Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sila Anubavangal Sila Manithargal
Sila Anubavangal Sila Manithargal
Sila Anubavangal Sila Manithargal
Ebook293 pages2 hours

Sila Anubavangal Sila Manithargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஐம்புலன்களில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதன் மூலம், அதாவது - பார்த்தோ, கேட்டோ, படித்தோ, உணர்ந்தோ, அனுபவிப்பதன் மூலமோ - ஒரு விஷயம் வெகுவாகப் பாதித்து, விடாமல் பிறாண்டி, அதைப் பற்றின சிந்தனையை என்னுள் ஜனிக்கச் செய்யுமேயானால், அந்தப் பாதிப்பை எழுத்து மூலம் என் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதையே இதுநாள்வரை நான் செய்து வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் நீங்கள் படிக்கப்போகும் இந்த 'சில அனுபவங்களும், சில மனிதர்களும்’ தொகுப்பும்கூட...

ஒருவர் முன் கையை நீட்டும்போது புறங்கைப் பக்கம் உள்ளவர் நகங்களைப் பார்ப்பர்; எதிர்ப்பக்கம் நிற்பவர் உள்ளங்கைப் பகுதியைக் காண்பர். நகத்தைக் காணாதவர் பார்வையில் குற்றமும் இல்லை; இந்தப் பக்கம் நிற்பதாலேயே நகங்களை ஏறிட நேரிடுபவர் கண்களுக்குக் கூர்மை அதிகம் என்றும் இல்லை. இரண்டும் இரண்டு கோணங்கள் - அவ்வளவே. இதைக் குறிப்பிட்டுப் பேசும்போதுதான் பெரியவர்கள் ‘எதையும் கண்டனம், விமர்சனம் செய்யத் துணியும் முன்னர் இன்னொரு கண்ணோட்டம் உள்ளது என்பதை நினைவில் கொண்டு நிதானத்துடன் செயல்படுவதே நன்று' என்கின்றனர்.

நின்று நிதானித்து யோசித்தால் - 'இன்னொரு கண்ணோட்டம்' மட்டும்தானா உள்ளது? ம்ஹூம்... இல்லை. புறங்கை, உள்ளங்கை கோணங்களைத் தவிர, பக்கவாட்டுக் கோணங்கள், மேல், கீழ்க் கோணங்கள் என்று எத்தனை கண்ணோட்டங்கள் உள்ளன?

எந்த ஒரு சேதியையும் முழுமையாக அறிந்து உணர வேண்டுமென்றால் அத்தனை கோணங்களிலிருந்தும் காண முயற்சிப்பதுதானே புத்திசாலித்தனம், விவேகம்?

இந்தக் கேள்வி எனக்குள் எட்டிப் பார்த்து, சின்னதாக விழிப்புணர்வை உண்டாக்கிய பின், ஒரு பொருளை, நபரை, அனுபவத்தை, உணர்வை - பல கோணங்களிலிருந்து பார்க்க, உணர, புரிந்துகொள்ளப் பிரயத்தனம் எடுத்தபோது - புதுசு புதுசாய் சந்தோஷம், வலி, இப்படியும் இருக்குமா என்ற ஆச்சர்யம், என்ன இது என்ற கேள்வி - எல்லாம் நிறையவே எழுந்தன. இதுநாள்வரை நான் பார்த்திராத கோணத்திலிருந்து சில விஷயங்களைக் கண்டபோது அவை என்னுள் உண்டாக்கிய பாதிப்புகளே 'சில அனுபவங்கள்...’

இதே போல - மிகப்பிரபலமாக இன்றைய சமுதாயத்தில் வளையவரும் சிலரை, அந்தப் பிரபலம் என்கிற முகமூடி இல்லாமல், நான் நானாக அவர்கள் இருந்த சமயங்களில் பார்த்துப் பழகி சந்தோஷித்திருக்கிறேன். அந்த நிறைவை, மகிழ்ச்சியை வாசகர்களுக்கு அறிமுகம் பண்ணும் ஆர்வமே 'சில மனிதர்கள்' கட்டுரைகளுக்குக் காரணம்...

