Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Isai Vazhiye Iraiyarul Petravargal
Isai Vazhiye Iraiyarul Petravargal
Isai Vazhiye Iraiyarul Petravargal
Ebook527 pages3 hours

Isai Vazhiye Iraiyarul Petravargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பக்தி மணம் இல்லாத இசை இயற்கையான மணம் இல்லாத மலரைப் போன்றது!" என்று கூறினார் மூதறிஞர் ராஜாஜி. பக்தியைப் பரப்ப பல வழிகள் இருந்தும், இசையை முக்கியமான துணையாக மேற்கொண்டு, இறைவன் அருளை நாடிப் புறப்பட்டார்கள். பாரத நாட்டில் வாழ்ந்த பக்த சிரோன்மணிகள் பலர். தன்னை மறந்து பஜனையின் பேரின்பத்தில் திளைத்த ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு முதல், எளிமையாகக் காவேரிக்கரையில் அமர்ந்து கீர்த்தனைகள் பாடிய தியாகராஜ சுவாமிகள் வரை, அந்தப் பக்தர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் கிடைத்தது. அரச குலத்தில் பிறந்த மீராபாயிலிருந்து, மண்பாண்டம் செய்து விற்ற கோராகும்பர் வரையில், பக்தியில் திளைத்த பலரும் பரமனின் லீலைகளுக்கு ஆளாகிப் பெரும் பேறு பெற்றார்கள்.

நாட்டில் இன்று மொழி என்பது மக்களைப் பிரித்து வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தப் பக்தர்கள் பக்திமணம் கமழும் இசையின் மூலம் நாட்டு மக்களை இணைத்தார்கள். மீராபாயின் இந்தி பஜனை கீதங்களும், ஜயதேவரின் சம்ஸ்கிருதப் பாடல்களும், ஆண்டாளின் தீந்தமிழ்த் திருப்பாவையும், புரந்தரதாசரின் கன்னடக் கிருதிகளும், மொழியின் எல்லைகளைக் கடந்து அனைவரையும் ஈர்த்து ஒன்றுபடுத்தின.

மகாராஷ்டிர மொழியில் இராமாயணம் பாடினார் ஏகநாதர். இந்தி மொழியில் இராமாயணத்தைப் பாடல்களாக இயற்றினார் துளசிதாசர். பட்டாத்ரி பாகவதத்தைச் சமஸ்கிருதத்தில் பாடினார். பூந்தானம் அதையே மலையாள மொழியில் பாடினார். சிவபிரானின் பக்தராக இருந்து ராதாகிருஷ்ண தத்துவத்தைப் பஜனைப் பாடல்களில் பாடிச் சைவ வைணவச் சமய ஒற்றுமைக்கு வழி வகுத்தார் மகான் வித்யாபதி. இறைவனின் அருள் பெருகும்போது பிரிவினைகளுக்கு இடம் ஏது?

குழந்தை நாமதேவனுக்காக நைவேத்யத்தை உண்ண வந்தான் வாசுதேவன். கண்ணனையே கைக்குழந்தையாக எடுத்துப்பாடி மகிழ்ந்தாள் கருமபாய். இறைவன் நண்பனாகவும், சேவகனாகவும், காவலனாகவும், காதலனாகவும் வந்து பக்தர்களுக்குக் கைகொடுத்த கதைகள் அநேகம்.

புண்ணிய பாரத பூமியில் பக்தி இசை மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் பாடுபட்ட பக்தர்களின் பாத மலர்களுக்கு இந்த எளிய நூலைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் அவர்களுடைய நல்லாசி இந்த நாட்டின் பெருமையைக் காப்பாற்றட்டும்.

- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580127504653
Isai Vazhiye Iraiyarul Petravargal

Read more from Lakshmi Subramaniam

Related to Isai Vazhiye Iraiyarul Petravargal

Related ebooks

Reviews for Isai Vazhiye Iraiyarul Petravargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Isai Vazhiye Iraiyarul Petravargal - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    இசை வழியே இறையருள் பெற்றவர்கள்

    Isai Vazhiye Iraiyarul Petravargal

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வைரம் தந்த ஞானம்

    நாடு முழுவதும் நகர சங்கீர்த்தனம்...!

    ஏழைகளின் துயர் துடைத்த தொண்டன்

    வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேளீர்...!

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!

    நாதோபாசனையால் நாதனைக் கண்டவர்!

    இராம நாமமே துளசிப்பிரசாதம்!

    பொற்காப்பு அணிவித்த கைகளுக்கு இரும்புக் காப்பா?

    மண்ணை மிதித்த மாதவன் புகழ்பாடி...

    பெய்யெனப் பெய்யும் மழை!

    கண்ணன் முகம் மறந்து போனால்...

    எங்கிருந்தோ வந்தான்!

    இராம நாமமே தியான மந்திரம்...!

    பக்தரைக் காண முகம் திரும்பிய மாதவன்!

    கண்ணனின் சிரமீது ராதையின் திருவடிகள்!

    மௌனத்தில் மூழ்கிய நாதயோகி!

    என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!

    மகளுக்காக மாவரைத்த மாதவன் புகழ்பாடி...

    குலப்பெருமையை உயர்த்திய கோமகன்

    பூவுலகில் வைகுந்தம் காட்டிய பண்டரிநாதன்!

    அனுமனின் அம்சமாக அவதரித்த ராமதாசர்!

    கண்பார்வை அளித்த கண்ணன் அருளை நாடி...

    பொற்கொல்லனாய் வந்த பரந்தாமன்!

    அடியவர்க்காகத் தூதுபோன அரங்கன்!

    பாவை உருவம் ஏற்ற பாண்டுரங்கன்!

    நாராயணீயம் பாடிய நாராயண பட்டத்திரி

    பரமனைப் பாடிய பஸவேசுவரர்!

    வெறும் கல் வைரமாயிற்று!

    ஈசனுக்கே அம்மையானார்!

    பாகவதம் அருளிய போதனா!

    தொண்டனுக்காகத் துலாபாரம் ஏற்ற துவாரகாநாதன்!

    நந்த குமாரா ராதேசியாம்...

    பொன் அரை ஞாணில் புலப்பட்ட ஞானம்!

    கண்ணன் என் கைக்குழந்தை

    மணிவண்ணன் சேவைக்கு மனைவியை ஈந்த மகான்!

    ஆமை உருவில் வந்து காப்பாற்றிய ஆண்டவன்!

    கை கொடுத்தார் ஜகந்நாதர்!

    பூமாலையும் பாமாலையும் தொடுத்துத் தொழுத தொண்டர்!

