Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Engal Bhoomi
Ithu Engal Bhoomi
Ithu Engal Bhoomi
Ebook302 pages2 hours

Ithu Engal Bhoomi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைய பின்னணியில் இந்தக்குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சிகளும் மனப்போராட்டமுமே இந்த நாவலின் பின்னணி. அதனால் இன்று நம்மிடையே நடமாடும் பெரியோர்கள், புத்திசாலிகள், தந்திரசாலிகள் அனைவருமே இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். நாவலுக்கு அதனால் நிஜ சொரூபம் கிடைக்கிறது. “இதுகற்பனை அல்ல; நம்மிடையே நடப்பது; இதைப் புரிந்து கொண்டு நாம் நம்மைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும்” என்ற உணர்வை உண்டாக்குகிறது.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580127507061
Ithu Engal Bhoomi

Read more from Lakshmi Subramaniam

Related to Ithu Engal Bhoomi

Related ebooks

Reviews for Ithu Engal Bhoomi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Engal Bhoomi - Lakshmi Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இது எங்கள் பூமி

    Ithu Engal Bhoomi

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    என்னுரை

    இன்று நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது எங்களுடைய காலத்தில் இதைவிட, நாடு நன்றாக இருந்தது. மக்கள் நேர்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்தார்கள். இன்று நிலைமை மிகவும் சீர்குலைந்து விட்டது! என்று சொல்லும் சென்ற நிகழ்கால - தலைமுறையினர் பலரும் உண்டு. அதற்கு எதிராக இன்றைய தலைமுறையினர் இப்படித்தான் இன்று வாழ்ந்தாக வேண்டும். உங்களுக்குப் பிழைக்கத் தெரியவில்லை! என்று சவால் விடுவதும் உண்டு.

    நிலைமை இப்படியே போக முடியுமா? அடுத்த தலைமுறையினருக்கு, எத்தகைய வருங்காலத்தை நாம் விட்டு வைக்கப்போகிறோம்? சுதந்திரம் பெற்ற நமது நாட்டில் அவர்களுக்கு எத்தகைய சுதந்திரம் கிடைக்கும்? இதைத்தான் எடுத்துச் சொல்லுகிறது இந்த நாவல். சுதந்திரம் பெற பாடுபட்ட தலைமுறை, சுதந்திரம் வந்த போது அதை ஏற்று நேர்மையாக வாழ்ந்த தலைமுறை, இன்று எப்படியாவது சமாளிக்க முயலும் தலைமுறை, வருங்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைய தலைமுறை ஆக நான்கு தலைமுறையினர் இதில் வருகிறார்கள். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஒவ்வொருவரும் இந்த நாட்டை அவரவர் கண்ணோட்டத்தில் தியாக பூமியாகவும், கர்ம பூமியாகவும், தந்திர பூமியாகவும், ஞானபூமியாகவும் பார்க்கிறார்கள்.

    இன்றைய பின்னணியில் இந்தக்குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சிகளும் மனப்போராட்டமுமே இந்த நாவலின் பின்னணி. அதனால் இன்று நம்மிடையே நடமாடும் பெரியோர்கள், புத்திசாலிகள், தந்திரசாலிகள் அனைவருமே இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். நாவலுக்கு அதனால் நிஜ சொரூபம் கிடைக்கிறது. இதுகற்பனை அல்ல; நம்மிடையே நடப்பது; இதைப் புரிந்து கொண்டு நாம் நம்மைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை உண்டாக்குகிறது. இந்த முயற்சி அந்த விதத்தில் ஒரு புதுமை என்றே நான் எண்ணுகிறேன். படித்து மதிப்பிட வேண்டியது வாசகப் பெருமக்களின் பொறுப்பு.

    இந்த விதத்தில் இந்த நாவல் அமையவேண்டும் என்று பெரிதும் விரும்பியவர் எனது நண்பரும் வழிகாட்டியுமான ஆசிரியர் திரு. மணியன். இந்த நாட்டின் நன்மையிலும் எதிர்காலத்திலும் மிகுந்த அக்கறை கொண்ட தேசபக்தர் திரு. வானதி திருநாவுக்கரசு இந்த நாவல் அமையவும், நல்ல முறையில் புத்தகமாக வெளிவரவும் இந்த இருவரும் மிகுந்த அக்கறை கொண்டது எனது நற்பேறு என்றே கருதுகிறேன்.

