Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nam Ilakkugalai Nokki Payanippom!
Nam Ilakkugalai Nokki Payanippom!
Nam Ilakkugalai Nokki Payanippom!
Ebook254 pages1 hour

Nam Ilakkugalai Nokki Payanippom!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூல் ஆசிரியரின் முப்பது வருட நிர்வாக/பயிற்சித்துறையில் பெற்ற அனுபவங்களின் திரட்டு. கணவன் - மனைவி, பெற்றோர்- குழந்தை நண்பர்கள், அலுவலகம், பொது வாழ்வு என்ற பலதரப்பட்ட உறவு முறைகளில் ஏற்படும் விரிசல்கள் அவற்றை சுலபமாகத் தீர்க்க தேவைப்படும் அந்த மனப்பக்குவம், மனச்சோர்வு, அதன் மூலம் ஏற்படும் விரக்தி அதனை எல்லாம் எதிர்கொள்ளத் தேவையான மனத்திடம், ஆன்மீக பலம் இவை போன்ற பல கருத்துக்களை நடைமுறை வாழ்க்கை நிகழ்ச்சிகளாக, நமது பண்பாட்டிற்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு தொகுப்பு இது. ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கைப்பயணத்தில் அடைய வேண்டிய இலக்குகளை, தனக்கும், தன்னைச்சார்ந்தவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமைக்கும் வழிமுறைகள் இதில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145807247
Nam Ilakkugalai Nokki Payanippom!

Related to Nam Ilakkugalai Nokki Payanippom!

Related ebooks

Reviews for Nam Ilakkugalai Nokki Payanippom!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nam Ilakkugalai Nokki Payanippom! - M. Harihara Mahadevan

    https://www.pustaka.co.in

    நம் இலக்குகளை நோக்கிப் பயணிப்போம்!

    Nam Ilakkugalai Nokki Payanippom!

    Author:

    எம். ஹரிஹர மஹாதேவன்

    M. Harihara Mahadevan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-harihara-mahadevan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே

    1. தீதும் நன்றும்...

    2. முடிவின் தொடக்கம்

    3. இளம் பெண்ணை இறக்கி விடுங்க...

    4. வாழ்க்கைத் தத்துவம்

    5. அவன் வழி... தனி வழி...

    6. நான் இப்போது புனிதமானவன்

    7. கீதோபதேசம்

    8. வாழ்க்கை வங்கியில் ஒரு அக்கௌண்ட்

    9. இழப்பு ஈடாகிறது

    10. ஆதலினால் பொறுமை காப்பீர்!

    11. எது அருமை? எதற்குப் பெருமை?

    12. இ(எ)ன்றும் பொருந்தும்...

    13. அன்புக்கும் உண்டோ...?

    14. மறைவுக்குப் பின் ஒரு மன நிறைவு

    15. கடவுள் என்னும் முதலாளி...

    16. ஆறப் போடு... மனமே ஆறு...

    17. அவன் பார்த்துப்பான்...

    18. மாறுபட்ட சிந்தனை

    19. என்றும் தேவை அந்த விவேகம்

    20. அழிவின் தொடக்கம்

    21. கதை கதையாம்... படிப்பினை பலவாம்...

    22. சாதித்த சாதுரியம்

    23. நமக்கு நாமே...

    24. எல்லாம் நம் கையில்...

    25. நம்பினார் கெடுவதில்லை

    26. இதுவும் விலகிப் போகும்...

    27. நெகிழ்வான தருணங்கள்...

    28. இன்னொரு விதி செய்வோம்

    29. அவனது ராஜாங்கத்தில்...

    30. ஒரு டால்பினைப் போல...

    31. டிரிபிள் ஃபில்டர் டெஸ்ட்

    32. 90:10 பிரின்ஸிபிள்...

    33. ஒரு பயணம் ஒரு பாடம்

    34. பொறுமை - தேவை இக்கணம்...

    35. கல்லுக்குள் ஈரம்...

    36. முயலுக்கு மூணு கால்...