    காத்திருந்தான் கடல்மேக வண்ணன்

    கங்கைக் கரையில் காளிமாதாவின் உபாசனை!

    குடிசையில் விருந்து உண்டான் கோவிந்தன்!

    அருமருந்தான ஆடல் வல்லான்!

    அண்ணாமலையார் கோபுரத்தே அருள் பெற்ற அருணகிரி!

    முன்னுரை

    பக்தி மணம் இல்லாத இசை இயற்கையான மணம் இல்லாத மலரைப் போன்றது! என்று கூறினார் மூதறிஞர் ராஜாஜி. பக்தியைப் பரப்ப பல வழிகள் இருந்தும், இசையை முக்கியமான துணையாக மேற்கொண்டு, இறைவன் அருளை நாடிப் புறப்பட்டார்கள். பாரத நாட்டில் வாழ்ந்த பக்த சிரோன்மணிகள் பலர்.

    தன்னை மறந்து பஜனையின் பேரின்பத்தில் திளைத்த ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு முதல், எளிமையாகக் காவேரிக்கரையில் அமர்ந்து கீர்த்தனைகள் பாடிய தியாகராஜ சுவாமிகள் வரை, அந்தப் பக்தர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் கிடைத்தது. அரச குலத்தில் பிறந்த மீராபாயிலிருந்து, மண்பாண்டம் செய்து விற்ற கோராகும்பர் வரையில், பக்தியில் திளைத்த பலரும் பரமனின் லீலைகளுக்கு ஆளாகிப் பெரும் பேறு பெற்றார்கள்.

    நாட்டில் இன்று மொழி என்பது மக்களைப் பிரித்து வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தப் பக்தர்கள் பக்திமணம் கமழும் இசையின் மூலம் நாட்டு மக்களை இணைத்தார்கள். மீராபாயின் இந்தி பஜனை கீதங்களும், ஜயதேவரின் சம்ஸ்கிருதப் பாடல்களும், ஆண்டாளின் தீந்தமிழ்த் திருப்பாவையும், புரந்தரதாசரின் கன்னடக் கிருதிகளும், மொழியின் எல்லைகளைக் கடந்து அனைவரையும் ஈர்த்து ஒன்றுபடுத்தின.

    மகாராஷ்டிர மொழியில் இராமாயணம் பாடினார் ஏகநாதர். இந்தி மொழியில் இராமாயணத்தைப் பாடல்களாக இயற்றினார் துளசிதாசர். பட்டாத்ரி பாகவதத்தைச் சமஸ்கிருதத்தில் பாடினார். பூந்தானம் அதையே மலையாள மொழியில் பாடினார். சிவபிரானின் பக்தராக இருந்து ராதாகிருஷ்ண தத்துவத்தைப் பஜனைப் பாடல்களில் பாடிச் சைவ வைணவச் சமய ஒற்றுமைக்கு வழி வகுத்தார் மகான் வித்யாபதி. இறைவனின் அருள் பெருகும்போது பிரிவினைகளுக்கு இடம் ஏது?

    குழந்தை நாமதேவனுக்காக நைவேத்யத்தை உண்ண வந்தான் வாசுதேவன். கண்ணனையே கைக்குழந்தையாக எடுத்துப்பாடி மகிழ்ந்தாள் கருமபாய். இறைவன் நண்பனாகவும், சேவகனாகவும், காவலனாகவும், காதலனாகவும் வந்து பக்தர்களுக்குக் கைகொடுத்த கதைகள் அநேகம்.

    புண்ணிய பாரத பூமியில் பக்தி இசை மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் பாடுபட்ட பக்தர்களின் பாத மலர்களுக்கு இந்த எளிய நூலைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் அவர்களுடைய நல்லாசி இந்த நாட்டின் பெருமையைக் காப்பாற்றட்டும்.

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    *****

    வைரம் தந்த ஞானம்

    சரஸ்வதி வாசற் கதவைத் திறந்தாள். வெளியே அந்த வயதான அந்தணர் நின்று கொண்டிருந்தார். அவர் என்ன கேட்கப் போகிறார் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் உணர்ச்சி பெருகிப் பேச்சு வராமல் நின்று விட்டது.

    அம்மா! கலங்க வேண்டாம். நான் உங்களிடம் பணம் கேட்க வரவில்லை. உங்கள் கணவர் உங்களிடம் பணம் எதையும் கொடுக்கமாட்டார் என்பது எனக்குத் தெரியும். நான் எனக்கு இன்று கிடைத்த காசுகள் சிலவற்றை உங்களிடம் காட்டிவிட்டுப் போகவே வந்தேன். இவற்றைப் பாருங்கள்! என்று பையை எடுத்து முடிச்சை அவிழ்த்துக் கொட்டினார் அந்தப் பெரியவர். காசுகள் ‘கலகல'வென்று விழுந்த சத்தம் சரஸ்வதியைப் பார்த்துச் சிரிப்பதைப் போலத் தோன்றிற்று. அவ்வளவும் செல்லாத காசுகள்!

    உங்களுக்கு இவை எப்படிக் கிடைத்தன? என்று கேட்டாள் சரஸ்வதி

    சீனுவாசர் மனமிரங்கிக் கொடுத்த காசுகள் தாம் இவை! இவற்றை வைத்துக் கொண்டுதான் நான் என் மகனுக்கு உபநயனம் செய்வித்தாக வேண்டும் என்றார் அவர்.

    சரஸ்வதியின் கண்களில் நீர் படலமாடிற்று. அவளுக்கு அந்தப் பிராமணர் தன்னுடைய கணவரிடம் தொடர்ந்து வந்து பண உதவி கேட்டது தெரியும் பல முறை ஜன்னல் கதவை லேசாகத் திறந்து, அவர் தன்னுடைய கணவரின் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவதை அவள் பார்த்திருக்கிறாள். கடைசியில் அவளுடைய கணவர் மனமிரங்கி ஒரு முடிப்பில் செல்லாத காசுகளைப் போட்டுக் கொடுத்தனுப்பி இருக்கிறார்.

    இவை எதுவுமே செல்லாது சுவாமி இவற்றை வைத்துக் கொண்டு நீர் எப்படி உபநயனம் நடத்தப் போகிறீர்? என்று கேட்டாள் சரஸ்வதி.

    செல்ல வேண்டிய இடத்துக்குத்தான் நான் இப்போது வந்திருக்கிறேன் அம்மணி! மெய்ப்பொருளை நாடிப் புரிந்து கொள்ள உதவுவதுதான் உபநயனம், ஞானக் கண்ணைத் திறந்து விடுவதற்காகச் செய்விப்பது தான் உபநயனம். ஆனால் உங்கள் கணவர் பொய்யான பொருளைக் கொடுத்து என்னை ஏமாற்ற நினைக்கிறார் பார்த்தீர்களா? அதைக் காட்டிவிட்டுப் போகவே வந்தேன்! என்று தலையைக் குனிந்து கொண்டார் அந்தப் பெரியவர்.

    எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது பெரியவரே! என்னால் மட்டும் உங்களுக்கு உதவ முடியுமானால்... என்று தயங்கியபடி நின்றாள் சரஸ்வதி.

    மனமிருந்தால் உதவி செய்யலாம். ஏன்? அந்த மூக்குத்தியை எனக்குக் கொடுங்களேன். அதை விற்று நான் உபநயனம் நடத்தி விடுவேன் என்றார் அவர்.

    சரஸ்வதி கொஞ்சம் தயங்கினாள்.

    மனமில்லை என்றால் கொடுக்க வேண்டாம் அம்மணி... என்று பின்வாங்கினார் அந்தப் பிராமணர்.

    உங்களுக்கு இல்லை என்று சொல்வேனா? அதுவும் இந்த நல்ல காரியத்துக்கு இல்லை என்று சொல்வேனா? எடுத்துக் கொள்ளுங்கள்! என்று கழற்றிக் கொடுத்துவிட்டாள் சரஸ்வதி.

    மூக்குத்தியை அடகு வைத்துப் பணம் வாங்க வேண்டும் அந்தப் பிராமணருக்கு அப்படிச் செய்யக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. நண்பர் மூலம் கொடுத்தனுப்பினார். ஒன்றும் தெரியாத அப்பாவியான அந்த நண்பர் அதைச் சீனுவாசர் கடைக்கே கொண்டு போய்க் கொடுத்தார். அந்த மூக்குத்தியைக் கையால் வாங்கிப் பார்த்தவர் பிரமித்துப் போனார். அவருடைய மனைவியின் மூக்குத்தி அல்லவா அது?

    விலைமதிப்புப் போட ஒரு நாளாகும். நாளைக்குப் பணம் தருகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு, மூக்குத்தியைப் பெட்டியில் வைத்துப் பத்திரமாகப் பூட்டி விட்டுக் கிளம்பினார் சீனுவாசர். நேரே வீட்டுக்குப் போய் சாப்பிட உட்கார்ந்தார். பரிமாற வந்த மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். அங்கே மூக்குத்தியைக் காணவில்லை! அவருடைய ஊகம் உண்மைதான்...

    சரஸ்வதி உன்னுடைய மூக்குத்தி எங்கே? என்று கேட்டார் சீனுவாசர். அந்தக் குரலில் இருந்த வேகத்தைக் கண்டு அவள் கலங்கிப் போனாள்.

    காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது எங்கேயோ கழற்றி வைத்தேன். வைத்த இடம் மறந்து போய்விட்டது. தேடிக் கொண்டிருக்கிறேன்... என்றாள் தயங்கியபடி.

    தேடி எடுத்துக் கொண்டு வா! அதற்குப் பிறகுதான் நான் கடைக்குப் போகப் போகிறேன் என்றார் சீனுவாசர்.

    அவள் கதிகலங்கிப் போனாள். இனி அவளால் தப்ப முடியாது. கணவருக்கு உண்மை தெரிந்தால் நிச்சயமாக அடித்தே கொன்று போட்டு விடுவார். அதை விடத் தானே தற்கொலை செய்து கொள்வதே மேல் பூஜை அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். கை வளையலிலிருந்து வைரத்தைப் பொடி செய்து விழுங்க நினைத்தாள். ஏதோ ஒரு சக்தி அவளைத் தடுப்பதுபோல் இருந்தது. மயங்கி விழுந்து விட்டாள்.

    நினைவு தெரிந்த போது மூக்கில் அந்த மூக்குத்தி மின்னிற்று. ஓடிப் போய் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். உண்மைதான்! மூக்கில் மின்னியது. அவளுடைய மூக்குத்தியேதான்! எப்படி அது அங்கே வந்தது? அவளுக்குப் புரியவில்லை...

    ‘விட்டலா! பாண்டுரங்க விட்டலா! உன்னுடைய கருணையினால் வந்தது தானப்பா இது. இப்படி நீ அருள் செய்ய நான் என்ன தவம் செய்தேன்?' என்று மனத்துக்குள் புலம்பியபடி மூக்குத்தியைக் கையில் கழற்றி எடுத்துக் கொண்டு போய்க் கணவனிடம் நீட்டினாள் சரஸ்வதி.

    சீனுவாசருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே ஆளை அனுப்பிக் கடையில் பெட்டியில் பூட்டி வைத்திருந்த மூக்குத்தியைக் கொண்டு வரச் சொன்னார். அதுவும் வந்து சேர்ந்தது. அப்படியானால் இந்த மூக்குத்தி எப்படி வந்தது?

    சரஸ்வதி? இது என்ன மாயம்? என்னிடம் உண்மையைச் சொல்லமாட்டாயா? என்று கேட்டார் சீனுவாசர். கண்ணீர்விட்டபடியே நடந்ததைச் சொன்னாள். அந்த அம்மணி, பாண்டுரங்கன் அருளால் இரண்டாவது மூக்குத்தி கிடைத்ததையும் சொல்லி அவர் கையில் கொடுத்தாள்.

    அதைக் கையில் வாங்கிக் கொண்டதும் அவருக்குத் தன்னுடைய நினைவு மறந்துது. அதுவரை அவர் கொண்டிருந்த பொருளாசை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. விட்டலா! விட்டலா! இது வரையில் என்ன வாழ்வு வாழ்ந்துவிட்டேன்? இதை எனக்கு உணர்த்தவே இந்த நாடகம் ஆடினாயா? இனி எனக்கு இந்தப் பொருளாசை பற்றிய வாழ்க்கை வேண்டாம். உன்னுடைய அருள் தான் வேண்டும். என்று சொல்லி அழுதபடி வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.

    பாண்டுரங்கன் அருள் அவருடைய மனத்தில் நிறைந்தது. தன்னுடைய பக்தியைப் பாடல்களாகப் பொழிய ஆரம்பித்தார் சீனுவாசர். புரந்தரருக்குத் தாசன் ஆனார். புரந்தரதாசர் என்று பெயரும் வந்துவிட்டது! விஜய நகரத்தில் இருந்த ஆச்சாரியார் வியாசராயர் அவரைச் சீடராக ஏற்றுக்கொண்டார்.

