Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavugal Kaninthu Varum
Kanavugal Kaninthu Varum
Kanavugal Kaninthu Varum
Ebook228 pages1 hour

Kanavugal Kaninthu Varum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி. எஸ். லட்சுமி சுப்பிரமணியம் எழுதியுள்ள இந்த நாவல் - ஒரு காதல் காவியம்.
திடுக்கிடும் சம்பவங்கள் இல்லை. திடீர்த் திருப்பங்கள் இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் இல்லை.
ஆனால்
மூன்றே பாத்திரங்களைக் கொண்டு - ஒரு ஆண் இரண்டு பெண்கள்-கமல், நீரு, அனு மூவரையும் வைத்து ஒரு காதல் கவிதா சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.
வெறும் மன உணர்வுகளை வெளியிடும் முறையிலேயே படிப்போரை மயக்கி விடுகிறார்.
அடடா என்ன நடை!
குற்றாலச் சாரலில், குளிர்ந்து வரும் தென்றலில் மிதந்து வரும் மெல்லிய மணத்தை அனுபவிப்பது போல...
ஊருக்கு வெளியே, ஆற்றின் வெண்மணலில், அமுத நிலவொளியில், ஏகாந்தமாய் அமர்ந்து கொண்டு, வெகு தூரத்திலிருந்து வரும் நாதஸ்வர இசையை அனுபவிப்பது போல...
நீங்கள் படித்து அனுபவித்த பிறகு தான் அந்த தீந்தமிழ் கவிதை நடையைப் புரிந்து கொள்ள முடியும்!
Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580127504865
Kanavugal Kaninthu Varum

Read more from Lakshmi Subramaniam

Related to Kanavugal Kaninthu Varum

Related ebooks

Reviews for Kanavugal Kaninthu Varum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavugal Kaninthu Varum - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    கனவுகள் கனிந்துவரும்

    Kanavugal Kaninthu Varum

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S.Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    பதிப்புரை

    திருமதி. எஸ். லட்சுமி சுப்பிரமணியம் எழுதியுள்ள இந்த நாவல் - ஒரு காதல் காவியம்.

    திடுக்கிடும் சம்பவங்கள் இல்லை. திடீர்த் திருப்பங்கள் இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் இல்லை.

    ஆனால்

    மூன்றே பாத்திரங்களைக் கொண்டு - ஒரு ஆண் இரண்டு பெண்கள்-கமல், நீரு, அனு மூவரையும் வைத்து ஒரு காதல் கவிதா சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.

    வெறும் மன உணர்வுகளை வெளியிடும் முறையிலேயே படிப்போரை மயக்கி விடுகிறார்.

    அடடா என்ன நடை!

    குற்றாலச் சாரலில், குளிர்ந்து வரும் தென்றலில் மிதந்து வரும் மெல்லிய மணத்தை அனுபவிப்பது போல...

    ஊருக்கு வெளியே, ஆற்றின் வெண்மணலில், அமுத நிலவொளியில், ஏகாந்தமாய் அமர்ந்து கொண்டு, வெகு தூரத்திலிருந்து வரும் நாதஸ்வர இசையை அனுபவிப்பது போல...

    நீங்கள் படித்து அனுபவித்த பிறகு தான் அந்த தீந்தமிழ் கவிதை நடையைப் புரிந்து கொள்ள முடியும்!

    1

    ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து வெளியே தெரியும் காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிர்மலா. முலாம் பூசும் சாயங்கால மஞ்சள் வெயில். அடர்ந்த மரங்களின் பசுமையில் நடுநடுவே கண்விழிக்கும் சிவந்த பூக்கள். வெள்ளிக்கோடு ஓடுவது போல வேகமாய் நகர்ந்து மறையும் மின்வண்டி. இப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு ஓர் இதமான பொழுது போக்கு! நிர்மலாவுக்கு இந்தக் காட்சிகள் ரொம்பப் பிடிக்கும். மாடி அறையில் புத்தகமும், கையுமாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருப்பாள். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் மட்டும் தான் இந்தக் காட்சி கிடைக்கும். ஆறு ஆண்டுகளுக்கு மேல் பார்த்துக் கொண்டிருந்தாகி விட்டது. இன்னும் அது அலுக்கவில்லை; சலிக்கவில்லை.

