Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaloora Koyilgal
Kadaloora Koyilgal
Kadaloora Koyilgal
Ebook314 pages1 hour

Kadaloora Koyilgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பயணக் கட்டுரைகளை எழுதுவதில் தனக்கென்று ஒரு சிறப்பான நடையையும் அமைப்பையும் வகுத்துக் கொண்டவர் மணியன். அவருடைய பயணக்கட்டுரைத் தொகுப்புகளை உடனிருந்து அமைக்க, நான் அவருக்கு உதவியாகச் சுமார் இருபது ஆண்டுகாலம் பணியாற்றி இருக்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் அவரிடம் “ஞான பூமிக்காக நீங்கள் ஏன் ஓர் ஆன்மிகப் பயணக் கட்டுரைத் தொடரை எழுதக் கூடாது?” என்று கேட்ட போது, “தாராளமாக எழுதலாம் - நீங்கள் என்னுடன் சேர்ந்து எழுதும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவதானால்!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர். அதற்கு ஒப்புக்கொண்டதன் பலனாக உருவானதுதான் “பொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள்” என்ற கட்டுரைத் தொடர். தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை, காவேரிக்கரை ஓரமாக அமைந்துள்ள ஆலயங்கள், ஆசிரமங்கள் ஆகியவை இதில் இடம் பெற்றன.

அதைத் தொடர்ந்து அதேபோல் இன்னொரு புனிதப் பயணக்கட்டுரைத் தொடரை எழுதக் காத்துக் கொண்டிருந்தோம். உடுப்பிக்கு நாங்கள் போயிருந்த போது ஸ்ரீ பேஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேசதீர்த்தரைத் தரிசித்தோம். அப்போது சுவாமிகள் மணியனிடம் “ஒன்று கவனித்தீர்களா? நமது பாரததேசத்தில் கிழக்குப் புறம் பூராவும் ஸ்ரீராமருக்கு உரிய புனிதத் தலங்களும் புண்ணிய நதிகளுமாகத் திகழ்கின்றன. அதேபோல மேற்குப் புறம் பூராவும் ஸ்ரீகிருஷ்ணருக்கு உரிய புனிதத் தலங்களும் புண்ணிய நதிகளுமாக அமைந்துள்ளன. கிழக்கே ராமர் - மேற்கே கிருஷ்ணர். இதை வைத்துக் கொண்டு ஏதாவது எழுதுங்களேன்!” என்றார். இந்தக் கருத்தை ஏற்றுத்தான், மணியனும் நானும் துவாரகையிலிருந்து கடலோரமாக, பூரி வரையில் அமைந்துள்ள புண்ணியத் தலங்களை - துவாரகா நாதரில் தொடங்கி ஜகன்னாதர் வரை- விவரித்து “கடலோரக் கோயில்கள்” என்ற கட்டுரைத் தொடரை “ஞானபூமி” யில் எழுதினோம்.

வாசகர்களிடம் அதற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, புனித கங்கையின் ஓரமாக அமைந்துள்ள ஆலயங்களையும் ஆசிரமங்களையும் பற்றி ஒரு புனிதப் பயணத் தொடர் எழுத விரும்பினார் மணியன். ஆனால் அந்தக் கனவு நிறைவேறாமலே போய் விட்டது.

இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அதன் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமும் கொண்டு, அதற்காகவே “ஞானபூமி” யை உருவாக்கி வளர்த்தவர் ஆசிரியர் மணியன். இந்த நூலை அவருடைய நினைவுக்குரிய அஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறேன்.

- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127504439
Kadaloora Koyilgal

Read more from Lakshmi Subramaniam

Related to Kadaloora Koyilgal

Related ebooks

Related categories

Reviews for Kadaloora Koyilgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaloora Koyilgal - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    கடலோரக் கோயில்கள்

    Kadaloora Koyilgal

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S.Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    பதிப்புரை

    புண்ணியத் தலங்களுக்குப் புனித யாத்திரை செய்து வருவது நம்மிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாக அமைந்துள்ளது. அப்படிச் செல்லும்போது, முக்கியமாகப் புனித நீராடித் திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிடுவார்கள். இராமேசுவரத்து மண்ணைக் காசியிலும், காசியிலிருந்து கங்கை நீரை இராமேசுவரத்துக்கும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றும் சொல்லுவார்கள். இவையாவும் பாரத புண்ணிய பூமியை, நாம் விரிவாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்களைச் சந்தித்து ஒருமைப்பாட்டு உணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ஏற்படுத்தப்பட்ட நடைமுறைதான்.