    அப்பா! ஸ்வரமூக்குத்தி உனக்கு ஞானம் தந்ததென்றா நினைக்கிறாய்? வைரமாக இருந்த உன்னை வெளியே எடுத்து வைத்து ஒளிவீசச் செய்ய வேண்டும் என்று விட்டலன் செய்த லீலையப்பா அது! என்று சொல்லி உருகிப் போனார் வியாசராயர்.

    புரந்தரதாசர் பகவான் மீது பாடல்களை இயற்ற ஆரம்பித்தார். ஆயிரக் கணக்கில் அமுதமயமான கீர்த்தனைகள் பிறந்தன. ஒவ்வொரு தலமாகத் தீர்த்த யாத்திரை சென்றார் அவர். அவருடைய சீடர் அப்பண்ணாவும் உடன் சென்றார்.

    திருப்பதி... உடுப்பி... பண்டரிபுரம்...

    அன்று நிறைய நடந்ததால் சோர்ந்து உறங்கிவிட்டார் புரந்தரதாசர். அவருடைய காலைப் பிடித்து விட்டு, அவர் உறங்கிய பிறகு அப்பண்ணா தூங்கப் போய்விட்டார். நடுநிசி வேளை. புரந்தரதாசர் விழித்துக் கொண்டார். கால் வலியெடுத்தது.

    அப்பண்ணா ஒரு பாத்திரம் வெந்நீர் கொண்டு வா என்று சொல்லி அழைத்தார் புரந்தரதாசர். அப்பண்ணா வரவில்லை. மூன்று நான்கு தடவைகள் கூவி அழைத்த பிறகு கையில் வெந்நீர் நிறைந்த பாத்திரத்துடன் வந்து சேர்ந்தார் அப்பண்ணா. புரந்தரதாசருக்குக் கோபம் தாங்கவில்லை. அதை வாங்கி அவருடைய முகத்திலேயே வீசிக் கொட்டிவிட்டார்.

    மீண்டும் படுத்துக்கொண்டார். அவருக்குத் தூக்கம் வரவில்லை. ஐயோ! கோபத்துக்கு இடம் கொடுத்து விட்டேனே? அப்பண்ணாவுக்கு என்ன ஆயிற்றோ? என்று எண்ணியபடி புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தார். காலையில் எழுந்ததும் சீடரை நாடிச் சென்றார் புரந்தரதாசர்.

    அப்போது தான் கண் விழித்து எழுந்து உட்கார்ந்திருந் தார் அப்பண்ணா. அவரைக் கண்டதும் எழுந்து நின்று, அபச்சாரம்! என்னையறியாமல் அயர்ந்து தூங்கிவிட்டேன். மன்னிக்க வேண்டும் என்று கைகுவித்து வணங்கினார்.

    தூங்கி விட்டாயா? நீயா? இல்லையே? நடுநிசி வேளையில் எனக்குச் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தாயே? என்று கேட்டார் புரந்தரதாசர்.

    இல்லையே சுவாமி நான் எழுந்திருக்கவே இல்லையே? என்று கைகளைப் பிசைந்தபடி சொன்னார் அப்பண்ணா. புரந்தரதாசருக்கு ஒன்றும் புரியவில்லை. யோசித்து மனம் குழம்பியபடி நீராடிவிட்டுப் பண்டரிநாதன் ஆலயத்துக்குப் போனார். அங்கே ஒரே கலவரமாக இருந்தது.

    அர்ச்சகர் ஓடி வந்து புரந்தரதாசரிடம், என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. விட்டலனின் முகம் முழுவதும் வெந்நீர் கொட்டிக் கொப்பளித்தது போல நிறைய கொப்புளங்கள் முளைத்திருக்கின்றன என்று சொல்லி அழத் தொடங்கினார்.

    புரந்தரதாசர் அழவில்லை. ஆனால் கண்ணீர் சொரிந்தவாறே நின்றார். கோபத்தை வெல்ல வேண்டும் என்று அவருக்கு அறிவு புகட்ட ஆண்டவன் செய்த இரண்டாவது லீலையா இது?

    இன்னொரு லீலை பாக்கி இருந்தது...

    அங்கேயே அப்படியே நாள் முழுவதும் பாடிக் கொண்டே இருந்துவிட்டு, அந்தச் சந்நிதியிலேயே கண்ணயர்ந்து விட்டார் புரந்தரதாசர்.

    மறுநாள் காலை, அவர் கண்விழித்தபோது ஒரே கலாட்டாவாக இருந்தது. ஆலய நிர்வாகிகள் அங்குமிங்கும் பரபரப்புடன் அலைந்து கொண்டிருந்தார்கள்.

    என்ன நடந்தது? எதற்காக இப்படி அலைகிறீர்கள்? என்று கேட்டார் புரந்தரதாசர்.

    விட்டலனின் கையில் இருந்த வைரக் கங்கணங்களைக் காணோம். யாரோ திருடிக்கொண்டு போய் விட்டார்கள்! என்றார் நிர்வாகிகளில் மூத்தவர். புரந்தரதாசர் கதிகலங்கிப் போனார். இரவு முழுவதும் அவர் அங்கேயே இருந்தாரே? நடந்தது ஏதும் அவருக்குத் தெரியவில்லையே...?

    எல்லோரும் பார்த்துக்கொண்டே நிற்க, அங்கே மெதுநடை போட்டு நடந்து வந்தாள் வனஜாக்ஷி என்ற அந்த நடனமாது. வைத்தகண் வாங்காமல் எல்லோரும் அந்த அழகியையே பார்த்துச் சொக்கிப்போய் நின்றார்கள். கைகுவித்து விட்டலனை வாங்கினாள் அவள். அந்தக் கைகளில் விட்டலனின் வைரக் கங்கணங்கள் ஜொலித்தன!

    உனக்கு இவை எப்படிக் கிடைத்தன? யார் உனக்கு இவற்றைத் திருடிக் கொண்டு வந்து கொடுத்தார்கள்? என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர் ஆலய நிர்வாகிகள்.

    இதோ இந்தப் பெரியவர் தாம் இரவு என் வீட்டுக்கு வந்திருந்தார். என்னுடைய நடனத்தைக் கண்டு களித்து விட்டுப் பரிசாக இந்தக் கங்கணங்களையும் கொடுத்து விட்டுப் போனார் என்றாள் வன ஜாக்ஷி.