    குடும்பத்தில் அனைவரும் படித்துணர வேண்டிய வகையில் கருத்துக்களை என்னால் இயன்றவரை அளித்திருக்கிறேன். ஓரளவாவது இதனால் நல்லுணர்வு பொறுப்புணர்ச்சி மக்களிடையே ஏற்பட இது உதவுமானால் அதையே எனது முயற்சிக்குக் கிடைத்த பரிசாகக் கருதுவேன்.

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    எம். 89/2

    பெசண்ட் நகர்

    சென்னை -90

    3-3-95

    1

    கங்கை என்பது ஒவ்வொரு இந்தியனின் இரத்தத்திலும் ஓடுகிற கருணையாக இருக்கும் வரை அது வற்றவே வற்றாது!

    -நா. பார்த்த சாரதி

    விநாயகர் கோவில் மூலையில் ஒரு கணம் நின்றார் ரத்தினசாமி. கண்களை மூடி ஒருகணம், காலைச்சுடரொளிக்கு நிகராக ஒளிரும் கருவறை விநாயகரை மனத்தில் நிறுத்திக் கொண்டார். அந்த நினைவில் அவருடைய முகம் மலர்ந்தது. அமைதியிலும் வைராக்கியத்திலும் வருகிற மலர்ச்சி அது, வாழ்க்கையை அனுபவித்துப் பக்குவம் அடைந்தவருக்கு வருகிற மலர்ச்சி.

    துண்டை எடுத்துத் தோள்மேல் போட்டுக்கொண்டு, மேலே நடக்கத் தொடங்கினார். வாதநாராயணமரத்தின் இலை அடர்ந்த நிழலில், அப்போதுதான் கண் விழித்துச் செருப்பு ரிப்பேர் செய்யும் பையன் அவரைப் பார்த்து, கண்ணாடித்தாத்தா! இன்னைக்கு வெள்ளிக்கிழமை... என்றான். ரத்தினசாமி முகத்தைத் தாழ்த்திக் கண்ணாடி வளையத்துக்கு மேலே பார்த்தார். சுண்டலும் வாழைப்பழமும் சாயங்காலம்டா! இப்பத்தான் விடிஞ்சிருக்குது! என்று பொக்கை வாய் தெரியச் சிரித்துக் கொண்டார். போன வருஷம் கடைவாய்ப் பல் இருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது. வழியில் பத்துமாடிக் கட்டடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். வேலை செய்கிற ஆட்கள் போட்டிருந்த குடிசையிலிருந்து அடுப்புப் புகை எழுந்து கொண்டிருந்தது. கூடவே கண்ணதாசனின் பாடல் ஒன்றும் புகையோடு தவழ்ந்து வந்து செவியோடு கலந்தது.

    "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்.

    அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்.

    உன் இறைவன் அவனே! அவனே!

    எனப்பாடும் மொழி கேட்டேன்!"

    குரலின் இனிமையில் மனம் நெகிழ்ந்து நின்றபோது, குட்மார்னிங் அங்கிள்! என்று ஒரு கீச்சுக்குரல் கத்திற்று. அவருடைய மேல் துண்டைப் பின்னாலிருந்து இழுத்தது. சத்தமில்லாத சிரிப்புடன் திரும்பிப் பார்த்தார். எட்டு வயதுப் பெண். செம்பட்டை மயிர். உடம்பு கறுப்பு நிறம். புன்சிரிப்பில் தெரிந்த பற்களின் பளீர் வெள்ளை. கையில் கட்டாக மெழுகுவர்த்திகள்.

    அட, சாந்தியா? குட்மார்னிங்! என்ற ரத்தினசாமி குழந்தையை நான்கு வினாடிகள் கண்ணெடுக்காமல் பார்த்தார். அதன் முகம் சோர்ந்து போயிருந்தது, அந்த விடியற்காலை வேளையிலேயே!

