Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gangai Nadhiyum Nile Nadhiyum
Gangai Nadhiyum Nile Nadhiyum
Gangai Nadhiyum Nile Nadhiyum
Ebook108 pages39 minutes

Gangai Nadhiyum Nile Nadhiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறு வயதிலிருந்தே எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள நதியைப் பற்றி என் தந்தை விவரமாகக் கூறுவார். பூகோள அமைப்புகளையும் வரைபடத்தில் காண்பிப்பார்.

புதுதில்லியில் பிறந்து வளர்ந்த எனக்கு யமுனை நதி மிகவும் பிடிக்கும் என்றாலும், கங்கை நதி மீது ஒருவித பிரமிப்பு உண்டு.

சில இடங்களில் ஆரவாரமாக ஓடி, சில இடங்களில் அமைதியாக நடந்து, ஒருசில இடங்களில் ‘ஹோ’ என்று ஆர்ப்பாட்டமாகக் குதிக்கும் கங்கையை மறக்க இயலாது.

உலகின் பல நாடுகளுக்குச் சென்றாலும், எகிப்தில் உள்ள நைல் நதி என்னைக் கவர்ந்தது. எகிப்து நாட்டில் ஏழு ஆண்டுகள் வாழும் ஓர் சந்தர்ப்பத்தில் நைல் நதியைப் பற்றி பல விஷயங்கள் அறிந்தேன்.

சிந்து நதி கலாசாரம், நைல் நதி கலாசாரம் இவை இரண்டும் மிகத் தொன்மையானது.

- காந்தலட்சுமி சந்திரமௌலி

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580125904505
Gangai Nadhiyum Nile Nadhiyum

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Gangai Nadhiyum Nile Nadhiyum

Related ebooks

Related categories

Reviews for Gangai Nadhiyum Nile Nadhiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gangai Nadhiyum Nile Nadhiyum - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    கங்கை நதியும் நைல் நதியும்

    Gangai Nadhiyum Nile Nadhiyum

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    http://pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இந்தியாவில் நதிகள்

    கங்கை நதி

    கங்கை நதியின் பாதைகள்

    கங்கை - ஒரு பூகோளப் பார்வை

    கங்கைநதிப் படுகை

    கங்கை - ஓர் ஆன்மீகப் பார்வை

    கங்கை - ஓர் சரித்திரப்பார்வை

    கங்கை - ஒரு சுற்றுலாத்தலம்

    கங்கை டெல்டா

    கங்கை பூஜை

    கங்கை நீர்

    கங்கையும் - சுற்றுப்புறச் சூழலும்

    கங்கை நதி பாதுகாப்பு இயக்கம்!

    நைல் நதி

    நைல்நதி கலாசாரம்

    நைல் நதியின் பண்டைய சிறப்புகள்

    நைல் நதியும் பாலைவனமும்

    நைல் நதியில் உள்ள பல அரிய முதலைகள்

    பண்டைய எகிப்திய விவசாயம்

    அஸ்வான் அணைக்கட்டு

    நைல் நீரும் உலக நாடுகளும்

    நைல் நதியின் புனிதயாத்திரை

    நைல்நதியும் சுற்றுலா பயணமும்

    முன்னுரை

    சிறு வயதிலிருந்தே எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள நதியைப் பற்றி என் தந்தை விவரமாகக் கூறுவார். பூகோள அமைப்புகளையும் வரைபடத்தில் காண்பிப்பார்.

    புதுதில்லியில் பிறந்து வளர்ந்த எனக்கு யமுனை நதி மிகவும் பிடிக்கும் என்றாலும், கங்கை நதி மீது ஒருவித பிரமிப்பு உண்டு.

    சில இடங்களில் ஆரவாரமாக ஓடி, சில இடங்களில் அமைதியாக நடந்து, ஒருசில இடங்களில் ‘ஹோ’ என்று ஆர்ப்பாட்டமாகக் குதிக்கும் கங்கையை மறக்க இயலாது.

    உலகின் பல நாடுகளுக்குச் சென்றாலும், எகிப்தில் உள்ள நைல் நதி என்னைக் கவர்ந்தது. எகிப்து நாட்டில் ஏழு ஆண்டுகள் வாழும் ஓர் சந்தர்ப்பத்தில் நைல் நதியைப் பற்றி பல விஷயங்கள் அறிந்தேன்.

    சிந்து நதி கலாசாரம், நைல் நதி கலாசாரம் இவை இரண்டும் மிகத் தொன்மையானது.

    காந்தலட்சுமி சந்திரமௌலி

    இந்தியாவில் நதிகள்

    இந்தியாவைப் போன்ற பெரிய நாடுகளில் இயற்கை அளித்த வரமான நதிகள் இல்லையெனில் வாழவே முடியாது என்பது உண்மை.

    உலகில் அனைத்து நதிகளின் ஆரம்பம் மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிதான் என்றாலும் பல நதிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து தோன்றுகின்றன.