    இரவு முழுவதும் இதற்காகத்தானா சந்நிதியிலேயே பழியாகக் கிடந்தீர்? என்று புரந்தரதாசரைப் பிடித்துக் கொண்டார் ஆலய நிர்வாகி. அவரைத் தூணில் கட்டிப் போட்டு உதைக்க ஆரம்பித்தார்கள். விட்டலா! இது என்ன விளையாட்டு அப்பனே! என்று புலம்பியபடி கைகளைக் குவித்து வணங்கினார் புரந்தரதாசர். உன்னுடைய முகத்தில் வெந்நீரைக் கொட்டினேனே? பன்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டியவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்தேனே? அந்தப் பாவத்துக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று கூறிப் புலம்பினார் அவர். இந்த அமளியில் வனஜாக்ஷி நழுவிப் போனதை யாரும் கவனிக்கவில்லை. கைக்குக் கிடைத்த வைரக் கங்கணம் மீண்டும் நழுவிப் போய் விட்டது!

    ஊரெங்கும் தேடினார்கள். வனஜாக்ஷியைச் காணோம்! புரந்தரதாசருக்கு விழுந்த அடிகளுக்கும் குறைவில்லை. மறு நாள் காலை...

    அர்ச்சகர் கர்ப்பக்கிருகத்தின் கதவுகளைத் திறந்தார். பாண்டுரங்கனின் கைகளில் வைரக் கங்கணங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.

    புரந்தரதாசரைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அவருடைய காலில் விழுந்து அனைவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவருக்கு எதுவுமே காதில் விழவில்லை நடந்தது எதுவுமே தெரியவில்லை விட்டலனின் திருநாமத்தைச் சொல்லியபடியே கிளம்பி விட்டார் புரந்தரதாசர்.

    தன்னுடைய வாழ்நாளில் புரந்தரதாசர் பாடிய கீர்த்தனைகள் ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கும். ஆனால் அவற்றில் சில ஆயிரம் மட்டுமே மக்களுக்குக் கிடைத்தன.

    "கர்நாடக இசையின் பிதா’ என்று கருதப்படும் புரந்தர தாசரின் கீர்த்தனைகள் வியாசபீடத்தில் வைத்து அரங்கேற்றம் செய்யப்பட்டன. அவற்றுக்கு மட்டும் இடம் கொடுத்து ஏற்றுக் கொண்டதாம் வியாசபீடம்.

    *****

    நாடு முழுவதும் நகர சங்கீர்த்தனம்...!

    பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து புகார் வந்தது. அம்மா சசிதேவி! உன்னுடைய குழந்தை உனக்கு அருமையாக இருக்கலாம். ஆனால் அவன் எங்கள் வீட்டில் செய்யும் அட்டகாசம் எங்களால் தாங்கக் கூடியதாக இல்லை. வெண்ணெய், தயிர் சட்டிகள் ஒன்று பாக்கி இல்லை. மற்றப் பையன்களை அழைத்துக்கொண்டு வந்து திருடிக் குடிக்கிறான். உடனே அவனைக் கண்டிக்காவிட்டால் நாங்களே அவனைக் கட்டிவைத்து உதைப்போம்! என்று அவர்கள் சொன்னார்கள்.

    சசிதேவிக்கு அவமானம் தாங்கவில்லை. அன்று நிமாய் வந்ததும் கட்டி வைத்து உதைப்பது என்று எண்ணிக் காத்துக் கொண்டிருந்தாள். பகற்பொழுது முதிர்ந்து உச்சி வேளையும் கடந்து விட்டது. மெதுவாக உள்ளே நுழைந்தான் நிமாய். பின்புறமாக வந்து தாயைக் கட்டிப்பிடித்து அவளுடைய கண்களை மூடினான். அடே நிமாய்! இப்படி எல்லாம் செய்து என்னை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதே! மற்றவர் வீட்டில் வெண்ணெய் திருடிய குற்றத்துக்காக உன்னைக் கட்டிவைத்து உதைக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். வா என் முன்னால்! என்று அதட்டினாள் சசிதேவி.

    நிமாய் அவள் முன் வந்து நின்றான். பொன்னிறமான உடல். பால்மணம் மாறாத முகம். நெற்றியில் திரு நாமம். அழகான கண்கள். பசியால் சற்றே வாடியபடி நின்றான் அவள். அம்மா! அன்று கிருஷ்ணபகவானையும் இப்படித் தான் தாய் யசோதா கேட்டாள். அவருக்கும் இதே தண்டனை தான் கிடைத்தது. எனக்கும் கிடைக்கட்டும். தான் ஏற்றுக்கொள்ளத் தயார்! என்று புன்னகையுடன் கூறினான் நிமாய்.

    கிருஷ்ண பகவானைப் பற்றிப் பேச உனக்கு என்ன யோக்கியதை? செய்வதையும் செய்துவிட்டுச் சமாதானமும் சொல்ல வருகிறாயா? என்று அதட்டியபடி கையை உயர்த்தினான் சசிதேவி.

    அவரைப் பற்றி பேசுவேன். அவரைப் பற்றி நிறையப் பாடவும் போகிறேன். நீ ஒருநாள் கேட்கத்தான் போகிறாய் என்று கையைக் கட்டிக்கொண்டு மன உறுதியுடன் நின்றான் நிமாய்.

    சசிதேவி பிரமித்து நின்றாள். உண்மைதானா? அப்படியும் நடக்குமா? அவளால் நம்ப முடியவில்லை. அவர்களுடைய குடும்ப ஜோசியரிடம் போய் மகனின் ஜாதகத்தைக் கொடுத்து யோசனை கேட்டாள். சசியம்மா! நீங்கள் ரொம்ப அதிருஷ்டசாலி. உங்கள் மகன் மிகப்பெரிய வைஷ்ணவ மகானாகத் திகழப்போகிறான். ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி நாடெங்கும் பாடிப் பிரச்சாரம் செய்யப் போகிறான். நீங்கள் அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்துச் சம்சார பந்தத்தில் ஈடுபடுத்த நினைப்பீர்கள். ஆனால் அது நடக்காது. அவன் உலகுக்கே சொந்தமானவன். அவனுடைய மனைவியால் அவனைச் சொந்தம் கொண்டாட முடியாது என்றார் குடும்ப ஜோசியர்.

    நிமாய் பாடசாலையில் சேர்ந்தான். ஆனால் அவனுடைய குறும்புகள் நிற்கவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்தும் ஆசிரியர் வீட்டுக்கு வந்து புகார் செய்யத் தொடங்கினார். தந்தை ஜகன்னாதமிஸ்ராவுக்குக் கோபம் தாங்கவில்லை.

    மாலை முதிர்ந்து விளக்கு வைத்தாகி விட்டது. நிமாய் வீடு திரும்பவில்லை. பசி மிகுந்து அவர் சாப்பிட உட்கார்ந்தார். வாசலில் காலடி ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அவருடைய மூத்த பையன் விஸ்வரூபன் காவி உடை அணிந்து சந்நியாசம் பூண்ட கோலத்தில் நின்றான்.