    ஒரு வர்த்திகூட விக்கலேங்க, வீட்டுக்குப் போனா மம்மி திட்டும்! என்றது. குரல் இழுத்த திரியாய் மங்கி அடங்கிற்று.

    காலையிலே சர்ச்சுக்குப் போறவங்க வாங்குவாங்களே?

    இன்னிக்கு யாரையும் காணோம். பெட்டியிலே இருக்கிற வர்த்தி பூரா அப்படியே இருக்கு. இப்பல்லாம் சர்ச்சுக்கு வர்ற கூட்டம் கூடக் குறைஞ்சு போச்சு அங்கிள்! என்றாள் பரிதாபமாக.

    நல்லது. எனக்கு ஒரு கட்டு கொடு என்று வாங்கிக் கொண்டு ஐந்து ரூபாய் நோட்டை நீட்டினார். முகம் மலர்ந்து அதை வாங்கிக் கொண்டு மெழுகுவர்த்திக் கட்டை நீட்டினாள் குழந்தை. அவசர அவசரமாகச் சுருக்குப் பையில் இருந்த மிச்சம் இருபது பைசாவைக் கொடுக்கத் தேடினாள்.

    வாண்டாம். நீயே வச்சுக்கோ! என்று மேலே நடக்கத் தொடங்கினார். ‘பட்பட்பட்பட்’ என்று ஒரு மோட்டார் சைக்கிள் அவரைக் கடந்து பறந்தது. அடிவயிற்றைக் கலக்கும் ஓசை. அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே போனான் அந்த வாலிபன் - அந்தச் சாலையில் அவரைப் போன்ற வயது முதிர்ந்த கிழவர்கள் நடப்பதே தப்பு என்று சொல்லுவதைப்போல! அதுவும் அவர் சட்டை போடாத, மேல்துண்டு போர்த்திய கிழவர். எவ்வளவு தூரம் மரியாதை இருக்கும்?

    ரத்தினசாமி அந்த சாந்தோம் நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் சாலையில் கார்கள் வருவதே அபூர்வம் குதிரை வண்டி, கைரிக்ஷா, டிராம் - இப்படித்தான் கண்களில் தென்படும். இப்போது அவை எதுவுமே இல்லை. அவற்றின் சகாப்தம் முடிந்து விட்டது. நடந்து கொண்டே ராம ஜபம் செய்து கொண்டு போவார். காலை நேரத்துச் சூரியனைக் கண்ணை இடுக்கிப் பார்த்து வணங்கிக் கொண்டே போவார். மாதா கோவில் மணி அடிக்கும். எப்போதோ லயோலா கல்லூரியில் படித்த போது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து செய்த பிரார்த்தனை ஞாபகம் வரும், அந்த மணியோசை கேட்கும் போது...

    தோள் மேல் தொங்கவிட்டுக் கொண்ட டிரான்சிஸ்டர் செட்டைத் திருகியதும், அது ஜீவன் வந்து பேசத் தொடங்கியது. காலை நேரத்தில் குறள் விளக்கம்... நெஞ்சைத் தொட்டு நீவிக் கொடுக்கிற மாதிரி குரலில்... மெதுவாக... உயிர்களிடத்தில் அன்புகாட்ட வேண்டியதைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    உயிர் நிலையே அன்பை அடிப்படையாகக் கொண்டதுதான் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் பணத்துக்காக போட்டிக்காக, அரசியல் பகைமைக்காக நடக்கும் கொலைகள் எத்தனை எத்தனை? காலையில் தினசரியைப் பிரித்தால் கண்ணிற்படும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் எவ்வளவு? மதம், ஜாதி, இனம் என்று நடக்கிற கொலைகள், குண்டு வெடிப்புகள் எவ்வளவு? காவி உடையில்கூட நடைபெறும் கெட்ட காரியங்கள் எத்தனை? உலகம் ஏன் இப்படி மாறி விட்டது? இன்னொரு திருவள்ளுவர் வந்தால்தான் திருந்துமா?

