Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sri Varahi Malai
Sri Varahi Malai
Sri Varahi Malai
Ebook190 pages39 minutes

Sri Varahi Malai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“சக்தி வழிபாடென்பது முக்திக்கான ஒரு யுக்தி மட்டுமல்ல; வாழுகின்ற வாழ்க்கையைத் தெளிவான புத்தியுடன் நடத்துவதற்கும் தான். அன்னையை பக்தி அன்போடு ஒன்றி வழிபடுபவர்கள், அன்றாடத் தேவைகளுக்கு கூட ஒருபோதும் திண்டாடத் தேவையில்லை. அன்னையின் அருளைப் பெற இப்புத்தகத்திலுள்ள துதிமாலைகள் துணைபுரிகின்றன.
“மாலை” என்பது சிற்றிலக்கியப் பிரபந்த வகைதனில் ஒன்று. இந்நூலில் மூன்று மாலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று நூல்களும் மூகாம்பிகை ரூபமான பரதேவதை அம்பாளின் அருமை, பெருமைகளை விவரிக்கின்றன. மூன்று மாலைகளும் படிப்பவருக்கு முப்பெருஞ் செல்வங்களான வீரத்தையும் (வாராகி மாலை), பொருளையும் (பராபரை மாலை), கல்வி ஞானத்தையும் (ஆனந்த நாயகி மாலை) வழங்குகின்றன.

Languageதமிழ்
Release dateJun 24, 2022
ISBN9788179508800
Sri Varahi Malai

Related to Sri Varahi Malai

Related ebooks

Related categories

Reviews for Sri Varahi Malai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sri Varahi Malai - Venba Hari

    ஸ்ரீ வாராகி மாலை

    Title: Sri Varahi Malai

    Author: Venba Hari

    Language: Tamil

    Ebook Created & Published by:

    GIRI

    No.372/1, Mangadu Pattur Koot Road,

    Mangadu, Chennai - 600122.

    Phone: +91 44 66 93 93 93 (Multiple Lines),

    +91 44 2679 3190, 3100

    www.giri.in | sales@giri.in

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    வீரைக் கவிராஜ பண்டிதர் வரலாறு

    வாராகி வழிபாடு

    பாதுகாக்கும் பதினான்கு மந்திரங்கள்

    அபிராமி அந்தாதியில் வாராகி

    ஸ்ரீ வாராகி மாலை

    விநாயகர் துதி

    ஸ்ரீ வாராஹி தேவி துதி

    1. வசீகரணம் (தியானம்)

    2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)

    3. பகை தடுப்பு (பிரதாபம்)

    4. மயக்கு (தண்டினி தியானம்)

    5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)

    6. உச்சாடனம் (ரோகஹரம்)

    7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

    8. பெரு வசியம் (திரிகாலஞானம்)

    9. பகை முடிப்பு (வித்வேஷணம்)

    10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)

    11. தேவி வருகை (பூதபந்தனம்)

    12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)

    13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)

    14. மந்திரபூஜை (முனிமாரணம்)

    15. வாராகி அமர்தல் (மூர்த்தி தியானம்)

    16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)

    17. வாழ்த்துதல் (உலக மாரணம்)

    18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)

    19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

    20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

    21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

    22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

    23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)

    24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

    25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

    26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)

    27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

    28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)

    29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

    30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

    31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)

    32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)

