Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal!
Sankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal!
Sankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal!
Ebook82 pages30 minutes

Sankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹிந்து பாரம்பரியத்தில் சக்தி வழிபாடு தனி இடத்தைப் பெறுகிறது. சக்தி வழிபாட்டிற்கென பாரதமெங்கும் குமரி முதல் இமயம் வரை தலங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான சில சக்தி ஸ்தலங்களைப் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன், குழந்தை வரம் தரும் திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை, இல்லறப் பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி, வெற்றி அருளும் கொல்லூர் மூகாம்பிகை, கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஶ்ரீ சாரதாம்பிகை, தீராத வியாதி தீர்க்கும் சோட்டாணிக்கரை பகவதி அம்மன், மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி விசாலாக்ஷி, வியாதிகள் தீர்த்து, குடும்ப நலம் ஓங்கச் செய்யும் விந்த்யாசலவாஸினீ, பற்றிய விவரங்களை இந்த நூலில் காணலாம். அத்தோடு 108 சக்தி பீடங்கள் பற்றிய பட்டியலையும் தேவி பாகவதம் குறிக்கும் தேவியின் ஸ்தானங்களையும் இந்த நூல் குறிப்பிடுகிறது. அனைத்து நலனையும் பெற தேவி வழிபாடு சிறந்தது என்பதால் இந்த தலங்களைப் பற்றி அறிந்து கொள்வது வளமான வாழ்க்கையை நோக்கி எடுத்து வைக்கும் முதல் படியாக அமையும். அனைவரும் படிப்பதோடு மற்றவருக்குப் பரிசாகவும் அளிக்க உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580151010913
Sankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal!

Read more from S. Nagarajan

Related to Sankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal!

Related ebooks

Reviews for Sankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சங்கடங்களைத் தீர்த்து சௌபாக்கியம் அளிக்கும் சக்தி ஸ்தலங்கள்!

    (குமரி முதல் விந்த்யாசலம் வரை)

    Sankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!

    2. குழந்தை வரம் தரும் திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை

    3. இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி

    4. வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை

    5. கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை

    6. தீராத வியாதி தீர்க்கும் சோட்டாணிக்கரை பகவதி அம்மன்!

    7. மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி - விசாலாக்ஷி

    8. வியாதிகள் தீர்த்து, குடும்ப நலம் ஓங்கச் செய்யும் விந்த்யாசலவாஸினீ

    9. வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!

    10. 108 சக்தி பீடங்கள்

    11. தேவியின் ஸ்தானங்கள் எவை?

    முன்னுரை

    ஹிந்து பாரம்பரியத்தில் சக்தி வழிபாடு தனி இடத்தைப் பெறுகிறது. இதனுடைய முக்கியத்துவத்தை, புராணங்களிலும், இதிஹாஸங்களிலும், சாஸ்திரங்களிலும் காணலாம்.

    சக்தி வழிபாட்டிற்கென பாரதமெங்கும் குமரி முதல் இமயம் வரை தலங்கள் உள்ளன. சக்தி பீடங்களில் தேவியின் திவ்ய அங்கங்கள் விழுந்த இடங்கள் முக்கிய சக்தி பீடங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

    இந்தத் தலங்களைப் பற்றி பல ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வந்துள்ளேன்.

    ஆன்மீகத் தலங்கள் அறுபதைப் பற்றி ஆலயம் அறிவோம் இரு பாகங்களில் தொகுத்துத் தந்துள்ளேன். இன்னும் பல புத்தகங்களில் விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம் பற்றியும் மற்றும் தல மகிமைகள் பற்றியும் பல ரகசிய விவரங்களைத் தந்துள்ளேன்.

    அதன் தொடர்ச்சியாக மலர்கிறது இந்த நூல்.

    ‘ஆடி மாதத்தில் ‘சக்தி தலங்கள்’ பற்றிய தொடர் ஒன்றை வெளியிடப் போகிறோம், தங்களின் பங்கிற்கு தலங்களைப் பற்றி எழுதுங்கள்’ என்று மாலைமலர் தலைமை நிர்வாகி திரு ரவீந்திரன் கூற அதனால் எழுந்தவை இந்த சக்தி தலங்கள் பற்றிய கட்டுரைகள். இவை 2023 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் (தமிழ் ஆடி மாதத்தில்) மாலைமலரில் வெளிவந்தவையாகும்.

    இவற்றை மாலைமலரில் வெளியிட்ட மாலைமலர் அதிபர் திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், மாலைமலர் CEO திரு ரவீந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கூறி என்னை ஊக்குவித்த திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட மாலைமலர் ஆசிரியக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    மாலைமலர் கட்டுரைகளோடு கூடுதல் கட்டுரைகளும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை tamilandvedas.com ப்ளாக்கில் வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    கட்டுரைகளைப் படித்து இன்னும் தொடருமாறு என்னை உற்சாகப்படுத்தி ஊக்குவித்த அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

    இந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் டாக்டர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    என்னுடைய இன்னும் பல ஆன்மீக நூல்களையும் தல வரலாறுகள் பற்றிய நூல்களையும் புஸ்தகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அன்பர்கள் நிறுவனத்தை அணுகி விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

    அன்பர்கள் அனைவரும் சக்தியின் அருள் பெற்று ஆரோக்கியத்துடன் கூடிய நல்வாழ்வைப் பெற எல்லாம் வல்ல மீனாட்சி அம்மனைப் பிரார்த்திக்கிறேன்.

    நன்றி.

    13-3-2024

    ச. நாகராஜன்

    பங்களூரு

    1. திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!

    நம்பினோர் கெடுவதில்லை

    நான்கு மறைத் தீர்ப்பு

    அம்பிகையைச் சரண் புகுந்தால்

    அதிக வரம் பெறலாம் - பாரதியார்

    மூன்று கடல் சங்கமத்தில் ஒரு தலம்

    நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை என்று மஹாகவி பாரதியாரால் போற்றப்படும் குமரி எல்லையில் கோவில் கொண்டு தேவி அருள் பாலிக்கும் திருத்தலமே கன்யாகுமாரி...

    பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

    சக்திபீடங்களில் முக்கியமானது

    இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது.

    பிரஜாபதி தட்சனுக்கு மகளாக அவதரித்த தாட்சாயிணி எனப்படும் சதி தேவி தனது தந்தை புரியும்

    Enjoying the preview?
    Page 1 of 1