    சற்று வேகமாக நடந்தார் அவர். யாரையோ திடீர் என்று காப்பாற்றுவது போலப் பெரிய சத்தத்துடன், ‘பிரேக்’ போட்டுக் கொண்டு ஒரு கார் நின்றது பக்கத்தில் உள்ளவர்கள் கூட அதிர்ந்து போனார்கள். அந்தக் காரைப் பார்த்து!

    பெரியவரே! நடைபாதையிலே ஏறி நடக்கிறது தானே? உயிர் மேலே ஆசை இல்லையா? ரொம்ப வயசாகிப் பூட்டுதா டிரைவரின் முரட்டுக்குரல். அதற்குரியவரை கூர்மையான பார்வையுடன் நிமிர்ந்து பார்த்தார். மேலே வெள்ளை போர்டு. கீழே ‘எல்’ போர்டு. யாரோ ஒரு கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கிற நிறுவனம் ஒரு பெண்மணி கார் ‘ஸ்டீயரிங்’கைப் பிடித்துக் கொண்டு மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள். நடைபாதையை விட்டு இறங்கியது தப்புதான். அங்கே வரிசையாகக் கூடைக்காரிகள் கடை பரப்ப ஆரம்பித்துவிட்டதால், சற்றுச் சாலையில் இறங்கி நடக்க வேண்டியதாயிற்று. காலை நேரத்தில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேறு இடம் இல்லையா? அதற்காக இப்படி ஒரு வசவா? யார் கேட்பது?

    நடைபாதையில் ஏறி நடக்கத் தொடங்கினார். சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்கு இரண்டு நாள்கூட இல்லை. தெரு விளக்குக் கம்பங்களை இணைத்துக் குறுக்காகவும் நெடுக்காகவும் மூவர்ணக் கொடிகளைக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். காற்றில் காகித வர்ணக் கொடிகள் அலைந்தன.

    சுதந்திரம் வந்து நாற்பத்தேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. யாருக்குச் சுதந்திரம்? எதில் சுதந்திரம்? எந்த அளவுக்குச் சுதந்திரம்? அதைப் பெற அந்த நாளில் அவர் எவ்வளவு சத்தியாக்கிரகங்களில் கலந்து கொண்டிருப்பார்? ராஜாஜியோடும், காமராஜரோடும் ஜெயிலுக்குப் போயிருப்பார்? தெருவில், அலுவலகங்களுக்கு முன்னால், வெளி நாட்டுத் துணி விற்கும் இடங்களுக்கு முன்னால், தடியடி வாங்கி இருப்பார்? போலீசாரின் கண்ணீர்ப்புகை குண்டுகளில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டிருப்பார்?

    "நாற்பது வேலி நிலம் இருக்குது. நெல்லும் கரும்பும் கொள்ளையா விளையுது. பணத்தை எண்ணிச் சாத்தியமில்லை! உனக்கேன்டா தலையெழுத்து? வெள்ளைக்காரன் அரசாங்கத்தை நீ கதர்த்துணி கட்டிக்கிட்டு விரட்டிப்புடப் போறியா? படிச்ச படிப்பை வீணாக்கிட்டு பயிர் பச்சையைக் கவனிக்கிறதை உட்டுப்புட்டு, ஊர் ஊரா மறியல் பண்ணி ஜெயிலுக்குப் போறியே? நியாயமாடா இது? பெத்த அப்பனுக்குச் செய்யுற கடமையாடா இது?

    அவருடைய தந்தை கையைத் தூக்கிக் கொண்டு, உரத்த குரலில் புலம்புவதைப் போலச் சொன்ன சொற்கள் இன்னும் காதில் விழுவதைப் போல இருந்தது. அப்பாவின் அந்தக் கண்கள் அடிக்கடி நீர்வடியும் வலதுக் கண் புகையிலைக் கரகரப்பில் இறுகிப்போன கண்டத்திலிருந்து உடைந்து வரும் குரல் - வயல்வெளியில் வெயிலில் நடந்து கறுத்து முரடாகிப் போன கைகள் - அவற்றைப் பார்க்கும்போது அவருக்குத் தன் மீதே சந்தேகம் வரும்; தாய்நாடு என்று சொல்லிக் கொண்டு தந்தையின் சாபத்துக்கு ஆளாகிறோமோ என்ற சந்தேகமும் கூட வரும்.