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளெல்லாம் பல பத்திரிகைகளில், சுமார் ஏழு எட்டு வருஷ இடைவெளியில் வெளியானவை. சிலவற்றில் என் குழந்தைத்தனம், சிலவற்றில் என் முதிர்ச்சி வெளிப்படையாகத் தென்பட்டு, என்னுள் உண்டான மாற்றங்களை, மனவளர்ச்சியை, வாசகர்களுக்கு இனம் காட்டுவனவாகக்கூட இருக்கலாம்.

- சிவசங்கரி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101804345
Sila Anubavangal Sila Manithargal

Read more from Sivasankari

Related to Sila Anubavangal Sila Manithargal

Related ebooks

Reviews for Sila Anubavangal Sila Manithargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sila Anubavangal Sila Manithargal - Sivasankari

    http://www.pustaka.co.in

    சில அனுபவங்கள் சில மனிதர்கள்

    Sila Anubavangal Sila Manithargal

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாரம் ஒரு பக்கம்

    தலைதீபாவளி

    அண்ணியுடன் ஒரு பேட்டி

    ஒரு மாசமாய் என்ன பண்ணிக் கொண்டிருந்தேன்?

    மறக்க இயலாத ஒரு பயணம்

    எழுத்தும் பிரச்சினைகளும்

    எனக்கேற்பட்ட தர்மசங்கடமான நிலைமை

    தமிழ்ப்பட உலகும், நானும்

    சினிமா உலக அனுபவங்கள்

    திரு. சாவி

    திரு. சோ

    திருமதி. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

    செல்வி. ஸ்ரீப்ரியா

    திருமதி. வாணி ஜெயராம்

    செல்வி. ஜெயலலிதா

    டைரக்டர் திரு. பாலசந்தர்

    திருமதி. லதா ரஜினிகாந்த்

    நடிகர் திலகம்

    திரு. கமல்ஹாஸன்

    நடிகையர் திலகம் சாவித்திரி

    ஆச்சி

    திருமதி சகுந்தலா நரசிம்மன்

    லிண்டா

    10 விருந்தாளிகள்

    ஒளிபடைத்த கண்ணினாய் வா... வா... வா...

    விஸ்ராந்தி

    இவர்கள் செய்த பாவமென்ன?

    பயம்... பயம்... பயம்... பயம்... பயம்...

    ஆல்கஹாலிஸம்

    பயணக்கட்டுரை எழுதுவது எப்படி?

    நான் ஏன் எழுதுகிறேன்?

    என்னுரை

    ஐம்புலன்களில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதன் மூலம், அதாவது - பார்த்தோ, கேட்டோ, படித்தோ, உணர்ந்தோ, அனுபவிப்பதன் மூலமோ - ஒரு விஷயம் வெகுவாகப் பாதித்து, விடாமல் பிறாண்டி, அதைப் பற்றின சிந்தனையை என்னுள் ஜனிக்கச் செய்யுமேயானால், அந்தப் பாதிப்பை எழுத்து மூலம் என் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதையே இதுநாள்வரை நான் செய்து வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் நீங்கள் படிக்கப்போகும் இந்த 'சில அனுபவங்களும், சில மனிதர்களும்’ தொகுப்பும்கூட...