    37. இன்னா நாற்பது இனியவை எண்பது

    38. பழக்க தோஷம்

    39. அக்கரை பச்சை அல்ல...

    40. கண்ணாடி வீட்டிலிருந்து ஒரு கல்

    41. வெள்ளத்தனைய...

    42. தே(ஓ)டி வந்தான் இறைவன்

    43. இழையில் பிழையா?

    44. யார் அந்தத் தேவதை?

    45. என் கேள்விக்கென்ன பதில்?

    46. இறைவனுடன் ஒரு இன்டர்வியூ

    47. உன்(ள்)னோ(ளோ)டு பயணம்...

    48. எங்கே அவன் பங்கு?

    49. கைமேல் பலனில்லை

    50. கஷ்டம் வேண்டாம்... இஷ்டம் வேண்டும்...

    முன்னுரை

    C:\Users\ASUS\Pictures\Saved Pictures\nam 1.PNG

    Chicken Soup for the Soul எனக்குத் தூண்டுகோலாக இருந்த ஒரு சிறந்த நூல். தமிழில் அது போன்ற ஒன்று வர வேண்டும் என்ற அவாவின் முயற்சிதான், ‘நம் இலக்குகளை நோக்கிப் பயணிப்போம்!’ என்ற இந்த நூல், அந்த நூலில் காணும் நிகழ்ச்சிகளுக்கும் இந்த நூலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

    கடந்த 18 வருடங்களாக ஒரு பயிற்சியாளராக, நிர்வாகத் துறையின் ஒரு பேராசிரியராக நான் சந்தித்த பல தரப்பட்டவரது அனுபவங்கள், அந்த வகுப்புகள் எடுக்க நான் மேற்கொண்ட முயற்சிகள், எனது Free Web Site Shantham மூலமாக எனது நண்பர்கள் குழாம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் - இவைகளின் ஒட்டுமொத்த வடிவந்தான் இந்த நூல்.

    கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, அலுவலகம், பொது வாழ்வு போன்ற பலதரப்பட்ட உறவுகளில் ஏற்படும் விரிசல்கள், அவற்றைச் சுலபமாகத் தீர்க்கத் தேவைப்படும் அந்த மனப்பக்குவம், மனத்தளர்வு அதனால் ஏற்படும் விரக்தி, இவை அனைத்தையும் துணிவுடன் எதிர்கொள்ளத் தேவையான மனத்திடம், ஆன்மீக பலம் - இவை போன்ற பல கருத்துக்களை நடைமுறை வாழ்க்கை நிகழ்ச்சிகளாக நமது பண்பாட்டிற்கேற்ற வகையில் அமைத்துள்ளேன்.

    இந்நூல் ஒரு தனிமனிதன் தனது வாழ்க்கையின் பல்வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்க நல்லதோர் பாதையை அமைத்துக் கொடுக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

    அன்புடன்

    எம். அரிகர மகாதேவன்

    அலைபேசி: 98413 56075

    சொர்க்கத்திலிருந்து ஒலிக்கும் குரல்கள்

    C:\Users\ASUS\Pictures\Saved Pictures\nam2.PNG

    "தங்கள் சீரிய பணி சிறக்க எங்கள் நல்வாழ்த்துக்கள்!

    என்றென்றும் எங்கள் நல்லாசிகளுடன்!"

    இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறும் அன்பு ஆத்மாக்கள்!

    C:\Users\ASUS\Pictures\Saved Pictures\nam3.PNG

    சாந்தா அரிகர மகாதேவன் மைதிலி கோபாலன்

    எனது குரல்!

    எட்டு வருடங்களுக்கு முன்பு எம்மை விட்டுப் பிரிந்த என் அன்பு மனைவி சாந்தாவிற்கும், வெகு அண்மையில் இறைவனடி சேர்ந்த என் உடன்பிறவா சகோதரி மைதிலி கோபாலன் அவர்களுக்கும் எனது இந்த நூலை காணிக்கையாக்குகிறேன்.

    - எம். அரிகர மகாதேவன்

    1

    தீதும் நன்றும்...

