Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paathai Thelivikkum Pathonbathu Gnanigal!
Paathai Thelivikkum Pathonbathu Gnanigal!
Paathai Thelivikkum Pathonbathu Gnanigal!
Ebook189 pages1 hour

Paathai Thelivikkum Pathonbathu Gnanigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“எத்தனை எத்தனையோ மகான்கள்
- இந்த ஞானபூமியில்
அத்தனை பேருக்கும் எனது வணக்கங்கள்!”

இது நான் 'ஞானபூமி’ ஆன்மீக மாத இதழில், சுமார் பதினாறு ஆண்டுகள் பங்கெடுத்துக் கொண்டு பணியாற்றிய நாட்களில், மாதந்தோறும் அதன் அட்டையில் வெளியிட்ட வாசகம்.

இந்தப் பாரத புண்ணிய பூமியில், குறிப்பாகத் தென்னகத்தில், மக்களை நல்வழிப்படுத்தி வரும் மகான்கள் பலர். பக்தி மார்க்கத்தின் மூலமாக, நல்ல சிந்தனைகள், சமூகக் கட்டுப்பாடு, நல்ல வாழ்க்கை நெறி, பெற்றோரிடமும், பெரியோரிடமும் மரியாதை செலுத்துவது, எளியவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல பண்புகளை மக்களிடம் பரப்பி வளர்த்து வரும் மிகச் சிறந்த தொண்டை, அவர்கள் செய்து வருகிறார்கள். அதனால் அருளாளர்களைப் போற்றி மதிக்கும் பக்தர்கள் இன்று நாட்டில் பெருகி வருகிறார்கள்.

இன்று ஆன்மீகப் பெரியோர்கள் முன் போல இறை வழிபாடு மட்டுமே தமது கடமை என்று இருந்து விடுவதில்லை சமூகத் தொண்டு, கல்வி அறிவு அளிப்பது மருத்துவ வசதியைக் கொடுப்பது, அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும் காப்பகம் நடத்துவது, பல்வேறு சமயங்களிடையே நல்லிணக்கம் காண்பது, கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பது, கலைஞர்களைக் கெளரவிப்பது போன்ற நற்பணிகள் பலவற்றிலும் முக்கியப் பங்கு கொள்கிறார்கள். தாமே முன்னின்று மக்களை வழி நடத்துகிறார்கள்.

நாட்டில் பல்வேறு தீய சக்திகள், மக்களின் ஆர்வத்தையும், பொறுமையையும், அடக்கத்தையும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களிடையே நல்ல சிந்தனைகளையும், நல்ல பண்புகளையும் ஊக்குவிப்பதை சீர்குலைத்து வரும் இந்த நாளில், இந்த ஆன்மீக ஒளிவிளக்குகள் அளித்து வரும் ஞானச்சுடர், இந்திய மக்களின் எதிர்காலத்துக்குப் புத்தொளி கூட்ட வல்லது.

இப்படிப்பட்ட ஞானியர், தவவலிமை கொண்டோர், மதத் தலைவர்கள், மடாதிபதிகள், சித்தர்கள் ஆகியோரின் தரிசனம் கிடைப்பதே அரிது. அதைக் காட்டிலும் அவர்களிடம் அருகில் இருந்து பழகுவதும், உரையாடுவதும் அபூர்வமான வாய்ப்பு ஆகும். அத்தகைய ஒப்பிலாத அனுபவம் எனக்கு எனது எழுத்துலக வாழ்நாளில் கிடைத்தது. அந்த அரிய நிகழ்ச்சிகள் தந்த நயமிகுந்த உணர்வுகளை, இங்கே நான் இந்த நூலின் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முற்பட்டிருக்கிறேன். அவர்களுடைய வியூகமும், பரிமாணமும் மிகப் பெரியது. இந்தச் சிறு நூலின் மூலம் வாசகர்களுக்குக் கிடைப்பது, பிரம்மாண்டமான இயற்கைக் காட்சியைச் சிறிய ஜன்னல் மூலமாகப் பார்த்து அனுபவிப்பது போன்றதே ஆகும்.

