Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma Varuvala?
Amma Varuvala?
Amma Varuvala?
Ebook241 pages1 hour

Amma Varuvala?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.

படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580127504912
Amma Varuvala?

Read more from Lakshmi Subramaniam

Related to Amma Varuvala?

Related ebooks

Reviews for Amma Varuvala?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma Varuvala? - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    அம்மா வருவாளா?

    Amma Varuvala?

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S.Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    மார்கழி மாதத்தின் காலைப் பனி மூட்டம் கலைந்திருந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல் காலையிலேயே அந்தந்தப் பகுதி கோவில்களை முற்றுகை இட்டவாறு இருந்தார்கள் பக்தர்கள். விடியற்காலை கருக்கிருட்டிலேயே குளித்துவிட்டுக் கோவிலை நோக்கி ஓடுவது ஜானகியின் வழக்கமாகியிருந்தது. ஆனால், இப்போதெல்லாம் சில காரணங்களால், அவ்வளவு அதிகாலையிலேயே கோவில் வாயிலை மிதிக்க முடியாமல் போய்விட்டிருந்தது.

    இருட்டில் தனியாக வரும் பெண்களின் தாலிச்சரட்டிற்கு ஆபத்து என்பது ஒரு காரணம். இரண்டாவது, வீட்டில் எவரும் அவளது செயலுக்கு ஒத்துழைக்காதது அடுத்த காரணம். 'கற்பகாம்பாள் கோவிலில் இந்நேரம் அமர்க்களப்படும்.....'- மனதினுள் கற்பனைகளை வளர்த்தபடி ஜானகி குளிரையும் உதறிவிட்டு ஸ்நானத்தை முடித்துக் 'கொண்டாள்.

    தலையைத் துவட்டி நுனிமுடிச்சிட்டுக் கொண்டு, அவசரமாகக் கண்ணாடி முன் நின்றவள் ஒரு முறை தன்னையே உற்றுப் பார்த்தாள்.

    முன் வகிட்டிலும், காதோரங்களிலும் நரை பரவி அவளை வயதானவள் என்பதைக் காட்டின. ஆனால், முன்நெற்றியில் விழுந்து புரண்ட சுருண்ட கூந்தல், வட்டமாக மின்னிய குங்குமப் பொட்டு, வில் போன்ற இயற்கையான புருவம் என யாவுமே அவளது வயதைக் குறைத்து இளமையாக்கிவிட்ட பிரமையைத் தோற்றுவித்தன.

    மூக்கிலும், காதிலும், வைரங்கள், அவளது நிறத்தின் பின்னணியில் பளீரிட்டன. ஜானகி கறுப்புத்தான், சற்றுக் குட்டை. ஆனாலும் முகத்தில் ஒரு சாந்தமான பாவம். சற்றுப் பெரிய விழிகளில், உணர்ச்சிகள் பிரதிபலிக்கும்.

    முன்னறை கடிகாரம் ஐந்தடித்தது. ஜானகி பரபரப்புடன் சமையலறைப் பக்கம் விரைந்தாள். எட்டுமணிக்குள் சமையல் முடிய வேண்டுமே?

    முதல் நாள் இரவே நறுக்கி வைத்திருந்த புடலங்காயை ஃபிரிட்ஜைத் திறந்து எடுத்தாள். ஐஸ்பெட்டியின் குளிரில் காயின் துண்டங்கள் விறைத்திருந்தன. சமையல் மேடை மீது அதை வைத்துவிட்டு அரிசி, பருப்பு என்று இயந்திரமாக இயங்கினாள் ஜானகி.

    வாயில் அழைப்பு மணி ஓசை கேட்டது. 'பால் பொட்டலம் வந்து விட்டது!' - நினைத்தபடி வாயிற் கதவைத் திறக்க விரைந்தாள்.

    முன்புற ஹால் திவானில் உறங்கிக் கொண்டிருக்கும் கணவர் ராமசாமி, எழுந்து கதவைத் திறக்க உதவமாட்டார். மாறாக, எதுக்கு காத்தால வேளையில் 'பெல்'லை அலற விடறான்?' என்பார். ஆனால், நேரம் தவறாமல் முதல் 'பெட்காப்பி' அவருக்கு அளிக்கப்பட வேண்டும். காப்பி முகத்தில் கண் விழித்தே பழக்கப்பட்டவர்!