    ஒருவர் முன் கையை நீட்டும்போது புறங்கைப் பக்கம் உள்ளவர் நகங்களைப் பார்ப்பர்; எதிர்ப்பக்கம் நிற்பவர் உள்ளங்கைப் பகுதியைக் காண்பர். நகத்தைக் காணாதவர் பார்வையில் குற்றமும் இல்லை; இந்தப் பக்கம் நிற்பதாலேயே நகங்களை ஏறிட நேரிடுபவர் கண்களுக்குக் கூர்மை அதிகம் என்றும் இல்லை. இரண்டும் இரண்டு கோணங்கள் - அவ்வளவே. இதைக் குறிப்பிட்டுப் பேசும்போதுதான் பெரியவர்கள் ‘எதையும் கண்டனம், விமர்சனம் செய்யத் துணியும் முன்னர் இன்னொரு கண்ணோட்டம் உள்ளது என்பதை நினைவில் கொண்டு நிதானத்துடன் செயல்படுவதே நன்று' என்கின்றனர்.

    நின்று நிதானித்து யோசித்தால் - 'இன்னொரு கண்ணோட்டம்' மட்டும்தானா உள்ளது? ம்ஹூம்... இல்லை. புறங்கை, உள்ளங்கை கோணங்களைத் தவிர, பக்கவாட்டுக் கோணங்கள், மேல், கீழ்க் கோணங்கள் என்று எத்தனை கண்ணோட்டங்கள் உள்ளன?

    எந்த ஒரு சேதியையும் முழுமையாக அறிந்து உணர வேண்டுமென்றால் அத்தனை கோணங்களிலிருந்தும் காண முயற்சிப்பதுதானே புத்திசாலித்தனம், விவேகம்?

    இந்தக் கேள்வி எனக்குள் எட்டிப் பார்த்து, சின்னதாக விழிப்புணர்வை உண்டாக்கிய பின், ஒரு பொருளை, நபரை, அனுபவத்தை, உணர்வை - பல கோணங்களிலிருந்து பார்க்க, உணர, புரிந்துகொள்ளப் பிரயத்தனம் எடுத்தபோது - புதுசு புதுசாய் சந்தோஷம், வலி, இப்படியும் இருக்குமா என்ற ஆச்சர்யம், என்ன இது என்ற கேள்வி - எல்லாம் நிறையவே எழுந்தன. இதுநாள்வரை நான் பார்த்திராத கோணத்திலிருந்து சில விஷயங்களைக் கண்டபோது அவை என்னுள் உண்டாக்கிய பாதிப்புகளே 'சில அனுபவங்கள்...’

    இதே போல - மிகப்பிரபலமாக இன்றைய சமுதாயத்தில் வளையவரும் சிலரை, அந்தப் பிரபலம் என்கிற முகமூடி இல்லாமல், நான் நானாக அவர்கள் இருந்த சமயங்களில் பார்த்துப் பழகி சந்தோஷித்திருக்கிறேன். அந்த நிறைவை, மகிழ்ச்சியை வாசகர்களுக்கு அறிமுகம் பண்ணும் ஆர்வமே 'சில மனிதர்கள்' கட்டுரைகளுக்குக் காரணம்...

    இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளெல்லாம் பல பத்திரிகைகளில், சுமார் ஏழு எட்டு வருஷ இடைவெளியில் வெளியானவை. சிலவற்றில் என் குழந்தைத்தனம், சிலவற்றில் என் முதிர்ச்சி வெளிப்படையாகத் தென்பட்டு, என்னுள் உண்டான மாற்றங்களை, மனவளர்ச்சியை, வாசகர்களுக்கு இனம் காட்டுவனவாகக்கூட இருக்கலாம்.

    சிவசங்கரி

    *****

    வாரம் ஒரு பக்கம்

    1

    வாரம் ஒரு பக்கம் –

    என் சின்ன வயசு நாட்களை, ஞாபகப் பெட்டியின் அடியில் தங்கிவிட்ட நாட்களைப் புரட்டிப் பார்க்க,

    என்றோ எப்போதோ நடந்து முடிந்து, இனி என்னால் உனக்கு என்ன உபயோகம் என்ற சிணுங்கலோடு தூங்கி விட்ட நிகழ்ச்சிகளை எழுந்திரு என்று தட்டியெழுப்ப,