அவர்களுடைய அபூர்வமான பண்புகளைப் பற்றி, அவர்களிடையே நான் கண்டு உணர நேர்ந்த அதிசயிக்க வைக்கும் அனுபவங்களைப் பற்றி, ஏழைகளுக்கு இரங்கும் எளிய இதயம் பரப்பும் நல்லுணர்வுகளைப் பற்றி, சிறு நிகழ்ச்சிகளின் வாயிலாக, ஒரு சிறிய அழகிய மணம் வீசும் மாலையைத் தொகுத்து சமர்ப்பிக்க முற்பட்டிருக்கிறேன். அவர்களுடைய ஆசிரமங்களும், அமைப்புகளும் நடத்தும் நற்பணிகள், அருந்தொண்டுகள், பக்தி மணம் கமழும் விழாக்கள் போன்றவை பற்றிய சிறு குறிப்புகளும், இதில் அழகிய மணம் தரும் பூமாலையின் மீது சுற்றிய ஜரிகை நூலைப் போல எழில் சேர்த்திருக்கின்றன. அங்கே எல்லாம் சென்று தரிசிக்க விரும்பும் அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டியாகவும் அமையக்கூடும்.

இந்த அனுபவங்களுக்கும், இவற்றைப் பற்றி எழுதும் வாய்ப்புகளுக்கும், உறுதுணையாக இருந்து எனக்கு ஊக்கம் அளித்தவர் அமரர் மணியன். அவருடைய நல்லுணர்வுகளையும், ஆன்மீகத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் இங்கே நினைவுகூர வேண்டியது என்னுடைய கடமை.

வாசகர்கள் இந்த நல்ல முயற்சியின் மூலம் ஆன்மீக வழியில் நல்லுணர்வு பெற, இந்த நூல் உதவுமேயானால், அதையே எனது எழுத்துலக வாழ்க்கையின் மிகச் சிறந்த தொண்டாக நான் கருத முற்படுவேன்.

நன்றி!
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580127504611
Paathai Thelivikkum Pathonbathu Gnanigal!

Read more from Lakshmi Subramaniam

Related to Paathai Thelivikkum Pathonbathu Gnanigal!

Related ebooks

Reviews for Paathai Thelivikkum Pathonbathu Gnanigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paathai Thelivikkum Pathonbathu Gnanigal! - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    பாதை தெளிவிக்கும் பத்தொன்பது ஞானிகள்!

    Paathai Thelivikkum Pathonbathu Gnanigal!

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    என்னுரை

    "எத்தனை எத்தனையோ மகான்கள்

    - இந்த ஞானபூமியில்

    அத்தனை பேருக்கும் எனது வணக்கங்கள்!"

    இது நான் 'ஞானபூமி’ ஆன்மீக மாத இதழில், சுமார் பதினாறு ஆண்டுகள் பங்கெடுத்துக் கொண்டு பணியாற்றிய நாட்களில், மாதந்தோறும் அதன் அட்டையில் வெளியிட்ட வாசகம்.

    இந்தப் பாரத புண்ணிய பூமியில், குறிப்பாகத் தென்னகத்தில், மக்களை நல்வழிப்படுத்தி வரும் மகான்கள் பலர். பக்தி மார்க்கத்தின் மூலமாக, நல்ல சிந்தனைகள், சமூகக் கட்டுப்பாடு, நல்ல வாழ்க்கை நெறி, பெற்றோரிடமும், பெரியோரிடமும் மரியாதை செலுத்துவது, எளியவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல பண்புகளை மக்களிடம் பரப்பி வளர்த்து வரும் மிகச் சிறந்த தொண்டை, அவர்கள் செய்து வருகிறார்கள். அதனால் அருளாளர்களைப் போற்றி மதிக்கும் பக்தர்கள் இன்று நாட்டில் பெருகி வருகிறார்கள்.

    இன்று ஆன்மீகப் பெரியோர்கள் முன் போல இறை வழிபாடு மட்டுமே தமது கடமை என்று இருந்து விடுவதில்லை சமூகத் தொண்டு, கல்வி அறிவு அளிப்பது மருத்துவ வசதியைக் கொடுப்பது, அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும் காப்பகம் நடத்துவது, பல்வேறு சமயங்களிடையே நல்லிணக்கம் காண்பது, கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பது, கலைஞர்களைக் கெளரவிப்பது போன்ற நற்பணிகள் பலவற்றிலும் முக்கியப் பங்கு கொள்கிறார்கள். தாமே முன்னின்று மக்களை வழிநடத்துகிறார்கள்.