    இளங்காலை நேரத்தில் லேசாகக் குளிர்ந்த காற்று வீசும். வெள்ளையாக முற்றாமல், சூடு பிடிக்காமல் கொழுந்து வெயில் படரும். எதிர் வீட்டு வாசலில் பன்னீர் மரத்தில் உட்கார்ந்து கொண்டு, குருவி பேச்சுமில்லாமல் பாட்டுமில்லாமல் ஒரு சொல் கட்டைத் திருப்பித் திருப்பி ஒலி யெழுப்பிக் கொண்டிருக்கும். புத்தகத்தை மடித்து மடியில் போட்டுவிட்டு நிர்மலாவும் அதைத் திரும்பச் சொல்லி அழகு காட்டுவாள்! நீருள் விழுந்த கூழாங்கல்லைப் போல, ஒரு மென்சிரிப்பு அவளுக்குள்ளேயே எழுந்து மறையும்.

    அந்த வீட்டிலேயே நிர்மலாவின் அறை தனி. வாசல் மரத்தின் நிழலில், புலன்களுக்கு இதமாய், சாகசமான இருள் படர்ந்த அறை அது. சுற்றிலும் அலமாரிகள் அவளைச் சூழ வழியும் புத்தகங்கள் - ரேடியோகிராமில் அடக்கமாய் நாதம் எழுப்பி நெஞ்சை நீவும் ரவிசங்கரின் கிதார் இசை. பொறி கண்ணுக்குப் படாமல் மணம் மட்டும் கமழும் ஊது பத்தி. மின்விசிறியின் குளிர்ந்த சுழலின் கீழ் அமர்ந்து, அங்கே புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாள் நிர்மலா. எத்தனை நேரமானாலும், அதில் அவளுக்கு அப்படி ஒர் அலுக்காத உவகை.

    அவளை அப்படிப் புத்தகப் பைத்தியமாக்கியது அவளுடைய தந்தை தான். உயர்ந்த படிப்பு - மத்திய அரசுத் தேர்வுப் பரீட்சையில் வெற்றி - இப்படி வாழ்க்கை ஏணியில் இளம் வயதிலேயே மளமளவென்று மேலே ஏறி விட்டவர் ரகுராமன். அவர் பேச்சிலேயே ஒரு மென்மை இருக்கும். ஆனால், அதில் அறிவின் அக்கினி இருக்கும். சிறு வயதிலேயே நிர்மலாவுக்கு அவர் பேச்சைக் கேட்பதில் ஒரு தனிப்பிரமை.

    அவர் எங்கே போனாலும் கூடவே போவாள். வெளியே நடந்து வரப் போனால், காரில் கடற்கரைக்குப் போனால். அவருடைய அறையில் படிக்க உட்கார்ந்தால், அமைதியை நாடிப் பூஜைக்கு அமர்ந்தால் - அவளும் கூடவே இருப்பாள். குருவிவால் போல மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலுடன், மைதீட்டிய கண்களால் கொட்டக் கொட்டப் பார்த்துக் கொண்டு.

    அம்மாவுக்கு அது பிடிக்காது. அவள் பழைமையில் ஊறி வளர்ந்தவள். தஞ்சாவூரில் காவேரி ஆற்றுப் பாசனத்தில் முப்பது வேலி நிலத்தைக் கட்டியாண்ட பெரிய குடும்பத்துப் பெண்! அம்மாவுக்கு நாகரிகம் தெரியாது. அப்பாவைப் போல ஆங்கிலம் பேசக்கூட வராது. ஆனால் அவள் குரலழகே தனி. அவள் பாடினால் கண்ணை மூடி லயித்துக் கேட்டுக் கொண்டிருக்கலாம். சம்பிரதாயப் புடவைக்கட்டு தான். ஆனால், அதில் அறைக்குள் கோலம் போட்டு, நிமிர்த்தி வைத்தது போல ஓர் அழகு ஒளிரும்.

    நீருவுக்கு எப்பொழுதும் புத்தகம் படிக்கச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே? அவளுக்கு ஒரு பாட்டு ஒரு சுலோகம் தெரிய வேண்டாமா? சமையலில் ஒரு துவையல் செய்து போடத் தெரிய வேண்டாமா? என்று அங்கலாய்ப்புடன் கேட்பாள் ராஜம்.