    பால் பொட்டலங்களை, முன்புறம் திறந்திருந்த ஜன்னல் வழியே பெற்றுக்கொண்டாள். அதிகாலை நேரத்தில் வாயிற் கதவைத் திறக்கக் கூடாது என்பது பெரிய மகன் ஜயந்தனின் கடும் உத்தரவு.

    காலம் கெட்டுக்கிடக்கு. அம்மா பாட்டுக்கு பால்காரன்னு நினைச்சுண்டு கதவைத் திறந்து வச்சுட்டா எவனாவது உள்ளே புகுந்தாக்கூடத் தெரியாது. -பெரிய நாட்டுப்பெண் சசிகலா கடுத்துக் கொண்டாள். மனைவி சொல்லே மந்திரமாக மாறிவிட்ட பிள்ளை! அவளது சொல்லை செயலாக்கி விட்டிருந்தான்.

    ஜானகி பால் பொட்டலங்களை எடுக்கும் போதே, மணி என்ன? காப்பி ரெடியாகலையா? என்றார் ராமசாமி படுத்தபடியே.

    அவருக்கு நேரத்தைப் பற்றிய கவலைப்பட அவசியமே இல்லை. ஓய்வு பெற்றுவிட்டவர். அரசாங்க இலாகாவில் குமாஸ்தாவாகவே இருந்து, இப்போது பென்ஷன் வாங்கும் ஒரு மனிதர்.

    'நான் ஒண்ணும் சும்மா சாப்பிடலே. சம்பாதிச்சுக் குடுத்துட்டுத் தான் சாப்பிடறேன்’ என மிரட்டும் எண்ணம் உடையவர். காலை ஐந்து அடித்ததும், பால்காரன் வந்தானோ இல்லையோ, அவருக்குக் காப்பி வந்தாக வேண்டும்.... ஜானகி, கணவரின் பலவீனத்தை உணர்ந்திருப்பவள். முதல் நாளிரவே, கொஞ்சம் பாலை எடுத்து 'ஃபிரிட்ஜில் வைத்து விடுவது வழக்கம். பால்காரன் தாமதித்தால், அந்தப் பால் கைகொடுக்கும் தெய்வமாக இருக்குமே!

    மணி என்னன்னு கேட்டேன்; காதில் விழுந்துதா? வர வர மனுஷனுக்கு மரியாதை கூட இல்லாமப் போயிடுத்து. வயசானா அவ்வளவு தான்.... -ராமசாமி முணு முணுத்தபடி எழுந்தார்.

    மணி அஞ்சரை. உங்க காப்பி ரெடியா கொண்டு வரேன்! ஜானகி உள்ளே நகர்ந்தாள்.

    கணவருக்குக் காப்பியைக் கொடுத்து விட்டு மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

    மனுஷனுக்குக் காப்பி குடுத்தால், கொஞ்சம் நின்னு கையோட தம்ளரை வாங்கிண்டு போறது.... அப்படி என்ன அவதிபவதி அங்கே? -அதட்டலுடன் காப்பியை ஒரே மூச்சில் குடித்துவிட்டு தம்ளரைக் கீழே வைத்தார் ராமசாமி.

    சமையலை முடித்துவிட்டுக் கோவிலுக்குப் போக வேண்டும்..... ஆபீஸ் போகிற நாட்டுப்பெண், பிள்ளை இருவருக்கும், மத்தியான டிபன் கையில்; சிறியவன் காமேஷ் அதிகாலையிலேயே, பாடியில் இருக்கும் ஆபீஸிற்குப் போகவேண்டும். அதனால் அவனுக்குக் கையில் ஏதாவது சித்ரான்னம் டப்பாவில் போட்டுக் கொடுக்க வேண்டும்....

    சசிகலா படுக்கை அறைக் கதவை காலை ஏழு மணியளவில்தான் திறப்பாள். ஆபீஸில் வெட்டி முறிப்பதால், வீட்டு வேலைகளை விரலால் கூடத்தொடாத ஜாதி அவள்.

    வெள்ளிக்கிழமையும் அதுவுமாக வீட்டு மருமகள் எழுந்து வந்து வாயிலில் கோலமிட்டு, குளித்து, ஸ்வாமி விளக்கேற்றி.... ஊஹூம்! ஜானகி அதை மனதால் கூட ஸ்மரிக்க முடியாது. சசிகலா மேக்ஸியில், கலைந்த கூந்தல் கழுத்துவரை புரள, தூக்கக் கலக்கத்தோடு ஏழு மணிக்கு சுப்ரபாதத்துடன் எழுபவள்.