    இப்படிப் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசிக்கவும், புனித நீராடவும் விரும்பினாலும், பலருக்கு அதற்கேற்ற உடல் நிலையோ, பொருளாதார வசதியோ அமைவதில்லை. இருந்தாலும், இத்தகையதொரு தரிசனத்தை அனுபவிக்க வேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புகிறார்கள். அப்படிப் பட்டவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற அமைந்ததுதான் இந்தப் புனிதப் பயணக் கட்டுரைத் தொகுப்பு.

    ‘ஞானபூமி’ இதழின் ஆசிரியர் மணியனும், அவருக்குத் துணையாக இருந்து தொண்டாற்றி வரும் எஸ். லட்சுமி சுப்பிரமணியமும் சேர்ந்து இதேபோல, பொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள் என்ற, காவேரிக்கரை ஆலயங்கள், ஆசிரமங்கள் ஆகியவற்றைப் பற்றிய தொடரை எழுதி இருக்கிறார்கள். அதை நூல் வடிவில் வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது உலகப் புகழ்பெற்ற, மிக நீண்ட இந்தியக் கடற்கரையில் அமைந்துள்ள புனித ஆலயங்களைப் பற்றியும், மடங்களைப் பற்றியும் அவர்கள் சேர்ந்து எழுதியுள்ள, கடலோரக் கோயில்கள் என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளேன்.

    ஆசிரியர் மணியனின் பயணக் கட்டுரைகளை, மிகுந்த ஆர்வத்துடன் படித்தவன் நான். எனது இனிய நண்பர் எஸ். லட்சுமி சுப்பிரமணியம் ஆழ்ந்த கருத்துக்களை எளிய நடைமூலம் சொல்லும் பாங்கும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய, இரண்டாவது பயணக் கட்டுரைத் தொகுப்பை வெளியிடும் நல்வாய்ப்பும் எனக்கே, கிடைத்தது பற்றிப் பெருமை அடைகிறேன்.

    எழுத்தாளர் எஸ். லட்சுமி சுப்பிரமணியம் தனது எழுத்துப் பணியின் பொன் விழாவைக் கொண்டாடி இருக்கிறார்.

    முன்னுரை

    பயணக் கட்டுரைகளை எழுதுவதில் தனக்கென்று ஒரு சிறப்பான நடையையும் அமைப்பையும் வகுத்துக் கொண்டவர் மணியன். அவருடைய பயணக்கட்டுரைத் தொகுப்புகளை உடனிருந்து அமைக்க, நான் அவருக்கு உதவியாகச் சுமார் இருபது ஆண்டுகாலம் பணியாற்றி இருக்கிறேன்.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் அவரிடம் ஞான பூமிக்காக நீங்கள் ஏன் ஓர் ஆன்மிகப் பயணக் கட்டுரைத் தொடரை எழுதக் கூடாது? என்று கேட்ட போது, தாராளமாக எழுதலாம் - நீங்கள் என்னுடன் சேர்ந்து எழுதும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவதானால்! என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர். அதற்கு ஒப்புக்கொண்டதன் பலனாக உருவானதுதான் பொன்னி நதிக்கரையில் புனித ஆலயங்கள் என்ற கட்டுரைத் தொடர். தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை, காவேரிக்கரை ஓரமாக அமைந்துள்ள ஆலயங்கள், ஆசிரமங்கள் ஆகியவை இதில் இடம் பெற்றன.