    C:\Users\asus\Pictures\Saved Pictures\En Elakku 1.jpg

    அந்த ஊர்க் கோடியில் இரண்டு பெரிய கற்கள். ஒன்றின் பெயர் ‘நேர்’ என்றும் இன்னொன்றின் பெயர் ‘எதிர்’ என்றும் கொள்ளலாம். அவற்றின் மேல் அமர்ந்து அந்த ஊர் மக்கள் பற்பல கதைகளைப் பேசுவதும் அவற்றால் இரண்டு கற்களுக்கும் நல்ல பொழுதுபோவதும் அன்றாட வழக்கமாகவிட்டிருந்தது.

    ஒரு நாள் அங்கே வந்த அனைவருமே சொல்லி வைத்தாற் போல் பேசிய அந்தச் செய்தி கேட்டு நேர் எதிர் இரண்டுமே அரண்டு போய்த்தான்விட்டன.

    இந்த எடத்துல ஒரு கோயில் கட்டப் போறாங்களாமே? பெரிய சாமி சிலை அந்தக் கோயிலுக்கு வரப்போறதாமே?

    சிலைக்கு ஏத்த கல்லு இதோ நாம ஒக்காந்து இருக்கற கல்லாக் கூட இருக்கலாம்

    அத நீயோ நானோ முடிவு செய்ய முடியுமா? அதுக்குத்தான் அந்த ஸ்தபதி சிவலிங்கம் வரப்போறாராமே? அவருக்குத் தெரியாததா?

    ஆமாம்... இந்தக் கல்ல வெச்சுச் சிலை செஞ்சா இத ஒடைச்சுப்புடுவாங்களோ? அப்ப நாம எங்க ஒக்காந்து பேசறது?

    ஒன்னோட கவலை ஒனக்கு? என்னமோ ஒன்னயவே பொளந்து செலையாக்கின மாதிரிதான்.

    உள்ளபடியே கவலை வந்து அந்த இரண்டு கற்களையும் ஆட்கொண்டுதான்விட்டது.

    ‘நேர்’ கல் தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டுவிட்டது. ‘எதிர்’ கல்லுக்கு அதற்கு மனம் இடங்கொடுக்கவில்லை.

    ஒரு வாரத்தில் சிவலிங்க ஸ்தபதி ஊருக்கு வந்தார். பல இடங்களில் தேடிவிட்டு நேர் எதிர் கற்கள் இருக்குமிடத்திற்கு வந்தார். நன்கு தட்டிப் பார்த்தார்.

    ரெண்டுமே சிலைக்கு பேஷாப் பொருந்தும். சந்தோசத்தில் மிதந்தார். வேலை இப்படிச் சீக்கிரம் முடிந்ததில் அவருக்கும், ஊர்ப் பெரியவர்களுக்கும் மிக்க திருப்தி.

    இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது? ஒவ்வொன்றையும் இன்னும் பலமுறை தட்டிப்பார்த்தார்.

    ‘எதிர்’ தனக்கு அதில் விருப்பமில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது. ஸ்தபதி சிலை செய்யத் தன்னை ஆட்படுத்தும் அந்தச் சித்திரவதைக்குத் தான் ஒருபோதும் ஆட்பணிய முடியாது என்பதில் உறுதியாக இருந்தது.

    நீ முடியாது எனக் கூறிவிட்டாய். அகப்பட்டது நான்தான். வேறு என்ன செய்ய? அரைகுறை மனதுடன் சரியென்று சொல்லி விட்டது.

    முடியாது என்றால் முடியாது என்று சொல்ல வேண்டியது தானே? என்னைப் போல் விடாப்பிடியாக இரு ‘எதிர்’ கல் எவ்வளவோ சொல்லிப்பார்த்தது.

    எல்லாம் விதிப்படிதான் நடக்கும். நீயா? நானா? என்பது தான் கேள்வி. ‘நீ’ ‘இல்லை’ என்றால் ‘நான்’ தானே ‘ஆமாம்’ சொல்லவேண்டும்.

    ‘நேர்’ கல் தன்னைத் தேற்றிக்கொண்டுவிட்டது.