    ஆனால் அன்று அதற்கு ஒரு பொருள் இருந்தது. அந்த வைராக்கியத்துக்கு ஒரு நம்பிக்கை வேர் இருந்தது. முதுகில் அடி விழுந்தாலும், வாங்கிக் கொள்ளும்போது, மனத்தில் வருங்காலச் சந்ததியாருக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்துக் காப்பாற்றப் போகிறோம் என்ற திருப்தி இருந்தது. அதற்குமுன் அப்பா கோபித்தது கூட ஒரு பொருட்டாக இல்லை. அம்மா அழுது கொண்டே சோறு போட்டதுகூட வேதனை அளிக்கவில்லை.

    இன்று சுதந்திரம் வந்துவிட்டது. ஆனால் எங்கே திரும்பினாலும் மனம் வேதனைப்படுகிறது. அந்தச் சாலை. வெளி வானம், கடற்கரை, எங்கு பார்த்தாலும் அந்த ஏமாற்றம் எல்லாவற்றிலும் பம்முவது போலத் தெரிந்தது. காலை நேரத்தில் குப்பை பொறுக்கும் பரட்டைத்தலையன், தூக்க முடியாமல் தண்ணீர்ப் பானையைச் சுமந்து செல்லும் சிறுவன், நடைபாதையில் கடையைப் பரப்பி அழுகல் தக்காளியைக் கூறுகட்டி வைத்து விற்க முயலும் கிழவி. சுதந்திரதின விழாவுக்கு வருகை தரும் பெரும் புள்ளிகளைப் பற்றிய சுவரொட்டிகளை, அவசரமாகச் சுவரில் ஒட்டிக்கொண்டே போகும் வாலிபன் - யாரைப் பார்த்தாலும் அதன் உருவங்களாகத் தெரிந்தார்கள். அடிமனத்தில் உள்ளே எங்கேயோ கசந்தது.

    என்ன ரத்தினசாமி? உங்க பையன் ஜவஹர் என்ன சொல்றான்? ‘ஹோம் செக்ரட்டரி’யாக டில்லியில் இருந்து ‘ரிடையர்’ ஆனவன் ஆச்சே? இந்தக் குண்டு வெடிப்புக்கெல்லாம் என்ன காரணம்? காஷ்மீர் எல்லைப் பிரச்சினையா? அயோத்தி கோவில் பிரச்சினையா?

    கைத்தடியை ஊன்றிக்கொண்டு ஜிப்பாவும் வேஷ்டியுமாக நாலைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். காலை நேரத்தில் அவர்கள் அங்கே கூடுவார்கள். அன்றைய அரசியலை அக்குவேறு ஆணிவேறாக அலசுவார்கள். அநேகமாக எல்லோரும் அரசாங்கத்தில், பெரிய கம்பெனிகளில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். அன்றாடம் வரும் செய்திகளைப் படித்துவிட்டு, அவர்கள் பதவியில் இருக்கும்போது நடந்ததை ஒப்பிட்டுப் பேசுவார்கள். மன்மோகன்சிங்கை தேஷ்முக்குடன், டி.டி.கேயுடன் ஒப்பிட்டுப் பார்த்து எடை போடுவார்கள்.

    ராஜாஜி அன்னைக்கே சொன்னார். நரசிம்மராவ் இப்பத்தான் முழிச்சுக்கறார். லைசென்ஸ் பர்மிட் ராஜ்ஜியம் வேண்டாம்னு அடிச்சுண்டார், - அப்ப சோஷலிச மோகம். யாராவது கேட்டாத்தானே?

    கங்கையையும் காவேரியையும் இணைக்கணும்னு சுதந்திரம் வந்தவுடனே சி.பி. சொன்னார். அவர் சொன்னார் என்கிறதுக்காக நாம் அதைப் பொருட்படுத்தலே. அன்னைக்கே திட்டத்தை எடுத்துண்டிருந்தா இன்னைக்கு அஸ்ஸாமிலே வெள்ளம் இராது. மேட்டூர்லே தண்ணி குறைஞ்சிராது. மெட்ராஸிலேகூட கிருஷ்ணா நதி தண்ணீர் வந்திருக்கும்!