    அதைத் தொடர்ந்து அதேபோல் இன்னொரு புனிதப் பயணக்கட்டுரைத் தொடரை எழுதக் காத்துக் கொண்டிருந்தோம். உடுப்பிக்கு நாங்கள் போயிருந்த போது ஸ்ரீ பேஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேசதீர்த்தரைத் தரிசித்தோம். அப்போது சுவாமிகள் மணியனிடம் ஒன்று கவனித்தீர்களா? நமது பாரததேசத்தில் கிழக்குப் புறம் பூராவும் ஸ்ரீராமருக்கு உரிய புனிதத் தலங்களும் புண்ணிய நதிகளுமாகத் திகழ்கின்றன. அதேபோல மேற்குப் புறம் பூராவும் ஸ்ரீகிருஷ்ணருக்கு உரிய புனிதத் தலங்களும் புண்ணிய நதிகளுமாக அமைந்துள்ளன. கிழக்கே ராமர் - மேற்கே கிருஷ்ணர். இதை வைத்துக் கொண்டு ஏதாவது எழுதுங்களேன்! என்றார். இந்தக் கருத்தை ஏற்றுத்தான், மணியனும் நானும் துவாரகையிலிருந்து கடலோரமாக, பூரி வரையில் அமைந்துள்ள புண்ணியத் தலங்களை - துவாரகா நாதரில் தொடங்கி ஜகன்னாதர் வரை- விவரித்து கடலோரக் கோயில்கள் என்ற கட்டுரைத் தொடரை ஞானபூமி யில் எழுதினோம்.

    வாசகர்களிடம் அதற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, புனித கங்கையின் ஓரமாக அமைந்துள்ள ஆலயங்களையும் ஆசிரமங்களையும் பற்றி ஒரு புனிதப் பயணத் தொடர் எழுத விரும்பினார் மணியன். ஆனால் அந்தக் கனவு நிறைவேறாமலே போய் விட்டது.

    இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அதன் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமும் கொண்டு, அதற்காகவே ஞானபூமி யை உருவாக்கி வளர்த்தவர் ஆசிரியர் மணியன். இந்த நூலை அவருடைய நினைவுக்குரிய அஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறேன். இந்த நூலை மிக அழகாகத் தயாரித்து அளித்த வானதி பதிப்பகத்திற்கு எனது நன்றி.

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்.

    1

    சுவர்க்கம் வேண்டுமா? மோட்சம் வேண்டுமா? என்று எங்களைக் கேட்டார் திரு ராகவன். அவர் டில்லியில் குஜராத் சுற்றுலாத் துறையின் சார்பில் பணிபுரிபவர். எங்களுக்குத் துவாரகையைச் சுற்றிக் காட்ட அவர்தான் வந்திருந்தார்.

    இரண்டுமே ஒன்றுதானே? இதில் என்ன வித்தியாசம்? என்று கேட்டோம். கொஞ்சம் வியப்புடன்.

    துவாரகையைப் பொறுத்தவரையில் வித்தியாசம் உண்டு! துவாரகாவில் துவாரகீஷ் ஆலயத்துக்கு உள்ளே வருபவர்கள் சுவர்க்கத் துவாரம் வழியாக வரவேண்டும். மோட்சத் துவாரம் வழியாக வெளியே போக வேண்டும். இப்படி இரு துவாரங்கள் இருப்பதனாலேயே இதற்குத் துவாரகை என்று பெயரும் வந்தது. துவாரம் என்றால் வழி என்று அர்த்தம்! என்றார் ராகவன்.

    ‘துவாரம்’ என்பது வாசல் என்றும், ‘கா’ என்பது நிரந்தரமான ஆனந்தம் என்றும் பக்தர்கள் அங்கே பொருள் கூறுகிறார்கள். அந்த ஆனந்தத்துக்குப் பிரம்மா என்றும் அர்த்தம் சொல்கிறார்கள். நித்தியானந்தமானால் என்ன? பிரம்மானந்தமானால் என்ன? துவாரகீஷ் ஆலய வாசலில் ‘ஜிலுஜிலு’ வென்ற காற்றில் அமர்ந்து, உயரே கோபுர உச்சியில் பட்டொளி வீசிப் பறக்கும் கொடியை நிமிர்ந்து பார்த்தால் பேரானந்தமாகத் தான் இருக்கிறது!