    வாராகி மாலையிலிருந்து போற்றி நாமங்கள்

    ஸ்ரீ ஆனந்த நாயகி மாலை

    ஸ்ரீ ஆனந்த நாயகி மாலை

    வீரை ஆளவந்தார்

    இந்நூலாசிரியர் மரபு பாடல்

    ஞான வாஶிஷ்டம் உதாரணப் பாடல்

    வீரை அம்பிகாபதி

    ஸ்ரீ பராபரை மாலை

    கட்டளைக் கலித்துறை

    விநாயகர் காப்பு

    வேம்பத்தூர் தமிழ்ச் சங்கப்புலவர்களைப் பற்றி கூறும் பாடல்கள்

    ஸ்ரீ வாராஹி யந்த்ரம்

    முன்னுரை

    அம்பிகையின் அருளொளிக் கீற்று உங்கள் மேல் விழுவதால் தான், இந்த புத்தகம் உங்கள் கைகளில் தவழ்கின்றது. உண்மைதான். பூர்வ ஜென்ம புண்ணிய பலன்களே தான், அம்பிகைக்கு பூஜை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைத் தருகின்றது. சக்தி வழிபாடென்பது முக்திக்கான ஒரு யுக்தி மட்டுமல்ல; வாழுகின்ற வாழ்க்கையைத் தெளிவான புத்தியுடன் நடத்துவதற்கும் தான். அன்னையை பக்தி அன்போடு ஒன்றி வழிபடுபவர்கள், அன்றாடத் தேவைகளுக்கு கூட ஒருபோதும் திண்டாடத் தேவையில்லை. அன்னையின் அருளைப் பெற இப்புத்தகத்திலுள்ள துதிமாலைகள் துணைபுரிகின்றன.

    மாலை என்பது சிற்றிலக்கியப் பிரபந்த வகைதனில் ஒன்று, தமிழ் மொழியில்

    மரபு ரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இந்நூலில் மூன்று மாலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று நூல்களும் மூகாம்பிகை ரூபமான பரதேவதை அம்பாளின் அருமை, பெருமைகளை விவரிக்கின்றன. மூன்று மாலைகளும் படிப்பவருக்கு முப்பெருஞ் செல்வங்களான வீரத்தையும் (வாராகி மாலை), பொருளையும் (பராபரை மாலை), கல்வி ஞானத்தையும் (ஆனந்த நாயகி மாலை) வழங்குகின்றன.

    • • • • •

    என்னுரை

    எதற்கும் காரணமாயிருக்கும் அன்னை பராசக்தியே, இந்நூலும் வெளிவர பூரணமான அருளை தந்தாள். குருவின் கருணையும் கலந்ததினால் இது வாராஹி வைபவமாகி விட்டது.

    ஆதிசங்கரர் இயற்றிய ஸெளந்தர்யலஹரீயை முதன் முதலில் செந்தமிழில் பாடிய வேம்பத்தூர் வீரைக் கவிராஜ பண்டிதரின் வழித்தோன்றலும், இராமநாதபுர சேதுபதி சமஸ்தானத்தில் அவைப் புலவராக அலங்கரித்த வேம்பத்தூர் சிலேடைப் புலி பிச்சுவையரின் எள்ளுப் பேரனாகிய ஹரிஹரசுப்பிரமணிய பாரதி (வெண்பாஹரி) எனும் நான் இந்நூலை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    வாராஹி மாலைக்கு உரை எழுதிக் கொடுத்த மதுரை மீனாட்சி அன்னையின் முதல் சீடரான பரமகுரு ஸ்ரீ வீரைக் கவிராஜ பண்டிதர் (மீனாட்சி அம்பானந்த் நாத்) பீடத்தின், குரு-சிஷ்ய பரம்பரையில் தற்போது 38-வது குருவாக பக்தி ஞானத்தை பரப்பிக் கொண்டிருக்கும் ஸ்ரீ சற்குரு ஆத்மானந்த் நாத் எனும் ரமேஷ் குரு அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் புத்தகத்தை அழகாக வடிவமைத்து, அற்புதமாக அச்சிட்டு வெளியிடும் கிரி பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வெண்பாஹரி

    • • • • •

    வீரைக் கவிராஜ பண்டிதர் வரலாறு

    கி.பி. 1530ம் ஆண்டில் தென்னிந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேம்பற்றூர் (தற்போது சிவகங்கை மாவட்டம்-வேம்பத்தூர்) என்ற புராதன கிராமத்தில் சுந்தரமய்யர் தோன்றினார். இவர் இயற்பெயருக்கு ஏற்றாற் போல் மிக அழகுடன் பிறந்தார். சோழிய பிராமண குலத்திலே, தனஞ்செய கோத்திரத்திலே இவர் அவதரித்தார். இவரின் சிறப்புப் பெயர் வீரைக் கவிராஜ பண்டிதர் ஆகும். சோழ மன்னர்கள் ஆண்ட வீரசோழன் (பரமக்குடி/ கமுதி அருகிலுள்ள) என்ற ஊருக்கு பின்னாளில் சென்று வசித்து வந்ததால் இப்பெயர் பெற்றார். சோழ மன்னரான குலோத்துங்கனின் படைகளில் குதிரைப்படைக்குத் தலைமை வகித்தார் மற்றும் அரசவைப் புலவராகவும் இருந்து வந்தார். அரசவையில் அனைவரும் இவரை சுந்தரேசர் என்றழைத்தனர்,

