Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inippum Karippum
Inippum Karippum
Inippum Karippum
Ebook181 pages2 hours

Inippum Karippum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் பலரோடும் பேசிப் பேசிப் பயின்றவன்; வளர்ந்தவன்; அழிந்தவன்கூட. அழிகின்றபோதே வளர்கின்றவன் நான். ஏனென்றால் அப்பொழுதும்கூட உங்களோடு பேசிக்கொண்டே இருந்தேன். பேச்சுத்தான் மனிதனின் பலவீனம். அது எந்த அளவுக்குப் பலவீனமோ, அந்த அளவுக்கு அதுவே அவனது பலமிக்க ஆயுதம்.

யாரோ சிலர் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்ததாலோ, அவர்களில் ஒருவனாய் நானும் இருந்ததினாலோ என்னிடம் வந்து ஒருவர் பேசியதனாலோ பல கதைகள் பிறந்திருக்கின்றன.

பேசுபவர்கள் அப்படிப்பட்ட நோக்கத்தில் பேசுவது கிடையாது. எங்கு எதைக் கண்டாலும், யார் எதைச் சொன்னாலும் அதில் எனக்கு ஒரு கதை காத்துக்கொண்டிருக்கும். என் மனசின் பக்குவம் அப்படி. அப்படி உருவான கதைகளின் தொகுப்பே இந்நூல்

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580103906922
Inippum Karippum

Read more from Jayakanthan

Related to Inippum Karippum

Related ebooks

Reviews for Inippum Karippum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inippum Karippum - Jayakanthan

    https://www.pustaka.co.in

    இனிப்பும் கரிப்பும்

    Inippum Karippum

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    இத்தொகுதியைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் நீங்கள்; என் கதைகளைப் பற்றிப் பேச வேண்டியது காலம். இடையில் நீங்களும் நானும் பேசிக்கொள்வது எனக்கு உதவும்; உங்களுக்கு உதவுமா என்பது நீங்கள் யோசிக்க வேண்டிய விஷயம்.

    நான் பலரோடும் பேசிப் பேசிப் பயின்றவன்; வளர்ந்தவன்; அழிந்தவன்கூட. அழிகின்றபோதே வளர்கின்றவன் நான். ஏனென்றால் அப்பொழுதும்கூட உங்களோடு பேசிக்கொண்டே இருந்தேன்.

    பேச்சுத்தான் மனிதனின் பலவீனம். அது எந்த அளவுக்குப் பலவீனமோ, அந்த அளவுக்கு அதுவே அவனது பலமிக்க ஆயுதம்.

    யாரோ சிலர் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்ததாலோ, அவர்களில் ஒருவனாய் நானும் இருந்ததினாலோ என்னிடம் வந்து ஒருவர் பேசியதனாலோ பல கதைகள் பிறந்திருக்கின்றன.

    பேசுபவர்கள் அப்படிப்பட்ட நோக்கத்தில் பேசுவது கிடையாது. எங்கு எதைக் கண்டாலும், யார் எதைச் சொன்னாலும் அதில் எனக்கு ஒரு கதை காத்துக்கொண்டிருக்கும். என் மனசின் பக்குவம் அப்படி.

    அவர்கள் பேசிய பேச்சிற்கும், அதிலிருந்து எனக்குக் கிடைத்த கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமற்றிருப்பதாகக்கூடத் தோன்றும். என்றாலும் அதற்கு வித்து அவர்கள் பேசியதுதான். ஒருவரின் பேச்சிலிருந்து எனக்குக் கண்ட நிகழ்ச்சிகள் - மனத்தை உறுத்திக் கொண்டே இருக்கும் - சில சம்பவங்களிலிருந்தும் கதைக்குரிய பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் கிடைத்துவிடுகின்றன.

    இப்படியாக என்னைச் சுற்றி இருக்கும் எனது நண்பர்களும், உலகில் நான் காணும் மனிதர்களும் எனக்குப் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

    நான் சுயம்பு அல்ல; என் உள்ளேயே அமிழ்ந்து அமிழ்ந்து லயம் பெறுவதற்கு - எல்லோரும் சொல்லிக் கொள்வது போல் - அங்கே - என்னுள்ளே - ஒன்றுமில்லை. எனக்கு வெளியேதான் எல்லாம் இருக்கின்றன. அந்த ‘வெளி’யில்தான் நானும் இருக்கிறேன். எனது ஆத்மாவைப் பற்றியே நான் சிந்தித்துக் கொண்டிருக்க விரும்புவது பிரேத விசாரணைக்கொப்பாகும். ‘அதுதான் இன்பம், அதில்தான் இன்பம்’ என்று சொல்லிக்கொள்வது சேற்றில் கிடக்கும் பன்றி ‘இதுதான் சொர்க்கம்’ என்பதற்கொப்பாகும்.