    துவாரகைக்கு முக்திதாம் என்றும், மோட்சபுரி என்றும் கூடப் பெயர்கள் உண்டு. இது முனிவர்களுக்கு நாராயணன் தரிசனம் கொடுத்த இடம். கங்கை சுவர்க்கத்திலிருந்து கோமதியாக இறங்கி வந்து கடலில் கலந்த தலம். கிருஷ்ணர் நூறு ஆண்டுகள் இருந்து அரசாண்ட இடம். ருக்மிணி கண்ணனுக்காகக் கோயில் கட்டிய இடம். இவ்வளவும் இருப்பதனால் இதற்குத் தனியான மகிமை உண்டு என்று எங்களிடம் விளக்கினார் ஆலய நிர்வாகி படேல்.

    கண்ணன் பாதம் பட்ட இடம் என்றால் போதாதா? அதற்குத் தனியான மகிமை தானே வந்துவிடாதா? கண்ணன் பிறந்த மதுராவானால் என்ன? வளர்ந்த பிருந்தாவனமானால் என்ன? அரசாண்ட துவாரகையானால்தான் என்ன? ஆனால் துவாரகைக்கு மற்ற இடங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு உண்டு. இது கிருஷ்ணர் அரசராகவும் இருந்து அரசாண்ட இடம் அல்லவா? அதனால் இங்கே கிருஷ்ணரை அரசராகவும் கொண்டாடுகிறார்கள்; பகவானாகவும் துதிக்கிறார்கள்!

    துவாரகை ஆலயத்தில் பக்தர்கள் கூட்டத்துக்குக் குறைவே இல்லை. இரவிலும் பகலிலும் பக்தர்கள் வந்தவண்ணமாக இருக்கிறார்கள். ஆனால் தரிசனமோ, தீபாராதனையோ குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடக்கிறது. பகவானுக்கு ‘போக்’ என்ற நைவேத்தியம் வைக்கப்படும் நேரங்களில் தரிசனம் இல்லை. திரைபோட்டு மறைத்துக் கண்ணனை உணவருந்த வைக்கிறார்கள்; உறக்கத்துக்காகத் தூங்கவும் அனுப்பி வைக்கிறார்கள்.

    கிருஷ்ணர் இங்கே தெய்வம் மட்டும் அல்ல; மகாராஜாவும் கூட! அதனால் அவருக்கு ஆராதனையும் உண்டு. அரசபோகமும் உண்டு என்றார் படேல்.

    கண்ணனின் திருக்கோயிலுக்கு ‘ஜகத்மந்திர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கு உலகிலேயே மிகப் புனிதமான ஆலயம் என்று அர்த்தம் சொல்கிறார்கள். கடல் மட்டத்துக்கு மேலே 45 அடி உயரமான தளம் போட்டு, அதற்கு மேல் 125 அடி உயரத்துக்கு ஆலயத்தை எழுப்பி இருக்கிறார்கள். அது ஐந்து மாடிக் கட்டடமாக அமைந்திருக்கிறது. ஆம் - அது கோயில் மட்டும் அல்ல; மன்னரின் மாளிகையும் அல்லவா!

    இது 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாம். கிருஷ்ணபகவானின் பேரனான வஜ்ரநாபன் இதைக் கட்டியதாகக் கூறுகிறார்கள். கண்ணன் அரசாண்டமாளிகை கிருஷ்ணாவதார முடிவில் கடல் கொந்தளித்து எழுந்து துவாரகையே மூழ்கடித்த போது, மூழ்காமல் காப்பாற்றப்பட்டதாம். அதுவே அவருடைய பேரனால் ஹரிக்கிருகம் என்ற பெயரால் ஆலயமாக எடுத்துக் கட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

    துவாரகையைக் கடல் மூழ்கடிப்பானேன்? அதற்கு ஏதாவது காரணம் உண்டா? என்று கேட்டோம். அதுவே ஒரு கதை! என்று சொல்லத் தொடங்கினார் படேல்...