    அன்னைக்குச் சொன்னதைத்தான் கேட்காமப் போனோம். இன்னிக்காவது சிந்திக்கறோமா? தெற்கே ஓடுற ஆற்றையெல்லாம் இணைச்சுப் போடுங்கன்னு உதயமூர்த்தி கூட்டம் போட்டுச் சொல்லுறாரு. பாதயாத்திரை பண்றாரு. யாரு கேட்கிறாங்க? ஆளுக்கு ஆளு அவனவன் ஸ்டேட்டுலே தண்ணி கிடைச்சாப் போதும்னுட்டு, இழுத்து மூடிக்கிறானுக!

    இரைஞ்சு பேசாதேயும், அம்மா காதிலே விழுந்தா மறுபடியும் உண்ணாவிரதம் ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் சுக்லா டில்லியிலேருந்து பறந்து வரணும்!

    பெரிய நகைச்சுவைத் துணுக்கு வெடித்தாற்போல ஒரு சிரிப்பு எல்லோரிடமும் கோத்துக் கலந்து கொண்டது. ரத்தினசாமி அமைதியாக ஒரு பக்கம் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ‘தினமணிகதிரில்’ ‘சாவி’ இதைத்தான் ‘பார்க் – பெஞ்சு - பாலிடிக்ஸ்’ என்று போட்டுக் கொண்டிருந்தார். அவர் படித்து ரசித்துக் கொண்டிருந்ததுண்டு. அப்போது கண்ணில் (‘காடராக்ட்’ வந்து) திரைமறைக்கவில்லை. நிறைய படித்துக் கொண்டிருந்த காலம் அது.

    ஒங்க பையன் ஜவஹர் என்ன சொல்றாண்ணேன்? என்று மறுபடியும் முடுக்கினார் ஒரு பெரியவர். ரத்தினசாமி ‘சூள்’ கொட்டிக் கொண்டார். அவன் எதையும் பேசறதில்லை. கம்பெனி மீட்டிங்குக்குப் போயிட்டு வர்றதோடு சரி. - அனாவசியமா ‘பாலிடிக்ஸ்’லே கலந்துக்கிட்டா அரசியல் விரோதங்கள் வரும்னு சேர்மன் சொல்லி வச்சிருக்காராம். வீட்டுலே கூட அனாவசியமாப் பேசமாட்டான். டி.வி. நியூஸ் கேட்டுட்டுப் பெருமூச்சு விட்டுக் கொண்டு எழுந்து போறதோட சரி! என்று முகவாயைத் தடவி விட்டுக் கொண்டார் அவர்.

    உமக்கும் தியாகம், அது இதுன்னு பண்ணினதுக்கு ஒண்ணும் லாபம் கிடைக்கலே. உங்க பையனுக்கும் அவ்வளவு பெரிய உத்தியோகம் பண்ணினதுக்கு, மடக்கிச் சம்பாதிக்கத் தெரியலே விடும்! சுத்த அசடுகள், என்று கேலியாகச் சொல்லி அலுத்துக் கொண்டார் பெருமாள். அவர் ஷேர் மார்க்கெட் வியாபாரத்தில் சூரர்.

    வெயில் வந்து விட்டது. வெள்ளை வெயிலில் கசகசவென்று புழுக்கம் கிளம்பி விடும். அதற்கு முன்பாக வீடு திரும்ப வேண்டும். எழுந்து நின்றார். பார்க்பெஞ்ச் உறுப்பினர்களிடம் கையைக் குவித்து விடை பெற்றுக் கொண்டார். மெல்ல வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மூன்று கிலோமீட்டர் தூரம் திரும்பியாக வேண்டும்.

    நிமிர்ந்து பார்த்தார். அங்கே சாலைச் சந்திப்பில் என்ன என்ன கூட்டம்?