    அனைத்து நதிகளும் காடு, மேடு, உயரம், பள்ளம் என்று ஓயாது ஓடி கடல்களில்தான் சங்கமிக்கின்றன என்பது உண்மை.

    உலகத்தில் உள்ள நதிகளில் புகழ்பெற்றது என்றால் நைல் நதி, தேம்ஸ் நதி, கங்கை நதி, அமேசான் நதி என்று கூறிக்கொண்டே போகலாம்.

    ஆனால் நதிகளை பெண் தெய்வங்களாக எண்ணி தொழுது, தினமும் பூஜை செய்யும் பழக்கம் இந்தியாவில் மட்டுமே உண்டு.

    இன்றும் கங்கை நதிக்கு ஆரத்தி பூஜை தினமும் வடநாட்டில் நடக்கின்றது.

    அதேபோன்று பதினெட்டாம் பெருக்கு என்றும் ஆடிப் பெருக்கு என்றும் பெயரிட்டு காவேரி நதியைத் தொழுவது இன்றும் தென்னாட்டில் வழக்கமாக உள்ளது.

    கங்கைக் கரையில் மஹாபாரதக் கதைகள் உருவாக, யமுனைக் கரையில் ஸ்ரீகிருஷ்ணரின் விளையாட்டுகள், சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தியில் ஸ்ரீராமரின் பிறப்பு என்று இதிகாசங்களும், புராணங்களும் நதிகளோடு இணைந்து கலந்தவை ஆகும்.

    உலகின் முதன்முதல் கலாசாரம் எனக்கூறப்படுவது Indu Valley Civilisation - சிந்து நதி பள்ளத்தாக்குகள் மொஹன்ஜொதாரோ - ஹரப்பா கலாசாரம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

    நைல் நதி பள்ளத்தாக்கு கலாசாரம் அதைப் போன்றே பழமையானது என்றும் கூறுகின்றனர்.

    இந்திய நாடு வடக்கே இமயம் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை, கிழக்கே கட்சி மாநிலம் முதல் மேற்கே வங்கக்கடல் வரை பரவியுள்ள மிகப்பெரிய நாடாகும்.

    இவற்றில் எண்ணற்ற கலாசாரங்களைக் கொண்ட மக்கள் எண்ணற்ற பாஷைகள், என்று வந்தாரை வாழவைக்கும் நாடு.

    எல்லாவற்றிற்கும் அடிப்படை நதிகள் ஆகும். எங்கெல்லாம் நதிகள் உள்ளனவோ அங்கெல்லாம் மக்கள் வாழ்ந்து பலவிதமான சரித்திரங்களைப் படைத்துள்ளனர்.

    நதிகளைப் பற்றி எழுதாத கவிஞர்களே கிடையாது எனலாம்.

    மகாகவி பாரதியார் - சிந்து நதியின் மிசை நிலவினிலே... எனும் கவிதையில் இந்திய நாட்டின் நதிகள், மாநிலங்கள், மொழிகளை இணைக்கும் வரிகளை எழுதியுள்ளார்.

    வேனிற் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலங்களில் வெள்ளமும் இந்தியாவிற்குப் புதிதல்ல.

    ஆனால் அவற்றினால் ஏற்படும் நஷ்டங்கள் மிக அதிகமாக உள்ளது. அதனால் அரசாங்கம் நதி நீர் இணைப்புத் திட்டங்கள், மற்றும் நதிகளில் கழிவுகள் சேராமல் பாதுகாப்பது, சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்துவத்தை மக்களுக்குக் கூறுதல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளது.

    சிந்து, கங்கை, யமுனை, செனாப், ஜீலம், பியாஸ், சட்லெஜ், பிரம்மபுத்ரா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, நர்மதா, தப்தி, மேகனா, ஹூக்ளி, அலக்நந்தா, பாகீரதி, பத்மா, சரஸ்வதி, மகாநதி, சோன், காக்ரா, பேத்வா, ரம்பால், கோசி, சப்த கோழி, தால் இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.

    நதிகள் நாம் உயிர் வாழத் தண்ணீர் தருகின்றது. அதனால் அவற்றை சுத்தமாக பராமரிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.

    கங்கை நதி

    இமயமலையில் பிறந்து இந்தியாவின் வடமாநிலங்களில் தவழ்ந்து வங்கக் கடலில் கலக்கும் நதிதான் கங்கை நதி.

    இமயமலையில் கங்கோத்ரியில் (உத்தர்கண்ட் மாநிலம்) 14,000 அடிகள் உயரத்தில் பிறக்கிறாள் கங்கை. இங்கு அலக்நந்தா மற்றும் தொலிகங்கா நதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்கிறாள். இந்த இடத்தின் பெயர் விஷ்ணுபிரயாக்.

    மந்தாகினி நதி கங்கையுடன் இணையும் இடம்

    Enjoying the preview?
    Page 1 of 1