    "கம்ச வதத்துக்குப் பிறகு ஜராசந்தன் பலமுறை மதுராவின் மீது படையெடுத்து வந்தான். அவை எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு, தம்மை நாடி வந்த யாதவர்களைக் காப்பாற்ற, கிருஷ்ணரும் பலராமரும் புறப்பட்டார்கள். பிரம்மாவின் ஆசைப்படி ரேவதியைப் பலராமனுக்கு அரசன் கல்யாணம் செய்து கொடுத்தான். அதற்கு உரிய சீதனமாகக் குசஸ்தாலி என்ற நூறு யோஜனை நீளம் கொண்ட (ஒரு யோஜனை என்பது பத்து மைல்கள்) நிலப்பகுதியையும் கொடுத்தான். அதுவே துவாரகையைத் தலைநகராகக் கொண்ட ராஜ்ஜியத்தின் அடிப்படை ஆயிற்று.

    யதுவனர்கள் அங்கே வந்து குடியேறிய பிறகு அந்த இடம் அவர்களுக்குப் போதவில்லை. அதனால் கிருஷ்ணர் போர்பந்தர் வரை நாட்டை விரிவாக்கிக் கொண்டார். சமுத்திரராஜன் அவருக்கு மரியாதை செலுத்துவதைப் போலப் பன்னிரண்டு யோஜனை அகலத்தைக் கடலிலிருந்து மீட்டுக் கொடுத்தான். அதுவே கண்ணனின் தலைநகரமும், மாளிகையும் அமையும் இடம் ஆயிற்று. முதலில் ஏற்பட்டது மூலத்துவாரகை. பின்னால் வந்தது கோமதித் துவாரகை. இது கோமதி ஆற்றங்கரையில் இருக்கிறது.

    கிருஷ்ணாவதாரம் முடிந்து அவர் மறைந்தபிறகு, துவாரகையைச் சமுத்திரராஜன் மீண்டும் எடுத்துக் கொண்டான். அவ்வளவு நிலப் பகுதியும் கடலுக்குள் மூழ்கி மறைந்து விட்டது. கண்ணன் தங்கி இருந்து அரசாண்டமாளிகையும் சக்கரதீர்த்தமும் மட்டுமே மிஞ்சின. அதுவே இப்போது துவாரகீஷ் பிரபுவின் ஆலயமாக விளங்குகிறது!" என்றார் படேல்.

    கோமதி நதிக்கரையில் ஐம்பத்தாறு படிகள் கொண்ட பீடத்தின் மீது ஆலயம் பொலிவுடன் விளங்குகிறது. அது துர்வாசர் போன்ற மகரிஷிகள் வந்து நாராயணனைத் துதித்த இடம். குசேலர் போன்ற பால பருவத்து நண்பர்கள் வந்து பார்த்து மகிழ்ந்த இடம். மீராபாய், கபீர்தாசர், நர்ஸுமேத்தா போன்ற பக்கதர்கள் வந்து தரிசனம். பெற்றுப் பாடி தரிசித்த இடம்.

    மீராபாய் என்ற அரசி கண்ணனுக்காக மனம் உருகி, தவமிருந்து வந்தவள். தபஸ்வினியாக வாழ்ந்த அந்தப் பக்தை துவாரகையில்தான் முக்தி பெற்றாள். கண்ணன் அந்தப் பக்தைக்காகச் செய்த லீலைகளைக் கதையாகக் கூறுகிறார்கள்.

    மீரா அரசியாக வாழ்ந்தபோது, அவள் அருந்துவதற்காக வைக்கப்பட்ட பாலில் நஞ்சு கலந்திருந்தது. அதை அறியாமல் பாலை அருந்தி விட்டுக் கண்ணனின் பெயரைச் சொல்லியபடியே தூங்கிவிட்டாள் மீரா. அந்த நஞ்சைக் கண்ணன் ஏற்றுக் கொண்டுவிட்டான். அதனால் துவாரகாநாதனின் விக்கிரகம் நீல நிறமாயிற்று. கர்ப்பக்கிருகத்தின் கதவுகள் தாமே மூடிக்கொண்டு விட்டன...