    நாட்டில் பல்வேறு தீய சக்திகள், மக்களின் ஆர்வத்தையும், பொறுமையையும், அடக்கத்தையும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களிடையே நல்ல சிந்தனைகளையும், நல்ல பண்புகளையும் ஊக்குவிப்பதை சீர்குலைத்து வரும் இந்த நாளில், இந்த ஆன்மீக ஒளிவிளக்குகள் அளித்து வரும் ஞானச்சுடர், இந்திய மக்களின் எதிர்காலத்துக்குப் புத்தொளி கூட்ட வல்லது.

    இப்படிப்பட்ட ஞானியர், தவவலிமை கொண்டோர், மதத் தலைவர்கள், மடாதிபதிகள், சித்தர்கள் ஆகியோரின் தரிசனம் கிடைப்பதே அரிது. அதைக் காட்டிலும் அவர்களிடம் அருகில் இருந்து பழகுவதும், உரையாடுவதும் அபூர்வமான வாய்ப்பு ஆகும். அத்தகைய ஒப்பிலாத அனுபவம் எனக்கு எனது எழுத்துலக வாழ்நாளில் கிடைத்தது. அந்த அரிய நிகழ்ச்சிகள் தந்த நயமிகுந்த உணர்வுகளை, இங்கே நான் இந்த நூலின் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முற்பட்டிருக்கிறேன். அவர்களுடைய வியூகமும், பரிமாணமும் மிகப் பெரியது. இந்தச் சிறு நூலின் மூலம் வாசகர்களுக்குக் கிடைப்பது, பிரம்மாண்டமான இயற்கைக் காட்சியைச் சிறிய ஜன்னல் மூலமாகப் பார்த்து அனுபவிப்பது போன்றதே ஆகும்.

    அவர்களுடைய அபூர்வமான பண்புகளைப் பற்றி, அவர்களிடையே நான் கண்டு உணர நேர்ந்த அதிசயிக்க வைக்கும் அனுபவங்களைப் பற்றி, ஏழைகளுக்கு இரங்கும் எளிய இதயம் பரப்பும் நல்லுணர்வுகளைப் பற்றி, சிறு நிகழ்ச்சிகளின் வாயிலாக, ஒரு சிறிய அழகிய மணம் வீசும் மாலையைத் தொகுத்து சமர்ப்பிக்க முற்பட்டிருக்கிறேன். அவர்களுடைய ஆசிரமங்களும், அமைப்புகளும் நடத்தும் நற்பணிகள், அருந்தொண்டுகள், பக்தி மணம் கமழும் விழாக்கள் போன்றவை பற்றிய சிறு குறிப்புகளும், இதில் அழகிய மணம் தரும் பூமாலையின் மீது சுற்றிய ஜரிகை நூலைப் போல எழில் சேர்த்திருக்கின்றன. அங்கே எல்லாம் சென்று தரிசிக்க விரும்பும் அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டியாகவும் அமையக்கூடும்.

    இந்த அனுபவங்களுக்கும், இவற்றைப் பற்றி எழுதும் வாய்ப்புகளுக்கும், உறுதுணையாக இருந்து எனக்கு ஊக்கம் அளித்தவர் அமரர் மணியன். அவருடைய நல்லுணர்வுகளையும், ஆன்மீகத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் இங்கே நினைவுகூர வேண்டியது என்னுடைய கடமை.

    வாசகர்கள் இந்த நல்ல முயற்சியின் மூலம் ஆன்மீக வழியில் நல்லுணர்வு பெற, இந்த நூல் உதவுமேயானால், அதையே எனது எழுத்துலக வாழ்க்கையின் மிகச் சிறந்த தொண்டாக நான் கருத முற்படுவேன்.

    நன்றி!

    எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்

    *****

    1

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

    ஆயிரம் இதழ்கள் விரித்த தாமரை!

    காஞ்சிபுரத்துக்குப் போனால் நானும் ஆசிரியர் மணியனும் காமகோடி சங்கர மடத்துக்குப் போகாமல் வருவதில்லை. அதேபோல் முக்கியமான பணி எதைத் தொடங்கினாலும், முதலில் அங்கே போய் மகா பெரியவர்களைத் தரிசிக்காமல், தொடங்க முற்பட்டதில்லை சில சமயம் அவர்கள் வாய் திறந்து ஆசீர்வதிப்பார்கள், பல சமயங்களில் கண் பார்வையாலேயே கனிவாக வாழ்த்தி அனுப்பி விடுவார்கள். ஆனால் அவர்களுடைய பார்வை படும்படி நின்றாலே போதும்; நமக்குள் ஒரு புது மலர்ச்சி தோன்றுவதை உணர முடியும்.