    இளம் வயதில் குருகுலம் சென்று அனைத்து விதமான வேத, சாத்திர கலைகளைக் கற்றுணர்ந்தார். இவரின் குருநாதர் இவருக்கு தேவியின் திருவருள் மந்திரத்தை உரைத்து அதனையே உருவேற்றுமாறு உபதேசித்தார். அம்பிகையின் அருமை, பெருமைகளையும், அவள் நிகழ்த்திய அதிசயங்களையும் அறியச் செய்தார். அதனால், அம்பாளின் மீது மனம் ஈர்க்கப்பட்ட சுந்தரமய்யர் தன் ஊரிலேயே கோவில் கொண்டிருக்கும் கைலாசநாதர் உடனுறை ஆவுடை நாயகியை தினமும் மனமுருகி வழிபட்டார். அன்னை மனம் மகிழ்ந்து தனது கடைக்கண் அருட்பார்வையை அச்சிறுவன் மீது பொழிந்தாள். அந்த அருள் மழையால், சிறு வயதிலேயே கவிராஜர் பெரும் பொருள் நிறைந்த கவிதைகளை புனைந்தார்.

    தனது இளமைப் பருவத்தில் தன்னூரின் அருகிலுள்ள மானாமதுரையில் (வானர வீர மதுரை) கோவில் கொண்ட ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீசோமநாத சுவாமி மீது அளவற்ற பக்தி கொண்டு, சிவசக்தியின் அர்த்தநாரீஸ்வர ரூபத்தை தியானித்து ஆனந்த நாயகமே என முடியும் ஆனந்தநாயகி மாலை யென்ற பதிகத்தைப் பாடினார். தனது வீட்டினிலேயே மதுரை மீனாட்சி அம்மன் சிறு சிலையை வைத்து அனுதினமும் பூஜித்து வந்தார்.

    ஒரு நாள் பண்டிதரின் கனவில் தோன்றிய அம்பிகை, உனது தமிழின் சொல்நயம் மற்றும் பொருட்சுவை என்னை மிகவும் மகிழ்விக்கின்றது. நீ எனக்காக வடமொழியில் உள்ள சௌந்தரிய லஹரியை தமிழ் மொழியில் இயற்றிப் பாடு என்று ஆணையிட்டாள். அன்னையின் ஆணையால் அளவற்ற மகிழ்ச்சியுற்ற கவிராஜ பண்டிதர் மற்றொரு கவிச்சக்கரவர்த்தியான பிரமாதராயனின் உதவி கொண்டு, தனது தமிழ்ப்புலமையால் வடமொழிக்கு நிகரான பாடல்களைச் செந்தமிழில் பாடினார்.

    தன் உரிய வயதில் திருமணம் புரிந்து கொண்ட இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். தனக்குப் பிறந்த மகளுக்கு அம்பிகை மீதுள்ள அளவற்ற அன்பினால் மீனாக்ஷி’ என்றே பெயர் சூட்டினார். இவரது மூத்த மகன் தான் ஞான வாசிட்டத்தை தமிழிற் பாடிய வீரை ஆளவந்தான் மாதவ பட்டர். இரண்டாவது மகன் பராபரை மாலை" பாடிய வீரை அம்பிகாபதி ஆவார்.

    சில காலங்களுக்கு பின், கவிராஜ பண்டிதருக்குக் காசி யாத்திரை போக வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அப்போது தன் மகள் மீனாட்சியைத் தனது தங்கையிடம் ஒப்படைத்து விட்டுக் காசிக்குப் புறப்படத் தயாரானார். அவரது மகளோ தானும் வருவதாக அடம் பிடித்தாள். தனது சிறுவயது மகளைப் பார்த்து காசி யாத்திரை பயணம் மிகக் கடினமானது நீ வர வேண்டாமென அறிவுரை கூறிவிட்டுக் கிளம்பினார்.

    தனது ஊரின் எல்லையைத் தாண்டும் போது வெயிலின் கடுமை தாங்காமல் ஒரு மரத்தடி

    Enjoying the preview?
    Page 1 of 1