    பல ஆண்டுகளுக்குப் பின்னால் நாடு துறந்து, கண்ணனைத் தரிசிக்கத் துவாரகையை நாடி வந்தாள் மீரா. அங்கே கண்ணனின் சந்நிதியை நாடி மெய் குழைய, கால்கள் சோர, கண்கள் பனிக்கப் படியேறி வந்தாள். அவளுடைய நினைவில் கண்ணனின் முகம் மட்டுமே இருந்தது. சந்நிதிக்கு வந்த மீரா மனம் குமுறி நின்றாள். அங்கே துவாரம். நாதனின் கர்ப்பக்கிருக வாசல் அடைபட்டு நின்றது.

    மீராவினால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணா! வாழ்நாள் முழுவதும் உனது நினைவிலேயே இருந்தேன். இறுதியில் உன் பாதகமலங்களை அடைந்து விடுவது என்று உன்னை நாடி வந்துவிட்டேன். நீ என்னை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், எனக்குத் தரிசனம் தர மறுத்தாலும் நான் திரும்பிப் போகமாட்டேன். இங்கேயே சந்நிதியில் விழுந்து உயிரை விட்டுவிடுவேன். எனது உயிர் உன்னை நாடி வரும் வேளையில் கருணை உள்ளம் கொண்டு என்னை ஏற்றுக்கொள்! என்று மனம் உருகிப் பாடினாள் மீரா.

    கதவுகள் தாமே திறந்தன! தீபங்கள் தாமே ஏற்றிக் கொண்டன! அன்று மீராவுக்காக விஷம் அருந்திய கண்ணபிரானின் உருவம் கருநிறம் கொண்டிருந்தது. இன்று மீராவை ஏற்கத் தரிசனம் தந்த வேளையில் அது பொன்னுருவமாகத் திகழ்ந்தது. மீராவின் உயிர் உடலைத் துறந்து கண்ணனின் காலடிகளில் கலந்து விட்டது.

    மீராவின் கதையைக் கேட்கும் போது நமக்கு அந்தப் பக்தையின் அமரத்துவம் வாய்ந்த பஜன்கள் காதில் ஒலிக்கின்றன. இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவற்றைப் பாடிய இனிமை செவியில் தேனாக வந்து பாய்கிறது! துவாரகாநாதரின் ஆலயத்தில் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து மீரா பஜனைப் பாடுகிறார்கள். குடும்பப் பெண்கள் கூட்டமாக அமர்ந்து பஜனைக் கீதங்களை இசைக்கும் காட்சி, கண்ணுக்கு இதமாகவும் செவிக்கு இனிமையாகவும் இருக்கிறது.

    ஆலயத்தின் வாசலில் வரிசையாகக் கடைகள் இருக்கின்றன. ஆலயத்துக்கு வருபவர்கள் கல்கண்டும், சர்க்கரைக்கட்டியும், தேங்காயும், மலர்களும் கொண்டு வருகிறார்கள். தேங்காயை உடைப்பதில்லை. மாலையாகக் கட்டித் தொங்கவிடுகிறார்கள். மாலைகளைப் பூஜையில் சேர்த்துக் கொள்கிறார்கள். கல்கண்டும் சர்க்கரைக்கட்டியும் பிரசாதமாகக் கிடைக்கின்றன.

    ஒரு நாளைக்கு இங்கே சுமார் ஒன்பதாயிரம் பக்தர்கள் வருகிறார்கள். விழா நாட்களில் ஒரு லட்சம் பேர் வரையில் வருவார்கள்! என்றார் ராகவன். கண்ணன் பிறந்த ஜன்மாஷ்டமியை இங்கே விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இரவு முழுதும் பஜனை நடக்கிறது. கண்ணன் பிறந்த நள்ளிரவு நேரத்தில் சிறப்புப் பூஜை நடத்திப் பிரசாதம் கொடுக்கிறார்கள். சிராவண மாதம் ஊரே கலகலத்துப் போகிறது.