    அம்மா! நாங்க பல் தேய்ச்சாச்சு.... -ஜயந்தன் குரல் கொடுத்தபடி, டைனிங் டேபிளருகில் மனைவியுடன் அமருவான். ஜானகி சுடச்சுடக் காப்பியைக் கலந்து இரு பீங்கான் கோப்பைகளில் நிரப்பி, அங்கே கொண்டு வைக்க வேண்டும். ஆரம்ப நாட்களில் ஜானகி அந்த வேலையை ஆசையாகத் தான் செய்யத் துவங்கினாள். ஆனால், சசிகலா மாமியாரின் அருமை தெரியாமல் அவளை அடிமையாக நினைக்க ஆரம்பித்ததும் ஜானகி வெதும்பிப் போனாள்.

    ஏண்டா ஜயந்தா! உன் பொண்டாட்டியை. உள்ளே வந்து காப்பி கலந்து எடுத்துண்டு போகச் சொல்லு. உனக்கும் குடுக்கச் சொல்லேன். -ஜானகி ஜாடையாக மகனிடம் கூறிப் பார்த்தாள்.

    'அம்மா! அவளுக்கு ஆபீஸ் போய்த்தான் பழக்கம். சமையல் நாஸ்தி. அவ காப்பி போட்டா சகிக்காது. அதான் உன்னையே போடச் சொல்றேன். உன் கைக் காப்பிக்கு ஈடாகுமா?' - என்று சிரித்து தாஜா செய்து விட்டான் ஜயந்தன்.

    உன் பிள்ளைகிட்ட என்ன தூது சொல்றது? மாட்டுப் பொண்ணைக் கூப்பிட்டு நேரா சொல்ல வேண்டியது தானே? உனக்கு அவளை வேலை வாங்கத் துப்பில்லே! ராமசாமி மனைவியைக் கடிந்து கொண்டார்.

    உண்மைதான்! தாலி கட்டிய உரிமைக் கணவரிடமே உதவி கேட்டு வாங்கத் திறமை இல்லாதவள். அந்நிய வீட்டிலிருந்து வந்த பெண்ணை வேலை வாங்க முடியுமா என்ன!

    காமேஷ் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். மம்ம்! காப்பி! என்றபடி சமையலறைப் பக்கம் வந்தான்.

    ஜானகி மகனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்த வீட்டில் ஒருதுளி பாசமாவது அவள் பால் காட்டும் உயிர் ஒன்று இருக்கிறது என்றால் அது நிச்சயம் காமேஷாகத்தான் இருக்க முடியும்!

    பல் தேச்சுட்டேன்! வரிசைப் பற்களைக் காட்டி இலேசாகச் சிரித்தான். கட்டைகுட்டையான தேகவாகு. நிறத்திலும், உருவத்திலும் அம்மா பிள்ளை. இருபத்தைந்து வயதில் முறுக்கு ஏறிய இளமை. பிரஷ் மீசை, குட்டை கிராப்.

    காப்பியைக் கையில் கொடுத்து விட்டு, கோவிலுக்குப் போகணும். மணி ஆயிண்டே இருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை, கற்பகாம்பாளுக்கு விசேஷ அலங்காரம் இருக்கும்....

    சாப்பாட்டு மேஜைமீது வரிசையாக பச்சை, மஞ்சள், நீலம் என்று பிளாஸ்டிக் பைகளில் அவரவர் டிபன் டப்பாக்களைப் போட்டுத் தயாராக வைத்தாள் ஜானகி.

    காமேஷ்! நீ குளிச்சு புறப்பட்டுக்கோ. தட்டில டிபனை எடுத்து வச்சுட்டுப் போறேன். இன்னிக்கு எலுமிச்சம்பழ சாதமும், தொட்டுக்க வறுவலும் வச்சிருக்கேன்..... என்றபடி ஜானகி சமையலறைக் கதவை மூடி, விட்டு, முன்னறைப் பக்கம் வந்தாள்.

    இரண்டு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்புப் பகுதி அவர்களுடையது. மயிலாப்பூர் வட்டாரத்திலேயே வேண்டும் என்பதற்காக, விவேகானந்தா கல்லூரியை ஒட்டிய சாலையில் அதை வாங்கி விட்டிருந்தார்கள். இரண்டு பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு படுக்கை அறையை ஆக்கிரமித்துக் கொள்ள, வரவேற்பறை திவானே தஞ்சமாகிப் போனார் ராமசாமி.

