருக்காரு. எப்படியும் எனக்கு மேலும் தகவல்கள் கிடைக்கும். உடனே உங்களிடம் பேசுறேன்’

    அதிர்ச்சியில் ஷாலினி கீழே விழுந்துவிடாமல் இருக்க, சுவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

    ‘எப்பொழுது இந்த நாசக்கார கும்பலுடன் என் தம்பி இணைந்தான்? இவன் படித்து முன்னேற வேண்டும் என்று திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நான் எப்படி இதை கவனிக்கத் தவறினேன்? தந்தையில்லாத குறை தெரியக்கூடாது என்று செல்லம் கொடுத்து விட்டோமோ?’

    பெற்ற தாயைவிட, நாட்டை அதிகமாக நேசித்த சுகந்திர வீரரான தாத்தா. இராணுவத்தில் சைனா போரில் உயிர்விட்ட அப்பா, இவர்கள் குடும்பத்தில் பிறந்த மகனா? இது என்ன கொடுமை? எங்கே தவறவிட்டோம்?

    நெஞ்சு வெடித்துவிடும் போலத் தோன்றியது. ஆஸ்பத்திரியில் கேட்ட ஓலங்கள் மீண்டும் ஒலித்து காதை அடைத்தன. நேற்றைய குண்டு வெடிப்பில் இறந்த குழந்தையை கையில் ஏந்தி ‘இதை செஞ்ச குடும்பம் கூண்டோடு ஒழியட்டும்’ என்று சாபமிட்ட தாயின் முகம் கண்முன் தோன்றியது.

    மெதுவாக, ஃபோனை எடுத்தாள். ‘கேப்டன் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல் தெரிய, உடனே எங்க வீட்டுக்கு வாங்க.’

    தன்னையறியாமல் கண்ணில் வழிந்த நீரைத்துடைத்தபடி சத்தமில்லாமல் தன் தம்பியின் அறையின் கதவை வெளியிலிருந்து பூட்டினாள் டாக்டர் ஷாலினி.

    2. ஆதாரம்

    ‘வந்தனா! மாப்பிள்ளை பையன் போனில் பேசினால் நிதானமாக நடந்துகொள்’ அம்மா கூறுவதைக் கேட்டு வந்தனா வேண்டுமென்றே ‘ஏன்?’ என்று கேட்டபடியே வண்டியை முடுக்கினாள்.

    ‘இது பெரிய இடத்துச் சம்பந்தம். அமெரிக்கா பையன் ஏதாவது கண்டபடி பேசி வாழ்க்கையைக் கெடுத்துக்காதே!’

    வந்தனா ‘கேள்விக்குறி’ பத்திரிகையில் நிருபராக வேலை செய்பவள். காலையிலிருந்து மாலை வரை செய்திகள் சேகரிப்பது, படம் எடுப்பது என்று சென்னை முழுவதும் சுற்றுபவள்.

    விவேக், சென்ற வாரம் அவளைத் தன் பெற்றோர்களுடன் பெண் பார்க்க வந்துவிட்டு இதுவரை பதில் கூறவில்லை. அம்மாவும், அப்பாவும் தவிப்பதைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. அன்று ‘திருமண பந்தம்’ எனும் அமைப்பின் மூலம் பல இலட்சம் மக்களைச் சென்றடைந்து திருமண சேவை மையம் நடத்தும் நிர்மலா பாண்டியனுக்கு அறுபதாவது பிறந்தநாள். அதில் கலந்து கொண்டு, பத்திரிகையில் எழுதுவதற்காகச் சென்றாள் வந்தனா.

    ‘இளைய தலைமுறையினருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் காதலித்துத் திருமணம் செய்தாலும் சரி, பெற்றோர் பார்த்து வைத்த திருமணமானாலும் சரி, முதலில் பரஸ்பரம் நம்பிக்கை வைத்து வாழ்க்கையைத் தொடருங்கள். நான் பல திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறேன். ஆனால், சில திருமணங்கள் முறிந்து போகும் பொழுது மனம் கலங்குகிறது. நம்பிக்கை, உண்மை, நேர்மை இவை மூன்றும் காதல், அன்பு, காமத்தைவிட ஒரு திருமணம் தழைத்தோங்க மிகவும் அவசியம் என்று அழுத்தமாகக் கூறுவேன்’ என்று பேசினார் நிர்மலா.