    துவாரகையில் சிறு கடைகள் ஏராளம். உணவு கிடைக்கும் ஓட்டல்கள் மிகச் சொற்பம். தென்னிந்திய சிற்றுண்டி கிடைக்கும் இடம் ஒன்றிரண்டுதான். அதனால் அங்கே போவதற்கு முன், அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட அமைப்பின் தலைவராக இருக்கும் திரு வி. ராமமூர்த்தியின் இல்லத்துக்குப் போனோம். துவாரகை பயணத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்ததுடன், அங்கே ஸ்ரீகாமகோடி பீடத்தின் சார்பில் சிவாலயம் ஒன்றையும், வேதபாடசாலை ஒன்றையும் நிர்வகித்து வரும் ஜோஷி என்ற அன்பரின் வீட்டில் உணவுக்கும் ஏற்பாடு செய்தார் ராமமூர்த்தி.

    நாங்கள் துவாரகையில் தரிசனத்துக்குப் போனபோது எங்களுடனேயே துணையாக வந்தார் ஜோஷி. நாங்கள் ஆலயத்துக்குச் சென்ற அன்று கார்த்திகை பெளர்ணமி தினம். அதனால் ஆலயத்தில் ஒரு பக்கம் ஹோமம் நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் பாகவதக் கதையைக் காலட்சேபமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து பஜனையில் ஈடுபட்டிருந்தார்கள்.

    சரியாக மாலை ஆறரை மணிக்கு அனைவருடைய கவனமும் கோபுரத்தின் மீது திரும்பியது. ஆங்காங்கே மக்கள் கூட்டமாக நின்று கோபுரத்தைத் தரிசிக்கத் தொடங்கினார்கள். நாங்களும் அவர்களுடன் போய் நின்று கொண்டோம். இது என்ன நிகழ்ச்சி? ஏன் எல்லோரும் கோபுரத்தையே பார்க்கிறார்கள்? என்று ஜோஷியிடம் கேட்டோம்.

    கொஞ்சநேரம் கவனியுங்கள். உங்களுக்கே புரியும்! என்றார் அவர். சிறிது நேரம் 125 அடி உயரம் கொண்ட அந்தப் பிரம்மாண்டமான கோயில் கோபுரத்தைப் பார்த்த வண்ணம் நின்றோம். இரு வாலிபர்கள் அந்தக் கோபுரத்தின் உச்சியில் உள்ள கொடிக்கம்பம் வரை ஏறினார்கள். ஒருவர் அந்த உச்சி முனையில் அமர்ந்து கொண்டு கொடியைக் கழற்றினார். அதைப் பகுதிப் பகுதியாகப் பிரித்துக் கீழே இறக்கிக் கொடுக்க, கீழே இருந்தவர் வாங்கிச் சுற்றி வைத்தார். பிறகு மற்றவர் இன்னொரு கொடியைக் கொடுக்க, அதை வாங்கிப் பகுதிப் பகுதியாக மேலே ஏற்றிக் கட்டி முடித்தார் அந்த வாலிபர். அதுவரை அந்தக் காட்சியை மூச்சு விடாமல் கவனித்துக் கொண்டிருந்த பக்கதர்கள் கைதட்டினார்கள். கொடி வானளாவி அலைந்து பறந்தது! அதன் நீளம் ஏழு அடியாம்!

    கிருஷ்ண பகவான் இங்கே அரசராகவும் இருந்தார். அதனால் ஆலயத்தின் மீது, சூரிய சந்திரர் அடையாளமிட்ட கொடி, மன்னர் மாளிகையின் மீது பறப்பது போலப் பறக்க வேண்டும். மாலையில் இந்தக் கொடியை மாற்ற வேண்டும். அரசர்களின் மாளிகையில் ராஜமரியாதையுடன் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதுண்டு. இங்கேயும் அப்படி நடக்கிறது! என்றார் ஜோஷி.

    துவாரகீஷ் ஆலயம் காலை ஏழு முதல் பகல் பன்னிரண்டே கால் வரையில் திறந்திருக்கிறது. மாலை ஐந்து முதல் இரவு ஒன்பதரை மணிவரையில் திறந்திருக்கிறது. ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவை சிறப்புத் தீப ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆரத்தியைக் காண மக்கள் கர்ப்பக்கிருகத்தின்

    Enjoying the preview?
    Page 1 of 1