    அது 1972-ஆம் ஆண்டு. நாங்கள் இருவரும் பெங்களூருக்கு ஒரு முக்கியமான திட்டத்தை முடிவு செய்துவிட்டு வரப் போக வேண்டி இருந்தது. வழியில் இருவரும் சென்று கலவையில் தங்கி இருந்த மகா பெரியவர்களைத் தரிசிக்கக் காத்து நின்றோம். அது ஒரு சிறிய குடில், அதை ஒட்டி ஒரு சிறு கிணறு. அதன் வாசலில்தான் பக்தர்கள் சென்று காத்திருப்பார்கள். அதில் குடி இருந்தபடி அவர்கள் தன்னுடைய சிறு பணிகளைத் தாமே செய்து கொள்வார்கள்.

    தரையைப் பெருக்குவதும், சுத்தம் செய்துகொள்வதும் கூட அவரேதாம்! அப்படி அவர் கிணற்றடி மேடையை ஒட்டி வரும்போது தகவல் கொடுப்பார்கள். ஒவ்வொருவராகச் சென்று தரிசிக்க வேண்டும். அவருடைய பார்வை நம் மீது படும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. சில சமயம் தூரத்திலேயே நின்று, அவருடைய உருவக்கோட்டின் நிழலைப் பார்த்துவிட்டு வரவும் நேரிடும். இன்று எப்படியோ? என்று சொல்லிக் கொண்டே போனார் மணியன். எங்களுடைய மனத்தில் சிறு கலக்கம் படர்ந்திருந்தது.

    மெய் மறக்கச் செய்த அருள் ஒளி

    நல்ல வேளையாக, நாங்கள் அழைக்கப்பட்டபோது அவர்கள் எழுந்திருந்து கிணற்றடி மேடைக்கே வந்திருந்தார். ஆனால் எங்களை நிமிர்ந்து பார்க்கவில்லை. அருகில் இருந்த சீடர் ஒருவர் ஆனந்தவிகடன் மணியன் வந்திருக்கார்! என்று மெதுவாகச் சொன்னார்கள். தமக்குள்ளேயே நினைவுகளில் மூழ்கி அமர்ந்திருந்த மகான் ஒரு விநாடி நிமிர்ந்து எங்களைப் பார்த்தார். ஒளிபொருந்திய அந்த நயனங்களிலிருந்து பெருகிவந்த அருள் ஒளி எங்களை மெய்ம்மறக்கச் செய்தது. வலது கையைச் சற்றே தூக்கி ஆசீர்வாதம் செய்தார். மறு விநாடி உள்ளே போய் விட்டார். தொடர்ந்து பயணம் செய்த போது அந்த அருட்பார்வையில் நனைந்த உணர்வு, எங்கள் நெஞ்சப் பதிவிலிருந்து நீங்கவே இல்லை!

    மனச்சுமையைக் கரைத்த கவிஞர் வாலி

    மணியன் சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு சமயம் நான் கவிஞர் வாலியை அழைத்துக் கொண்டு மகா பெரியவாளைத் தரிசிக்கப் போனேன். அவர்களிடம் என்னென்னவோ கேட்க வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டு போனார் வாலி. உள்ளே சென்று மகானின் அருட்பார்வை பட நின்றதுதான் தாமதம்! சிறு குழந்தையைப் போல அழத் தொடங்கிவிட்டார்! கண்களிலிருந்து நீர் பெருகிய வண்ணம் இருந்தது. வாய் திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. வெளியே வந்த பிறகு தான் வாலியிடம், என்னென்னவோ கேட்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போனீர்கள். வாய் திறந்து பேசவே இல்லையே? கண்ணீர் பெருக மெய் சோர நின்று கொண்டே இருந்தீர்களே? அவ்வளவு தானா? என்று கேட்டேன்.