    ‘என்னம்மா, ஏதாவது தகவல் வந்ததா?’ வந்தனா அன்றிரவு சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள்.

    ‘இல்லையம்மா, எனக்கு நம்பிக்கை போயிடுச்சு’ அம்மா வருத்தப்பட்டாள்.

    மறுநாள் காலை, ‘அம்மா, இன்றைக்குஃபோன் வரும்... போதுமா?’ என்றாள். அம்மா உற்சாகமாக பதில்கூற நேரமில்லாமல், வண்டியில் பறந்தாள் வந்தனா.

    அன்று மாலை வீட்டிற்கு வரும்பொழுது அம்மாவும், அப்பாவும் மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றனர். ‘சீக்கிரம் குளிச்சிட்டு அலங்காரம் பண்ணிக்கோ, மாப்பிள்ளை வீட்டுல வராங்க.’

    அடுத்த அரைமணியில் வீடு ‘கலகல’வென்று இருந்தது. ‘என் பையனுக்கும் வந்தனாவைப் பிடிச்சிருக்கு. நாம இன்றைக்கே தட்டு மாற்றிக் கொள்ளலாம். அடுத்த வாரம் கல்யாணம். அப்புறம், நான்கு நாட்கள் கழித்து அமெரிக்காவிற்குப் பறக்கணும்’ மாப்பிள்ளையின் தந்தை கூறினார்.

    ‘எங்க வந்தனாவிற்கும் பிடிச்சிருக்கு அதனால...’

    ‘ஒரு நிமிஷம்... என் சம்மதத்திற்கு முன், நான் சில விஷயங்கள் பேசணும்...’ என்று வந்தனா கூற, எல்லோரும் திகைத்தனர்.

    ‘என்ன மிஸ்டர் மாதவன், நான் எப்படிப்பட்ட பெண் என்று நீங்க ஏற்பாடு செய்த ‘டிடெக்டிவ் ஏஜென்ஸி’ சொன்னாங்களா? உங்களுக்கு இது அசிங்கமா தெரியலை? யாரோ ஓர் ஆம்பிளையைப் பணம் கொடுத்து ராப்பகலா என் பின்னாடி சுத்த வெச்சு, நான் நல்லவளா இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் திருமணமா? ஒருவேளை அவன் நான் கெட்டவள்னு சொல்லியிருந்தா? நான் ஒரு பத்திரிகை நிருபர். எழுத்து என் உயிர் மூச்சு. இரவு பகல் பாராமல் ஊர்சுற்றும் வேலை. உங்களுக்குச் சந்தேகம் இருந்தா, என்னையே கேட்டிருக்கலாமே? அதுபோக, அவன் நாளை என்னை மிரட்டிப் பணம் பிடுங்கலாம் இல்லையா? எனக்கு என்ன பாதுகாப்பு? என் பெற்றோர் சரியாகத்தான் என் வாழ்க்கையை அமைப்பார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால் அந்த நம்பிக்கை உங்கள் பெற்றோர் மீது உங்களுக்கு இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு ஆதாரம். சந்தேக புத்தியுள்ள ஒருவருடன் வாழ எனக்கு விருப்பமில்லை. நீங்கள் போகலாம்.’ என்றாள் வந்தனா.

    பெற்றோர் திகைத்துப் பெருமூச்சு விட்டனர்...

    ‘என்னப்பா, நான் செய்தது தவறா?’ என்று கேட்டாள்.

    ‘இல்லைம்மா... என் பெண் சுதந்திரமாகச் சிந்தித்து முடிவெடுப்பவள் என்று தெரியவும், ரொம்பப் பெருமையாக இருக்கிறது." என்றார் வந்தனாவின் தந்தை.

    அம்மாவின் பார்வையிலும் ஆதரவு புலப்படுகிற மாதிரி இருந்தது.

    3. என் பெண்சாதி அஞ்சலை!