    முதிர்ச்சி அடையாத இளம் பிராயத்தில் கண்ணைக் கட்டிவிட்ட குதிரையாய், பல கோணங்களிலிருந்து பார்க்கத் தெரியாத காரணத்தால், அனுபவங்களாலும், மனிதர்களாலும் நெகிழ்ந்து, சிலிர்த்து, உருகி, பூரித்து, சந்தோஷித்து, ஏன், அடிபட்டுக்கூடப் போனதாக நினைத்த சமாச்சாரங்களைத் திரும்ப அசைபோட,

    அன்றாடம் நான் சந்திக்கும் நபர்களை, அவர்கள் என்னுள் உண்டாக்கும் பாதிப்புகளை உங்களிடம் எடுத்துச் சொல்ல,

    முக்கியமாய், எனக்கு, என் எண்ணங்களுக்கு, என் மன வளர்ச்சிக்கு நானே மதிப்பெண் போட்டுக்கொள்ள,

    எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் - இந்த 'வாரம் ஒரு பக்கம்' என்பதை உணர்கிறபோது கொஞ்சம் சந்தோஷம், நிறைய பயமாக இருக்கிறது.

    மேலே சொன்னது போல என்னை நானே அலசிக் கொள்ளப் போவதால் உண்டாகும் சந்தோஷம் -

    கூடவே, முடியுமா என்னால்? - என்ற சந்தேகம் எழுவதால் - பயம்.

    முடியுமா?

    என்னால் முடியுமா?

    மஞ்சள் கண்ணாடியை அணிந்து கொள்ளாமல், இது தான் சாக்கு என்று யாரையும் அனாவசியமாக இகழாமல், தெளிவான சிந்தனையுடன், எந்த ஒரு நபர், நிகழ்ச்சி பக்கமும் பாரபட்சத்துடன் சாயாமல்...

    முடியுமா?

    நின்று நிதானமாகக் கண்களை மூடி சிந்திக்கையில் முடியும் என்றே தோன்றுகிறது.

    ஒவ்வொரு நாள் இரவும் என்னை நானே விமர்சித்துக் கொள்வதும், முதல் நாள் செய்த தவறை மறுநாள் செய்யாமல் இருக்க விழிப்புடன் நடக்க முயற்சிப்பதும் நிஜமென்றால்,

    நடந்தவற்றை, நடப்பவற்றை, ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்வது - வாரம் ஒரு பக்கம் எழுதுவது - என்னால் முடிகின்ற காரியமாகத்தான் இருக்க வேண்டும்.

    இன்றைக்கு என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார்.

    நாற்பது வயசிருக்குமா?

    இருக்கும்.

    மனுஷர் தளர்ந்து, அசதியுடன் இருப்பது வெளிப் படையாகத் தெரிந்தது.

    ஒரு கையில் ஒரு துணிப்பை

    இன்னொன்றில் ஒரு பையன்.

    மாங்காய் சைஸில் தலை, நெருங்கலான உடம்பு, கசங்கின நிக்கர், சட்டை, எண்ணெய் தடவிப் படிய வாரின் தலைமுடி.

    பார்வை ஒரு இடத்தில் நிற்காமல் ஒருவித அச்சத்துடன் துள்ள, வாயில் எச்சில்.

    மங்கலாய்ட் சைல்ட் - மூளை வளர்ச்சி குன்றிப் பிறந்த பிள்ளை.

    உட்காருங்க.

    நாற்காலியின் விளிம்பில் அவர் உட்கார்ந்து, பையனை தனக்குப் பக்கத்தில், தோளை அழுத்தித் தரையில் உட்கார வைத்தார்.

    மேலேயே உட்காரட்டுமே...

    இல்லே, வேணாம்...

    துடிக்கும் உதடுகளையும், கலங்கும் கண்களையும் சமாளிக்க அவர் பிரயத்தனப்படுவது புரிந்தது.

    மெதுவாக, ரொம்பக் கஷ்டப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாகத் தேடிப் பேசினார்.