    சாலையின் முக்கியமான சந்திப்பை ஒட்டி அந்த விபத்து நடந்திருந்தது. இன்னும் காலை நேரத்துப் போக்குவரத்து நெரிசல் ஆரம்பமாகவில்லை சந்திப்பில் நிற்க வேண்டிய போலீஸ்காரரை இன்னும் காணோம். கார்களும் ஜனங்களும் நெரிசலில் தவித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

    சுமார் முப்பது வயது மதிக்கக்கூடிய அந்தப் பெண் லாரியில் அடிபட்டுக் கிடந்தாள். லாரிக்காரர் அடிபட்டதை உணர்ந்ததும் பறந்து போய்விட்டார். கூட்டம் சுற்றி நின்று கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் கிட்டே போய்த் தொடக்கூடத் தயங்கினார்கள். பஸ் வண்டிகள் போய்க் கொண்டே இருந்தன. அந்த இடத்தில் சற்று மெதுவாகப் போன போது எல்லோரும் எட்டிப் பார்த்தார்கள். சற்றுக் கோழை மனது உடையவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

    ரத்தினசாமிக்குப் பொறுக்கவில்லை. யாராச்சும் ஆட்டோவைக் கூப்பிடுங்களேன்! ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவோம் இரத்தம் போய்க் கொண்டிருக்கிறதய்யா! சீக்கிரம் போகலேன்னா உயிர் போயிடும்!

    அதை யாரும் பொருட்படுத்தவில்லை. ஒரு சிலர் தமக்குள்ளே பேசிக் கொண்டார்கள்.

    வாணாம்பா! செத்துப்பூட்டா நம்மள விசாரணை பண்ணுவாங்க!

    போலீஸ்காரன் நம்ம வூட்டாண்ட வந்து நின்னுக்கிட்டே இருப்பான்!

    இந்தப் பொண்ணு யாரோ? ஏன் இப்படியாச்சோ? நமக்கு விவகாரம் வந்து சேரும்!

    யாருமே அசையவில்லை. ஆனால் கூட்டம் கலையவில்லை. ரத்தினசாமி பதறிப்போனார். அவரே ஓடிப் போய் மேல் துண்டை விசிறி இரண்டு மூன்று கார்களை நிறுத்தப் போனார். ஆனால் அந்தச் சட்டை போடாத பெரியவரை யாரும் சட்டைபண்ணவே இல்லை!

    என்னடாது அநியாயம்? உசிரு போனாக்கூடக் கவலைப்படமாட்டாங்க போல இருக்குதே? ஐயோ பாவம்! யார் பெத்த பெண்ணோ? எவனுடைய பெண்டாட்டியோ? என்று கூறிக் குமுறினார்.

    சட்டென்று அவருடைய முகத்தில் - வெளிச்சம் கண்டது. அதோ, அந்தப் பச்சை நிற அம்பாசிடர் கார்! அது அவர்களுடைய வீட்டு வண்டி மாதிரி இருக்கிறதே? ஓடிப் போய் அந்தக் - கார் அவரைக் கடந்து போய் விடாமல் தடுத்து நிறுத்தினார். உள்ளிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்தது, ஜவஹர்தான் அது! அவர்களுடைய கார்தான்...

    என்னப்பா? என்ன ஆச்சு?

    ஆக்ஸிடெண்ட் ஜவஹர்! ஒரு பொண்ணு அடிபட்டுக் கிடக்கறா!

    உங்களுக்கு எதுவும் ஆகலியே? வண்டியிலே ஏறுங்க! வீட்ல விட்டுட்டுப் போறேன்!

    முடியாதுப்பா! மொதல்லே அந்தப் பெண்ணை ஆஸ்பத்திரிலே கொண்டு போய்ச்சேர்க்கணும், டிரைவரை இறங்கி வரச்சொல்லு!

    என்னப்பா? எதுக்கு வம்பை விலைக்கு வாங்குறீங்க?

    மொதல்லே கார்லே அந்தப் பெண்ணை ஏத்திக்க. ஆஸ்பத்திரிக்குப் போகணும்!

    Enjoying the preview?
    Page 1 of 1