    மகனே! இது என்ன கோலம் என்று பதறியபடி கேட்டார் தந்தை.

    அப்பா எனக்கு இந்த உலக வாழ்க்கையின் பந்த பாசங்கள் பிடிக்கவில்லை. நான் துறவு பூண்டு நாடெங்கும் சுற்றி வரப்போகிறேன். நீங்கள், தம்பி நிமாய் நன்றாகப் படித்துக் குடும்பத்தை கவனிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நான் கிளம்பிப் போகிறேன்! என்று புறப்பட்டு விட்டான் விஸ்வரூபன்.

    ஏழு வயது மகன் நிமாய் வீடு வந்தால் விரட்ட வேண்டும் என்று அவர் காத்து நின்றார். ஆனால் பதினாறு வயது நிறைந்த மூத்தமகன் அவனே வீட்டை விட்டுப் போவதாகச் சொல்லிக் கொண்டு வந்து நிற்கிறான். இது என்ன சோதனை? ஜகன்னா தமிஸ்ரா மயங்கி விழுந்தார். மனைவி ஓடி வந்து பிடித்துக்கொண்டாள். விஸ்வரூபன் திரும்பிப் பாராமல் கிளம்பிப் போய்விட்டான்.

    அன்று முதல் அடியோடு மாறிவிட்டான் நிமாய். மிகுந்த அக்கறையுடன் பாடங்களைப் படிக்கத் தொடங்கினான். சாஸ்திர நூல்களைப் படித்து பண்டிதர்களுடன் விவாதம் செய்யக்கூடிய அளவுக்கு அவனுடைய ஞானம் வளர்ந்து விட்டது. பெரியோர்கள் அவனுடைய அறிவை வியந்து பாராட்டினார்கள். நிமாய் என்ற பெயர் போய்விட்டது. செளரங்கா என்ற கெளரவப்பெயர் வந்து சேர்ந்தது.

    காஷ்மீரிலிருந்து ஆசாரியகேசவ் என்ற புகழ்பெற்ற பண்டிதர் நவதீபத்துக்கு வந்து சேர்ந்தார். அந்த நாளில் நவ தீபம் பாடசாலைகளும், கல்விக்கூடங்களும் நிறைந்த புகழ்பெற்ற நகரமாக விளங்கி வந்தது. மற்ற பண்டிதர்களுடன் உரையாட விரும்பி வந்த கேசவ் அந்த ஊரில் செளரங்காவிற்கு இருந்த பெயரையும் புகழையும் கேட்டு ஆச்சரியம் அடைந்தார்.

    என்ன தெரியும் இந்தச் சிறுவனுக்கு? இவனுக்கு இத்தனை பெயரும் புகழும் கிடைப்பது நியாயம் ஆகுமா? என்று சொல்லி அவனைச் சம்வாதம் செய்ய மறுநாள் கங்கைக்கரைக்கு அழைத்தார். செளரங்காவும் வந்து சேர்ந்தான். இருவரும் கங்கை நதிக்கரையில் அமர்ந்தார்கள்.

    கேசவ பண்டிதரே! கங்கா மாதாவைப் பற்றி சமஸ்கிருதத்தில் சில சுலோகங்களை இயற்றிப் பாடுங்களேன்! என்று கேட்டான் அந்தச் சிறுவன். கேசவ பண்டிதருக்குப் பெருமை தாங்கவில்லை அகம்பாவத்துடன் கங்கா மாதாவைப் பற்றி பத்து சுலோகங்களை இயற்றிப் பாடி முடித்து விட்டு, இறுமாப்புடன் புன்னகை செய்தபடி நிமிர்ந்து பார்த்தார்.

    சௌரங்கா புன்சிரிப்புடன் சுவாமி! உங்கள் சுலோகங்களில் இலக்கணப் பிழைகளும் கருத்துப்பிழைகளும் நிறைய இருக்கின்றனவே? என்று சொல்லிவிட்டு, வரிசையாக இருபது பிழைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினான் செளரங்கா.

    கேசவ பண்டிதர் பிரமித்துப் போனார். பிழைகளை ஒப்புக்கொண்டு தலையைக் குனிந்தபடி எழுந்து போய் விட்டார். மறுநாளே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் காஷ்மீருக்குத் திரும்பிப் போய்விட்டார்.

    செளரங்காவின் திருமணமும் நடந்தது மனைவி லக்ஷ்மியுடன் இல்லறம் பூண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தான். பாடசாலை ஒன்றை நிறுவித் தானே குழந்தைகளுக்குப் பாடமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். அடிக்கடி சொற்பொழிவுகள் நிகழ்த்த வெளியூர் போய் வருவதும் உண்டு.

    அப்படி ஒருமுறை வெளியூர் சென்று திரும்பியபோது மனைவி லக்ஷ்மி பாம்பு கடித்து இறந்து போயிருந்தாள்.

    சௌரங்கா, மனத்துக்கு அமைதி கிடைக்கவில்லை. அம்மா! நான் தேசாந்திரம் போய் வர விரும்புகிறேன். இங்கே இருந்தால் எனக்கு நிம்மதி கிடையாது. எனக்கு உத்தரவு தாருங்கள் என்று தாயிடம் கேட்டான் செளரங்கா.

    சசிதேவிக்கு வருத்தம் தாங்கவில்லை. அப்பனே! விஸ்வரூபன் சந்நியாசம் வாங்கிக்கொண்டு போய்விட்டான். அதற்கே நான் மனம் தாளாமல் தவிக்கிறேன். உன் தந்தையும் இறந்துபோய் விட்டார். இப்போது நீயும் புறப்பட்டுப் போவதானால் என்னால் உயிர்வாழ முடியாது என்று கூறி அழுது புலம்பினாள்.

    அம்மா! என்னுடைய மனம் இல்லற இன்பத்தை நாடவில்லை. ஆனாலும் அதுவே உனக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால், உனக்காக நான் மறுமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளுகிறேன்! என்றான் சௌரங்கா.

    லஷ்மி இருந்த இடத்தில் விஷ்ணுப்ரியா வந்து சேர்ந்தாள். செளரங்கா அவளை மனம் நோகச் செய்யவில்லை. ஆனால் அவனுடைய மனம் அவளுடைய அன்புக்குக் கட்டுப்படவும் இல்லை. ஸ்ரீ கிருஷ்ண பகவானை நாடித் தீர்த்த யாத்திரை செல்லப் புறப்பட்டான் சௌரங்கா.