    ‘சேறு என்ன, சொர்க்கம் என்ன? இரண்டும் ஒன்றுதான்’ என்று அத்வைதம் பேசுகிறவர்கள், ‘சேற்றிலும் இன்பம் இருக்கிறது’ என்று சொல்லிக் கொள்ளட்டும், ஆனால், ‘இதுதான் இன்பம், நானே உயர்ந்தவன், எல்லோரும் இங்கு வாருங்கள்’ என்று அழைப்பதனால் சொர்க்கம் என்பதாக ஒன்று இல்லை என்று அர்த்தமாகிவிடாது.

    சொர்க்கம் - ஒன்று உண்டு. அது என்னுள் இல்லை; வெளியில் இருக்கிறது. வெளியெல்லாம் நரகம் என்றால் என்னுள் மட்டும் சொர்க்கம் எப்படி இருக்க முடியும்? அந்தச் சொர்க்கம் முதலில் வெளியில் பிறக்கட்டும். அதன் பிறகு அது என்னுள் வரட்டும்; வரும்.

    நான் வெளியிலேயே திரிகிறேன். வெளியிலேயே வாழ்கிறேன். உலகை, வாழ்வை, மனிதர்களைக் கூர்ந்து நோக்குவதில் மகிழ்கிறேன். கண்டதை, சொன்னதை, கேட்டதை எழுதுகிறேன்.

    எதையும் நான் கற்பனை செய்ததில்லை. உலகில் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலை இருக்கக்கண்டு தான் மனிதன் பத்துத் தலையைக் ‘கற்பனை’ செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்துவிடவில்லை.

    எல்லோருக்கும் தனித் தனியாகத் தெரிந்த உண்மைகளை ஏனோ எல்லோருமே நேர் நின்று பார்க்கக் கூசுகிறோம். இந்தக் கூச்சம்கூடப் போலிக் கூச்சம்தான். நான் கண்டதை - அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப்பட்டதை, நான் கேட்டதை - அதாவது வாழ்க்கை எனக்குச் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன். அதையே உங்களிடம் திரும்பவும் சொல்கிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாக - அல்லது அதுவே உயர்வாக, உன்னதமாக... எப்படி இருந்தபோதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்? அப்படிக் காட்டும் கருவியாய் கண்ணாடியாய், ஓவியமாய், கேலிச் சித்திரமாய், சோக இசையாய், என் எழுத்து இருந்தது என்பதைத் தவிர, மற்றதெல்லாம் உங்களுடையதுதானே?... இகழ்ச்சிக்கு உரியவன் நானா? நான் மட்டும்தானா?... உங்களுக்கு ஒன்றும் பங்கில்லையா?

    நான் பத்து வருஷமாகக் கதைகள் எழுதிய போதிலும் இப்பொழுது ஒரு நான்கைந்து வருஷமாகத்தான் எனக்கு ‘மௌஸ்.’

    சென்னை

    04.08.60

    - ஜெயகாந்தன்

    பொருளடக்கம்

    இனிப்பும் கரிப்பும்

    பிணக்கு

    தாலாட்டு

    ஓவர் டைம்

    நிந்தாஸ்துதி

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி

    தாம்பத்யம்

    பற்றுக்கோல்

    புகைச்சல்

    தர்க்கம்

    ஒரு பிரமுகர்

    இனிப்பும் கரிப்பும்

    அயோக்கியப் பயலுவ... இவனுவ திமிர் அடங்கற காலம் வந்திடுச்சி... என்னமோ நெனச்சிக்கிட்டு இருக்கானுவ; இவனுவ அடிக்கற கொள்ளையெல்லாம் எனக்குத் தெரியாதா? என்னென்ன தில்லுமுல்லுகள் பண்றானுவ. இருக்கட்டும்... சுப்ரீம் கோர்ட்வரை வேணுமானாலும் போய்ப் பார்த்துடறேன். எனக்கும் பதினைஞ்சு வருஷ சர்வீஸ் இருக்கு. பார்த்துடறேன் ஒரு கை... என்று தொண்டையைச் செருமிக்கொண்டார் ஸ்ரீமான் சடாட்சரம் பிள்ளை அவர்கள்.