    பத்து நாட்களில் அந்தக் கல்லைப் புரட்டி எடுத்துக்கொண்டு போவதை ‘எதிர்’ வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.

    ‘அப்போதே சொன்னேன் கேட்டியா? இந்த நிலைமை உனக்குத் தேவையா? அனுதாபப்பட்டது ‘எதிர்.’

    நேர் கல்லைப் பக்கத்தில் ஒரு கொட்டகைக்கு மாற்றினார்கள். சிற்பியின் மேற்பார்வையில் அதனைக் கொண்டு சிலை வடிக்கும் வேலை ஆரம்பமானது. எந்திரங்கள் கொண்டு அதைப் பிளந்த போது கேட்ட கர்ண கொடூரமான ஒலியுடன், தீப்பொறிகளும் பறந்தன.

    நேர் கல்லின் ஓலமும் அதனுடன் சேர்ந்தது. இதுவரை தன்னுடன் இருந்த ‘நேர்’ கல்லை அந்த இடத்தை விட்டு மாற்றியவுடன் வருத்தமுற்ற ‘எதிர்’ கல் அது படும் சித்திரவதை கண்டு இரத்தக் கண்ணீர் வடித்தது. ‘நேர்’ கல்லை இரண்டாகப் பிளந்தவுடன் எதிர் கல்லுக்கும் தனது இதயத்தைப் பிளந்தது போன்ற உணர்வு. அடுத்த ஒரு மாதம் ‘நேர்’ கல் பட்டது சித்திரவதை என்றால் எதிர் கல் பட்டது பெரிய அவஸ்தை.

    ணங் ணங் எனக் கேட்ட உளி ஓசையுடன் ‘நேர்’ கல்லின் வேதனைக் குரலும் சேர்ந்தே வந்ததை ‘எதிர்’ கவனிக்கத் தவறவில்லை.

    அதன் பின் சிற்பியின் உதவியாளர்கள் தீப்பொறி பறக்கும் அளவுக்கு ‘பாலிஷ்’ பேப்பர் கொண்டு கல்லில் ‘தேய்’ தேய் என்று தேய்த்தனர். பறக்கும் தீக்கனலுடன் ‘நேர்’ கல்லின் இரத்தக் கண்ணீரும் பறந்தோடி ஆவியானது. எதிர் கல் அதைப் பார்க்கவே செய்தது. ‘ஐயோ பாவம்’ என்று அது இரக்கப்பட்ட அதே வேளையில்,

    நல்ல வேளை, நான் பிழைத்தேன்! இல்லாவிட்டால் எனக்கும் இதே கதிதான் இரக்கம் தனக்குத் தானே பட்ட ஆறுதலால் மாறிப் போயிற்று.

    அடுத்த பத்து நாட்களில் ‘நேர்’ கல்லில் எந்த ஓலமும் கேட்கவில்லை. ‘எதிர்’க்கு ஒன்றுமே ஓடவில்லை.

    என்ன ஆச்சு எனது நண்பனுக்கு? அவன் இறந்துவிட்டானா? ஓவென்று கதறலாம் போல இருந்தது. எனது கதறல் யாருக்குக் கேட்கப்போகிறது? வாய் மூடி மௌனியாகிவிட்டது.

    அடுத்த ஆறு மாதங்கள் அங்கு பலவித வேலைகள், மளமளவென்று பல காரியங்கள். ‘எதிர்’ கல் மேல் உட்கார்ந்த இருவர் பேசிக்கொண்டது அதற்குக் கேட்டது.

    அடுத்த மாதம் கோவில் கும்பாபிஷேகம்... பிள்ளையார் சிலை தத்ரூபமாக வந்து இருக்காம்... ஸ்தபதிக்கு ரொம்ப சந்தோஷமாம்...

    ஏய்... ஏய்... வழி விடு... கோயிலுக்கு அந்தச் சிலையை வைக்கக் கொண்டு வராங்க பாரு.... ஸ்தபதி சொன்னது உண்மை தான்... சிலை ரொம்ப பிரமாதமாகத்தான் அமைஞ்சிருக்கு... அவர்கள் பேச்சுக்கு இடையே பழக்கப்பட்ட குரல் ஒன்றும் ‘எதிர்’க்கு கேட்டது.