    பையன் அவருடைய ஒரே பிள்ளை. வயசு ஏழு. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை என்பது பிறந்த உடனே தெரியவில்லையாம். ஆறாம் மாசம் எழுந்த சந்தேகம் ஒரு வருஷத்தில் உறுதிப்பட்டதாம். சக்திக்குத் தகுந்தபடி வைத்தியம் பார்த்தாராம். பலன்தான் ஒன்றும் இல்லையாம். பிள்ளை வளரவளர சுற்றுவட்டாரக் கேலியும், கஷ்டமும் கூடவே வளர, ஏதாவது ஹோமில் சேர்க்க இயலுமா என்று அறிய வந்திருக்கிறாராம்; சொன்னார்.

    நீங்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்களைப்பத்தி எழுதின கட்டுரையைப் படிச்சிட்டுதான் உங்ககிட்ட வந்திருக்கேன். தயவுபண்ணி, கொஞ்சம் சிபாரிசு செய்து இவனை நல்லதா ஒரு ஹோம்ல சேர்த்துவிட்டுட்டீங்கன்னா - நா... நா ரொம்ப கடமைப்... பட்...

    பேச முடியாமல் அவர் தவிக்க, பிள்ளைமேல் இத்தனை பாசம் வைத்திருப்பவர் முடிந்தால் அவனை வீட்டில் வைத்தே பராமரிக்கலாமே என்ற சந்தேகம் எழ, அதையே அவரிடம் கேட்டேன்.

    எதுவும் பேசாமல் அவர் லேசாக விசும்பத் தொடங்கினார்.

    அப்புறம் சில நிமிஷங்கள் கழித்து சன்னமான குரலில் பேசினார்.

    இவனைக் கண்டா இவனோட அம்மாவுக்குப் பிடிக்கலை. பிறந்ததுலேந்தே ஏனோ ஒரு அருவருப்பு. இவனை வளர்த்தது முழுக்க முழுக்க நாதான்... நா ஆபீஸ் போறப்ப கூட அவ பார்த்துக்க மறுக்கறா... எவ்வளவோ எடுத்துச் சொல்லிட்டேன் - கெஞ்சிட்டேன். வரவர ரொம்பக் கஷ்டமா இருக்கு. போன வாரம், 'ஒண்ணு இவன் இருக்கணும், இல்லே நா இருக்கணும். யார்னு தீர்மானம் பண்ணிக்கங்கனு' கண்டிப்பா சொல்லிட்டா... அ... அ... தான்...

    முகத்தை மூடிக்கொண்டு அவர் அழ, ஒன்றுமே புரியாத ஜடமாய் பக்கத்தில் பிள்ளை...

    நாம் போற்றி வணங்கும் தாய்மைக்கு இது இன்னொரு கோணம் -

    அப்படித்தானே?

    2

    இந்தக் காக்கைகளுக்கு சாதம் போடும் பழக்கம் எனக்கு எப்போது உண்டானது?

    மூன்று வருஷம், நான்கு வருஷமாய்?

    இருக்கலாம்.

    காக்கைகளுக்கு சாதம் வைத்தால் நல்லது என்று அம்மா சொன்னதால் ஆரம்பித்தேனா, மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிய ஒரு நாளில் நடுங்கிக்கொண்டு நான்கைந்து காக்கைகள் கொய்யாமரம், வேப்பமரத்தில் ஒண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்துப் பரிதாபப்பட்டு ஆரம்பித்தேனா, வேறு ஏதாவது காரணமா, இல்லை எல்லாமேதானா?

    தெரியவில்லை.

    அடைமழை பெய்து வானம் வெளுத்திருந்த ஒரு நாளில் கரண்டி சாதத்தைத் திண்ணைமேல் போட்டுவிட்டு க்கா... க்கா என்று குரலெடுத்துக் கத்தியது மட்டும் நன்றாக நினைப்பிலிருக்கிறது.