    கடைத்தெருவில், மார்க்கெட்டுக்குப் போய்வரும் வழியில், கையில் கறிகாய்ப் பை சகிதம் எதிரில் வந்த சௌந்தரம் நாயுடு அநுதாபம் தெரிவிக்கும் வகையில் ‘என்ன சார் இப்படிப் பண்ணிட்டானுவளே’ என்று பிள்ளையைப் பார்த்துக் கேட்டு வைத்ததின் விளைவாக, கடந்த அரை மணி நேரமாய்ப் பொறிந்து தள்ளிக் கொண்டிருக்கிறார் சடாட்சரம் பிள்ளை அவர்கள்.

    ‘பேசுவது சாது சடாட்சரம்’ என்று பெயர் வாங்கிய ‘ஆசாமிதானா...’ என்று நாயுடுவுக்கு ஆச்சரியமாயிருந்தது.

    வாங்கோ ஸார்... போயி ஒரு சோடா குடிச்சிட்டு வெத்திலை போடுவோம். என்று பிள்ளையின் பேச்சை ‘ஓவர்டேக்’ பண்ணினார் ஸ்ரீமான் நாயுடு.

    ஆத்திரமும் கோபமும் சுழித்துநின்ற சடாட்சரம் பிள்ளையின் முகத்தில் லேசான புன்னகை ஒன்று மலர்ந்தது.

    ‘தாங்க்ஸ்... இப்பத்தான் காபி சாப்பிட்டேன்... ஒன்னும் வேண்டாம்...’ என்று சொல்லும்போதே, வேறு எதையோ சொல்லவேண்டும் என்று தயக்கத்தோடு முகவாயைச் சொறிந்து கொண்டார் பிள்ளை.

    சில வினாடிகள் இருவரிடையேயும் தர்மசங்கடமான மௌனம் நிலவியது.

    அந்த மௌன வினாடிகளில் பிள்ளையவர்களின் கண்கள் நாயுடுவின் கறிகாய்ப் பையையும், சட்டைப் பையையும் துழாவி அவரது பொருளாதார நிலையைக் கணிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிவிட்டன.

    ‘சட்டைப் பையின் ஊடே தெரிவது ஒரு ரூபாய் நோட்டா?... ஐந்து ரூபாய் நோட்டா?’

    பிள்ளை அவர்களின் வலது கை விரல்கள் முகவாயின் மீது அடர்ந்திருந்த ரோமக் கட்டைகளின் மேல் புரண்டு புரண்டு நெருடின.

    ‘ஐந்து ரூபாய் கேட்கலாமா?’

    ‘மன்னிக்கணும் சார்... ஒரு ரூபாய்தான் இருக்கு. சாயங்காலம் தர்ரேனே’ என்று சொல்லி ஆள் நழுவிவிட்டால்?...

    ‘அப்புறம் சாயங்காலம் என்ன, சாகும் காலம்வரை ஆள் கண்ணில் படமாட்டான்.’

    ‘முதலில் ஐந்து ரூபாய் கேட்டுவிட்டு, அதன் பிறகு அந்த ஒரு ரூபாயைத்தான் கொடுங்களேன் என்று கேட்பது அவ்வளவு நன்றாகவும் நாகரிகமாகவும் இருக்காது... உம்...’

    நாயுடுவின் பார்வை பிள்ளையின் அழுக்குக் கோலத்தையும் பஞ்சை நிலையையும் அளந்து பார்த்தது; கைவிரல்கள் சட்டைப் பையைத் தடவிப் பார்த்தன; மனம் ஏனோ பயந்து...

    ஏனோ என்ன? மடியில் கனம் இருக்கிறது அல்லவா? பின் பயம் ஏற்படாதா?

    இருவரின் மௌனமும் இருவருக்குமே சகிக்கக் கூடியதாயில்லை.

    அப்ப நான் வரட்டுமா ஸார்... என்று முகமெல்லாம் விகஸிக்க முறுவலித்தவாறே வணங்கினார் சௌந்தரம் நாயுடு.

    ‘ஹ்ம்... ஹ்ம்.... ஆள் நழுவறானே...’