    கயாவில் விஷ்ணு பாதபத்மம் இருக்கும் திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தான் சௌரங்கா. பிராகாரத்தைச் சுற்றி வந்தபோது ஒரு மகான் அவனுக்காகக் காத்து நிற்பதைக் கண்டான்.

    மகனே! உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடன் வா! என்று அழைத்துப் போனார் அந்த வைஷ்ணவப் பெரியார். ஈசுவரபுரி என்ற அந்தப் பெரியாருடன் ஆலயத்தை வலம் வந்தான் சௌரங்கா தீர்த்தக்கரையில் மூதாதையர்களுக்காக நடந்து கொண்டிருந்த சிரார்த்தத்தைப் பார்த்தான். அந்த மகானுடைய குடிலில் அவருடன் அமர்ந்து உபதேசம் பெறத் தொடங்கினான். மெல்ல மெல்ல அவனுடைய மனம் பக்குவம் பெறத் தொடங்கிற்று.

    கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பற்றிப் பாட ஆரம்பித்தான். மூடிய கண்ணிமைக்குள், மயிற்பீலி அணிந்து, கையில் புல்லாங்குழலுடன் தெய்வீக இசைபரப்பும் கண்ணனின் உருவம் தெரிந்தது. காதலாகிக் கசிந்துருகி அன்று கண்ணன் புகழ்பாடிய கோபிகைகளைப் போல சௌரங்காவும் தேம்பித் தேம்பி அழுதபடி கண்ணனின் திருநாமத்தைப் பாடிப் பூஜிக்கத் தொடங்கினான்.

    பஜனையுடன் புனித யாத்திரை ஆரம்பமாயிற்று. நவ தீபத்தின் தெருக்களில் கண்ணனின் புனித நாமம் நகர சங்கீர்த்தனமாக எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. பெரியோர்களும் வந்து காலில் விழுந்து வணங்கிச் சென்றார்கள். சௌரங்கா வைணவம் தழைக்க வந்த மகாபிரபு என்று பெயர் பெற்றுவிட்டார்...

    சௌரங்காவின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கிற்று. அத்வைத ஆசாரியர், நித்யானந்தர் போன்ற மகான்கள் அவருடைய சீடர்களாகச் சேர்த்து கொண்டார்கள். ஹரிதாஸ் என்ற பெயர் கொண்ட முஸ்லீம் பக்தர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். செளரங்கா சென்றுவிட மெல்லாம் பக்தர்கள் அவருக்கு அடிபணியத் தொடங்கினார்கள்.

    செளரங்கா சந்நியாசம் பூணுவது என்று முடிவு செய்துவிட்டார். அப்போது அவருக்கு வயது இருபத்து நான்கு மட்டுமே. மனைவி விஷ்ணுப்ரியா அதைக்கேட்டு மனம் கலங்கிப் போனாள். ஆனாலும் நாட்டின் நன்மைக்காகவும் ஆத்திகம் செழிக்கவும் அவர் துறவறம் மேற்கொள்ளுவது தான் நல்லது என்பதைப் புரிந்து கொண்டார். மனைவியின் முழுச் சம்மதத்துடன் கேசவபாரதி என்ற பெரியாரிடம் சந்நியாசம் வாங்கிக் கொண்டார் அவர். அன்று முதல் கிருஷ்ண சைதன்யர் என்ற பெயரையும் பெற்றார்.

    இந்து மதத்தில் ஒரு புனித சகாப்தத்தை உருவாக்கினார் கிருஷ்ண சைதன்யர் மண்ணுலகில் தான் வாழ வேண்டிய அவசியம் முடிவடைந்துவிட்டதாக உணர்ந்தார். தனது சீடர்களை அழைத்து பூரியில் தான் சமாதி அடையப் போவதை அவர்களிடம் எடுத்துக் கூறினார். அவர்கள் தாயைப் பிரியும் குழந்தைகளைப்போல் விம்மி விம்மி அழத்தொடங்கினார்கள்.

    பூரி ஜெகன்னாதரின் முன் கண்களில் நீர் வடிய நின்று கொண்டிருந்தார் கிருஷ்ண சைதன்யர். திரு நாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்த வாய் பேசாமல் நின்று விட்டது. கண்கள் குத்திட்டு நின்றுவிட்டன. அங்கேயே அப்படியே கீழே விழுந்து விட்டார் கிருஷ்ண சைதன்யர். அதைச் சொல்ல சீடர்கள் வெளியே ஓடிவந்தார்கள். அனைவரும் வெளியே வந்ததும் பிரகாரத்தின் கதவுகள் தாமே மூடிக்கொண்டுவிட்டன.

    மீண்டும் கதவுகள் திறந்தபோது கிருஷ்ண சைதன்யரின் உடலை அங்கே காணோம்! அவர் ஜெகன்னாதருடன் ஐக்கியமாகி விட்டார். பிராகாரமெங்கும் ஒரு புதிய மணம் பரவிற்று...

    ஸ்ரீசைதன்ய மகாப்பிரபுவின் பெயர் இன்றும் நாடு முழுவதும் பக்தியுடன் சொல்லப்படுகிறது. நாம சங்கீர்த் தனத்தில் ஒரு புதுயுகத்தையே உருவாக்கிய அவருடைய பக்திமார்க்கம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பின் பற்றப்படுகிறது.

    கிருஷ்ணரின் நாமத்தை ஒருமுறை சொன்னாலும் அது பாவத்தைக் கழுவி நீக்கி விடும். பகவானின் திரு நாமத்தைச் சொல்லி சங்கீர்த்தன யக்ஞம் செய்வதற்கு இணையான பக்தி வழிபாடு வேறெதுவும் இல்லை என்கிறார் கிருஷ்ண சைதன்யர்.

    *****

    ஏழைகளின் துயர் துடைத்த தொண்டன்

    அந்தக் கடைக்கு வருவோரெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். ஏழைகளுக்கு மலிவு விலையில் மளிகை சாமான்கள், இல்லாதவருக்குக் கடனாகவே கிடைக்கும் பொருட்கள். கெஞ்சுபவர்களுக்குக் கொஞ்சம் கூடவே இலவசமாகவும் கிடைக்கும் சாமான்கள்! இப்படி ஒரு வியாபாரமா?