    மதியம் வரை ஒன்றுகூட வந்து அதில் வாய் வைக்கவில்லை. அப்புறம் தலையைச் சாய்த்துக்கொண்டு தயங்கித் தயங்கி ஒன்று வந்தது... கூடவே இன்னொன்று... இன்னும் ஒன்று...

    மறுநாள் பத்து நிமிஷத்தில் அன்னம் காலியானது. அடுத்தநாள் போட்ட உடனேயே...

    அதன் பிறகுதான் பன்னிரண்டரை மணி ஆனால் கூரை மேல், மரங்களில் பத்தாய், இருபதாய் காத்திருக்கும் பழக்கம் துவங்கியது.

    ஒரு மணி வரை பார்க்கும், அதற்குள் போடா விட்டால் பலவிதக் குரலில் க்கா ஆ... என்று மாற்றி மாற்றி ஒவ்வொன்றாகக் குரல் கொடுக்கும்.

    இந்தக் காக்கைகளில் தான் எத்தனை தினுசு!

    கறுப்பாய், தாட்டியாய், பொசுபொசுவென்று அண்டங் காக்கைகள்... இவை வந்துவிட்டால் மற்ற காக்கைகள் சாதத்தைக் கொத்தாமல் தள்ளி நின்றுவிடும். அவை வாய் நிறைய அள்ளிக்கொண்டு பறந்து சென்ற பிறகே மற்றவை கிட்டத்தில் வரும்.

    இது ஏன்? அண்டங்காக்கைகளுக்கு அத்தனை மரியாதை ஏன்? அவை பலசாலிகளா? இல்லை, மனுஷரில் இருக்கும் நீ உசத்தி, நான் மட்டம் என்கிற அசட்டு ஜாதிப் பிரிவினை அவற்றிலும் உண்டா?

    செம்மிய குரல் கொண்ட நோஞ்சான் காக்கை பரம சாது - தப்பாமல் நித்தமும் வரும். ஓரமாய் உட்கார்ந்து பொறுமையாய்க் காத்திருந்து, கிடைத்த நான்கைந்து பருக்கைகளில் திருப்தியடையும் ஜீவன் அது.

    ஒற்றுமைக்குப் பேர் போனது காக்கைக் கூட்டம் என்று கணு அன்று 'காக்கை கூட்டம் கலைந்தாலும் எங்கள் கூட்டம் கலையக் கூடாது' என்று வேண்டிக் கொள்வதை எங்கள் வீட்டுக் காக்கை பொய்த்து விட்டன.

    என்றாவது விசேஷ நாள் அன்று, டிபன் இல்லாமல் பதினோரு மணிச் சாப்பாடு என்று இருந்தால், சுருக்க, காக்கைகளுக்கும் சாதம் வைப்பேன். முதலில் வரும் காக்கை திருட்டு முழி முழித்துக்கொண்டு, வாய் கொள்ளாமல் அடைத்துக் கொள்ளும்; பறந்து பறந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். அப்புறம் இஷ்டம் இருந்தால் சாதம் நிறைந்த வாயுடன் க்கா ஆ என்று கத்தி சாவகாசமாக மற்றவற்றை அழைக்கும். பொய் இல்லை, நிஜம் - நான் பலமுறைகள் பார்த்திருக்கிறேன்.

    காக்கைகள் மட்டும்தான் இந்த சாதத்தை சாப்பிடுகின்றன என்றில்லை, இரண்டு மூன்று அணில்கள், கீழே சிந்துவதை சந்தோஷமாகப் பொறுக்கித் தின்னும் ஏழெட்டு தவிட்டுக் குருவிகள், அதிசயமாய் வந்து திண்ணையில் உட்கார்ந்து கம்பீரமாய் சாதத்தை சாப்பிடும் பருந்து என்று என் விருந்தினர்களின் பட்டியல் நாளுக்கு நாள் கூடுகிறது.