    மிஸ்டர் நாயுடு... ஒரு ஒன் ருப்பி இருந்தா தாருங்களேன்... ஈவினிங் தந்துடறேன்... என்று போகிறவர் பிடரியில் கொக்கியிட்டு இழுத்தார் பிள்ளை. நாயுடு நின்று திரும்பினார்.

    ஓ! அதுக்கென்ன... மெதுவாவே தரலாம்; டோன்ட் ஓரி... என்று அலட்சியத்துடன் கூறி நாயுடு பைக்குள் கை விட்டு அடுக்காக இருந்த நான்கு ஒற்றை ரூபாய் நோட்டுகளிலிருந்து ஒரு நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

    ‘அடடா... ரெண்டாக் கேக்காமே போனோமே’ என்று மனசிற்குள் தன்னைத்தானே கடிந்து கொண்ட பிள்ளை, புத்தம் புதிய சலவை நோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே குனிந்த தலை நிமிராமல்,

    ஒங்க உதவிக்கு ரொம்ப தாங்ஸ் என்று தம்முடைய மன நிறைவை நாயுடுவுக்குக் காட்டிக் கொண்டார்.

    நான்கு ரூபாய்க்கும் மோசம் வந்து விடுமோ என்றிருந்த அச்சம் நீங்கிய திருப்தி நாயுடுவுக்கு.

    இதெல்லாம் நமக்குள்ளே என்ன ஸார் என்று தமது தாராள மனத்தைத் திறந்து காட்டிய நாயுடு, பிள்ளையவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, விட்டால் போதும் என்று திரும்பாமல் ஓடினார்.

    கையிலிருந்த ரூபாய் நோட்டைச் சற்று நேரம் வெறித்துப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார் ஸ்ரீமான் சடாட்சரம் பிள்ளை.

    ‘ஒரு ரூபாய்...’

    ‘இதற்குத்தான் காலையிலிருந்து எவ்வளவு பாடு!... கேவலம் ஒரு ரூபாய்க் காசில்லாமல்...’ அவர் கண்களில் கரித்து நிரம்பிய கண்ணீர்த் திரை பார்வையில் நின்ற நோட்டை மறைத்தது. மேல் துண்டால் நெற்றியையும் கண்களையும் துடைத்துக் கொண்டார். ரூபாய் நோட்டு அவரைப் பார்த்துச் சிரித்தது.

    ‘இதைக் கொண்டு ஆறு ஜீவன்கள் ஒரு வேளைப் பொழுதைக் கழிக்க முடியுமா?...’

    ‘முடியலாம்...!’

    "இந்த மாசம் பூராவும் இந்த நிலைதானா!... எப்படித்தான் கழியுமோ?...’

    ‘ஹ்ம்...’ - ஒரு நீண்ட பெருமூச்சு!

    ‘இந்த மாசம் எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளிவிட்டால்... அடுத்த மாசம் சஸ்பெண்ட் செய்து வைத்த நாளுக்கும் சேர்த்துக் கறந்துட மாட்டேனா?... அதோட விடப்படாது. இந்தப் பயலுவளைப் பூண்டோடே ஒழிக்காமல் விடறதில்லை...’ என்று வர்மம் உரைத்தவாறே நடந்தார். அவருடைய சோர்ந்த முகத்தில் மீண்டும் ஆத்திரமும் கோபமும் சுழித்துக் கொண்டன.

    ***

    சென்ற நூற்றாண்டில் சேகரித்த பொதுப் பணத்தை - சேகரித்த காலத்தில் இருந்ததைவிடப் பல மடங்காய் விஸ்தரித்துக்கொண்டு, குறிப்பிட்ட பத்துப் பெரிய மனிதர்களின் மேற்பார்வையில் செழிப்போடு செயலாற்றி வரும் வெகுஜன சபாவில் பதினைந்து வருஷமாகக் குமாஸ்தா உத்தியோகம் புரிந்துவருகிறார் ஸ்ரீமான் சடாட்சரம் பிள்ளை

    சடாட்சரம் பிள்ளையவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் அச்சபாவில் முப்பது ரூபாய்ச் சம்பளத்துக்கு வேலையில் அமர்ந்தார்.

    அதன் பிறகு, இந்தப் பதினைந்து வருஷ வாழ்வுப் பாதையில், மனைவியென்ற துணை பெற்று, நான்கு வாரிசுகள்

    Enjoying the preview?
    Page 1 of 1