    என்ன துக்காராம்? இப்படிச் செய்தால் உன் தந்தை வைத்த கடை காலியாகிவிடும் எல்லோரும் உன்னை ஏமாற்றிவிடுவார்கள்! என்று நண்பர்கள் பலரும் எச்சரித்தார்கள். துக்காராம் மசியவில்லை. விட்டலன் கொடுத்தது தானே? அதை ஏழைகளுக்குத் தர மறுக்கலாமா? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

    கடை காலியாகிவிட்டது. கடன் வாங்கி வியாபாரம் நடத்தினார். அதிலும் ஏகப்பட்ட நஷ்டம். மனைவி அயோலி தலையில் அடித்துக் கொண்டு, இப்படி ஓர் அசட்டுக் கணவன் எனக்கு வாய்க்க வேண்டுமா? பிழைக்கத் தெரியாத அப்பாவியாக இருக்கிறாரே? என்று புலம்பினாள். அவளுடைய தந்தை வந்தார். மகளைச் சமாதானப்படுத்தி, மருமகனுக்குக் கடனாகப் பணம் தந்து உதவி விட்டுப் போனார். துக்காராம்! நீ ரொம்ப நல்லவன். பாண்டுரங்கனிடம் பக்தி கொண்டவன். ஆனால் இந்து தேஹு கிராமத்து மக்கள் பொல்லாதவர்கள். உன்னை ஏமாற்றிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இரு. இல்லாவிட்டால் குடும்பம் நசித்துப்போகும்! என்று எச்சரித்து விட்டுச் சென்றார்.

    அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு அடுத்த ஊர் சந்தைக்கு மிளகாய் வாங்கப் போனார் துக்காராம். மொத்தமாக மிளகாய் விற்பவர்களிடம் வாங்காமல், சில்லறையாக விற்க வந்த ஏழை விவசாயிகளிடம் வாங்கினார். அதை எடுத்துக் கொண்டு சில்லறை விற்பனை அங்காடிக்குப் போனார். மிளகாயை விற்றதில் கொஞ்சம் லாபம் கிடைத்தது. ஊருக்குத் திரும்பப் புறப்பட்டார்.

    வழியில் அந்த நகை வியாபாரி துக்காராமைச் சந்தித்தார். இதோ பாரும்! அற்புதமான வேலைப்பாடமைந்த தங்க வளையல்கள்! உம்முடைய மனைவிக்கு வாங்கிக் கொண்டு செல்லும். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்று அவருடைய ஆவலைத் தூண்டினார். துக்காராம் கையிலிருந்த பணத்தையெல்லாம் கொடுத்து விட்டு அந்த வளையல்களை வாங்கிக் கொண்டு திரும்பினார்.

    அந்த வளையல்கள் பளபள வென்று மின்னுவதைக் கண்ட அயோலி அகமகிழ்ந்து போனாள். எனக்கு இத்தனை வளையல்கள் எதற்கு? ஒரு ஜோடியை விற்று உங்களுக்கும் குழந்தைகளுக்கும் துணிகள் வாங்கிக் கொண்டு வருகிறேன்! என்று புறப்பட்டுச் சென்றாள். திரும்பி வரும்போது அழுது கொண்டே வந்து நின்றாள்

    உங்களை யாரோ ஒரு பாவி ஏமாற்றிவிட்டானே அத்தனையும் ‘கில்ட்' பூசிய வளையல்கள். எல்லாப் பணமும் போய்விட்டதே என்று அழுதாள் அயோலி.

    துக்காரம் வருத்தப்படவில்லை. எனக்குப் பொன் மீது ஆசை இருக்கிறதா என்று பார்க்கவே பாண்டுரங்கன் இப்படி ஒரு சோதனையை நடத்தி இருக்கிறான் போலும்... இப்போது எனக்கு உண்மை தெளிவாகிவிட்டது. இனிமேல் பொன்னாசை கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு, விட்டலன் மீது பக்திப்பாடல் ஒன்றை இயற்றிப் பாட ஆரம்பித்துவிட்டார்.

    நிறுத்தும்! விட்டலன் உங்களுக்குப் பணத்தைக் கொடுக்க வேண்டாம். புத்திசாலித்தனத்தையாவது கொடுக்கக்கூடாதா? பஜனை செய்தால் போதும் என்று நினைப்பவர் ஏன் கல்யாணம் செய்து கொண்டீர்? குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொண்டீர்? என்று கூச்சலிட்டு அழத் தொடங்கினாள் அயோலி.

    அழாதே. நான் எப்படியாவது வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன் என்றார் துக்காராம். அயோலி விட்டுச் சாமான்களை அடகு வைத்துப் பணம் வாங்கிக் கொடுத்தாள். வண்டியைப் பூட்டி நெல் வாங்கி வரச் சந்தைக்கு அனுப்பினாள்.

    மாலை முதிர்ந்து இரவு நேரம் ஆகிவிட்டது. துக்காராமைக் காணோம் வண்டி மட்டும் நள்ளிரவு நேரத்தில் திரும்பி வந்தது. அதில் துக்காராம் இல்லை. வீட்டைப் பூட்டிவிட்டுக் கையில் விளக்குடன் துக்காராமைத் தேடிப் புறப்பட்டாள் அயோலி. காட்டு வழியில் செல்ல பயமாக இருந்தது. மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ஓடி வந்து விசாரித்தான். தான் கணவனைத் தேடி வந்த விவரத்தைச் சொன்னாள் அயோலி.

    பயப்படாதீர்கள். அவர் மலையில் பாறைமீது உட்கார்ந்து பாண்டுரங்கனைப் பற்றிப் பாடிக்கொண்டிருக்கிறார். நான் உங்களை அங்கே அழைத்துச் செல்லுகிறேன் என்று கூப்பிட்டுக்கொண்டு சென்றான் அந்தச் சிறுவன். வழியில் காலில் முள் தைத்தது. அதை எடுத்து விட்டுச் சிரமபரிகாரம் செய்து வைத்தான். நன்றாக இருப்பாய்! உன் பெயர் என்ன? என்று கேட்டாள் அயோலி, விட்டல்!" என்று சொன்னான் அவன்.

    உன் பெயரும் விட்டலனா? எனக்கு அந்தப் பெயரே பிடிக்காது! என்று முகத்தைச் சுளித்துக் கொண்டாள் அயோலி. சிறுவன் சிரித்துக்கொண்டே போய்விட்டான். இருளுக்கு நடுவில் பாறைமீது அமர்ந்து பாடிக்கொண்டிருந்த துக்காராமை அணுகித் தொட்டு எழுப்பினாள் அயோலி.

    துக்காராம் கண்ணை விழித்துப் பார்த்தார். நடந்ததைக் கேட்டார். உடனே கண்ணீர் பெருக, "அயோலி உனக்குக் கிடைத்த பாக்கியம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே? நள்ளிரவில் மாடு மேய்ப்பதாவது?

    Enjoying the preview?
    Page 1 of 1