    விளையாட்டாய் ஆரம்பித்த இந்தப் பழக்கம் இன்று, பதினைந்திலிருந்து இருபது நிமிஷங்கள் என் சிந்தனை, கவனத்தை ஆக்கிரமிக்கும் ஒரு வேலையாக மாறியிருப்பதையும், கரண்டி சாதம், கிட்டத்தட்ட அரை ஆழாக்கு சாதமாக வளர்ந்திருப்பதையும், கூடவே வெளியூர் போனால் என் காக்கைகள் பட்டினி கிடக்குமோ, பல முறைகள் க்கா ஆ... என்று அழைத்து ஏமாறுமோ என்று லேசாகத் தவிக்க வைக்கும் அளவுக்கு என்னைப் பாதித்திருப்பதையும் உணர்கையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது!

    3

    மாடு, ஆடுகளை வெட்டுவதைப் பார்த்த அனுபவம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா?

    எனக்கு இருக்கிறது - இரண்டு தரம்.

    முன்னறிவிப்பு இல்லாமல் இசகுபிசகாக மாட்டிக் கொண்டதில் மாடு வெட்டுவதைப் பார்த்தது ஒரு தரம். ஆ! என்ன செய்துவிடும், போய்தான் பார்ப்போமே என்று நானாக வேதனையை வலிய வாங்கியது இரண்டாம் தரம்.

    ஸ்யாமாவுக்கு (எங்கள் நாய்) - 'கறி' வாங்க வேண்டி, கடைக்குப் போன அந்த ஒரு நாளில் மாடு வெட்டுவதை சற்றும் எதிர்பாராமல் காண நேரிட்டது.

    நோஞ்சான் மாட்டின் கொம்புகளை ஒருவன் பிடித்துக் கொள்ள, பாறாங்கல்லால் ஓங்கி நெற்றிப்பொட்டில் இன்னொருவன் அறைய, மாடு ம்மா... ஆ... என்று கதறி, கீழே விழுந்து, சாணத்தைத் தள்ளி, கால்களை விலுக் விலுக்கென்று உதைத்துக்கொள்ள, அரைகுறை மயக்க நிலையில் இருக்கையிலேயே ஒருவன் பட்டாக்கத்தியால் அதன் குரல்வளையை அறுக்கத் துவங்க...

    கடவுளே... கடவுளே...

    எத்தனை கோரமான, பரிதாபமான காட்சி அது!

    அதிர்ந்து, வெகுண்டு, தவித்து, பறந்து, என்ன செய்வோம் என்று புரியாமல், அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நான் எழுதிய சிறுகதை 'வைராக்கியம்'

    கதை வெளியாகி ஒரு மாசம் இருக்கும் - எதேச்சையாய், ஒருநாள் மாடு வெட்டிய நபரை இன்னொரு இடத்தில் நான் சந்திக்க நேர்ந்தது.

    மாடு வெட்டறதப்பத்தி நீங்க கதை எழுதினீங்களாமே! இனியும் மாடு வெட்டறதை சுலபமா யாரும் பார்க்கக் கூடாதுனிட்டு இப்ப அந்த எடத்துலே ஒயரமா செவுரு எடுத்திட்டாங்க... தெரியுமா?

    நான்கூடப் பார்த்தேன். ஏழடி உயரச் சுவர்... பரவாயில்லை, அந்த மாட்டுக்கு சந்தோஷம்.

    கல்கத்தாவுக்குச் சென்றபோது அண்ணாவின் நண்பர் ராய் வீட்டில், ஜ்வராத்திரி பூஜையில் ஆடுகளை பலி கொடுக்கப் போவதைத் தெரிந்து கொண்டே, எதற்காக பயந்து சாகிறேன், போய்தான் பார்ப்போமே - என்ற திமிரோடு சென்றது இரண்டாவது அனுபவம்...

    மூன்று ஆடுகள் குஞ்சு, குஞ்சாய்...