    அது இரண்டிற்கும் நீயே போதும் அம்மா! நடுவில் நாங்கள் எதற்கு? என்று நிர்மலா சமையலறையில் நுழைந்து, இறக்கி வைத்த வாணலியில் இருக்கும் எண்ணெயில் குழைய வதக்கின கத்திரிக்காயை, ஒற்றை விரலால் வழித்து வாயில் போட்டுக் கொண்டு போவாள். அந்தக் குழந்தைத்தனத்தைப் பார்க்கும் போது ராஜத்துக்குத் திட்ட மனசு வராது, குறுஞ்சிரிப்புடன் அவளை ஒரு வினாடி ஆழ்ந்து நோக்கி விட்டு நகர்ந்துவிடுவாள்.

    ராஜம்! உனக்குத் தெரியாது. குழந்தைகள் முளை விடுகிற செடிகள் மாதிரி. மண்ணைக் கிளறிக் கொத்திவிட்டுக் கொஞ்சமாக நீர் விட்டு, பொறுமையாகச் சிறிது உரம் போட்டு, எவ்வளவு மென்மையுடன் மெதுவாகச் செடியை வளர்க்கிறோம்...? அந்தச் சின்னஞ்சிறு செடியைக் கிள்ளி விட்டா வளர்த்துவிட முடியும்? ஆசையும், பிரியமுமாக நிழலில் வைத்து, படிப்படியாக அறிவைக் கொடுத்துத்தான் குழந்தைகளை உருவாக்க வேண்டும். செடிக்கு மண்ணின் சாரம் - இங்கே மனத்தின் சாரம்! என்பார் அப்பா. அம்மா அதற்குமேல் பேச மாட்டாள். காலில் பற்றிய மஞ்சளும் நெற்றியில் பதக்கம் போலக் குங்குமமும், ஈரம் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துமாக, திரும்பிப் பூஜை அறைக்குப் போய்விடுவாள்.

    நீ சரசுவதியைப் பூஜை பண்ணு! உன் பெண் புத்தகத்தைப் பூஜை பண்ணட்டும்! என்று சொல்லிச் சிரித்துக் கொள்வார் அப்பா.

    காலை எட்டு மணிக்கே ரகுராமன் அலுவலகத்துக்குக் கிளம்பிப் போய் விடுவார். நிர்மலா கல்லூரிக்குக் கிளம்ப ஒன்பது மணி ஆகும். மற்றது எப்படியானாலும் உடை விஷயத்தில் அவள் அம்மா சொற்படிதான். கூந்தலை அழகாக வாரிப் பின்னிக் கொண்டு, பாவாடையும், தாவணியுமாகத்தான் உடுத்துக் கொண்டு, மார்பில் அணைத்த புத்தகக்கட்டும், தாழ்ந்த கண்களின் மேல் கவிந்த இமையுமாக வந்து பஸ்ஸில் ஏறுவாள். பஸ் வரும் வரை பார்வை பக்கத்தில் படராது. பஸ்ஸில் ஏறியதும் ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு விடுவாள்.

    கல்லூரியில் அவளுடைய தோழிகள் பலவிதம்! வாரம் ஒருமுறை விமானத்தில் டில்லிக்கும், பம்பாய்க்கும் பறக்கிற பிஸினஸ்மேன், ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகும் பத்திரிகையின் ஆசிரியர், அம்பத்தூரில் கார் சாமான்கள் தயாரிக்கும் தொழிலதிபர், இரவைப் பகலாக்கிக் கொண்டு புது முகங்களை நடிக்க வைக்கும் டைரக்டர் - இப்படி அவர்களுடைய பழக்கங்களும், ருசிகளும்கூட வெவ்வேறு விதமாக இருக்கும்.

    நிர்மலா அவர்களுடன் பேசுவாள்; கூட அமர்ந்து பாடம் படிப்பாள்; விளையாட்டு மைதானத்தில் போட்டி போட்டுக் கொண்டு துள்ளி விளையாடுவாள்; வீட்டுக்கு வந்த பின் போனிலும் பேசுவாள். ஆனால், அந்த நட்பும், பழக்கமும் லேசாக ஊஞ்சலாடுவதுபோல இருக்கும். உயர்ந்து தாழ்ந்தாலும், காட்சிகளைக் காட்டினாலும் ஊஞ்சல் லயம் மாறிப் போவதில்லை; இடம்பெயர்ந்து அசைவதும் இல்லை. நிர்மலாவும் அப்படித்தான்!