    வாலி சொன்னார்: என்ன செய்வது? அந்தச் சில நிமிடங்களில் என் மனத்திரையில் நான் செய்யத் தவறி விட்ட கடமைகள் எல்லாம் நிழலாட்டமாக ஓடத் தொடங்கி விட்டன. ஒரு குழந்தையைப் போல அழுது எனது மனச்சுமையைக் கரைத்துக் கொண்டேன்! அதைக் கேட்டு நான் மெய் சிலிர்த்துப் போனேன். அடுத்த வாரம் ‘ஆனந்தவிகட’னில் வாலி, மகாபெரியவர்களைப் பற்றி, பார்த்த மாத்திரத்தில் பாவங்களை எல்லாம் அலம்பும் பெம்மான் என்று தொடங்கும் அருமையான கவிதை ஒன்றை எழுதி இருந்தார்.

    ஞானபூமி இதழின் தொடக்கம்

    'ஞானபூமி’ மாத இதழைத் தொடங்கும் யோசனையை நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மணியன் மகா பெரியவர்களைத் தரிசித்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்தார். நாங்கள் எல்லோருமாகப் புறப்பட்டுப் போனோம்.

    இந்து மதத்தின் வளர்ச்சிக்காக, எல்லோரும் எளிமையுடன் புரிந்துகொண்டு பழகக் கூடிய ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கலாம் என்ற யோசனை மணியனின் மனத்தில் மட்டுமே இருந்தது. ஆனால் அவர் சொல்வதற்குள் அதற்கு வடிவம் கொடுத்துப் பேசிவிட்டார் அந்த மகான்! கூடவே, நீதான் அதைச் செய்யணும், உனக்குத் தகுதி இருக்கு! என்றும் சொன்னார்.

    ரிலிஜனில்கூட 'ரொமான்ஸ்'

    எனக்கா? நான் செய்வதா? எப்படி சுவாமி நான் சிறுகதைகளிலும், நாவல்களிலும் 'ரொமான்ஸ்’ அல்லவா எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று தயங்கினார் மணியன்.

    அதனாலேதான் சொல்றேன்! ‘ரிலிஜன்'லகூட 'ரொமான்ஸ்’ பண்ணலாமே? 'ரொமான்ஸ்' என்கிறது என்ன? ஒருத்தர் கிட்டே இன்னொருத்தர் வசமிழந்து வயப்படறதுதானே? 'ரிலிஜன்’கிட்டே நீ வசப்பட்டுட்டா இதுவும் ஒரு 'ரொமான்ஸ்’ தான் உன்னாலே முடியும்! என்றார் மகா பெரியவர்கள்!

    தைரியம் பெற்று நாங்கள் திரும்பி வந்தோம். 'ஞானபூமி' முதல் இதழ் வெளிவந்தது. மக்கள் புரிந்து கொள்ளச் சிரமப்படும் வேதாந்தக் கருத்துக்களையும், ஆன்மீக உணர்வுகளையும், மிக எளிமையான வடிவத்தில், ரசனையுடன் கொண்டு வருவதில் வெற்றி கண்டிருந்தோம். எல்லாம் மகா பெரியவர்களின் ஆசியினால்தான் நடந்தது என்று இதழை எடுத்துக் கொண்டு அவர்களிடமே போனோம்.

    மகாபெரியவர்களைச் சுற்றி ஏகக் கூட்டம். கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் உள்ளே போய்த் தரிசிக்க முடிந்தது. மகாபெரியவர்கள் குனிந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த சீடர் மெதுவாக இதயம் பேசுகிறது மணியன் வந்திருக்கிறார். 'ஞானபூமி' பத்திரிகையை எடுத்துண்டு வந்திருக்கார்! என்றார்.

    அட்சதை தூவி ஆசீர்வதித்த மகா பெரியவர்

    மகாபெரியவர்களின் பார்வை நிமிர்ந்தது. கண்களில் கருணை ஒளி சுடர் விட்டது. ஆனந்த விகடன் மணியனா? என்று சொல்லி இதழை அட்சதை தூவி ஆசீர்வதித்தார்கள். கூட இருந்த எங்களுக்குக் கொஞ்சம் திகைப்பு மகாபெரியவர்களிடம் மறுபடியும் பெயர்களைச் சொல்ல முயன்றோம்.

    பரவாயில்லை! பெரியவர்களின் ஆசீர்வாதம் சரிதான்! அதுதான் எனக்குத் தாய்வீடு! என்றார் மணியன் பெருந்தன்மையுடன். பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பினோம்.

    பெரியவரின் விஜய யாத்திரை

    வடக்கே சென்று தனது

    Enjoying the preview?
    Page 1 of 1