    ஒரே போடில் கழுத்து துண்டிக்கப்பட வேண்டும்; நடுவில் தடைப்பட்டால், அது அபசகுனமாகக் கருதப்படும். போன இரண்டாம் வருஷம், கத்தி சிக்கிக் கொண்டதில், அந்த வருஷம் எங்கள் வீட்டில் வரிசையாய் சாவுகள். வளர்ந்த ஆடுகளை ஒரே வீச்சில் வெட்டுவது கஷ்டம்; குட்டி என்றால் பிரச்சினை இல்லை...

    ராய் ஆயிரம் விளக்கம் சொன்னாலும் முழ உயரத்துக்கு நின்றுகொண்டு கழுத்து மாலைகளைப் பிய்த்துத் தின்று, ஒன்றும் புரியாமல் பேந்தப்பேந்த விழித்த ஆடுகளைக் காணும்போது ரொம்பப் பாவமாக இருந்தது.

    தைரியமாக பலி கொடுப்பதை நான் பார்ப்பேன் என்று சொல்லிவிட்டேனே தவிர, உள்ளுக்குள் ஏக உதறல்.

    டமுக்கு டமுக்கு என்று மேளம் விரைவாக அதிரத் துவங்கியது.

    முதல் ஆட்டின் தலையைக் களிமண் பீடத்தில் ஒரு பெண்மணி அழுந்தப் பிடிக்கும் வரை பார்த்தேன்; அப்புறம் கண்களை மூடிக்கொண்டு விட்டேன்.

    இரண்டாவதுக்கும் இதே கதைதான்.

    மூன்றாவதின்போது பக்கத்தில் இருந்தவர்கள் 'நீ இவ்வளவுதானா?' என்று கேலி செய்ய, பல்லைக் கடித்து கண்களைத் திறந்து வைத்துக் கொண்டேன்.

    ஒரு கணம்தான் -

    வாழைப்பழத்தை நறுக்குவது போல கத்தி கழுத்தை வெட்டிவிட்டு களிமண் பீடத்தில் புகுந்துவிட்டது.

    ஒரு பக்கம் துடிக்கும் தலை, அந்தப் பக்கம் முண்டம், பீறிடும் ரத்தம்.

    வெட்டி சில நிமிஷங்கள் ஆன பிறகும், காளி பாதத்தில் வைக்கப்பட்டு இப்படியும் அப்படியும் அசைந்த தலை. அதன் மண்டைமேல் ஏற்றப்பட்ட தீபம்.

    கடவுளே... கடவுளே...

    எத்தனை கோரமான, பரிதாபமான காட்சி அது!

    பார்த்துத் தொலைப்பானேன், அப்புறம் இரவும், பகலும், இன்றைக்கும்கூட அவஸ்தைப்படுவானேன்?

    4

    போன வருஷம், ஒரு நாடகத்தைக் காணச் சென்றிருந்த போது, அந்த நாடக ஆசிரியரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

    நான் யார் என்று புரிகிறதா?

    சின்ன வயசுதான். நடுத்தர வளர்த்தி, அகல நெற்றி, தடிமனாய் கண்ணாடி.

    ம்ஹூம், தெரியவில்லை. ஊன்றிப் பார்த்து, ஞாபகத்தைக் கசக்கின வரையில் புரியவில்லை.

    என் பெயர்... ரொம்ப வருஷங்களுக்கு முன் உங்கள் வீட்டில் வாரச் சாப்பாடு சாப்பிட வருவேனே - உனக்கு நினைவு இல்லை?

    ஆமாம், இப்போது நினைவுக்கு வருகிறது...

    குட்டையாய், சின்ன உருவமாய், நான்கு முழ வேஷ்டி, ஒட்ட வெட்டின சம்மர் க்ராப்போடு, லேசான ஒன்றரைக் கண்களோடு...

    அந்தப் பையன் பிரதி திங்கள்கிழமையும் காலை எட்டு மணி

    Enjoying the preview?
    Page 1 of 1