    ‘அம்மா என் தாலிக் கொடியைக் காணோம். ஆறு பவுன் தங்க செயின். எல்லா இடத்திலேயும் தேடிட்டேன். இந்த அஞ்சலைதான் எடுத்திருக்கணும்’ ரமா அழுது கொண்டே கூற, அடுத்தநொடி வீடு கலங்கிப் போய்விட்டது. அண்ணன் பாலு, அண்ணி சுசீலா, அம்மா, அப்பா என்று எல்லோரும் தேடித்தேடி அலுத்துவிட்டனர்.

    சுசீலா தை வெள்ளிக்கிழமை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினாள். ‘அம்பிகே தாயே! இது என்ன சோதனை? நீ என் வீட்டிற்கு வரும் வேளையில், எங்கள் வீட்டுப் பெண் ரமா இப்படி அழுவதுபோல் ஆகிவிட்டதே. அஞ்சலை நிச்சயமாகத் திருடவில்லை அவளும் ஒரு பெண் தானே’ மனம் உருக பிரார்த்தனை செய்யத் துவங்கினாள்.

    ‘ஏய், அஞ்சலை இங்கே வா! உனக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி செய்வே?’ அம்மாவின் குரலில் கோபம் கொப்பளித்தது.

    ‘ஏம்மா, ஒரு வாளி துணியை துவைக்காம மறந்து போனது தப்புதான். இதோ, இப்ப தோய்ச்சிடுறேன்’ என்றாள் அஞ்சலை.

    ‘அதில்லை அஞ்சலை. எங்க ரமாவோட தாலி செயினை நீதானே எடுத்தே. நாங்க போலீசுக்கு போக வேணாம்னு பார்க்கிறோம். மரியாதையா கொடுத்திடு’ அம்மா கடுமையாகக் கேட்டாள்.

    அதிர்ந்து போய் நின்றாள் அஞ்சலை. ‘அம்மா என் புருசன் ரிக்ஷா ஓட்டறவருதான். அவரு ஐயப்ப மாலை போட்டிருக்காரு. இந்த நேரத்துல போய் நான் இன்னொரு பெண்ணோட தாலியை எடுப்பேனா? நாங்க ஏழைங்கதான். அதுக்காக மாலை போட்ட இந்நேரத்திலே இன்னொரு பெண்ணோட தாலியை எடுப்பேனா? நல்லா கேட்டுங்குங்க, தாலியை திருடறவன் எவனும் நல்லா வாழ்ந்ததில்லை. என் பேட்டையிலே எவ்வளவு பார்த்திருக்கேன்? நீ பூசை செய்யிற அம்மனுக்கு இன்னா குறையோ அது பார்ப்பியா? சும்மா என்னை வந்து கேக்குற வேலையை வெச்சுக்காதே!’

    கற்பூரம் போன்று எரியும் கண்களும், வெற்றிலைபோட்டு சிவந்த உதடுகளும், கொப்பும் இடையில் செருகிய புடவையும் அஞ்சலையை மாரியாத்தாவாக மாற்றியது.

    ‘என் மாமியாருக்கு என்ன பதில் சொல்வேன்? என் வீட்டுக்காரர் கேட்டா என்ன செய்யிறது’ அழுது, புலம்பி ரமாவின் முகமும், கண்களும் வீங்கிக் கிடந்தன.

    பூஜை ஆரம்பமாயிற்று. ஆனால் வீட்டிலுள்ள யாருக்கும் மனம் பூஜையில் லயிக்கவில்லை.

    அவள் கணவர் பாஸ்கர் பூஜை ஆரம்பிக்கும் வேளையில் அவசரமாக உள்ளே வந்தார்.

    ‘என்ன ரமா இது? நேற்று பார்ட்டியிலிருந்து வந்த உடனே நகைகளைக் கழற்றி பீரோவில் என் துணிகளுக்கு அடியில் வைக்கறேன் பேர்வழி என்று என் ‘கோட்’ பாக்கெட்டுக்குள்ளே தாலி செயினை வெச்சிருக்கே. தாலியைக் கழட்டி வைக்கறது என்ன கெட்ட பழக்கம்? பொறுப்பில்லாம ஏன்தான் இப்படியிருக்கியோ?’ பாஸ்கர் கோபமாகக் கூறினார்.

    ரமா, ‘தெரியாம இப்படி அஞ்சலை பழி சொல்லிவிட்டேன். எப்படியாவது அவளிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1