    இருக்கிறதைக் கொட்டி வீடு வாங்கு வாங்குன்னு புடுங்கினே. இப்ப படுக்க இடமில்லாம பாயைச் சுருட்டிண்டு அலைய வேண்டியிருக்கு! அவஸ்தைப்படு.... நன்னாப்படு! -ராமசாமி பற்களைக் கடிப்பார். அவரைப் பொறுத்தவரை, திவானில் சுகமாக உறங்கினார். ஆனால் ஜானகி....? அவளும்தான் அந்த வீட்டில் பணம் போட உதவியவள். ஆனால், கீழே விரித்திருந்த ரத்னக் கம்பளத்தின்மீது பாயைப் போட்டுப் படுத்துறங்கினாள்.

    இரண்டாவது ‘டோஸ்' காப்பியை எடுத்துக் கொண்டு ஜானகி முன்னறைக்குள் வந்தாள்.

    காலைத் தினசரித் தாளில் மூழ்கி இருந்தவர் நிமிர்ந்தார். சசி எழுந்திருக்கலை. எழுந்தா அவ காப்பி போட்டுக்கட்டும். நான் அம்பாளைப் பாத்துட்டு ஓடி வந்துடறேன். ஜானகி மெல்லக் கூறினாள்.

    உன் நாட்டுப்பெண் சமாச்சாரம் எனக்குத் தெரியாது. எல்லாம் நீ வந்து பாத்துக்கோ! -எரிந்து விழுந்தபடி காப்பியை வாங்கிக் கொண்டார்.

    ஜானகி வேகமாகக் கோவிலுக்கு விரைந்தாள். மார்கழி பஜனைக் கோஷ்டிகளில் ஒன்று அப்போதுதான் கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்ப ஆரம்பித்திருந்தது.

    கற்பகாம்பாள் நடையில் கும்பல் சிறிது குறைவாக இருந்தது. அம்பாள் பூப்பாவாடையில் ஜாஜ்வல்யமாக நின்றிருந்தாள்.

    அம்மா தாயே! உன்னைப் பாக்கணுமின்னு ஓடோடி வந்தேன். எனக்கு இன்னும் பொறுமையும், இன்னும் உடம்பில் தெம்பும்குடும்மா.... என் குழந்தைகளை நல்ல படியாவை.... தீபாராதனையின் போது உள்ளம் உருக வேண்டிக் கொண்டபடி ஜானகி கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அவள் மனத்தில் ஒரு புதிய பலம் பெற்ற உணர்வு.

    வீடு திரும்பியதும், அங்கே ஒரே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஏம்மா, எங்கே போனே இத்தனை நாழி? சசிக்கு டிகாக்ஷன்: இருக்கிற எடம் தெரியலே... காப்பியே கெடைக்கலே!-குற்றம் சாட்டினான் ஜயந்தன்

    எல்லாத்தையும் போட்டது போட்டபடி கோவில் பைத்தியம் கிளம்பிட்டா... அப்பவே சொன்னேன். ஒரு நாள் இவ ரொம்ப அவதிப்படப்போறா! - ராமசாமி பற்களைக் கடித்தார்.

    ஆபீஸுக்கு நேரமாச்சு. காப்பி வேணாம், சாப்பிட்டுடறோம். -சசிகலா பற்ந்தாள்.

    அசுரபலத்துடன் ஜானகி அனைவரையும் அனுப்பி விட்டு சமையலறைக்குள் புகுந்தபோதுதான், காலைமுதல் காப்பிகூடப் பருகவில்லை என்ற நினைப்பு வந்தது. 'இனி மேல் குடிக்கலாமா - மணி ஒன்பதரை....' மனத்தில் சந்தேகத்துடன் பாலையும், சர்க்கரையையும் கலந்து தம்ளரில் ஊற்றினாள்.

    எனக்குத் தட்டு வச்சுடறியா? பசிக்கிறது.... ராமசாமியின் குரல் அவளை மேலே எதுவும் செய்ய ஒட்டாமல் நிறுத்தியது.

    பசி வந்திடப் பத்தும் பறந்து போகிற வர்க்கம் அவர்! ஆபீஸ் நாளில் காலை ஒன்பதிற்குள் சாப்பிட்டுப் பழக்கப்படுத்திவிட்ட வயிறு ஓய்வுபெற்ற பின்பும் விடவில்லை.

    ஜானகி மறு பேச்சின்றித் தட்டை சாப்பாட்டு மேஜை மீது வைத்தாள். வாயில் அழைப்புமணி ஒலித்தது.