    சௌக்கியமா? எப்படி இருக்கே? ஆச்சரியத்தில் மூழ்கியது ‘எதிர்’ கல்.

    நண்பனே... என்னைத் தெரியலையா? குரல் சமீபித்தது. சிலையை மெதுவாக நகர்த்திக் கொண்டு வந்தார்கள்.

    ஆகா! இது என் நண்பன் நேர்’’ போல் இருக்கே?"

    "போல இல்லை. நானேதான்... நா இப்ப எப்படி இருக்கேன்? பெருமையுடன் கேட்டது ‘நேர்’.

    ஆ... நீயா? அடையாளமே தெரியலையே? எப்படி மாறிவிட்டாய் நீ? உருவே தெரியாம இப்படி?

    ‘எதிர்’ ஆச்சரியப்பட்டுத்தான் போயிற்று உருவே தெரியாமல்னு சொல்லாதே... கோயில் கருவறைக்குப் போறேன்... இனிமே நீ இங்க என்னைப் பாக்க முடியாது... க்யூவுல நின்னுதான் என்னைப் பாக்க வரணும். என்னைப் பாத்து கன்னத்துல போட்டுக்கணும்.. எனக்கு விதவிதமான அபிஷேகம், அலங்காரம். நான் அடுத்த வாரம் கோயில் சாமியா மாறிடுவேன். எம்பேரு இனிமே நேர் இல்லை செல்வ விநாயகர் புரிஞ்சுதா? பெருமையுடன் கூறியது நேர்.

    மொதல்ல என்னை ராட்சச மிஷினை வெச்சுப் பொளந்தார்கள். பின்பு உளியால் உடைத்தார்கள். பாலிஷ் பேப்பர் போட்டுத் தேய் தேய்னு தேய்த்தார்கள். என்னைச் சித்திரவதை செய்தார்கள். என்னோட அழுகையைக் கேட்கப் பக்கத்துல நீ கூட இல்ல பழைய கசப்பான நினைவுகளை அசை போட்டது ‘நேர்.’

    ஆமாமாம் எனக்கும் அது லேசாகக் கேட்டது. ‘எதிர்’ சொல்லிற்று.

    அதெல்லாம் கொஞ்ச நாள் தான். அப்புறம்தான் தெரிந்தது என்னை ஒரு சாமி சிலையா மாத்தப் போறாங்கன்னு. பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போச்சு. எல்லாமே நல்லதுக்குத்தான். கஷ்டப்படாம பலன் கிடைக்குமா? இப்ப பாரு நான் எப்படி இருக்கேன்? பெருமிதம் தாங்காது நேர் பேசிற்று.

    ஒனக்கென்ன? ரொம்ப நல்லாத்தான் மாறிட்டே. என்னைய எல்லாம் ஞாபகம் வெச்சிப்பியா? இப்போது பரிதாபம் பொறாமையாக மாறிவிட்டிருந்தது.

    நா வரேன். ‘நேர்’ கல் உள்ளே சென்றுகொண்டிருந்தது. அதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது ‘எதிர்’.

    செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்குரிய வேலைகள் துரிதமாயின. யாகசாலை வேலைகள் தொடங்கின.

    என்னப்பா... தேங்காய் நெறைய ஒடைக்க வேண்டியிருக்கு. எல்லா ஏற்பாடும் பண்ணினவங்க அதுக்கு ஒன்றும் பண்ணாம விட்டுட்டாங்களே... எங்கே உடைக்க? குருக்கள் ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார்.

    இவ்வளவு பண்ற அந்த செல்வ விநாயகர் இது கூடவா பண்ண மாட்டார்? அதோ பாரு, எவ்வளவு பெரிய கல்? தேங்காய் மட்டுமா... ஒன்னையும் என்னையுமே சேர்த்து ஒடைக்கறாப்புல. ‘எதிர்’ கல்லைக் காட்டினார் இன்னுமொரு குருக்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1