    மாலை ஆறு மணிக்குப் பிறகு அவளை வெளியில் பார்க்க முடியாது. டிஸ்கோதே செக்ஷனுக்குப் போகிற பெண்களுடன் பழகுவாள்; பேசுவாள். ஆனால், அவளை அங்கே காண முடியாது. இசை பிடிக்கும்; மேல் நாட்டு இசையையும் கூட ரசிக்கத் தெரியும். ஆனால் அது அவளுடைய அறைக்குள் தான். பாட்டுக்கும், ஆட்டத்துக்கும் ‘பாய்பிரெண்ட்ஸ்' துணையுடன் போகும் தோழிகளுடன் அவளும் பழகுவாள். ஆனால், அந்தப் பழக்கம் அவளைப் பற்றிக் கொண்டதில்லை. தனிமையில், மெத்தென்ற மௌனத்தில், ஒரு தனி சுகம் அவளுக்கு.

    தாகூர், பாரதி, அயன்ராண்ட், இர்விங்வாலஸ் என்று படித்து ரசிக்கிற பெண் தான் அவள்! இசைக்குச் சரியாக அறைக்குள் அழகான பறவையைப் போலக் கைவிரித்து ஆடுகிற ஜாதிதான் நிர்மலா! நிலைக்கண்ணாடிக்கு எதிரே நின்று கொண்டு, கூந்தலின் வலது வகிட்டை இடது வகிடாகவும், இடது மேலாக்கை வலது மேலாக்காகவும் மாற்றிக் கொண்டு அழகு பார்க்கிற ரகம் தான் அவள்! அது அமைதியான இரவின் அழகான நிலா வெளிச்சம் போல இருக்கும். மற்றவர்கள் கண்களைக் கவரும் பகட்டை நாடாது. நீரில் விழும் பிம்பம் போல அந்த அமைதியே அவளுடைய அழகு.

    புதன்கிழமை பிற்பகலில் அவளுக்குக் கல்லூரியில் ஓய்வு நேரம். அவளுடைய தோழிகள் சினிமா பார்க்கக் கிளம்பி விடுவார்கள். நிர்மலாவுக்கு அதுதான் லைப்ரரிக்குப் போகிற நேரம். அவளுடைய தோழி அனுவும், அவளுமாக 'ட்ரைவ் இன்' உட்லண்ட்ஸில் சிற்றுண்டி சாப்பிடப் போவார்கள். அங்கிருந்து அவள் சாலையைக் கடந்து அமெரிக்கன் லைப்ரரியில் நுழைந்துவிடுவாள். அனு 'ஸபையர்' தியேட்டரை நோக்கி நடந்து விடுவாள்.

    கண்ணாடிக் கதவுகள் வழியாக, வெளிச்சம் உள்ளே விழும். மென்மையாகக் குளிர்ச்சியைப் பரப்பும் ‘ஏர் - கண்டிஷன்' வசதி. கண்ணுக்கும், உடம்புக்கும் தெரியும் இதத்தில், மேஜையில் கிடக்கும் புத்தகங்களைக் கூடப் புரட்ட மனமில்லாமல் வெளியே தவழும் மாஇலைகளையும், அவற்றின் ஊடே பூசின வான் நீலத்தையும் பார்த்துக் கொண்டே சாய்ந்திருப்பாள்.

    அன்று அப்படி அமர்ந்திருந்தபோது, ஹாலின் மறு முனையில் உட்கார்ந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்து விட்டாள். தன்னைத்தான் பார்க்கிறானா என்று ஒரு சந்தேகம். மறுபடியும் கவனித்தபோது அது தெளிவாகிவிட்டது. நேர்ப் பார்வையாக அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன், அவள் பார்த்தது தெரிந்ததும் கண்களைத் திருப்பிக் கொண்டான். அவளுக்காக ஒருநொடி தோன்றிய புன்னகைகூட, உடனே மிரண்டு நொடித்து மறைந்துவிட்டது.

    அப்புறம் அமைதியாக உட்கார்ந்து படிக்க முடியவில்லை. எழுந்து புத்தக ஷெல்புகளுக்கு நடுவில் நடந்தாள். நீருள் நீந்தி நழுவும் மீனைப்போலப் பார்வை புத்தக வரிசைகளில் பட்டுத் தாவி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் மனம் எதிலும் பதியவில்லை. கால்கள் பதிய மறுக்கின்றன. குருடன் சிற்பத்தைத் தடவித் தெரிந்து கொள்வது போல, உள்ளம் நினைவுகளை அடையாளம் காண முயலுகிறது.