    கீழ் ஃப்ளாட்டை வாங்கினாலே தொல்லை தான், அட்ரஸ் தெரியாதவனெல்லாம் நம்ம வீட்டு 'பெல்லை’ அமுக்கிக் கேட்பான்!-பசிக் கோபத்தில் உறுமினார் ராமசாமி.

    கதவைத் திறந்தாள் ஜானகி. தாம்பரத்திலிருந்த பெண் ஆனந்தி வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தாள்.

    கோவிலுக்குப் போய்ட்டு வரலாம்னு கிளம்பினேன். அப்படியே, இங்க வந்து சாப்பிட்டுட்டுப் போகலாம்னு.... ஒரே பசி பிச்சுக்கறது. கார்த்தால ஒருவாய் காப்பி சாப்பிட்டது.... - மடமட வென்று பொரிந்தபடி ஆனந்தி உள்ளே வந்து, சமையலறைக்குள்ளிருந்து ஒரு தட்டை எடுத்து வந்து அப்பாவின் அருகில் அமர்ந்து விட்டாள்.

    கதவை மூடிவிட்டு, தகப்பனுக்கும் மகளுக்கும் சாதம் பரிமாறிய ஜானகிக்கு, காப்பிகூட சாப்பிட முடியாத அசுரப்பசி வயிற்றைக் கிள்ளி எடுத்தது. ஆனால் அம்மாவிற்குப் பசிக்கும் என்பதை யார் எண்ணிப் பார்ப்பார்கள்? ஜானகி உதட்டைக் கடித்துத் துயரை விழுங்கிக் கொண்டாள்.

    2

    சசிகலா முகம் சிவக்க, மாமியாரை உறுத்துப் பார்த்தாள். அலட்சியமாகக் கத்தரித்துவிடப்பட்ட கூந்தல், தோள் மீது புரண்டு கொண்டிருந்தது. அன்று ஆபீஸிற்கு மட்டம் போட்டுவிட்டு, தோழி ஒருத்தியின் வீட்டிற்குப் புறப்பட்டு விட்டிருந்தாள். அவளிடம் ஜானகி மெல்ல ஆரம்பித்தாள்.

    இந்த வருஷம் பண்டிகை எல்லாம் சீக்கிரமாவே வந்துடறது....

    அதுபாட்டுக்கு வரப்போறது, நமக்கென்ன? அமெரிக்காவிலிருந்து வந்த தோழியைப் பார்க்கப்போகும் அவசரம் அவளுக்கு. கணவனது ஆபீஸ் காரை எடுத்துப் போகமுடியாத கோபம் வேறு.

    என்னைக் கொஞ்சம் பெஸன்ட் நகர்வரை டிராப் பண்ணிட்டுப் போங்க ஜயந்த்! திரும்ப எப்படியாவது வந்துடறேன், -கணவனிடம் கொஞ்சலாகக் கூறியும் எதுவும் நடக்கவில்லை.

    இன்னிக்கு எங்க எம்.டி.வரார். எனக்கு சீக்கிரம் போகணும் சசி! அதிலயும், ஆபீஸ் காரை இன்னிக்கு பாத்து உபயோகிச்சிட்டா தகராறா ஆயிடும். ஸாரி டார்லிங்! ஜயந்த் ஆபீஸ் புறப்பட்டுப் போனதும், அவளது சீற்றம் யார்மேல் திரும்புவது எனப் பீறிட ஆரம்பித்தது.

    இல்லே திருவாதிரை வருதே.... நல்ல பாகுவெல்லம் ஒரு கிலோ வாங்கணும். தேங்காய், நெய் எல்லாமே வேணும்...

    இந்த மாசம் சாமான் லிஸ்ட்படி எல்லாம் வாங்கியாச்சு இல்லியா?

    நாட்டுப்பெண்ணின் சீற்றம் ஜானகிக்குப் புரிந்தது. இருப்பினும், அடுப்படியில் நளபாகம் அவள் தானே செய்ய வேண்டும்? நாள் கிழமை என்றால் நாக்கைத் தீட்டிக் கொண்டு, அவள் கணவர் முதல் பிள்ளைகள் வரை சாப்பாட்டு மேஜைமீது கூடி விடுவார்களே.....

    சாதாரண நாட்களாக இருந்திருந்தால் ஜானகி, நாட்டுப்பெண்ணிடம் சொல்லி இருக்கமாட்டாள். ஜானகியின் பிறந்தவீட்டுப் பணத்தின் வட்டி எப்போதும்

    Enjoying the preview?
    Page 1 of 1