    அந்த வாலிபனை அவள் அங்கே அடிக்கடி பார்த்திருக்கிறாள். ஆனால், அந்தவிதமாக அவள் கவனித்ததில்லை. பார்த்துப் பழகிய முகம் தான். ஆனால், எவ்வளவோ முகங்களை அவளுக்கு அங்கே தெரியும். இரண்டாவது தடவை அவள் ஊன்றி நினைத்ததில்லை. காலண்டரைப் பார்ப்பது போலத்தான்; தேதியைத்தான் தேடுகிறோம்: படம் மனத்தில் நிலைப்பதில்லை. அவள் அங்கே வந்தது புத்தகங்களைப் பொறுக்கி எடுக்கத்தான்.

    புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளும் இடத்துக்குப் போனாள்.

    ரஸ்ஸல் டெய்லரின் ‘ஹிட்ச்' - இந்த தடவையாவது கிடைக்குமா?- நிர்மலாவின் குரல் ஏக்கத்தில் உயர்ந்தது. அவள் எதிர்பார்த்த பதில் தான்! அந்தப் பெண் முறுவலித்துக் கொண்டாள்:

    ஸாரி மாடம்! உங்களுக்கு முன்னால் பதிவு செய்து கொண்ட ஒருவர் இப்போது தான் வாங்கிக் கொண்டு போகிறார். அவர் மறுபடியும் தொடர்ந்து வாங்கிக் கொள்ளாவிட்டால் அடுத்த தடவை உங்களுக்குத்தான்!

    தாங்க்யூ! என்று சொல்லிவிட்டு, வேறு இரண்டு புத்தகங்களுடன் வெளியே வந்தாள் நிர்மலா. அவற்றைப் பிரித்துப் பார்த்தபடியே நடந்து பஸ் நிற்கும் இடத்துக்கு வந்து நின்று கொண்டாள். சட்டென்று அவள் பார்வை அந்தப் புத்தகத்தின் மீது விழுந்தது. 'ஹிட்ச்' - அவள் கேட்ட அதே புத்தகம்!

    அவள் பார்வை நிமிர்ந்தது. லைப்ரரியில் அவளைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த வாலிபன் தான்! அவள் பார்வையைப் புரிந்து கொண்டனைப்போல அருகே வந்தான்.

    மன்னிக்க வேண்டும்! நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது என் காதிலும் விழுந்தது. அப்போது தான் வாங்கிக்கொண்டு நகர்ந்து போய்க்கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துவிட்டுக் கொடுக்கலாம்!

    - அவள் நெஞ்சைத் தொடுவது போன்ற குரல். புறாவின் மார்பிலிருந்து உதிர்ந்த இறக்கையைப் போலப் பதமாகி விட்ட மெது - மென்மை - இலேசு. அவளுக்கு மறுக்க மனம் இல்லை. வாங்கிக்கொள்ளவும் பயமாக இருந்தது. கைவிரல்கள் நீளவில்லை. அவனும் விடவில்லை. மறுபடி நீங்கள் திரும்பப் புத்தகங்களைக் கொடுக்கும்போது மாற்றிக் கொள்கிறேன். நான் தான் கவனிக்கிறேனே? ஒவ்வொரு புதன்கிழமையும் இங்கே வருகிறீர்கள். என் பெயர் கமல்! உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா? என்றான் ஒரு நமட்டுச் சிரிப்புடன்! கால்கட்டை விரலிலிருந்து இரத்தம் 'ஜிவ்'வென்று சுருண்டு தலை வரை ஏறிற்று. அவள் கையை நீட்டிப் புத்தகத்தை வாங்கிக் கொண்டாள்.

    என் பெயர் நிர்மலா. தாங்க்யூ!

    - அதற்கு மேல் பேசமுடியவில்லை. பஸ் வந்து விட்டது. அவள் ஏறிக்கொண்டுவிட்டாள். உள்ளே நகர்ந்து இடம் தேடி அமர்ந்த பிறகு தான்

    Enjoying the preview?
    Page 1 of 1